Total Pageviews

Friday, September 30, 2011

தேவை - புதுமைப் பெண்ணல்ல - புரட்சிப் பெண்!


தேவை - புதுமைப் பெண்ணல்ல - புரட்சிப் பெண்!


நல்ல சேதிதான். பெண் களுக்கு எதிரான குற்றங் கள் குறைந்துள்ளன என்பது ஒரு நல்ல சேதிதான்.
பொதுவாக பெண்கள் என்றால் பலகீனமானவர் கள் என்ற ஒரு கருத்து உண்டு. எதில் பலகீனம்? அறிவிலா? ஆற்றலிலா? அதெல்லாம் கட்டுக்கதை. தன்னந்தனியாக வாலண் டினா விண்ணில் பறந்து சாதனை படைக்க வில்லையா?
அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்கு? என்று சொன்னது அந்தக் காலம். பெண்களுக்குக் கல்வி கற்க வாசல் திறந்து விடப்பட்டதும் தேர்வுகளில் மாணவர்களைப் பெண்கள் விஞ்சி விட்டார்களே!
தசைப்பலம் (Muscle Power) என்ற ஒன்றில் மட்டும் பெண்கள் ஆண்களைவிட பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என் பது வேண்டுமானால் சிறிது உண்மையாக இருக்கலாம்.
அதற்குக் காரணம் பழைய தலைமுறைகள் தான். அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தது தான்.
பெண்கள் குதித்து விளையாடினால்கூட தடிப்பையனா நீ? பெண் ணென்றால் அடக்கம். ஒடுக்கம் இருக்க வேண் டாமா? என்று சொல்வது கூட பெரும்பாலும் ஆண் கள் அல்லர் - பெண்கள் தான்.
பெண்களுக்குக் குஸ்தி மேல் குத்து போன்றவற் றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதை நினை வில் கொள்க!
இத்தகு சமூக சூழலில் பெண்கள் உடல்பலம் குன் றியவர்களாக இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? மூளைபலமாக இருந்தால் உடல் பலமும் கூட கூடிய வாய்ப்பு உண்டு. மூளையில்தான் ஒடுக்கும் ஆண்கள் என் னும் விலங்கு மாட்டப்பட் டுள்ளதே!
பெண் வீட்டார்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற நிலை எப்பொழுது வந்தது? ஆரியக் கலாச்சாரம் தலை தூக்கிய நிலையில்தானே?  வரம், தட்சணை என்ப தெல்லாம்கூட தமிழ்ச் சொற்கள் அல்லவே!
கல்வியோடுகூடிய, தன்னம்பிக்கைப் பயிற்சி கள், உடற்பயிற்சிகள் (கராத்தே முக்கியம்) பெண் களுக்குக் கொடுக்கப்பட் டால் ஆண்களின் தசைப் பலம் தோல்விப் படலமாக மாறி விடுமே! பெண்கள் தயாராகி விட்டார்கள் என் கிற ஒரு நிலை அரும் பினாலே போதுமானது. ஆண்கள் வாலைச் சுருட் டிக் கொள்ள மாட்டார்களா?
பெண்களுக்கு எதிரான வழக்குகள் 2005இல் 5791; 2011ஆம் ஆண்டிலோ அது 4036 ஆகக் குறைந்து போய்விட்டது.
இது வரவேற்கத்தக்க நிலை என்றாலும், பாதிக் கப்பட்ட பெண்களில் எத்தனைப் பேர் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் துணிவில் உள்ளனர் என்பதும் கேள் விக்குறிதான். குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற ஒரு அருமையான சட்டம் அய்க் கிய முற்போக்குக் கூட் டணி ஆட்சியில் இயற்றப் பட்டது.
பெண்ணுரிமை வரலாற் றில் நிச்சயமாக இது ஒரு மைல் கல்லே!
இதைக்கூட நல்ல வகை யில் நடுவண் அரசு பிரச் சாரம் செய்ததில்லையே!
பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் இலக் கியவாதிகள், கருத்தாளர் கள்கூட பாரதியாரைப் பற்றிப் பேசுவார்களே தவிர, புரட்சியாளர் தந்தை பெரி யார் பற்றிப் பேசுவதில் லையே! திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொல் வதுபோல பாரதியார் காண விரும்பியது புதுமைப் பெண் என்றால், தந்தை பெரியார் காண விரும்பி யது புரட்சிப் பெண்ணா யிற்றே!
இப்பொழுது தேவை புரட்சியே தவிர, புதுமையல்லவே!
(குறிப்பு: வாச்சாத்தி வழக்குபற்றி நாளை தலை யங்கம்

சோதிடப்புரட்டும் கிரகங்களும்


சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்து பலாபலன் சொல்லப்படுகிறது!
சூரிய வட்டத்தில் எந்தெந்தக் கிரகம் எந்தவிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் சோதிடம் கணிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, டில்லிக்குப் பக்கத்தில் வடக்கே இருப்பதாகவும், பம்பாய் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருப்பதாகவும் கூறுவது போலத்தான் சோதிடத்தில் கிரகங்கள் இருக்குமிடம் சொல்லப்பட்டிருக்கிறது!
சூரியனுக்குப் பக்கத்திலே இருக்கும் புதன் கிரகத்தை செவ்வாய் கிரகத்திற்கு பக்கத்தில் இருப்பதாகவும், சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் வெள்ளி கிரகத்தை 5ஆவதாக இருக்கும் வியாழன் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும் இப்படி ஒரே குழப்பமாக கிரகங்களின் வரிசையை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று கூறினால் அதைக் கேட்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா!
அறிவியல்படி சூரியனிலிருந்து கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று இருப்பதை சோதிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மிகப் பெரிய தவறை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பொய் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் நம்பினார்கள் பூமியை மய்யமாக வைத்துத் தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாக! அறிவியல் ஆய்வுக்குப்பின் அது தவறு என்று தெரிந்த பிறகாவது சோதிடர்கள் திருத்திக் கொள்ள வேண்டாமா? எனவே சோதிடம் என்பது தவறான அடிப்படையில் தவறாக கணிக்கப்பட்டு பொய்யும் புரட்டும் இணைக்கப்பட்டு கூறப்படுவதுதான் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்!
பூமியின் துணைக் கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள் 2, வியாழனின் துணைக் கோள் 16, சனியின் துணைக்கோள் 22, இவை சோதிடத்தில் சேர்க்கப்படவில்லை! அக்கால சோதிடருக்கு இந்த துணைக்கோள்கள் தெரிந்திருக்கவில்லை! அவர்களுக்கு தெரிந்திருந்த அரைகுறையான வானவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்க்கையின் முழுமையையும் கூறிட முடியும் என்று நம்ப வைத்து வருகின்றனர்!
ஒரே ஒரு மூலிகையைக் கொண்டு மனிதனின் அத்தனை நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறும் ஏமாற்றுக்காரனைப் போல், அறிவியலுக்குச் சம்பந்தமில்லாத சோதிடத்தால் மனித வாழ்வின் பிரச்சினைகளை எல்லாம் அறிந்து தீர்த்து வைக்க முடியும் என்று சோதிடர்கள் கூறி வருகிறார்கள். இருவரும் ஏமாற்றுக்காரர்களே!
வேத காலத்திலேயே சோதிடம் இருப்பதாகக் கூறுகிறார்களே அவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை கூறி வருவது இந்த சோதிடம் மட்டும்தானே! அன்று சொன்னதைத்தானே  இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! வேதத்தையும், சோதிடத்தையும் அதன் கணிப்பையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு எதையாவது செய்ததுண்டா! பழைய சோதிடத்தை வைத்து ஏமாற்றுவது தானே உங்கள் வேலையாக இருக்கிறது. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்! மேல் நாட்டினர் புதிது புதிதாக வானவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து வருகிற போது இந்த வேதகாலச் சோதிடர்கள் ஒரு கண்டுபிடிப்பைக் கூட செய்யவில்லையே!
மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஹால், கலிலியோ, பர்னால்டு, பெரைன், நிக்கோல்சன், ஹெர்ஷ்செல், கேசினி மற்றும் பல விஞ்ஞானிகள் 1610ஆம் ஆண்டிலிருந்து புதிய துணைக் கோள்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
2008ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஒன்றான டைட்டானில் பூமியில் கிடைக்கும் எண்ணை வளம் போல அங்கு திரவ வடிவமான ஹைட்ரோ கார்ப்பன்கள், மீத்தேன், ஈத்தேன் உருவில் கிடைக்கின்றன! இவ்வாறு வானவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சோதிடர்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அறிவியலை நம்பாத மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அறிவியலை ஏற்று மக்கள் விழிப்படைய வேண்டும்.
- சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும்
கவிஞர் தி.பொன்னுசாமி, தூத்துக்குடி

புத்தர் யார்?


புத்தர் என்றால் என்ன? உங்களுக்கு தெரிய வேண்டும். ஈரோட்டில் நடந்த புத்த மாநாட்டில் திரு.மல்லல சேகரா விளக்கமாக எடுத்துச் சொன்னார். உலக புத்த சங்கத் தலைவர் அவர். அவர் வந்து எடுத்துக் கூறியபிறகுதான் நாமும் தைரியமாக ஓங்கி அடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. புத்தன் என்று ஒருவர் இருந்தது கிடையாது. சித்தார்த்தன் என்று ஒருவர் இருந்திருக்கிறார். சித்தார்த்தன்தான் தன் புத்தியைக் கொண்டு ஆராய்ந்து, அதனால் புத்தர் ஆனார். இது மல்லல சேகரா சொன்னது. புத்தர் என்றால் அறிவாளி என்றுதான் பெயர்.
ஆங்கில பேரகராதியில் என்சைக்ளோ பீடியா அதாவது 60, 70 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த அகராதியில் பார்த்தால் புத்தன் என்றால் புத்தியை அடிப்படையாக கொண்டவன்: அறிவை அடிப்படையாக கொண்டவன், அறிவன் என்றுதான் அர்த்தம் இருக்கிறது. இன்றும் தமிழ் நிகண்டில் பார்த்தாலும், புத்தியை ஆதாரமாக கொண்டவன் புத்தன்: புத்திக்கு ஆதாரமாகத் தோன்றுகின்ற உண்மைகள்தான் புத்தம் என்று இருக்கிறது. ஈரோடு புத்த மாநாட்டில் பாலி வார்த்தையில் உள்ள சுலோகங் களைச் சொல்லி எடுத்துக் காட்டிய போது பெரிய அதிசயமாக இருந்தது.
புத்தமதம் என்பதிலும் ஒன்றைச் சொல்லி அதை நம்பித்தான் ஆக வேண்டும் என்ற கட்டுத்திட்டம் இல்லை. மல்லல சேகரா இதை விளக்கமாக சொன்னார். புத்த மதத்தில் சித்தார்த்தர் என்பவர் சொன்னதாக எதுவும் இல்லை. இப்போது குரான் என்பது நபிகள்நாயகம் பல சந்தர்ப்பங்களில் பல பேரிடம் சொன்னதைப் பலபேர் கேட்டுக் கொண்டிருந்ததை எழுதினார்கள். அப்படி எழுதியதைக் கடைசியாக ஒத்துப்பார்த்தால் சரியாக இருந்தது என்று சொல்லுகிறார்கள். அதுபோலப் புத்தன் யாரிடம் என்ன சொன்னான்என்று சொல்ல முடியுமா? புத்த மதத்தில் சொல்லுவது எல்லாம், அம்மா சொல்லுகிறாள் என்பதற்காக நம்பாதே; அப்பா சொல்லுகிறார் என்பதற்காக நம்பாதே; நீண்ட நாள்களாக நடந்து வருகிறது என்பதற்காக நம்பாதே; சாத்திரம் சொல்கிறது, வேதம் சொல்கிறது, அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்பாதே; உன் அறிவுக்கு ஆதாரமானதைப் பொருத்தமானதை நம்பு இதைத்தான் இன்று நாம் சொல்லி வருகிறோம். இதைச் செய்ய இந்து மதத்தைவிட்டு வெளியேறித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இருக்கிறது?
(வேலூர் நகராட்சியில், 28.10.1956இல் தந்தை பெரியார் சொற்பொழிவு - விடுதலை 7.11.1956)

ஏழு வருடம் தண்டனையாம்!


ஏழு வருடம் தண்டனையாம்!


உச்சநீதிமன்றத்தில் நீரோமன்னன் என்று அழைக்கப்பட்ட குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி புதிய சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளார். புதிய சட்டத் திருத்தத்தின்படி குஜராத் மாநிலத்தில் பசுவைக் கொன்றால் ஏழு வருடம் தண்டனை விதிக்கப்படும்.
பசுக்கள், காளைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல, முறையான அமைதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் கொண்டு செல்ல முடியாது. இதற்கு அனுமதி வழங்க தனி அமைப்பு உருவாக்கப்படும். விவசாய பயன்பாட்டுக்குத் தவிர மற்ற காரணங்களுக்குக் கொண்டு செல்ல முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இதை மீறி யாராவது பசுக்களையோ, காளைகளையோ கொண்டு செல்லுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குஜராத் சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
மோடி ஆளும் மாநிலத்தில் பசுக்களைக் கொன்றால்தான் குற்றமே தவிர மனிதர்களைக் (குறிப்பாக சிறுபான்மை இன மக்களை) கொன்றால் குற்றம் கிடையாது. 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்களே - இதுவரை தண்டனை கிடையாதே! நர வேட்டையை பின்னணியில் இருந்து இயக்கிய நரேந்திரமோடி எதுவும் நடக்காதது போல ராஜ நடை போட்டுத் திரிகிறாரே! அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் என்று பாரதீய ஜனதாவால் முன்னிறுத்தவும் படுகிறாரே!
பிரதமர் பதவிக்கு இவரை எதிர்த்து நிறுத்தப்படுபவர் - இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கொன்ற வராக இருக்கவேண்டும் போலும்!
உணவு பழக்கம் என்பது தனி மனிதனைப் பொறுத்தது. இதைச் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என்று கூறுவதற்கு இவர்கள் யார்?
பசு - கோமாதா - பசுவின் உடலில் லட்சுமி வாழ்கிறாள் என்று இவர்களே எழுதி வைத்துக் கொண்டு மற்றவர்கள்மீது திணிப்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?
எருமை மாட்டை வெட்டலாம்; ஆட்டை வெட்டலாம். ஆனால் பசுவை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது இவர்களின் இந்துத்துவா கொள்கை! இந்துத்துவாவை மற்றவர்கள்மீது, கிறித்தவர்கள்மீது, முசுலிம்கள்மீது, மதச்சார்பற்றவர்கள்மீது திணிக்கலாமா?
இந்தக் கூட்டம் ஆட்சிக்கு வருவது எவ்வளவுப் பெரிய ஆபத்து என்பது விளங்கவில்லையா? அனைவருக்கும் உண்ண உணவுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாத ஆட்சியாளர்கள், உணவு உண்ணுவோரின் கையைத் தட்டி விடலாமா?
மக்களுக்கு ஒரு வகையான மலிவாகக் கிடைக்கும் சத்துணவு மாட்டுக்கறிதானே? பசுவின் மீது இரக்கப்படும் இந்த ஷைலக்குகள், மனிதர்கள்மீது இரக்கப்படாதது - ஏன்? ஆம், மதம் அத்தகைய மிருக உணர்வைத்தான் உற்பத்தி செய்யும்; மனித உணர்வுகளை மரித்துப் போகச் செய்யும்.
இந்து மதத்தை அமெரிக்காவுக்கே சென்று பரப்பிய பிதாமகன் என்று விவேகானந்தரை சொல்கிறார்கள் அல்லவா!
அந்த விவேகானந்தரை பசு பாதுகாப்புச் சங்கத்தின் பிரசாரகர் ஒருவர் நேரில் சந்தித்து ஒரு வெளியீட்டைக் கொடுத்தார் - அப்பொழுது இருவர்க்குமிடையே நடந்த உரையாடல் முக்கியமானது.
சுவாமிஜி: உங்கள் சங்கத்தின் நோக்கம் என்ன?
பிரசாரகர்: நாங்கள் கசாப்புக்காரரிடமிருந்து கோமாதாவைக் காப்பாற்றுகிறோம்.
சுவாமிஜி: உண்மையில் இது நல்ல காரியம்தான் இந்தச் செலவிற்கு உங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரியவர்கள் கருணையுடன் தரும் நன்கொடைகளால்தான் இந்தக் காரியங்கள் சிறப்பாக நடக்கின்றன.
சுவாமிஜி: மத்திய இந்தியாவில் இப்பொழுது பயங்கரமான பஞ்சம் மக்களை வாட்டுகிறதே! அந்தப் பஞ்சத்தில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் செத்துப் போனதாக இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கிறதே, உங்கள் சங்கம் இந்தப் பஞ்சத்தில் மக்களைக் காப்பாற்ற ஏதாவது செய்ததா?
பிரசாரகர்: நாங்கள் இது போன்ற பஞ்சங்களிலும், துன்பங்களிலும் உதவுவதில்லை; இந்தச் சங்கம் பசு மாதாவைக் காப்பாற்றுவதற்கு மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது.
சுவாமிஜி: இந்தப் பஞ்சத்தில் உங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் சாவின் கொடிய பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். வசதி இருந்தும், அவர்களுக்கு உணவு கொடுத்துக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை என்பதை நீங்கள் நினைக்கவில்லையா?
பிரசாரகர்: அதை நாங்கள் செய்ய வேண்டியதில்லை. இந்தப் பஞ்சம் அவர்களின் கர்மத்தின் விளைவாக, பாவங்களின் விளைவாக வந்திருக்கிறது. கர்மம் எப்படியோ அப்படியேதான் பலனும்.
இப்படி உரையாடல்கள் தொடர்கின்றன.
பசு நமது அன்னை என்று பிரசாரகர் சொன்னபொழுது விவேகானந்தர் சொன்னார்:
ஆமாம் பசு நம் தாய்தான்; பசுதான் நம் அன்னை என்பது எனக்கு இப்போது புரிகிறது. இல்லையென்றால் நம்மைப் போன்ற இவ்வளவு அறிவு நிறைந்த பிள்ளைகளை வேறு யார் பெற முடியும்? - என்றார் கேவலமாக, கிண்டலாக.
(ஆதாரம்: சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் வெளியிட்ட - விவேகானந்தரின் ஞானதீபம் சுடர் தொகுப்பு)
இந்து மதத்தின் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவராக கூறப்படும் விவேகானந்தரின் இந்தக் கருத்துப்பற்றி மோடி முதல் ராமகோபாலன் வரை என்ன கருத்துக் கொண்டிருக் கிறார்கள்? இதற்குப் பதில் சொல்லி விட்டு பசுவதைத் தடுப்புச் சட்டம் செய்யலாமே!

வரவேற்கத்தக்க தீர்ப்பு! வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமை 269 பேர்களுக்கும் சிறைத் தண்டனை
தர்மபுரி, செப்.30- வாச் சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்குப்பிறகு தர்மபுரி நீதிமன்றத்தில் இந்த பரபரப்பான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. விவரம் வருமாறு:- தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையி னருக்கு புகார் சென்றது.
இதையடுத்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவினர் 1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார் கள். இந்த சோதனையில் வனத் துறையை சேர்ந்த 154 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 109 பேரும், வருவாய்த்துறையை சேர்ந்த 6 பேரும் பங்கேற்றனர். இந்த கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினார்கள். கிராமத்தில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது வாச்சாத்தி கிரா மத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவினர் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) மற் றும் வன்கொடுமைக்கு உள் ளாக்கியதாக, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிருவாகிகள் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தின் தென் மண்டல ஆணை யர் பாமதி தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.அய். விசாரணை

பாதிக்கப்பட்டோர் தரப் பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1996-ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு மாற்றப்பட் டது. சி.பி.அய். அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை நடத்தினார்கள். 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.அய். தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசா ரணையை விரைவுபடுத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி, வாச்சாத்தி வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு உயர்நீதி மன்ற நீதிபதி குமரகுரு முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் 215 பேர் விசாரணைக்கு ஆஜ ராகி வந்தனர்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை கடந்த 26-ஆம் தேதி நடந்தது. வழக்கில் தொடர்புடையவர்களில் 3 பேர் அன்று ஆஜராகாததால், பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு 29-ஆம் தேதி (நேற்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை யடுத்து பிடிவாரண்டு பிறப் பிக்கப்பட்ட 3 பேரும் தர்மபுரி நீதிமன்றத்தில் சரண் அடைந் தனர். பரபரப்பாக எதிர்பார்க் கப்பட்ட இந்த வழக்கில்,  குற்றம் சாட்டப் பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி குமரகுரு தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் மாலையில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த 215 பேருடைய வருகை சரிபார்க்கப் பட்டது. பின்னர் அவர் கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களுக்கு எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், தண்டனை தொடர்பாக, அவர் களுடைய கருத்துகள் கேட்கப்பட்டது. அப் போது குற்றம் சாட்டப் பட்டவர்களில் சிலர் குற்றம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்று தெரிவித்தனர். பலர் அரசு பணிக்காக சம்பவ இடத்திற்கு சென்றதா கவும், மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரி வித்தனர். சிலர் குறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரி வித்தனர்.

குற்றம் சாட்டப்பட் டவர்கள் தரப்பை சேர்ந்த வழக்குரைஞர் பேசுகை யில், ``குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் அரசு ஊழியர்கள். ஏற்கனவே, நீண்டகாலமாக நடந்து வரும் இந்த வழக்கால், பலர் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல் வேறு பயன்கள் கிடைக் காமல் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே, அவர் களுடைய குடும்பத்தி னரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். குற்றம் சாட்டப் பட்ட வர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பை சேர்ந்த வழக்கு ரைஞர்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, மாலை 4 மணிக்கு தண்டனை விவரத்தை அறிவித் தார். தண்டனை பெற்ற வர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் காவல் துறையை யும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்த வர்கள்.

இவர்களில் அரு ணாச்சலம், ஆறு முகம், ராஜகோபால், ராஜமாணிக்கம், கோவிந்தன், ரத்தின வேலு, வேடியப்பன், சிதம்பரம், எம்.பெரு மாள், அழகிரி, காளி யப்பன், ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு பாலியல் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை யும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அப ராததொகையை கட் டத்தவறினால் கூடுத லாக 9 மாத சிறை தண்டனை அனுப விக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டது. பெரியநாயகம், பச்சியப்பன், பெரு மாள், பழனி, மாதை யன் ஆகிய 5 பேருக்கு வன் கொடுமை சட் டத்தின்படி 7 ஆண் டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அப ராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயி ரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என் றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.அய்.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என் றும் தீர்ப்பில் குறிப் பிடப்பட்டு உள்ளது. 7 முதல் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்ட 17 பேரும் உடன டியாக காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டனர். பின்னர் காவல்துறை பாதுகாப் புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஓராண்டு முதல் மூவாண்டுவரை தண்டனை

இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக் கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத் தல், கலகம் விளை வித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள் பட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண் டுகள் வரை சிறை தண் டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப் பட்டது. தண்டனை அடைந் தவர்களில் எம்.அரிகி ருஷணன், பி.முத் தையா, எல்.நாதன், பாலாஜி ஆகிய 4 பேர், அய். எப்.எஸ். அந்தஸ்து உள்ள வனத்துறை உயர் அதி காரிகள் ஆவர். அவர்கள் 4 பேருக்கும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தீர்ப்பை அறிய ஏரா ளமான மலைவாழ் மக் களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். இத னால் அங்கு பாதுகாப் புக்காக ஏராளமான காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு இருந் தனர்.

Thursday, September 29, 2011

மேனாள் இந்தியப் பிரதமர் நேரு பார்வையில்...


வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வாசித்த நேரு, மேட்டுக்குடியில் பிறந்த கோமகன்.  இந்தியத் நாட்டின் முதல் பிரதமர் என்னும் பெருமைக்கு உரியவர். 

தமது உடல், பொருள், ஆவி என அனைத் தையும் நாட்டுக்கு அர்ப்பணித்த பெரு மகன்.  தன் இறப்பிற்குப் பின்னரும் தனது சாம்பலை இந்திய மண்ணிற்கு எருவாக்கிய ஏந்தல்.  இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் ஒருமிக்க நேசித்தவர்.  குழந்தைகள்பால் பேரன்பு கொண்டவர்.  நேரு மாமா என்று அன்புடன் குழந்தைகளால் கொண்டாடப் பெற்றவர். 

ரோஜா மலரின் ராஜா, ஒரு நாளில் 20 மணி நேரம் நாட்டு வளர்ச்சிக் காகவும், 3 மணி நேரத்தை புத்தகங்கள் படிப்பதற்காகவும் செலவிட்ட மாமனிதர்.  இலக்கியம், செய்தித்தாள்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்.  வாழ்க்கை வரலாறு, இந்தி யாவைக் கண்டறிந்தேன் போன்ற நூல் களை இந்த மண்ணிற்கு அளித்தவர்.  நாட்டு மக்களால் மனிதருள் மாணிக்கம் என்று வாயாரப் புகழப் பெற்றவர்.  நேரு  வாழ்வில் உயர்வதற்கு முக் கியக் காரணமாக அமைந்தது அவரது படிப்பே ஆகும்.

ஒரு சமயம் பண்டித நேரு அவர்கள் தனது அலுவல் அறைக்கு மின்தூக்கி (லிப்ட்) வழியாகச் சென்றார்.  மின்தடை கார ணமாக அவர் ஏறிச்சென்ற மின்தூக்கி பாதி வழியிலேயே நின்றுவிட்டது சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது.  அவர் வெளியே வந்தார்.  அங்கு பதற் றத்துடன் நின்றிருந்த அலுவலர்கள் அய்யா!  இடையில் இடையூறு ஏற்பட்ட தற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் என் றனர். 

அவரோ தனக்கே உரிய புன்ன கையுடன் நீங்கள் நினைத்த மாதிரி எனக்கு எந்த இடையூறும் ஏற்பட வில்லை. காரணம் என் கையில் அற்புத மான நூல் ஒன்று இருந்தது.  அந்த நேரத்தில் அந்த நல்ல நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன் என்று கூறினாராம்.  இக்கட்டான நேரங்களில்கூட நமக்குத் துணை நிற்பன நல்ல நூல்களே என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே? 

நூலகம் செல்லுங்கள், நல்ல நூல்களைத் தேடிப் படியுங்கள். 

படிப்பதற்கு நேரம் இல்லையே என்று கவலைப்படாதீர்கள், நேருவைப் போன்று கிடைக்கும் நேரத்தைப் புத்தகங்களைப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகத்சிங்கின் படிப்பாசை


தூக்கிலிடப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்னர் மாவீரன் பகத்சிங்கிடம் அவரது இறுதி ஆசை என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்த மாவீரன் அளித்த பதில்: நான் மாமேதை லெனின் அவர்களின் வரலாற்றைப் படித்துக் கொண்டு இருக் கிறேன். அதை முடிக்க விரும்புகிறேன் என்றாராம்.

உயர்ந்த நூல்கள் உங்களுடன் பேசும், உறவாடும், உங்களைக் கண்டுபிடித்து வாழ்க்கைப் பாதையில் அழைத்துச் செல்லும், போகும் வழியில் கிடக்கும் கல்லையும் முள்ளையும் நமக்குக் காட்டும். ஒதுங்கிப் போகும்படி நமக்கு உபதேசம் செய்யும். நூல்கள் படிப்பதைத் தினசரிக் கடமையாகக் கொள்வோம்.

படிப்பதற்கு நேரம் இல்லையென்று வருந்தாமல் படிப்பதற்கான நேரத்தை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்வோம்.வாழ்க்கையின் அங்கம் - வாசிப்பு என உணரு வோம். நம் பிள்ளைகளுக்கு நல்ல நூல்களைச் சேர்த்து வைத்தும் - அவற்றை வாசிக்க வைத்தும் நல்ல தாய் - தந்தையர் என்னும் போற்றுதலுக்கு ஆளாவோம்.

எலியும் தவளையும்!!!!!


எலியும் தவளையும்!!!!!


சிறு வயதில் நாம் அனைவரும் பாடிய பாட்டுத்தான் "எலியும் தவளையும்".

இன்றைய தமிழக அரசியல், எலியும் தவளையுமாகத்தான் உள்ளது!

அரசியல் என்பதே ஏமாற்றும், பொய் சொல்ல வேண்டிய, மன சாட்சியை ஒதுக்கி வைத்து விட்டு நடக்க வேண்டிய நிலை தான் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து. இது உலகெங்கும் நடக்கும் நிகழ்ச்சி தான். மிகவும் ஆதரவுடன் வெற்றி பெற்ற அமெரிக்கத் தலைவர் ஒபாமா அடுத்த தேர்தலுக்காகச் செலவு செய்யப் போவது ஆம்!  ஒரு பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். அதாவது சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

உலகெங்கும் பல ஆட்சிகள் குடியரசு ஆட்சிகள் தான் என்றாலும் மன சாட்சியை விடப் பணசாட்சி தான் ஆள்கின்றது என்பது தானே உண்மை!

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை"  என்பது இன்றைய அரசிய லில் மிகவும் உண்மை. உலக அரங்கில் பல கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் நடந்து கொண்டுள்ளது. பல நாடு களில் எதிரும் புதிருமான கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைத்து நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இங் கிலாந்து, கனடா, சில அய்ரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை உள்ளது.

தமிழகத்தைப்  பொறுத்தவரை  அண்மையில் நடந்த தேர்தலில் தமிழின உணர்வுள்ள பல கட்சிகள் " கலைஞர்" என்ற தனி மனிதர் எதிர்ப்பு என்ற உணர்ச்சியுடன் ஒரு கூட்டணி யில் சேர்ந்தனர். பல அவமானங்கள் பட்ட போதும் துடைத்து விட்டுப் பதவிக்காக எதுவும் செய்யத் தயார் என்ற மானமிழந்த நிலையில் அவர்கள் இருந்தார்கள். ஏதோ தேர்தலிலும் வென்று பதவிகளையும் பெற்றார்கள்.

ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது?  இவர்களது உழைப்பை உறிஞ்சி தூக்கியெறியப் பட்ட சக்கைகள் ஆகிவிட்டனர்.  தமிழின உணர்வு என்பது ஒழிக்கப்பட்டு "ராமா" என்று புலிக்குட்டிக்கே பெயரி டும் அளவிற்கு மாறி வந்துள்ளது! இனியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும் தமிழர்கள் எதையும் பொறுத்துக் கொண்டு பதவியில் அமர்ந்தால் போதும் என்று அலைவது வெட்கமும், வேதனையும் அளிக்கின்றன.

இனியாவது, பதவிக்குப் பல்லிளிக் கும் பரிதாபத் தமிழர்களும், திடீர்??? தலைவர்களும் சிந்திப்பார்களா? இல்லை, இதுவும் ஒரு போகிறபோக்கு தானா?

- தமிழன்

ஓய்வறியா உழைப்பாளியைக் காக்க! காக்க!!


நம் உடலின் ஓய்வு எடுக்கக் கூடாத ஓர் உழைப்பாளி - உறுப்பு - நம் இ(ரு)தயம் ஆகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இதயம் ஓய்வு எடுத்தால் அது நிரந்தரம்தான். தற்காலிகம் என்ற பேச்சுக்கோ, விடுமுறை என்ற நிலையோ இந்த உறுப்புக்கு ஏதும் இல்லை.

அவ்வளவு முக்கியத்துவமும் தனித்தன்மையும் கொண்டது அல்லவா அது?

இன்று (சர்வதேச) பன்னாட்டு இதயப் பாதுகாப்பு நாள் - செப்.29.

ஆண்டுதோறும் 1000 பேரில் ஒருவர் மாரடைப்பு என்ற நிலை உள்ளது என்றாலும் 80 வயதான வர்களே இந்த மாரடைப்பு - இதய நோய்க்கு பலியாவோர் 1000-த்தில் 10 பேர்கள்!

மருத்துவர்களிடம் சிகிச்சைக்கே வராமல் இதய நோயால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 5 முதல் 10 விழுக்காட் டினர் ஆவர் என்று இதய நோய் மருத்துவர்கள் - டாக்டர்கள் - கூறுகின்றனர்!

முன்பெல்லாம் முதியவர்கள், வயதானவர்களைத் தாக்கும் இந்த இதய நோய்கள், இப்போது இளம் வாலிப வயதினரையும்கூட வாட்டி, உயிர்க்கொல்லி ஆகும் அபாயம்  நாளும் பெருகி வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்!

காரணம்  - 15 விழுக்காடு (சராசரி) அவர்களது குடும்ப முன்னோர் வழி மரபுகளாக (Genetic) இருக்கலாம் என்றாலும் முக்கியமாக, இந்த துரித உணவுகள் (Fast Food)  கண்டகண்ட நேரத்தில் கண்ட கண்ட தீனிகளை - கொழுப்புச் சத்து ஏராளம் உள்ளவைகளைச் சாப்பிடுவது, இளவயதிலேயே மது குடித்தல் - புகைத்தல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதின் விளைவுகளே!

பொதுவாக மாரடைப்பு - இதய நோய் என்ற உயிர்க்கொல்லிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க - இந்நாளில் சில அன்றாட கவனத்துடன் கூடிய வாழ்க்கை முறைகளையும் நடைமுறை களையும் தவறாது மேற் கொண்டு ஒழுக உறுதி எடுத்துக் கொள்வோம்.

1. 40 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அனைவரும் மருத்து வர்களிடம் சென்று ஆண்டுக் குக் குறைந்தபட்சம் ஒருமுறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுவதை  முறை யாக்கிட வேண்டும்.

2. ரத்தக் கொதிப்பு (Blood Pressure) சீராக உள்ளதா என்று பார்க்க வேண்டும் (120 - 80) இது 10 (பத்து) மேலே - கீழே செல்ல, டாக்டர்கள் அனுமதிப்பார்கள்; இது எல்லை தாண்டினால் - தண்ட வாளத்தை விட்டு ஓடிய ரயில் எஞ்சின் - பெட்டிகள் நிலைதான் ஏற்படும். எனவே இதில் முழு கவனமும், கவலையும் இருக்க வேண்டும்.

3. மூச்சுத்திணறல், எல்லை மீறிய சோர்வு, களைப்பு திடீரென்று உடலில் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று காட்டி ஆலோசனை பெற்று அதன்படி மருந்து எடுத்துக் கொள்ளுதல் அவசியம் - அவசரம்.

மாரடைப்பு - அறிகுறிகள் - கடும் வியர்வை நெஞ்சு அழுத்தி இல்லாமல்கூட Silent Attack வரலாம் என்பதையும் கருத் தில் கொண்டு கவனமாக  உடல் நலனை நாளும் கண்காணித்தல் அவசியம்.

4. கொழுப்புச் சத்து இரத்தக் குழாய்களில் சென்று அடைத்து, அது மாரடைப்பு ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கொழுப்பு உணவு வகைகளை - வாய் ருசிக்காக மட்டுமே சாப்பிடுவதை நிறுத்தி - ஆரோக்கிய உணவுகளையே உட்கொள்ளுதல் அவசியம்.

5. சர்க்கரை (Diabetes) அதிகமானால் அது இதயத்தைத் தாக்கி மாரடைப்புக்கு அடிகோலும் ஆபத்து உண்டு - காரணம் சர்க்கரை வியாதி என்பது ஒரு ஜங்ஷன் வியாதி (Junction Disease) இதயம், கண், கை, கால் எங்கும்கூட பாய்ந்து விடுவதால் இந்தப் பெயர் அதற்கு!)

6. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி (மருத்துவர் ஆலோசனைப்படி) நாளும் தவறாமல் செய்து வருதல் இன்றியமை யாததாகும்!

உப்பு  - தவிர்க்கப்படல் வேண்டும் (மருத்துவர் ஆலோசனை இதில் முக் கியம்; உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், இத்தியாதி உணவுகள் உப்பை உடலில் வைப்பவை).

7) ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு குறைந்த அளவு 110 - அதிக அளவு 140-க்கு (மில்லி கிராம்) மிகாது உள்ளதா என்று பார்த்துக் கொள்வது - பொதுவாக எல்லோருக் கும்கூட அதிக எடை கூடி - சதை மலையாக இருப்பது (Obesity) இதய நோய்க்கு அழைப்பு விடுவ தாகும்!

எனவே எடையையும் கவ னித்து, சத்துள்ள உணவை, பழங்கள், கீரைகள், நார்ச் சத்து, தானியங்கள் இவை களை உணவின் முக்கிய அங்கமாகவும், மீன் - ஆட்டுக் கறியைத் தவிர்த்து) முதலியவைகளை உண்ணும் பழக்கமும், தடுப்பு முறைகளுக்கு முக்கியமாகும்.

இதயத்தைக் காப்போம்.

இன்றுள்ள சமுதாயத்தை வாழ வைப்போம்!

அர்த்தநாரீஸ்வரர்!


அர்த்தநாரீஸ்வரர்!

இன்று மதுரை மீனாட் சியம்மன் அர்த்தநாரீஸ் வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண் ணும் சமம் என்று உணர்த் தும் கோலம் இது.

அம்மனும், சிவனும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பு! நம்புங்கள் - மது ரையை ஆள்வது - தமிழ்நாடு அரசோ - மாநகராட்சியோ அல்லவே அல்ல! மீனாட்சியும் சிவனும்தான் ஆட்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சித்திரை முதல் ஆடி வரை மீனாட்சியும் ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாத ராகிய சிவனும்தான் மதுரையை ஆள்வதாக அய்தீகமாம்.

இப்படி இருக்கும்போது ஆன்மீக நம்பிக்கைப்படி சொல்ல வேண்டுமானால், மதுரையில் மாநகராட்சித் தேர்தல் - மேயர் தேர்தல் எல்லாம் தேவையில்லாத ஒன்று. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், மதுரையை ஆளும் மீனாட்சி - சொக்கநாதர் ஆகி யோருக்குப் போட்டியாக நடத்தும் நாத்திகத் தன்மை கொண்டதும் ஆகும் இந்தத் தேர்தல்கள் எல்லாம்.

நியாயமாக மதுரை வாழ் மக்கள் ஏதாவது குறைபாடு களும், தேவைகளும் இருக் குமானால் அவர்கள் முறைப் படி புகார்மனு கொடுக்க வேண்டியது மதுரை மீனாட்சி அல்லது சொக் கரிடம்தான். ஏனெனில் அவர்கள்தானே அவ்வாறு மாதமாகப் பிரித்துக் கொண்டு மதுரையை ஆட்சி செய்கிறார்கள்? மதுரையை மட்டும்தான் சொக்கனும், மீனாட்சியும் ஆள்கிறார்களா? மற்ற பகுதிகளை ஆள்ப வர்கள் வேறு யார்? எதற்கும் மீனாட்சி - சிவன் தம்பதி களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அது ஒருபுறம் இருந்து விட்டுப் போகட்டும்! இன் றைக்கு அர்த்தநாரீஸ்வரராக மீனாட்சி அம்மையார் மது ரையில் காட்சி தருகிறாளாம். அர்த்தம் என்றால் பாதி; நாரி என்றால் பெண்; அர்த்த நாரி என்றால் ஈஸ்வரனில் பாதி யாக இடம் பெற்ற பெண். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைத் தரிசித்தால் கணவன் - மனைவியரின் ஒற்றுமை நிலைத்திருக்குமாம்.

அப்படியானால் மதுரை யில் குடும்ப நீதிமன்றமே கிடையாது என்று நம்பு வோமாக!

சிவனும் - பார்வதியும் அர்த்த நாரீஸ்வரராக இருப் பதன் அர்த்தம் - ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் என்று சொல்லப் படுகிறதே  - நமக்கு ஒரு சந்தேகம்!

பார்வதியின் தந்தை யாரான தட்சன் நடத்திய யாகத்தில் மருகனான சிவனை அழைக்கவில்லை. மருமகனாகிய பரம சிவ னுக்கோ மகா மகாகோபம் - தன்னை அவமானப்படுத் தியதாக! எவ்வளவோ சிவன் தடுத்தும் தன் மனைவி பார்வதி அந்த யாகத்துக்குச் சென்றாளாம்.

சென்ற இடத்திலும் அவமானப்பட்டு, பார்வதி திரும்பியபோது சிவன் பார்வதியை ஏற்க மறுக்கிறான். கெஞ்சுகிறாள் பார்வதி. அப்படியானால் மயில் உருவெடுத்து தன்னை பூஜித்து சாப விமோசனம்  பெறுமாறு உத்தரவிடுகிறார் - அவ்வாறே செய்து விமோ சனம் பெற்றாள்  பார்வதி அந்த ஊர்தான் மயிலாடு துறையாம்.

நமது கேள்வி - ஆண் - பெண் சமம் என்பதுதான் அர்த்தநாரீஸ்வரர் என்பதற்கு அடையாளம் என்றால் சிவன் எப்படி சாபம் விடலாம்?

பார்வதி ஏன் மயிலாகி சிவனைப் பூஜிக்க வேண் டும்? தர்க்கவாதம் (Logic) இடிக்கிறதே!
- மயிலாடன்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழா:


ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழா:


நாத்திகர்கள் அனைவரும் மனித நேயர்களே! மனிதநேயர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்லர்!
தமிழர் தலைவர் விழா தொடக்கவுரை
நமது சிறப்புச் செய்தியாளர்

விஜயவாடா, செப். 29-நாத்திகர்கள் அனைவரும் மனிதநேயர்களே, மனித நேயர்கள் அனைவரும் நாத்திகர்கள் அல்லர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

ஆந்திர மாநிலம்-விஜயவாடாவில் நாத்திக வீராங்கனையும், நாத்திகர் கோராவின் இணையருமான சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் செப்.28 மற்றும் 29 ஆகிய இருநாள்களில் நடைபெற்று வரு கின்றன.

முதல்நாளில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து தமிழர் தலைவர் கி.வீரமணி பேரு ரையாற்றினார். சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் விஜயவாடாவில் சித்தார்த்தா கல்லூரி வளாக அரங்கத்தில் நாத்திக அமைப் பினர், பகுத்தறிவாளர், சமூக ஆர்வ லர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ளும் விதமாக மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் அவைத் தலைவர் ஜே.மைத்ரி வரவேற் றுப் பேசினார். மய்யத்தின் செயல் இயக்குநர் முனைவர் விஜயம் நூற் றாண்டு விழா முக்கியத்துவத்தைப் பற்றி விவரித்துக் கூறினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய நூற்றாண்டு விழா தொடக்க உரை

கோராவின் வாழ்விணையராக வாழ்ந்திட்ட சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா மாநாட்டினை தொடங்கி வைத்து, நாத்திகர் இயக் கத்திற்கு சரஸ்வதி கோராவின் பங் களிப்பு, அவரது பன்முகப் போராட் டப் பண்புநலன்கள் குறித்து கருத்து மிக்க உரையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். நாத்திகப் போராளி சரஸ்வதி கோராவின் பொதுவாழ்வு பன்முகத் தன்மை கொண்டது.

சமூக சீர்திருத்த வாதி, விடுதலை வீராங்கனை, ஜாதி மற்றும் தீண்டாமை எதிர்ப்பாளர்; மதசார்பற்ற சமூக சேவையாளர் என பல்வேறு தளங்களில் தனது பங்களிப் பினை சமுதாயத்திற்கு வழங்கி வாழ்ந் துள்ளார். 94 ஆண்டுகள் வாழ்ந்து இறுதிவரை கொள்கைப் பற்று, செயல்பாடுடன் போராடிக் கொண்டி ருந்தார்.

அவரது குடும்பம் என்பது அவரது துணைவர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே உள்ள இரத்த சம்பந்தக் குடும்பம் மட்டு மல்ல;  அதற்கு அப்பால்அவர்கள் பல்வேறு நாத்திகர், பகுத்தறிவாளர் இயக்க தொடர்புகளை ஏற்படுத் திக்கொண்டு, அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் அவரது குடும்பம், பலரை உள்ளடக்கிய கொள்கை சார்ந்த குடும்பம் (ideologically extended family) ஆகும்.

தந்தை பெரியாருக்கு இணையராக, இயக்க தலைமை வழித்தோன்றலாக அன்னை மணியம்மை யார் வாழ்ந்தது போல கோராவிற்கு இணையராக அமைந்தவர் சரஸ்வதி கோரா ஆவார். கோராவின் வாழ்விணையராக விளங்கிய சரஸ்வதி கோரா, கோரா நிறுவிய நாத்திக மய்யத்தின் இணை நிறுவனராகவும் விளங்கியவர். கோராவின் மறைவிற்குப் பின் அவரது லட்சியங்களுக்காகப் பாடுபட்டவர்.

பெண் விடுதலை வீராங்கனை-சரஸ்வதி கோரா

சரஸ்வதி கோராவின் பங்களிப்பினை எடுத்துக் கூறும் பொழுது நாட்டின் அரசியல் விடுதலைக் காகப் போராடியவர் என்று குறிப்பிட்டனர். அவரை விடுதலை வீராங்கனை எனக் குறிப்பிடும் பொழுது அந்த விடுதலை, வெறும் அரசியல் விடுதலையை மட்டும் சார்ந்தது அல்ல. ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் பெண் உரிமைக்காக, பெண்ணடிமை யினை வலியுறுத்தும் சமூக மூடநம்பிக்கை பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போராடி, ஆக்க ரீதியாக பெண் சமத்து வத்திற்குப் பாடுபட்டவர் அவர்.

தேவதாசி முறை ஒழிப்பு, ஜாதி மறுப்பு திருமணம் ஆகியவற்றைப் பற்றிப் பிரச்சாரம் செய்து, நடைமுறைப்படுத்தப் பாடுபட்டவர். அதற்காக பல்வேறு எதிர்ப்புகளை நேர்கொண்டு போராடினார். அப்படிச் சமூக சீர்திருத்த ஆற்றல் பெற்ற சரஸ்வதி கோராவை வெறும் அரசியல் விடுதலை வீராங்கனை எனக் குறிப்பிடுவது அவரது சமுதாயப் பங்களிப்பினை குறைத்துக் கூறும் செயலாகும்.

விடுதலை வீராங் கனை சரஸ்வதி கோராவின் விடுதலை உணர்வு, செயல்பாடு பல்வேறு சமூகத் தளங்களில் ஆக்க ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை நிலையாகும். அதனை தற்போதைய, எதிர்கால சமுதாயத்தினர்க்கு எடுத்துக் கூறிப் பிரச்சாரம்செய்வதுதான் நமது நன்றி  கலந்த கடமையாகும்.

பொது வாழ்க்கைக்கு வரும் மகளிர் பலர், சமூகக் கடமையாற்றிட முனைப் படும் பொழுது, குடும்பக் கடமைகளை முழுமையாகச் செய்திட முடியாத சூழல்களே பொது எதார்த்த நிலையாகும்.

கோராவுடன் குடும்ப வாழ்க்கை-பொதுவாழ்க்கையினை தொடங்கிய சரஸ்வதி கோரா, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் பலரையும் நாத்திகக் கொள்கை வழி வாழ வகைப்படுத்திய தோடு, பொது வாழ்க்கையிலும் முத்திரை பதித்தவர்.

அவரது பிள்ளைகள் ஒன்பது பேரும்  பேரப்பிள்ளைகள் அவர்தம் இணையர்கள் என அனைவரையும் நாத்திகக் கொள்கை வழிப்படுத்தியதன் மூலம் இன்று அந்தக் குடும்பம் ஆலமரம் போல தழைத்துப் பெருகி உள்ள நிலை பெருமை கொள்ளத்தக்கதாகும்.

வேர்களின் பெருமை, பண்பு விளக்கும் விதமாக விழுதுகள் வாழ்ந்து வருவது, செயல்பட்டு வருவது கொள்கை சார்ந்த அமைப்பினர் பலருக்கும் எடுத்துக்காட் டாகும்.

நாத்திகப் போராளி-சரஸ்வதி கோரா 

சரஸ்வதி கோரா நாத்திகர் என்பதை விட மனிதநேயர் எனக் குறிப்பிடப் படுவது நிலைத்த கொள்கைப் பயணத் திற்கு ஊறுவிளைத்து விடும்.நாத்திக ரெல்லாம் மனிதநேயர்களே, ஆனால் மனித நேயர்களெல்லாம் நாத்திகரல்லர். (All atheists are humanists; all humanists are not atheist) மனிதநேயர் என்பதைவிட நாத்திகர் எனக் குறிப்பிடுவதே சாலச் சிறந்தது; மேன்மை வாய்ந்தது.

மனித நேயர்களின் கடவுள் நம்பிக்கைகள் மனிதாபிமானமற்ற செயல்களுக்கே ஊக்கம் ஊட்டும்.  உலகில் கடந்த கால வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையாளர் களால்தான் அழிவு வேலைகள் நடை பெற்றுள்ளன.

நாத்திகர்களால் ஆக்க வேலைகள் பலப்பட்டுள்ளன. மசூதிகளா கட்டும், சர்ச்சுகளாகட்டும், கோயில்களா கட்டும், கடவுள் நம்பிக்கையாளர்களால் தான் இடிக்கப்பட்ட வரலாறு உண்டே தவிர, நாத்திகர் அப்படிப்பட்ட செயல் களை செய்ததாக  ஊக்கு வித்ததாக யாருமே சொல்ல முடியாது.

எனவே சரஸ்வதி கோராவை, நாத்திகர் என்றுதான் பெரும்பான்மை அடையாள மாக எடுத்துக் கூறப்பட வேண்டும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மத நம்பிக்கைகளின் பெயரால், நமது சமூக நலன் நடுச்சந்தியில் (at cross roads) நிற்கிறது. நாங்கள் மனித சகோதரத்துவத் தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டவர்கள். கடவுள் நம்பிக்கையினால் முடைநாற்றம் வீசும் சமூகத்தை மாற்றி அமைக்கும் அரும்பணியில் ஈடுபடுவதே சரஸ்வதி கோராவிற்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாகும்.

சமூக மாற்றக் கருவி கல்வியே சமூக மாற்றத்திற்கான அடிப்படைக் கருவி கல்வியாகும். முறையான கல்வியை அளிப்பதன் மூலமே சமூக மாற்றத்தினைக் கொண்டு வர முடியும். முறைப்படி கல்வியினைப் பெறுவதற்கு முன்பு, சின்னஞ்சிறு வயதில் கல்வியைப் புகட் டுவது யார்?  குழந்தையின் முதல் ஆசிரியை தாய்தான்.

குடும்பக் கல்விப் பணியிலும் சமூகத்தினை மேம்படுத்தும் மக்கள் கல்விப் பணியிலும் சிறந்து விளங்கிய சரஸ்வதி கோராவின் வாழ்க்கைப் பயணங்கள் நமக்குக் கொள்கைப் பாடங்களாகும்.

அவர்தம் பாடங்களை சரியாக மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவரது லட்சியங்கள் நிறைவேற, கனவுகள் நடைமுறைப்பட நாமெல்லாம் தீவிரமாக ஈடுபடுவதே நூற்றாண்டு விழா எடுக்கும் நிலையில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும். வாழ்க நாத்திகம்! வளர்க சரஸ்வதி கோராவின் புகழ்.

இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றி நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

விழா நிகழ்ச்சிகள்

விழாவிற்கு காந்திஅமைதி அறக் கட்டளையின் அவைத் தலைவர் ராதாபட் தலைமையேற்றார். இங்கிலாந்தி லிருந்து வருகை தந்த மனிதநேயர் முனைவர் ஜிம் ஹெர்ரிக் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். நாகார்ஜுனா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் பாலமோகன்தாஸ், அறிவிய லாளர் சாந்தனா சக்ரவர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பிற்பகல் நிகழ்வில் சமூக மாற்றத் திற்கான கருவி கல்வியே எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச் சந்திரன் ஒளிவிளக்க கருவிகளோடு அருமையான உரையாற்றினார்.

பவர் (Power) அமைப்பின் இயக்குநர் முனைவர் பர்வீன் அவர்கள் பெண் ணியம் பற்றி சிற்றுரையாற்றினார்.

சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழா நிகழ்வில் தமிழர் தலைவருடன், திருமதி மோகனா வீரமணி அவர்களும் கலந்துகொண்டார். இருவரும் இணைந்து தொடக்க விழா மேடையில் அமர வேண்டும் என விழா ஏற்பாட்டாளர்கள் வற்புறுத்திக் வேண்டி கொண்டனர்.

திருமதி மோகனா வீரமணி அவர்கள் தமிழர் தலைவருடன் சிறப்புச் செய்யப் பட்டார். இருவரும் வருகை தந்த மற்ற விருந்தினர்களுக்குச் சிறப்புச் செய் தனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச் சந்தி ரன், பவர் அமைப்பின் இயக்குநர் பேரா. பர்வீன் ஆகியோருக்கு, தொடக்க விழா மேடையில் சிறப்பு செய்யப்பட்டது.

நூற்றாண்டு விழா நிகழ்வில் தமிழர் தலைவருடன் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச்செயலாளர் வீ.குமசேரன், ஒளிப்படக் கலைஞர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண் டனர்.
விழா மேடையில் திறக்கப்பட்ட நாத்திகப் போராளி-சரஸ்வதி கோராவின் படத்திற்கு சிறப்பு விருந்தினர்கள் மரியாதை

இழுத்து வாருங்கள், அந்த சாமியாரை!


இழுத்து வாருங்கள், அந்த சாமியாரை!
பவுத்த மார்க்கத் திலோ, சமண சமயத் திலோ சொல்லப்படும் நிர்வாணம் என்பது வேறு. இந்து மத நிர்வாணம் என்பது உடம்பில் துணி அறவேயின்றி நிற்கும் கேவலம்!

நிர்வாணமாக ஓடி னால் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்ற மூடநம் பிக்கைகள் உண்டு இம்மதத்தில்.

சென்னை - பல்லாவரத்தில் நள் ளிரவில் ஒரு பெண் நிர்வாணமாக ஓடி வந்தாள். எல்லோருக் கும் அதிர்ச்சி!

மகளிர் காவல் துறைக்குத் தகவல் தெரி விக்கப்பட்டு, அந்தப் பெண் காவல் நிலையத் திற்குக் கொண்டு செல் லப்பட்டு, உடை அணிவிக் கப்பட்டாள். (வாழ்க மகளிர் காவல் நிலையம்)

இந்தப் பெண் ஏன் நிர்வாணமாக - அம் மணக்குண்டியாக ஓடி னாள்? அதில் இருக்கும் இரகசியம்தான்  அதி முக்கியமானது.

திருவண்ணாமலையை யடுத்த செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரேவதி (வயது 25) அந்தவூரைச் சேர்ந்த இராமச்சந்திரன் அந்தப் பெண்ணின் காதலர். இந்தக் காதல் முறிவில் முடிந்தது. எந்தப் பிரச் சினையிலும் ஆண்களை விட பெண்கள் உறுதி யாக இருப்பார்களே!

காதலனை எப்படியும் அடைந்தே தீருவது என் பதில் அந்தப் பெண் மிக உறுதியாகவே இருந் தாள். என்ன செய்யலாம் என்று கடுமையாக யோசனை.

எந்த சாமியாரையா வது அணுகினால் வழி பிறக்கும் என்று கூறப் படவே ஒரு சாமியாரை அணுகினாள். (சாமியா ரிடம் நிர்வாணமாக  அந் தப் பெண் செல்லாத வரைத் தப்பித்தாள்!) அந்தச் சாமியார் கொடுத்த யோசனை (Idea) தான் நள்ளிரவில் நிர்வாண மாக சென்றால் காதலன் கிடைப்பார் என்பது!

உள்ளூரில் - அதுவும் கிராமத்தில் நிர்வாண மாக செல்ல முடியுமா? அது பெரும் பிரச்சினை யாகி விடுமே!

யோசித்தாள் ரேவதி.  ரேவதியின் அக்காள் சென்னை  பொழிச்சலூ ரில் இருக்கிறாள்;  திட் டத்தை அந்தப் பகுதியில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.

வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு இந்த ரேவதி நிர்வாணமாக நள்ளிரவில் நடந்து வந்தாளாம். ரோந்து வந்த காவல்துறை ஆய்வாளர் இராசேந்திரன் முயற்சி யால், பெண் காவல்துறையினர் அந்தப் பெண்ணை அழைத்து ஆடை கொடுத்து உடுத்தச் செய்துள்ளனர்.

இப்பொழுது வழக்கு வேறு பக்கம் திரும்பி விட்டது? யார் அந்த சாமியார்? பெண்ணை ஆபாசமாக - முழு நிர் வாணமாக நடந்து போகச் சொன்ன அந்த நாசகார சாமியார் யார்? என்ற கோணத்தில் காவல்துறை அந்தச் சாமியாரைத் தேடும் வேலையில் ஈடுபட்டுள் ளது. (நம் காவல் துறைக்கு என்னென்ன வேலைகள் பார்த்தீர் களா?)

ஆந்திராவில் மங்கம் மாள் என்ற சாமியாரிணி நீதிமன்றத்திற்கே நிர்வாணமாக வந்தாள் என்பதெல்லாம் பழைய கதை!

நிர்வாண சாமியார் கள் வடநாட்டில் என்ப தெல்லாம் சர்வ சாதா ரணம்!

தமிழ்நாட்டில் ஜைன சாமியார்கள் நிர்வாண மாக வருவதையே நாம் அனுமதிப்பதில்லை - திராவிடர் கழகத் தோழர் கள் ஆங்காங்கே விரட் டியடித்துள்ளனர்.

பக்தர்கள் - ஆன்மீக சிரோன்மணிகள் ஒன் றைக் கவனிக்க வேண் டும். ஒரு பெண் நிர்வாண மாக துணிந்து செல்லும் அளவுக்கு மதக் கிறுக்குத்தனம் - சாமியார்தனம் இருக் கிறதே - இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்றும் கட வுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்புகிறவன் அயோக்கியன், வணங் குகிறவன் காட்டு மிராண்டி என்றும் தந்தை பெரியார் சொன் னதும் - இன்றுவரை திராவிடர் கழகம் இவற் றைப் பரப்பி வருவதும் எவ்வளவுப் பெரிய மகத் தான உண்மை என் பதை நிர்வாண ரேவதி களைப் பார்த்த பிறகா வது சிந்திக்க வேண் டாமா?