Thursday, August 4, 2011

பாரத ரத்னா

கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை! என்ற வழக்குமொழி தமிழ்நாட்டில் உண்டு.

கிரிக்கெட் விளையாட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கருக்கு - இந்தியாவிலேயே பெரிய விருது - கவுரவம் என்று கூறப் படும் பாரத ரத்னா விருது அளிக்கப் படவேண்டும் என் பதைப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன.

கிரிக்கெட் விளையாட்டு என்பது கிரிசை கெட்டு மக்கள் மத்தியில் நாற்றம் எடுத்துக் கிடக்கிறது. அது ஒரு சூதாட்டக் களமாகிவிட்டது. சினிமாக் காரர்களைவிட கருப்புப் பணக் குபேரர்கள் அங்குதான் அதிகம்.

கோடிகோடியாகச் சம்பாதிக் கும் இவர்கள் சரியாக வருமான வரி கூட கட்டுவதில்லை. வரு மான வரி பாக்கி வைத்திருப் பவர்களின் பட்டியலில் டெண் டுல்கர் பெயரும் வெளிவந் துள்ளது.

இன்றைக்கு இளைஞர் களைக் கெடுக்கும் போதை களுள் கிரிக்கெட்டும் முக்கிய மானது என்பது வெளிப்படை. வெள்ளைக்காரர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விளையாட்டு இந்தியாவின் வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்களால் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளப் பட்டது.

இது முற்றிலும் அகிகிரகார விளையாட்டாக மாறி விட்ட காரணத்தால் இந்திய மண்ணுக் குரிய சிறப்பு விளையாட் டுகளான ஹாக்கி போன்ற விளையாட்டுகள் நாலாம் ஜாதி- சூத்திர விளையாட்டாகப் பின் னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.

இந்த நாட்டில் விளை யாட்டு வரை வருணாசிரம தர்மத்தின் வேர் ஊடுருவி யுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

தென் ஆப்பிரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கும் ஆதிக்கம் செலுத்துவது சிவப் புத் தோல் வெள்ளையர்கள்தாம்! மண்ணுக்குரிய கருப்பர்கள் புறக் கணிக்கப்பட்டனர். இந்த நிலை யில் அங்கும் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யப் பட்டுள்ளது.

கபாடி, ஹாக்கி. கால்பந்து போன்ற உடலுழைப்பு - மூளைத் திறன் கிரிக்கெட்டில் கிடை யாது. ஆட்டம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது ஆட்டோ கிராபில், விளையாட்டுக் காரர்கள் கையொப்பம் போட்டுக் கொடுப்பதை கிரிக்கெட்டைத் தவிர வேறு விளையாட்டில் காணமுடியுமா?

பார்ப்பனர்கள் சம்பந்தப் பட்ட விளையாட்டு என்றாலும் அதுமேல் வருண விடயமா கிறது.
சம்பளம்கூட அப்படித்தான். மூத்த வீரர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.50 லட்சமாம்; மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆண்டு சம்பளம். அது மட்டுமல் லாமல் ஒவ்வொரு ஆட்டத்திற் கும் தனிக் கூலி. நான்கு ஓட்டம் ஓடினால் (Four runs) அதற்குத் தனி வெகுமதி! 6 ஓட்டம் எடுத்தால் (Sixer) இன்னும் கூடுதல் வெகுமதி! விளம்பரங்களில் முகத்தைக் காட்டிக் குவிக்கும் கோடிகளோ கொஞ்ச நஞ்சமல்ல.

மும்பையில் அய்ந்து நட்சத்திர ஓட்டலைக் (Five Star) கட்டுகிறார்கள். இது என்ன கூத்து? ஓட்டம் எடுப்பதற்காகத் தானே மைதானத்துக்குச் செல்கிறார்கள். இந்த அளவில் தன்னம்பிக்கை என்பது கிரிக்கெட் விளையாட்டுக் காரார்களுக்குக் கிடையாது. சாயிபாபாவிடம் ஆசி பெற ஓடுவார்கள். கழுத்தில் உத்திராட்சக் கொட்டைகள் - தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்வார்கள்.

டெண்டுல்கருக்குப் பாரத ரத்னா கொடுத்தால், இந்தச் சூதாட்ட கிரிக்கெட்டை மேலும் ஊக்கப்படுத்தும் நிலைதான் ஏற்படும்.

சூத்திரன் கபில்தேவ் தலைவராக (Captain) இருந்த காலத்தில்தான் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. அப்பொழுதெல்லாம் மூச்சு விடாத ஊடகங்கள் இப்பொழுது மட்டும் டெண்டுல்கரை அடையாளப்படுத்துவது ஏன்? எல்லாம் வருணாசிரமம்தான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...