ஒரு காலத்தில் சொல்லப்படுவதுண்டு AIR என்றால் All Iyer and Iyengar Radio; LIC என்றால் Licentiate Iyer and Iyengar Corporation; SRy என்றால் Sri Rangam Railway என்றெல்லாம் சொல் லுவதுண்டு. அந்த அள விற்கு இவை எல்லாம் அக்கிரகாரவாசிகளின் வேலை வாய்ப்பு உல் லாசப் பூங்காக்களாக கொழித்தன.
இப்பொழுது IIT என் றால் என்ன பொருள்? Iyer and Iyengar Technology என்பது இன்றள வுக்கும் உள்ள உண்மை யான நிலவரமாகும்.
ஒவ்வொரு அய். அய்.டி.யும் ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியில் ஒய்யாரமாக பார்ப்பனர் களுக்கு மட்டுமே குத் தகைக்கு விடப்பட்டு ஒண்டிக்கட்டையாகக் காட்சி அளிக்கிறது.
மாணவர் சேர்க் கையிலும் சரி, ஆசிரி யர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் சரி, அங்கே உள்ளே நுழைந்தால் அது ஒரு பெரிய அக்கிரகாரமா கவே காட்சி அளிக்கும். அவாள் வீட்டுப் பிள்ளை களுக்கு, அந்த வளா கத்துக்குள்ளேயே கல்வி கற்க உயர் தட் டுக் கல்விக் கூடங்கள் -இத்தியாதி! இத் தியாதி!!
எடுத்துக்காட்டாக மொத்தப் பேராசிரி யர்கள் 400 எனில் பார்ப்பனர்கள் 282 பேர் (70 விழுக்காடு) முன் னேறிய உயர்ஜாதி பார்ப்பனர் அல்லாதார் 40 பேர் (10 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர் 57 (14 விழுக்காடு) தாழ்த் தப்பட்டோர் 3 (0.75 விழுக்காடு) கிறித்தவர் 15 (3 விழுக்காடு) முசுலீம் - பூச்சியம்.
இதுதான் நிலைமை. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயரளவுக்கு இட ஒதுக்கீடு. தப்பித் தவறி உள்ளே நுழைந்தாலும் பட்டம் பெற்று வெளியே வருவது அரிதே!
இப்படிப்பட்ட அக்கிர காரத்தில் முதன் முத லாக அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே. தாழ்த்தப்பட்டோர் நலச் சங்கமும், பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கமும் ஒருங்கிணைந்து அக் கிரகார ஆதிக்கத்திற் குத் தண்ணீர் காட்டு வார்களாக! இந்தி யாவுக்கே பெரியார் பிறந்த மண் இந்த வகையிலும் வழிகாட்டி யுள்ளது பாராட்டுக் குரியதே!
- மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>
JULY 16-31
அய்.நா.வில் தமிழீழக் கோரிக்கை
அய்யா பெரியார் வரலாற்று நாயகன்
உங்களுக்குத் தெரியுமா?
எண்ணம்
கடவுள் இருக்கிறாரா? சோதிப்போம் வாங்க... - 5
கனவுகளும் மூடத்தனமும்
கவிதை
காரணம் அவர்கள் ஜாதி...
சாமி குத்தம்...!
தடுமாறிய மனம்
தமிழ்மொழியின் தனித்தன்மையும் தனிமைத் தன்மையும்
தூள்... தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்
நிகழ்ந்தவை
பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 7
புதுப்பாக்கள்
பெண் ஆணைக் கட்டிக் கொள்ளும் காலம் வரும் - தந்தை பெரியார்
பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை
பெரியாரை அறிவோமா?
பெரியார் அடிகளார் உறவு : புரட்டர்களின் பொய் மூட்டை
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
மக்கள் தங்களின் உண்மையான சக்தியை உணராமல் இருக்கிறார்கள்
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!
முகநூல் பேசுகிறது
முற்றம்
மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்
ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?
No comments:
Post a Comment