Monday, April 11, 2011

- குமுதம் இதழுக்கு முதல்வர் கலைஞர் பேட்டி

நான் யார் தெரியுமா? மானமிகு சுயமரியாதைக்காரன்!

சென்னை, பிப்.25- மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னைப்பற்றி ஒரு வரியில் பதில் கூறியுள்ளார் முதல் அமைச்சர் கலைஞர்.

குமுதம் வார இதழுக்கு (2.3.2011) அளித்த பேட்டியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துள்ள பேட்டி வருமாறு: குமுதம்:   வரப்போகும் தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் எப்படி இருக்கப் போகிறது?

கலைஞர்:   வியூகம் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே சொல்வது வியூக மாக இருக்காதே!

குமுதம்:   அய்ந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி, வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற பல மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன. இந்த நலத் திட்டங்களில் தாங்கள் மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது எது?

கலைஞர்:    உணவு, உடை, உறையுள் என்ற மூன்று வாழ்வாதாரங்களும் மக்களுக்கு நிறைவு செய்யப்படுவதையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

குமுதம்:   தாங்கள் பல பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர். அப்போதைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தல் களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

கலைஞர்:   அப்போதெல்லாம் ஒரு கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து ஆட்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பத்துடன் தேர்தல்களைச் சந்திக்கும். ஆனால், இப்போது எடுத்த எடுப்பில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் தேர்தல்களைச் சந்திப் பதைக் காண முடிகிறது.

குமுதம்:   எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள். அதற் கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?

கலைஞர்:  மகாபாரத அர்ச்சுனனின் பலம் வில் பவரில் இருந்ததாகச் சொல் லப்படுகிறது! இந்த மகா சாதாரணமான வனின் பலமும் வில் பவரில்  தான் இருக்கிறது.

குமுதம்: தி.மு.க. தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத் திருக்கிறீர்கள்? அவர்களை நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன?

கலைஞர்:   என்னைப் போல் ஒருவர் தான் தி.மு. கழகத் தொண்டர் ஆவார். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும் போது நானும் மாறி மாறி உற்சாகம் பெறுவோம்.

குமுதம்:   இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

கலைஞர்:   பரபரப்பாக பேசப்பட்டு - இப்போது அந்தப் பிரச்சினை பம்பரம் சுற்றி அடங்குவதைப் போல் ஆகி விட்டது!

குமுதம்:   மத்தியில் ஆள்வது காங் கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்றாலும், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்பட்டதா? கைது செய்யப்படுவதற்கு முன் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவை உண்மையா?

கலைஞர்:   இந்தப் பிரச்சினையில் தொடக்கம் முதல் ஆளும் காங்கிரசும் - அதனுடன் தோழமை கொண்ட தி.மு. கழகமும் நீதி வெல்லும் - நிச்சயம் வென்றிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருவதால் - இடையிடையே உலவுகின்ற செய்திகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

குமுதம்:   வரப்போகும் தேர்தலில் எந்தப் பிரச்சினை மய்யமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

கலைஞர்:  எங்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கியுள்ள திட்டங்கள் - தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பணிகள் இவற்றை முன்னிறுத்தி ஏழையெளியோர் வாழ்வில் என்றென்றும் ஒளிவீசிடும் உதயக் கதிராக இருப்போம் என்பதுதான் எமது உறுதி மிக்க பிரச்சாரமாக இருக்கும்.

குமுதம்:   உங்கள் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் இறங்கியிருப் பதையும் எதிர்க்கட்சிகள் ஒரு குற்றச் சாற்றாகக் கருதுகின்றனவே?

கலைஞர்:   கூண்டோடு குடும்பம் குடும்பமாக திரைப் படத்துறையில் கணவன் - மனைவி, அப்பா - பிள்ளை, மாமன் - மச்சான் என்று எத்தனை பேர் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் - விவேகமும் பிறக்கும்.

குமுதம்:   இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் உங்களுக்கு எதிரான கருத்துகளை சில தமிழர் அமைப்புகள் சொல்லி வருகின்றன. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஈழத் தந்தை செல்வா அவர் களின் காலத்திலிருந்து என் உணர்வு என்ன என்பதையும் - அதற்காக நான் ஆட்சியை இழந்த நிகழ்வையும் வரலாறு சொல்லும்.

குமுதம்:   துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார். அவருடைய அயராத உழைப்பு தமிழக மக்களால் வரவேற்கப்பட் டிருக்கிறது. அந்த உழைப்புக்குத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞர்: உங்கள் கேள்வியிலேயே விளக்கமான பதிலும் அடங்கியிருக் கிறது. விதைத்தவன் - வியர்வையை நீராகப் பாய்ச்சியவன் - அறுவடையின் போது அமோகமான பலனைக் காண் பான் என்பது உழைப்புக்கு இந்த உலகு தரும் உற்சாகப் பரிசுதானே!

குமுதம்:  தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்சிப் பணி தி.மு.க.வுக்கு நல்ல பலத்தைத் தந்திருப்பதாகப்  பொது மக்களே கூறுகிறார்கள். அவருக்குத் தி.மு.க.வில் மேலும் முக்கிய பொறுப்புகள் தரப்படுமா?

கலைஞர்: தென் மாவட்டங்களில் கழகத்தின் வைரத்தூணாக இருந்து என் இனிய உடன்பிறப்பு தென்னரசு ஆற்றிய பணிகளைத் தான் தம்பி அழகிரிக்கு இப்போது கழகம் தந்துள்ளது. மேலும், முக்கியப் பொறுப்புகளுக்கு அவர் முன்னேறுவார் என்பது என் கணிப்பு.

குமுதம்:   உங்கள் புதல்வர்கள் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் உங் களைப் போலவே சளைக்காத உழைப் பாளிகளாய் இருக்கிறார்கள். அவர்களுக் குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

கலைஞர்: ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.

குமுதம்:  கனிமொழியும் இப்போது அரசியலில் இருக்கிறார். உங்களுக்கு அவரது அரசியல் பணி பிடித்திருக்கிறதா - கவிதைப் பணி பிடித்திருக்கிறதா?

கலைஞர்:  இரண்டு பணிகளின் துணையோடு அவர் ஆற்றும் சமூக நலப் பணி மிகவும் பிடித்திருக்கிறது.

குமுதம்:  ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என ஓய்வில்லா வாழ்க் கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனதையும் உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப் பிடிக்கும் பழக்கங்கள் என்ன?

கலைஞர்:   அதிகாலையில் அய்ந்து மணிக்கெல்லாம் உறக்கம் கலைந்து உதயசூரியனைக் காணுகிறேன் - என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?

குமுதம்:    எழுபத்தைந்துக்கு மேற் பட்ட திரைப் படங்களில் பணியாற்றியிருக் கிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் திரைப்படத் துறையில் நீங்கள் காணும் வித்தியாசங்கள் என்ன?

கலைஞர்:   பொன்னர்-சங்கர் என்ற கொங்குச் சீமை வீரர்களின் கதை விரைவில் திரைப்படமாக வருகிறது; அதைக் காணுங்கள் - வித்தியாசம் புரியும்.

குமுதம்:  ஆறாவது முறையாக முதல் வரானால் தமிழக மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் சிந்தித்து வைத்திருக் கிறீர்களா?

கலைஞர்:   எந்தத் திட்டமானாலும் அது ஏழையெளியோர் வாழ்வதற்கும் வளம் பெறுவதற்கும் பயன்படும் திட்ட மாகவே இருக்கும்.

குமுதம்:    இந்த ஆட்சியில் செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் உண்டா?

கலைஞர்:  மத்தியில் தமிழும் ஆட்சி மொழி - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி - மாநில சுயாட்சி - இவை தான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

குமுதம்:    கலைஞர் - சிறுகுறிப்பு வரைக என்று உங்களிடமே கேட்டால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்?

கலைஞர்:    மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேனே!

குமுதம்:    உங்கள் மேல் சோவுக்கு என்ன கோபம்? கடுமையான தாக்கு தல்களைத் தொடுக்கிறாரே? அ.தி.மு.க., - விஜயகாந்த் கூட்டணி வேண்டும் என்று குரல் கொடுக்கிறாரே?

கலைஞர்:    சோ மட்டுமல்ல - யார் என்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தாலும் - அவர்கள் ஏற்கெனவே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதியவை களையும், கூறியவைகளையும் நினைத்துக் கொண்டு புதிய தாக்குதல்களைப் புறந்தள்ளிவிடுகிறேன்.

குமுதம்:    பழைய தலைமைச் செய லகத்துக்கும், புதிய தலைமைச் செயல கத்துக்கும் என்ன வேறுபாடு காண் கிறீர்கள்?

கலைஞர்:    இதுவரையில் பழைய தலைமைச் செயலகத்தில் அமர்ந்து 5 முறை முதலமைச்சர் பணியாற்றியிருக் கிறேன். என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பழைய தலைமைச் செயலகம் 50 ஆண்டுகளை ஆக்கிரமித்துக் கொண்ட செயலகமாகும். புதிய தலைமைச் செயலகம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அல்லாமல் நாமே அடித்தளம் வைத்து, நாமே கட்டி முடித்து பூரிப்போடு அமர்ந்திருப்பதை எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

குமுதம்:    இந்த கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?

கலைஞர்:   இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

குமுதம்:    பா.ம.க.வைத் தொடர்ந்து வேறு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்:   வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

குமுதம்:    வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள்?

கலைஞர்:  234 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் (முகத்தில் புன்னகை).

குமுதம்:   தேர்தலில் வெற்றி வாய்ப்பு உங்கள் கூட்டணிக்கு எப்படி இருக் கிறது?

கலைஞர்:  வெற்றி வாய்ப்பு அமோக மாக இருக்கிறது! (சொல்லும்போதே, கலைஞரின் முகத்தில் அபரிமிதமான மகிழ்ச்சி).
ன்றி: குமுதம் 2-3-2011

Sunday, April 10, 2011

இலவசங்கள்: சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் சமூக நீதியின் ஒரு நீட்சியாகும்

மாநிலத்தின் பொருளாதார நிலையிலும், சமூக நிலையிலும் ஏற்பட்டு வரும் மாபெரும் மாற்றங்கள் என்ற காட்சியிலிருந்து தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்படும் இலவசங்களைப் பிரித்துக் காண முடியாது.

ஏழை மக்கள் விவசாயத் தொழிலில் இருந்து மாறுவதற்கு அரசின் உதவி 
அவசியம் தேவை

மாநிலத்தில் விவசாயத் துறை கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், மற்ற இரு துறைகளான தொழில் துறை, அரசு மற்றும் தனியார் பணித் துறை ஆகியவை வேகமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. சோர்வளிக்கும் விவசாயத் தொழிலில் இருந்து, நவீன மயமான, சவுகரியமான விவசாயமல்லாத மற்ற துறைகளுக்கு மாறிக் கொள்வதற்கே மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஆனால் இவ்வாறு மாறுவது பொதுவாகவும், குறிப்பாக ஏழைகளுக்கும், எளிதில் பாதிக்கப்படுபவர்களுக்கும், துன்பம் நிறைந்ததாகவும், அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் அமையும். எனவே விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலில் இருந்து நவீன தொழில் மற்றும் அரசு, தனியார் பணித் துறைக்கு மாறுவதில் உள்ள துன்பத்தைக் குறைக்கும் வகையில் இச்சூழ்நிலைக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பிக் கொண்டிருப்பதில் இருந்து எளிதாகவும், சுதந்திரமாகவும் வெளியேறுவதற்குத் தேவையான நிதி உதவிகளை அளிக்காவிட்டால், அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாகக் கூடக் கூறலாம். தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறைக் கொள்கை மிகச் சரியாக இத்திசையிலேயே பயணம் செய்கிறது.

நாட்டின் வளர்ச்சிப் பயன்கள் ஏழைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதிக் கோட்பாடு

பழைய சென்னை ராஜதானியில் 1920 இல் இருந்த நீதிக்கட்சி  ஆட்சியின் முக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்த சமூக நீதிதான் தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கொள்கையாகவும் அமைந்திருக்கிறது. அரசுப் பணிகளிலும், கல்வி நிலைய மாணவர் சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு என்பது முதல்படி. இப் போராட்டம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, 69 விழுக்காடு இடஒதுக்கீடு எட்டப்பட்டபோது உச்ச நிலையை அடைந்தது. அதன் பின்பு அரசின் கவனம் மற்ற துறைகளின் பக்கம் திரும்பியது.

இது எவ்வாறு இயன்றது என்றால், சமூக நீதிக் கொள்கைக்கு ஓர் அகன்ற நடைமுறை சாத்தியமான விளக்கம் அளிக்கப்பட்டதால்தான் என்று கூறலாம். நாட்டு முன்னேற்றத்தின் பயன்களைப் பெறுவதில் இதுவரை சேர்க்கப்படாத, பயன்பெறாத, சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களையும் இணைத்துக் கொள்வது என்பதுதான் சமூக நீதிக் கொள்கையின் பரந்த விளக்கமாகும். அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைப் போன்றதுதான் இதுவும். அனைத்து மக்களையும் இவ்வாறு சேர்த்துக் கொள்ளாமல், தொடர்ந்து பிரித்து வைத்துப் பயன்களை அவர்களுக்கு அளிக்க மறுப்பதால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியே தடம் புரண்டு சிதைந்துவிடும் என்ற அச்சத்தால் அனைவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கருதுவது இக் கொள்கை.
மற்றொரு புறம், சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் நன்றாக இருக்கத் தேவையானவற்றை அளிப்பதுதான் ஒழுக்க நெறியிலான ஒரு நியாயமான கொள்கையாகும். இந்தப் புரிதலின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதுதான் சமூக நீதிக் கொள்கை என்பது.

உணவு பற்றிய கவலையிலிருந்து  ஏழைப் பெண்கள் விடுதலை பெற்றுள்ளனர்

அரிசிக்கு அதிகப்படியான மானியம் அளித்தது, உணவு பற்றிய கவலையில் இருந்து ஏழை மக்களையும், தாழ்ந்த நிலையில் உள்ள மக்களையும் விடுவித்து விட்டது. முன்பு நிலவி வந்த பல்வேறுபட்ட பொருள்களின் உற்பத்தி நடைமுறைகளுக்கிடையே இருந்த தொடர்புகளின் அடித் தளமாக விளங்கியது உணவு பற்றிய கவலையே. கிராமப்புற ஏழை மக்கள் உணவு பற்றிய கவலையில் இருந்து மட்டுமன்றி,  இதுவரை இருந்த நிலச்சுவான்தார்களின் பிடிகளில் இருந்தும் விடுதலை பெற்றவர்களாக விளங்கு கிறார்கள். இத்தகைய அதிக அளவில் மானியம் அளிக்கும் நடைமுறை, அரசையே சார்ந்து இருப்பவர் களாக மக்களை ஆக்கிவிடும் என்ற ஒரு வாதமும் முன் வைக்கப்படுகிறது. என்றாலும், அத்தகைய ஏழை கிராம மக்கள், உள்ளூர் நிலச் சுவான்தாரர்களைச் சார்ந்து இருப்பதைவிட அரசைச் சார்ந்து இருப்பது எவ்வளவோ மேலானது.

பெண்களின் வீட்டு வேலை சுமை குறைக்கப்பட்டதால், ஆக்கபூர்வப் பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்

அன்றாடம் உணவைத் தேடுவது என்ற பெரும் முயற்சியின் தேவை மிகப் பெரிய அளவில் குறைக்கப் பட்டு விட்டதால், குடும்பப் பெண்கள் கூடுதலான சுதந்திரத்தை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களது வீட்டு வேலைச் சுமை மிக்சி, கிரைண்டர் போன்ற பொருள்களின் உதவியால் பெரும் அளவில் குறையவே செய்யும். தொலைக்காட்சிப் பெட்டிகளும் இந்த வகையில் உதவி நிறைந்ததாகவே இருக்கும். இவற்றையெல்லாம் அளிப்பது மக்களைச் சோம் பேறிகளாக ஆக்கிவிடும் என்று கூறுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானதும், மனிதத் தன்மையே அற்றதுமாகும். பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஓர் அகன்ற சமூக நீதிச் செயல்பாட்டுக்கும் இது மற்றொரு முக்கியமான நடவடிக்கை என்றே இதனைக் கூறலாம். ஏற்கெனவே பெண்கள் தங்களுக்கான சுய உதவிக் குழுக்களை அமைத்துக் கொள்ளத் தொடங்கி, வங்கிகள் மூலம் நிதி உதவிகளைப் பெறத் தொடங்கிவிட்டனர். வீட்டு வேலைச் சுமைகள் குறைந்துவிட்டபடியால், பெண்கள் கூடுதலான நேரத்தை ஆக்கபூர்வமான பணிகளில் இனி செலவிட முடியும்.

வசதி படைத்தவர்களுக்கும், வசதி அற்றவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளி குறைக்கப்பட்டது

வசதியுள்ளவர்களுக்கும், வசதியற்றவர்களுக்கும் இடையே இருந்த பெரும் இடைவெளி முதன் முதலாக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளால் சிறிது குறைக்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது இந்த இடைவெளியை மேலும் பெருமளவுக்குக் குறைக்கும். கைப்பேசிகளின் விலை முதலில் சந்தைகளின் சக்திகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அவற்றின் விலை மிகமிகக் குறைந்து வரத் தொடங்கி விட்ட நிலையில், கைபேசிகளை அளிப்பது பற்றி அரசு கவலைப்படத் தேவையில்லை; இப்போது மக்களே அவற்றை வாங்கிக் கொள்ள இயன்றவர்களாக உள்ளனர்.

இலவசங்களுக்காக செய்யப்படும் செலவும் நீண்ட காலப் பயன் தரும் ஆக்கபூர்வமான முதலீடே!

இலவசங்களுக்காகச் செலவிடுவது - உற்பத்திப் பெருக்கம் ஏதுமற்ற முதலீடு என்ற  வாதம்  தவறான, ஏமாற்றும் நோக்கம் கொண்ட வாதமாகும். உண்மை யிலேயே அது மனித ஆற்றல் மீது செய்யப்படும் ஒரு முதலீடே ஆகும். அது உடனடியாகப் பயன்படுபவர் களுக்கு மட்டுமன்றி, தரமான மனித ஆற்றல் என்ற முறையில் நீண்ட கால நோக்கில் முதலாளித்துவப் பிரிவினருக்கும் பயன் தருவதாகும்.

மாநில அரசு தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது பாராட்டத்தக்கது.

இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய அனைத்து முயற்சிகளின் ஒட்டுமொத்த பாதிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த தொழில் மாற்ற நடைமுறையில் ஏழை மக்களும் கூட அதிக அளவு துன்பப்பட மாட்டார்கள் என்று கூறலாம்.  ஜனநாயக முறையில் ஒரு நியாயமான ஆட்சியில் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ, அவற்றைச் செய்து முடித்துள்ள மாநில அரசு தனது கடமையில் இருந்து தவறவில்லை என்று கூறுவதே நியாயமான தாக இருக்கும்.

ஏழுகோடி மக்களுக்கு செய்யப்படும் செலவு ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையை விடக் குறைவானதுதான்
இலவசங்கள் என்பது வசதி படைத்தவர்களின் மொழியாகும்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகைகளை வரிச் சலுகையாக வழங்கப்படுவதில் இந்த வசதி படைத்தவர்களுக்கு அக்கறையோ, கவலையோ, சங்கடமோ ஏதுமில்லை. ஏழு கோடி மக்களுக்கு இலவசங்களுக்காக செலவிடப்படும் இத் தொகை, கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. அப்படி இருக்கும்போது ஏன் இந்தக் கூச்சலும், கூப்பாடும்?

(கட்டுரை ஆசிரியர் சென்னையைச் சேர்ந்த முன்னேற்றப் பொருளியல் வல்லுநர் ஆவார்.           நன்றி: டெக்கான் கிரானிக்கிள் 9-4-2011            தமிழில்: த.க. பாலகிருட்டிணன்)
ஜே. ஜெயரஞ்சன்

Friday, April 8, 2011

சட்டம் ஒழுங்கு கெட்டது எப்பொழுது? யார் ஆட்சியில்?

சட்டம் ஒழுங்கு கெட்டது எப்பொழுது? யார் ஆட்சியில்?

தி.மு.க. ஆட்சிமீது வைக்கப்படும் குற்றச்சாற்றுகளுள் ஒன்று  - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்ப தாகும்.

குற்றம் சுமத்துகிறவர் யார் என்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - கோவைக் கூட்டத் தில்கூட (6.4.2011) இந்தக் குற்றச் சாற்றை முன் வைத்துள்ளார்; திருவாளர் சோ ராமசாமி அய்யர் போன்றவர்களும் இதற்குப் பின் பாட்டுப் பாடி வருகின்றனர்.

நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச் சினையைப் பாதுகாக்க வேண்டிய முதல் அமைச்சராக இருந்த ஜெய லலிதா அம்மையாரே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சது ராடியது சாதாரணமானதுதானா? சட்டத்தைத் தவறாகக் கையாண் டதில் இந்த அம்மையாருக்கு நிகராக இன்னொருவரைக் காட்ட முடியுமா?

எத்தனை எத்தனையோ எடுத் துக்காட்டுகளைக் கையும் களவு மாகக் கொண்டு வந்து நிறுத்த முடியும்! எடுத்துக்காட்டுக்கு இதோ சில:

ஆட்சிப் பொறுப்பேற்ற 15ஆம் நாள் என்ன செய்தார்?

முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன், முன்னாள் மேயர் மு.க. ஸ்டாலின் ஆகியோர்மீது ரூ.15 கோடி மதிப்பிலான சாலை போடும் காண்டிராக்ட் வழங்கியதில் ஊழல் என்று வழக்குப் போட்டார். இது தொடர்பாக தி.மு.க. நாடாளுமன்ற முன்னால் உறுப்பினர் பரசுராமன் கைதும் செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவர்களைக் குற்றவாளி யாக நிரூபிக்க முடிந்ததா?

தனது வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்ட சுதாகரன்மீது கொலை வழக்கு 16 கிராம் ஹெரா யின் போதை வைத்திருந்தாகவும் கூறி, இரு வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டாரே (13.6.2001) வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததா? சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்றுகூறி தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் மு.க. ஸ்டாலின் மற்றும் பன்னிருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதே அந்த வழக்கின் கதி என்னாயிற்று?

மதுரையைச் சேர்ந்த செரினா அவர்தம் தாயார் ரெஜினாவை கஞ்சா கடத்தியதாகக் கைது செய்து சிறையில் அடைக்கவில்லையா? (10.6.2003)

செரினாவின் வீட்டை சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சாவும், ஒரு கோடியே 40 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணமும், 7.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டதே - கடைசியில் அந்த வழக்கில் தமிழக அரசு மூக்கறுபட்டது தானே மிச்சம்.

மற்றதை விட்டுத் தள்ளுங்கள்! திண்டிவனம் அருகே தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியே அச்சுறுத்தப்பட வில்லையா? அதன் பின்னணியில் அரசே இல்லையா?

இந்தியத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் சென்னை விமான நிலையத்திலும் ,அவர் தங்கியிருந்த விடுதியிலும் தாக்குதல் தொடுக்கப் பட்டது எந்த ஆட்சியில்?

மத்திய அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் காரை மறித்து தாக்கப் படவில்லையா?

முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி யான பெண் ஒருவரின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது, யார் முதல்வராக இருந்த போது?

வழக்கறிஞர் விஜயன், முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்த கிருஷ் ணன், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், என்.ஜி.ஜி.ஓ. சங்கத் தலைவர்கள் சிவ. இளங்கோ, சு.அறிவுக்கரசு போன்ற வர்கள் வீடு புகுந்து தாக்கப்பட வில்லையா? இது எந்த ஆட்சியில்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்?

கோவை வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் மூன்று பேர்களை பேருந் திலேயே வைத்துக் கொளுத்தியவர்கள் யார்? ஆளும் அ.இ.அ.தி.மு.க.வினர் அல்லவா? அந்த வழக்கு ஒழுங்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப் பட்டதா? இப்பொழுதுதானே அவர் களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

பத்திரிக்கைகாரர்கள் ஜெய லலிதா அம்மையார் காலத்தில் பட்டபாடு கொஞ்சமா - நஞ்சமா?

ஃ    சன் டி.வி. செய்தியாளர் விழுப் புரத்தில் கைது

ஃ    29.6.2001இல் 300-க்கும் மேற் பட்ட பத்திரிகையாளர்களை கைது செய்து வேப்பேரி காவல் நிலையத்தில் அடைக்கப்படவில்லையா?

ஃ    12.8.2001 அன்று சென்னை டாக்டர் ராதாகிருட்டிணன் சாலை விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டு பத்திரிகையாளர்களை கண் மூடித்தனமாகத் தாக்கினர். நக்கீரன் செய்தியாளர் பிரகாஷ், இந்து ஒளிப்படக்காரர் மூர்த்தி, தினமணி ஒளிப்படக்காரர் ராஜி, ஜீ டி.வி. ஒளிப்படக்காரர் மணீஷ், ஆஜ்தக் செய்தியாளர் ஜெயசிறீ போன்றோர் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக் கருவிகள், வீடியோ சாதனங்கள் பறிக்கப்படவில்லையா?

ஃ    ஜெவுக்கு எதிராக எழுதியதற் காக இந்து பதிப்பாசிரியர், சிறப்புச் செய்தியாளர் இராதா வெங்கடேசன், கட்டுரை ஆசிரியர் வி. ஜெயந்த் ஆகி யோர்களுக்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை.

ஃ இந்து பத்திரிகை செய்தியை தமிழில் வெளியிட்டதற்காக முரசொலி ஆசிரியர் செல்வத்திற்கு 7 நாள்கள் சிறைத் தண்டனை வழங்கவேண்டு மென்று சட்டசபையில் தீர்மானம்.

ஃ    சந்தன வீரப்பன் சம்பந்த மான பழைய வழக்குகளை மீண்டும் கிளறி, நக்கீரன் கோபால் பெயரை புதிதாகச் சேர்த்து, இரவு நேரத்தில் பொடா சட்டத்தில் கைது செய்து சென்னை, திருச்சி, சேலம், கோவை என பல சிறைகளுக்கு அலைக் கழித்துக் கொடுமைப்படுத்தப்பட வில்லையா?

ஃ    இந்து ஏட்டின்மீது 17 வழக் குகள்; முரசொலி ஏட்டின்மீது 6 வழக்குகள்.

ஃ    நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினகரன், இந்தியா டுடே, ஸ்டேட்ஸ்மென், தி வீக், டெலிகிராப், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவுட்லுக் போன்றவை மீது நடவடிக்கை.

130-க்கும் மேற்பட்ட வழக்குகள் பத்திரிகையாளர்கள்மீது தொடரப் பட்டனவே  - இதற்கு என்ன பதில்?

(இவ்வளவு கொடுமைகளுக்கும் ஆளான பத்திரிகைகளில் சில இன்று ஜெ.மீது கரிசனம் காட்டு கின்றன. காரணம், ரத்தம் தண் ணீரை விட கெட்டியானது.)

இவ்வளவு பொய் வழக்குகளை யும், வன்முறைகளையும் ஓர் அரசே முன்னின்று செய்துவிட்டு, இப் பொழுது தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டது என்று சொல்லும் தகுதி ஜெய லலிதாவுக்கோ, அவருக்குத் தாளம் போடும் துக்ளக் கும்பலுக்கோ உண்டா? உண்டா?

மக்கள் மறதிக்குப் பெயர் போனவர்கள் என்ற மமதையில், புழுதிவாரித் தூற்றுவோருக்கு ஏப்ரல் 13-இல் பாடம் புகட்டுவீர்! பாடம் புகட்டுவீர்!!

வன்முறையைத் தூண்டும் பார்ப்பனர் சங்கம்

வன்முறையைத் தூண்டும் பார்ப்பனர் சங்கம்

பூணூலை உருவிக் கொண்டு ஒரு சிறு கூட்டம் புறப்பட்டு இருக்கிறது என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் கூறி விட்டாராம். உடனே பார்ப்பன சங்கம் பூணூலை உருவிக் கொண்டு புறப்பட்டு விட்டது. நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய பார்ப்பன சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் திருவாளர் சங்கர நாராயண அய்யர் என்ற பார்ப்பனர் பின்வருமாறு கூறியுள்ளார்:

தமிழக முதல்வர் கருணாநிதி வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் பிராமணர்களின் தெய்வீகத் தன்மை வாய்ந்த பூணூலைப்பற்றி அவதூறாக பேசியுள்ளார். இப்பேச்சானது எங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலாகக் கருத வேண்டியுள்ளது. ஒவ்வொரு அந்தணருக்கும் பூணூல் தன்மானத்தைக் காக்கும் அடையாள சின்னமாகும். இதை அவமதிப்பதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும் தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப்படும். எங்களைப் பற்றி அவதூறு பேசுவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் பணியை மட்டும் கருணாநிதி பார்த்துக் கொள்ளட்டும். இல்லையென்றால் எங்கள் சமுதாய வீர இளைஞன் வாஞ்சிநாதன் எடுத்த புரட்சிகரமான முடிவை எடுக்கத் தயங்க மாட்டோம்.

மேலும் இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும், அவர்களுக்கு எதிராக வாக்களிப்பது என்றும், நமது சமுதாய வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

(தினமலர் - நெல்லைப் பதிப்பு 5.4.2011)

மானமிகு கலைஞர் அவர்கள் தவறாக எதையும் கூறிடவில்லை. ஓர் உண்மையைத்தான் கூறியுள்ளார். பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனர்களும் திட்டமிட்ட வகையில் தி.மு.க.வுக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறு கூட்டம் பூணூலை உருவிக் கொண்டு புறப்பட்டுள்ளது என்று தான் கூறினார்.

இதில் என்ன தவறினைப் பார்ப்பன சங்கப் பிரமுகர் கண்டு விட்டார் என்று தெரியவில்லை. நியாயமாகப் பூணூல் அணிந்து வருபவர்களை - எதிர்த்து பார்ப்பனர் அல்லாதார் கோபம் கொள்ள வேண்டும். பிராமணர் என்பதற்கு அடையாளம் பூணூல் என்றாகி, அதனை அணிய உரிமையில்லாதவர்களைச் சூத்திரர்களாகக் கூறுவதாகத்தான் பொருள்.

தமிழர்களை இந்த வகையில் அவமானப்படுத்தும் பார்ப்பனர்கள் அடுத்த வகையில் தமிழினத்தின் தனிப்பெரும் தலைவராக இருக்கக்கூடிய மானமிகு கலைஞர் அவர்களை ஆஷ்துரையை வாஞ்சிநாதன் என்னும் பார்ப்பனன் தீர்த்துக் காட்டியதுபோல தீர்த்துக் கட்ட இருப்பதாகத் தெரிவித்திருப்பது தமிழ் மண்ணை கலவரப் பூமியாக்கும் திட்டமாகும்.

இந்தப் பார்ப்பனர்மீது தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அமைதித் தென்றல் தவழும் தமிழ்ப் பூமியை வன்முறை தாண்டவமாடும் கலவரப் பூமியாக மாற்றிடத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

சனாதன தர்மத்துக்கு விரோதமாக நடந்து கொண்டார் என்பதற்காக ஆஷ்துரையை வாஞ்சிநாதன் என்ற பார்ப்பான் திட்டமிட்ட முறையில் இரயிலுக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு விட்டான். சனாதன தருமத்திற்கு எதிரான சமதர்மத்தை கலைஞர் அவர்கள் பிரச்சாரம் செய்வதால், பார்ப்பனர்கள் வாஞ்சிநாதனாக மாறுவார்களேயானால், அதன் விளைவு கடும் விலையைக் கொடுப்பதாகவே ஆகும்.

இதற்கு முன்பேகூட சென்னை அண்ணா நகரில் பார்ப்பனர்கள் நடத்திய மாநாட்டு மேடையில் சில பார்ப்பனர்கள் அரிவாளைத் தூக்கிக் காட்டிக் கொக்கரித்தனர்.

தந்தை பெரியார் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை நடத்தி வந்திருந்தாலும், எந்த நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுக்கவில்லை. அதனை அவர் விரும்புவதும் இல்லை.

காந்தியார் நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் அந்த நிலை ஏற்படாமல் தடுத்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் மட்டும் கொஞ்சம் ஜாடை காட்டியிருந்தால் தமிழ்நாடே தீப்பற்றி எரிந்திருக்காதா?

மக்களுக்கு வழி காட்டும் பொறுப்பு வாய்ந்த தலைவ ராகத் தந்தை பெரியார் திகழ்ந்ததால் வன்முறையைத் தவிர்த்து அமைதிக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் பார்ப்பனர்களுக்கு வழிகாட்டும் தலைவர்கள் யாரும் இன்றி, தான் தோன்றித்தனமாக வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். முளையிலேயே இதனைக் கிள்ளி எறியவில்லையானால் விபரீதத்திற்கு வழி வகுக்கக் கூடும் என்று எச்சரிக்கிறோம்.

வன்முறையைத் தூண்டியுள்ள பார்ப்பனர் சங்கத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்டவர்மீது சட்டப்படியான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை, காவல்துறையை வலியுறுத்துகிறோம்.

Monday, April 4, 2011

யார் இந்த ஜெயலலிதா?

வாக்களிக்கச் செல்லும் பொதுமக்கள் சிந்தனைக்கு!

ஒரே நாளில், ஒரே கையொப்பத்தில், 1,76,000 அரசு ஊழியர்களை, எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் மூலம் டிஸ்மிஸ் செய்து வீட்டுக்கு அனுப்பிய கொடூர மதியாளர் ஜெயலலிதா!
10 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வேலையைவிட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பிய கொடுமையாளர் ஜெயலலிதா!

மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம்  பேரை வேலையிலிருந்து நீக்கிய ஆட்சியாளர் ஜெயலலிதா!

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை தமிழ்நாட்டுக்கு சிறைபிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என சட்டமன்றத்திலேயே பேசிய ஈழத்தமிழர் விரோதி ஜெயலலிதா!

போர் நடக்கின்றபோது அப்பாவிகள் கொல்லப்படுவது இயற்கைதான் என்று கூறி ஈழத்தமிழர் படுகொலைகளை நியாயப்படுத்திய தமிழினவிரோதி ஜெயலலிதா!

தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில், இலங்கைத் தமிழறிஞர்களை திருப்பி அனுப்பி அவமானப்படுத்திய ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா!

பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்:

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை மோரில் விஷம் வைத்துக் கொன்றவர் என்று அவருடைய மனைவி ஜானகி அம்மையார் மீதே அபாண்டமாக பழிபோட்டவர் ஜெயலலிதா!

அய்.ஏ.எஸ். சந்திரலேகா  மீது ஆசிட்  ஊற்றி அவர் முகம் சிதையக் காரணமான சதியில் ஈடுபட்டவர் என்று சொல்லப்பட்டவர்தான் ஜெயலலிதா!

தன்னுடைய வளர்ப்பு மகன் சுதாகர்  மீதே வழக்குப் போட்டு, அவர் சம்பந்தம் வைத்துக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மிகப்பெரிய மன அதிர்ச்சியை அளித்தவர் ஜெயலலிதா!

செரீனா என்ற பெண்மணியைக் கைது செய்து, கஞ்சா கேசில் சிறையில் அடைத்து ஆனந்தப்பட்டவர் ஜெயலலிதா!

எம்.ஜி.ஆரின் உதவியாளர் முத்து என்பவர் மீது கஞ்சா கேஸ் போட்டு பழிவாங்கியவர் ஜெயலலிதா!

80 வயது முதியவரான முன்னாள் ஆளுநர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று குற்றம் சாற்றிய வஞ்சகர் ஜெயலலிதா!

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் முன்னாள் அமைச்சர் அருணாச்சலம் அவர்களை தான் பயணம் செய்த  விமானத்தில் இருந்து இறக்கியவர் ஜெயலலிதா! ஆயிரக்கணக்கான இசுலாமிய சமூகத்தவர் மீது கொலை வெறித் தாண்டவமாடிய நரேந்திர மோடியை வீட்டுக்கு அழைத்து வந்த விருந்த வைத்த இந்துமத ஆர்வலர் ஜெயலலிதா!

மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்

தன்னுடைய ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ அரிசியை ரூ.3.50 - க்கு உயர்த்தியது மட்டும் அல்லாமல், உயர்விலை அரிசியான, 7.50 மதிப்புள்ள அரிசியை வாங்கினால் தான் குறைந்த விலை அரிசி தர முடியும் என்று உத்தரவிட்டவர்தான் ஜெயலலிதா! பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு போடப்படும், சத்துணவில் முட்டை போடக்கூடாது என உத்தரவிட்ட ஆட்சியாளர்தான் ஜெயலலிதா!

ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தை தன்னுடைய ஆட்சியில் நிறுத்தி வைத்து உத்தரவிட்டவர்தான் ஜெயலலிதா!

சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட ஏழை  மக்களின்  நிலங்களை அபகரித்தவர் ஜெயலலிதா!

கொடநாடு எஸ்டேட்டில் பொதுமக்கள் போகும் வழியை அடைத்து வைத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியவர் ஜெயலலிதா!

தமிழர்களுக்கும், தமிழ்ச்சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய வாழ்வாதார, பொருளாதார, வருவாய் ஈட்டும் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தினை சோழவந்தான் சுப்பிரமணி சுவாமியுடன் சேர்ந்துகொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடுத்து நிறுத்தி, தமிழகத்துக்கே எதிரி என அடையாளம் உள்ளவர்தான் ஜெயலலிதா!

இறுதி ஏழை இருக்கிற வரையிலும் இலவசங்கள் தொடரும் என முழங்கும் முதல்வரின் கலைஞரின் முகமே உண்மை முகம்! இந்த இலவச திட்ட அறிவிப்பினை முகமூடியாக போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்ற வருபவர்தான் ஜெயலலிதா!

ஆடு, மாடுகள் எல்லாம் இலவசம் என்ற பெயரில் மக்களை ஆடு, மாடுகளை மேய்க்க வைத்து மீண்டும் ஒரு மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத்துடிக்கும் மனுதர்ம நாயகி ஜெயலலிதா!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் 1000 கோடி கையூட்டாகப் பெற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் அடிபடுகிற பெயர் யார்?

கொடுமையின் மறு பெயராம் ஜெயலலிதாவை அரசியலிருந்து அப்புறப்படுத்துவது என்பது ஒரு வரலாற்றுக் கடமை. அந்தக் கடமையை ஆற்றிடும் வல்லமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்தம் கரங்களுக்கு வலுவூட்ட ஆதரிப்போம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை.
- தகடூர் தமிழ்ச்செல்வி

Sunday, April 3, 2011

தமிழர்களுக்கு யார் தேவை? தமிழர் தலைவர் எழுப்பும் சமூக நீதி வினா

திருச்சுழி, ஏப்.3- தி.மு.க. வேட்பாளர்கள் உசிலம் பட்டி தொகுதி-எஸ்.ஓ.இராமசாமி, திருமங்கலம் தொகுதி மு.மணிமாறன், திருச்சுழி தொகுதி-அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை ஆதரித்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நேற்றைய (2.4.2011) பிரச்சாரக்கூட்டங்களில் ஆற்றிய உரை வருமாறு:

நம் சந்ததியினர் பிள்ளைகள் எல்லாம் ஆடு, மாடுகள் மேய்க்க  வேண்டும் என்று சொல்பவர் ஜெயலலிதா; நம் இனத்துப் பிள்ளைகள் எல்லாம் படித்து பட்டதாரிகளாக, பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களாக ஆக வேண்டும் என்று நினைப்பவர் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் என்று திராவிடர் கழக  தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

அனைவர்க்கும் அனைத்தும்

நம் சமுதாயத்திற்காக பாடுபடவேண்டுமானால் எந்த அணியை ஆதரிக்க வேண்டும்-ஏன்? திராவிட முன்னேற்றக் கழக அணியை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவாக மக்கள் முடிவு எடுத்து இருக் கிறார்கள். தலைவர்கள் காமராசர் போன்றவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக நல்வாழ்வு உண்டாக்குவதற்காக, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர்கள் - சட்டம் செய்தார்கள்.

மாற்றியது-தி.மு.க ஆட்சி!

இதுதான் உன் தலையெழுத்து, இதற்கு மேல் ஆசைப்படாதே, நீ படிக்க வேண்டும் என்று நினைக்காதே, நீ பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும் என்று எண்ணாதே, நீ உத்தியோகத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்காதே, என்று சொல்லுவது ஆதிக்கவாதி களின் உயர் ஜாதிக் காரர்களின் கருத்து. அதை மாற்றிய ஆட்சிதான் தி.மு.க ஆட்சி. இவர்களைப் பற்றி கவலைப் பட்டவர்கள் வேறு யாராவது உண்டா?  கலைஞர் ஆட்சிபோன்று வேறு எந்த நாட்டிலாவது சமதர்ம ஆட்சி உண்டா? ஆத்தா, காலரா எல்லாம்
அன்றைக்கு அம்மைநோய் வந்தால் அடி யோடு போய்விடுவார்கள். காலரா வந்தால் காணாமல் போய்விடுவார்கள். ஆத்தா வந்தாள், முத்துப் போட்டுவிட்டாள் என்று சொல்லு வார்கள்.

இன்றைக்கு முனிசிபாலிட்டிக்குள்ளேயே, பஞ்சாயத்து போர்டுக்குள்ளேயே விடுவதில்லை. ஹெல்த் ஆபிசர்கள் (ழநயடவா டிககஉநச) கண்காணித்து வருகிறார்கள். இன்றைக்கு அந்த அளவிற்கு மருத்துவம் வளர்ந்து இருக்கிறது.

பட்டினிச்சாவு உண்டா?

இன்றைக்கு தமிழ்நாட்டில் எங்கேயாவது பட்டினிச்சாவு உண்டா? அன்றைக்கு அந்த அம்மா ஆட்சியிலே மன்னார்குடியிலே பட்டினிச் சாவு இருந்தது. இன்றைக்கு இருக்கிறதா?

பப்ளிக் தேர்வு கமிஷனில், அலுவலகத்தில் அந்த அம்மா ஆட்சியில் வேலை இல்லாமல் பலர் இருந்தார்கள்; பேன் குத்திக்கொண்டுதான் இருந் தார்கள். 5 ஆண்டுகளுக்கு வேலை கிடையாது. மின்சாரத்திற்காக தொலைநோக்கோடு ஏதாவது திட்டம் செய்து இருந்தாரா? இல்லையே!

மின்வெட்டு, மின்வெட்டு என்று இன்றைக்கு இவர்கள் பேசலாமா? வெளிநாட்டுத் தொழிற் சாலைகள் அதிகரித்ததால் மின்சாரம் அதிகரித்து இருக்கிறது. மின்சாரம் உற்பத்தி செய்யாமல் மின்வெட்டு, மின்வெட்டு என்றால்  யாரை ஏமாற்ற அந்த அம்மையார் நினைக்கிறார்?

ஒரு கதை சொல்லுவார்கள்...

ஒருவன் தன் தந்தையையும், தாயையும் கொலை செய்துவிட்டான். இரண்டு பேரையும் கொலை செய்துவிட்டு அவன் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி அவர்களிடம் சொல்கிறான், அய்யா நீதிபதி அவர்களே, நான் ஓர் அனாதை, எனக்கு தாய், தந்தை இல்லை, என்னைத் தூக்கில் போட்டுவிடாதீர்கள் என்று சொல்லுவதைப் போல், இந்த அம்மையார் மின்வெட்டு, மின் வெட்டு என்று சொல்லுகிறார்.  அந்த மாதிரி மின்வெட்டு திட்டம் உருவாக்கியதே இந்த அம்மையார்தானே!

ஆகவேதான் தி.மு.க கூட்டணிக்கு வாக்க ளியுங்கள் என்று வேண்டுகிறோம்.

தி.மு.க சொன்னதைச் செய்யும் கட்சி

சொன்னதைச் செய்யும் முறை இருக்கிறதே, அதை அரசியல்வாதிகள் கலைஞர் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கலைஞர் அவர்கள் கல்வெட்டு போன்று அதைச் செதுக்கி இருக்கிறார்கள்.
இவை எல்லாம் முடியுமா என்பவர்கள் கலைஞரிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம். தி.மு.க ஆட்சி என்றால் சொன்னதைச் செய்பவர் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. அதனால்தான் கலைஞர் அவர்கள் பல சமுதாய மறுமலர்ச்சியைக் காணுகிறார்.

சொன்னதைச் செய்யாதவர் ஜெயலலிதா

சேடப்பட்டி முத்தையா அவர்கள் சொன்னது போல், சொன்னதைச் செய்யாதவர் உண்டு, மறுத்துக் கூறுபவர்  உண்டு என்றால் அதுதான் அந்த அம்மையார் ஆட்சி-அவர் தான் ஜெய லலிதா அம்மையார்.
கலைஞருக்கு ஒரு வரலாறு இருக்கின்ற மாதிரி, அந்த அம்மாவிற்கும் ஒரு வரலாறு உண்டு. தான் சொன்னதை, இன்னொரு தேர்தல் அறிக்கையில் மறுக்கக்கூடியவர் ஜெயலலிதா.

அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்கு துரோகம் செய்தவர்

சொன்னதற்கு மாறாக, அண்ணாவுக்குத் துரோகம், எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் துரோகம், தலைவர்களுக்குத் துரோகம் செய்தவர் இந்த அம்மையார். பெரியாரையும், மற்றவரையும் விடுங்கள், ஏனென்றால் அவர்கள் பற்றி அந்த அம்மாவுக்குத் தெரியாது. ஆகவே, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
அண்ணாவைப் பற்றியும் தெரியாது. கட்சியின் பெயரில்தான் அண்ணா இருக்கிறார், கொடியில் தான் அண்ணா இருக்கிறாரே தவிர, அ.தி.மு.க கட்சியில் அண்ணா அவர்களின் கொள்கை இல்லை. அந்த அம்மா கடைசியாக, முடிக்கும்போது அண்ணா நாமம் வாழ்க என்கிறார்.  அண்ணாவுக்கு போட்ட நாமம் வாழ்க என்று அர்த்தம். ஒவ்வொரு துறையிலும் பல சாதனைகளைச் செய்தவர் கலைஞர்.

பார்ப்பன இனமாயிற்றே!

பார்ப்பன சங்கத்தினர் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக அறிக்கை விடுத்து இருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது. எனவே, அவர்கள் திருவாரூரை ஆதரிக்க மாட்டார்கள், சீறீரங்கத்தைதான் ஆதரிப்பார்கள் நாம்தான் திருவாரூரை ஆதரிக்க வேண்டும், வெற்றி பெறச் செய்ய வேண்டும். எனவே இப்போது நடப்பது இரண்டு தொகுதிகளுக்கான போராட்டம் அல்ல, இரண்டு வேட்பாளர்களுக்கான போராட்டம் அல்ல. இரண்டு இனத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். இரண்டு கலாச்சாரத்திற்கும் இடையே போராட்டம்.

வேலை வாய்ப்பை தர மறுத்த ஜெயலலிதா

இந்த ஆட்சியில்தான் பல தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. அந்த அம்மா ஆட்சியில் வரவில்லை. ஏனென்றால் ஆட்சி நடத்துகிறவர் களிடம் நல்லுறவு இல்லை, நல்லிணக்கம் இல்லை. மத்திய அரசை மதிக்காதவர்.

சென்னை, மதுரை மற்ற பகுதிகளை இன்றைக்கு சுற்றிப் பாருங்கள். ஏகப்பட்டதொழிற்சாலைகள் இருக்கின்றன. இளைஞர்கள் படித்துவிட்டு, பெற் றோர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதால், இளைஞர்களுக்குப் பண உதவித்திட்டம். அந்த அம்மா ஆட்சியில்,  வேலை நியமனத்தடை உத்தரவுகள் போட்டாரே. இல்லை என்று எவராவது மறுத்துச் சொல்லுங்கள் பார்ப்போம்.

அம்மா ஆட்சியின் சாதனை-வேதனை

பெண்ணாக இருந்தும்கூட பெண்களுக்கு உள்ள திட்டங்களைத் தடுத்து நிறுத்தி, வரக்கூடிய திட்டம் எதையும் செய்யாமல் இருந்தார்களே அதுதான் இந்த அம்மா ஆட்சியின் சாதனை-வேதனை!

வைகோவை பொடாவில் தள்ளியவர் ஜெயலலிதா

இங்கே நம்முடைய நாகராசன் அவர்கள் பொடாவில் ஏன் கைது செய்யப்பட வேண்டும்! தமிழனின் உரிமையைக் கேட்டதற்கு பொடா சட்டமா? பொடாவில் சகோதர் வைகோ எவ்வளவு சங்கடத்தை அனுபவித்து இருப்பார்?

கலைஞரின் மரியாதையைப் பாரீர்!

வைகோ, பொடாவில் சிறையில் இருந்தபோது, வேகாத வெயிலிலும் நீதிமன்றம் சென்று, அவரை ஜாமீனில் எடுக்கத் துடித்தவர் கலைஞர் அல்லவா?
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் அண்ணன் தம்பிகள் நாங்கள். திராவிடர் இயக்கம் என்றால் சாதாரணமா? இதற்கு ஒரு வரலாறு இல்லையா?

வைகோ அவர்கள் எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்கிறார். திருமங்கலம் வரும்போதே நினைத்துக்கொண்டு வந்தேன். திருமங்கலத்தில் இடைத்தேர்தல் வந்தபோது, அந்த அம்மா சகோதரர் வைகோவைப் பார்த்து, விட்டுக் கொடுங்கள் என்று கேட்டார்.

ஏன் தெரியுமா? இதிலே வெற்றி பெற்றால், ஆட்சிக்கு விரோதமாக மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக, வெற்றி வாகை தானாக வந்துவிடும் என்று நினைத்தார் அந்த அம்மையார்.

பதினொன்று இடைத்தேர்தல்களில், ஒரு தேர்தலிலாவது வெற்றி பெற முடிந்ததா? வைகோ அவர்கள் இன்றைக்கு தேர்தலைப் புறக் கணிக்கிறேன் என்று முடிவெடுத்து இருக்கிறார். நான்கூட வேண்டுகோள் விடுத்தேன்.

வைகோவின் பெருந்தன்மை

கூட்டணி தர்மம் என்றால், தார்மீக அடிப் படையில் எந்தக் கட்சி எம்.எல்.ஏ இறந்தாரோ, அந்தக் கட்சி எம்.எல்.ஏதான் இடம்பெற வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ., இறந்தால் காங்கிரசுதான் எம்.எல்.ஏ; அதே மாதிரி தி.மு.க., எம்.எல்.ஏ., இறந்தால் தி.மு.க எம்.எல்.ஏ., ஆனாலும் விட்டு கொடுத்து பண்பாட்டைக் காப்பாற்றினார்.

வைகோவின் பெருந்தன்மையால் திருமங்கலம் தொகுதியை விட்டுக் கொடுத்தார். உங்களுக்குத்  இன்றைக்கு இடம் இல்லை என்று அவமானப் படுத்தி அனுப்பி விட்டாரே, அந்த அம்மையார்.

இதிலிருந்து அந்த அம்மையாரை நீங்கள் தெரிந்து, புரிந்து அடையாளம் காண வேண் டாமா? தனிமைப்படுத்திக் காட்ட வேண்டாமா? சிந்தியுங்கள், வாக்காளப் பெருமக்களே! வைகோ இப்பொழுது வருத்தப்படுகிறாரே, இவர் மேலேதான் தவறு. அவர் மேல் இல்லையே!

சென்னாரெட்டி பட்டபாடு

வைகோ போல, சென்னாரெட்டி இந்த அம்மாவிடம் பட்டபாடு-இவர்களைப் போல நிறைய பேரை சொல்லலாம்.

இன்றைக்கு இந்த அம்மா ஊழலைப்பற்றி பேசுகிறாரே-14 வருடமாக ஊழல் வழக்கு இருக்கிறதே அதைப் பற்றி அவரின் கருத்து என்ன?

மதவாதத்தை ஒழித்து மத்தியில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியின் சார்பில் மதுரையில் சேது சமுத்திரத் திட்ட துவக்க விழாவை நடத்தினோம்.

அம்மா ஆட்சி வரக்கூடாது

தான் சொன்னதைத் தானே மறுத்தவர்கள் அரசியலில் இந்த அம்மாவைப் போல வேறு யாரும் இல்லை. எங்குப் பார்த்ததாலும் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், இதுதான் வளர்ச்சி; சமுதாய மறுமலர்ச்சி-இந்த ஆட்சியில். ஏமாறாதே, ஏமாறாதே என்று உங்களுக்கு எச்சரிக்கை விட்டு, அம்மாவின் ஆட்சி வரக் கூடாது. என்பதற்காகத்தான் நாங்கள்-கருப்புச் சட்டைக்காரர்கள் சொல்லுகிறோம்.

தாய்மார்கள் ஏராளமாக இருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் மகளிர் 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காகப் போராடிக்கொண்டு இருக் கிறார்கள். ஆனால், காரியாபட்டியில் வந்து உங்களைப் பார்க்கும்போது, நீங்கள் 50 சதவிகிதம் தாண்டி இடஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டு பெரியார் எவ்வளவு வென்றிருக்கிறார்; அண்ணா, கலைஞர் எவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள்; இந்த ஆட்சி சமுதாயப் புரட்சிக்கு எவ்வளவு வித்திட்டு இருக்கிறது என்பதை பெருமையுடன் எண்ணிப்பார்க்கிறோம்.

நம்பிக்கைக்குரிய தம்பி தங்கம் தென்னரசு

முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் நம்பிக்கைக்குரிய தம்பியாக தங்கம் தென்னரசு திகழ்கிறார். அவரை உங்கள் தொகுதி வேட் பாளராகப் பெற்றிருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
கலைஞர் ஆட்சியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் பாராட்டி, நன்றி செலுத்துகிறீர்கள். எனவே தங்கம் தென்னரசுவை வேட்பாளராகப் பெற்றிருப்பது பெருமைக்குரிய ஒன்று . அவர் சாதனையின் சரித்திரக் குறியீடு.

பெரியார், அண்ணா விரும்பியது

நம்முடைய அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பள்ளிக் கல்வித்துறையில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு அதிகமாக மாணவர்கள் செல்கிறார்கள். கல்வித் துறையில் ஏற்பட்ட புரட்சியைத்தான் பெரியார் மிகவும் விரும்புவார். காமராசர், அண்ணா, கலைஞர் என்று வரிசையாகப் பெருகி இன்றைக்கு ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கிறார்கள் நம்மவர்கள் என்றதும், பெரியார், நம்ப முடியவில்லையப்பா என்று என்னிடம் சொன்னார். இன்று 9 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்றால், அவரின் சாதனை அது!
234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர்
மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தொடங்கி மாபெரும் 

புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்நாட்டில். எனவே, தங்கம் தென்னரசு திருச்சுழி அல்ல, தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் நின்றாலும் வெல்வார். 234 தொகுதிகளிலும் கலைஞரின் சாதனை வேட் பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
பெண்கள் 80 சதவிகிதம் வரை கல்வி அறிவில் சிறந்து விளங்குகிறார்கள். வந்திருக்கிறார்கள். இந்த அணி கலைஞர் தலைமையில் உள்ள அணி. இந்த நாட்டிலே 100 சதவிகிதமாக கல்விப்புரட்சி ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.

அந்த அம்மா குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து ஆடு, மாடு கொடுத்து, கோல் எடுத்துக்கொண்டு செல்லுவதற்காக நிற்கிறார். கலைஞரோ படிக்கச் சொல்கிறார். தமிழர்களுக்கு யார் தேவை?

ஒரு காலத்தில் எல்லாம்பார்ப்பனர்கள்

கல்விக்கூடங்களில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று இருந்ததை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் ஆக்கியும், குடும்பத்தில் ஆண்-பெண் இருவரும் ஆசிரியராகப் பணிபுரியவும் தங்கம் தென்னரசு வித்திட்டுருக்கிறார். ஒரு இடத்திலும் ஊழல் கிடையாது.

ஒரு காலத்தில் ஆசிரியர் என்றால், பார்ப்ப னர்கள்தான்;   தந்தி வந்தால்கூட மூன்று மைலுக்கு அப் பால் இருந்து வருவார்கள். படிக்க நம்மவர்களுக்குத் தெரியாது.

படிக்காத, படிக்கத் தெரியாத காரணத்தால் கருமாதி பத்திரிகையில் கருப்புமை வைத்து இருப்பார்கள்-கருப்பைப் பார்த்தவுடன் சாவு விழுந்துவிட்டது என்று நினைப்பதற்கு. இன்றைக்கு  அப்படியா? என்றார் தமிழர் தலைவர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...