Sunday, January 2, 2011

63 ஆண்டுகளுக்கு முன்.....

வண்ணார்பேட்டை எய்டெட் எலிமெண்டரி பாடசாலை ஆசிரியர் கூட்டம் சுந்தரமூர்த்தி செட்டியார் பாடசாலையில் (North Madras Range) வடசென்னை டிப்டி இன்ஸ்பெக்டர் திரு.ஆர். வெங்கடரமணராவ் பி.ஏ.எல்.டி. தலைமையில் நடந்தது.

அப்பொழுது தமிழ் எழுத்தை ஆரம்பப் பாடசாலையில் போதிக்கும் விதம் (அதாவது சிறிய பிள்ளைகள் எழுதும் விதம்) பற்றி கார்ப்பரேஷன் ஸ்கூல் ஆசிரியர் தமிழ் வித்வான் திரு. என்.கே. லோகநாதன் அவர்கள் (28.6.1947) கடந்த மாதக் கூட்டத்தில் நடந்த எழுத்துப் பயிற்சி எப்படி கொடுக்க வேண்டும் என்பதன் தொடர்ச்சியை விளக்கிக் கூறினார்.

28.6.1947_இல் தமிழ் எழுத்துகளில் பிள்ளைகள் எழுதுவதற்குக் கஷ்டம் இருக்கிறது. அதை நீக்கி புதிய முறை-யைக் கையாள வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார். இது விஷயமாய் பலர் பலவித முறையைக் கையாள வேண்டும் என்று சொல்லுகிறார்கள் சிறிய பிள்ளைகளுக்கு க்,ச்,ங்,தீக், ஸீச்,ஸீங் ண,ன,ல,ள இவைகளைக் கற்பிக்கும்போது வெகு சிரமப்பட வேண்டியதிருக்கிறது. காரணம் என்ன-வெனில் இந்த எழுத்துகளுக்கு மட்டும் வேறு உருவம் அமைந்திருக்கிறது. ஆகையால் விடுதலை, குடியரசு பத்தி-ரிகைகளில் எழுத்துகள் உபயோகிக்கப்-படுகிற மாதிரி எல்லாப் பத்திரிகை-களும் எல்லா அச்சாபீஸ், எழுத்தாளர்-கள், சர்க்கார் எல்லோரும் ஒன்று சேர்ந்து இவ்விஷயத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்-டார். இதனால் தன்னை பலர் பலவிதமாக நினைக்கக்கூடும். ஆனால் அவர் தான் சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகம், காங்கிரஸ் இவைகளில் ஒன்றையும் சார்ந்தவரல்ல என்றும் குறிப்பிட்டார்.

அப்பொழுது காங்கிரஸை ஆதரிக்கும் ஒருவர் இதற்கும் ஆதாரம் அடுத்த கூட்டத்தில் அதாவது இன்றைய (26.7.1947) இல் ஆதாரம் காட்ட வேண்டும் என்று சொன்னார்.

அதன்படியே திரு.என்.கே. லோக-நாதன் அவர்கள் பின் வருமாறு ஆதா-ரம் கொடுத்தார். அதாவது _ தொல் காப்பியத்திலும் நன்னூலிலும் உள்ள சூத்திரங்களை எடுத்துக் கூறினார். அதன் சாராம்சம் என்னவெனில்:_

தொல்காப்பியத்தில் எழுத்தைப்-பற்றிக் கூறும்போது உயிர்மெய் (ஆகாரத்திற்கு) அதாவது கா, ஙா.... முதலியவைகளுக்கு, தொல்காப்பியத்-தின்படி? ஆகாரத்திற்குரிய ஒற்றுகள் கிடையாது என்றும், கா விற்குப் பதில் க வின் பக்கத்தில் ஒரு புள்ளி க. இப்படியே க., ங., ன., ற., ன., ட., ண., த., ந., ப., ம., ய-., ர.,- ல., வ., ழ., ன., ற., ன., இப்படி எழுதப்பட்டிருந்தது என்றும், அக்காலத்தில் தமிழ்வரி வடிவத்தில் காமா முதலிய புள்ளிகள் (கால் புள்ளி, அரைப்புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளிகள் கிடையாது என்றும்) ஆகையால் ஒன்றுக்குப் பதில் புள்ளிகள் இருந்தன. ஆனால் அதற்குப் பிந்திய காலத்தில் பல பாஷைகள் தமிழ்நாட்-டில் புகுந்தாலும், அநேகமாய் ஆங்கிலம் புகுந்ததனால் (ஆங்கிலத்தில்) அதில் உள்ள காமா, செமிகோலன், புள்ஸ்ற்-றாப் முதலிய புள்ளிகள் வரிவடிவத்தில் புகுந்ததனால் வாக்கியம் முடியும்போது வைக்கும் முற்றுப் புள்ளிக்கும், இப்பொழுது ஒற்று இருக்குமிடத்தில் வைக்கும் புள்ளிக்கும் வித்தியாசம் தெரியாதபடி மாறான பொருள் ஏற்படும் என்ற காரணத்தால் க, ங,ச...ன. என்று இருந்ததை கா,ஙா,சா,....னா என்று ஏற்படுத்தியிருப்பார்கள். இவைகளில் எக்காரணத்தினாலோ, க்,ச்,ங் என்ற எழுத்துகளுக்கு மட்டும் வளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. அனால் இப்-பொழுதும் ணா, றா, னா என்று எழு-துவதுதான் சிறந்தது. இம்மாதிரியே ணா, றா, னா, ணை, லை, ளை, னை, ணொ, றோ, னோ, என்ற எழுத்துகளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் நேர்மையான முறையில் தாராளமாக பிள்ளைகளுக்கு உபயோகப்படும் முறையில் கற்பிக்கலாம். இன்ஸ்பெக்-டர்கள் கோபிப்பார்கள் என்ற பயம் இருக்கக் கூடாது. அவர்களிடம் ஆசிரி-யர்கள் இவ்விஷயத்தை எடுத்துக்கூற தைரியத்துடன் மட்டும் இருந்தால் போதும் என்றார்.

(விடுதலை 4.8.1947)


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...