பா.ஜன தாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை, அங்கு மோசமாக நடத்தப்பட்டேன் என்று உமாபாரதி கூறியுள்ளார்.
மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல் அமைச் சர் உமாபாரதி கடந்த 2005 ஆம் ஆண்டு பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது தனிக்கட்சி நடத்திவரும் அவர், மீண்டும் பா.ஜனதாவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் வார்தாவில் உமாபாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பா.ஜனதாவில் மீண்டும் சேரும் திட்டம் இப்போதைக்கு இல்லை. அக்கட்சிக்காக நீண்ட காலம் பாடுபட்டும், நான் மோசமாக நடத்தப்பட்டேன். அத்வானி, நிதின் கட்காரி ஆகியோருடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது. இருப்பினும், இப்போதைக்கு பா.ஜனதாவில் சேரமாட்டேன். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, என் தம்பி போன்றவர். அவர் தடை செய்யப்பட்ட லஸ்கர் இ தொய்பாவை விட ஆர்.எஸ்.எஸ். அபாயகரமானது என்று கூறியுள்ளார். அவர் இது போன்ற பொறுப்பற்ற கருத்துகளை தெரிவிப்பதற்கு முன்பாக, ஆர்.எஸ். எஸ். வரலாற்றையும், பணிகளையும் நன்றாகப் படிக்க வேண்டும். அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கிடம் கற்ற பாடங்களின் அடிப்படையில், இப்படிப் பேசி வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸை விமர்சித்ததற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத்ததில் தவறு இல்லை. அவர் கருத்து மட்டுமே கூறியுள்ளார்.
இவ்வாறு உமாபாரதி கூறினார்.
No comments:
Post a Comment