Monday, December 28, 2009

ஒற்றுமை முழக்கம்


ஒற்றுமை முழக்கம்

   கவிஞர் கலி. பூங்குன்றன் 
பொதுச் செயலளார், 
திராவிடர் கழகம்


திராவிடர் கழகத்திற்கு பகுத்தறிவுக் கொள்-கைகள் உண்டு; பார்ப்பன ஆதிக்கப் பண்-பாட்டுப் படையெடுப்பை முற்றிலும் எதிர்க்கும் நேர் கொண்ட பார்வையுண்டு.

பெண்ணுரிமை என்பது ஆண்களுக்கு நிகராக அனைத்துத் தடங்களிலும் தேவை என்பதில் சமரசத்துக்கு இங்கு இடம் இல்லை.

சமதர்மம், சமத்துவம், இழைந்தோடும் வருண, வருக்கப் பேதமற்ற ஒப்புரவு சமூகப் படைப்பு என்பது இதன் இலட்சியம்.

அரசியலில் இன்னார் இனியார் என்ற பேதமின்றி, தமிழர் நலன் என்ற எடை தட்டு-தான் அதை நிர்ணயிக்கும்.

தமிழர்களின் ஒற்றுமையைக் கட்டுவதில் கழகத்திற்கு எப்பொழுதுமே முதல் இடம் உண்டு.

தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக் கழகம் காண முயன்றபோது தந்தை பெரியார் தடுத்தாட் கொண்டார்; எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தும் பேசினார். தலைக்கு மேல் போயிற்று, தந்தை பெரியார் என் செய்ய!
கலைஞர் அவர்களுக்கும், டாக்டர் நாவலர் அவர்களுக்கும் கருத்துராய்வு ஏற்பட்ட நேரத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் இரு-வரையும் அழைத்துப் பேசிய சந்தர்ப்பமும் உண்டு.

தி.மு.க. அ.தி.மு.க. இணைப்புக்கு உரத்த முறையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முயற்சித்த-துண்டு, எம்.ஜி.ஆர். அவர்களின் தோட்டத்-திற்கே சென்று கலந்துறவாடினார்.

1) கழகத்தின் பெயர் தி.மு.க.வாகவே இருக்க வேண்டும்.

2) கொடியில் அண்ணா படம் இருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

3) எம்.ஜி.ஆர். அவர்களே முதல் அமைச்சராகத் தொடரட்டும்; கலைஞர் கட்சியின் தலைவராகட்டும் என்கிற அளவுக்கு இணைந்து வந்தபோது, வெண்ணெய்த் திரண்டு வந்த நேரத்தில் தாழியை உடைத்த தம்பிரான்கள் உண்டு.

இணையதான் வேண்டாம்; காங்கிரசுடன் கூட்டுச் சேர்வதைவிட - _ கலாச்சாரக் கொள்கை _ தமிழர் இனவுணர்வு என்னும் தடத்தில் இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தால் என்ன என்ற ஒரு சிந்தனையைத் தூவியவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

1980 பிப்ரவரியில் அப்படியொரு, சிந்தனை-யோட்டம்! தேவி இதழுக்கு வெளிப்படையாகப் பேட்டியே கொடுத்தார்.

கேள்வி: தி.மு.க. அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க தமிழினப்பற்று கொண்ட தாங்களும், கி.ஆ.பெ. போன்ற பெரியவர்களும் முயற்சி செய்வீர்களா?

வீரமணி பதில்: எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதோ இல்லையோ. ஆசையிருக்கிறது _ பெரும்பான்மையான தமிழர்களைப் போலவே! எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக இருந்த குடும்பம்தானே அது என்று தன் உள்ளக்கிடக்-கையை வெளிப்படுத்தினார், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1984 இல் மீண்டும் இதேபோல ஒரு சிந்-தனை திராவிடர் கழகப் பொதுச் செயலாளரிடம்.

11.11.1984 _ நாள் ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. அ.தி.மு.க. _ காங்கிரஸ் கூட்டு உறுதியென்றும், மக்களவைத் தேர்தலில் 40 இடங்களில் (புதுவையயும் சேர்த்து) மூன்றில் இரு பங்கு இடங்கள் காங்கிரசுக்கென்றும் - தகவல்கள் கசிந்தன.

நாவலர் இரா. நெடுஞ்செழியன் டெல்லி சென்றார் பிரதமர் இந்திரா காந்தியை இரு முறை சந்தித்தார்.

அந்த நேரத்தில் திராவிடர் கழகம் எடுத்த நிலை என்ன?

நாடாளுமன்றத் தேர்தலில் இ. காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பங்கினைத் தாரை வார்த்து அரிசியும், உமியும் கலந்து ஊதி ஊதித் தின்னும் கேலிக் கூத்தான முயற்சிக்குப் பதில் அ.தி.மு.க.-வின் அமைச்சர்களும், தோழர்களும், பொறுப்-பாளர்களும் துணிந்து முடிவுக்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஒரு தொகுதி உடன்-பாடு செய்து கொண்டு, தமிழ்நாட்டின் பிரதிநிதி-களாக பெரும்பாலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய-வர்களே வரக்கூடிய நல்வாய்ப்பினை உருவாக்-கினால், அது எதிர்காலத்தில் இரண்டு கழகங்-களுக்குமே சிறப்பானதாகவும், தமிழ்நாட்டின் நலனைக் காப்பாற்றுவதாகவும் ஆகும்.

கொள்கை உடன்பாடு இல்லாத காங்கிர-சோடு கூட்டு சேரத் தயாராக இருக்கும்போது, ஒரே கொள்கை, ஒரே பாரம்பரியம் உள்ள இயக்கத்தின் இரு வேறு கூறுகளில் உள்ளவர்கள் ஒன்றாக இணைய முன் வராவிட்டாலும்கூட இந்தத் தொகுதி உடன்பாடு போன்ற குறைந்த-பட்ச பணியையாவது செய்ய முன் வரக்-கூடாதா?...

இப்போது திராவிட இயக்கங்களுக்கு ஏற்-பட்டுள்ள சோதனைகளை வெல்ல வேண்டு-மானால், ஊடுருவல்களைத் தடுக்க வேண்டு-மானால், பிரித்தாளும் பகைவர்களுக்குப் பலி-யாகாமல் புதிய திடமான முடிவை எடுக்க வேண்டும்.......

அரசியலுக்கு அப்பாற்பட்ட பல பெரியவர்-கள்- _ விவரம் தெரிந்தவர்கள் ஆசை இதுதான்! அறிவுரையும் எல்லோருக்கும் இதுதான்! எனவே அடுத்த தேர்தல் பற்றி மட்டும் சிந்திக்கின்ற அரசியல் கட்சிகளாக இல்லாமல், அடுத்த தலைமுறை பற்றி மட்டும் சிந்திக்கின்ற பொது நலவாதிகளாக இரண்டு அணி சகோதரர்களும் இருக்க முன்வர வேண்டும் என்று தாய்க் கழகத்தின் பாசத்-தோடு, பரிவோடு, கவலையோடு இதை ஒரு பிரார்த்-தனை வேண்டுகோளாக முன் வைக்கிறோம், துணிச்சலுடன் எதிர்காலம் கருதி நல்லமுடிவு எடுங்கள்
தமிழின மக்கள் பேராதரவு என்ற குடை உங்களுக்குத்தானே வந்து நிற்கும் என்று இன்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்குமுன் தனது 54 ஆம் அகவையிலே எடுத்து வைத்த இனமானச் சிந்தனைத் தலைவராக விளங்-கியவர்-தான்- _ இன்றைய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள். அந்தச் சிந்தனை அவரை விட்டு அகன்றதில்லை திராவிட பார்முலா என்ற ஒன்றைக்கூட அறிமுகப்படுத்-தினார்.

1993 அக்டோபரில் தி.மு.க.வில் மற்றொரு பிளவு வை. கோபால்சாமி அவர்களை மய்யப்படுத்திய பிளவு; அது.

உடல் நலம் நலிவுற்றிருந்த நிலையிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் ஓடோடிச் சென்று வைகோவைச் சந்தித்து சமரசம் செய்கிறார். திமுக தலைவர் கலைஞர்அவர்களிடம் வேண்டுகோள்களை முன் வைத்தார். எல்லோரையும்விட இயக்கம் முக்கியம்; இயக்கத்தைவிட (மக்கள்) இனம் முக்கியம். எத்தரப்பிலும் ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகள்பற்றி மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று பதறப் பதற வேண்டுகோள் விடுத்தார். (விடுதலை 9.10.1993)

பரஸ்பர குற்றச்சாற்றுகள் மற்றும் பதில்கள் இவைகளுக்கு இதுவா நேரம்? திராவிடர் கழகம் தி.மு.க.வின் தாய்க் கழகம் என்ற பாசத்துடன் எப்போதும் பிரச்சினையை அணுகும் உரிமை நமக்கு உண்டு என்பதாலும், மற்றவரைவிட லட்சியத்தில் மிகவும் அருகில் உள்ள தமிழ் இனவுணர்வு பாசறை அது என்பதாலும் அதற்கு ஏற்படும் சங்கடமும் நமக்கு ஏற்படும் சங்கடம் என்று தாய்க் கழகத்தின் தசை ஆடியதை, குருதிக் கொத்தளித்ததை இந்த எழுத்துகள் மூலம் வெளிப்படுத்தினார்; தமிழர் தலைவர் என்பதற்கு பொருத்தமான நம் தலைவர் கண்ணியக் குறைவாகப் பேசுவது, கொடும்பாவிகளைக் கொளுத்துவது - _ இவற்றைக் கைவிடுங்கள், கை-விடுங்கள் என்று கண்ணீர் மல்க அறிக்-கைவிட்டார்.

தந்தை பெரியார் அவர்கள் சிந்தனை ஊற்றில் பூத்த மலர் அல்லவா - _ அதனால் தான் அந்தப் பதைபதைப்பும் இனமானத் துடிதுடிப்பும்!

உறவுள்ள ஒர் இயக்கம் உரிமையோடு கேட்கிறது என்ற நிலையை முக்கியமான இடங்-களில் எல்லாம் எடுத்தவர் இவர்.

1997 ஜூலை தென் மாவட்டங்களில் முக்குலத்தோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் ஜாதிக் கலவரம் கொலைகள், தீயிடல்கள், சூறை-யாடல்கள் என்று மனிதத் தன்மைக்கு எதிரான கோரத்தாண்டவங்கள்.
அந்தக் கால கட்டத்திலும் கம்பீரமாகக் குரல் கொடுத்தவர் ஆசிரியர்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் ஆனாலும் நாம் அனைவரும் ஒரு மண்ணின் மைந்தர்கள் என்ற உணர்வினை ஊட்டியாக வேண்டும். கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகை உணர்ச்சிப் பேயை விரட்டியாக வேண்டும் (விடுதலை 20.7.1997) என்று அறிக்கை வெளியிட்டார்.
அத்துடன் நிற்கவில்லை அதனோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கவும் இல்லை.

நமது இயக்கம் _ திராவிடர் கழகம்கூட இந்த இரு சாராரின் பிரச்சினைகளையும், பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து, தக்க சமரசம் கண்டு, அனைத்து மக்களையும் காப்பாற்ற என்றென்றும் சித்தமாக உள்ளது. எங்களுக்கு ஓட்டு அரசியல், பதவி அரசியல் கண்ணோட்டம் இல்லை. எனவே எந்த சந்தேகப் பார்வையும் இன்றி இரு சகோதரர்களும் ஒப்புக் கொண்டால், நாங்கள் என்றென்றும் அதற்குத் தயாராக உள்ளோம்.

எங்களின் உள்ளத்தில் வடியும் இரத்தக் கண்ணீரை அதன் மூலம் துடைத்துக் கொண்ட ஆறுதல் எங்களுக்குக் கிடைக்கும் என்பதைத் தவிர எங்களுக்கு இதனால் வேறு சுயநலம் லாபம் இல்லை! சகோதரர்களே, தாராள மனதுடன் முன் வாருங்கள் என்று இருகரம் நீட்டினாரே!

முசுலிம்லீக் அமைப்பில் நாவலர் அப்துல் சமது அவர்களுக்கும், பன்மொழி புலவர் அப்துல் லத்திப் அவர்களுக்குப் பிளவு ஏற்பட்ட அமைப்பும் இரண்டாகச் சிதறிய தருணத்தில் தொடக்க முதல் அதனை இணைத்து வைக்க இன்முகம் காட்டியவரும் மானமிகு வீரமணி அவர்களே!

இணைப்பு ஏற்பட்ட நிலையில், அப்துல் சமது அவர்கள் முதலில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததும் தமிழர் தலைவர் அவர்களிடத்தில்தான்.

அரசியலைத் தூக்கி எறிந்து தமிழர் ஒற்றுமை என்னும் பதாகையைத் தூக்கிப் பிடித்து தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்ற முழக்கங்களை மூச்சு உள்ளவரை முழங்கும் ஒரே தலைவர் _ தந்தை பெரியார் வழி வந்த தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களே!

பகுத்தறிவுப் பாதையில் திராவிடர் கழகத்தின் இன்னொரு பக்கம் பயணம் செயல் பணி என்பதும் இதுவே ! அதனை தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் வீரமணி மிகச் சரியாகவே செய்துவருகிறார்.                             

பத்திரிகைகளின் பார்வையில் நம் ஆசிரியர்





கல்கியின் கருத்து

கழகப் பொதுச் செயலாளர் அவர்களைப் பற்றி கல்கி ஏடு (24.6.1979) குளோஸ் அப் என்ற பகுதியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறது.

திரு. கி. வீரமணியிடம் சிகரெட் உட்பட எந்த வேண்டாத பழக்கமும் கிடையாது. எப்போதாவது பார்க்கும் ஆங்கில அறிவியல் படங்களைத் தவிர, சினிமா பார்ப்பதும் கிடையாது. ஈ.வெ.ரா. பெரியாரின் சுயமரியாதைப் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு அதிகாரப் பூர்வமாய்ச் சேலம் மாவட்டத்தில் 1944இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திரு. வீரமணி பத்து வயதுச் சிறுவன்.


இப்போது திராவிடர் கழகப் பொதுச் செயலாளர். மாணவப் பருவத்தில் எந்த வகுப்பிலும் முதல் அல்லது இரண்டாவது நிலையிலேயே இருப்பாராம். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் படிப்பில் சேருவதற்கு, முதல் பருவக் கட்டணம் கட்டப் பொருளாதார வசதி இல்லை. 

மிகவும் தயக்கத்துடன் பெரியாருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். எங்கோ சுற்றுப் பயணத்திலிருந்த பெரியார் குறிப்பிட்ட நாளில் பணம் கிடைப்பதற்காகத் தந்தி மணியார்டரில் ரூ. 95 அனுப்பினார். பின்னர், தேர்வில் முதலாவதாய்த் தேறித் தங்கப் பதக்கத்துடன் அய்யாவிடம் சென்று, நன்றி சொல்லப் போனபோது பெரியார் கூறியது; அப்படியா? நான் பணம் அனுப்பிச்சேனா? இருக்கலாம். மறந்து போச்சு.

இவ்வாறு கல்கி ஏடு எழுதியிருக்கிறது.


- விடுதலை, 24.6.1979

கீதையின் மறுபக்கம் நூல் பற்றி தினமனி

கி.வீரமணி எழுதிய இந்நூல் இருபது அத்தியாயங்களையும், ஏழு பின்னிணைப்பு-களையும் கொண்டுள்ளது. பாரதம் நடந்த கதையா? கீதை ஒரு கொலை நூல்தான். கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி, கீதையின் முரண்பாடுகள், விநோதக் கருத்துகள் முதலிய தலைப்புகளையும் உள்ளடக்கியது.

இராமாயணம் என்ற காப்பியம் மகா-பாரதத்திற்குப் பின் வந்தது (பாகம் 17) என்றும், ஒரே மூலமான கீதையிலிருந்து பலர், பலவகையான போதனைகளைப் பெற்றதன் காரணம் அதிலுள்ள கருத்துகள் நம்ப-முடியாத அளவிற்கு முரண்பட்டவை என்பது-தான் (பக்.40) என்றும், பக்தி நெறியை இந்து மதம் பவுத்தத்திலிருந்து எடுத்துக்-கொண்டது (பக்.57) என்றும், ஆத்மா என்-றொன்று இல்லை (பக்கங்கள் 116.131) என்றும். ஒரு புதிய புராணத்தை இயற்றுகிற யாரும் வியாசர் என்ற பெயரால் அழைக்கப்படு-வ-துண்டு (பக்.226) என்றும் பல கருத்துகள் இந்-நூலில் இடம் பெறுகின்றன.

ஆன்மீகக் கருத்துகளை ஒட்டி, தொன்று-தொட்டு இருதரப்பு வாதங்களும் இருந்து-கொண்டே வந்திருக்கின்றன. இவை மேலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும். சில சமயம் ஒரே கட்சியைச் சார்ந்தவர்களுக்-குள்-ளும் கூட சில விஷயங்களில் கருத்து வேறு-பாடுகள் எழுவதைப் பார்க்கலாம். இவர்-களுக்குப் பின் வருபவர்கள் இந்தக் கருத்-துகளை விரிவாக வாதம் செய்து. அவரவர்-கள் கருத்துகளையும் தருவார்கள். இந்த முறை-யில் தான் அறிவு வளர்ச்சி பெறுகிறது.

இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் பல மேற்-கோள்களையும், ஆராய்ச்சியாளர்கள் கூற்று-களையும், அறிஞர் பெருமக்களின் கருத்து-களையும் ஆதாரமாகக் காட்டி. சிந்தனைக்-குரிய பல கேள்விகளையும் கருத்துகளையும் மக்கள் முன் வைத்துள்ளார். அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

சி. இராமகிருஷ்ணன்
தினமணி விமர்சனம். 
8.10.1998


சாவியின் பார்வையில்

கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள். நாராயணா இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படுவார்கள்.

ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் _ தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்திரிக்குமோ, அப்படிக் காட்சி தருவார்.

பண்புப் பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம் பதமாய் இருக்கும்!

சின்னஞ்சிறு வயதில் மேடையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் இவர் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை.

கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.

(சாவி, 31.3.1985 இதழ்)

THE HINDU

தமிழர் தலைவர் பற்றி இந்து ஏட்டின் கனிப்பு


There is Justifiable euphoria in the AIADMK the Tamil Nadu Reservation Bill, which will now become an Act, but keen observers feel that the ordeals for the AIADMK Government are not yet over, in securing the interests of the backward classes on a firm basis.

The General Secretary of the Dravidar Kazhagam, Mr.K. Veeramani alone, these observers say, seems to have sensed the imminent dangers which has made him stress the need to remain wary about the next moves of the anti-reservationists while all other parties had generally welcomed the Presidential assent, and urged for a consitutional amendment to get a permanent protection.

தமிழ்நாடு இடஒதுக்கீடு மசோதா-வுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது பற்றி அ.இ.அ.தி.மு.க.வில் நியாயமான மனநிறைவோடு கூடிய மகிழ்ச்சி நிலவுகிறது. இப்பொழுது அது சட்டமாகிறது. ஆனால், பிற்படுத்-தப்-பட்ட வகுப்-பாரின் நலன்களைப் பெறுவதில், அ.இ.அ.தி.மு.க.-அரசின் இடர்-நிறைந்த முயற்சிகள் முடிந்துவிட-வில்லை எனக் கூர்மையான நோக்கர்கள் கருது-கிறார்கள்.

மற்ற கட்சிகள் எல்லாம் பொதுவாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை வர-வேற்றுள்ள நிலையில், திராவிடர் கழகப் பொதுச் செய-லாளர் திரு கி.வீரமணி மட்டும் வரக்கூடிய ஆபத்தை உணாந் துள்ளார் என்றும், அதன் காரணமாக இடஒதுக்-கீட்டிற்கு எதிரானவர்களின் அடுத்த நட--வடிக்கை குறித்து எச்சரிக்-கையாக இருக்க-வேண்டும் என்றும், அதை முறியடித்து நிலை-யான பாதுகாப்புப் பெறுவதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் இந்த நோக்கர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தி இந்து, 23 ஜூலை 1994

Thursday, December 24, 2009

பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்!


பார்ப்பன வீடுகளில் பெண்கள் பெரியார் படத்தை வைக்கவேண்டும்! பெரியார், அண்ணா ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபார லேபிள்
ஆசிரியருக்கும், கலைஞருக்கும் - பெரியார் அண்ணா குருதி ஓட்டத்தில் கலந்தது!

சென்னை, செப். 24_ பார்ப்பனப் பெண்கள் தங்கள் வீடுகளில் பெரியார் படத்தை மாட்டி வைக்க வேண்டு-மென்று பேராசிரியர் சுப.வீர-பாண்-டியன் பேசினார். ஜெயலலிதாவுக்கு அரசியல் வியாபாரம் நடத்தி அண்ணா, பெரியார் பெயரை லேபிளாகப் பயன்படுத்துகிறார். ஆசிரியர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் பெரியார், அண்ணா என்பது அவர்-களுடைய குருதி ஓட்டத்தில் கலந்த ஒன்று என்று உயர்கல்வித் துறை அமைச்-சர் க.பொன்முடி கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.க. சார்பில் திருவல்லிக்கேணியில் 18.9.2009 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சுப.வீரபாண்டியன்
இந்நிகழ்ச்சியில் திராவிட இயக்கத் தமிழர்-பேரவை பொதுச் செய-லாளர் சுப.வீரபாண்டி-யன் ஆற்றிய உரை வருமாறு:
இங்கே நமது திராவிடர் கழக பொதுச் செய-லாளர் கவிஞர் கலி.-பூங்குன்றன் அவர்கள் பேசும்பொழுது இந்த திருவல்லிக்கேணி பகுதி திராவிட இயக்க முதல்-விதை விதைத்த மண் என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். செப்டம்-பர் மாதம் என்று சொன்-னால் அது தந்தை பெரி-யார் பிறந்த நாளான செப். 17ஆம் தேதியும், செப். 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் என்பதுதான். நமக்கு ஞாபகம் வரும்.
செப்டம்பர் 5ஆம் தேதி
செப்டம்பர் 5ஆம் தேதி என்றால் அது டாக்டர் ராதாகிருஷ்-ணன் பிறந்த நாள். அது ஒரு முக்கிய நாள் என்று அதைத்தான் சொல்வார்-கள். தெரிந்தே நான் இதை விட்டுவிட்டேன். அதற்குக் காரணம் உண்டு. செப்டம்பர் 5ஆம் தேதி என்பது செக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி. பிறந்தநாள் என்பதை மறைத்துவிடுகிறார்கள், அவர்கள் _ பார்ப்பனர்-கள் என்பதை நாம் அறியாதவர்கள் அல்லர். திருத்தணியில் பார்ப்பன குலத்தில் பிறந்தவர் டாக்-டர் ராதாகிருஷ்-ணன். தூத்துக்குடியில் சூத்திர-னாகப் பிறந்தவர் வ.உ.-சிதம்பரனார் என்பது-தான் அதற்குக் காரணம்.
பார்ப்பனர் வீட்டில் பெரியார் படம்
நம் இனத்திற்காகவும், தமிழினத்திற்காகவும், உலக மனிதநேயத்-திற்-காகவும் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் எடுத்-துவைத்த அத்துணை கருத்துகளையும் இன்-றைக்கு உலகத்தில் உள்-ளோர் உணரத் தொடங்-கி-யிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் சமத்துவத்துடன் வாழ-வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்-திற்காகப் பாடுபட்டவர்.
பார்ப்பன பெண்கள் மொட்டை அடித்து மூலையில் உட்கார வைக்-கப்பட்ட நிலைகளை எல்-லாம் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அந்தப் பார்ப்பன பெண்-களுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எனவே, ஒவ்-வொரு பார்ப்பன பெண்-களும் அவரவர்களுடைய வீட்டில் தந்தை பெரியார் அவர்களுடைய படத்தை மாட்டி வைக்க வேண்டும்.
நவீன இந்துத்துவா
டபுள்யு.ஏ.வில்கின்சன் என்பவர் நவீன இந்துத்-துவா என்ற ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அந்த நூலை நான் தற்-பொழுது படித்துக்-கொண்டி-ருந்தேன். பல அதிர்ச்சியான தகவல்கள் அந்த நூலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது-
சதி என்கிற பெய-ராலே பெண்களை நெருப்-பிலே போட்டுக் கொன்-றார்கள். இது நெருப்-பிலே பெண்களுக்கு நடந்த கொடுமை.
அதேபோல நெருப்-பில் மட்டுமல்ல; நீரினா-லும் பெண்களுக்கு பெரிய கொடுமைகள் இழைக்கப்-பட்டி-ருக்கிறது என்பதை விளக்கியிருக்கின்றார். கங்கைக் கரையில் மிகவும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்-டிருக்கும் இடத்தில் ஈமச்சடங்குகள் நடப்பது வழக்கம்.
ஒரு குடும்பத்தில் சிறந்த ஒருவருக்கு ஈமச்சடங்கு நடத்த ஆரம்பிக்கின்-றார்கள். அப்பொழுது மிகவும் குளிர்ந்த நீரில் அந்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை கழுத்-துவரை உள்ள தண்ணீ-ரில் வலுக்கட்டாயமாக நிற்க வைக்கிறார்கள். 6 மணிநேரம் ஈமச்சடங்-குகள் நடைபெறுகிறது. அதுவரை அந்த பார்ப்-பனப் பெண் குளிர் நீரில் நடுங்கி விறைத்துப் போகிறார். பிறகு தண்-ணீரில் இருந்து மேலே வருகின்ற அந்தப் பெண்ணை ஈமச்சடங்கு நடத்துவோர் அழைத்து வருகின்றனர்_பார்ப்பனப் பெண்ணைத் தொடக்-கூடாது. ஒரு கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள்.
நூலாசிரியர் வில்கின்-சன் கங்கைக் கரையில் நேரில் கண்ட சம்ப-வத்தை அப்படியே இந்த நூலில் பதிவு செய்தி-ருக்கிறார்.
அப்படி இழுத்து வரப்பட்ட பெண் நடக்க முடியாமல் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கதறுகிறார். எந்தப் பார்ப்பனப் பெண்ணும், வயது முதிர்ந்த பார்ப்பன பெண்கள்கூட இரக்கப்-பட்டு அந்தப் பெண்ணுக்-குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. கார-ணம், அதுதான் அவர்-களுடைய கலாச்சாரம்.
ஓர் இளம்பெண் மட்டும் யாருக்கும் தெரி-யாமல் அந்தப் பெண்-ணுக்கு குடிக்க ஒரு மடக்கு தண்ணீர் கொடுக்-கிறார். போய்க்கொண்-டிருக்கிற உயிர் திரும்பி வந்ததைப்போல தண்ணீரைக் குடித்த அந்தப் பார்ப்பனப் பெண் தனக்குத் தண்-ணீர் கொடுத்த இளம்-பெண் காலிலே விழுந்து வணங்கி கதறுகிறார். நீதான் எனக்கு தெய்வம் என்ற குமுறி அழுகிறார். இது எப்படிப்பட்ட கொடுமை என்பதை பார்ப்பனப் பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அதனால்-தான் ஒவ்வொரு பார்ப்-பனப் பெண்கள் வீட்டி-லும் தந்தை பெரியாரு-டைய படத்தை மாட்-டவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
இன்றைக்கு தந்தை பெரியார் அவர்-களு-டைய கொள்கை வழியில், அண்ணா அவர்-களு-டைய கொள்கை வழியில் நின்று நமது முதலமைச்-சர் கலைஞர் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத்திக் கொண்டு வரு-கின்றார். அவரு-டைய ஆட்சிக்கு நாம் எல்-லாரும் துணை-நின்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார் சுப.வீரபாண்-டியன்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அடுத்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் ஆற்றிய உரை-யில் குறிப்பிட்ட முக்கிய செய்தி வருமாறு:
தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த-நாள், பேரறிஞர் அண்-ணா அவர்களுடைய பிறந்த நாள் திமுக பிறந்த நாள் என்று இன்றைக்கு நாடெல்லாம்_ மூலை-முடுக்குகளில் எல்லாம் முப்பெரும் விழா உற்சாக-மாகக் கொண்டா-டப்பட்டு வருகின்றது.
திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இன உணர்-வோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஏதோ ஒரு சடங்கிற்காக, சம்பிரதாயத்திற்காகக் கொண்டாடப்படுகின்ற விழாக்கள் அல்ல இவை.
சில பேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அவர்கள் கொண்டாடு-கின்ற விழா எப்படி-யிருக்கின்றது தெரியுமா? ஒரு முன்னாள் பெண் அமைச்சர் கோவிலில் வேப்பிலை ஆடை அணிந்-துகொண்டு ஆடி-யிருக்-கிறார். ஏனென்-றால், உலகத்திலேயே பெரிய இலை வேப்-பிலை பாருங்-கள். அந்த வேப்-பிலை-யைச் சுற்றிக்-கொண்டு கோயிலைச் சுற்றி ஆடிக்-கொண்டு வருகின்றார். அந்தக் காட்சியைப் பார்க்க ஒரு கூட்டம் அங்கேயும் இருந்தது. (சிரிக்க-_கை-தட்டல்)
நீங்களே புரிந்து-கொள்வீர்கள். அதே-போல அந்த அம்மா-வுக்குப் பிறந்தநாள் என்ற பெயராலே _ பிரார்த்-தனை என்ற பெயராலே மண்சோறு சாப்பிட்டவர்-களும் அவர்கள்தான்.
அண்ணா பெயரை கட்சியில் வைத்துக்கொண்டு
இப்படிப்பட்ட ஒரு கட்சியினர்தான் அண்ணா பெயரை தன் கட்சியிலும், கொடியிலும் வைத்துக்-கொண்டு அண்ணா-வையும், தந்தை பெரியா-ரையும், திராவிட என்ற பெயரையும், ஒரு லேபி-ளாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் வியா-பாரம் நடத்திக் கொண்-டி-ருக்கின்றார்கள் அந்தப் பக்த சிரோன்மணிகள். பெரியார் அண்ணா பெயரை விளம்பரத்திற்-காகப் பயன்படுத்திக்-கொண்டு வருகின்றார்கள்.
இன்றைக்குக் கலை-ஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களு-டைய கொள்-கைகளை ஆட்சியின் சட்டங்க-ளாக ஆக்கி அவருக்குப் பெருமை சேர்த்துக்-கொண்டு வருகின்றார். அதேபோல அண்ணா அவர்களது வழியில் நின்று ஆட்சியை நடத்-திக்கொண்டு வருகின்றார்.
தந்தை பெரியார் ஒரு பெரிய கூட்டத்தை சேர்த்துக் கொண்டு இயக்கத்தைத் தொடங்க-வில்லை. பிரெஞ்சுப் புரட்சியே ஒரு மாநாடு போட்டு ஆரம்பிக்க-வில்லை. ஒரு டென்னிஸ் கோர்ட்-டில்தான் தொடங்கியது.
2000ஆம் ஆண்டு-கால சமூகக் கொடு-மைகளை, அநீதிகளை அழித்து மக்களிடத்தில் ஒரு மாறுதலை ஏற்-படுத்திய-வர் தந்தை பெரியார்.
நம்முடைய முதல-மைச்--சர் கலைஞர் அவர்-கள் ஈரோட்டுக் குரு-குலத்திலே பயின்ற காரணத்தால்-தான். பாராட்டிப் போற்றி-வந்த பழைமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்-தால் இடியுதுபார்!
என்று எழுதினார்.
சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்.
தந்தை பெரியார்-அவர்கள் தனது மேடைப் பேச்சுகளால் ஒரு சமூகப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தி-யவர் என்பதை எதிரி-களால்கூட மறுக்க முடியாது.
தந்தை பெரியார் அவர்-கள் ஒரிஜினல் திங்க்கர் நமது ஆசிரியர் அவர்களைப்-போல _ எங்-களைப்போல _ சபாபதி மோகன் அவர்-களைப்-போல பட்டம் படித்த-வர் இல்லை. தந்தை பெரியார். சுயமாகச் சிந்தித்தார்.
மனிதனை நினைத்தார் - பெரியார்
இந்த நாட்டிலே ஏன் உயர்ந்த ஜாதிக்காரன் ஆதிக்கம் செலுத்த வேண்-டும்? தாழ்ந்த ஜாதிக்கா-ரன் ஏன் அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு அடிப்-படை மூலகாரணம் என்ன என்று சிந்தித்தார். கடவு-ளின் பெயரால், மதத்தின் பெயரால் இந்த நாட்டு மக்கள் அடிமைப் படுத்-தப்பட்-டிருக்கின்-றார்கள் என்-பதைக் கண்-டறிந்-தார். எனவேதான் கடவு-ளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனித-னை நினை! என்று சொன்னார்.
முதலமைச்சர் கலை-ஞர் அவர்கள் மனிதனை நினைத்த காரணத்தால்-தான் தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையிலே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு--வந்தார்.
பார்த்தசாரதி கோயிலில் நம்மவர்
இங்கே அருகேயிருக்-கின்ற பார்த்தசாரதி கோயிலில் நாளைக்கு கோயில் கர்ப்பக் கிரகத்-திற்குள் சென்று மணிய-டிக்கப் போகிறார். அப்-பொழுது கோயிலுக்கு வருகின்ற பார்ப்பனர்கள் அவர்களே சொல்லிவிடு-வார்கள். கோயிலுக்குள் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! போகாதீர்கள் என்று பார்ப்பனர்களே சொல்லிவிடுவார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள்தான் இதை விளக்கிச் சொன்னார். அந்த சமூக மாறுதல் கலைஞர் ஆட்சியில் வரப்போவதை நாம் காணத்தான் போகின்றோம்.
பெரியாரின் கனவுகள் நனவாகின்றன
தந்தை பெரியார் அவர்களுடைய கனவு-கள் எல்லாம் இன்-றைக்குக் கலைஞர் ஆட்சி-யில் நனவாகிக் கொண்-டி-ருக்கின்றன.
மத்திய அரசு நிகழ்ச்-சியிலே சரஸ்வதி வந்தனா என்ற பாடல் பாடியதற்-காக மத்திய அரசு நிகழ்ச்சியையே புறக்-கணித்து-விட்டு வெளியே வந்தவர்தான் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.
ஆனால், சென்ற அதிமுக ஆட்சி மதச்-சார்பற்ற ஆட்சியாக நடைபெற்-றதா? ஒரு அரசாங்கம் என்றால் மதச்சார்பற்ற அரசாக நடைபெற வேண்டும். மக்களை சமத்-துவமாக, சகோதரத்துவ-மாக நடத்த வேண்டும்.
அந்த அம்மையாரின் எண்ணம்
வெர்ஜின் என்றால் என்ன பொருள் என்-றால் ஆண்களோடு எந்த தொடர்பும் இல்-லாவ-ருக்குப் பெயர்தான் கன்னி என்று சொல்-லுவார்கள்.
ஆனால் அதை-விட்டு விட்டு எல்லா ஆண்-களையும் நான் சமமாகத்-தான் பாவிப்-பேன் என்று சென்ற ஆட்சியில் ஆண்டு--கொண்டிருந்த அந்த அம்மையார் சொன்-னால் அது அவருடைய சாமர்த்-தியம். (சிரிப்பு) அந்த அம்மாவுக்கு அண்ணா-வையும் தெரி-யாது, பெரி-யாரையும் தெரியாது. மதச்சார்பற்ற தன்மையும் தெரியாது. எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
சிணீமீ வேறு; சிறீணீ வேறு. ஜாதி என்பது மிகப்பெரிய போராட்-டம் கொண்-டது. மிகக்-கொடி-யது என்று ஏசியன் டிரா-மாவில் எழுதிய நோபல் பரிசு பெற்ற குன்னர்-மிர்தால் விளக்கம் சொன்-னார்.
அரசியல் வியாபா-ரம் இன்றைக்கு அதிமுக என்ற ஒரு கட்சி அண்ணா பெயரை சொல்லிக்-கொண்டு _ தந்தை பெரி-யாரை லேபிளாக வைத்துக் கொண்டு _ அதைப் பட-மாக கொண்டு அரசியல் வியாபாரம் செய்து-கொண்டி-ருக்கிறார்கள்.
தந்தை பெரியார்-_அண்ணா கொள்கை-களை இளைய தலைமுறை-யினருக்குப் போதிக்க வேண்டும் என்பது ஆசிரி-யர் அவர்களுக்கும், கலைஞர் அவர்களுக்கும் குருதி ஓட்டத்திலே கலந்து ஒன்று.
அதனால்தான் வரும் 26ஆம் தேதி நமது ஆசிரி-யர் அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதும், முதல-மைச்சர் கலைஞர் அவர்-களுக்கு அண்ணா விருதும் காஞ்சிபுரத்தில் நடை-பெற-விருக்கின்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா--வில் வழங்கப்பட-விருக்-கின்றன. இவ்வாறு உரை-யாற்றி-னார் அமைச்சர் க.பொன்-முடி அவர்கள்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...