Friday, November 11, 2011

அ.தி.மு.க. அரசுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை


அ.தி.மு.க. அரசுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது
சட்டரீதியாக தவறு-சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வீர்!
சென்னை, நவ. 10- அண்ணா நூற்றாண்டு நூல கத்தை மாற்றினால் அ.தி.மு.க. அரசே சட்டரீதியான சிக்கலை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே சமச்சீர் கல்வி விசயத்தில் உச்ச நீதிமன்றத்தால் நீங்கள் குட்டுப்பட்டிருக்கிறீர்கள் நூலகத்தை மாற்ற நினைப் பது சட்டரீதியாகவே தவறு என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்று வதா? என்ற தலைப்பில் 5.11.2011 அன்று இரவு கொட்டும் மழையில் சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் ராதாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நீறு பூத்த நெருப்பாக உணர்வு
மக்கள் சும்மா இருக்கிறார்கள் என்று ஆட்சியா ளர்களே நினைத்துவிடாதீர்கள். அவர்களுடைய உணர்வு நீறுபூத்த நெருப்பாக உள்ளது. அதே போல சமச்சீர் கல்வி சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும்பொழுது இந்த ஆட்சியாளர்கள் தேன் கூட்டிலே கை வைத்தார்கள் என்று சொன்னார். தேன் கூட்டில் அல்ல குளவிக் கூட்டில் கை வைத்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் வரை சென்றுதான் அவர்கள் திரும்புவார்கள் என்று. நடக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு அவர்கள் சென்றபொழுது என்ன நடந்தது?
சமச்சீர் கல்வி கூடாது என்று அ.தி.மு.க. அரசு கங்கணம் கட்டியது. அதற்கு என்னென்னமோ காரணங்கள் எல்லாம் சொன்னார்கள். பாட புத்தகங்களை எல்லாம் கொடுக்காமல் விட்டார்கள். ஒரு பருவமே வீணாகிப் போய்விட்டது. பெற் றோர்கள் துடித்தார்கள். அப்பொழுதுதான் கொஞ்சம், கொஞ்சமாக உணருகிறார்கள்.
தேர்தலில் செய்த தவறு
நாம் தேர்தலில் செய்த தவறு எப்படிப்பட்ட தவறு என்பதை கொஞ்சம், கொஞ்சமாக புரிந்து கொள்ளக் கூடிய சூழல் வந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலே கொடுக்கப்பட்ட தீர்ப்பு. சமச்சீர் கல்வி திட்டத்தை நீங்கள் நடைமுறைப் படுத்துங்கள் என்று தீர்ப்பு கொடுத்தது. அ.தி.மு.க. அரசின் தோழமைக் கட்சிகளே சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின. கூட்டணியிலே இருக் கிறார்கள். வெளியே வரவில்லை. உள்ளாட்சித் தேர்தலின் பொழுதுதான்-அவர்கள் வெளியே வந்தார்கள். அதற்கு முன்னால் இருந்தவர்கள்கூட அ.தி.மு.க. அரசை, அப்பீல் செய்யாதீர்கள். காலம் கடந்துவிட்டது. எனவே தொடர்ந்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பலர் வேண்டுகோள் விடுத்தார்கள்.
இந்த முதலமைச்சருக்கு கவலையே இல்லையே!
ஆனால் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் கொஞ்சம்கூட அதைப் பற்றிக் கவலைப்படாமல் உச்சநீதிமன்றத்திற்குப் போனபிற்பாடு உச்சநீதி மன்றத்திலே தீர்ப்பு கொடுத்தார்கள். உச்சநீதிமன்றத்திலே கொடுத்த தீர்ப்பு மிக முக்கியமான தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. நூலகம், மற்றவர்களுடைய உணர் வுகள் என்பதைப் பற்றி மற்றவர்கள் சொன்னார்கள். எனவே அதற்குள் நாங்கள் சொல்லவில்லை.
அது மட்டுமல்ல. அண்ணா நூற்றாண்டு நூல கத்தை இடமாற்றும் விசயத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும். இது இன உணர்ச்சி, இவைகளின் அடிப்படை யில் மட்டும் கைவிடப்பட வேண்டும் என்பதல்ல. சட்டப்பூர்வமாகவும் இப்பொழுது அ.தி.மு.க. அரசு எடுத்த முடிவு இருக்கிறதே. அரசியல் சட்டத்திற்கு விரோதமான முடிவு என்பதுதான் முக்கியமானது.
சமச்சீர் கல்வியிலே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையிலே சட்ட ரீதியாக சொல்ல வேண்டிய கருத்து மிக முக்கியமானது.  ஜன நாயகத்திலே வாக்களிக்கின்ற மக்கள் வேறு ஒரு கட்சிக்கு ஆட்சியை ஒப்படைக்கின்றார்கள்.
ஓர் ஆட்சியின் தொடர்ச்சி
அரசாங்கத்தை அடியோடு மாற்றிவிட வேண்டும் என்பது முடியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுக்கிறார்கள். தி.மு.க. வினர் உளப்பூர்வமாக என்று உறுதி மொழி எடுப்பார்கள். அ.தி.மு.க. வினர் கடவுள் மீது என்று உறுதிமொழி எடுத்துத்தான் ஆட்சி பொறுப்பை ஏற்கிறார்கள்.
ஆட்சி என்பது ஒரு தொடர்ச்சி. குறிப்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை  மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனையாக அரசு அறிவித்த தற்கு இப்பொழுது உயர்நீதிமன்றம் தடை விதித் திருக்கின்றார்களே இந்தத் தடை நீடிக்கும் என்பது மட்டுமல்ல. இவர்கள் உச்சநீதி மன்றம் சென்றால் கூட ஏற்கெனவே உச்சநீதிமன்றம் வகுத்த சட்ட விதி களின்படியும் சரி, இந்திய அரசில் சட்ட விதிப் படியும் இந்த நடவடிக்கை சட்ட விரோதமான நடவடிக்கை. நியாய விரோதமான நடவடிக்கை என்பதற்கு தீர்ப்புகள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக சமச்சீர் கல்வி வழக்கில் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பின் ஒரு பகுதியை நான் சுட்டிக்காட்டி ஆட்சியாளர்களுக்கு நான் நினை வூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
குளவிக்கூட்டிலே கை வைத்திருக்கிறீர்கள்
நாளைக்கு இந்தக் குளவிக்கூட்டிலே கை வைத் திருக்கிறீர்கள் என்று சொல்லுவதற்குக் காரணம் ஏதோ உவமைக்காக அல்ல. சட்ட ரீதியாக இருக் கின்ற பிரச்சினை என்ன? சமச்சீர் கல்வியிலே உச்சநீதி மன்றத்தினுடைய நீதி அரசர்கள் மிகப்பெரிய அளவிலே கொடுத்த தீர்ப்பு. அந்த தீர்ப்பு எல்லா தீர்ப்புகளையும் கட்டுப்படுத்தக்கூடிய தீர்ப்பு. வழக்குரைஞர்களாக இங்கு வந்திருக்கின்ற நண்பர் களுக்கு கூடத் தெரியும். குறிப்பாக தமிழ்நாட்டின் நிலை. தமிழ்நாட்டின் ஆட்சி தமிழ் நாட்டிலே நடந்த ஒரு நிகழ்வு அதை ஒட்டி வந்த ஒரு தீர்ப்பு. முன்பாகம்-பின்பாகம் போல...
இதே போல முன்பாகம், பின்பாகம் போலத்தான் அமைந்திருக்கிறது. ஆகவே இந்த முடிவை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். உங்களுக்கு நல்ல தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றோம்.
இதிலே வீண் வம்பு தேவையில்லை. தன் முனைப்பு காட்ட வேண்டிய அவசியமில்லை. காட்டினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என் பதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
சமச்சீர் கல்வியிலே தீர்ப்பு
இதோ சமச்சீர் கல்வி தீர்ப்பிலே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. வேறு வழியில்லாமல் சுவர்க் கீரையை வழித்துப் போடு என்று சொல்லுவதைப் போல இன்றைக்கு மீண்டும் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலே அந்தத் தீர்ப்பிலே வந்திருக்கின்ற ஒரு பகுதி இதற்கும் பொருந்தும். இதைத்தான் மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்குரைஞர்களும் நிச்சயமாக சுட்டிக்காட்டியிருப்பார்கள் என்று நான் நினைக் கின்றேன்.
எப்படி இருந்தாலும் இதில் மிக முக்கியமான ஒரு பகுதியை அறிவார்ந்த இந்த அவைக்கு மட்டு மல்ல. ஆட்சியாளர்களுடைய காதுகள் இங்கே இருக்கிறது. ஆகவே அதற்கும் சேர்த்தே நாங்கள் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஒரு கட்சி ஒரு திட்டத்தை ஒரு ஆட்சி ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒரு முடிவு செய் கிறது. அடுத்து இன்னொரு ஆட்சி வருகிறபொழுது செய்த திட்டத்தை தலைகீழாக மாற்றுவதற்கு உரிமை உண்டா?
நாங்கள் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அமைச் சரவையில் முடிவெடுத்து விட்டோம் என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை உண்டா என்று சொன்னால் சட்டப்படி இல்லை. அரசியல் சட்டப்படி இல்லை.
இதை அரசியல் சட்டம் மட்டும் சொல்ல வில்லை. உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி சுட்டிக் காட்டியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் இரண் டொரு பகுதியை நான் சட்டரீதியாக சுட்டிக் காட்டுகின்றேன். ஏனென்றால் மற்ற செய்திகளை தோழர்கள் உங்களுக்குச் சொல்லி யிருக்கின்றார்கள்.
சமச்சீர் கல்வியில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப் பினை அறிந்துதான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் சட்ட ரீதியாக தடை வழங்கியிருக் கின்றார்கள்.
ஒரு மாநில அரசு செய்த திட்டத்தை அடுத்து வருகின்ற அரசு அதைப் பின்பற்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும். இது சமச்சீர் கல்விக்கும் பொருந்தும். அதே போல தலைமைச் செயலகத்தை அற்புதமாகக் கட்டி கடைசியாக கொஞ்சம் முடிக்காமல் இருக்கிறார்களே. அதையும் முடித்து நிறைவேற்றக் கூடிய கடமை இந்த ஆட்சிக்கு உண்டே தவிர அதை நிறுத்துவதற்கு இந்த ஆட்சிக்கு உரிமை இல்லை.
உச்சநீதிமன்றம் அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு ஓங்கி மண்டையில் அடிப்பதைப் போல மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்கள். ஏராளமான முந்தைய தீர்ப்புகள் உள்ளன. சென்ற ஆட்சி செய்தது பொது மக்களுடைய நலனுக்கு ஏதாவது விரோதமாக இருக்கிறதா? என்று வேண்டுமானால் காரண காரியங்களை கண்டுபிடித்துச் சொல்லலாமே தவிர, மற்றபடி அதற்கு வேறுவிதமான காரணங் களைக் கூற முடியாது.
கெட்ட எண்ணத்தோடு...
கலைஞர் செய்தார். தி.மு.க ஆட்சி செய்தது என்று காழ்ப்புணர்ச்சியோடு கருதுவதா? சட்டத் தின் ஆளுமையை வந்திருக்கின்ற ஆட்சி உடைக்கக் கூடாது. அதை உடைக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இன்னொன்றையும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருக்கின்றார்கள். அதை நேரடியாக மாற்றுவதற்கு போலித்தனமான காரணங்களைச் சொன்னால் அந்த காரணங்கள் கெட்ட எண்ணத் தோடு சொல்லப் படுகிறது (MALA FIDE INTENSION) என்று பொருள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
The law must not permit change of policy because  another political party with different political philosophy coming to power, as it is the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies.
முதலில் இருந்த ஒரு ஆட்சியினர் ஒரு காரியத்தை செய்தால் தனிப்பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிவிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்பொழுது பழைய ஆட்சியினுடைய தொடர்ச்சி சென்ற ஆட்சியின் செயலை பின்பற்ற வேண்டியதுதான் வந்திருக் கின்ற ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர அதை உடைப்பதற்கு புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை.
ஏராளமான தீர்ப்புகளை இப்படி கொடுத் திருக்கிறார்கள். அத்தனையும் இந்த அரசுக்குப் பொருந்தும் வேறு புதிதாக சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.
இந்த போலி காரணத்தை ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்துச் சொல்லியிருக்கின்றது. எனவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது என்பது சட்டரீதியான சிக்கல் உங்களுக்கு. சிக்கலில் நீங்கள் இன்னொரு முறை மாட்டி  இன்னொரு முறை உச்சநீதிமன்றத்திற்குச் சென்று நீங்கள் குட்டு வாங்காதீர்கள். (கைதட்டல்).
அ.தி.மு.க. வீண்பிடிவாதம் காட்டக்கூடாது
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் இதில் வீண்பிடிவாதம் காட்டக் கூடாது. இனஉணர்வு என்பது ஒரு பக்கம். நியாய உணர்வு என்பது ஒரு பக்கம். மனிதநேயம் என்பது இன்னொரு பக்கம். இந்த நூலகம் தமிழ்நாட்டிற்குப் பெருமைதானே.
இந்த அம்மையார் ஆட்சியில் பள்ளிப் பிள்ளை களுக்கு சைக்கிள் கொடுத்தார். அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வந்தார். இல்லை, இல்லை, அந்த அம்மா கொடுத்த சைக்கிள்கள் எல்லாவற்றையும் சைக்கிள் கடைக்கு அனுப்புங்கள் என்று சொன்னார்களா?
கலைஞர் இப்படியா செய்தார்?
கலைஞரும் அதே சைக்கிளை எல்லா பிள்ளை களுக்கும் கொடுத்தாரே. அதே போல காமராஜர் ஆட்சியிலே பிள்ளைகளுக்கு பகல் உணவு அளிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவு என்று செயல் படுத்தப்பட்டது. கலைஞர் ஒரு முட்டை அல்ல. இரண்டு, மூன்று, முட்டை பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய அளவுக்கு அல்லவா தொடர்ந்து செய்தார். அதுவும் அந்த நூலக திறப்பு விழாவில்தான் கலைஞர் அறிவித்தார். வாழைப்பழங்களையும் சேர்த்துத் தந்தாரே, முதலாவது ஒரு ஆட்சி செய்ததை கலைஞர் நிறுத்தினாரா? மேலும் நன்றாக சிறப்பாக அல்லவா தொடர்ந்தார்.
அ.தி.மு.க. ஆட்சி அதேபோல அண்ணா நூற்றாண்டு நூலகத்தை விரிவுபடுத்தியிருக்க வேண் டும். அதுதான் ஜனநாயகம். அதுதான் மக்களுடைய நலன்.
நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் 9தளம் கட்டியிருந்தால் நீங்கள் இன்னும் ஒரு நான்கு தளத்தை அதிகமாகக் கட்டியிருக்க வேண்டுமே! அல்லது அவர் செய்யாத வசதியை நான் செய்திருக் கிறேன் என்று காட்டியிருக்க வேண்டுமே!
அதை விட்டு விட்டு கலைஞர் எது செய்திருந்தாலும் மாற்றுவேன் என்பது ஆட்சியில் அமர்ந்திருப்ப வர்களுக்கு அழகல்ல!  யார் மருத்துவமனை கூடாது என்று தடுக்கிறார்கள்?
-(தொடரும்)


.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்

 
 
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...