Thursday, June 30, 2011

இன்றைய விடுதலை செய்திகள் - 30-06-2011



நீதிமன்றம் சம்மன்: ராஜபக்சே அதிர்ச்சி!

நீதிமன்றம் சம்மன்: ராஜபக்சே அதிர்ச்சி!

கொழும்பு, ஜூன்.30 - அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட போர்க்குற்ற வழக்கில் சம்மனை ஏற்க மறுத்து வந்த அதிபர் ராஜபக்சே பணிந்தார். தற்போது அவர் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு செய்து உள்ளதாம். பொருளாதார தடை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் போர்...

லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி

Image - லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி

புதுடில்லி, ஜூன்.30- லோக்பால் வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரத் தயார் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரி வித்தார். டில்லியில் பத்திரிகை ஆசிரியர்களுக்கு பிரத மர் மன்மோகன் சிங் நேற்று

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

Image - தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற எழுச்சிப் பொதுக்கூட்டங்கள்

பள்ளிகொண்டா அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய `வீரக்கல்'

Image - பள்ளிகொண்டா அருகே 500 ஆண்டுகளுக்கு முந்தைய `வீரக்கல்'

வேலூர், ஜூன் 30- நிலத்தை சீர்செய்த போது 500 ஆண்டு களுக்கு முந்தைய வீரக் கல் சிலை கண்டுபிடிக் கப்பட்டது. வேலூர் மாவட்டம்

அய்.எம்.எஃப்., தலைவராக லகார்டு தேர்வு

Image - அய்.எம்.எஃப்., தலைவராக லகார்டு தேர்வு

வாஷிங்டன், ஜூன் 30- வாஷிங் டனில் உள்ள, சர்வதேச நிதியத்தின் (அய்.எம்.எஃப்.,) முதல் பெண் தலை வராக, பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ் டைன்

விடுதலை இன்றைய தலையங்கம்


கருநாடகாவின் ஜாதி அரசியலுக்குப் பதிலென்ன?



ராஜபக்சேவை கைது செய் பகுதி-1

படியுங்கள் பரப்புங்கள்
http://viduthalai.in/new/

http://viduthalai.in/new/videos.html







அரசியல் மாற்றங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் ஒளி விருதுபெற்ற தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாகும்.

தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், தந்தை பெரியார் அவர்களின் பணிகளுக்கு முன், நான் ஒரு தூசு என்று மிக அடக்கமாகக் கூறிய பேராசிரியர் அவர்கள், இந்த மேடையிலே நாம் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம் என்றால், இந்த மன்றத்திலே இவ்வளவு திரளாகக் கூடி நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் - அவர் இல்லாவிட்டால் நாம் எவரும் இலர் என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைப் பதிவு செய்தார்.

தந்தை பெரியாரை எந்தக் காலத்திலும் தமிழர்கள் மறக்கக் கூடாது - அவர் கருத்தினைப் பின்பற்றத் தயங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள்.

அரசியலில், தேர்தலில் நேற்று நாம் தோல்வி அடைந்தோம் என்றால், அது நாம் அணிந்திருந்த சட்டை கிழிந்துபோனது போன்றது - அது ஒரு கட்சியின் தோல்வியாகும்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வு- சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது வேறு - அது தோல்வி அடைந்ததாகப் பொருளாகாது என்றார் பேராசிரியர். இதே கருத்தைத்தான் திருவாரூர் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் குறிப்பிட்டார் என்பது கருத் தூன்றத்தக்கதாகும்.
இதனைத்தான் துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் - அவர்களின் வட்டாரங்கள் கேலி செய்கின்றன.

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வருணாசிரமம் கொடியது. நான்கு வருணங்களையும், பிரம்மாவின் முகத்தில் பிராமணன், தோளில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதங்களில் சூத்திரன் பிறந்தான் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?

மிகப்பெரிய வன்னெஞ்சம் படைத்தது பார்ப்பனர்களின் வேதங்களும், அவர்களின் சாத்திரங்களும். அவற்றை ஆணிவேர் வரை சென்று மூல பலத்தைத் தாக்கியவர் தந்தை பெரியார் என்பதால், நமக்குப் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார்.

தமிழன் என்ற ஓரினக் கோட்பாடு, இனச் சிந்தனை - ஒற்றுமை உணர்வு வருவதற்கு, வளர்வதற்குத் தடையாக இருப்பது ஜாதி உணர்வுதான் - ஜாதி நிலவும்வரை இனவுணர்வு வளராது.

தொடக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியிலும், துணி துவைக்கும் சலவைத் தொழிலாளர்கள் பகுதி யிலும்தான் திராவிடர் கழக - சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் கலந்துகொண்டு அவர்கள் வீட்டில் சாப்பிட்டு வருவதைக் கட்டாயக் கடமை என்று கருதப்பட்டதை பேராசிரியர் எடுத்துக் காட்டியது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

ஜாதியின் கொடுமை தலைவிரித்தாடும் ஒரு சமூக அமைப்பில், இத்தகைய நடவடிக்கைகள்தான் - ரத்த ஓட்டத்தில் ஆண்டாண்டு காலமாகக் கலந்துவிட்ட அந்த ஜாதியின் பிடியைத் தளர்த்தும் - மன மாற்றத்தையும் கொண்டுவரும்.

அந்தக் காலகட்டத்தில் அதனைச் செய்வதற்கு ஒரு மனப் பக்குவம், துணிவு தேவை. அந்தப் பக்குவத்தை உண்டாக்கியவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட தன்மான இயக்கமான திராவிடர் கழகமுமாகும்.

இன்றைக்கும்கூட சில கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரு டம்ளர்கள் உண்டு என்றால், அந்தக் காலகட்டத்தில் சேரிப் பகுதிகளில் சென்று அவர்கள் வீட்டில் உணவருந்தியது எவ்வளவுப் பெரிய சாதனையாக இருந்திருக்க முடியும்!

அந்த உணர்வு மேலும் தூண்டப்படவேண்டும் - இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புச் சிந்தனை விதைகள் விதைக்கப்படவேண்டும்.

ஜாதிக்கு மூல ஆதாரமானவைகள்பற்றிக் கடுமையான விமர்சனங்களை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அதன்மூலம் இனவுணர்வை ஏற்படுத்திவிட்டால் அரசியலிலும்கூட இனமானப் பார்வை ஏற்பட முடியும்.

அந்த உணர்வு குன்றியதால்தான் இனமல்லாதார் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நிலை ஏற்படுகிறது.

மிகப் பொருத்தமாக இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாடல் வரிகளை எடுத்துக் கூறினார்.

தமிழாய்ந்த தமிழ் மகன்தான்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும்

என்ற தமிழியக்கப் பகுதியில் அமைந்த அந்தப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டினார்.

அரசியல் உள்பட எல்லா வகையிலும் தமிழன் தலை எடுக்க தந்தை பெரியார் தேவைப்படுகிறார் - அவர்தம் கொள்கைகள் தேவைப்படுகின்றன என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவின் சாரமாகும். வெறும் ஆர்ப்பாட்டமாக விழாக்கள் அமையக் கூடாது என்பதில் கருத்து செலுத்திய தோழர் தொல். திருமாவளவன் அவர்களையும் பாராட்டுகிறோம்.

Tuesday, June 28, 2011

திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (3)



ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சென்னை மாகாணமாக இருந்த கால கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் திராவிடர் இயக்கம். மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ்நாட்டு அளவில் திராவிடர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது - பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

எல்லைகள் மாறியதால் இனப் பெயர் மாறுமா? குற்றாலத்தில் குடியிருந்தவன் கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்து விட்டதாலேயே அவன் அப்பா பெயரும், அம்மா பெயரும் மாறி விடுமா? அப்படி சொல்லப் போனால் இந்தியா முழுமையும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் - பரவியிருந்தவர்கள் திராவிடர்கள்தானே! அதற்காக பாகிஸ்தானில் இப்போது உள்ள அரப்பா பகுதியில் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்பார்களோ இந்த அ(ச)திபுத்திசாலிகள்?


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (2)

திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத் தில் கலந்து கொண்டோமா, ஏதோ நாலு வார்த்தை பேசி விட்டுச் சென்றோமா என்று கருணாநிதி வந்திருக்கலாம். தேர்தல் தோல்வியைப்பற்றிப் பேசுகிறேன் என்று ஏதோதோ உளறிக் கொட்டி யிருக்கிறார் முத்தமிழர் வித்தகர் - என்று துக்ளக் எழுதுகிறதே (22.6.2011) - ஒரு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் எதைப் பேசுவது எதைப் பேசக் கூடாது என்பதைத் துக்ளக் சோ ராமசாமி அய்யரைக் கேட்டுக் கொண்டுதான் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்களா பார்ப்பனர்கள்?




அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க நடவடிக்கை இலங்கை அரசு கடும் அதிர்ச்சி

கொழும்பு, ஜூன். 28- இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது ஒன்றரை லட் சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிய போதும், இந்தியா உள்பட


கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாள்களில் தி.மு.க. தலைமை செயற்குழு,

Image - கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாள்களில் தி.மு.க. தலைமை செயற்குழு,

சென்னை, ஜூன்.28- தி.மு.க. தலைமை செயற் குழு, பொதுக் குழு கூட்டம் கோவையில் ஜூலை 23, 24 ஆகிய நாட்களில் நடக்கிறது.


இந்தியாவில் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம்

Image - இந்தியாவில் பூர்வீகத்தை தெரிந்து கொள்ள இலங்கை வாழ் தமிழர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய தூதரகம்

கொழும்பு, ஜூன் 28- இந்தியாவில் தங்களது பூர்வீகத்தை தெரிந்து கொள்ள விரும்பும், இலங்கை வாழ் தமிழ் மக்கள் விண்ணப் பிக்கலாம் என, அந்நாட்டிற்கா


நாம் வளர்ந்ததற்குக் காரணமே பெரியார்தான்! குடிமை பயிற்சி முகாமில் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன்

Image - நாம் வளர்ந்ததற்குக் காரணமே பெரியார்தான்! குடிமை பயிற்சி முகாமில் துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன்

நாம் வளர்ந்ததற்கு காரணமே பெரியார்தான் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நல்.இராமச்சந் திரன் கூறி விளக்கவுரை

ஃபண்ட்ஸ் இந்தியா.காம் இலவச இணையவழி சேவை

Image - ஃபண்ட்ஸ் இந்தியா.காம் இலவச இணையவழி சேவை

இந்தியாவின் இணைய வழி நிதிச் சேவைகள் நிறுவனமான ஃபண்ட்ஸ் இந்தியா.காம் தன்னிடம் புதிய கணக்குகளை தொ டங்கும் வாடிக்கையாளர் களுக்கு இலவசமாக இணையவழியில்

படியுங்கள்

http://viduthalai.in/new/

http://viduthalai.in/new/videos.html

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...