Saturday, February 4, 2012

மார்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?


மார்கோபோலோ குரேசியா நாட்டைச் சேர்ந்தவர். வெனிசின் பாதுகாப்பில் இருந்த தால்மேதியா நாட்டின் கோர்குலா என்ற ஊரில் 1254இல் பிறந்தவர் மார்கே பிலிக் (Marko Pilic)  என்ற மார்கோ போலோ (Marco Polo)  பிறந்தவர்.
வியாபாரிகளான தனது மாமன்களுடன் அவர் தனது 17ஆம் வயதில் தூரக்கிழக்கு நாடுகளுக்குச் சென்றாரா என்பதையோ அல்லது கருங்கடல் வியாபாரத் தலங்களில் தங்கிய பட்டு வியாபாரிகள் கூறிய கதைகளை அவர் பதிவு மட்டும் செய்திருந்தாரா என்பதைப் பற்றி நம்மால் உறுதியாக அறிந்து கொள்ள முடியவில்லை. 1296இல் ஜெனோவா நாட்டினரால் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, அவருடன் இருந்த ருஸ்டிசெலோ டாபிசா (Rustichello da Pisa) என்ற காதல் எழுத்தாளரின் நூல்களில் கூறப்பட்டிருந்த புகழ்பெற்ற பயனக் கதைகள் கொண்ட புகழ் பெற்ற  நூலை மார்கோ போலோதான் எழுதினார் என்பது மட்டும் நமக்கு உறுதியாகத் தெரிகிறது. போலோ சொல்லச் சொல்ல ருஸ்டிசெலோ அதை பிரெஞ்சு மொழியில் எழுதினார்; ஆனால் போலோவுக்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரியாது.
பொழுதுபோக்கு நோக்கத்தைக் கொண்ட அந்த கதைகள் கொண்ட நூல்  அச்சடிக்கும் கலை தோன்றுவதற்கு முந்தைய நாட்களில்  - 1296இல் வெளியாகி அதிக அளவில் விற்பனையானது.  ஆனால் அதை முழுமையாக சரியாகக் கூறப்பட்ட வரலாற்று நூல் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
அந்நூலுக்கு முதலில் அளிக்கப்பட்ட தலைப்பு எல் மில்லியன் (the Million) என்பதாகும். என்ன காரணத்துக்காக அந்த தலைப்பு அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை; என்றாலும் விரைவில் அது மில்லியன் பொய்கள் (Million Lies) என்ற புனைப் பெயரைப் பெற்றுவிட்டது. அதன்பின் பணக்கார வியாபாரியான அவர் மிஸ்டர் மில்லியன் என்று அழைக்கப்பட்டார்.  அற்புதங்களின் அற்புத நூல் (Wonder book of Wonders) என்பது போன்ற தலைப்புகள் கொண்ட, 13ஆம் நூற்றாண்டு  மக்களைக் கவரும் ஒரு நூலாக அது இருந்திருக்கக்கூடும். ஆனால் முதன் முதலாக எழுதப்பட்ட அதன் கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்.
இத்தாலி நாட்டுக்கு பாஸ்டா மற்றும் அய்ஸ் கிரீமை அவர்தான் கொண்டு வந்தார் என்றும் கருதப்படுகிறது. அராபிய நாடுகளில் 9ஆம் நூற்றாண்டிலேயே பிஸ்டா அறியப்பட்டிருந்தது. 1279இல்,  அதாவது போலோ நாடுதிரும்பியதாகக் கூறிக் கொண்டதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னமேயே,   ஜெனோவாவில் முட்டையும் சர்க்கரையும் கலந்து செய்யப்படும் உலர்ந்த மாக்கரோனி (Macaroni) என்ற உணவுப் பொருள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்தக் கட்டுக்கதை 1929இல்  அமெரிக்க பாஸ்டா வர்த்தக பத்திரிகையில் வெளியானதாக உணவு வரலாற் றாசிரியர் ஆலன் டேவிட்சன் கூறுகிறார்.
அய்ஸ் கிரீம் சீனக் கண்டுபிடிப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதனை போலோ மேலை நாடுகளுக்கு அறிமுகப் படுத்தியிருக்க முடியாது. 17ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை அது மறுபடியும் குறிப்பிடப்படவில்லை என்பதே இதன் காரணம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...