Thursday, November 10, 2011

ஒரு முதலையிடமிருந்து தப்பிக்க நீங்கள் எந்த பொருளை உபயோகப்படுத்துவீர்கள்?


ஒரு முதலையிடமிருந்து தப்பிக்க நீங்கள் எந்த பொருளை உபயோகப்படுத்துவீர்கள்?

முதலையிடம் மாட்டிக் கொள்ள நேர்ந்தால், 2 மீட்டர் (6.5 அடி) நீளம் கொண்ட ரப்பர் பேண்ட் இருந்தால் போதும், நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

முதலையின் தாடைகளை மூடும் சதைகள் மிகவும் பலமானவை. ஒரு லாரி ஒரு மலையுச்சியிலிருந்து கீழே விழும்போது ஏற்படும் வேகமும் பலமும் முதலையின் தாடைகள் மூடும்போது இருக்கும். ஆனால் அதன் தாடைகளைத் திறக்கும் சதைகள் மிகவும் பலவீனமானவை. உங்களது ஒரு கையால் அதன் வாயைத் திறக்கவிடாமல் மூடியே வைத்திருக்கலாம்.

முதலைகளுக்கும், அலிகேட்டர் எனப்படும் பெரிய முதலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்றால், முதலைக்கு ஒரு நீண்ட குறுகிய மூக்கும், அதனை அடுத்து கண்களும், அதனையடுத்து அதன் நான்காவது பல், மேல் தாடையில் பொருந்தியிராமல்,  கீழ் தாடையில் இருந்து துருத்திக் கொண்டிருக்கும் என்பதுதான். சிறிய முதலைகள் உப்பு நீரில் வாழும். பெரிய முதலைகள் நண்ணீரில் வாழும்.

பல்லி என்று பொருள்படும்    என்ற க்ரேகடெய்லோஸ் என்ற கிரேக்க சொல்லில் இருந்து உருவான சொல் இந்த Chrocodile என்ற சொல். நைல் நதிக்கரையில் வெயில் காந்து கொண்டிருந்த முதலைகளைப் பற்றி எழுதும்போது ஹரேடோடஸ் என்பவர்தான் முதன் முதலாக இந்தப் பெயரைப் பதிவு செய்துள்ளார். aligaros என்னும் பெரிய முதலை என்ற சொல் இந்தியாவின் பல்லி என்ற பொருள்படும்  lagarto das Indias என்னும் ஸ்பானிய மொழி சொல்லில் இருந்து உருவானது.

உங்களைத் துன்புறுத்தி சாக அடிக்கும்போது இந்த விலங்குகள் அழுகின்றன. இடைக்கால பயணிகளின் கதைகளில் இதனால்தான் பொய்யான அனுதாபச் செயல்களை முதலைக் கண்ணீர் வடிப்பது என்று கூறப்பட்டுள்ளது. 1356 இல் சர் ஜான் மந்தவெளி என்பவர் எழுதும்போது, இந்தியாத் தீவுகளில் பல இடங்களில் நீளமான பாம்பு போன்ற முதலைகள் இருக்கின்றன. இந்த பாம்புகள் மனிதர்களைக் கொன்று உண்ணும்போது அழுது கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலைகளுக்குக் கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவை கண்ணீரை நேரடியாக முதலையின் வாய்க்கு அனுப்பிவிடுகின்றன. அதனால் அதன் கண்களில் கண்ணீர் வடிவது தெரியாது.

முதலைகளின் தொண்டைக்கு அருகில் இந்த சுரப்பிகள் இருப்பதால், அவை கண்களை பசையுள்ளவையாக ஆக்குவதால், இந்த பழமொழி  வழக்கில் வந்திருக்கலாம். பெரிய துண்டு உணவை விழுங்குவது அல்லது விருப்பமில்லாமல் எதையாவது உண்பது என்ற முயற்சியின்போது முதலையின்  கண்களில் சிறிது கண்ணீர் வரலாம்.  முதலைகளுக்கு உதடுகள் இல்லை என்பதால் அவற்றால் சிரிக்கவும் முடியாது.

முதலைகளின் செரிமாண சுரப்பு நீர்களில் இரும்பைக் கூட கரைய வைக்கும் அளவுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் உள்ளது. நகரங்களில் கழிவு நீர்த் தடங்களில் முதலைகளில் வாழ்வதைப் பற்றிக் கவலை எதுவும் படத் தேவையில்லை.

கால்சியத்தைத் தயாரித்துக் கொள்ள உதவும் ஊதாவண்ண ஒளிக்கதிர்கள் அளிக்கும் சூரிய ஒளியின்றி அவைகளால் உயர்வாழ முடியாது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General  Ignorance’
பொதுவான அறியாமைகள்

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...