Total Pageviews

Monday, March 31, 2008

'ஓ போடலாமே!'

தோழர் ஞானி - `ஆனந்த விகடனை விட்டு `குமுதம் கிளைக் குத் தாவியுள்ளார்.இவர் `குமுதம் கிளைக்குத் தாவி யதுகூட அவரின் அறிவு நாண யத்தின் சேதாரத்தைத்தான் வெளிப் படுத்தும்.அவர் சில நாள்கள் `தீம்தரிகிட என்ற ஒரு இதழை நடத்திப் பார்த்தார் - 1982-இல் மூன்று, இதழ்கள்.1985-இல் ஆறு இதழ்கள், 2002-இல் மீண்டும் துளித்தது, வழக்கம்போல் கண் மூடி விட்டது. கொள்வார் இல்லாமையால் கடையைக் கட்டிக் கொண்டு விட்டார்.
ஏப்ரல் - மே 2002 இதழில் ஒரு அறிவிப்பைக் கொடுத்தார்.`தீம்தரிகிட இதழில் வெளியாகும் படைப்புகள் அந்தந்த படைப்பாளர்களுக்கே உரிமை உடையவை. தீம்தரிகிட இதழில் வெளியானவற்றை மேற்கோள் காட்டி எவரும் பயன்படுத்தலாம்; குமுதம் குழும இதழ்களைத் தவிர - என்பதுதான் அந்த அறிவிப்பு. சரி, எதற்காக அந்த அறிவிப்பு? அதே இதழின் 22-ஆம் பக்கத்தில் அதற்கான காரணம் கூறப்பட்டது.குமுதம் இதழில் ஆசிரியர் குழு பிரசுர விவரங்கள்பற்றிய குறிப்பில் படைப்பாளிகளின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் அறிவிப்பு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. குமுதம் இதழில் வெளிவரும் படைப்புகளின் உரிமை குமுதத்தில் வெளியீட் டாளருகே உரியதாம்.திரும்ப அதை நூலாகவோ, வேறு எந்தவிதத்திலோ படைப்பாளி பயன்படுத்த வேண்டுமென்றால், குமுதம் வெளியீட்டாளரிடம் அனுமதி பெற வேண்டுமாம். அதாவது குமுதத்தில் எழுதும் பிரபஞ்சன், பாலகுமாரன், அப்துல்கலாம் யாரானாலும் சரி, அவர்கள் எழுதியதன் உரிமை குமுதத்துக்குப் போய் விடுகிறது! பிரபஞ்சனின் சிறு கதைகள் தொகுப்பாக வெளி வரும் போதோ தொலைக் காட்சிக்குத் தரப்படும் போதோ அவர்தான் எழுதிய கதைக்குக் குமுதத்திடம் போய் அனுமதி கேட்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம். நடைமுறையில் இதைப் பின்பற்றுகிறார்களா என்பது முக்கியமல்ல. இப்படி அறிவிப்பு செய்ததே தவறானது. படைப்பாளிகள் சார்பாக இதற்கான தார்மிக எதிர்ப்புதான் எங்கள் அறிவிப்பில் உள்ள நிபந்தனை

உள்ளபடியே மனிதன் சுயமரியாதைச் சூடு பறக்கத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒரு `ஓ கூடப் போடலாம்.அது சரி.. அப்படிப்பட்ட எழுத்தாளரின் உரிமையை ஊனப் படுத்தும் குமுதத்தில் சேர்ந்து கொண்டு இப்பொழுது `ஓ போடுகிறாரே அது எப்படி?ஓகோ! எழுத்தாளரின் உரிமை `காசுக்குச் சலாம் வைத்து விட்டதோ!
ஞானியின் சுயமரியாதை இப்பொழுது; எங்கே போய் முக்காடு போட்டுப் பதுங்கிக் கொண்டது? தார்மீகம் தார்பூசிக் கொண்டு விட்டதா?தான் மட்டுமே எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாத கம்பீரமான எழுத்தாளர் என்பது போல காட்டிக் கொண்டவரின் கவட்டுத்தனம் இப்பொழுது அம்பலமாகி விட்டதே!

சரி... இன்னொரு செய்தி; இவ்வார குமுதத்தில் (2.4.2008) `நாறும் தேச பக்தியைப்பற்றி அலசிவிட்டு, இடை இடையே சில பெட்டிச் செய்திகளையும் உலவவிட்டுள்ளார்.அதில் ஒன்று.. கலைஞர் மகள் கனிமொழியைப் பற்றியது. ஞானி யின் ஒரே இலக்கு கலைஞர்மீது பாணம் தொடுப்பதே!
திராவிட இயக்கக் கொள்கையில் அழுத்தமான ஒருவர் ஆட்சிப் பொறுப் பில் இருப்பது மகா பெரிய ஆபத்து என்ற அச்சத்தில் அவாள் வட்டாரத்தால் ஏவப்படும் `நஞ்சுதோய்ந்த அம்புகள் அவை.`துக்ளக் `கல்கி, `தினமணி வரிசையில் இவரும் இருக்கிறார் என்பதுதான் இதன் பொருளும் - உண்மையுமாகும்.``தன் மகள் கனிமொழி ஓர் இந்து பெண் என்று அறிவித்திருக்கும் கலைஞர் கருணாநிதியும் இந்துவா? அப்படியானால் நாத்திகர்களுக்குக் கடவுள் கிடையாது. மதம் மட்டும் உண்டா? அப்படி ஒரு நாத்திகக் கோட்பாடு ஏற்கெனவே உள்ளதா? அல்லது கலைஞர் கண்டருளியதா? -

இதுதான் இவ்வார `குமுதத்தில் தோழர் ஞானி உதித்திருக்கும் பூச்செண்டு! இந்தப் பிரச்சினை எங்கிருந்து கிளம்பியது?மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவில் இந்தத் தடவை இந்துக்களுக்கு இடம் தரப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக ஒருவர் எழுதிட அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலைஞர் `முரசொலியில் (19.3.2008) எழுதினார்:`கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா கனிமொழிஆகிய இரண்டு இந்துக்களைத் தானே நிறுத்தினோம் என்ற கலைஞர் அவர்களின் இந்தப் பதிலை வைத்துதான் ஞானி பேனாவைச் சொடுக்கியுள்ளார்.

நாத்திகத்துக்குக் கடவுள் கிடையாது; மதமும் கிடையாதுதான் ஆனால் இந்திய அரசமைப்புச் சட்டப்படி என்ன நிலைமை?நாத்திகன் என்று சொன்னாலும் அவர் இந்துதான். பவுத்தன் என்று சொன்னா லும் அவனும் இந்துதான், சீக்கியன் என்று சொன்னாலும் அவனும் இந்துதான். அப்படி அரசமைப்புச் சட்டம் இந்தியாவில்! கலைஞரை நோக்கிக் கணையைத் தொடுக்கக் கிளம்பும் முன் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பார்ப்பனீயத்தை பட்டை கழற்றிருக்க வேண்டாமா? தோலை உரித்துத் தொங்க விட்டிருக்க வேண்டாமா? மூலத்தை விட்டு விட்டு நிழலோடு சண்டை போடுவதா வீரம்? ஊருக்கு இளைத்தவர் கலைஞர் தானா? அக்கிரகாரத்தின் கண்களுக்குக் கலைஞர் கருவேலமுள்ளா?
அதேபோல விண்ணப்பங்களில் ஜாதி என்ற இடத்தில் எதையும் போடாமல் கோடு கிழித்தாலும் அதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் தெரியுமா?உயர்ஜாதி (Forward Community) என்ற பட்டியலில்தானே அடைக்கிறார்கள்?இதைப்பற்றியெல்லாம் இவாள் எழுத மாட்டார்கள் - காரணம், இவையெல்லாம் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காக்கும் கோட்டைக் கொத்தளங்களாயிற்றே! இந்து மதத்தில் கடவுள் மறுப்பாளன் நாத்திகனல்ல; வருணா சிரமத்தை எதிர்ப்பவன்தான் நாத்திகன் என்பதை திருவாளர் `ஞானியார் சுவாமிகள் அறிவாரா!புரியவில்லையென்றால் மரணமடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி `சுவாமிகளின் ``தெய்வத்தின் குரல் இரண்டாம் தொகுதியை (பக்கம் 407-08) கொஞ்சம் புரட்டிப் பார்க்கட்டும் - அப்படியே மனுதர்மத்தையும் கொஞ்சம் துழாவட்டும்! (அத்தியாயம் இரண்டு சுலோகம் II).கலைஞரும் சரி, கவிஞர் கனிமொழியும் சரி நாத்திகர்கள்தான். அதற்கு ஞானிகளின் சான்றிதழ்கள் தேவையில்லை.
- மயிலாடன்

Tuesday, March 4, 2008

சூரியனில் கன்னிமேரியைத் தேடிய 48 பேருக்கு கண் பார்வை பறிபோனது

திருவனந்தபுரம், மார்ச் 4-
சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தியை நம்பி, அதைப் பல மணி நேரம் உற் றுப் பார்த்த 48 பேருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சூரியனில் கன்னி மேரியின் உருவம் தெரிகிறது என்ற வதந்தீ கேரள மாநிலம் கோட்டம் மாவட்டத்தில் எரி மேலிக்கு அருகே அண்மையில் வேகமாகப் பரவியது. இதை நம்பிய ஏராளமானோர் ஓரி டத்தில் கூடி சூரியனைப் பல மணிநேரம் உற்றுப் பார்த்தனர்.அதனால் கண்ணில் கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்குச் சென்றனர். கான் ஜிராப்பள்ளி என்ற ஊரில் உள்ள ஜோசப் காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவமனைக்கு வந்த 48 பேருக்கு கண்பார்வை பறி போனது தெரிய வந்தது. கண் ணின் விழித்திரையில் காயம் ஏற்பட்டதே இதன் காரணம்.இது குறித்து அம்மருத்துவ மனையில் கண் மருத்துவர் ஜேம்ஸ் அய்சக் கூறுகையில், அண்மையில் கண்கோளாறு ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினையே காணப்பட்டது. அவர்களின் விழித்திரையில மிக முக்கிய பாகத்தில் சேதம் ஏற்பட்டிருந் தது. சூரியனைப் பலமணி நேரம் உற்றுப் பார்த்ததே இப்பிரச்சினைக்குக் காரணம் என்று கூறினார்.இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள், வதந்தி பரப்பப் பட்ட பகுதியில் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
இதைப் படிக்கவும் அவர்களுக்குப் பார்வை இல்லையே!

சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!

சென்னையையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில் இயேசுவின் முகம் தெரிவதாக ஞாயிற்றுக் கிழமை வதந்தி பரவியது. செய்தித்தாள்களும் படத்துடன் வெளியிட்டு விளம் பரம் செய்தவுடன் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். கடந்த ஞாயிறன்று (02.03.08) அக்கோயிலில் பூசைக்கு வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் முதலில் பார்த்ததாகவும், னர் பார்த்த அனைவரும் இயேசுவின் முகம் தெரிவதாகக் கூறியவுடன் வதந்தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அப்பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் தெரிவித்த தகவலையடுத்து திங்கள் கிழமை இரவு இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய றனர் இளைஞணியினர்.
மணிக்கூண்டில் இருந்து வழிந்த மழைநீரால் பாசி உருவாகியிருக்கிறது. அதில் மங்கலாகத் தெரியும் உருவத்தை, தங்களுக்கேற்றாற்போல் உருவகம் செய்துகொண்டு இயேசு தெரிவதாகப் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் திடீரென ஒருவர் பக்கத்து தூணில் மேரி மாதா கையில் குழந்தையோடு தெரிவதாகச் சொல்ல அதையும் பார்த்து பரவசமடையத் தொடங்கிவிட்டார்கள். மேரி மாதாவின் கையில் குழந்தை, பின்னால் ஒளிவட்டம், அவர் அணிந்திருக்கும் கவுன், தலையில் மூடியிருக்கும் முக்காடு எல்லாம் தெரிவதாகக் கூறி இங்கே நடக்கிறார் என்றால் அங்கே பறக்கிறார் என்று வதந்தீ பரவும் என்பதைப் போல பரவத் தொடங்கி விட்டது.

இப்படி அடுத்தடுத்து வரும் செய்திகள் பற்றி அக்கோயிலின் இளம் பாதிரியார் சவரி முத்துவிடம் கேட்டபோது, கடவுள் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதாகவும், அவ்வப்போது இவ்வாறு மக்களுக்கு காட்சி தருவதாகவும் கூறினார். நேற்று வெறும் இயேசுவின் உருவம் மட்டும் தெரிந்த நிலையில் இன்று மாதாவின் உருவமும் உருவாகியிருப்பதாகவும் சிலுவைத் தெரிவதாகவும் பார்த்து மக்கள் நம்புகிறார்கள். நாளை இந்த உருவம் இன்னும் தெளி வாகத் தெரியக்கூடும். எனவே இன்னும் கூர்ந்து பார்த்தால் உருவாகியிருக்கும் மற்ற உருவங்களையும் பார்க்கலாம் என்றார் அவர்.

இதுதான் சமயமென்று தூணில் தெரியும் உருவத்தைப் புகைப்படம் எடுத்து, அதை இயேசு உருவத்துடன் ஒப்பிட்டுப் புகைப்பட வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது.வினா எழுப்பிய கழகத் தோழர்கள்கூட்டத்தில் சிலரிடம் கேட்டபோது எனக்கு எம்.ஜி.ஆர் உருவம்போல் தெரிகிறது என்றார் சந்துரு என்ற எம்.ஜி.ஆர். பற்றாளர். இன்னொருவர் பக்கத்தில் இருந்த இன்னொரு தூணில் மான் உருவம் தெரிவதாகக் காட்ட பின்னர் மான் காட்சி யளிக்கத் தொடங்கிவிட்டது.

* கோயிலுக்குள் காட்சி தராமல் இப்படி தூணின் அடியில் பாசியில் தெரிவது ஏன்?

* இயேசு, மாதா என்று தொடர்ந்து உருவங்கள் உருவாகி வருகிறது என்றால், முதலில் மாதா உருவம் வந்து பின்னர்தானே மகன் இயேசு வின் வடிவம் வந்திருக்க வேண்டும்.?

* மழைநீரால் உருவாகி யிருக்கும் பாசி தானே அப்படித் தெரிகிறது. முழுதும் பாசியை சுரண்டிவிட்டு, அந்த இடத்தில் சுண்ணாம்பு அடித் தால் அவ்விடத்தில் மீண்டும் இவ்வுருவங்கள் தெரியுமா?

* சுரண்டப்பட்ட பாசி யைப் பரிசோதித்தால், அது இன்று நேற்று உருவானதா, அல்லது மழைநீர் வழிந்து உருவாகி நீண்ட நாட் களாகிவிட்டதா என்று தெரி யுமே? அதற்குத் தயாரா?

என்பது போன்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்கள் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள்.ஆனால் இக்கேள்விகளுக்கு நம்பிக்கை என்று பதில் கூறித் தப்பித்தார்கள் பக்தர்கள். அங்கு குடியிருந்த இளைஞர் களோ, ஆம், அதுதான் சரி. அப்படி சுண்ணாம்பு அடித்த பின்னும் இயேசு உருவம் உருவானால் அப்போது நாங்கள் நம்புகிறோம் என்று உரக்கக் குரலெழுப்பட் தொடங்கிவிட்டனர்.

மாதா உருவத்தை தான் கண்டு பிடித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீனிவாசன் என்ற கணினிப் யாளரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஆட்டோ நர்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டுட் திணறடித்தனர்.

உடுமலை, வை.கலையரசன், கருணாகரன், ரவிக்குமார், ராஜசேகர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணித் தோழர்கள் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கேள்விகளை எழுப்பினர்.

நன்றி: விடுதலை (04.03.2008)