பார்ப்பனர் என்று கலைஞர் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டாராம். (அதுவும் அவர் டி.எம். நாயர் கூற்றுப்படிதான் அதை எடுத்தாண்டுள்ளார் என்பதை ஆத்திரக்கார அவசரசாமிகள் அறியாதது ஒருபுறம் இருக்கட்டும்!)
நாம் கேட்கிற இந்த கேள்விகளுக்கு தமிழ் இலக்கிய வரலாறு தெரியாத தற்குறிகள் - பார்ப்பனர்கள் - அவர்களது கூலிகள் பதில் கூற முன் வருவார்களா?
1. பார்ப்பன மாந்தர்காள் பகிர்வது கேண்மின் என்று கபிலர் (அவர் பார்ப்பனர் என்றும் கூறப்படுகிறது).
அகவல் பாடினாரே, அதைக் கிழித்தெறிந்தீர்களா?
2. திருவள்ளுவர் குறளில், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
3. மாமுது பார்ப்பான் மறைவழிகாட்ட தீவலம் வந்து என்ற சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரிகள்.
பார்ப்பனச்சேரி என்றும்கூட அதே சிலப்பதிகாரத்தில் உண்டு.
4. பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்று பார்ப்பன பாரதி பாடவில்லையா? இவை போல ஏராளம் உண்டே!
பார்ப்பனரை பார்ப்பனர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? பிராமணன் என்று எவரையும் சரியாக அழைக்க முடியாது; காரணம் நான் உள்பட சரியான பிராமணன் அல்ல என்று பார்ப்பன சோ இராமசாமிகளே கூறுகின்றனரே!
சூத்திரனுக்கொரு நீதி - தண்டச்சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி என்று சொல்லி சாத்திரம் கூறிடுமாயின் சாத்திரம் அன்று சதி எனக் கண்டோம் என்ற பாரதியைத் தானே பார்ப்பனர் மாநாடு களில் கொண்டாடுகிறீர்கள்?
கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையை நோக்கிக் கல்லெறியாதீர்!
.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- மூக்கு ஒற்றுமை
- நாகர்கோவில் முதல் சிவகாசி வரை: இளைஞர் பட்டாளம்!
- பி.ஜே.பி ஆளும் மத்திய பிரதேசத்தில் அவல நிலை பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியுமாம்! ஏழு பார்ப்பனர்களை வைத்துத் திருமணம் நடக்க வேண்டுமாம்!
- பார்ப்பனர்களே, துள்ளாதீர்கள்!
- பூணூல்கள் புலம்பல்; நல்ல துவக்கம்!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மராட்டிய மாநிலம் - நாகபுரியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பு மாநாடு - நிகழ்வுகளும், நினைவுகளும்!
- கழகத் தோழர்களின் கொள்கைப் பார்வை!
- மகா சிவராத்திரியின் மகா பாவ மகாத்மியம்!
- கொள்கை வீரர் குந்தா (மஞ்சூர்) கோவிந்தராசன் இதோ பேசுகிறார்!
- பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் பொன்னீலனுக்கு விருது (5)
No comments:
Post a Comment