இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக - _ புரட்சி உலகைப் -பற்றி சரித்திரம் எழுதப்-பட்டால், அந்தச் சரித்திரத்-தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடா-விட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்
(குடிஅரசு 11.11.1944)
- _ கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு _ வரைபடம் இது.
அந்தப் புகழுக்குரிய நாட்டுக்குச் சேவை செய்ய வந்த நாகரிகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இன்று (1957).
சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த கலைக் கோட்டம் அவர்.
கலைவாணரின் கொள்கை என்ன? 1952 _ தென்றல் பொங்கல் மலரில் அவரே சொல்லுகிறார்:
வினா: தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளில் உங்களுக்குப் பிடித்தமான கட்சி எது?
விடை: இந்தக் கேள்-விக்கு நான் பதில் சொல்லக் கூடாது என்றாலும் பரவா-யில்லை. சந்தேகமில்லாமல் நான் ஆதரிப்பது, விரும்-புவது சுயமரியாதைக்-கட்சிதான்.
வினா: உங்கள் கொள்கை என்ன?
விடை: ஆதி முதல் குடிஅரசு கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய தேசபந்து ஆகிய இரண்டு பத்திரி-கைகளை நான் படித்து வந்தேன்; அப்போது நான் சிறுவ. நாடகக் கம்-பெனியில் வேலை. பக்தி மார்க்கத்திற்கும் நாடகத்-திற்கும் உள்ள வேறுபாடு-களை நான் அப்போது நன்றாகத் தெரிந்து கொண்-டேன். படித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
வினா: உங்கள் முடிவு?
விடை: சுயமரியாதைக் கொள்கை நம் நாட்டுக்குத் தேவை என்பதுதான் அந்த முடிவு.
கலைவாணரின் இந்தப் பதிலைப் படிக்கும்போது என்.எஸ்.கே. அவர்களைப்-பற்றி தந்தை பெரியார் கணித்ததன் உண்மை புரியும்.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்று சொல்-வார்களே _ அது கலைவா-ணர் அவர்களுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். யார் பையன்? என்ற ஒரு திரைப்படம். கலை-வாணரின் துணைவியார் டி.ஏ. மதுரம் ஒரு கீழ் ஜாதிக்காரருக்குத் தண்ணீர் கொடுப்பார். அவரும் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைத் திண்ணை-யில் வைப்பார். டி.ஏ. மதுரம் உள்ளே போய் தண்ணீர் கொண்டு வந்து அந்தப் பாத்திரத்தின்மீது தெளித்து, அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்லுவார். சிறிது நேரம் கழித்து ஒரு தாழ்ந்த ஜாதிக்காரர் கலைவாணரிடம் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பார்; கலைவாணர் என்ன செய்தார்? அந்த ரூபாய் நோட்டுகள்மீது தண்ணீரை ஊற்றுவார். அய்யயோ பணம் எல்லாம் பாழாய்ப் போச்சே! என்று மதுரம் கத்துவார். தாழ்த்தப்பட்டவர்-கள் கொண்டு வந்து கொடுத்த நோட்டாச்சே அதை உயர்ந்த ஜாதிக்-காரர்களான நாம் கையால் தொட்டால் தீட்டாச்சே! என்பார்.
என்னே நையாண்டி! இவர்தான் நம் கலை-வாணர். வாழ்க! வாழ்கவே!!
- மயிலாடன்
No comments:
Post a Comment