Monday, June 20, 2011

தொண்டறம் - வாழ்க்கை முறையாகட்டும்!

சிங்கப்பூர் நாளேடுகளில் வந் துள்ள ஒரு மகிழ்ச்சியான செய்தி:

சிங்கப்பூரர்கள் வழங்கும் நன் கொடை 13 விழுக்காடு 2009ஆம் ஆண்டைவிடக் கூடுதலாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு திரண்ட நன்கொடையையும் சேர்த்தால் அறப்பணிகளுக்கான பணவரவு 9.4 மில்லியன்களை (சிங்கப்பூர் வெள்ளி 36.50 ரூபாய் மதிப்பு) - நம்மூர் கணக்கில் பெருக்கிக் கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டில் மட்டும் 776 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (வெள்ளி)களை நன்கொடையாக வழங்கப்பட்டதாக அறப்பணியாளர்களுக்கான ஆணையரின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது!

ஆண்டு நன்கொடையாக 10 மில்லியன் டாலர் தொகை பெறும் பெரிய அற நிறுவனங்களின் எண் ணிக்கையும் உயர்ந்துள்ளதாம்! என்னே மகிழ்ச்சி!

2009ஆம் ஆண்டில் 98 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 104-க்கு உயர்ந்துள்ளது. முத்தரப்புக் கல்வி நிலையங்கள், சுகாதார நிறுவனங்கள் தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் மற்றும் சமய அமைப்புகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்!
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள்)

சம்பாதிப்பது வெறும் சொத்து சேர்ப்புக்காக அல்ல; சமூகத்தில் உள்ள பலருக்கும் அவர்களில் இல்லாதோருக்கும் தந்து உதவி புகழ் பூத்த வாழ்க்கை வாழ வேண்டும்.

அதுதான் அவர்கள் தங்களது தொண்டறத்திற்குப் பெறும் ஊதியம் - சம்பளம் ஆகும் என்கிறார் வள்ளுவர்.

நம் நாட்டில் பலரும் பணத்தைச் சம்பாதித்து, இதுபோன்று நன்கொடைகளை அறப்பணிகளுக்கு ஒதுக்குவ தற்கு மனம் இல்லாதவர்களாக, ஈயாத லோபிகளாகவே காட்சியளிப்பவர் களாகவே இருக்கிறார்கள்!

மனிதர்களுக்கு - அவர்களது வறுமை வாட்டம், தேவைப்படும் உதவி களை, முடிந்த அளவுக்கு நாம் செய்யும் போது ஏற்படும் எல்லையற்ற மகிழ்ச்சி - பணத்தை இரும்புப் பெட்டிக்குள் போட்டு பூட்டி பூதம் காக்கும் நிலை என்பார்களே அப்போது ஏற்படுமா?

இரும்புப் பெட்டிக்கும், இதயத்திற்கும் எப்போதுமே சம்பந்தம் கிடையாது என்று அறிஞர் அண்ணா அவர்கள் அழகாகக் கூறினார்கள்.

அமெரிக்காவில் தொலைக்காட்சி களில் ஓர் உயிர் காக்கும் அறுவை சிகிச்சை அல்லது இன்றியமையாத கல்வித் தேவைகள் என்று வரும்போது அதற்கு உடனே அடுத்த சில மணித் துளிகளில் பார்த்த, கேட்ட பலரும் செக்குகளை பண ஓலைகளை - அவர் களுக்கு தந்து குவித்து விடுவார்கள்?

நம்ம ஊரில் நியாயமாக உதவ வேண் டியவர்களுக்கு உதவிடாமல், கோயில் உண்டியல்களில் போடுவார்கள். மற்ற வர்கள் கல்விக்குக்கூட பலர் உதவுவ தில்லை.

இவர்களிடம் பணம் மிகுந்து என்ன பயன்?

மனமில்லையே உதவிட! வைக் கோல் போரைக் காத்த நாய் போன்ற நிலை தான் அவர்களில் பலர் நிலை!

கொடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; தேக்கி வைத்துள்ளபோது ஏற்படுவதில்லை; மாறாக தூக்க மின்மை, பசியின்மை இவைதானே மிச்சம்?

ஒவ்வொருவரும் தொண்டறத்திற்கு உதவிட, தத்தம் வருமானத்தில் ஒரு சிறுபகுதியையாவது ஒதுக்கி வைத்து மனிதநேயத்தைக் காட்ட வேண்டும்.

சொத்து சேர்த்தவர்களுக்கு மிஞ்சியது என்ன? அவலங்களும், கேவலங்களும்தானே!

அறங்களில் சிறந்தது தொண் டறம்!

அதனைச் செய்ய நாளையே துவங்குங்கள்!

அதன்மூலம் தொண்டறத்தினை ஒரு வாழ்க்கை முறையாக்கிக் கொள்ளுங்கள்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...