Tuesday, July 31, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பயன் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றோர் கருத்து


சென்னை, ஜூலை 30 - கழக ஆட்சியின்போது தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக சென்னை கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள, ஆசியாவிலேயே மிகப் பெரியதும், நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட துமான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு மூடுவிழா நடத் திட ஜெயலலிதா அரசு முனைப்பாக உள்ள நிலையில், இந்த இடத்திலி ருந்துதான் தமிழ்நாட்டின் வருங் கால ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவெடுத்து வருகிறார்கள் என்ற செய்தியை தி இந்து நாளேடு  29.7.2012 அன்று வெளியிட் டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் கூறப் பட்டுள்ளதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் கல்வி பெற்று சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர், மாணவர்கள், குடும்பத் தலைவிகள் என்று பலர் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நாள் தவறாமல் வந்து செல்கின்றனர். அவர்களில் பலர் எப்படியாவது அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற ஒரே கனவுடன் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து இரவு 9 மணி வரை படிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமையன்று, ஆரம் பக்கட்டத் தேர்வு முடிவுகள் அறிவிக் கப்பட்டபோது, அதில் தேர்வடைந்த பலர் ஒன்றைத்தான் கூறி னார்கள்  இந்த நூலகத்துக்கு நன்றி. இல்லா விட்டால் இதை நாங்கள் செய்திருக்க முடியாது.
தயார் செய்து கொண்டிருந்த 30 பேரில் 13 பேர் தேர்வில் வெற்றி பெற்று விட்டோம் என்று பொள் ளாச்சியைச் சேர்ந்தவரும் தற்போது தாம்பரம் பகுதியில் வசிப்பவருமான 27 வயதான எம்.பி.ஏ., பட்டதாரி எஸ். வெங்கடேஷ் கூறுகிறார். வீட்டி லிருந்து மதிய உணவும், என்னுடைய புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக் கெல்லாம் இங்கு வந்து விடுவேன். தூரம் அதிகமாக இருந்தாலும், இது தான் மிகச் சிறந்த இடம். சொல்லப் போனால் எங்களுக்கான ஒரே இடம் என்று மேலும் அவர் கூறினார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற விழையும் இவர்கள், இந்த நூலகத் திலுள்ள சுமூகமான படிப்புச் சூழல் தான் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்கின்றனர். சிவில் சர்வீஸ் தேர்வு தயாரிப்புக்கு சுய வரை முறையும், கட்டுப்பாடான படிப்பும் தேவைப் படுகிறது. இந்த நூலகம் அதற்கான இடத்தை யும் அளிக்கிறது என்று ஆரம்பக்கட்டத் தேர்வை முடித் துள்ள 23 வயது வங்கி ஊழியர் ஷியாம் கூறுகிறார். அங்கு சென்றால் படிக்கத் தோன்றுகிறது. எந்த விதமான கவன திசை திருப்பலும் கிடையாது. பின்னர் சந்தேகங்களைப் பற்றி விவாதிக்க அருமையான நண்பர்கள் கிடைக்கின் றனர் என்றும் அவர் கூறுகிறார்.
சென்னையிலுள்ள மற்ற இடங் களில் இந்த நூலகத்தில் உள்ளது போல் வசதிகள் கிடையாது. கன்னி மாரா நூலகத்தில் சொந்தப் புத்தகங் களைப் படிக்கும் பிரிவு கிடையாது. அயல் நாட்டுத் தூதரகங்களிலுள்ள நூலகங்களில் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளன என்று இவர்கள் கூறுகின்றனர்.
அண்ணா நூலகத்திலுள்ள சொந் தப் புத்தகங்கள் படிக்கும் பிரிவில் நுழைய எப்போதுமே நீண்ட வரிசை காத்திருக்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இந்த வளாகத்திலேயே நூலகத் துக்கு வெளியில் அமர்ந்து படிப்போம் என்கிறார், ஆர்.பிரீதா. நூலகத்துக்குள் பேசுவதற்கு அனுமதி இல்லாத தால் வெளியே உள்ள கல்லில்  அமர்ந்து   கருத்துக்களை விவாதிப்போம் என் றும், மூன்று வயது குழந்தைக்குத் தாயான பிரீதா கூறுகிறார்.
அந்தக் குழுவிலுள்ள ஏழெட்டுப் பேருக்கு இந்த நூலகம் மட்டும்தான் ஆதரவு. நாங்கள் எந்தப் பயிற்சி மையத்துக்கும் போகவில்லை.
அரசுப் பணியில் சேருவதற்காக தயாரித்துக் கொள்வதற்கு அரசு அளித்துள்ள வசதியையே  நம்பியுள் ளோம் என்பதே ஒரு உந்து சக்தி என்கிறார் சி.பி.கனகராஜ். இவர்கள்  அனைவரும் ஒருமித்த குரலில் வேண் டுவது; இந்த இடம் ஆயிரக்கணக் கானவர்களுக்கு உணர்வூட்டி, கலாச் சாரத்தையும், படிக்கும் பழக்கத்தை யும் மேம்படுத்தும் நூலகமாக இருக்க வேண்டும். நூலகமாகவே இது இருந்தால் பெரும் நன்மை பயக்கும் என்று சி.பி. கனகராஜ் அந்த வேண்டு தலைக் கூறினார்.
இவ்வாறு அந்தச் செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கற்பூரம் போன்றது. அதன் வாசனை அதைப் பயன் படுத்தியவர்களுக்கும், விவரமறிந்தவர்களுக் கும் தெரிகிறது. நீதிமன்றம்தான் அவர்கள் வேண்டு தலை நிறைவேற்ற வேண்டும்!
29.7.2012 நாளிட்ட இந்து
(நன்றி: முரசொலி, 30.7.2012)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...