பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உருண்டு நேர்த்திக் கடனாம்!
பெங்களூரு, டிச.4- கர்நாடக மாநிலம் குகி சுப்ரமணியா கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது உருண்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் நேர்த்திக் கடன் செலுத் தும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க., அரசு இந்த மூடநம்பிக்கை நிகழ்ச் சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷன கன்னடா என்ற மாவட் டத்தில் இருக்கும் குகி சுப்ர மணியா கோவிலில் பார்ப் பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள்மீது உருண்டு நேர்த்திக் கடன் செய்யும் நடவடிக்கை மனித நேயத்துக்கு எதிரானது என்றும், இதை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஆர் வலர் தாக்கப்பட்டுள்ளார்.
மடிஸ்னான என்று அழைக்கப்படும் இந்த வழி பாட்டு முறையானது மூட நம்பிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து அதிலிருந்து மீளாமல் வலியுறுத்தப் பயன் படுத்தப்படுகிறது என்றும் ஜாதி வேறுபாடுகளை நிலை நிறுத்தவும் இது போன்ற வழிபாட்டு முறைகள் வழிவகுப்பதாகவும் அம்மாநிலத்தில் உள்ள தாழ்த் தப்பட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.
பா.ஜ.க. அரசின் செயல்
பாரதீய ஐனதா கட்சி அரசு இந்த வழிபாட்டுக்கு இருந்த தடையை திங்கட்கிழமையன்று விலக்கிக் கொண்டதன் பின் அப்படியான மூன்று நாள் நிகழ்வு தற்போது அந்தக் கோவி லில் நடந்து வருகிறது.
இந்த வழிபாட்டில் தாழ்த்தப் பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்லாது - அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பதாக வும் - ஒரு பிரிவின் அழுத்தத் துக்கு கீழ் படிந்து மாவட்ட நிர்வாகம் இந்த விழாவுக்கு விதித்திருந்த தடையை விலக் கியதாகவும் கூறப்படுகிறது.
அறிவுக்கு எதிரான இந்தியாவில் பல இடங் களில் இதுபோல அறிவுக்குப் புறம்பான, மனித நேயமற்ற சடங்குகள் நடப்பதாகவும் ஆனால் இவைக்குப் பின் தத்துவ அடிப்படைகள் ஏதுமில்லை என்றும் ஒய்வுபெற்ற சமூகவியல் பேராசிரியர் கிருஷ்ணன் என் பவர் தெரிவித்துள்ளார்.
மூடநம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் நடத்தப்படும் போராட்டங்கள் இந்து மத நம்பிக்கையை மட்டுமே குறி வைப்பதாகவும் பிற மத நம் பிக்கை பற்றி பேசாதிருப்பதன் காரணமாக இது போன்ற பிரச் சினைகளில் இந்துத்வா அமைப் புக்கள் பழைமை சடங்குகளை மூர்க்கத்தன மாக ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகங்களின் நிலை
ஊடகங்களும் மற்றவர் களும் இதுபோன்ற செய்தி களை பெரிதாக்காமல் புறக் கணித்தால் இப்பழக்கங்கள் நாளடைவில் மறையக் கூடும். ஆனால் எதிர்ப்புகள் அதி கரிக்கும் பட்சத்தில் இந்த சடங்குகளை தொடர வேண் டும் என்ற உறுதிப்பாடு அதிக மாகும் என்றும் பேராசிரியர் கிருஷ்ணன் தெரிவித்தாராம்.
அரசியல் சட்டத்திற்கு விரோதமான இது போன்ற மூடநம்பிக்கைகள் ஒழிக் கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment