Wednesday, December 29, 2010

பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டை நாமம்


மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., தேர்வுகளில் முடிவுகள் திறந்த போட் டியில் தான் எடுத்த எடுப்பிலேயே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் பெறும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் போட்டியிடும் இடம் இது.

ஆனால் இதற்கு மாறாக, திறந்த போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெற்றுள்ள தாழ்த்தப் பட்டோர், மலைவாழ்மக்கள்  மற்றும் பிற்படுத்தப்பட்டோரை - தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள் பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டுக்குள் கொண்டு வந்து, ஏற் கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் இடம் பெற்றோர் வெளியேற்றப்படு கின்றனர். இதனைப் பாதிக்கப்படுபவர்கள் உணர வேண்டாமா?
கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே?

இதற்கு உங்கள் பதில் என்ன?

நம்மைப் போல் தூங்கிக் கொண் டிருப்போருக்கு அது தெளிவாகப் புரிய வேண்டாமா?

அய்.ஏ.எஸ்., தேர்வுமுறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம்:-

இதுவரை முதல் நிலைத் தேர்வில் முதல் தாள் என்பது பொது அறிவு குறித்து இருக்கும். இரண்டாவது விருப்பப் பாடமாக இருந்து வந்தது.

விருப்பப்பாடம் என்கிறபொழுது, வரலாறு போன்ற 23 பாடங்களில் எதை வேண்டுமானாலும். இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் தங்கள் பட்டப்படிப்பில்  படித்த ஒரு பிரிவை எடுத்துக் கொண்டு தேர்வு எழுதிட வாய்ப்புக் கிடைத்தது. திங்கிற சோத்துல மண்ணை அள்ளிப் போட்டுட்டாக.

இதைத் தொடக்கத்திலேயே அடித்து நொறுக்குவதற்கு நயவஞ்சக மாக விருப்பப் பாடம் என்ற பகுதி அகற்றப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கும் காலம் எப்போது?....

தாழ்த்தப்பட்டோரையும், பிற் படுத்தப்பட்டோரையும் பிரிக்கும்- பிரித்தாளும் தந்திரத்தின் அடிப் படையில் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் தனியே மாநிலங்களவையின் கடைசிக் கூட்டத்தின் கடைசி நாளில் எந்த விதமான விவாதமின்றியே இரண்டே நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தும் செயலல்லவா இது? நம் எம்.பி.க்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?

அது மட்டுமா? முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதை எதிர்த்துத் திராவிடர் கழகம்தானே போராட்டம் நடத்துகிறது?
எம்.பி.,க்கள் இதனை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவா?

- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி.டாருக்குப் பட்டை நாமம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...