நான் பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளைக்கு நிர்வாகக் குழு தலைவராக இருந்த சமயம், எனது ஜமீன்தார் நண்பர் ஒருவர் தனது பிள்ளைக்குக் கல்லூரியில் படிக்க இடம் வேண்டுமென்று கடிதம் எழுதி என்னை சிபாரிசு செய்யச் சொன்னார்...
பிராமணரல்லாத மாணவர்கள் இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக் கிறார்கள்! அதனால் இந்த மாணவருக்கு எப்படியும் ஓரிடம் வேண்டுமென்று கடிதம் எழுதி பச்சையப்பன் கல்லூரி முதல்வருக்கு அனுப்பி வைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு கல்லூரியில் எந்த இடமும் இல்லை என்று எனக்குப் பதில் வந்தது! அதற்குப்பின் பல பிராமண மாணவர்களுக்கு இடமளித்திருப்பதை அறிந்தேன்! இந்த சம்பவம் என்னை எவ்வளவு வேதனையில் ஆழ்த்தி இருக்கும்! என்று சர்.பிட்டி தியாகராயர் குறிப்பிடும் செய்தியை (ஆதாரம் சர்.பிட்டி.தியாகராயர் முதல் டாக்டர் கலைஞர் வரை என்ற நூலில் பக் 67,68 ) படிக்கும் போது பார்ப்பனரின் ஜாதி வெறியும், ஆதிக்க உணர்வும் எந்த அளவுக்கு கொடி கட்டி பறந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதே நேரத்தில்... அதே ஜாதி வெறியும் ஆதிக்க உணர்வும் இன்னமும் அவர் களை விட்டு சிறிதும் விலகவில்லையே என்பது தான் மிகவும் வேதனைக்குரிய செய்தி!...
இதைத் தான் அய்யா அவர்கள் அன்றே அருமையாக விளக்கி இருக்கிறார்கள்!...
ஆரிய -- திராவிடப் போராட்டத் தில் ஒற்றுமை ஏற்பட வழியுண்டா? என்ற கேள்விக்கு.
ஒற்றுமை ஒத்தகருத்துள்ளவர் களால் மட்டுமே முடியக் கூடியது! குரங்குக்கும், நெசவாளிக்கும் ஒற்றுமை ஏற்பட முடியுமா? நெசவாளி நெய்து கொண்டே இருப்பான். குரங்கு இழைகளை அறுத்துக் கொண்டே இருக்கும்!! என்றார். இதைவிட பார்ப்பனர் குணத்தை வேறு எவ்வாறு தெளிவாக விளக்க முடியும்? எத்தகைய ஆழமான, அற்புதமான கருத்து விளக்கம்! இது அய்யாவுக்கு மட்டுமே கை வந்த கலை.
- நெய்வேலி க.தியாகராசன் (கொரநாட்டுக் கருப்பூர்)
No comments:
Post a Comment