Friday, August 14, 2009

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?

தகுதியில்லை என்று எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களை வெளியேற்றுவதா?
கூடுதலான பயிற்சி அளித்து அய்.அய்.டி. நிருவாகம் அவர்களை உயர்த்தவேண்டும்!
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று
தமிழர் தலைவர் அறிக்கை
போதிய மதிப்பெண் கள் பெறவில்லை என்று கூறி டில்லி அய்.அய்.டி., யில் படித்த 5 மாணவர் கள் வெளியேற்றப்பட்ட தைக் கண்டித்தும், அதன் மீது தொடரப்பட்ட வழக் கில் உச்சநீதிமன்ற நீதிபதி கள் மூவர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய சமூக நீதிக்கு ஆதரவான தீர்ப் பினை வரவேற்றும் திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்.அய்.டி., அய்.அய்.எம்., போன்ற மத்திய கல்வி நிறுவனங்-களை, பல்லாயிரக்கணக்-கான கோடி மக்கள் வரிப் பணத்தைக் கொட்டி, மத்திய அரசு நடத்தி வரு-கிறது. தகுதி, திறமைக்குப் பெயர் போனவர்களை மட்டும்தான் தேர்வு செய்-வது என்று கூறி, ஒடுக்-கப்பட்ட, தாழ்த்தப்பட்ட,
பிற்படுத்தப்பட்ட சமு-தாயத்தவர்களை அக்-கல்வி நிறுவனங்கள் உள்ளே நுழையவே அனுமதிப்-பதில்லை.

மக்கள் வரிப் பணத்தால் நடக்கும் நிறுவனங்கள்

மக்கள் தரும் வரிப்-பணத்தால் நடைபெறும் இத்தகைய நிறுவனங்கள் பார்ப்பன உயர்ஜாதிக்-காரர்களின் _ ஏகபோகக் கூடாரங்களாகி விட்டன. இந்நிலையே தொடர்ந்து இருந்து வருகின்றது. அதனை மாற்றிட இடை-யறாது அரசியல் களங்-களிலிருந்து நீதிமன்றத் தளங்கள்வரை தொடர் போராட்டங்கள் நம்மைப் போன்றவர்களால் நாளும் நடைபெற்றே வருகின்றன!

1951_லேயே திருத்தப்-பட்ட முதல் அரசியல் சட்டத் திருத்தத்தின்மூலம், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிலையங்-கள் எவையானாலும் அவற்றில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண் டும் என்பது தெளிவாக்-கப்பட்டது.

ஆனால், இந்த அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தராமலேயே கடந்த 50 ஆண்டுகளுக்கு-மேலாக ஏமாற்றியே வந்தனர்; கேட்டால் தகுதி, திறமை பேசி வந்தனர்!

மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் சுமார் 25 விழுக்-காட்டினர் (எஸ்.சி., எஸ்.டி.,).

சுதந்திரத்துக்குப் பின்னும் அநீதி தொடர்வதா?

பிற்படுத்தப்பட்டவர்கள் 60 விழுக்காடு. இரண்டும் சேர்த்தால் 85 விழுக்காட்-டினர் ஆவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் _ முன்பு மனு, மாந்தாதா காலத்திலிருந்தே கல்வி மறுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்ட நிலை சுதந்திரத்திற்குப் பின்னும் தொடர்கிறது.

இதற்குப் பிறகு நமது இயக்கம் போன்றவை-களின் இடையறாத போராட்-டங்களுக்குப் பின்னரே, சற்று கதவு திறக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மலை-வாழ் மக்களுக்கான 22.5 சத-விகித ஒதுக்கீடு முழு-மையாக ஒருபோதும் அங்கே தரப்படவே இல்லை.

மத்தியில் இருந்த மனித வள மேம்-பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியால் மீண்டும் கூடு-தலாகச் சட்டத் திருத்தங்-கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, உச்சநீதிமன்ற வழக்குகளிலும் வெற்றி பெற்று, இட ஒதுக்கீட்டுக்கு அந்த மத்திய கல்வி நிறு-வனங்களில் கதவு திறந்-தாலும், பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு 27 சதவிகிதத்தி-னையும் ஒரே அடியாக நிறைவேற்றாமல், ஆண்-டுக்கு 9 சதவிகிதம் என்ற முறையில் மூன்று ஆண்டு-களில் நிரப்புவது என்-கின்ற விசித்திர நிலையை ஏற்படுத்தி, அதற்குப் பிற-கும்கூட சமூகநீதிக்குப் பதி-லாக சமூக அநீதியே நடைமுறைப்படுத்தப் பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைப் புறக்கணிக்கும் பார்ப்பனிய சக்திகள்

எஸ்.சி., எஸ்.டி., மாண-வர்களைச் சேர்த்து அவர்-களை தகுதி, திறமையற்ற-வர்கள் என்று முத்திரை குத்திடவும் திட்டமிட்ட ஏற்பாடுகள்; தேர்வுகளில் அவர்கள் மற்ற மாணவர்-களைப் போல வெற்றி பெற்று வர முடியவில்லை; ஆகவே, அவர்கள் தொடர்ந்து அய்.அய்.டி.,-யில் படித்துப் பட்டம் பெற்றவர்களாக வர முடி-யாத நிலையை அங்கே உள்ள பார்ப்பனிய உயர்-ஜாதி சக்திகள் செய்தன.

அவர்கள் குறைவான கிரேடு மார்க்குகள் வாங்-கினார்கள் என்று கூறி, அங்கிருந்து மேலும் படிக்க இயலாது வெளி-யேறும்படி ஒரு சதி-யையே நடத்தினர். சமூகநீதித் திட்டத்தை அமல்படுத்தி-யதைக் கண்டு வெறுப்பு-டன் நடந்து வருகின்றன _ இந்த ஆதிக்க சக்திகள்!

5 மாணவர்கள் தேர்-வில் குறைந்த கிரேடு பெற்ற காரணத்தினால் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து _ உச்சநீதிமன்-றத்-தில் வழக்குத் தொடர்ந்-தனர்.

அருமையான தீர்ப்பு

தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஜஸ்டிஸ் பி. சதாசிவம், ஜஸ்டிஸ் பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசா-ரித்து, அருமையான சமூக-நீதிப் பயணத்தில் மற்-றொரு முக்கிய மைல்கல் என்ற தீர்ப்பினை வழங்கி-யுள்ளது _ மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

பெஞ்ச் சார்பில் இத்-தீர்ப்பினை எழுதிய ஜஸ்-டீஸ் பி. சதாசிவம் அவர்-களின் சமூகநீதிப் பார்வை _ கோடானுகோடி தாழ்த்-தப்பட்ட, மலைவாழ் சமூ-கத்தவர் நன்றி கூறவேண்-டிய அருமையான தீர்ப்பு ஆகும்!

1. இதன்படி கிரேடு குறைவாக வாங்கினார்கள் என்று காரணம் காட்டி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்-களை அய்.அய்.டி. போன்ற கல்வி நிறுவனங்-கள் வெளியேற்றக் கூடாது; மாறாக, அவர்-களை உயர்த்தும் வகை-யில் தனியான பயிற்சி-களை அளித்து கைதூக்கி-விட வேண்டும்; கூடுத-லான சிறப்புப் பயிற்சி அளித்து பொது நிலை மாணவர்களோடு அவர்-கள் போட்டியிடக் கூடிய தன்னம்பிக்கையை ஆற்-றலை அளித்து கைதூக்கி-விடவேண்டும்.

2. தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு கிரிமீலேயர் (Creamy Layer) என்ற தடையும் இல்லை. பொருந்தாது என்பதால் அவர்களை மேம்பாடு அடையச் செய்யவேண்டும்.

3. இவர்களைப்பொறுத்தவரை குறைந்தபட்ச கட் ஆஃப் மார்க் (தகுதி மதிப்பெண்) பெற்றுத்தான் அவர்கள் அய்.அய்.டி.,யில் சேர்க்கப்-பட்டவர்கள். எனவே, அவர்களை குறைந்த கிரேடு வாங்கினார்கள் என்ற ஒரு செயற்கை வடிகட்டல் சூழ்ச்சி-களின் மூலம் வெளியேற்றக் கூடாது. 2006_07, 2007_08 ஆகிய இரு கல்வி ஆண்டுகளில் சேர்ந்த அந்த 5 தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்பற்றி டெல்லி அய்.அய்.டி. நிருவாகம் நான்கு வார காலத்திற்குள் முடிவு செய்ய-வேண்டும் என்று ஓங்கி தலையில் குட்டியதைப்போல ஒரு பெருமை மிக்க தீர்ப்பினைத். (A Landmark Judgement) தந்துள்ளார்கள்!
இதற்கு முன்பு வந்த தீர்ப்பு
ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோது, இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள சட்டத்-தின்முன் அனைவருமே சமம் என்ற அடிப்படையில் உள்ள Equality யை சாக்காகக் கொண்டு சம வாய்ப்பு (Article 14) விதிக்கு ஒடுக்கப்-பட்டவர்களுக்குத் தனி ஒதுக்கீடு அளிப்பது முரண் என்றெல்லாம் வாதாடியபோது, அன்றைய உச்சநீதி-மன்றத்தின் 3 நீதிபதிகள் ஜஸ்டிஸ் கஜேந்-திர கட்கர் (இவர் பார்ப்பனர்), ஜஸ்டிஸ் சுப்பாராவ், ஜஸ்டிஸ் ஹெக்டே ஆகிய மூவரும் இதுபற்றி மிக அரு-மையானதொரு தீர்ப்பை அளித்தனர். அரசுகள் பின்பற்றவேண்டிய நெறி-முறைகளான (Directive Principles of State Policy) கிக்ஷீவீநீறீமீ 46 என்பது சமூக அநீதிகளை அகற்றி சமூகநீதி தழைக்-கவும், பலவீனமான பிரிவு மக்களை முன்னேற்றவே புகுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலங்காலமாய் அழுத்தி வைக்கப்-பட்ட சமுதாய மக்களுக்கும், முன்னே-றியவர்களுக்கும் சம வாய்ப்புத் தருகி-றோம் என்று போட்டி போட வைத்தால், அது சம போட்டியாக இருக்காது என்ப-தைத் தெளிவுபடுத்தினர்.
மண்டல் அறிக்கை
கூறுவது என்ன?
மண்டல் பரிந்துரை அறிக்கையில் அருமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“There can be equality only among equals. There cannot be equality among unequals’’ என்று.
சம பலமில்லாதவர்களிடையே எப்படி சம போட்டி உருவாகும் என்று கேட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டீஸ் கஜேந்திர கட்கர், ஜஸ்டீஸ் சுப்பாராவ், ஜஸ்டீஸ் ஹெக்டே ஆகிய மூவரது தீர்ப்பில் மிக அருமையான உதாரணத்தைச் சுட்டிக்காட்டியிருந்தனர். “....To make my point clear take the illustration of a horse race. Two horses are set down to run a race - one is a first class horse, the other ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race; in practice the ordinary horse is not given an equal opportunity to compete with the race horse; indeed that is denied to it. So a handicap may be given either in the nature of extra weight or a start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one.”
(ஜஸ்டிஸ் கே. சுப்பாராவ் தீர்ப்பு எழுதினார்).
இதன் தமிழாக்கம் வருமாறு:
எனது கருத்தைத் தெளிவுபடுத்த, ஒரு குதிரைப் பந்தயத்தினை எடுத்துக்-காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒரு பந்தயத்தில் ஓடுவதற்கு இரண்டு குதிரைகள் விடப்படுகின்றன. அவற்றில் ஒன்று உயர் தரம் வாய்ந்த பந்தயக் குதிரை; மற்றது சாதாரணமான குதிரை. ஒரே இடத்தில் இருந்து இரண்டு குதிரை-களும் புறப்படவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அவை இரண்டுக்-கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டது போன்று கருத்தளவில் தோன்றினாலும், நடைமுறையில் பந்தயக் குதிரையுடன் போட்டியிட சாதாரணக் குதிரைக்கு சம வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். சாதாரணக் குதிரைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதனால், பந்தயக் குதிரைக்கு கூடுதல் எடை அளிப்பதன் மூலமோ அல்லது சாதாரண குதிரை புறப்படும் இடத்-திலிருந்து ஒரு நீண்ட தொலைவில் இருந்து பந்தயக் குதிரையைப் புறப்பட வைப்பதன் மூலமோ, இந்த இரு குதிரைகளுக்கிடையே சம வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், போட்டி என்ற பெயரில் நடந்தேறும் ஒரு கேலிக்கூத்து என்ற நிலை மாறி உண்மையில் அது உண்மையான ஒரு போட்டி என்ற நிலையைப் பெற்றுவிடும்.
இதன்படி ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும் ஒன்றாக குதிரை ரேசில் ஓட முடியுமா?
நோஞ்சான் பிள்ளைகளுக்குத்தான் போஷாக்குத் தேவை
அதைத்தான் சிறப்பாகச் சுட்டிக்காட்டி சமூகநீதி வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நோஞ்சான்கள், சவலைப்-பிள்ளைகள்மீது கூடுதலான அக்கறை செலுத்தி, போஷாக்குக் கொடுத்து, பலசாலிகளாக்கிடுவதுதானே தாய், தந்தையரின் கடமை? அதுபோலத்தான் அய்.அய்.டி.,யின் இயக்குநரும், மற்றவர்களும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு தனி சிறப்பு ஏற்பாடு செய்து முன்னேற்ற முயலவேண்டும் என்பது அவசியம், அவசரம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...