Monday, August 1, 2011

விடுதலை செய்திகள் 01-08-2011

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையைக் கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! மு.க. ஸ்டாலின் உள்பட லட்சக்கணக்கானோர் கைது!

அனுமதியளித்தும் பின்னர் ரத்து செய்த ஜனநாயக விரோதம்!

சென்னை, ஆக.1- அ.தி.மு.க. அரசின் அடக் குமுறையை கண்டித்து, தமிழகம் முழு வதும் தி.மு.க. தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஆயி ரக்கணக்கானோர் பங் கேற்று கைது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப் பாட்டத்தில் லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர்.

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அறப் போராட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது இயல்பான ஒன்றாகும். சட்ட ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்திடாமல் அறப் போராக ஆர்ப்பாட்டம் நடத்திடத்தான் தி.மு.க. அனுமதி கேட்டது. இதனை அனுமதிப்பது ஒரு ஜனநாயகக் ஆட்சியின் கடமையாகும்.

பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம்!

பெல்லாரி மாவட்டத்தில் 10868 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெற்று வந்த இரும்புத் தாது வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு ஜூலை 29 ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஆணையிட்டும் அதனைத் துச்சமாக மதித்து, மறுநாளே (30ஆம் தேதி) 49 லாரிகளில் இரும்புத் தாது எடுத்துச் செல்லப்பட்டது.

இதைச் செய்தவர்கள் கருநாடக பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர் களாக இருக்கும் ரெட்டி சகோ தரர்கள். இந்த யோக்கியர்கள் தான் அடுத்த கட்சிக்காரர் களைப் பார்த்து ஊழல் ஊழல் என்று ஊளையிடுகின்றனர்.

ஒழுக்கக் கேடும், பக்தியும் - இரட்டைப் பிள்ளைகள்!

அடேயப்பா, எடியூரப்பாவின் பக்தி... இன்னது என்று யாரும் வரையறுத்துக் கூற முடியாது. மூச்சுக்கு முந் நூறு தடவை என்பார் களே - அது ஆர்.எஸ். எஸில்., பயிற்சி பெற்று பா.ஜ.க. சார்பில் முதல் அமைச்சராக இருந்த இந்த எடியூரப்பாவுக்குத் தான் நூற்றுக்கு நூறு பொருந்தும்.

தமிழக எம்.பி.க்களின் தலையாய கவனத்துக்கு..

கேள்வி: தெற்கு ரயில்வேயில் கேரளாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, தமிழகம் குறிப்பாக புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாற்று பற்றி....

ஊர் சிரிக்கும் பா.ஜ.க.,

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி ஊழலுக் கும், வன்முறைக்கும் பெயர் எடுத்த கட்சியாகி விட்டது.

வன்முறைக்கு எடுத்துக்காட்டு குஜராத் மாநிலம். ஊழலுக்கு ஓர் எடுத்துக்காட்டு கருநாடகம் என்று ஆகி விட்டது.

16,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று லோக் அயுக்தா விசாரணை அறிக்கை வெளிவந்த நிலையில் உடனடியாக எடியூரப்பா பதவி விலகி இருந்தால், கொஞ்சம் மரியாதையாவது விஞ்சி இருக்கும்.






No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...