எதிலும் ஏட்டிக்குப் போட்டி தானா?
சிங்கப்பூர் தமிழ்முரசு செய்தியாளர் கேட்டார்!
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் அளித்த அறிவார்ந்த விளக்கம்
சிங்கப்பூர், நவ.19-எதிலும் ஏட்டிக்குப் போட்டி தானா? என்று தமிழ்முரசு செய்தியாளர் என்னிடத் திலே கேட்டார் என்ற தகவலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிங்கப்பூர், நவ.19-எதிலும் ஏட்டிக்குப் போட்டி தானா? என்று தமிழ்முரசு செய்தியாளர் என்னிடத் திலே கேட்டார் என்ற தகவலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சிங்கப்பூரில் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சி 13.11.2011 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பிரெஞ்சுப் புரட்சிப் போல
1947, 1948இல் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்துள்ளனர். இந்த செய்திகள் எல்லாம் சாதாரணமான செய்திகள் அல்ல. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சுப் புரட்சியில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி அவர் ஆசிரியராக இருந்த பொழுது எழுதினார்கள். வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை மத குருக்கள் உட்கார்ந் திருந்த இடத்தில் தைரியமாகச் சொன்னார்.
புரட்சிக் கவிஞர் அவர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படமாட்டார். வரவிடவில்லை மதக் குருக்களின் மேடை வாலை நறுக்கத் தொலைந்தது அந்தப் பீடை நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை என்று அவர்கள் சொன்னார்கள். (கைதட்டல்).
அந்த கல்வி நீரோடை பாய்ந்தால் தான் மக்களுக்கு அறிவு வளரும். எனவே அந்த கல்வி நீரோடையில் முதலைகள் இருக்கக் கூடாது.
முதலைகள் இருந்தால்
முதலைகள் இருந்தால் அந்த நீரில் இறங்க முடியாது. எனவே சமுதாய மாற்றத்தை அடைவதற்கு முதலில் குடியுரிமை. இரண்டாவது கல்வி படிப்புரிமை.
கல்வியை கற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் துவக்க காலத்திலே ஆரம்ப பாடசாலை களாக எங்கே இருந்தது என்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள்.
அன்னை நாகம்மையார் பள்ளிக்கூடத்தில் வரவேற்பு
இன்னொரு குறிப்பையும் நான் பார்த்தேன். 1954லே இரண்டாது முறையாக அய்யா அவர்கள் வந்தி ருந்த போது அன்னை நாகம்மையார் பெயரால் அமைந்த பள்ளிக் கூடத் திற்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அந்த பள்ளிக் கூடத்திலே வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் இங்கே பதிவாகியிருக்கிறது.
அந்த நிகழ்ச்சியிலே அய்யா அவர்கள் மகிழ்ச்சியோடு பேசியி ருக்கின்றார்கள். இந்த மாதிரி எனது துணைவியார் வாழ்விணையர் பெயரில் நடத்தியிருக்கின்றீர்கள் ரொம்ப மகிழ்ச்சி. நம்முடைய பிள்ளைகள் எல்லாம் படிக்க வேண்டும்.
நமது பிள்ளைகள் எல்லாம் உத்தி யோகத்திற்கு வரவேண்டும். அதுதான் எனது நோக்கம் என்று சொல்லியி ருக்கின்றார்கள்.
சமூகநீதி போராட்டம்
சமூக நீதி, சமூக நீதி என்று நண்பர் சொன்னாரே. அந்த சமூக நீதி போராட்டமே என்னவென் றால் நமது மக்கள் படிக்க வேண்டும். உத்தி யோகத்திற்குப் போக வேண்டும். வெறும் மூட்டைத் தூக்குபவர்களாக, வெறும் கூலிகளாக வெறும் சாதாரண அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கக் கூடாது என்பது தான் அவர்களுடைய நிலை.
பெரியார் வாழ்வியல் என்றால்
எனவே பெரியார் அவர்களுடைய வாழ்வியல் என்பதிருக்கிறதே வாழ்க் கையை மாற்ற வேண்டும் என்பதற்காக அமைந்த ஒன்று. அதே போன்ற உணர்வு. அந்த உணர்வுகளுக்கு பெரி யாருடைய தாக்கம். பெரியாருடைய தொண்டு எத்தகையது?
இன்றைக்கு கணினியை அதிக மாகப் பயன்படுத்துகின்ற நாடு சிங்கப்பூர் நாடு. நீங்கள் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றீர்கள். வளர்ச்சி அடைந்த நாடு இந்தநாடு.
இன்றைக்கு கணினியை அதிக மாகப் பயன்படுத்துகின்ற நாடு சிங்கப்பூர் நாடு. நீங்கள் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றீர்கள். வளர்ச்சி அடைந்த நாடு இந்தநாடு.
எழுத்து சீர்திருத்தம் முக்கியம்
அதே போல தமிழையும் சிறப்பாக இணைத்து தமிழ் துறையிலே நல்ல மென் பொருள்கள் இவைகளை எல்லாம் தயாரித்து எழுத்தாளர்கள் அமைப்பு, சிந்தனையாளர்கள் அமைப்பு அடிக்கடி புதிய ஆய்வு களை செய்யக்கூடிய அளவில் இருக் கின்றோம்.
இதற்கெல்லாம் அடித்தளம் எங்கே? மொழி எழுத்து சீர்திருத்தம். அந்த மொழி எழுத்து சீர்திருத்தத்தில் ரொம்ப மிக முக்கியமானது. என்னவென்று சொன்னால் தந்தை பெரியார் அவர்கள் தமிழ் எழுத்து களை மாற்றி அமைத்துக் குறைத்துக் காட்ட வேண்டும்.
ஏன் ஆங்கிலத்தை பின்பற்றுகிறார்கள்?
ஆங்கிலம் மற்றவர்களால் அதிக அளவுக்கு எளிதாக பின் பற்றுவதற்கு காரணமே இந்த எழுத்துக்கள் குறைவாக இருப்பதுதான். தமிழில் எழுத்துகளை அதிகமாக வைத்ததால் தான் பிள்ளைகளுக்கு சிரமம் இருக் கிறது என்று அவர்கள் நினைத்த தினாலேதான் இதை அவர்கள் சொன்னார்கள்.
பெரியார் அவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் 1967இல் முதல் முறையாக சிங்கப் பூருக்கு வந்தேன். நாங்கள் குடும்பத் தோடு வந்த பொழுது தமிழவேள் எங்களை வரவேற்றார்கள்.
தமிழர் சீர்திருத்த சங்கத்தில் தான் வரவேற்பு கொடுத்தார்கள். அந்த நேரத்திலே தமிழ் முரசிலே என்னிடத்திலே ஒரு பேட்டி எடுத் தார்கள். தெளிவான பேட்டி. அப் பொழுது தேவா என்று ஒரு நண்பர் அவர்தான் பேட்டி கண்டார். எழுதினார்.
அவர் கேள்வி கேட்ட பொழுதே ரொம்ப வேடிக்கையாக கேள்வி கேட்டார்.
எதிலும் ஏட்டிக்குப் போட்டிதானா?
பத்திரிகையாளர் அவர் கேட்டார். என்னங்க நீங்கள் விடுதலை என்று ஒன்று போடுகிறீர்களே எல்லாம் லையை இப்படிதான் எழுதுவீர்களா? விடுதலை லையைத்தான் எழுதுவீர்களா? ஏட்டிக்குப் போட்டி யாக ஏழுதுவதுதான் உங்கள் வேலையா? என்று கேட்டார்கள்.
இது ஏட்டிக்குப் போட்டி அல்ல. கை என்றால் எப்படி எழுதுகிறீர்கள். ஏன் லைக்கு மட்டும் யானைக்கு துதிக்கை போல மாட்ட வேண்டும். அப்படி மாட்ட வேண்டிய அவசியமே இல்லையே என்று சுட்டிக் காட்டினோம். நல்ல வாய்ப்பாக எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சியிலே பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடிய பொழுது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
பெரியார் எழுத்தை ஏற்றது சிங்கப்பூர்
நீங்கள் அதிகாரபூர்வமாக அரசாங் கத்தின் சார்பிலே எழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அவர்களுடைய எழுத்து சீர்திருத்ததிற்கு ஆணையிடுங்கள் என்று சொன்னவுடனே ஆணையிட்டார்கள். அதனை முதலில் பின்பற்றி நடைமுறைக்குக் கொண்டு வந்த தமிழர்கள் வாழக் கூடிய வெளி நாட்டரசு ஒன்று இருக்கிற தென்றால் அந்த பெருமை சிங்கப்பூர் நாட்டு அரசுக்குத்தான் சாரும். (கைதட்டல்). நன்றியுணர்ச்சியோடு இதை குறிப் பிடுகின்றோம்.
இன்றைக்கு கணினியினுடைய பயன்பாடு எவ்வளவு அதிகமாக இருக்கிறது? எவ்வளவு பெரிய வாய்ப்புகளை பெற்றிருக்கிறது? எனவே இதற்கு அடித்தளம் வேர் எங்கேயிருக்கிறது என்று சொன்னால் தமிழ் மொழியில் மிகப் பெரிய அளவுக்கு மாற்றங்கள் வரவேண்டும். மொழி என்று சொன்னால் அது பழைமையானது என்பது முக்கியமல்ல. ஆதி சிவன் பெற்றெ டுத்தது என்பது முக்கிய மல்ல. அல்லது நமக்கு ரொம்ப காலமாக இருந்தது என்பது முக்கியமல்ல.
மொழி என்பது ஒரு போர்க் கருவி. அந்த போர்க்கருவியை தமிழர்கள் எப்படி கையாள வேண்டும் என்று சொன்னால் பழைய காலத்து வில்லையும், வேலையும் வைத்துக் கொண்டு நாம் போராட முடியுமா? முடியாது. இன்றைக்கு எப்படி ஏ.கே.47 அய்விட தீவிரமான கருவி கண்டு பிடித்தாக வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.
அதுபோல ஒவ்வொருவ ருடைய மொழியும் பயன்பட வேண்டும். அப்பொழுதுதான் பண்பாட்டுக் களம் பாதுகாக்கப்படும்.அப்பொழுது தான் மொழியின் வளர்ச்சி உறுதி செய்யப் படும் என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
எனவே இந்த சிங்கப்பூர் மண் அதனால் பயன்பெற்றிருக்கிறது. மற்றவர்கள்
பயன்பட்டதை விட அதிகமாக பயன்பட்டிருக்கிறது.
நகை போட்டவர்களை காண முடியவில்லையே!
தமிழ் மொழி உணர்வு என்று பார்த்தாலும் சரி, அது போலவே மக்களின் மனித நேயம் என்று பார்த் தாலும், பெண்களுக்கு சுதந்திரம், பெண்களுக்கு சமத்துவம், பெண்கள் சொந்தக்காலிலே நிற்க வேண்டும் என்று பார்க்கும் பொழுது நம்முடைய சகோதரிகள் நல்ல வாய்ப்போடு, நல்ல சுதந்திர உரிமையோடு, சமத்துவத் தோடு வாழுகிறார்கள். எல்லா துறைகளிலும் இருக்கி றார்கள். இளைய தலைமுறையின ருக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இது இன்னும் அங்கே வரவில்லையே. நகை போட்டவர்களை இங்கே காண முடியவில்லையே. தமிழகத்தில்தான் காண முடிகிறது.
-(தொடரும்)
No comments:
Post a Comment