Friday, November 11, 2011

சிங்கப்பூர்: பெரியார் கண்காட்சி, பெரியார் கண்ட வாழ்வியல் இரு நாள் நிகழ்ச்சிகள்


பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி சிறப்புரையாற்றுகிறார்
சுப. வீரபாண்டியன், சோம. இளங்கோவன், சுப. திண்ணப்பன் பங்கேற்பு



சிங்கப்பூர், நவ.10- சிங்கப்பூரில் பெரியார் கண்காட்சி உரையாடல் மற்றும் பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சி ஆகிய இருநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளன. இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழர் திராவிடர் இயக்கப் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பெரியார் கண்காட்சி திறப்பு விழா
பெரியார் கண்காட்சி திறப்பு விழா நடனம் பொன்மொழி, பகுத்தறிந்து முன்னேறு ஆகிய கலந்துரையாடல் நிகழ்ச்சி 12.11.2011 அன்று காலை 10 மணிக்கு சிங்கப்பூரில் உள்ள ரேஸ் கோர்ஸ் சந்து, காந்தி நினைவு அரங்கில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரி யர் சுப. வீரபாண்டியன், அமெரிக்காவைச் சார்ந்த பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
சமூக நீதிக்கான கி. வீரமணி விருது இதில் சமூக நீதிக்கான கி. வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பெரியார் பெருந் தொண்டர்களுக்கு விருது வழங்கல், மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறவிருக்கின்றன. இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது.
பெரியார் கண்ட வாழ்வியல்
இரண்டாம் நாள் நிகழ்ச்சி பெரியார் கண்ட வாழ்வியல் நிகழ்ச்சி 13.11.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிங்கப்பூர் வள்ளல் பொ. கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மா. அன்பழகன் அனைவரை யும் வரவேற்று பேசுகிறார். பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் வீ. கலைச்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றுகின்றார்.
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வக்ரம் நாயர் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகின்றார்.
அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர்  சோம இளங்கோவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், சிம் பல்கலைக் கழகம் பேராசிரியர் தமிழறிஞர் சுப. திண்ணப்பன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்படுகிறது.
பெரியார் பணி சிறப்பு மலர் வெளியிடப் படுகிறது. தமிழ் மொழிப் போட்டிகளில் (2011) வெற்றி பெற்ற மாணவ  - மாணவியர்க்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழா நிறைவாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றுகிறார்.
பெரியார் சமூக சேவை மன்றச் செயலாளர் க. பூபாலன் நன்றி கூறுகின்றார்.
இந்நிகழ்ச்சியை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்து நடத்துகிறது.


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்

 
 
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...