Monday, November 28, 2011

வாசிப்பது கேரள அரசு


முல்லைப் பெரியாறு 1895ஆம் ஆண்டில் கட் டப்பட்டது. நூற்றாண் டைக் கண்டுவிட்டது; கிழடு  தட்டி விட்டது! உடையும் எல்லைக் கோட்டில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்று தலையை விரித்துப் போட்டு மயான ஒப்பாரி வைக்கிறது கேரள மாநில அரசு.
நிமிடத்துக்கு 49 லிட்டர் நீர் கசிகிறது அணையிலிருந்து; அய்யோ அப்பா என் னமோ நடக்கப் போகிறது என்று நாட கம் நடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணையாவது 1895இல் கட்டப்பட்டது.
கேரள மாநில அரசு குட்டியாடி அணையைக் கட்டியதே - அது எப்பொ ழுது தெரியுமா? 1972ஆம் ஆண்டுதான். அதன் வயது 39 ஆண்டுகளே! இதன் நீர்க்கசிவு. என்ன தெரி யுமா? நிமிடத்துக்கு 249.77 லிட்டர் தண்ணீராகும்.
ஞாபகம் வையுங்கள்!
116 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு வெறும் 49 லிட்டர் தான்.
39 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு கட்டிய குட்டியாடி அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு 249.77 அடி.
அப்படி என்றால் முல் லைப் பெரியாறு அணை யால் ஏற்படும் ஆபத்தைவிட குட்டியாடி அணையால் தான் மகா மகா ஆபத்து!
முதலில் குட்டியாடி அணையை உடைத்து விட்டு அதற்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணை யின் பக்கம் நெருங்கட்டும்!
1966இல் கேரளாவில் கட்டப்பட்ட பம்பை அணை யின் நீர் கசிவு நிமிடம் ஒன்றுக்கு என்ன தெரி யுமா? 96 லிட்டராகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்கசிவை விட 57 லிட்டர் அதிக மாகும்.
249 லிட்டர் அதிகமா? 49 லிட்டர் அதிகமா? (குட்டியாடி அணை)
96 லிட்டர் நீர் அதி கமா? 49 லிட்டர் நீர் அதிகமா? (பம்பை அணை)
கேரள அரசுக்கு முத லில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் போல் தோன் றுகிறது.
249 லிட்டர் தண்ணீர் கசியும் குட்டியாடி அணை, 96 லிட்டர் நீர் கசியும் பம்பா அணை - இவற்றின்மீது கவனம் செலுத்திவிட்டு, காரி யம் முடித்துவிட்டு, வெறும் 49 லிட்டர் மட்டும் கசியும் முல்லைப் பெரி யாறு அணை விடயத்தில் மூக்கை நுழைக்கட்டும் கேரள மாநில அரசு.
வைத்தியரே, வைத்தியரே! முதலில் உங்கள் வயிற்றுவலி நோயைச் சரிப்படுத்திக் கொள்ளுங் கள்! மூலிகையை முழுங் கும் வேலையை பாருங் கள்!! பிறகு அடுத்தவர் நகத்தை வெட்டுவதுபற்றி யோசிக்கலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...