Thursday, April 5, 2012

தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்!


தி.க. தலைவர் வீரமணி: சேது சமுத்திரத் திட்ட அமலாக்கம், ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம், காவிரி நீரில் தமிழருக்குரிய உரிமை மீட்பு ஆகியவற்றை வலியுறுத்தி, 11ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
டவுட் தனபாலு: மற்ற கட்சிகள் எல்லாம், மின் கட்டண உயர்வு மாதிரி, சீசன் பிரச்னை களுக்காக போராட்டம் நடத்தி, மாட்டிக்கிறாங்க... நீங்கதான், சேது சமுத்திரம், தனி ஈழம், காவிரி மாதிரியா நிரந்தர பிரச்னைகளை கையிலெடுக் கறீங்க.... இந்த சாமர்த்தியம், மற்றவங்களுக்கு இல்லையே...! - தினமலர், 4.4.2012
தினமலர் திராவிடர் கழகத்தின் செயல் பாட்டைப் பாராட்டுகிறதா? கேலி செய்கிறதா?
தினமலர் சொல்கிறபடி பார்த்தாலும் சீசன் போராட்டங்களைவிட நிரந்தரப் பிரச்சினை களுக்காகப் போராடுவது முக்கியமானதும், அவசியமானதும்தானே?
நிரந்தர பிரச்சினைகளைக் கையில் எடுப்பது சாமர்த்தியம் என்று எழுதுகிறதே, இதன் பொருள் என்ன?
காலையில் வரும் ஆசிரியர் கடிதங்களைப் பெயர் மாற்றி மாலையில் தான் நடத்தும் இன்னொரு பத்திரிகையில் வெளியிடும் சாமர்த்தியம் தினமலர் மடிசஞ்சி கூட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஏகபோகம்!
இது மற்றவர்களுக்கு வருமா என்ன?
சேது சமுத்திரத் திட்டம், ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை என்னும் தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினைகளுக்காகப் போராடினால், பார்ப்பான் வீட்டில் எழவு விழுந்தது மாதிரிதான் - அந்த அளவுக்குத் தமிழின வெறுப்பு.
ஆனாலும், தமிழர்களிடம் ஏடுகளை விற்று மட்டும் பிழைப்பு நடத்திடவேண்டும். நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?
தமிழர்கள் பார்ப்பான் நடத்தும் பத்திரிகைகளை வாங்கு மட்டும் - இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் பார்ப்பனர்கள் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துக்கொண்டுதான் இருப்பார்கள். தமிழன் தொடையிலேயே கயிறு திரித்துக் கொண்டும் இருப்பார்கள்.
தமிழர்களே, எச்சரிக்கை!


.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...