Total Pageviews

Tuesday, March 30, 2010

குடிஅரசு தொகுதிகள் வெளியீடு!பெரியார் களஞ்சியம்
குடிஅரசு (தொகுதிகள் 6)
(1926, 1927, 1928ஆம் ஆண்டுகள்)
வெளியீடு!

இன்று (30-03-10) மாலை
சென்னை - பெரியார் திடலில்


அவசியம் வருக!!!
அனைவரும் வருக!!!

Monday, March 15, 2010

அண்ணாசாலை- பெரியார் நுழைவு வாயில்


தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றல்கள் அளப்பரியன என்பது நாடு அறிந்ததே.

எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளிட்டவை-களில் ஒப்பாரும் மிக்காரும் இலர் என்கிற அளவுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு என்றாலும், கட்டடக் கலையிலும் கூட கூர்த்த மதிநுட்பம் மிக்கவர் என்பதன்மூலம் சகலகலா வல்லுநர் என்னும் பெருமைக்கு உரியவர் ஆகிறார்.

கலைஞர் அவர்களே பலமுறை சொல்லி-யுள்ளபடி, ஏன் தலைமைச் செயலக புதிய கட்டடத் திறப்பு விழாவிலேயே குறிப்பிட்-டுள்ள-படி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாமான்யர்தான் கலைஞர்,- பார்ப்பனர் அல்லாதார் என்ற நிலையால், இந்நாட்டு ஊடகங்கள் (பெரும்-பாலும் ஆரியக் கூட்டத்தின் கையிருப்பில்தானே!) அவரை உயர்த்திப்பிடிக்க வேண்டிய சாதாரண கடமையைக் கூடச் செய்ய மறுக்கின்றன. எங்-காவது ஒட்டடை அவர் மேல் ஒட்டிக் கொண்-டிருக்கிறதா என்று தேடித்தடி பூதாகாரப்படுத்து-வதில்தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

என்னதான் அவர்கள் இருட்டடிப்பு செய்யப் பார்த்தாலும் உலக அளவில பீடுறும் சிறப்புக்-குரியவர் என்று பலதரப்பினரும் பாராட்டும் அளவுக்குப் புதிய கட்டடம் வானளாவி நிற்கிறதே. அதனை என்ன செய்ய முடியும்?

கலைஞரின் செயல்திறனை புத்தாக்கப் பெருமையை யார் நினைத்தாலும் மறைத்துவிட முடியாது.

திராவிடர் கட்டடக் கலை அம்சத்தையும் உள் வாங்கிக் கொண்டு, புதிய தொழில் நுட்பத்துடன் உருவாக்குவதில் அவர் அல்லும் பகலும் காட்டிய ஆர்வம், -கொடுத்த ஊக்கம் அசாதாரணமானவை. 86 வயதுக்குள் குடிகொண்டிருக்கும் இளமை வீறுகொண்டு நிற்கும் விந்தையை இவரிடம் காண முடிகிறது.

முதுமை, இளமை என்பது ஆண்டுகளைப் பொறுத்ததல்ல, உணர்வுகளைப் பொறுத்தது என்று வாழ்ந்து காட்டிய வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வீறு நடைபோடும் அந்த உறுதிதான் அதே இடத்தில் அவரை வார்த்து எடுத்திருக்கிறது.

அய்யா அவர்களைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்லும்போது பொதுத் தொண்டை, ஒரு கலையாக மாற்றியவர் என்றார். - அந்தக் கலை உணர்வு கலைஞரிடம் காணப்-படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!

அண்ணா சாலையில், அண்ணா சிலை வழியாக, பகுத்தறிவுக் பகலவன் தந்தை பெரியார் சிலையைச் சுற்றிக் கொண்டுதான் புதிய சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய வேண்டும்.
சட்டமன்றத்தில் கால் பதிக்கும் ஒவ்வொரு-வரும் தந்தை பெரியார் யார்? அவரின் பிரதம சீடரான அண்ணா யார்? எந்த கொள்கை-களுக்-காக அவர்கள் வாழ்ந்தார்கள்? பொதுத் தொண்-டினைத் தொண்டறமாக உருவாக்கிய அந்த மாமனிதர்களின் மானமிகு உணர்வுகள் என்னென்ன?

பிரதமர் அவர்கள் திறப்பு விழாவில் சுட்டிக்-காட்டினார்; திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை, சமத்துவச் சிந்தனைகள் இவற்றை அசை போட்டுக் கொண்டுதான் சட்டமன்ற வளாகத்துக்குள்ளே நுழையமுடியும், நுழையவும் வேண்டும்.

இது ஏதோ குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல; தமிழ் மண்ணின் உளவியல் (Soil Psychology) என்பது இந்த வகையிலே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவிலேயே எந்த மாநில சட்ட மன்றத்திலும் நிறைவேற்றப்பட முடியாத சமூகப் புரட்சி சார்ந்த சட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டு சட்டமன்றத்-தில்தான் நிறைவேற்றப்பட்டன என்றால், அதற்குக் காரணம் இந்த அடித்தளம்தான்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சமூக சீர்திருத்த உணர்வு தலை தூக்கி நிற்கிறது. அதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ராமாசாமிதான் என்று அமெரிக்காவின் ஜான் ரைட்லி போன்ற மூத்த பேராசிரியர்கள் கருத்து என்பதையும் கவனத்தில் கொண்டால் தமிழ்நாட்டின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

சட்டமன்றத்தின் புதிய கட்டடம்_ வளாகம் உருவாக்கப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில் இந்தச் சிந்தனைகளில் பிறழ்வு இல்லாமல் மேலும் வீறுநடை வளர்ச்சிப் போக்கு காணப்படட்டும்!

Thursday, March 11, 2010

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

ஜோதிடம் என்பது அறிவியல் ரீதியில் மூட நம்பிக்கையே. அது இந்தி-யாவில் வேத நூல்களிலோ, மகாபாரதம், ராமாயணம், உபநிஷத்துகள் போன்ற-வற்றிலோ அது பற்றிய சிறுகுறிப்புகள் கூட இடம் பெறவில்லை.

ஜோதிடம் பற்றிய குறிப்புகளோ கிரகங்கள், ராசிகள் பற்றிய தகவல்களோ பழைமையான இந்திய நூல்களில் எதிலும் காணப்படவில்லை.

ஜோதிடக் கலை என்பது புராதன கிரேக்க - ரோமானிய கலாச்சாரத்தி-லிருந்து பிறந்து உலகம் முழுவதும் பரவியதாகும்.

பெரும்பாலான ஜோதிடர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களிடம் பேச்சு கொடுத்து கிடைக்கும் தகவல்களிலிருந்து யூகமாக பல ஆரூடங்களைக் கூறுவார்கள்.

இப்படி சுமார் 10-12 ஆருடக் குறிப்புகள் சொல்லும்போது அவற்றில் ஒன்றிரண்டு இயற்கையாகவே பொருந்தி இருந்தால் மக்கள் ஜோதிடரை நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். சரியாக 10 பலன்கள் சொன்னால் அதில் பலித்த 3 பலன்களையே ஜோதிடத்தில் நம்பிக்கை-யுள்ள பலரிடம் சொல்லிக் கொண்டு திரிவார்கள். பலிக்காக பலன்களைப் பற்றி வாய்த் திறப்பதில்லை. ஜோதிடர்-களிடம் ஏமாந்துவிட்டோம் என்பதை மற்றவர்களிடம் காட்டிக் கொள்ள விரும்பாத மனநிலையின் விளைவே இதற்குக் காரணம்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்-களின் நம்பிக்கைகள், மனப்பயம், கவலைகள் இவையே ஜோதிடரின் மூலதனமாகும். இவற்றை மிகைப்படுத்தி கற்பனை கலந்து பல ஆருடங்களைச் சொல்லி வாடிக்கையாளர்களை பிரமிக்க வைத்துவிடுவார்கள்.

தேடி வரும் வாடிக்கையாளர்கள் மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும் வகையில், பல்வேறு சாமி படங்கள், பூஜைப் பொருள்கள், சங்கு சக்கரங்கள், செப்புத் தகட்டில் வரைந்த எந்திரங்கள், கமகமக்கும் பூமணம், ஊதுவத்தி நெடி, திருநீறு, சாம்பிராணி புகை, சந்தனம் போன்ற பொருள்களுடன் ஜோதிடரி-டம் பணிந்து போகும் சூழ்நிலையை உருவாக்கி வைத்து உளவியல் ரீதியாக தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வைத்து விடுவார்கள். பூர்வஜென்ம கர்மபலன் என்றெல்லாம் சொல்லி, சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார்கள். எந்தவொரு ஜோதிடமும் பத்துக்குப் பத்து பலன்களை மிகத் துல்லியமாகச் சொன்னது இது வரையில் யாரும் கிடையாது

ஜோதிடம் மூடநம்பிக்கை என்பதை விளக்குவதற்காக பல்வேறு அறிவியலாளர்கள் பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.எஸ்.நடராஜ் என்பவர் ஜோதி-டத்தைக் கற்றிருப்பவர். இந்த ஜோதி-டம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குத்தான் பயன்படும் என்று எண்ணி ஜோதிடத்திற்குப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். ஜோதிடத்திற்கே சவால், கடவுள் ஒரு முழு சிந்தனை, போன்ற தனது கன்னட மொழி பெயர்ப்பு நூல்களில் வாஸ்து, ஜோதிடம், ஆன்மா, மறு-பிறப்பு மற்றும் உள்நாட்டு, வெளி-நாட்டு கடவுள்கள் உள்பட அனைத்-துப் பிரச்சினைகளையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து கன்னடமொழியில் பல நூல்களை எழுதியுள்ளார்.

முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் ஜோதிடம் உண்மையென்பதை நிரூபித்துக் காட்டுமாறு ரூ 10 லட்சம் பரிசு தருவதாக சவால் விட்டு நாடு முழுவதுமுள்ள பல ஜோதிடர்களுக்கு ஏ.எஸ்.நடராஜ் கடிதங்கள் எழுதி அனுப்பினார். ஆனால், ஜோதிடர் எவரும் அந்தச் சவாலை ஏற்று ஜோதிடத்தை நிரூபிக்க முன்வர-வில்லை. ஒரு சிலர் சவாலை ஏற்பதாக பத்திரிகைகளில் அறிவித்து விளம்பரம் பெற்றுவிட்டு காணாமல் போனார்கள்.

எனவே, இப்பொழுது பரிசுத் தொகையை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தி தனது சவாலை நடராஜ் திரும்பவும் அறிவித்திருக்கிறார். அவரது சவால் விவரம் வருமாறு:

சவாலை ஏற்று வரும் ஜோதி-டரிடம் ஒரே ஒரு ஜாதகம் வழங்கப்-பட்டு 10 கேள்விகள் கேட்கப்படும். இவை கடந்த காலத்தைப் பற்றி, நிகழ்-காலத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றியதாக இருக்கும்.

ஜோதிடம் என்பதே எதிர்-காலத்தைப் பற்றி கூறும் ஆரூடம் என்பதால் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் மிக முக்கியமானவை. இவற்றிற்கு 80 சதவிகிதமாவது சரியான பதில்களைக் கூறவேண்டும். சவாலை ஏற்க வரும் ஜோதிடரோ, மந்திர-வாதியோ யாராக இருந்தாலும் ரூபாய் ஒரு லட்சம் காப்புத் தொகை செலுத்தி கலந்து கொள்ளலாம். போட்டியில் வென்றால், டெபாசிட் தொகையுடன் ரூபாய் ஒரு கோடி பரிசும் வழங்கப்படும்.

ஜோதிடத்திற்கு சவால் விட்டுள்ள ஏ.எஸ். நடராஜ் பெங்களூரு பத்மநாப நகர், 5-ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

ராஜ் வைச்சரிக்கா வேதிகே என்ற சங்கத்திற்கும் அகில கர்நாடக விச்சரவாடி சங்கத்திற்கும் தலைவராக உள்ளார். அவர் ஜோதிஷெகே சவாலு என்ற புத்தகத்தை ஜோதிடர்களுக்கு சவால் விட்டு அவர் எழுதியுள்ளார். ஜோசியம், ஆவி, மறுபிறவி, கீதை, வேதாந்த இந்து மதம், கடவுளின் தோற்றம், வேத உபநிடதத்தில் பவுத்த வாதம், புராணங்கள், தர்மங்கள், ஆதியாத்மா போன்ற பல புத்தகங்கள் பிரபல ஜோதிடர்கள் எழுதியுள்ள புத்தகங்களைப் படித்து ஆராய்ந்-துள்ளார்.

ஜோதிடப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்த போது, பாலஜோதிடம் என்பது முற்றிலும் தவறானது; அடிப்-படையற்றது; இந்தியாவைச் சேர்ந்ததல்ல; முறையற்றது என்பதை நன்றாக அறிந்து கொண்டார். பிறகு, அவர் பழைய பாரம்பரியத்திலிருந்து பகுத்தறிவு வாதியாகவும் பழைமை வாதத்திலிருந்து நவீன விஞ்ஞான பார்வைக்கும் மாறினார். ஜோசியத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் அவற்றின் பலன்கள் அனைத்தும் முற்றிலும் பிழையானது; ஆதாரமற்றது; விஞ்-ஞானத்திற்கு எதிரானது என்று அறிந் தார்.

ஏ.எஸ்.நடராஜ் கன்னடத்தில் எம்.ஏ., பட்டமும், அறவியலில் எம்.ஏ.பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தற்போது அவர் பங்குச் சந்தை ஆலோசகராக உள்ளார்.

மனமறிந்து ஒரு சின்னஞ்சிறு சிசுவை-படுகொலை செய்வதற்கு ஒப்பானது ஜோதிடம்.

மடமையை அறியாமையால் பயந்து சாகின்ற அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் வயிற்றை வளர்க்கின்ற அயோக்-கியத்தனம் என்கிறார்.

இயற்கைவாதி செ. கஜபதி
(நன்றி: எதிரொலி -28.2.2010)