Saturday, November 26, 2011

பந்துமுனை எழுதுகோலைக் (Ball-point pen) கண்டுபிடித்தவர் யார்?


 பந்து முனை எழுதுகோலைக் கண்டுபிடிப்பதற்கு முன் எழுதுவது என்பதே மிகக் கடினமாக செயலாக இருந்து வந்தது. மை எழுதுகோல்களில் அவ்வப்போது மை நிரப்ப வேண்டும். அவற்றில் மை ஒழுகவும் செய்யும். சீனாவில் கண்டுபிடித்த இண்டியன் இங்க் என்னும் மை உலர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

தோல் பதனிடுபவரான ஜான்.ஜே. லூயிட் என்பவரால் 30-10-1888 இல் பதிவு செய்த எழுதுகோளுக்கான காப்புரிமையின் போது இத்தகைய பிரச்சினைகள் இருப்பது முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்டது. நிப்  (Nib) புக்கு பதிலாக சுழலும் ஒரு சிறிய பந்து கொண்ட எழுதுகோலை அவர் உருவாக்கினார். ஒரு மை தேக்கத்தில் இருந்து இதற்கான மை வந்து கொண்டே இருக்கும். அப்போதும் கூட அந்த எழுதுகோலிலும் மை கசிந்து கொண்டுதான் இருந்தது. என்றாலும் தோலின் மீது எழுதுவதற்கு மற்ற மை எழுதுகோல்களை விட இந்த பந்துமுனை எழுதுகோல் மிகவும் ஏற்றதாக இருந்தது. லூயிட் இந்தக் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெறத் தவறிவிட்டார்.

லாஸ்லோ பிரோ (1899-1985) என்ற ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் முதலில் ஒரு மருத்துவராகத்தான் பயிற்சி பெற்றார். ஆனால் அவர் மருத்துவக் கல்வியை முடித்துப் பட்டம் பெறவேயில்லை. பத்திரிகைத் துறைக்கு வரும் முன் சில காலம் அவர் ஹிப்னாடிசம் செய்பவராகவும், பந்தயக் காரோட்டியாகவும் பணியாற்றி வந்தார்.

பத்திரிகை அச்சடிக்கும் மை விரைவில் உலர்ந்து விடும்போது, தனது எழுதுகோலில் உள்ள மை உலவர்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது அவரை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு சிறு பால்பேரிங் முனையில் வைத்து அவர்கள் தயாரித்த எழுதுகோலில் அந்த முனை திரும்பும்போது மை இழுக்கப்படுவதன் மூலம் பிரோவும் வேதியலாளரான அவரது சகோதரர் கியார்கியும் தங்களது கண்டுபிடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றனர். பிரோ என்னும் பந்துமுனைப் பேனா உருவெடுத்தது.

1938 இல் இந்த பேனாவுக்கான உரிமையை  இந்த சகோதரர்கள் ஹங்கேரியில் பதிவு செய்தனர். 1940 இல் நாஜிகளுக்கு அஞ்சி அர்ஜன்டைனாவுக்கு அவர்கள் குடியேறி அங்கு தங்களின் பந்துமுனை பேனாவுக்கு 1943 இல் மறுபடியும் காப்புரிமை பதிவு செய்து கொண்டனர். அவர்களது முதல் வாடிக்கையாளர் இங்கிலாந்து நாட்டின் ராயல் விமானப்படைத் துறையாக அமைந்தது. அதிக உயரத்தில் அந்த பந்துமுனைப் பேனா நன்றாக எழுதுவது அர்களுக்கு ஊக்கமளித்தது. இதனால் இங்கிலாந்தில் பந்து முனைப் பேனாவுக்கு பிரோ என்ற பெயர் அடையாளமாக ஆகிவிட்டது. பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பிரோ பந்து முனைப் பேனாக்கள் 1945 இல் தயாரிக்கப்பட்டன. அதே நேரத்தில் பிரோ தனது பேனாவைத் தயாரிப்பதற்கு மார்சல் பிச் என்ற பிரஞ்சுக்காரருக்கு பிரோ உரிமம் அளித்தார்.

தனது நிறுவனத்தை பி.அய்.சி. என்று அழைத்த பிச் பிரோவின் பேனா வடிவை மாற்றியமைத்தார். இதனால் அதிக அளவில் அதனைத் தயாரிக்கவும் முடிந்தது; குறைந்த விலைக்கு விற்கவும் முடிந்தது. பி.அய்.சி. நிறுவனமே உலகின் பந்துமுனைப் பேனா விற்பனை சந்தையின் தலைவராக விளங்கியது. அதன் ஆண்டு விற்பனை 138 கோடி யூரோ டாலர்களாக இருந்தது. 2005 இல் 1000 ஆவது கோடிப் பேனாவை அவர்கள் விற்பனை செய்தனர். பிரோவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அர்ஜன்டைனா நாட்டினர் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 29 அன்று கண்டுபிடிப்பாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

(நன்றி : ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...