Monday, October 3, 2011

துபாயில் 2ஆம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு



துபாய், அக்.3- துபாயில் நடைபெறும் இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய இந்தியாவின் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்பமொய்லி உலகின் எதிர்காலம் இந்தியா என்று கூறினார். 

துபாயில் இரண் டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடை பெற்று வருகிறது.

02.10.2011 ஞாயிற் றுக்கிழமை காலை துவக்க விழா நடை பெற்றது. மலேசிய அரசின் தெற்காசியா வுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை யுரையில் உலகெங் கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் வணிகத் துறையில் ஒன்றுபட்டு பொருளாதார மாற் றத்தை ஏற்படுத்த முன் வரவேண்டும் என்றார். மேலும் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர் களில் 30 இந்திய தொழி லதிபர்கள் பெரும் பணக்காரர்களாக இருந்து வருவது பெரு மையளிக்கிறது என்றார்.

மாநாட்டு அமைப் புக் குழுத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வர வேற்புரை நிகழ்த்தினார்.

இரண்டாவது உல கத் தமிழர் பொருளா தார மாநாட்டினை துவக்கி வைத்து தொடக் கவுரை நிகழ்த்திய இந் திய கம்பெனி விவகாரங் கள் துறை அமைச்சர்  வீரப்பமொய்லி அவர் கள் தனது உரையில் இந்தியாவே உலகின் எதிர் காலம் எனக் குறிப் பிட்டார். இம்மாநாடு ஒரு புதிய அத்தியா யத்தை எழுதும் எனத் தான் நம்புவதாகக் குறிப் பிட்டார். இந்தியாவில் எல்லாவித உலகத்தர வசதிகளும் உள்ளன.

அமீரகம் மிகச் சிறப்பான நாடு. அமீரக ஆட்சியாளர்களின் தூர நோக்குப் பார்வை போற்றத்தக்கது.

விரைவில் புதிய பொருளாதாரக் கொள்கை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு வெளியிடப்பட இருக் கிறது. இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத் தும். காந்தியடிகளின் பிறந்த நாளான அக் டோபர் 2 ஆம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப் படுகிறது.

முடியாதது என்று எதுவும் இல்லை. எதை யும் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம் என்றார்.

வாழ்த்துரை வழங் கிய ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில் தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியதொற்கொப்பா திரைகடலோடியும் திரவியம் தேடு எனக் குறிப்பிட்டதிற்கிணங்க நாங்கள் இங்கு வந்து வணிகம் புரிகிறோம். மேலும் திருக்குர்ஆன் வசனங்களை மேற் கோள்காட்டியும் வணி கம் குறித்த தகவலை விவரித்தார்.

வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர் கள் தனது வாழ்த்துரை யில் இந்தியக் குடியு ரிமை பெற்றவர்கள் அமீரகத்தில் வணிகம் புரிவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு அளித்து வரும் அமீரக ஆட்சி யாளர்களுக்கு நன்றி யினை தெரிவித்துக் கொண்டார்.

மாநாடு சிறப்புற பெரிதும் ஒத் துழைப்பினை நல்கி வரும் அமீரகத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் காக் காவைப் பாராட்டினார்.

அமீரகத்துக்கான இந்தியத்தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, நீதியரசர் ஏ. ஆர். இலட்சுமணன், மலேசிய துணைத்தூதர் அகமது படில் சம்சுதீன், கத்தார் தோஹா வங்கி தலைமை நிருவாக அதிகாரி ஆர். சீத்தாராமன், இந்தியா கிளப் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், கடலூர் நாடாளுமன்ற உறுப் பினர் அழகிரி, ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, தொழிலதிபர் வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...