Monday, July 29, 2019

மார்பகப் புற்றுநோயை கண்டறியும் "அங்கி'!

மார்பகப் புற்றுநோயை எளிதில் கண்டறிவதற்கான "அங்கி'யை (ஜாக்கெட்) மத்திய மின்ன ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 27.7.2019 அன்று  வெளியிட்டது.
மகாராட்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் சனிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்பகப் புற்றுநோயை எளிய முறையில் கண்டறிவதற்கான "அங்கி'யை மத்திய மின்ன ணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை யமைச்சர் சஞ்சய் தோத்ரே வெளியிட்டார். இதை அகோலா மாவட்ட பெண்கள் மருத்துவமனை மருத்துவர்கள் பெற்றுக் கொண்டனர்.
இது தொடர்பாக தோத்ரே கூறுகையில், ""மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கு எளிய முறையிலான, எளிதில் உபயோகப்படுத்தக் கூடியதாக இந்த அங்கி இருக்கும்'' என்றார்.
புற்றுநோய் என்பது உடலின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள "செல்'களின் எண்ணிக்கை அசாதாரண நிலையில் பல்கிப் பெருகுவதாகும். அப்படி "செல்'களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிக்கும்போது, அப்பகுதியில் ரத்தஓட்டம் அதிகமாகக் காணப்படும். இதனால், அந்தப் பகுதியில் மட்டும் வெப்பநிலையானது, உடலின் வழக்கமான வெப்பநிலையை விட அதிகமாகக் காணப்படும்.
இந்த அங்கியானது, உடலின் வெப்பநிலையைப் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாகும்.
மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர், இந்த அங்கியை மார்பகப் பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும். அப்போது, மார்பகப் பகுதியின் வெப்ப நிலையை இந்த அங்கி பதிவுசெய்து கொள்ளும். மார்பகப் பகுதியில் உடலின் வழக்கமான வெப்பநிலையை விட அதிக அளவில் வெப்பநிலை காணப்பட்டால், அவர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
இந்த அங்கி தொடர்பாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் அஜய் சாஹனி கூறுகையில், ""ஜப்பானிய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் இந்த அங்கி தயாரிக்கப்பட்டது'' என்றார்.

பழநி அருகே நடந்த தொல்லியல் ஆய்வில் 30,000 ஆண்டு பழைமையான கல்திட்டை கண்டுபிடிப்பு ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழரே என நிரூபிக்கும் ஆதாரம்


பழநி அருகே ஆயக்குடியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள் ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் உள் ளது பொன்னிமலை. இந்த மலையின் அடி வாரத்தில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர் ராஜா ரவிவர்மா, பழநியாண்டவர் கல்லூரி பேராசிரியர் அசோகன், ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் அடங்கிய குழுவினர் கல்திட்டையை கண்ட றிந்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
ஆயக்குடி எனும் ஊரின் தென் எல்லை யில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது பொன்னிமலை.
சங்ககால ஆய்வேளிர் என்ற குடியினர் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான தடயத்தை நாங்கள் கண்டறிந்தோம். இதன் தொடர்ச்சி யாக பொன்னிமலை அடிவாரத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் ஆய்வு மேற் கொண் டோம். ஆய்வில் பொன்னிமலை கரட்டின் தென்கிழக்கு மூலையில், அடிவார பகுதியில் ஒரு பெருங்கற்கால நினைவுச்சின்னம் இருப் பதை கண்டறிந்தோம். இது கல்திட்டை அல்லது கல்மேடை வகையைச் சேர்ந்தது. இந்த கல்மேடை தமிழ் ஆயுத எழுத்தான ‘ஃ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெருங் கற்கால காலகட்டம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. தமிழகத்தில் பெருங் கற்கால காலகட்டத்தை தீர்மானிப்பதில் தொல்லியல் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெருங்கற்காலத்தில் இறந்துபோன ஒருவரின் நினைவாக இந்த ஆயக்குடி சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இயற்கையான ஒரு பாறையின் மீது 2 உருண்டையான பாறாங்கற்களை வைத்து அவற்றை இணைக்க அதன்மேல் ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து இந்த சின்னத்தை அமைத்துள்ளனர்.
அத்துடன் பாறாங்கற்களுக்கு இடையே சிறிய கற்களையும் பிடிமானத்திற்கு பொருத்தி உள்ளனர். சுமார் 5 டன் எடையுள்ள இந்த பாறாங்கற்களை அமைத்த விதம் வியப்பை யும், இதன் பிரமாண்டம் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.
இதேபோன்ற ஒரு சின்னம் ஆஸ்திரே லியாவில் உள்ள ‘ஊரு’’ என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ஊர் என்பது தமிழ்ச்சொல். அங்கு வாழும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசும் மொழியும் தமிழை ஒத் துள்ளது. அவர்களின் நிறம், உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் தமிழர்களையே ஒத்துள் ளன. குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா வின் கிழக்குப்பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஊரு நினைவுச் சின்னம் ஆயக்குடி பொன்னி மலை நினைவுச் சின்னத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதால் ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றலே என்று கணிக்கலாம். தமிழர்களின் பண்டைய ஆயுதமான ‘களரி’’ என்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘பூமராங்’ என்பதும் ஒரே வடிவமானவை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குறிகள், தமிழக சங்ககால இரவிமங்கலப் புதை குழிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளுடன் 100 சதவீதம் பொருந்துகின்றன. அண்மையில் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடமும், தமிழர் களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம் 130 வகையிலான டிஎன்ஏ பரிசோதனைகள், இருவருக்குமிடையே ரத்த உறவுகளை உறுதி செய்துள்ளன.
ஆஸ்திரேலிய நினைவுச்சின்னத்தை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் 30 ஆயிரம் வருடங்கள் முதல் 50 ஆயிரம் வருடங்களாக கணக்கிட்டுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் காலம் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரு டங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பீட்டுக் காலக் கணிப்பு அடிப்படையில் ஆயக்குடி சின்னத்தின் காலத்தையும் இதை ஒட்டியே கணிக்கலாம். எதற்கெடுத்தாலும் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் என்று கணித்துக் கொண்டிருக்காமல் அறிவியல் முறைப்படி இதைப்போன்ற சின்னங்களின் காலத்தை ஆய்வு செய்து உறுதிபடுத்த நம் அரசுகள் உதவ வேண்டும். இதன்மூலம் தமிழ் மொழி யின் தொன்மையை 80 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பு எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் நிலவியலாளர்களின் கண்டங் களின் நகர்வு கொள்கைக்கும், லெமூரிய ஆய் விற்கும் இந்த ஆயக்குடி நினைவுச்சின்னம் உலகெங்கும் பயன்படும் என்பது குறிப்பிடத் தக்கது.இவ்வாறு கூறினார்.

2 வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்தி நடிகர் ராகுல் காவல்துறையிடம் சட்டத்துக்கு புறம்பாக 2 வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலித்த சண்டிகர் ஓட்டல் நிர்வாகத்துக்கு, வரித் துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்தி நடிகரும் தமிழில் விஸ்வரூபம்-2 படத்தில் நடித்தவருமான ராகுல் போஸ், சமீபத்தில் படப்பிடிப் புக்காக சண்டிகர் சென்றுள்ளார். அங்குள்ள ஜே.டபிள்யூ.மாரியாட் நட்சத்திர ஓட்டலில் கடந்த 22ஆ-ம் தேதி தங்கிய அவர், அங்கு 2 வாழைப்பழம் சாப்பிட்டுள் ளார். இதற்கான பில்லில் ஜிஎஸ்டி உட்பட ரூ.442.50 என குறிப் பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக சுட்டுரையில் 38 விநாடிகள் ஓடக் கூடிய காணொலியையும் வெளியிட்டார். இது சமுக வலை தளங்களில் வேகமாக பரவியது. இந்த காணொலியை பார்த்த பலர் ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். எனினும், சிலர் அவருக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி சட்டத்தின் 11-ஆவது பிரிவை (விலக்கு அளிக்கப்பட்ட பொருளுக்கு சட்ட விரோதமாக வரி வசூலித்தல்) மீறி வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல் நிர்வாகத்துக்கு, சண்டி கரின் கலால் மற்றும் வரித் துறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சண்டிகரின் கலால் மற்றும் வரித் துறை ஆணையர் மன்தீப் சிங் பிரார் கூறும்போது, வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டதாக நடிகர் பதி வேற்றம் செய்த காணொலி குறித்து விசாரிக்க, உதவி ஆணையர் ராஜீவ் சவுத்ரிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. சட்டத்தை மீறியது உறுதி செய்யப்பட்டால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு உ.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேசத்தில், கோவி லில் சில துப்புரவுத் தொழி லாளர்களுக்கு தண்ணீர் குடிக்க அனுமதி மறுக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அர்ச்சகரை கைது செய்யும்படி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத் தியுள்ளனர்.
தானா பவன் நகரில் நடைபெற்ற இப்போராட் டம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்த விவரம்:
சாம்லி மாவட்டத்தில் தானா பவன் நகரில் உள்ள கோவிலுக்கு வெளியே வடி கால் சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு தாகம் எடுக் கவே கோவில் வளாகத்தில் உள்ள கைப்பம்பிலிருந்து தண்ணீர் எடுத்துவரச் சென் றுள்ளனர். அப்போது கோவிலில் உள்ள அர்ச்சகர்,''குடிநீர் எடுக்க உங்களுக்கு இங்கே அனுமதியில்லை. நீங்கள் உள்ளே வரக்கூடாது'' என்று கூறி அவர்களை வெளியே தள்ளி கதவை மூடியுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த வால்மீகி பிரிவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கூட் டமாகத் திரண்டு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்தின் போது கோவில் அர்ச்சகர் மீது எப்அய்ஆர் வழக்குப் பதிவு செய்ய வேண் டுமென கோரிக்கை எழுப் பினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் போராட்டத்தை கைவிடும் படி கேட்டுக்கொண்டனர். மேலும், இதுகுறித்து நிச் சயமாக விசாரணை நடத் தப்படும் என்று அவர்களிடம் உறுதியளிக்கப்பட்டது.
இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

சமுகநீதியின் மீது மேலும் மேலும் தாக்குதல் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விஞ்ஞானிகளின் பிரதிநிதித்துவம் வீழ்ச்சி!

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் DBT (Department of Biotechnology)  எனப்படும் உயிரித் தொழில்நுட்பத் துறையால் நிதி அளிக்கப்படும் அறிவியல் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டிருக்கும் எண் ணிக்கை இட ஒதுக்கீடு விதியின்படி இருக்கவேண்டிய எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாக உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆய்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தகவல் கிடைத்துள்ளது.
அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை பல அறிவியல் நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 15 %,  பழங்குடியினருக்கு 7.5%  என்பதாக மட்டுமே அதிகபட்சமாக வழங்குகின்றன. எனினும் 'தி இந்து' ஆங்கில ஏடு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை ஆராய்ந்ததில் இட ஒதுக்கீடு விதியின்படி பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய கட்டாயமில்லாத விஞ்ஞானி மற்றும் தொழில்நுட்ப தர ஊழியர் பதவிகள் இட ஒதுக்கீடு பெறும் வகுப்பினர்களுக்கு (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தவிர்த்து) வெறும் ஒற்றை இலக்க அளவிலேயே பிரதிநிதித்துவம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
208க்கு வெறும் 34
எடுத்துக்காட்டாக,  DBTயின் நிதி பெற்று இயங் கும் தேசிய நோயெதிர்ப்பியல் நிறுவனத்தில் National Institute of Immunology (NII) மொத்தமுள்ள 208 நிரந்தர பணியாளர்களில் வெறும் 34 நபர் களேதாழ்த்தப்பட்ட/பழங்குடியின  வகுப்பை சார்ந் தவர்கள். அதிலும் தாழ்த்தப்பட்ட  வகுப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் (Scientists)  வெறும் 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். (ஊதிய தர நிலையில் 10 மற்றும் அதற்கும் மேலாக உள்ள குரூப்  விஞ்ஞானிகள் பதவிகளுக்கு பொருந்தாது) மேலும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி கூட அங்கு இடம் பெறவில்லை. யுனெஸ்கோ அமைப்பின் நிதி ஆதரவில் இயங்கும் மற்றொரு  நிறுவனமான உயிரித் தொழில்நுட்பப் பிராந்திய மய்யத்தில்  உள்ள 44 நிரந்தர பணியாளர்களில் வெறும் நான்கு நபர் மட்டுமே பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவர்கள். விஞ்ஞானி நிலையில் ஒருவர் கூட இல்லை. தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் விஞ்ஞானி நிலையில் பூனாவை தலைமையிடமாகக் கொண்ட செல் அறிவியல் மய்யத்தில் தான் அதிகளவில் பிரதிநிதித்துவம் பெற் றுள்ளனர். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) பிரிவில் அய்ந்து நபர்களும், பழங்குடியின வகுப்பினர் (ST) பிரிவில் இருவர் என்ற எண்ணிக்கையிலும் உள்ளனர்.
தகவல் அளிக்காத நிறுவனங்கள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  DBT
நிறுவனங்களில் விஞ்ஞானிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பாக 16 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு ஒன்பது நிறுவனங்களே பதில் அளித்திருக்கின்றன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மனுதாரர் அசோக் குமார் தெரிவித்தார். குமார் ஃபரிதாபாத் நகரில் உள்ள உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற Translational Health Science Institute (THSI)  நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அந்நிறுவனத்திலும் மொத்தமுள்ள 32 நிரந்தர பணியாளர்களில் இருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட/பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், அதிலும் ஒருவர் மட்டுமே விஞ்ஞானி நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், 'தி இந்து' நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளித்த  DBT  நிறுவனத்தின் செயலாளர் ரேனு சுவரூப் கடந்த ஆண்டே இப்பிரச்சினையை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வையும் மேற் கொண்டுவிட்டதாக தெரிவித்தார். "சில நிறுவனங் களில் தான் இவ்வகையான பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. தற்பொழுது  இப்பிரச்சினைகளை களையும் விதத்தில் தீர்வைக் கண்டுள்ளோம். அதன்படியே இவ்வாண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனமும் நடைபெற்றது. எனினும் பணி நியமனத்தில் பணியாளர் தேவை, தகுதி,திறமை போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படு கிறது" என கூறினார்.
மத்திய பல்கலைக் கழகங்களில்...
டிசம்பர் 2018இல் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இந்திய அரசு, மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தமுள்ள 936 பேரா சிரியர் பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட /பழங்குடியின வகுப்பைச் சார்ந்தவர்கள் 193 நபர் பணிய மர்த்தப்பட்டுள்ளனர் என்றும், 1838 உதவி பேரா சிரியர் பணியிடங்களில் 395 நபர் பணியமர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Sunday, July 28, 2019

பால்வெளி மண்டலத்தில் பூமிக்கு அருகில் 28 புதிய வகை விண்மீன்கள் : இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பால்வெளி அண்டத்தில் 28 புதிய வகை விண் மீன்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் ஒளிரும் தன்மை, சீராக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ஆரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏரீஸ்) இயக்குநர் வஹாப் உத்தீன் கூறுகையில், பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் பூமிக்கு அருகில் அமைந்துள்ள என்ஜிசி 4147 என்ற விண்மீன் தொகுதியில், புதிய வகையிலான 28 விண்மீன்களைக் கண்டு பிடித்துள்ளோம்.
அவற்றின் ஒளிரும் தன்மையானது, நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. இது அரிய நிகழ்வாகும் என்றார்.
புதிய வகை விண்மீன்கள் தொடர் பாக, ஏரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி அனில் பாண்டே கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டோம். என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியில், முதல் முறை யாக மாறுபட்டு ஒளிரும் வகையிலான விண்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. விண்மீன்களின் ஒளிரும் தன்மை மாறுபட்டுக் காணப்படுவதற்கு, அந்த விண்மீன்களின் சீரான சுருங்கி விரியும் தன்மையோ அல்லது மற்ற வானியல் பொருள்களின் நிழல் இவற்றின் மீது விழுவதோ காரணமாக இருக்கலாம்.
இந்தக் கண்டுபிடிப்பானது, விண் மீன் தொகுதிகள் உருவான விதம் குறித்தும், அவற்றிலுள்ள பொருள்கள் குறித்துமான ஆராய்ச்சிகளுக்குப் புதிய தகவல்களை அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆராய்ச்சியின்போது, என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியின் உள்கட்டமைப்பு குறித் தும் அறிந்துகொண்டோம்.
என்ஜிசி 4147 விண்மீன் தொகுதி யைக்  கடந்த 1784-ஆம் ஆண்டு கண் டறிந்த பிரிட்டன் வானவியலாளர் வில்லியம் ஹெர்ஷெல், இந்த விண் மீன் தொகுதியானது அதிக அளவி லான ஒளிரும் தன்மையைக் கொண் டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதிகப் படியான ஈர்ப்புவிசை காரணமாக இந்த விண்மீன் தொகுதி கோள வடிவில் காணப்படுகிறது என்றார் அனில் பாண்டே.

தமிழகத்தில் முதல் முறையாக பெரிய அளவிலான சங்க காலக் கிணறுகள் கண்டறிதல்

 திருவள்ளூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் சங்க காலத்தைச் சேர்ந்த, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, செங்கற் களால் கட்டப்பட்ட கிணறு மற்றும் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தொல்பொருள் துறையினர் நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே கொசஸ்சலை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் நடந்த அகழாய்வில் கற்கருவிகள் மட்டுமின்றி இரும்புக் காலம் மற்றும் வர லாற்றுத் தொடக்க கால தொல் லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு கடந்த 2015-16-இல் தமிழக அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வுப் பணி முதல் முறையாக நடத்தப்பட்டது. அப்போது ஆனை மேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 300 சதுர மீட்டர் பரப்பளவில் நடந்த அகழாய்வில் 12 குழிகள் தோண்டப்பட்டன. அங்கு 203 வகையான தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2017-18-ஆம் ஆண்டிலும் பட்டரைப்பெரும் புதூரில் அகழாய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது, 525 சதுர மீட்டர் பரப்பளவில் 21 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அங்கு 1,201 வகையான தொல் பொருள்கள் கிடைத்தன. அதில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற் கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், பவளம், பளிங்கு, செவ் வந்திக்கல் போன்ற அரிய வகைக் கற்களால் செய்யப்பட்ட மணிகள், கல்மணிகள், சங்கு வளை யல்கள், சுடுமண்ணாலான பொம் மைகள், விளையாட்டுப் பொருள்கள், காதணிகள், சில்லுகள், செம்பினால் செய்யப்பட்ட பொருள்கள், யானைத் தந்தத்தால் ஆன பொருள்கள், எலும்பினால் செய்த அம்பு முனைகள், அம்மிக்கல், தீட்டுக்கற்கள், தேய்ப்புக் கற்கள், சோழ மன்னன் முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கும். இவை அனைத்தும் பூண்டி தொல் பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரம் ஆண்டு தொன்மையான கிணறு:
இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத வகையில், பட்டரைப் பெரும்புதூரில் சுடு மண்ணாலான உறை கிணறும், செங்கற்களால் கட்டப் பட்ட வட்ட வடிவ கிணறும் அக ழாய் வில் கண்டறியப்பட்டது.
தரைப்பகுதியில் இருந்து 2.85 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இக்கிணறு, பழங்காலத்தில் இருந்தது போல் செங்கற்கள் உடையாமல் அப்படியே உள்ளது. இதன் விட்டம் 2.60 மீட்டர் (வெளிப்புறம்) அளவில் உள்ளது. கிணற்றின் மொத்த ஆழம் 3.91 மீட்டர். செங்கற்களின் கட்டுமானம் 56 அடுக்குகளைக் கொண்டுள்ளது.
முதல் முறையாக...:
தமிழகத்தில் சங்க காலத்தைச் சேர்ந்த இதுபோன்ற பெரிய அள விலான கிணறு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். செங்கற்களால் கட்டப் பட்ட கிணறு கண்டறியப்பட்டுள்ளது அகழாய்வின் சிறப்பம்சம்.
இது பழந்தமிழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நீர் மேலாண்மைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதை பொதுக் கிணறாக மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது.
எனினும், உறைகிணற்றையும், செங்கற் களால் ஆன கிணற்றையும் பாதுகாப் பதற்கு இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாம்! விமான நிலைய ஆணையம் தகவல்

ஏற்கெனவே 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணை யத்தின் தலைவர் குருபிரசாத் மோகபாத்ரா தெரிவித் துள்ளார்.
கடந்த ஆண்டில் லக்னோ, ஆமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி ஆகிய விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.  அவற்றில் 5 விமான நிலையங்களின் பராமரிப்பு, நிர்வாக ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது.
இந்நிலையில், டில்லியில் வெள்ளிக்கிழமை செய்தி யாளர்களைச் சந்தித்த குருபிரசாத் இது தொடர்பாக கூறுகையில், கடந்த ஆண்டு 6 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆண்டில் மேலும் 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும். இவை 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பயணிகள் வந்து செல்லும் பெரிய விமான நிலையங்களாக இருக்கும் என்றார்.

தமிழின் தோற்றம் குறித்து தவறாக எழுதிய புத்தக தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை

12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தோற்றம் குறித்து தவறாக எழுதிய புத்தக தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் -2 ஆங்கில பாடப்புத்தகத்தில் 142 ஆம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று  இருந்தது. அதில் தமிழ் மொழி  கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் மொழி கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.  சமஸ்கிருதத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நட வடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது என்று  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகம் தயாரிப்புக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தகத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதியும் நீக்கப்படும்  என்றும்  பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உலக மொழிக்கெல்லாம் மூத்த மொழியான தமிழின் தொன்மையை விளக்கி மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Saturday, July 27, 2019

கேள்வியை புரிந்து கொள்ளும் குழந்தைகளை சாட்சியாக ஏற்கலாம்

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட அமர்வு   விசா ரித்து பிறப்பித்த உத்தரவில் கூறி யதாவது:
குழந்தைகளை தகுதி யான சாட்சிகளாக ஏற்க லாமா என்பதற்கான சரி யான விதிகள் இல்லை. ஆனால் சாட்சியான ஒரு குழந்தையை அதற்கு தகுதியானதாக உள்ளதா என்று சோதனை செய்வதற்கு நீதிபதிக்கு சுதந்திரம் உள்ளது. குற்ற வழக்குகளில் கேள்விகளை புரிந்துகொண்டு, அந்த கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்லக்கூடிய தகுதியிருந்தால் எந்த வயது குழந்தையையும் சாட்சியாக ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

+2 பாடப் புத்தகத்தில் தமிழுக்கு இழிவு! இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?

தமிழ்   மொழியின்   பழைமை   குறித்ததகவலுக்கு, தமிழை இழிவுபடுத்தும் விதத்தில் தமிழை விட சமஸ்கிருதம்தான் பழைமையானது என 12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருப் பதை எப்படி சகிப்பது? இந்தஅரசு தமிழக அரசா? அல்லது சமஸ்கிருதசர்க்காரா?  என  தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்ட மன்ற      எதிர்க்கட்சித்      தலைவருமான தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள், 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில்  இடம்  பெற்றுள்ள  `தமிழ்  மொழியின்பழைமை  குறித்த  தகவ லுக்கு,  தனது  சுட்டுரை பக்கத்தில்  பதிவு  வெளியிட்டுள் ளார். அவரின்  சுட்டுரைப் பதிவு  வருமாறு:-
எப்படிச்   சகிப்பது   இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான்பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறதுதமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்?இது தமிழக அரசா அல்லது சமஸ் கிருத சர்க்காரா? இவ்வாறு  அவர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் ஜாதி கொடுமையா?

புதுக்கோட்டை மாவட்ட கல்வி அதிகாரியிடம்    ஒரு புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா, வாழைக்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியைகள்  ஜாதி ரீதியாக பள்ளிக் குழந்தைகள் மீது தொடர்ந்து தீண்டாமைக் கொடுமைகளை செய்து வருவதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு ஜாதி ரீதியான பாகுபாடு பார்த்து தாழ்த்தப்பட்ட குழந்தைகளை பள்ளியின் கழிப்பறையை ஆசிரியர்கள்  தொடர்ந்து சுத்தம் செய்ய வைப்பதாகவும், பள்ளித் தலைமையாசிரியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த  குழந்தைகளை ஜாதி ரீதியாக பிரித்து கழிப்பறையில் அடைப்பை சரிபடுத்தச் செய்தும்,  மனித மலத்தை அகற்ற செய்தும்  கொடுமையை தொடர்ந்து செய்து வருவதாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு அடையாள அட்டையில் ஊரில் ஜாதிஅடிப்படையில் தெருக்களின் பெயர்கள் இல்லாத நிலையில் முகவரியில் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளதாகவும், பாடம் நடத்தும் போதெல்லாம் இந்த  குழந்தைகளை பார்த்து 'படிப்பதற்கு லாயக்கு இல்லாத நீங்கள் எல்லாம் கக்கூஸ் கழுவ தான் லாயக்கு' என ஏளனமாகப் பேசி வருவதாகவும் பரபரப்புப் புகாரை மாவட்ட கல்வி அதிகாரியிடம்  15க்கும் மேற்பட்டவர்கள்  புகார் மனு வழங்கியுள்ளனர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட முதன்மை கல்வி அலுவலர் இதுபோன்ற செயலில் ஆசிரியர்கள் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனடியாக அவர்களை பணியிடை நீக்கம் செய்வது தவிர வேறு வழி இல்லை என்றும், இந்த புகார்பற்றி  உடனடியாக  விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகளை துறைரீதியாக வழங்க தாங்கள் தயாராக இருப்பதாகவும், எனவே இந்த புகார் மீது தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது மிக மோசமான நிலையாகும். பண்பாட்டையும், சமத்துவத்தையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே, ஜாதி வெறியுடன் நடந்து கொள்வது வெட்கக் கேடானதாகும்.
தென் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் ஜாதி அடிப்படையில் வண்ண வண்ணமான கயிறுகளைக் கட்டி வருவதாகத் தகவல் வந்தது. அது குறித்து திராவிடர் கழகம் சார்பில் கல்வித்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதப்பட்டது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைப்பற்றி தகவல்கள் என்ன என்றே தெரியாத நிலையில், இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலியே பயிரை மேய்வது போல ஆசிரியர்களே ஜாதி வெறியோடு நடந்து கொண்டு இருப்பது சகிக்கப்படவே முடியாததாகும்.
இன்னொரு பக்கத்தில் ஜாதி ஆணவக் கொலைகள்! தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது? பா.ஜ.க.வுக்குத் தொண்டூழியம் செய்வது தவிர வேறு அரசு ஆற்ற வேண்டிய பணிகள் மறந்தே போயிற்றா? ஜாதி கொடுமைகளுக்கு முடிவு கட்டா விட்டால், அதன் விபரீதம் இந்த ஆட்சிக்கே ஆபத்தாக முடியுமே, எச்சரிக்கை!

தகவல் அறியும் சட்டத்திற்கான திருத்தம்

பதவியில் உள்ளவர்கள் தவறுகளுக்குப் பதில் அளிப்பது மற்றும்

கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான இரட்டை தாக்குதல்
அருணா ராய் மற்றும்

நிகில் தேவ்

14 ஆண்டுகளுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்த போதிலிருந்தே, திருத்தங்கள் அதை அச்சுறுத்திக் கொண்டிருந்தன. சமுக ஆர்வலர்களால் இந்த சட்டம் உறுதியாக பாதுகாக்கப் பட்டது போல, வேறு எந்த ஒரு சட்டமும் இது வரை பாதுகாக்கப்பட்டதில்லை. முழுவதும் சரியாகவும் நியாயமாகவும் இருக்கும் ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது இய லாதது ஆகும். முற்போக்கு சீர்திருத் தங்கள் கொண்டு வருகிறோம் என்ற பெயரில், இத்தகைய பிற்போக்குத்தன மான மாற்றங்களைக் கொண்டு வருவ தற்கு ஆட்சியில் உள்ளவர்களால் இந்த சட்ட திருத்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்பட இயலும் என்ற பொதுவான கருத்தையே  தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் உறுதியாகக் கொண் டிருக்கிறார்கள்.
எவ்வாறு இருந்தாலும், தொடர்ந்து வரும் ஆட்சிகளின் கீழ் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் என்ற கத்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தலை மேல் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.  அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின் ஆறு மாதங்களே கழிந்த பிறகு 2006 ஆம் ஆண்டு முதலிலும், அதற்குப் பிறகு பல முறைகளும்,  அதற்கான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட்டு வந்திருக்கின்றன. நியாயமான எதிர்ப்புப்  போராட்டங்கள் மூலம்   மக்கள் மேற் கொண்ட பிரச்சாரத்தின் காரணமாக அந்த திருத்தங்கள் எல்லாம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன. 2019 ஜூலை 19 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட உத்தேசமான திருத் தங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப் பட்டு விடும் என்பது போன்றே இப்போது சில காலமாகவே  கருதப்பட்டது. மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர் களின் தகுதியை தேர்தல் ஆணையர்கள்,  மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்கள் மற்றும் மாநில அரசு களின் தலைமைச் செயலாளர் தகுதிக்கு  சமப்படுத்தும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 13, 16, 27 ஆவது பிரிவுகளுக்கான திருத்தங்களை மிகவும் கவனமாக இந்த சட்ட திருத்த மசோதா இணைத்துள்ளது. அவர்கள் சுதந்திர மாகவும் பயன் நிறைந்த வகையிலும் செயல்படுவதற்கு இந்த திருத்தங்கள் உதவும் என்று கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற இந்த கட்டுமானம் திட்டமிட்டு வேண்டு மென்றே உடைக்கப்பட்டிருப்பது, மத்திய மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் ஊதியம், இதர படிகள், பதவிக் காலம், மற்றும் அவர்களது பணிநியமன நிபந்தனைகளை முடிவு செய்வதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த பணியாளர், பொதுமக்களின் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியத் திற்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், இது தகவல் அறியும் உரிமை சட் டத்திற்கான ஒரு அடிப்படை திருத்த மல்ல, பெருந் தன்மையுடன் கூடிய ஒரு சிறிய திருத்தமே என்று கூறினார்.
மாற்றத்திற்கான காரணம்
இந்த சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தில்  ஏன் இந்த அளவுக்கு முன் எப்போதும் இல்லாத அவசரம் காட்டப்படுகிறது? அதிகாரம் மிகுந்த அரசியல் வேட்பாளர்கள் பதிவு செய்யும் வாக்கு மூலங்களில் உள்ள விவரங்களை அரசின் அதிகார பூர்வமான ஆவணங் களுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பதற்கு இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் உதவு கிறது என்பதே இதன் காரணம் என்று சிலர் உணர்கின்றனர். அத்தகைய விவரங்களை வெளிப்படுத்த வேண்டு மென்று சில தகவல் அறியும் உரிமை ஆணையர்கள் உத்தரவிட்டுள்ளனர். இத்தகைய செயல்பாடுகளின் பல நிகழ்வுகள்  நடைபெற இயலும் என்பது மட்டுமல்லாமல்,  அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு தொடர்ந்து சவால் அளித்து வர இயன்றதாக இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் இருப் பதும்தான் இதன் காரணம்.  சட்டத்தின் ஆட்சி ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில்,  லஞ்ச லாவண்யமும், எதேச்சதிகாரமாக அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படு வதும் அன்றாட நிகழ்வுகளே ஆகும். அதிகாரம் செலுத்துவது மற்றும் கொள்கை முடிவுகள் எடுப்பது ஆகிய அதிகாரங்கள் குடிமக்களுக்குக் கிடைக் கும் வகையில்,  ஓர் அடிப்படை மாற் றத்தையே இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியுள்ளது. அந்த சட்டத்தைப் பயன்படுத்தும் 40 முதல் 60 லட்சம் வரையிலான சாதாரணமான குடிமக்கள் பலருக்கும் அது உயிர் பிழைத்திருப்பதற்கான ஒரு வழியாகவே உள்ளது. எதேச்சதிகாரம் செலுத்துவது, ஒரு சாராருக்கு மட்டுமே சலுகைகளை அளிப்பது என்ற செயல்பாடுகளில் ஈடு படும் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடும் ஓர் ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப் பதுமாகும் அது. 80 க்கும் மேற்பட்டோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தியவர்கள் கொல்லப்பட்டுள் ளனர்.  தகவல் அறியும் சட்டத்தைத் துணிவுடனும், உறுதியுடனும்  அவர்கள்  பயன்படுத்தியதே, பொறுப்பேற்று பதில் கூற இயலாத ஆட்சியாளர்களால்  அதி காரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விடப்படும் சவாலாக அமைந் துள்ளது. கிராமத்து ரேஷன் கடை முதல் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, லாபம் ஈட்டித் தராத - திரும்பி வாரா வங்கிக் கடன்கள்,  ரபேல் விமான பேர ஊழல், தேர்தல் நிதி பத்திரங்கள், மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனம்,  தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் நிய மனங்கள்  ஆகியவை வரை அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த நடவடிக்கை களைப் பற்றி லட்சக்கணக்கான கேள்வி களைக் கேட்பதற்கு மிகுந்த அறிவாற்ற லுடனும், தொடர்ந்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தப்பட்டு வந் துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களின் சுதந்திரமான செயல் பாடுகள் மற்றும் அவர்களது தகுதி ஆகியவற்றின் காரணமாக,  மிகமிக உயர்ந்த நிலையில் மேற்கொள்ளப்படும் முடிவுகளைப் பற்றிய தகவல்களையும் பெரும்பாலான வழக்குகளில் அவர் களால் பெறமுடிந்தது. அதனைத் திருத்து வதற்குதான் அரசு முயல்கிறது.
தகவல் அறிவதற்காகவும், அதன் மூலம் அரசாட்சியிலும், மக்களாட்சி அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்காகவும் தகவல் அறியும் உரிமை சட்ட இயக்கம் கடுமையாகப் போராடியுள்ளது. ஒரு ஜனநாயக குடியாட்சி நடைமுறைக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய, தொடர்ந்த பொது மக்களின் விழிப் புணர்வை ஏற்படுத்த இயன்ற  நடை முறைகளையும் மேடைகளையும் இந் தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கியுள்ளது. அரசில் உள்ள சுயநலக்காரர்களிடமிருந்து தக வல் அறிவதற்காக  மேற்கொள்ளப்படு வதற்கான பெரும்பாலும் சமமற்ற போராட்டத்துக்கு, ரகசியம் மற்றும் ஏகபோக கட்டுப்பாடுகளை மீறி சுய மாகவும்,  வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட இயன்றதுமான  அமைப்பு ரீதியிலான, சட்ட பூர்வமான நடைமுறை ஒன்று தேவை. சுதந்திரமாக இயங்க இயன்ற, தவறு செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட  தகவல் அளிப்பதற்கான மிகமிக உயர்ந்த அதிகார அமைப்பாக விளங்கும்  தகவல் அறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள  மிகவும் கொண்டாடப்படும் இந்த தகவல் அறியும் உரிமை சட்டம்தான் இந்தியாவின் ஒரு புகழ் பெற்ற திருப்பு முனையாக விளங்குவதாகும்.தடைகளும், கட்டுப்பாடுகளும், சமன்பாடுகளும்
அதனால் தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்தின் பணி மாறு பட்டதாக இருந்த போதிலும்,  இந்திய தேர்தல் ஆணையத்தை விட எந்த விதத் திலும் குறைந்தது அல்ல. அரசினைக் கண்காணித்து கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சுதந்திரமாக செயல்பட இயன்ற கட்டமைப்புகள்,  நீதியையும், அரசமைப்பு சட்ட உறுதிமொழிகளையும் வழங்குவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு ஜனநாயக அரசுக்கு மிகமிக இன்றியமையாதவை ஆகும்.  தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சமன்பாடுகள் ஆகியவை  நமது ஜன நாயக நடைமுறைக்கு மிகமிக இன்றிய மையாதவை ஆகும். இதன் முக்கியத் துவத்தை அதிகாரப் பகிர்வு அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரம் மய்யமாக்கப்பட்டு, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது,  அது எந்த பொருளாகவும், சந்தர்ப்பமாகவும் இருந்தாலும் சரி,  ஜனநாயகம் பேரழிவுக்கு உள்ளாகும் என்பது நிச்சயமான ஒன்றே ஆகும்.  ஒரு பிற்போக்குத் தன்மையிலான அதிகார சமன்பாட்டில்  கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும் அளவிலான கட்டமைப்பு மாற்றம் வேண்டுமென்றே திட்டமிட்டு  கொண்டு வரப்படுகிறது என்றுதான் இந்த ஒட்டு மொத்த சட்ட திருத்தங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். தகுதி, சுதந்திரம் மற்றும் அதிகாரம் ஆகியவை சட்டப்படி அளிக்கப்பட்ட ஆணையம் இனி மத்திய அரசின் ஓர் இலாகா போல செயல்படும் என்பதுடன், அதே அதிகார வரிசையில் அரசின் தேவைகளுக்கு அடிபணிந்து செயல்பட வேண்டியதாக இருக்கும். ஒரு சுதந்திரமான அமைப்பின் தலைவர்கள் நியமனத்திற்கான நிபந் தனைகள் மற்றும் ஊதியத்தை நிர்ண யிக்கும் அதிகாரத்தை தாங்களே எடுத் துக் கொள்ள மத்திய அரசு மேற் கொண்டுள்ள முடிவு சட்டப்படி அந்த அமைப்புக்கு அளிக்கப்பட்ட சுதந்திரத் தையும், அதிகாரத்தையும் பலவீனப்படுத் தும் ஓர் முயற்சியே என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர்களின் நியமனத்துக்கான கால வரையறை, பணி நிபந்தனைகள், ஊதியம் ஆகியவற்றைக் கையாளும் 13 ஆவது பிரிவை மட்டுமன்றி,  16 ஆம் பிரிவை திருத்துவதன் மூலம்,  விதிகளின் படி மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையங்களை நியமிப்பதற்கான  நிபந்தனைகளையும், கால வரையறை யையும் கையாளும் அதிகாரத்தையும் மத்திய அரசு தனது கைகளில் எடுத்துக் கொண்டிருப்பது, கூட்டாட்சித் தத்துவம் என்ற கருத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான  தாக்குதலே ஆகும்.
கண்களுக்குப் புலப்படாத நடவடிக்கைகள்
நியமனங்கள் தொடர்பான அனைத்து விதிகளும் மிகுந்த கவனத்துடன் ஒரு நாடாளுமன்ற நிலைக் குழுவால்  பரிசீலனை செய்யப்பட்டு, இந்த திருத்த சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட் டுள்ளது. மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணை யம், முதன்மை தேர்தல் ஆணையம், லோக்பால், குற்றவியல் புலன்விசாரணை ஆணையங்களின் பதவிக் கால வரை யறைக்கான அடிப்படை உத்தரவாதம் அளிக்கப்படுவது இந்த  அமைப்புகளின் மிகமிக முக்கியமான கட்டமைப்பு களில் ஒன்று என்பது ஒப்புக் கொள்ளப்பட் டுள்ளது.  தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர்களைப் பொருத்தவரை 65 வயது உச்ச வரம்பில்  அய்ந்து ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந் துரைப்படி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமனங்கள் முறையே தேர்தல் ஆணையம் மற்றும் முதன்மைத் தேர்தல் ஆணையர் நியமனத்துடனும், மத்திய தகவல் அறியும் உரிமை ஆணையர்களின் நியமனம் மத்திய தேர்தல் ஆணையர்களின் நியமனத்துட னும் சமன் படுத்தப்பட்டுள்ளன. பொது மக்களுடனான எந்த ஒரு கலந்தா லோசனை மேற்கொள்ளாமலும், நிலைக் குழுவின் பரிசீலனையைக் கடந்தும் இந்த திருத்தங்கள் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டிருப்பது, முறையான நாடாளுமன்ற பரிசீலனையும் இன்றி இந்தத் திருத்தங்களை நிறைவேற்றுவதில் அரசு காட்டிய அவசரத்தையும், மிகுந்த ஆர்வத்தையும்  எடுத்துக் காட்டுகிறது. மேலும் சட்டமன்றங்கள் கலந்தாலோ சிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசு கடைபிடிக்க வேண்டிய சட்டப்படியான தேவையும் பின்பற்றப்படாமல் அலட்சிய படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அரசுகள், இத்தகைய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன் பாக ஒரளவுக்கேனும் பொது மக்களின் கலந்தாலோசனையை மேற்கொண்டிருந் தனர்.  தகவல் அறியும் உரிமை சட்டத் திற்குக் கொண்டு வர திட்டமிட்டிருந்த திருத்தங்களை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், தேசிய ஜனநயாகக் கூட்டணி அரசும், பொதுமக்களின் விவாதத்திற்கான இணைய தளத்தில் வெளியிட்டிருந்தன. ஆனால் இந்த சட்ட திருத்தங்களை எந்தவித கலந்தாலோ சனையும் இன்றி நிறைவேற்றுவது என்று தற்போதைய ஆட்சியாளர்கள் தீர் மானித்து விட்டதாகவே தோன்றுகிறது.
இதற்கான காரணத்தை எங்கு சென்றும் தேட வேண்டிய அவசியம் இல்லை.  இந்த திருத்தங்களைப் பற்றி பொதுமக்கள் முன்னிலையில் குடிமக் களும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்களும் விவாதம் செய்தால், தகவல் அறியும் உரிமை சட்ட கட்டமைப் பின் ஒரு முக்கியமான பகுதியை இந்த திருத்தங்கள் அடிப்படையிலேயே பல வீனப்படுத்தும் என்பது அனைவரும் அறியும் ஒன்றாக ஆகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.  அரசமைப்பு சட்டப் படியான கூட்டாட்சி கெள்கையையும் மீறுபவையாகவும், தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் சுதந்திரத்தை மறுத்து அழிப்பவையாகவும் அமைந் திருக்கும்  இத்திருத்தங்கள் இந்திய அரசாட்சியில் வெளிப் படைத் தன்மை நிலவுவதற்காகப் பரவலாகப்  பயன்படுத் தப்பட்ட ஓர் அமைப்பையும், விதிகளை யும் நீர்த்துப் போகச் செய்துள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் அனைவரும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். ஆனால் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக் கும் கத்தி இரு பக்கங்களிலும்  கூர்மை யானது. எதேச்சதிகாரத்தில் மறைந்துள்ள பாதுகாப்பின்மையை விளக்குவதற்காக இந்த ஒப்புவமை முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் கட்டுப்பாடற்ற அதி காரத்துக்கு எதிராக விடப்படும் சவால் களாகும். தகவல் அறியும் உரிமை சட் டத்தைப் பயன்படுத்திய லட்சக்கணக் கான  சமுக ஆர்வலர்களின் கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்குகளில் இருந்து இந்த சட்டம் விடுவித்திருக்கிறது. இந்த ஜனநாயக உரிமைகளை அவர்கள் தொடர்ந்து ஆக்கபூர்வமாகப் பயன் படுத்தி எதேச்சதிகாரத்தை அழிப்பார்கள். தன் மீது மேற்கொள்ளப்படும் தாக்கு தல்களை சந்தித்து கையாள்வதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பயன் படுத்தப்படுவதுடன், இந்திய நாட்டின் அரசு மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் வெளிப்படையாக செயல் படுபவைகளாகவும், தங்களது செயல் களுக்கு பொறுப்பேற்று பதில் அளிப் பவைகளாகவும்  இருக்க வேண்டும் என்று போராடும் இயக்கங்களை பலப்படுத்திக் கொள்ளவும் செய்கிறது.  ஒரு சட்டத்தை வேண்டுமானால் தன் னால் திருத்த முடியுமே அன்றி, ஓர் இயக்கத்தைத்  தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை நரேந்திர மோடி அரசு இறுதியில் உணரவே செய்யும்!
நன்றி: 'தி இந்து' 22-07-2019

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

Friday, July 26, 2019

அரசுப் பணியிலிருந்து விலகியவர் ஓய்வூதியம் பெற முடியாது: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

அரசுப்பணியிலிருந்து விலகிய வருக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை பெற முடியாது எனக்கூறியுள்ள உயர்நீதிமன்றக் கிளை, ஆசிரியையின் மனுவை தள்ளுபடி செய்தது.
மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆரோக்கியமேரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
‘‘சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் கடந்த 1.7.1967இல் இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் என் குடும்பச்சூழல் காரணமாக கடந்த 30.9.1978இல் பணியிலிருந்து விலகினேன். 10 ஆண்டுகள் பணியாற்றினால் ஓய்வூதியம் பெறத்தகுதி உண்டு. ஆனால், நான் 11 ஆண்டுகள் பணியாற்றி இருந்ததால் ஓய்வூதியம் கேட்டு பலமுறை விண்ணப்பித்தேன். ஆனால், அதி காரிகள் மறுத்துவிட்டனர். எனவே, எனக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அரசுத்தரப்பில், ‘‘மனுதாரர் பணியை விட்டு விலகியுள்ளார். எனவே, அவருக்கு  ஓய்வூதியம்  வழங்க முடியாது. மிகவும் காலதாமதமாகவே மனு செய்யப் பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணியிலிருந்து விலகுதல், ஓய்வு பெறுதல் மற்றும் விருப்ப ஓய்வில் செல்லுதல் என தனித்தனி வகை உள்ளது.
இதை ஒன்றோடு ஒன்று இணைத்து பார்க்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஒரு பணியில் உள்ளவர் தனக்கு எந்தவித பணப் பலன்களும் தேவையில்லை எனும்போதுதான் பதவி விலகல் செய்கிறார்.  பணி விலகல் செய்யும் ஒருவரால் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முடியும். ஆனால், விருப்ப ஓய்வில் செல்பவருக்கு இது சாத்தியம் இல்லை. எனவே,  பதவி விலகல் செய்வோரால் பணப்பலன்களை கேட்க முடியாது.
மனுதாரரின்  பணி விலகல் ஏற்கப்பட்டதால் தான் அவர் பணியில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார். எப்போது ஒருவரின் பணி விலகல் ஏற்கப்பட்டு, பணியில் இருந்து விடுவிக்கப்படு கிறாரோ, அப்போது அவரால் ஓய்வூதியம் கேட்க முடியாது. மனுதாரருக்கு கருணைப்படி கூட வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

23 போலிப் பல்கலைக்கழகங்கள் பட்டியல்: யுசிஜி வெளியீடு

அரசின் அங்கீகாரம் பெறாமல், எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி நாடு முழுவதும் செயல்படும் 23 போலி பல்கலைக்கழங்களின் பெயர்ப் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எந்தக் காரணம் கொண்டு படிக்க வேண்டாம் என்று யுஜிசி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யுஜிசி அங்கீகாரம் பெறாமல் போலியாகச் செயல்படும் 23 பல்கலைக்கழங்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே பட்டியலில் இருந்தவைதான்.
இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எதிராக பல்கலைக்கழக மோசடியைத் தடுக்கும் பிரிவு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளது
இந்த 23 பல்கலைக்கழகங்களில் 14 பல்கலை.கள், கடந்த 2005-06 ஆம் ஆண்டு போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்தவை. குறிப்பாக டில்லியில் மட்டும் 4 பல்கலை.கள் செயல்பட்டு வருகின்றன.
அவை, கமர்ஷியல் யுனிவர்சிட்டி, யுனெட்டெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி, ஒகேஷனல் யுனிவர்சிட்டி, ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிசியல் யுனிவர்சிட்டி ஆகியவை போலியானவை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2005ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து தொடர்ந்து வருகின்றன.  அவை, வரணசேயா சான்ஸ்கிரிட் விஸ்வ வித்யாலயா, காந்தி ஹிந்தி வித்யாபீடம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஓபன் யுனிவர்சிட்டி, உத்தரப் பிரதேஷ் விஸ்வ வித்யாலயா, மகாராணா பர்தாப் ஷிக்சா நிகேதன் விஸ்வ வித்யாலயா ஆகியவை போலியானவை
மேலும், கருநாடகாவில் உள்ள படகான்வி சர்கார் வோர்ல்டு ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேஷன் சொசைட்டி, கேரளாவில் செயல்படும் செயின்ட் ஜான்ஸ் யுனிவர்சிட்டி, மகாராட்டிராவில் உள்ள ராஜா அராபிக் யுனிவர்சிட்டி ஆகியவை போலி யானவையாகும்.
இதுதவிர இந்த ஆண்டு புதிதாக போலியான பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது. டில்லியில் விஸ்வகர்மா ஓபன் யுனிவர்சிட்டி ஃபார் செல்ஃப் எம்ப்ளாய்மென்ட் என்ற பல்கலைக்கழகம் யுஜிசி அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் கூறி விளம்பரம் செய்துள்ளது. ஆனால், இதுபோலியானது என்று தெரியவந்துள்ளது.

மேலும், டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங் அன்ட் ஆத்யமிக் விஸ்வ வித்யாலயா, இந்தியன் இன்ஸ்டிடியூஸ்ட் ஆப் அல்டர்நேடிவ் மெடிசன், இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேடிவ் மெடிசன் அண்ட் ரிசர்ச் (கொல்கத்தா), நவபாரத் ஷிக்சா பரிசத், நார்த் ஒரிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்ச்சர் அன்ட் டெக்னாலஜி (ஒடிசா), புதுச்சேரியில் உள்ள சிறீபோதி அகாடெமி ஆப் ஹையர் எஜூகேஷன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாரதிய ஷிக்சா பிரசத் ஆகியவை போலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூபாய் 18,000 கோடி ஜிஎஸ்டி சுமை மத்திய அரசு மீது வங்கிகள் வழக்கு

வங்கிகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி விதித்ததை எதிர்த்து சில வங்கிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. அதிக பணம் வைப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சில சேவைகளை இலவசமாக அளிக்கின்றன. சிலருக்கு ஆண்டு கட்டணம் இல்லாமலேயே வங்கி லாக்கர் வசதி கூட அளிக்கின்றன. இவற்றுக்கு சேவை வரி மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த 2018 ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு தாக்கீது அனுப்பப்பட்டது. இதற்கு வங்கிகள் விளக்கம் தரவில்லை.  இதை எதிர்த்து தடை உத்தரவு பிறப்பிக்க கோரி சில வங்கிகள் நீதிமன்றங்களை அணுகின.  ஆனால், விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.  ஆனால், வங்கிகள் வரி விதிப்பு முறையை கடைப்பிடிக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சில வங்கி வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மத்திய அரசின் முடிவால் வங்கிகள் ரூ.18,000 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளது. மதிப்புக்குரிய வாடிக்கை யாளர்களுக்கு  வைப்புத் தொகை அடிப்படையில் இலவச சேவை வழங்குவது வழக்கமானதுதான். இது வரி ஏய்ப்பு செய்வதாக ஆகாது’’ என்றனர்.

காஷ்மீர் விவகாரம்: டிரம்ப் தவறிழைத்துவிட்டார்- அமெரிக்க பத்திரிகை


காஷ்மீர் விவகாரத் தில் மத்தியஸ்தம் செய்வதாக வேண்டு மென்றே தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிகப்பெரிய தவறி ழைத்து விட்டார்; இந்தியாவுடனான உறவில் முன்னாள் அதிபர்கள் செய்த சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் என்று அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளி யாகியுள்ள செய்தி கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடை பெற்ற ஜி-20 அமைப்பு உச்சி மாநாட்டின் போது தம்மைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீர் விவகாரத் துக்கு தீர்வு காண உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்று டிரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்திருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் 3-ஆவது நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இந்திய அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்தது. டிரம்பிடம் மோடி அத்தகைய கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விவகாரம் என்றும் இந்திய அரசு கூறியது.
இதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட விளக்கத்திலும், காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ் தான் சம்பந்தப்பட்ட இருதரப்பு விவ காரம்; இருநாடுகளும் விரும்பி கேட்டுக் கொண்டால், அந்த விவகாரத்துக்கு தீர்வு காண உதவி செய்யத் தயாராய் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் வாசிங்டன் போஸ்ட்  நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ராஜீய ரீதியில் டிரம்ப் மிகப்பெரிய தவறை இழைத்து விட்டார். இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்ட பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தவறிழைத்து விட்டார்.
சீனாவின் எழுச்சிக்கு பதிலடி கொடுக்க முக்கியமான நாடான இந்தி யாவின் நட்புறவு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், டிரம்பின் இந்த நடவடிக் கையால் இந்தியாவின் நட்புறவை அமெ ரிக்கா இழக்க வேண்டியிருக்கும்.
இந்தியாவுடனான நட்புறவை அமெ ரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோர் பேணி வளர்த்தனர். சில அறியா வார்த்தைகள் மூலம், அவர்களது சாதனைகளை டிரம்ப் ஒன்றுமில்லாமல் செய்துவிட் டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி யேற்றதும், சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், அமெரிக்கத் தயாரிப்பு பொருள்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதிப்பதாக  குற்றம்சாட்டியிருந்தார். ஜிஎஸ்பி திட்டத்தின்கீழ் வளரும் நாடு என்ற முறையில் இந்தி யாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையையும் அமெரிக்கா திரும்பப் பெற்றது.

இதற்குப் பதிலடியாக அமெரிக்கா வில் இருந்து இறக்குமதியாகும் 28 பொருள்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது.

‘ஸ்டெர்லைட் நிறுவனம், விதிகளை பின்பற்றுவது இல்லை’ உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். நேற்று அவர் தனது வாதத்தில் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற் படுத்தியதால், முன்னெச்சரிக்கை கொள்கை அடிப்படையில் அந்த ஆலையை மூட அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடியில் நிலத்தடி நீரையும், காற்றையும் இந்த ஆலை பெரிய அளவில் மாசுபடுத்தி விட்டது. அப் படி மாசுப்படுத்தவில்லை என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அந்த ஆலையின் பொறுப்பு.
ஸ்டெர்லைட் ஆலை கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடியில் அதிக அளவிலான மாசு ஏற்படுத்தி வருகிறது. இது பல்வேறு ஆய்வு அறிக்கைகள் மூலம் நிரூபணமாகி யுள்ளன. 2005ஆ-ம் ஆண்டு ஸ்டெர் லைட் ஆலை விரிவாக்கம் செய்யப் பட்டது. இதன் பின்னர் மாசு அளவு அதிகரித்தது.
1996-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப் பட்டது. ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதை எதிர்த்த வழக்கில், கழிவுகள் முறையாக, நவீன தொழில் நுட்பம் கொண்டு பரா மரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆனால், இதை ஏற்காத உயர்நீதி மன்றம், ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப்  பான ‘நீரி‘க்கு உத்தரவிட்டது. அதன் படி நீரி ஆய்வு செய்து 1998-ஆம் ஆண்டு, 2005-ஆம் ஆண்டு என 2 அறிக்கைகளை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட 2010ஆ-ம் ஆண்டு உயர்நீதிமன் றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் யப்பட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் மாசு ஏற்படுத்துவதை உறுதி செய்து, ரூ.100 கோடியை ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

'உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி வழக்காடு மொழியாக்கப்படுமா?'

தி.மு.க. மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி


தென்சென்னை தொகுதி தி.மு.க. உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் நாடாளுமன்றத்தில், இந்தியா வில் இந்தி, ஆங்கிலம் தவிர மாநில மொழி களை வழக்காடு மொழியாக பயன்படுத்தும் உயர்நீதிமன்றங்கள் பற்றிய விவரம் குறித்தும், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாக ஏற்றுக்கொள்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அம் சங்கள் பற்றியும் மற்றும் தமிழை உயர்நீதி மன்றங்களில் வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்வது தொடர்பாக ஏதேனும் கோரிக்கை மத்திய அரசிடம் முன் வைக்கப்பட்டதா? என்பது பற்றியும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-
சென்னை, கொல்கத்தா, கருநாடகா, சத்தீஷ்கார், குஜராத் உயர்நீதிமன்றங்களில் முறையே தமிழ், வங்காளி, கன்னடம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் வழக்காடுவதற் கான முன்மொழிவுகள் பெறப்பட்டு உள்ளன. இந்த கோரிக்கைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் தேவை என்பதால், அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி கோரிக்கை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக தலைமை நீதிபதி தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் தமிழச்சி தங்கபாண்டியன், விதி எண் 377இன் கீழும் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். தனது தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக் கரணை சதுப்புநிலம் ஆக்கிரமிப்பா லும், குப்பைகள் கொட்டுவதாலும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், எனவே அந்த நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கோரிக்கை விடுத்தார்.

வளர்விகித ரயில் கட்டண முறையை கைவிடும் எண்ணம் இல்லை: மக்களவையில் தகவல்

நாடு முழுவதும் 13,452 ரயில்களில் 141 ரயில்களில் மட்டுமே வளர்விகித கட்டண முறை அமலில் உள்ளது; இத்திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த அவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதில்: 141 ரயில்களில் 32 ரயில்களில் மட்டும் 9 மாதங்களுக்கு வளர்விகித கட்டண முறை அமலில் இருக்கும். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஜூன் மாதம் வரை ரூ.2,426 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப் பட்டது.  ரயில், விமானப் போக்குவரத்து ஆகிய இரண்டும் வசதிகள் உள்ளிட்ட பலவிதங்களில் வேறுபட்டவை. ரயில்களில் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமானங்களுக்கு அதிகபட்ச கட்டணம் நிர்ண யம் செய்யப்படவில்லை. ஆனால், விமானங்களுக்கு நேரத்துக்கு ஏற்பட கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள உரிமை இருக்கிறது.
விமானங்களைக் காட்டிலும் ரயில் கட்டணம் அதிகம் வசூலிக்கப் படுவதில்லை. ரயில்களில் வகுப்பு வாரியாக கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள் எதில் பயணிக்க விரும்புகிறார்களோ அதில் பயணிக்க லாம். வளர்விகித கட்டணம் இல்லாத 2015-_2016 காலகட்டத்தில் 101.15 சதவீத முன்பதிவு இருந்தது. புதிய முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 2017_-2018 காலகட்டத்தில் 105.80 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ராஜதானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களில் வளர்விகித கட்டணத்தின் கீழ் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

பல்லையும் சொல்லையும் இழந்துவிடுமோ நம் பல்கலைக் கழகங்கள்!


புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவானது கற்போரைப் பற்றிய புரிதல் சிறிதுமின்றித் தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவ ரைக் கற்கும் இயந்திரங்களாகக் கருதியிருப்பதுதான் இந்தக் கொள்கையில் வெளிப்படுகிறது. வீட்டு மொழியே ஆங்கில மாகக் கொண்டவரது குழந்தைகளையே மையப்படுத்தி பரிந்துரைகளை அளித்ததுபோல் தோன்றுகிறது.
முன்பருவக் கல்வியில் விளையாட்டுகள் மூலமும், தாய்மொழியில் பாட்டுகள் மூலமும் கேட்கவும், உச்சரிக்கவும் சிறுவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். முறையான கல்வி ஆறாம் வயதிலேயே தொடங்குவதுதான் பெரும்பான்மையான நாடுகளில் நடைமுறை. மழலையர் கல்வி பற்றிய மிக விரிவான வழிகாட்டி நூலை மீனா சாமிநாதன் வெளியிட்டிருக்கிறார். அதன் தமிழ்ப் பதிப்பை எஸ்.சி.இ.ஆர்.டி. தயாரித்துள்ளது. அதைக் கொண்டு ஈரோடு மாவட்டத்தில் மூன்று அங்கன் வாடி மையங்களில் வெற்றிகரமாக மழலையர் கல்வி அளிக்கப்பட்ட வரலாறும் உண்டு. வரைவானது இத்தகைய முயற்சிகளை அறியாது ஆங்கில வழிக் கட்டணப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி முறையைப் பரிந்துரைத்துள்ளது. குழந்தைமையை இழக்கச் செய்யும் முன் பருவக் கல்வி யுனிசெப்பின் பரிந்துரைகளுக்கு முரணானது. மூன்று வயதுக் குழந்தைக்குத் தாய்மொழி தவிர வேறு இரு மொழிகளையும் கற்பது எளிதல்ல. தன் விளையாட்டுத் தோழர்கள் மூலம் அவர்களது மொழிச் சொற்களைக் கேட்க வும், பேசவும் செய்வதை மொழி அறிந்ததாகக் கருதுவது தவறு.
முன்பருவக் கல்வி பற்றிய பரிந்துரைகள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். மகிழ்ச்சி பொங்கும் பருவமாகக் குழந்தைப் பருவம் விளங்கவேண்டும். ஒரு சிற்றூரில் உள்ள அங்கன்வாடி மையத்தையோ, ஒரு தொடக்கப் பள்ளியையோ அரை மணிநேரம் பார்வையிட்டிருந்தால் இத்தகைய முன் பருவக் கல்வியைப் பரிந்துரைத்திருக்காது.
170 ஆண்டுகளாக மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளிலும், பல லட்சம் பேருக்குப் பட்டங்கள் வழங்கி வந்த பெருமை மிக்க சென்னை, கொல்கத்தா, மும்பை பல்கலைக் கழகங்களுக்கு இனி இளங்கலை வகுப்புக்குக்கூடப் பாடத் திட்டம் வகுக்க முடியாது. வினாத்தாள் தயாரிக்கும் வேலையும் கிடையாது. புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு, அவற்றின் பல்லையும், சொல்லையும் பிடுங்கி தேசிய அமைப்புகளுக்கு அப்பணிகளை அளித்துள்ளது.
ஒரே' என்ற சொல்லைப் பிரதமர் மோடி உச்சரிக்கத் தொடங்கிய பின்னர், அதுவே நாட்டின் மந்திரமாகப் போயிற்று. ஒரு நாடு, ஒரே பாடத் திட்டம், ஒரே தேர்வு என்ற பரிந்துரை ஏற்புடையதல்ல. ஒரு நீட் தேர்வை முறையாக நடத்த முடியாத அரசு, நூற்றுக்கணக்கான தேர்வுகளை எவ்வாறு நடத்தும் என்று சிந்தியாது தெரிவிக்கப்பட்ட மோசமான பரிந்துரை. பல நாடுகளிலும் கற்பிக்கும் ஆசிரியரே மாணவரது தேர்ச்சியை நிர்ணயிப்பவராக இருக்கும்போது, பல கோடி மாணவரது தலைவிதியை ஒரே அமைப்பு உறுதி செய்யும் என்பது அறிவுக்கு அப்பாற்பட்டது. இது ஒன்றே கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவறிக்கையை முழுமையாக நிராகரிக்கப் போதுமானது.
- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை


நன்றி: "இந்து தமிழ் திசை'', 26.7.2019

தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துக் கேட்பு என்கிற பெயரில் கருத்துத் திணிப்பா?

மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். சார்பு கல்வி நிறுவனங்கள் கருத்துத் திணிப்பு செய்வதையும், பள்ளிக் கல்வி தவிர பிற அத்தியாயங்கள் குறித்து கருத்து சொல்லும் வாய்ப்பை மாநில அரசு தராதது குறித்தும், இறுதி நாள் ஜூலை 31 என்பதை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
மாணவர்களை நிர்ப்பந்தப்படுத்தி....
தேசியக் கல்விக் கொள்கை - 2019 வரைவு அறிக்கையின் மீது கருத்துக் கேட்பு என்கிற பெயரில், எந்த விளம்பரமும் இன்றி தமிழகத்தின் சில நகரங்களில்  (கோவை, திருச்சி, சென்னை உள்பட) தனியார் கல்லூரிகளில் கூட்டம் நடைபெற்று, சமுக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில தனியார் பள்ளிகள், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். சார்புடைய பள்ளி களின் நிர்வாகம், பெற்றோர்கள் கவனத் திற்கு என்று சொல்லி கருத்துக் கேட்புப் படிவங்களை அவர்களே தயார் செய்து, மாணவர்களிடம் கொடுத்து வருகிறார்கள். படிவத்தை ஆசிரியர்கள் சொல்லியவாறு மாணவர்களை  நிர்ப்பந்தப்படுத்தி    நிரப்பச் செய்து பெற்றோர்களின் ஒப்பம் பெற்று வருவது நமது கவனத்திற்கு வந்துள்ளது.
படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கருத் துகள், பெற்றோர்களின் கருத்தினை அறிந்து கொள்ளும் நோக்கில் இல்லாமல், முற்றிலும் அரசு வெளியிட்டுள்ள வரைவு கல்வி அறிக்கைக்குச் சாதகமாக இருக்கும் படி தயார் செய்து தனியார் பள்ளிகள் கொடுத்துள்ளன.
எடுத்துக்காட்டாக,
பெற்றோர்களின் கையொப்பத்தை மட்டும் பெற்று வருமாறு...
* நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் (பான் கார்டு, ஆதார் அட்டை போல).
* தமிழகத்தில் உள்ளோர் வட மாநிலத் திற்குச் சென்றால் இந்தி  தெரியாமல் சிரமப் படுகின்றனர். இந்த சிரமத்தைப் போக்க தமிழகத்திலும் இந்தி கற்பிக்க வேண்டுமா? எட்டாம் வகுப்பு வரை இந்தி எழுத மற்றும் பேச கற்றுக் கொடுப்பது அவசியம்.
* ஒரு சில பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதுவும் நமக் குத் தேவை.
* நீட் தேர்வுக்கு பள்ளியிலேயே கட்டணம் பெற்றுக் கொண்டு, வகுப்பு நடத்தினால், பெற்றோர்களுக்கு கூடுதல் சுமையும் தவிர்க்கப்படும்.
இந்த கேள்விகளுக்கெல்லாம், ஆம் அல்லது இல்லை என்று டிக் அடிக்க வேண்டும். ஆசிரியர்களே மேற்கூறிய கேள்விகளுக்கு,  ஆம் எனும் பதிலை மாணவர்களிடம் சொல்லி டிக் அடிக்கச்  செய்து, பெற்றோர்களின் கையொப்பத்தை மட்டும் பெற்று வருமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
புதிய கல்விக் கொள்கையை  அனைவரும் நிராகரிக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை
பள்ளி நிர்வாகத்தின் கருத்துக்கு மாறான கருத்தோடு படிவத்தை நிரப்பி அனுப்ப பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள் என் கிறபோது, இது எப்படி மக்களின் உண்மை யான கருத்தாகும்? மாறாக கருத்துத் திணிப்புதானே!
தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை, சமுக நீதிக்கு எதிராக உள்ளது; மாநில உரிமைகளைப் பறிக்கிறது; கல் வியை முன்னோக்கி எடுத்துச் செல்லாமல், வேத கால முறைக்கு எடுத்துச் செல்கிறது; தமிழகத்தில் 1953 இல் விரட்டப்பட்ட "குலக் கல்வித்திட்டத்தை'' அகில இந்திய அளவில் கொண்டு வர எத்தனிக்கிறது; கல்வி முழுவதும் தனியார் மயமாக்கப்படும் ஆபத்து உள்ளது; பல்கலைக் கழகங்கள் ஒழிக்கப்பட்டு அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கும் நிலை உருவாக்கப்படுகிறது. மொத்தத்தில் இது மக்களுக்கான கல்விக் கொள்கை அல்ல; மாறாக, வணிகமயம், கார்ப்பரேட் மயம், சமஸ்கிருதமயம் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன - பனியா கூட்டுக் கொள்ளைக்கு வழிவகுக்கின்ற கல்வி அறிக்கை என கல்வியாளர்கள், மேனாள் துணை வேந்தர்கள் கவலையோடு கருத்துத் தெரிவித்து, இந்த கல்விக் கொள் கையை அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளனர்.
அச்சுறுத்தும் போக்கை அனுமதிக்க முடியாது!
ஆனால், பார்ப்பனர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில்,  மோடி அரசின் கல்விக் கொள்கை தங்களது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்கிற நோக்கில், இது பற்றிய எந்த விவரமும் தெரியாத மாணவர்களிடம் தவறான கருத்துகளை சொல்லி மூளைச் சாயம் ஏற்றுகின்ற செய் கின்ற நிலையும், இதற்கு மாறான பெற் றோர்களின் பிள்ளைகளை அச்சுறுத்தும் போக்கும் தமிழகத்திலே நடைபெறுவதை நாம் அனுமதிக்க முடியாது. வன்மையாகக் கண்டிக்கிறோம்; கண்டனக் குரல்கள் எழுப்பவேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சார்பான தனியார் பள்ளிகள் தங்களின் மாணவர்களின் கருத்து  என்று  இவற்றைத் திணிக்க முற் படும்போது, உண்மையிலேயே இதனால் பாதிக்கப்படப் போகின்ற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர் களின் கருத்துகளை அறிய மாநில அரசு ஏதேனும் ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா?
வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழக அரசு?
கல்விக் கொள்கை குறித்த விவாதங் களை முழுமையான அளவில்  நடத்தாமல், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தாமல், ஏதுமறியா மாணவர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதை வேடிக்கை பார்க்கப் போகிறதா தமிழக அரசு?
தனியார் பள்ளிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் கட்டாயப்படுத்தும் போக்கை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு என்ன?
பள்ளிக் கல்வித்துறை தனது இணைய தளத்தில் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வி தொடர்பான முதல் எட்டு அத்தியாயங்களை மட்டுமே வெளியிட்டு, கருத்துக் கோருகிறது. 23 அத்தியாயங்களில் எஞ்சிய 15 அத்தியா யங்கள் குறித்து  தமிழக அரசிடம் எப்படி கருத்துச் சொல்வது? உயர்கல்வித் துறை அதற்கென செய்துள்ள நடவடிக்கைகள் என்ன? கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகங் கள், தொழில்சார் கல்வி, ஆசிரியர் படிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்களின் கருத்தை அறிய மாநில அரசு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன? இது குறித்து கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்புகள் எதையும் தராமலேயே மக்களிடம் கருத்துக் கேட்டு அறிவிப்பதாக மாநில அரசு தன் கருத்தை அறிவிக்கப் போகிறதா?
மக்கள் விரோத, பார்ப்பன - பனியாக் களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கை மீது தமிழக அரசின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை உடன் தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகின்றது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பது இயல்பு. கருத்து தெரிவித்திட ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். மக்களிடம் கருத்துக் கேட்கும் நடைமுறை இன்னும் இத்தனை சிக்கலில் இருக்கும்போது, அவசர அவசர மாக ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்பதை மத்திய அரசு மாற்றவேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். விரிவான விவாதத்திற்குட்படாமல், இந்தக் கல்விக் கொள்கையை நிறைவேற்றிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
கல்வி உரிமை பறிபோனால் மக்கள் போராட்டம் வெடிக்கும்
கல்வி உரிமைக்காக ஒரு நூற்றாண்டு போராடி வெற்றி பெற்ற இயக்கம் திராவிட இயக்கம். இந்த உரிமை பறிபோனால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
தஞ்சை,

26.7.2019

Thursday, July 25, 2019

கையடக்க மொழிபெயர்ப்புக் கருவி


ஒரு மொழிக்காரர் பேசியதை ஒரே வினாடியில் மொழிபெயர்த்து, இன்னொரு மொழிக்காரருக் குப் புரியும் வகையில் பேசிக் காட்டும் கருவிகள் சில வந்து விட்டன. ஆனால், 'லாங்கோ கோ' தயாரித்துள்ள 'ஜெனி சிஸ்' என்ற கையடக்க மொழி பெயர்ப்புக் கருவி, வல்லு நர்களை கவர்ந்துள்ளது.
தமிழ், இந்தி மற்றும் இந்திய ஆங்கிலம் உட்பட, 100 மொழிகளில், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து, இனிய குரலில் பேசிக்காட்டுகிறது ஜெனிசிஸ்.
விமான நிலையத்துக்கு வழி கேட்பதிலிருந்து, அருகே நல்ல தங்கும் விடுதி, உணவகம் எங்கே இருக்கிறது என்பது வரை, சில வரிகள் முதல், பல பத்திகளுக்கு பேசி, அடுத்த மொழிக்காரருடன் எளிதில் கருத்துப் பரிமாற, லாங்கோகோ ஜெனிசிஸ் உதவுகிறது. 'வைபை' வசதி கொண்ட இந்தக் கருவிக்கு மூளையாக செயல்படுவது, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள்.
இதுவும், லாங்கோகோவின் மேகக் கணிய இணைப்பும் இந்தக் கருவியின் பன்மொழிப் புலமையை தொடர்ந்து மெருகேற்றியபடியே இருக்கும்.
சீன, கொரிய பேச்சு மொழிகளை சில பிழைகளுடனே மொழிபெயர்ப்பதாக விமர்சனம் இருந்தாலும், ஒருவர் தொடர்ந்து இந்தக் கருவியை பயன்படுத்தும்போது, அவரது பேச்சு நடைக்கு இக்கருவி பழகிக்கொள்ளும் என்பதால், மொழிபெயர்ப்பின் துல்லியமும் கூடும் என்கின்றனர் ஜெனிசிசை உருவாக்கியவர்கள்.

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க கடைசி தேதி ஜூலை 31

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து தெரிவிக்க ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம் பாட்டுத் துறை அண்மையில் தேசிய கல்விக் கொள்கை வரைவு வெளியிட்டது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அது தமிழாக்கம் செய்யப்பட்டு இணைய தளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கை வரைவு குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து  தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலை யில், கருத்துத் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் கடுமையான பாதிப்புகள்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் கடுமையானப் பாதிப்புகளை ஏற் படுத்தி விட்டு, மாசு ஏற்படுத்த வில்லை என்ற ஒரே பல்லவியைத் திரும்பப் பாடுவதாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் வழக் குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் வேதாந்தா நிறுவனம் சார்பில் பதில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந் தது. அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார் பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், தனது வாதத்தின்போது கூறியது:-
தூத்துக்குடியில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல்வேறு வகை யான மாசுகளை ஏற்படுத்தியுள்ளது. இது பல்வேறு ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் மூலம் உறுதி செய் யப்பட்டுள்ளன. கடந்த 2005-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பின்னர் ஆலையால் ஏற் படும் மாசின் அளவு அதிகரித்துள் ளது. கடந்த 1996-ஆம் ஆண்டு அக்டோபரில் ஆலையை இயக்க நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆலைக்கு சுற்றுச்சுழல் அனுமதி வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, ஆலையி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு கள் நவீன தொழில்நுட்பத்துடன் முறையாக பராமரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி அமைப் பான நீரிக்கு உத்தரவிட்டது. அதன் படி ஆய்வு மேற்கொண்ட நீரி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை இரண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்துள் ளது. அந்த அறிக்கைகளின் அடிப் படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த 2010-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட் டது.
இந்த  உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதை உறு திப்படுத்தி, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. தூத்துக்குடி நகரத்தை சரி செய்ய முடியாத அளவுக்கு கடுமையானப் பாதிப்பு களை ஸ்டெர்லைட் நிறுவனம் ஏற் படுத்தியுள்ளது. அப்படியிருந்தும் மாசு ஏற்படுத்தவில்லை என்ற ஒரே பல்லவியை ஆலை நிர்வாகம் தொடர்ந்து பாடி வருகிறது. ஆலை யில் இருந்த கழிவுக்குட்டையில் சல்பைடு, மக்னீசியம் உள்ளிட்ட வேதிப் பொருள்கள் மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவை விட அதிகமாக இருந்ததை ஆய்வ றிக்கைகள் உறுதி செய்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் விதிகளை முறையாக பின்பற்ற வில்லை. ஆலையை மூடும்போது விதிக்கப்படும் ஒரு சில நிபந்தனை களை மட்டும் பூர்த்தி செய்துவிட்டு, நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்க அனுமதி பெற்று விடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தற்போது ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது என்று கூறி வாதிட்டார். இதனை யடுத்து, வழக்கு விசாரணையை இன்று வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

தமிழ் உள்பட 9 மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
தற்போது, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அசாமி, வங்காளம், இந்தி, கன்னடம், மராத்தி, ஒடியா, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவைதான் அந்த 9 மொழிகள் ஆகும்.
தொழிலாளர் விவகாரங்கள், வாடகை சட்டம், நிலம் கையகப் படுத்துதல் விவகாரங்கள், சேவை விவகாரங்கள், இழப்பீடு விவகா ரங்கள், குற்றவியல் விவகாரங்கள், குடும்ப சட்ட விவகாரங்கள், சாதாரண சிவில் விவகாரங்கள், தனிநபர் சட்ட விவகாரங்கள், மதம் மற்றும் அறநிலையத்துறை விவகாரங்கள், அடகு, பொது இடங்களில் இருந்து வெளியேற்றும் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்புகள், மொழி பெயர்த்து வெளியிடப்படுகின்றன.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பாலியல் கொடுமைகள் களைய அமைக்கப்பட்ட அமைச்சர் குழு கலைக்கப்பட்டது ஏன்?

பணியிடங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொந் தரவுகளை களையும் வகையில் சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குழுவானது வெளியில் அறிவிக்கப்படாமலேயே கலைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வினவப்பட்டபோதுதான் இது தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவின் செயல்பாடு தொடர்பாக எந்தவொரு விவரத்தையும் தெரிவிக்க முடியாது என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தகவல்களை தெரிவிப்பதானது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
முந்தைய மோடி அரசில் மத்திய வெளியுறவு இணையமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பல பெண்கள் பாலியல் முறைகேட்டுப் புகார்களை அளித்த நிலையில், இந்தக் குழு அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகிய 4 மூத்த அமைச்சர்கள். இவர்கள் மிக முக்கியப் பொறுப்புகளை வைத்திருந்தவர்கள்.
மக்கள் தொகையில் சரி பகுதி இருக்கக் கூடிய பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும், அல்லல்களும், தாக்குதல்களும், வன்புணர்வுகளும் சொல்லி மாளாது.
பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் முதல் இடத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளது. இந்தத் தகவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய ஸ்மிருதி இரானி - பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான போக்சோ சட்டம் - 2012இல் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை, கடந்த ஜூலை 10ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, நிர்பயா உள்ளிட்ட சட்டங்களும் பெண்கள் பாதுகாப்பிற்காக இருக்கின்றன. எனினும், இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும், பாலியல் வல்லுறவுக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், மாநில வாரியாக 2014 முதல் 2019 வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில், உத்தரப்பிரதேசம், டில்லி, அரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2014 முதல் 2019 வரை 6,906 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நடப்பு ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 550 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதன்மூலம், பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் அவல நிலையில் உள்ளார்கள் என்பதை பா.ஜ.க அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னதாக பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட நிர்பயா நிதி ஒதுக்கீட்டிலிருந்து, வெறும் 20 சதவிகித அளவிலான தொகை மட்டுமே தற்போதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
2018-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றது, இது குறித்து அய்.நா. மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டதன் மூலம் இந்தியாவின் மானம் கப்பலேறி விட்டது!
உண்மைகள் இவ்வாறு இருக்க, பெண்களுக்கான பாலியல் கொடுமைகளைக் களைய அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு ஓசையின்றிக் கலைக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்? எல்லாம் மோடிக்குத்தான் வெளிச்சம்!

Wednesday, July 24, 2019

சூரியனை ஆராய்வதற்கு தயாராகும் இஸ்ரோ: அடுத்த ஆண்டு ’ஆதித்யா’ விண்கலம் ஏவ திட்டம்

சந்திரயான்-2 விண்கலத்தை  வெற்றிகரமாக ஏவி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ அடுத்தக்கட்டமாக சூரியன் தொடர்பான ஆராய்ச்சியில் முத்திரை பதிக்க வுள்ளது.
சுட்டெரிக்கும் தீக்கோளமான சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று அதன் வெளி விட்டத்தில் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் பரப்பளவில் அகன்று, விரிந்து கிடக்கும் வீரியமிக்க ’கொரோனா’ எனப்படும் ‘பிளாஸ்மா’ கதிர்களைப் பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்ய ‘இஸ்ரோ’ திட்டமிட் டுள்ளது. இதற்காக உருவாக்கப்படும் ‘ஆதித்யா-எல்1’ விண்கலம் அடுத்த ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப் படலாம் என தெரியவந்துள்ளது.

இஸ்ரோ தலைவர் கே.சிவன்

இந்த ஆராய்ச்சி தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறுகையில், ‘பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சூரியனின் கரோனா பகுதியில் இவ்வளவு வெப்பம் உண்டாவது ஏன்? என்பது சூரியன் தொடர்பான இயற்பியலில் இதுவரை விடைகாண முடியாத கேள்வியாக உள்ளது.
சூரியனின் கரோனா பகுதியில் உள்ள வெப்பமானது பருவநிலை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக இந்தியா விரைவில் அனுப்பும் விண்கலம் எப்போதுமே சூரியனை நோக்கிவாறு ஆய்வுகளை மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டிருந்தார்

வந்தே மாதரம் பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரமாம்: உயர்நீதிமன்றத்தில் மனு

வந்தே மாதரம் தேசிய பாடலுக்கு தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் தருவதற்கான கொள்கையை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: பங்கிம்சந்திர சாட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடலுக்கு, ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஜன கண மன எனத் தொடங்கும் தேசிய கீதத்துக்கு நிகரான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின்போது தேசியப் பாடல் மிக முக்கியப் பங்கு வகித்தது.
1896ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது. தேசியப் பாடல், தேசிய கீதம் ஆகியவற்றுக்கு சம மதிப்பளிக்க வேண்டும்.அத்துடன், இரு பாடல்களையும் ஊக்குவிக்க தேசிய அளவில் மத்திய அரசு கொள்கை வகுக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு பாடல்களையும் பாடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 மருந்துகள் தரமற்றவை: மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு


சந்தையில் விற்பனை செய்யப்படும் 26 மருந்துகளை தரமற்றவை என்று, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும் பாலான வை உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசத் தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை தமிழகத்தில் திருவள்ளூரில் தயாரிக்கப் பட்ட ஒரு மருந்து தரமற்றது என வகைப்படுத்தப் பட்டுள் ளது.
நாட்டில் விற்பனை செய் யப்படும் அனைத்து வகை யான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரி  யங்கள் மூலம் ஆய்வு செய்யப் படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண் டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப் படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 843 மருந்துகள் ஆய்வுக்குட் படுத்தப்பட்டன. அவற்றில் 817 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், வயிற்றுப் போக்கு,  இருமல், கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 26 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப் பட்டது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலா னவை உத்தரகண்ட்,  இமா சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங் களில் தயாரிக்கப்பட்டவை என்று அதன் மூலம் தெரியவந் துள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிடி ஸ்கேன், எம் ஆர்அய் ஸ்கேன், நுரையீர லுக்கு சுவாசக் காற்றை அனுப்பும் கருவிகள், எக்ஸ்-ரே கருவி, புற்றுநோய் சிகிச் சைக்கான பிஇடி கருவி, இதயத் துடிப்பை மீட்டெ டுக்கும் மின்னழுத்தக் கருவி, டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்டவை மனித உட லுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வரையறை செய்தது நினைவு கூரத்தக்கது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர இழப்பு ரூ.342 கோடி


பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜூன் காலாண் டில் ரூ.342 கோடி நிகர இழப்பை கண்டுள்ளது. இதுகுறித்து அந்த வங்கி செபிக்கு அளித்த அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.5,006.48 கோடி வருவாய் ஈட்டி யுள்ளது. இது, கடந்த 2018-19 நிதி யாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.5,326.71 கோடியுடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைவாகும்.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.919.44 கோடி யாக இருந்தது. இந்த நிலையில், வங்கியின் கடன் மீட்பு நடவடிக் கைகள் மேம்பட்டு, வாராக் கட னுக்கான ஒதுக்கீட்டு அளவு கணி சமாக குறைந்ததையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிக்கு ஏற்பட்ட நிகர இழப்பு ரூ.342.08 கோடியாக குறைந்துள் ளது.
வங்கிக்கு கிடைக்க கூடிய வட்டி வருவாய் 2.07 சதவீதம் அதிகரித்து ரூ.4,336.39 கோடியாக வும், அதேசமயம் வட்டி அல்லாத வருவாய் 38 சதவீதம் சரிந்து ரூ.670.09 கோடியாகவும் காணப் பட்டது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 25.64 சதவீதத்திலிருந்து (ரூ.38,146 கோடி) குறைந்து 22.53 சதவீதமாகி (ரூ.33,262 கோடி) உள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 15.10 சத வீதத்திலிருந்து (ரூ.19,642 கோடி) சரிந்து 11.04 சதவீதமாகி (ரூ.14,174 கோடி) உள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி நிலவ ரப்படி வங்கியின் மொத்த வர்த் தகம் ரூ.3.69 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் மொத்த டெபாசிட் ரூ.2.21 லட்சம் கோடி யாக உள்ளது. வழங்கப்பட்ட மொத்த கடன் ரூ.1.51 லட்சம் கோடியிலிருந்து குறைந்து ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்தது என அந்த அறிக்கையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

வேகமாக உருகும் அண்டார்டிகா பனிப்பாறைகள்: விஞ்ஞானிகள் கவலை


அண்டார்டிகாவிலுள்ள பனிப் பாறைகள் நாம் நினைத்ததை விட வேகமாக உருகி வரு கின்றன என விஞ்ஞானிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின் றனர். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைகள் உருகுகின்றன. பனிப்பாறை உருகுவதாலும் கடல் மட் டம் உயர்கின்றது எனக் கூறப்படுகிறது. தற்போது அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் இது இப்படியே தொடர்ந் தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படு கிறது.
இந்த நிலையில் நாசாவின் நிதியுதவி பெறும் ஆராய்ச் சியாளர்கள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி பாலமான த்வைட்ஸ் பனிப்பாறை எப்படி உருகு கிறது என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் த்வைட்ஸ் பனிப்பாறை இதற்கு முன்பு கணிக் கப்பட்டதை விட வேகமாக உருகி வருவதும் நிலையற்ற தன்மையுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் இது கடலில் கலந்து கடல் நீர்மட்டம் பெருமளவு உயரும் , அதாவது 3 அடி வரை நீர்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

காவல்துறை அதிகாரிகள் வரதட்சிணை, பரிசுகள் வாங்கக் கூடாது: டிஜிபி திரிபாதி உத்தரவு

காவல்துறை அதி காரிகள் வரதட்சிணை, பரிசுப் பொருள் கள் வாங்கக் கூடாது என தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அண்மையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தொடர்ந்த வழக்கை விசாரித் தது. வழக்கின் முடிவில், தமிழக டிஜிபிக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் அரசு ஊழியர்கள் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும். அரசு அலுவலகங்க ளிலும், வெளியிடங்களிலும் அவர்களின் நடத்தை கண்ணியமானதாக இருக்க வேண்டும்.
மேலும், காவல்துறையில் பரிசுப் பொருள்களை பரிமாறிக்கொள்வது அதிக அளவில் இப்போது நடை பெறுகிறது. காவல்துறை அதிகாரிகள், பரிசுப்பொருள்கள், வரதட்சிணை பெறு வது காவல்துறை நடத்தை விதி 4-க்கு எதிரானது. இது தடுக்கப்பட வேண்டும். எனவே, தமிழக காவல்துறை சீருடைப் பணிக்கான ஒழுக்கத்தையும், மதிப்பையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பூங்கொத்துகள், பரிசுப் பொருட்கள், வரதட்சிணை பெறுவதை தடுக்கவும், காவல்துறை நடத்தை விதி களை கடுமையாக பின்பற்றுவது தொடர் பாக தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபி 6 வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக  உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், தமிழக காவல்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள காவல்துறை அதிகாரிகள் வரதட்சிணை, பரிசுப் பொருள்கள் வாங்கக் கூடாது; பூங்கொத்துக்களும் வாங்கக் கூடாது.  அதிகாரிகள், வரதட்சிணை வாங்கவும், கொடுக்கவும் கூடாது.
திருமணம், பிறந்த நாள் கொண் டாட்டம், மத விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ரூ.200 க்கு மேல் மதிப்புள்ள எந்த பரிசுப் பொருளையும் அதிகாரிகள் வாங்க வேண்டாம். காவல்துறை அதிகாரிகள், தங்களது குடும்பத்துக்குள் பரிசுப்பொருள்களை பரிமாறிக் கொள் ளலாம். அதை தவிர்த்து வேறு யாரிடமும் பரிசுப்பொருள்களை பெறக் கூடாது. அதேபோல, காவல்துறை வாகனத்தில் அதிகாரிகள், தங்களது குடும்பத்தினர்கள், வீட்டில் இருக்கும் வளர்ப்பு பிராணிகள் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

‘தமிழ் கற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’?

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரி கின்றனர். தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டப்படி 2 ஆண்டுகளுக்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:
சட்ட விதிகளைப் பின்பற்றி பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கை விவரங்களை அறிக்கையாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள்மீது துறைரீதியாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.

தமிழ்நாட்டில் அம்மணச் சாமியார்கள் மாநாடா?

மதுரை நகரில்   24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதிவரை சந்நியாசிகள் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்துத்துவா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு 'வைகைப் பெருவிழா' என்ற பெயரில் மதுரை புட்டுத்தோப்பு வைகை கரையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் அம்மணச் சாமியார்களை அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் #SaveVAIGAIfromRSS என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கங்கை சாக்கடை ஆனது போல வைகையை கங்கை நதிக்கரை போல அழுக்கடைய விடமாட்டோம் என்ற குரலை கவிதா என்கிற சமூகவலைதள பதிவர் பதிவிட்டுள்ளார். கங்கை நதியின் மாசடைந்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அசோக்குமார் தவமணி என்பவர் மதுரை மதச்சார்பற்ற நகரம்; மதுரை சித்திரைத் திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று அமைதியாகக் கொண்டாடுகின்றனர் எனக் குறிப்பிட்டு இஸ்லாமிய குடும்பத்தினர் சித்திரை திருவிழாவில் பங்கேற்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கோவை ஜீவா என்பவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஓடும் ரயிலை வைகை ஆற்று பாலத்தில் 4நாட்கள் மறித்து நிறுத்தியபோது வராத கும்பல் வைகை பெருவிழா என வருவது யாரை ஏமாற்ற..? என கொந்தளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொதுவாக அம்மணச் சாமியார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வடஇந்திய ஆபாசக் கலாச்சாரம் அங்கேயே இருந்து தொலை யட்டும்! இங்கே அதனை அரங்கேற்றலாம் என்று நினைத்தால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும்.
தமிழ்நாடு அரசு காவல்துறை இதனைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திட வேண்டும். ஒரே கலாச்சாரம், ஒரே கலாச்சாரம் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை முழங்கும் மத்திய பிஜேபி ஆட்சி அதன் ஒரு பகுதியாக இதனைத் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்ய எத்தனிக்கிறதோ என்ற அய்யப்பாடும் முக்கியமானதாகும்.
வடநாட்டுச் சாமியார்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பது ஊர்,  உலகத்துக்கே தெரியும். சிறீசிறீ ரவிசங்கர் என்ற சாமியார் வாழும் கலை அமைப்பு சார்பில் உலக சுகாதார மாநாடு என்ற பெயரில் டில்லி  அருகில் யமுனை ஆற்றின் கரையில் 1200 ஏக்கர் பரப்பில் மிகப் பெரிய அளவில் மாநாடு, கண்காட்சிகளை நடத்தி சுற்றுச் சூழலை சுக்கு நூறாக்கியதை மறந்திட முடியுமா? அந்த மாநாட்டை எதிர்த்து சமுக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும், உச்சநீதிமன்றம் பசுமைத் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்று கூறியதன் அடிப்படையில் ரூ.120 கோடி அபராதம் விதித்ததையும் இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.
யமுனைக் கரை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என்று எழுவர் கொண்ட உயர் மட்ட ஆய்வுக் குழு அறிக்கையாகக் கொடுத்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், சுற்றுச் சூழலையும் கெடுக்கும் அம்மணச் சாமியார்கள் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் இல்லையெனில் எதிர் விளைவே - எச்சரிக்கை!

Tuesday, July 23, 2019

அய்ட்ரோகார்பன் திட்டம் நாடாளுமன்றம் முன் விவசாயிகள் 25இல் உண்ணாநிலை போராட்டம்

அய்ட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு 25ஆம் தேதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த விவசாயிகள் டில்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் பேரழிவை ஏற்படுத்தும் அய்ட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவிரி டெல்டா பாசன பகுதிகளை பாதுக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில்  வரும் 25ஆம் தேதி டில்லியின் நாடாளுமன்றம் முன்பு உண்ணாநிலை போராட்டமும், 26ஆம் தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டமும் நடைபெறுமென பிஆர் பாண்டியன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, டில்லியில் போராட்டம் நடத்த பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை மன்னார்குடியில் இருந்து ரயிலில் புறப்பட்டனர். முன்னதாக மன்னார்குடி பெரியார் சிலை அருகில் போராட்டத்திற்கு செல்லும் விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவிரி ரெங்கநாதன் விவசாயிகளை வழியனுப்பி வைத்து பேசினார்.  போராட்டம் குறித்து பிஆர் பாண் டியன் கூறுகையில், அய்ட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். மக்கள் அகதிகளாக்கப்படு வார்கள். மக்கள் வசிக்க லாயக்கற்ற பகுதியாக டெல்டா மாவட்டங்கள் மாறுகின்ற பேரவலம் ஏற்படும். எனவே தான் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட டில்லி செல்கிறோம்.
நாடாளுமன்றம் முன்பு 25ஆம் தேதி நடைபெறும் உண்ணா நிலைப் போராட்டத்தை புதுவை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைக்கிறார். இதில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அன்று எங்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்க தவறினால் மறுநாள் நாடாளு மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

ரயில்வே துறையை ஏமாற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்

ரயில்வே துறையிடம் இருந்து கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை பெற் றுள்ள தனியார் காப்பீடு நிறு வனங்கள், பயணிகளுக்கான இழப்பீடாக வெறும் ரூ. 7 கோடியை மட்டுமே வழங் கியுள்ள தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநி லத்தை சேர்ந்த சமூக ஆர்வ லரான சந்திர சேகர் கவுர் என்பவர், “மத்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் அய்.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் இணையவழி பயணச்சிட்டு முன்பதிவு செய்யும் பயணிக ளுக்கு ரயில்வே துறை காப் பீடு வழங்குகிறது. இந்த காப் பீட்டை சிறீராம் ஜெனரல், அய்.சி.அய்.சி.அய். லாம் பார்ட் ஜெனரல், ராயல் சுந் தரம் ஜெனரல் ஆகிய 3 தனி யார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயணிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயணச்சீட்டு முன்பதிவு செய்து ஏ.ஆர்.வி. அல்லது பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவ ருக்கு அவரின் பயணச்சீட்டு கட்டணத்தில் காப்பீடுக்காக 92 காசுகள் கூடுதலாக, பயணி யின் விருப்பத்தின் அடிப் படை யில் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் காப் பீடு செய்து ரயிலில் பயணிக் கும் பயணிகள், ரயில் விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ அவர் களுக்கு இழப்பீடு வழங்கப் படும். அதன்படி, ரயில் விபத் தில் சிக்கி காப்பீடு செய்த பயணி இறக்க நேரிட்டால், அவரின் குடும்பத்துக்கு இழப் பீடாக ரூ.10 லட்சம் காப்பீடு நிறுவனங்களால் வழங்கப் படும். காப்பீடு திட்டத்தில் சேர்ந்த ஒரு பயணி ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தாலோ அல்லது உறுப் புகள் ஏதேனும் இழந்தாலோ, அவருக்கு ரூ. 7.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். விபத்தில் லேசான காயம் அடைந்த பயணிக்கு, ரூ. 2 லட்சம் மருத்துவ செலவாக வழங்கப்படும். அத்தோடு, ரயிலில் நடைபெறும் கொள்ளை, வன்முறை, தீ விபத்துக்கள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பயணிகளுக் கும், காப்பீடு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படு கிறது.
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக எவ்வளவு தொகையை பிரீமியமாக மத்திய ரயில்வே துறை, காப் பீடு நிறுவனங்களுக்கு வழங்கி யுள்ளது? கடந்த 2 ஆண்டு களாக காப்பீட்டு நிறுவனங் களால், பயணிகளுக்கு வழங் கப்பட்ட தொகையின் மதிப்பு என்ன ?” என்று கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட் டம் மூலம் எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய ரயில்வே துறை, “கடந்த 2 ஆண்டுகளில் தனி யார் காப்பீடு நிறுவனங்க ளுக்கு ரூ. 38.89 கோடியை ரயில்வே துறை பிரீமீயமாக செலுத்தியுள்ளது. அதே நேரம், இழப்பீடாக பயணிக ளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 7.29 கோடி மட்டுமே, தனியார் காப்பீடு நிறுவனங் களால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ரயில்வே துறையில் விபத்துக் குள் கணிசமாக குறைந்துவிட் டன.
கடந்த 2013-14ஆம் ஆண் டில் 118 ரயில் விபத்துக்கள் நடந்த நிலையில், 2016-17ஆம் ஆண்டில் அது 104 விபத்துக் களாகவும், 2017-18ஆம் ஆண் டில் 73 விபத்துக்களாகவும், 2018-19ஆம் ஆண்டில் 59 விபத்துக்களாகவும் படிப்படி யாக குறைந்துவிட்டது. இத னால் இழப்பீடு வழங்கும் அளவும் குறைந்துவிட்டது” என்று விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

துணிச்சல் இவரது அடையாளம்!


சி.ஆர்.பி.எப்பின் ஒரு பகுதியான கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்சன் பிரிவினர், ஆள் நடமாற்றம்மில்லாத அடர்ந்த காடுகளில் தங்கி மறைமுகமாக அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தும் நக்சல்களை ஒடுக் குவதற்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்புப் படை யாகும். இதில் மிக குறைந்த வயதில் சி.ஆர்.பி.எப் கமாண்டோ பெண் அதிகாரியாக பணியாற்றும் உஷா கிரண் ( 29) தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள இலக்குத் தெரியாத காட்டில் நக்சல்களை ஒடுக்க பணிபுரிந்து வருகிறார்.
முன்னாள் தேசிய விளையாட்டு வீராங் கனையும், ரசாயன பட்டதாரியுமான உஷா கிரண், அவரது குடும்பத்தில் சி.ஆர்.பி. எப்பில் பணி யாற்றும் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர் ஆவர். இவரது தாத்தா, அப்பா ஆகிய இருவருமே சி.ஆர்.பி.எப்பில் பணி யாற்றியவர்கள் என்பதால் இவருக்கும் சி.ஆர். பி.எப்பில் சேர ஆசை தோன்றி யுள்ளது. சி.ஆர்.பி.எப்பில் உள்ள கோப்ராவில் சேருவதுதான் இவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. கதார்புர் குருகிராமில் உள்ள சி.ஆர்.பி. எப் அகாதெமியில் உஷாகிரண் சேரும்போது, பெண்கள் யாருமே இல்லை. எல்லாருமே ஆண்கள், கோப்ராவில் சேர பெண்கள் யாரும் விரும்பவில்லையாம்.
அகாதெமியில் தேர்ச்சிப் பெற்றவுடன், சத்தீஸ்கரில் பாஸ்டர் பகுதியில்தான் பணியாற்ற வேண்டுமென்று தீர்மானித்தேன். நான் எதிர்பார்த்தபடி அந்த பகுதியிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு தங்கியிருந்த ஓராண்டிலேயே சி.ஆர்.பி.எப் எடுக்கும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், கோப்ரா செயல்படும் விதத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது. கமாண்டோ படையில் சேர நான் எடுத்த முடிவு சரியானது என்று தோன்றியது.
என்னுடைய சிறுவயதில் ஆண்டுதோறும் டெல்லியில் குடியரசு தினத்தன்று நடக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு என்னை தவறாமல் என் தந்தை அழைத்துச் செல்வ துண்டு. ராணுவ வீரர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பு நடத்துவதை பார்த்து நான் வியப்படைவேன்.
விவரம் தெரிந்த பிறகுதான் ராணுவத்தினர் வெறும் அணிவகுப்பு மட்டும் செய்வதில்லை. இந்த நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் என்று கூறிய உஷா கிரண், கோப்ராவில் சேர்ந்த அனு பவத்தைப் பற்றி விவரிக்கிறார்:
"கோப்ராவில் பெண்கள் சேருவது அத்தனை சுலமல்ல, கோப்ராவில் 10 பட் டாலியன் கமாண்டோ பிரிவுகள் இருந் தாலும், ஒன்றில் கூட பெண்கள் கிடையாது.
என்னுடைய விண்ணப் பத்தை பார்த்த மூத்த அதிகாரிகள் என் துணிச்சலுக்காக கோப்ராவில் சேர அனுமதித் தனர். கோப்ரா ஒரு சிறப்பு அமைப்பு என்பதால் இதற்கென்று பிரத்யேகப் பயிற்சிகள் உண்டு.
உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் அளிக்கப்படும் இந்த பயிற்சியின்போது பெண்கள், தங்கள் சக்தியை ஆண்களின் வலிமைக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். பயிற்சியின்போது ஆண்- - - பெண் வித்தியாசம் ஏதுமில்லை.
கோப்ரா ஒரு சிறப்பு படை என்பதால், மற்றொரு கோப்ரா கமாண்டோவுடன் போ ராடக் கூடிய வலிமை பெற்றிருக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக பயிற்சி பெறும்போது, பெண் என்பதற்காக கூடுதல் நிமிடங்களோ, விநாடிகளோ ஒதுக்க மாட்டார்கள் இதன் மூலம் எனக்கு கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ, அது எதிர்காலத்தில் என்னைப் போன்று கமாண்டோ படையில் சேரும் பெண்களுக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று நினைப்பேன்.
நக்சல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக பாஸ்டரில் நியமிக்கப்பட்ட எனக்கு ஒரு கம்பெனிக்கு சுதந்திரமாக செயல்பட அனு மதித்தனர். வெளி தொடர்பில்லாத காட்டில் எனக்கு கீழ்படிந்து நடக்கும் வீரர்களை ஒரு குடும்பத் தலைவிபோல் அவர்களை அர வணைத்து அவர்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. இருப்பினும் நக்சல்களின் சவால்களை சந்திப் பதற்காக பழங்குடியினர் வசிக்கும் காட்டில், மொபைல் தொடர்பற்ற சூழ்நிலையில் ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ள ஒரு குழுவுக்கு நான் ஒருத்தி கமாண்டராக தலைமை ஏற்று நடத்துவது முதலில் சங்கடமாக தெரிந் தது.
அதேபோல் முதன்முறையாக தங்களை ஒரு பெண் தலைமை ஏற்று நடத்துவதை அவர்கள் எப்படி ஏற்பார்கள் என்பதை அறிந்து ஒரு பாதுகாப்பான கமாண் டரின் கீழ் பணி யாற்றுகிறார்கள் என்று உணர்த்தும் முயற் சியில் ஈடுபட்டேன்.
நாளடைவில் ஏற்பட்ட மாறுதல்களால், என் தலைமை மீது அவர் களுக்கு நம்பிக்கை ஏற்பட்டதோடு, என்னுடைய நடவடிக் கைகள் சரியானதுதான் என்பதையும் ஏற்றுக் கொண்டனர்.
எதிரிகளை ஒடுக்க முன்னணியில் நின்று தலைமைதாங்கி போரிடுவது ஒரு சவாலான விஷயமாகும்.
என்னுடைய படை வீர்கள் தைரியத் துடனும் ஆர்வத்துடனும் என் கட்டளையை ஏற்று செயல்படும்போது எனக்கு வலி தெரிவதில்லை. என் மீது வைத்துள்ள நம்பிக்கை அவர்கள் கண்களில் தெரியும் போது என் மனச்சோர்வு நீங்கிவிடும்.
என்னுடைய பணி நேரம் முடிந்த பின்னரும் அந்த மலைப் பிரதேசத்தில் வசிக்கும் குடும்பங் களில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை முகாமுக்கு அழைத்து வந்து பாடம் சொல்லிக் கொடுப்பேன். தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழிலையும் சரிசமமாக கவனிப்பது சாதாரண விஷயமல்ல.
ஆனால் நம்முடைய குடும்பத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதும், விவேகமுள்ள கண வரும் இருந்துவிட்டால் கவலையே இல்லை என்னுடைய கணவர் மருத்துவர் கிரணும் சி.ஆர்.பி.எப்பில் மருத்துவ அதிகாரியாக பணி யாற்றுவதால், பணி தொடர்பாக நான் எடுக்கும் முடிவுகளை புரிந்து கொண்டு எனக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். நான் சி.ஆர்.பி.எப்பில் சேர்ந்தது முதல் எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற் பட்டதில்லை முதன்முறையாக நான் கமாண்டோ அதிகாரியாக பொறுப்பேற் றதை என் குடும்பத்தினர் பெருமையாக கருது கிறார்கள்'' என்றார் உஷாகிரண்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...