Tuesday, November 19, 2013

வினாக்களும் விடைகளும்

-  கவிஞர் கலி. பூங்குன்றன்
(திருச்சி உறையூரைச் சேர்ந்த தோழர் எம்.கோவிந்தன் அவர்கள் கேட்டுள்ள வினாக் களுக்கு இங்கே விடை அளிக் கப்படுகின்றன)
கேள்வி 1: நாடு விட்டு நாடு செல்வது தவறு; இந்திய மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதை அரசியல்வாதிகள் ஏன் கண்டிக்கவில்லை?
நமது பதில்: இலங்கை எல்லைக் குள் என்ற பிரயோகமே முதலில் தவறு. கச்சத்தீவு என்பது  தமி ழ்நாட்டுக்குரியது என்பதற்கு ஏராள ஆதாரங்கள் உண்டு. (திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்துள்ளது)
1974இல் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இலங்கை அரசுக்குக் கச்சத் தீவைத் தாரை வார்த்தது; அப்பொழுது போடப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சத் தீவுப் பகுதியில் பாரம்பரியம் பாரம்பரியமாக இருந்து வந்த மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
1976இல் இந்திய வெளியுறவுச் செய லாளர் இலங்கை வெளியுறவுத் துறை செயலாளருக்கு எழுதிய ஒரு கடிதத் தின் மூலம் இந்திய மீனவர்கள் அவர் களது படகுகளும் இரு நாட்டுக்கிடை யில் உள்ள சரித்திரம் வாய்ந்த கடல் பகுதியிலும், இலங்கைக் கடல் பகுதியிலும் சென்று இலங்கை அரசின் அனுமதியில்லாமல் மீன் பிடிக்கக் கூடாது என்று இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் போன்றவை கிடையாது. அப்படியானால் இலங்கை அரசின் அனுமதியோடு தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று ஆகிறது.
தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவை தாரை வார்த்து விட்டு, நமது மீனவர்கள் அங்கு மீன்பிடிக்கச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவதும், உதைக்கப்படுவதும் நியாயம்தானா? பட்டுப் புடவையை இரவல் கொடுத்து விட்டு அந்தப் பெண் போகும் இட மெல்லாம் பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதையாக அல்லவா இருக்கிறது.
கடலில் எல்லைக் கோடுகளைப் போட முடியாது; காற்றடித்த திசையில் படகுகள் இழுத்துச் செல்லப்படும் நிலைதான்.
சட்டங்கள் எப்படி இருந்தாலும் உலகில் பல நாடுகளிலும் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்த தற்காக சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமை உண்டா?
தமிழக எல்லைப் பகுதிக்குள்ளும் வந்து நமது மீனவர்களை சிங்களக் கடற்படை தாக்கி இருக்கிறதே!
நமக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குக் கொடுத்தவர்கள் நாம் என்கிற முறையில், இலங்கை அர சுடன் பேசி, தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்டுத் தரலாமே!
கேள்வி 2: தமிழ்நாட்டில் முதி யோர்கள் அவர்களது வாரிசுகளால் பராமரிக்கப்படவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின் றார்களே - இங்குள்ள அரசியல்வாதிகள் முதியோர்களை இங்கு ஏன் கண்டு கொள்ளவில்லை?
நமது பதில்: முதியோர்களுக்கு ஆதரவு காட்டுவது அவசியம் -_ அது தான் தலை சிறந்த மனிதாபிமானம் கூட! புதிய பொருளாதாரக் கொள்கை பொருள்களின்மீது ஈர்ப்பை அதி கரிக்கச் செய்த மனிதத்துவத்தைக் கை விட்ட நிலை வளருவது நல்லதல்ல. இந்த நிலை குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் தவறாது வலியுறுத்தியும் வருகிறார். உங்கள் பெற்றோர்களைப் பராமரியுங்கள் நன்றி காட்டுங்கள் என்று கூறியும் வருகிறார்.
திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கைவல்யம் முதியோர் இல்லத்தில் மூப்படைந்தவர் களைப் பராமரிக்கும் மனிதாபிமானப் பணியும் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டுதான் உள்ளது.
உள்நாட்டில் கலவரம் மூளும் நிலையிலோ அந்நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு அன்பு முகம் காட்டி தேவையான உதவி களைச் செய்வது தலை சிறந்த மனிதாபிமானம்.
அந்த வகையில் நமது தொப்புட் கொடி உறவினர்களான ஈழத் தமிழர்களை  நம் நாட்டில் தங்க வைத்து உபசரிப்பது சரியானதுதானே!
கேள்வி 3: காமன்வெல்த் கூட்டத் திற்குச் சென்றால்தானே நல்லது, கெட்டது பேசி முடிவெடுக்க முடியும்? இதில்  பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது  என்பது தவறு இல்லையா?
நமது பதில்: இலங்கையைப் பொறுத்தவரை தமிழினம் என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று நினைக்கிறது; எதிர்காலத்தில் சிங்கள இனம் மற்றொன்று சிங்களக் கலப்பினம் மட்டுமே!   இலங்கையில் இருக்க முடியும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே பச்சையாகப் பாசிசத்தின் மறு வடிவமாகவே கொக்கரிக்கிறாரே!
ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத் தில் கண்டுள்ள வடக்கு -_ கிழக்கு மாகாண இணைப்பையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே.
ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்து வரும் உதவியைப் பாதிக்கப் பட்ட மக்கள் பக்கம் திருப்பாமல், குற்றம் புரியும் சிங்களவர்கள் பக்கமே திருப்பப்படுகிறதே!
பல கட்டங்களிலும் இலங்கை பக்கம் தான் இந்தியா சார்ந்து இருந்து வந்துள்ளது. அப்படி இருந்தாலும் இந்தியா பக்கம் தன் ஆதரவை இலங்கை காட்டியது இல்லை. அப்படி இருக்கும் போது இலங்கை அரசுக் காக நாம் ஏன் நம் விரலைச் சுட்டுக் கொள்ள வேண்டும்?
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது.
போர்க் குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலிமை பெற்று வரும் இந்தக் கால கட்டத்தில், காமன்வெல்த்துக்கு அடுத்த ஈராண்டுகள் தலைவராக ராஜபக்சே  வரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதற்கு போய் நாம் சாட்சியாக இருக்க வேண்டுமா? இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கடந்த கால மனித விரோத குற்றச் செயல்களுக்கும் பச்சைக் கொடி காட்டிய குற்றத்தைச் செய்தவர்கள் ஆகிவிட மாட்டோமா?
இதற்கு முன்புகூட போர்க் குற்றம் செய்தவர்களை நிறவெறி, இனவெறிக் கண்ணோட்டத்தில் உள்ள நாடுகளை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கி வைத்தது உண்டே!
அவை எல்லாவற்றையும்விட ராஜபக்சே செய்த இனப்படுகொலை பல மடங்கு பெரிதாயிற்றே.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லையானால் நாடே குற்றவாளி களின் கூடாரமாக மாறி விடாதா?
இந்தியா முற்றிலுமாக காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்திருந்தால் மிகப் பெரிய நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டு இருக்கும் _- அதன் பலன் தமிழர்களுக்குக் கிட்டியிருக்குமே.
கேள்வி 4: பெரியார் என்பது நல்ல அடைமொழிதானே; தந்தை பெரியார் என்பது சரியா?  ஒருவர் எல்லோரையும் தாய் என்று சொல்லலாம். தந்தையைத் தவிர வேறு யாரையும் தந்தை என்று சொன்னால் தாயின் கற்பிற்குக் களங்கம் இல்லையா?
நமது பதில்: காந்தியாரை திணீலீமீக்ஷீ ஷீயீ லீமீ ழிணீவீஷீஸீ என்று சொல்லுவ தில்லையா?
நாட்டு மக்களுக்காக நற்றொண்டு செய்பவர்களை அவ்வாறு அழைப் பதில் தவறு இல்லை. அந்தச் சொல்லுக்கு நேரிடையான பொருள் பார்க்கக் கூடாது; தன் பிள்ளைகளை ஒரு தந்தை பராமரிப்பதுபோல ஒரு நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுபவர் களையும் தந்தை என்று அழைப்பது எப்படி தவறாகும்?
நீங்கள் பார்க்கும் கோணத்தில் ஒருவரைத் தாய் என்று அழைப்பது கூடக் குற்றமாகி விடுமே. தன்னுடைய தந்தையின் மனைவிதானே தாய். சொந்த தாயைத் தவிர, மற்ற பெண்களைத் தாய் என்று அழைத்தால் தமது தந்தையின் மனைவி அவர் என்று பொருள் ஏற்பட்டு விடாதா?
கேள்வி 5: திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்களை தமிழர் தலைவர் என்று அழைக்கலாமா? உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 10 கோடி தமிழர்களுக்குத் தலைவரா?
நமது பதில்: தமிழர்களுக்குத் தலைமை தாங்கும் தகுதி அவருக்கு உண்டு என்பதாலும் கடந்த காலங் களில் அவர் ஆற்றிவரும் தொண்டின் அருமையாலும் தமிழர் தலைவர் என்று தாராளமாகவே அழைக்கலாம். தமிழ்நாட்டின் மூத்த தலைவரான மானமிகு கலைஞர் அவர்களே தமிழர் தலைவர் என்று தானே விளிக்கிறார்.
பார்ப்பனரை உறுப்பினராக சேர்க்காத இயக்கத்தைத் தலைமை தாங்கி அழைத்துச் செல்லுபவர்தான் தமிழர் தலைவர் என்னும் மதிப்புக்கு உரியவர் ஆவார்.
எந்தவித அரசியல் நோக்கும் சபலமும் இல்லாமல் தமிழின மக்களுக்கு இடர் வரும் போதெல்லாம் தோள் தூக்கிக் களம் இறங்கிப் போராடும் அவரைத் தமிழர் தலைவர் என்று அழைப்பதுதானே சரி!
கேள்வி 6: பெரியாரின் நினைவாக 95 ஆயிரம் மரக் கன்றுகள் நடலாம்; 95 அடி உயரத்தில் சிலை தேவையா?
நமது பதில்: திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் மரக்கன்றுகள் நடுவதை அன்றாடப் பணியாகவே கொண்டு செயல்பட்டு வந்து கொண்டு இருக்கிறது - அது ஒரு பக்கம்.
95 அடி உயரத்தில் தந்தை பெரி யார் சிலை வைக்கப்படுவது என்பது, அவர்தம் கொள்கைப் பரப்புதல் என்பதில் மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
95 அடி உயரத்தில் நிற்கும் இந்த மனிதர் யார்? எதற்காக அவருக்கு இவ்வளவு உயரத்தில் சிலை? அவரின் கொள்கைகள் என்ன? என்று விவாதங்கள் நடைபெற இது பெருந் துணையாக இருக்கும்.
உலகில் ஒரு சிலையை நிறுவி அதன் பீடத்தின் கீழ் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு வாசகங்களை துணி வாகப் பொறிக்க முடிகிறது என்றால் அது தந்தை பெரியார் அவர்களின் சிலை பீடத்தில் மட்டும்தான்!
வெறும் சிலை மட்டுமன்று, ஒலி, ஒளி காட்சிகள், நூலகம், புத்தக நிலை யம், சிறுவர் பூங்கா உட்பட பல்வேறு அம்சங்கள் அந்த வளாகத்தில் உருவாக்கப்பட்டு பெரியார் உலகம் என்று அதற்குப் பெயர் சூட்டப்படு கிறது. உலகில் பல்வேறு நாடுகளிலும் உள்ளவர்கள் வந்து பார்த்தே தீர வேண்டிய சுற்றுலா மய்யமாக ஒளி விட வாய்ப்பு உண்டே!
பெரியார் கொள்கைப் பரப்புதலில் இது ஒரு தொலைநோக்கு யுக்தியாகும். அதில் உங்கள் பங்கும் இருக்கட்டும்.
கேள்வி 7: மோடியும், அத்வானி யும் மதவாத சக்திகளாக உருவெடுத்து வருகிறார்களே! இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் நிலை எப்படி இருக்கும்?
நமது பதில்: 450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியைப் பல்லாயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டி இடித்து முடித்தவர் எல்.கே. அத்வானி.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லீம்களை (குழந்தைகள், கருவுற்ற பெண்கள் உட்பட) கொன்று குவிக்கப் பட்டதற்குத் தலைமை தாங்கிய இட்லர் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி.
இப்படிப்பட்டவர்கள் அதிகாரத் திற்கு வந்தால் என்னவாகும் என்ப தற்கு இவற்றைவிட எடுத்துக்காட்டு தேவைப்படாது.
கேள்வி 8: அரசியல்வாதிகள் தேர் தலின் போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர் என இனாம் அறிவித்து வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு வழங்குவதால் யாருக்கு அதிக இலாபம்? மேற்கண்ட கம்பெனிக்காரர்கள் அரசியல்வாதி களுக்கு பல கோடி ரூபாய் கமிஷன் கொடுப்பதாக கூறப்படுவதுபற்றி  ஊடகங் களின்மூலம்  மக்களுக்குத் தெரிவித்து இனாம் பொருள்கள் வாங்க வேண்டாம் என்று கூறலாமே?
நமது பதில்: மக்களிடையே வாங்கும் சக்தி பெருகுவதற்கான பொருளாதாரத்தை வளர்த்து விட வேண்டுமே தவிர இனாம் பொருள் களைக் கை நீட்டி வாங்கக் கூடிய அவலம் ஆரோக்கியமானதல்ல.
ஒரு மீனைக் கொடுப்பதைவிட மீன்பிடிக்க வலையைக் கொடு என்பது சீனப் பழமொழி.

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!

முள்ளிவாய்க்கால் முற்றம்: இடித்த இடத்திலேயே தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வேண்டும்!
தொல்.திருமாவளவன் அறிக்கை!
சென்னை, நவ.18- தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர்களை இடித்த தமிழக அரசே அதனைத் திரும்ப கட்டிக் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தஞ்சை அருகே விளார் கிராமத்தில் எழுப்பப் பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.
மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது.  தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவிடம் கட்டப் பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்காப் பகுதியைக் கைப்பற்றியிருப்ப தாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்டு மானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதில் தலையிடாமல் அமைதி காத்த அரசு, அதன் திறப்பு விழா முடிந்த ஒரு சில நாட்களில், திடீரென நூற்றுக்கணக்கான காவல்துறையினரை இறக்கி, அதிகாலை வேளையில் அவசரம் அவசரமாக இடித்து நொறுக்கியது ஏனென்று விளங்கவில்லை.
காலக்கெடு வேண்டாமா?
சட்டவிரோதமாக அரசு நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்குமெனில் அதனை அப்புறப் படுத்துவதற்கு, உரிய காலக்கெடுவுடன் அரசு உரிய வர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும்.  அவ்வாறு எந்த அறிவிப்பையும் செய்யாமல் நினை விடத்தை எழுப்பியவர்களுக்குப் போதிய காலக்கெடு வையும் வழங்காமல், திடீரென அதிரடி நடவடிக் கையில் இறங்கியதன் மூலம் அரசுக்கு ஏதோ உள் நோக்கம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கையில் காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிற வேளையில், இந்திய அரசை எதிர்த்துத் தமிழகமே கொதித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக மக்களின் எழுச்சியைத் திசை திருப்பும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி இந்திய அரசைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றிய ஓரிரு நாட்களில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருப்பது, தீர்மானம் நிறைவேற்றியதையே கேள்விக்குள்ளாக்குவ தோடு, தமிழக அரசின் நம்பகத்தன்மையின் மீதும் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக எழுப்பப்பட்டுள்ள இந்த முற்றம் தமிழ் மக்களின் இனம்சார்ந்த உணர்வுகளோடு தொடர்புடையதாகும்.  அத்தகைய சிறப்பைப் பெற்ற நினைவு மண்டபத்தை இடித்ததன் மூலம் தமிழக அரசு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் வெகுவாகக் காயப்படுத்தியுள்ளது.
அதிமுக அரசு, ஈழத் தமிழர்களுக்கு உற்ற துணையாய் நிற்கும் என்று நம்பியவர்களுக்குப் பெரும் ஏமாற்றத் தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது.  முள்ளிவாய்க்கால் முற்றம், தனியார் இடத்தில் எழுப்பப்பட்டிருந்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் சொந்தமான நினைவிடமே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
எனவே, உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சொந்த மான முள்ளிவாய்க்கால் முற்றத்தில், தமிழக அரசு மீண்டும் சுற்றுச்சுவரை எழுப்பவும் பூங்காவை அமைக்கவும் முன்வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான பொய் வழக்கு களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டு மெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Saturday, November 9, 2013

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

பேரிடி போன்றதோர் செய்தி!

சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!

திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.

எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.

கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!

சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!

ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.

ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!

எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.

அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.

திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.

சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்

இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.

எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.

வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!

அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!
பாழும் சாவு பிரித்துவிட்டதே!

பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!

வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!
அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!

என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?

குளமான கண்களோடு பிரியாவிடை!

எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.



- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.

9.11.2013

குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Thursday, November 7, 2013

கந்தபுராணமும் - இராமாயணமும் ஒன்றே!

ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது


1. கந்தபுராணமும் - இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும்.
 
2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட் டவையேயாகும்.
 
3. இரண்டு கதைகளும் ஆரிய சமயக் கொள்கைகளை வலியுறுத்துவதைக் கருத்தாய்க் கொண்டு ஆரியக் கடவுள் களைப் பெருமைப்படுத்த ஏற்படுத்தியவையாகும்.
 
4. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களுக்கும், அசுரர்கள் என்பவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் என்ற பாவனை வைத்து கற்பிக்கப்பட்டவையாகும்.
 
5. இரண்டு கதைகளும், தேவர்கள் என்பவர்களை உயர்த்தியும், அசுரர்கள் இராக்கதர்கள் என்பவர்களைத் தாழ்த் தியும், இழித்தும் காட்டப்பட்டவைகளாகும் என்பதோடு, இரண்டு கதைகளுக்கும் இந்திரன் பிரதானப்பட்டவனாகிறான்.

6. இரண்டு கதைகளின் தமிழ் மொழி பெயர்ப்புக் காவியங்களும் இரண்டு கோவில் அர்ச்சகர்களால், அதாவது கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளால் பாடப்பட்டவை யாகும். கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரி என்னும் அர்ச்சக ராலும், இராமாயணம் கம்பன் என்னும் பூசாரியாலும் தமிழில் பாடப்பட்டவை.
7. இரண்டு கதை உற்பத்திக்கும் காட்டப்பட்டக் காரணங் கள் - அசுரர்களின் தொல்லைகள் பொறுக்க மாட்டாமல் தேவர்கள் பிர்மா, விஷ்ணு, சிவன் என்னும் கடவுள்களைப் பிரார்த்தித்துத் தங்களின் துன்பங்களைத் தீர்க்கும்படி வேண்டிக்  கொண்டவைகளாகும்.
 
8. இராமாயணக் கதைக்கு விஷ்ணு இராமனாக அவதரித்து கதாநாயகனாகவும், கந்தபுராணத்திற்கு சிவன் கந்தனாகப் (சுப்ரமணியனாக) பிறந்து கதாநாயகனாகவும் இருக்கிறார்கள்.
 
9. இரண்டு கதாநாயகர்களுடைய பிறப்பும் அருவெருக்கும் தன்மையாகவே, அதாவது இராமன் தனது தாய் கவுசலை, யாகத்தின்போது குதிரையுடன் ஓர் இரவெல்லாம் கட்டித் தழுவிப் படுத்திருந்து, பகலெல்லாம் யாகப்ரோகிதனுடன் சேர்ந்து கர்ப்பமாகி இராமன் பிறந்ததாகவும்,
 
கந்தன், தன் தகப்பன் (சிவன்) தன் தாயைப் (பார்வதியை) பல தேவ ஆண்டுகள் இடைவிடாமல் புணர்ந்து, தேவர்கள் விருப்பப்படி இடைவெளியில் வீரியத்தை விட்டு, அது கங் கையில் சேர்ந்து அங்கு பல பிரிவாகி குழந்தை உருக்கொள்ள, அதை பல பெண்கள் வளர்க்க, அதனால் ஆறுமுகம் பெற்று ஆறுமுகனானான்; கார்த்திகேயனானான் (இந்த சேதிகளை இராமாயணமே கூறுகிறது) என்பதாகவும் இருக்கிறது.
 
10. இவ்விரண்டு கதாநாயகர்களின் (இராமன் - கந்தன்) மனைவிமார்களும் தங்கள் பிறப்பை அறிய முடியாதவர்கள்.
 
அதாவது, இராமனின் மனைவி சீதை யாரோ பெற்று பூமியில் போடப்பட்டு, புழுதியில் மறைந்துகிடந்து ஓர் அன்னிய அரசனால் கண்டெடுத்து வந்து வளர்க்கப்பட்டவள்.
 
கந்தன் மனைவி வள்ளியும் யாராலோ ஒரு மானிடம் ஒரு ரிஷியால் சினை ஆகி பெறப்பட்டு, காட்டில் ஒரு குழியில் கிடக்கப்பட்டு, ஒரு வேட அரசனால் கண்டெடுத்துக் கொண்டு போய் வளர்க்கப்பட்டவள்.
 
11. இராமனுக்கு சீதை (விஸ்வாமித்திரன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள். கந்தனுக்கு வள்ளி  (நாரதன் என்னும்) ஒரு ரிஷியினால் கூட்டி வைக்கப்படுகிறாள்.
 
12. இராமனுக்கு எதிரி (இராவணன் என்னும்) தேவர்கள் விரோதி; தேவர்களை அடக்கி ஆண்டவன். கந்தனுக்கு எதிரி (சூரபத்மன் என்னும்) தேவர்கள் விரோதி, தேவர்களை அடக்கி ஆண்டவன்.
 
13. இராமனுக்கு ஆயுதம் வில். கந்தனுக்கு ஆயுதம் வேல்.
 
14. இராவணனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன். மாபெரும் வரப்பிரசாதி.
 
சூரபத்மனும் மகா தவசிரேஷ்டன். மகா பலசாலி. வீரன், மாபெரும் வரப்பிரசாதி.
 
15. இராமனுக்கு லட்சுமணன் என்கின்ற ஒரு சகோதரன் உதவி செய்கிறான்.
கந்தனுக்கு கணபதி வீரவாகு என்கிற சகோதரர்கள் உதவி செய்கிறார்கள்கள்.
 
16. இராவணனுக்கு சூர்ப்பனகை என்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
சூரபத்மனுக்கு அசமுகி என்கின்ற ஒரு தங்கை இருக்கிறாள்.
 
17. இராவணனுக்கு இந்திர சித்து என்னும் (மேகநாதன் என்ற) மகன்; இவன் மகாபலசாலி. வீரன்.
 
சூரபத்மனுக்கு பானுகோபன் என்கின்ற ஒரு மகன். இவன் மகா பலசாலி.
 
18. இராவணனுக்கு விரோதமாக இராவணன் தம்பி விபீஷணன் என்பவன் இருந்து கொண்டு, எதிரியைப் புகழ்ந்து, சீதையை விடும் படிக்கூறி, எதிரிக்குக் காட்டிக் கொடுக்க நாட்டை விட்டுப் போய்விடுகிறான்.
 
சூரபத்மனுக்கு விரோதமாக சூரபத்மன் தம்பி சிங்கமுகன் என்பவன் எதிரியைப் புகழ்ந்து பேசி சயந்தனை சிறை விடும்படிக் கூறி, எதிரிக்கு அனுகூலமாக நாட்டை விட்டுப் போய் விடுகிறான்.
 
19. இராவணன் மகன் இந்திர சித்து இராமனைப் புகழ்கிறான்.
சூரபத்மன் மகன் பானுகோபன் கந்தனைப் புகழ்கிறான்.
 
20. இராவணனிடம் தூதனாக அனுமான் சென்று இலங்கையை அழித்துவிட்டு வருகிறான்.
 
சூரபத்மனிடம் தூதுவனாக வீரவாகு சென்று வீர மகேந்திரத்தைஅழித்து விட்டு வருகிறான்.
 
21. இராவணன் தங்கையின் மூக்கையும், காதையும் லட்சுமணன், அவள் தலைமயிரை இழுத்துக் கீழேபோட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
 
சூரபத்மன் தங்கை அசுமுகியின் கைகளை மாசானன் என்பவன், அவள் மயிரை இழுத்துக் கீழே போட்டு அழுத்தித் துண்டிக்கிறான்.
 
22. சூர்ப்பனகை சீதையை இராவணனிடம் சேர்க்க முயற்சிக்கிறாள்.
அசுமுகி இந்திராணியை சூரபத்மனிடம் சேர்ப்பிக்க முயற்சிக்கிறாள்.
 
23. சூர்ப்பனகை மூக்கு, காது அறுபட்டவுடன் அண்ணன் இராவணனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
 
அசுமுகி கை அறுபட்டவுடன் அண்ணன் சூரபத்மனிடம் போய் என்னை இப்படி செய்து விட்டானே, உனக்கு வெட்கமில்லையா? என்று அழுகிறாள்.
 
24. அதற்கு ஆக கோபப்பட்டு இராவணன், இராமனுடன் சண்டைக்குப் போகிறான்.
 
அதற்கு ஆக வேண்டியே சூரபத்மன் ஆத்திரப்பட்டு, கந்தனுடன் சண்டைக்குப் போகிறான்.
 
25. இராமனுக்கு சுக்கிரீவன் அனுமார், அங்கதன், நீலன், சாம்புவந்தன் முதலியவர்கள் உதவி செய்கிறார்கள்.
 
சூரனுக்கு நவ வீரர்கள் உதவி செய்கிறார்கள்.
 
இராமனை மூலபலம் எதிர்க்கிறது என்றும், சூரனுக்கு ஓர் அரக்கி வயிற்றில் வெட்ட வெட்ட அசுரர்கள் பிறக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 
26. சூர்ப்பனகை உற்றார் உறவினரை ஓலமிட்டு அழைத்தாள். அசுமுகி உற்றார் உறவினரை நினைந்து ஓலமிட்டாள்.
 
27. சூர்ப்பனகை, வெள்ளிமாமலையை அசைத்த மன்னவா! என் மூக்கறுத்தப் பகைவனை நோக்காயா? என்று இராவணனிடம் ஓலமிட்டாள்.
 
அசுமுகி, கதிரவனை சிறை செய்த மன்னாவோ! யான் பட்ட குறையினை அறியாயோ? என்று சூரனிடம் அழுதாள்.
 
28. சூர்ப்பனகை, யான் அடைந்த அவமானத்திற்குப் பழி வாங்க வாராயா?, என்று அழுதாள்.
 
அசுமுகிசூரனிடம், பழி பூண்டு நின்றாயே, என்று அழுதாள்.
 
29. சூர்ப்பனகை அழுதுகொண்டு இராவணன் சபை புகுந்தாள்.
அசுமுகி அழுதுகொண்டு சூரன் சபை புகுந்தாள்.
 
30. இராவணன் கோபம் கொண்டு வருந்தி சீதையை அடையக் கருதினான், அடைய துணிந்து விட்டான்.
 
சூரன் கோபம் கொண்டு மனம் கொதித்து, இந்திராணியை அடையக் கருதினான்.
 
31. இராவணன் சீதையைத் தூக்கி வந்து சிறை வைத்தான்.
 
சூரபத்மன், இந்திராணி ஒளிந்து கொண்டதால் அவள் மகன் சயந்தனையும், சுற்றத்தார்களையும் சிறை செய்தான்.
 
32. சீதை சிறையில் வாடி வதங்கி அழுதாள். சயந்தன் சிறையில் வாடி அழுதான்.
 
33. சீதை சிறையில், இராமன் வந்து விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினாள்.
 
சயந்தன் கடவுள் வந்து தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று எண்ணினான்.
 
34. சீதை அழுது எண்ணியதால் இராமன் விற்படை இலங்கைக்கு வந்தது.
சயந்தன் எண்ணி அழுததால் வீரமகேந்திரத்திற்கு வேற்படை வந்தது.
 
35. இராம தூதனாக அனுமான் இலங்கை வந்தான்.
முருக தூதனாக வீரவாகு வீரமகேந்திரம் வந்தான்.
 
36. இலங்கை வீரர்களாலும், சூரர்களாலும் கனல் கக்கும் கண்ணர்களாலும் நிறைந்திருந்தது. இலங்கையில் பசி இல்லை. ஏழை இல்லை. பிணி இல்லை. கவலை இல்லை.
 
வீரமகேந்திரத்தில் உள்ளவர் வரத்தினில் பெரியர். வன்மையில் பெரியர். உரத்தினில் பெரியர். அங்கு, வீரமகேந்திரத்தில் நலிந்து, மெலிந்து, நரை, திரை கொண்டு, பசி கொண்டவர் இல்லை.
 
37. இலங்கையில் வானவர் பணிந்து பணி செய்தனர். காவல் காத்தனர். பணியாளாய் நின்றனர். இதை அனுமான் பார்த்தான்.
 
வீரமகேந்திரத்தில் வானவன் வணங்கி ஏவல் புரிந்தனர். மீன் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
 
38. இராவணனது பெருமையையும், அவனது தவத்தையும் அனுமான் வியந்து போற்றினான்.
 
சூரனின் தவத்தின் பெருமையை வீரவாகு வியந்து புகழ்ந்தான்.
 
39. அனுமான், சீதை சிறை இருந்த அசோகவனம் சென்று சீதையைக் கண்டு அவள் சோகத்தைத் தேற்றினான்.
வீரவாகு, சயந்தன் சிறை இருந்த இடம் சென்று அவனைத் தேற்றினான்.
 
40. அனுமான் இராவணன் முன் அழைத்துச் செல்லப்பட் டான்.
வீரவாகு சூரன் முன் சென்றான்.
 
41. இங்கே இராமன் பெருமையைச் சொல்லுகிறான்.
அங்கே முருகன் பெருமையைச் சொல்லுகிறான்.
 
42. அனுமான், இராவணனிடம் ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளே 
இராமனாய்த் தோன்றினான் என்கிறான்.
வீரவாகு தன்னிகரில்லா இறைவனே முருகனாகத் தோன்றினான் என்று சொல்லுகிறான்.
 
43. அனுமான் சொன்னது இராவணன் செவியில் ஏறவில்லை.
வீரவாகு சொன்னது சூரன் செவியில் ஏறவில்லை.
 
44. அனுமான், உன் செல்வம் சிதையாமல், உன் வாழ்வு குலையாமல் இருக்க வேண்டுமானால் சீதையை விட்டுவிடு என்று இராவணனுக்குச் சொன்னான்.
வீரவாகு, நின் சேனையோடு நீ நெடிது வாழ வேண்டு மானால் வானவரைச் 
சிறையினின்று விடுக, ஆறுமுகன் அடிபணிக என்று சூரனுக்குச் சொன்னான்.
 
45. அனுமான் இலங்கையை எரித்தான்.
வீரவாகு மகேந்திர நகரை அழித்தான்.
 
46. அனுமான் அரக்க வீரரை அழித்த பின் இராமனிடம் சென்றான்.
வீரவாகு அசுரன் சேனையைச் சிதைத்த பின் அதைவிட்டுச் சென்றான்.
 
47. இராவணன் மந்திரிசபை கூட்டினான். அனுமான் செய்ததை எடுத்துரைத்து வருந்தினான்.
 
சூரன் மந்திரிசபை கூட்டினான். வீரவாகுவின் ஜெயத்தை மந்திரிகளுக்குச் சொல்லி வருந்தினான்.
 
48. இராவணன் சேனைக் காவலன் மகோதரன் எழுந்து வீரம் பேசினான்.
சூரனின் ஆட்களான கால சித்தனும், சூரனின் மகனாகிய பானுகோபனும் வீரம் பேசினார்கள்.
 
49. இராவணன் மகிழ்ச்சியும், தீரமும் கொள்கிறான்.
சூரன் மகிழ்ந்து ஊக்கம் கொள்கிறான்.
 
50. இராவணன் தம்பி விபீஷணன் எழுந்து இராவணனுக்குப் புத்தி கூறுகிறான்.
சூரன் தம்பியாகிய சிங்கமுகன் சூரனுக்குப் புத்தி கூறுகிறான்.
 
51. இராமன் கடவுள் என்றும், நீ வாழ வேண்டுமானால் சீதையை விட்டுவிடு, என்றும் விபீஷணன் கூறுகிறான்.
 
சிங்கமுகன், முருகன் ஆதிபரம் பொருளென்றும், நீ வாழ வேண்டுமாயின் வானவரை விட்டு விடு, என்றும் சொல்லுகிறான்.
 
52. இராவணன், எதிரியைப் புகழ்ந்த விபீஷணனைக் கடிகிறான்.
சூரன், எதிரியைப் புகழ்ந்த சிங்கமுகனை வெறுக்கிறான்.
 
53. இராவணன், இராமனை ஏளனம் பேசி இழிவுபடுத்திச் சொல்லுகிறான்.
சூரன், சுப்ரமணியனை ஏளனம் பேசி அலட்சியமாய்க் கருதிச் சொல்லுகிறான்.
 
54. இராவணன், விபீஷணன்மீது குற்றம்சாட்டித் திட்டு கிறான்.
சூரன், வீரவாகுவின் மீது குற்றம் சாட்டித் திட்டுகிறான்.
 
55. விபீஷணன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
சிங்கமுகன் வருந்தி, நாட்டை விட்டகலுகிறான்.
 
56. போர் நடக்கிறது. முதல் நாள் போரில் இராவணன் தோற்று மீளுகிறான்.
போர் நடக்கிறது. முதல் நாள் போரில் சூரன் மகன் பானுகோபன் தோற்று மீளுகிறான்.
 
57. இராமன் இராவணனை, இன்று போய் நாளை வா, என்கிறான்.
முருகன் பானுகோபனை, இன்று உன்னைப் போக விடுகிறேன் என்கிறான்.
 
58. இராமன் இராவணனை, இப்பொழுதாவது சீதையை விடுத்துப் பிழைத்துப் போக, என்று எச்சரிக்கிறான்.
 
முருகன் இரண்டாம் நாள் போரில் சூரனை, இப்பொழுதாவது வானவரை விடுத்தால், உயிர் வாழ்வாய்; இல்லையெனில் மடிவாய் என்று எச்சரிக்கிறான்.
 
59. இராவணன், மறுமொழி கூறாது அரண்மனை சென்றான்.
சூரன் மறுமொழி கூறாது அரண்மனை அடைந்தான்.
 
60. இந்திரசித்தன் போருக்குச் சென்று தோல்வி அடைந்து  தந்தையிடம் வந்து, இராமனை வெல்ல முடியாது. சீதையை விட்டுவிடு; உயிர் வாழ்வோம் என்கிறான்.
 
பானுகோபன் போரில் தோற்று, தந்தை இடம் வந்து, வானவரை விட்டு விட; உயிர் வாழலாம் என்கிறான்.
 
61. இராவணன் மகன்மீது கோபம் கொண்டு, உயிரை விடுவேனே ஒழிய சீதையை விட முடியாது. மானம் பெரிதே ஒழிய உயிர் பெரிதல்ல, என்கிறான்.
சூரன் மகன்மீது கோபித்து, உயிர் விட்டாலும் விடுவேன்; வானவரை விட்டு வசைக்காளாகி வாழமாட்டேன், என்கிறான்.
 
62. இராவணன் மகன் இந்திரசித்தன் கேடுவரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்று கருதி, இலக்குவனோடு போர் தொடுத்து மாண்டான்.
சூரன் மகன் பானுகோபன் போருக்குச் சென்று மடிகிறான்.
 
63. இராவணன் இராமனுடன் போரிட்டு மடிந்தான்.
சூரன் முருகனுடன் போரிட்டு மடிந்தான்.
 
64. அவன் மனைவி மண்டோதரி புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
 
இவன் மனைவி பதுமை புலம்பி உடன்கட்டை ஏறினாள்.
 
இப்படியாக இன்னும் பல பொருத்தங்கள் காணலாகுகின் றன. ஆகவே, கந்தபுராணத்தைப் பார்த்து நகல்படுத்திய கதையே இராமாயணம்.

Wednesday, November 6, 2013

90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்!

  • இந்தியாவே கலந்து கொண்டது என்று காட்டி உலகின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவார் ராஜபக்சே!
  • மத்திய அமைச்சர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்
90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது இந்தியா காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும்!
தமிழர் தலைவரின் மனிதநேய அறிக்கை


இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால் அதைக் காட்டி, உலக நாடுகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவும் வேலையில் இலங்கை அரசு ஈடுபடும்,  இதில்  இந்தியா ஏமாந்து விடக் கூடாது. 90 ஆயிரம் விதவைத் தமிழச்சி களின் நிலையை எண்ணிப் பார்த்தாவது இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லையற்றவை; சர்வதேசச் சட்டங்களாலும், மனிதநேய அடிப்படையிலும், இராஜபக்சே  தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.

ராஜபக்சேவின் தந்திரம்

இது போன்ற இரக்கமற்ற இனப்படுகொலை, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதைப் போன்று, ஹிட்லரின் யூத ஒழிப்பு - இனப்படுகொலையில்கூட உவமை காண முடியாது.

இதை மறைக்க இலங்கை ஆடும் பல்வேறு, நாடகங்களில் ஒன்றுதான், காமன்வெல்த்  மாநாட்டை இலங்கையில் 2013 நவம்பர் 15,16,17 ஆகிய நாள்களில் நடத்த தந்திரமாக முயற்சித்து வெற்றி கண்ட நிலை; இரண்டாண்டுகளுக்கு இலங்கை, அதன் தலைவராக உள்ள நிலை தொடரும். அதன் மூலம் போர்க் குற்றங் களுக்காக, மனித உரிமை மீறல்களுக்காக அய்.நா.வோ, மனித உரிமை ஆணையமோ தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாத இக்கட்டான நிலை உருவாகும்.

இப்படிப்பட்ட தந்திரரோபாயங்கள் இலங்கைக்குக், கை வந்த கலை என்பதை, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கார்டன் வைஸ் என்ற அய்.ந.வின் செய்தியாளராக இலங்கையில் பல காலம் பணியாற்றி, பிறகு ஆஸ்தி ரேலியா சென்று விட்டவர் எழுதிய ஊயபந (கூண்டு) என்ற ஈழப் போர் அதன் பின் நிலவரங்கள்பற்றிய நூலில் கூறும் பல  அரிய தகவல்களில் சில இதோ:

இலண்டனில் உள்ள தனியார் மக்கள் தொடர்பு  நிறுவனத்திற்குப் பெருந்தொகை ஒன்றைக் கொடுத்துத் தனக்கு ஆதரவாக, அரசுத் தரப்பு நியாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல இலங்கை பணித்தது. போர் என்பதே ஒரு மோசமான விஷயம்தானே. என்னென் னவோ நடக்கும், அதையெல்லாம் பெரிதுபடுத்துவார்களா என்று அது பிரச்சாரம் செய்தது.

சுற்றுலா செல்வதற்கு ஏற்புடைய நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பெறுவதாக நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்தது. எங்களுடையதைப் போல் வேறு நாடில்லை என்று கூறிச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவந்த இலங்கைச் சுற்றுலா வாரியம், சிறிய அதிசயங்கள் பலவற்றைக் கண்டி ருக்கும் தீவு என்று விளம்பரம் செய்தது. வெளிநாட்டினரும் பெருமளவில் வரத் தொடங்கி யிருந்தனர். 3.30 லட்சம் சிங்களர்கள் முப்பதாண்டுகளில் முதல் முறையாக நாட்டின் வட பகுதிகளின் இயற்கை யழகைக் கண்டு ரசித்தனர்.

அதே நேரம் லட்சக்கணக்கான தமிழர்களோ கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருந்தனர்.

எல்லாம் மாமூல் ஆகிவிட்டது என்று வலியுறுத்து வதைப் போல இந்தியாவின் பன்னாட்டுத் திரைப்பட அகாதெமி விருதுகள் வழங்கும் விழாவைக் கொழும்பில் நடத்தியது. (முக்கிய இந்தியக் கலைஞர்கள் பலர் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தனர் என்பது வேறு).

ஆனால் எல்லோருமே பிரச்சாரத்தில் மயங்கி விடவில்லை என்பதை வலியுறுத்துவதைப் போல, ஐரோப்பிய யூனியன் மனித உரிமை நெறிகளை, இலங்கை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி அது ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அளித்து வந்த சலுகைகளை நிறுத்தி வைத்தது.

தமிழர்கள் மட்டுமல்ல சிங்களரும் அச்சத்திலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.
கொலைப்படை எப்போதும் வலம் வந்த வண்ணமிருக்கிறது. எதிர்ப்போரைத் தாக்குகிறது. கேட்பாரில்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் சிங்களத் தேசியவாத எக்காளம் விண்ணைப் பிளந்தது. அத்தேசியவாதத்தின் பெயரால் அரசை விமர்சிப்பவர்கள் தாக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 2010இல் முன்னாள் அய்.நா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டூட்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆகிய உலகத் தலைவர்கள், இலங்கையில் ஊடகவி யலாளர்கள், மனித உரிமைச் செயற் பாட்டாளர்கள், அரசாங்கத்தை எதிர்ப்போர் துன்புறுத்தப்படுவதையும் காணாமல் போவதையும் பற்றிக் குறிப்பிடும்போது இலங்கை நிலைமை பயங்கரமாக இருக்கிறது என்றார்கள்.

ஆனால் பொதுவாக உலகம் இலங்கை யின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக அக்கறை காண்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஜனநாயகத்தைப் போற்றும், சட்டத்தின் ஆட்சியை விரும்பும், தாராள மனதுடைய, நாட்டின் வளர்ச்சியால் சமூகத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என விரும்பும் இலங்கைக் குடிமக்களைத் தங்கள் அக்கறையின்மையால் உலக நாடுகள் கைவிட்டு விட்டன எனலாம். என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

உலகத்தார் கண்களில் மிளகாய் பொடி! இப்போது காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவை வரவழைத்து, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள இந்தியாவே எங்களிடம் எவ்வளவு நேசத்துடன் வந்து கலந்து கொண்டது பார்த்தீர்களா?  இந்தியப் பிரதமரே பல இடங்களுக்குச் சென்று எங்களது நிவாரணப் பணிகளைப் பாராட்டினார் பார்த்தீர்களா? என்ற பிரச்சாரத்தினைத் தொங்க விட்டு, உலகத்தார் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, மனித உரிமைக் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசும், பிரதமரும் பலியாகலாமா?

இதன் அரசியல் விளைவுகள் என்னவாகும்? கலைஞர் அவர்கள் மிக அழகாக குறிப்பிட்டதுபோல், வினை விதைத்தால் வினையை அறுவடைச் செய்ய வேண்டுமே! எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இசைப்பிரியா விவகாரம்

இதற்கிடையில் மற்றொரு சோகச் செய்தி: விடுதலைப்புலிகளின் ஊடகவியல் துறையாளர் இசைப்பிரியா என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை, சிங்கள இராணுவம் கைது செய்து, நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொன்று, வீசிய காட்சியை சேனல்-4 ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி விட்டது.

வழக்கம்போல இராஜபக்சேவின் இனப்படுகொலை அரசு, இது உண்மையல்ல என்று கூறி முழுப் பூசணியைச் சோற்றில் மறைத்துக் காட்ட முயன்றுள்ளது.
இது உண்மைதான்; கற்பனை அல்ல; கிராபிக்ஸ் அல்ல என்பதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களே கூறியுள்ளனர்.

முழுக்க முழுக்க இலங்கை இராஜபக்சே அரசுடன் உள்ள டக்ளஸ் தேவானந்தா போன்ற வர்களே அதற்கு நீதி விசாரணை தேவை என்று கோருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய இணை அமைச்சர்கள் நாராயண சாமி, ஜெயந்தி நடராசன் போன்றவர்கள் அழுத்தம் திருத்தமாக, மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாமல்  புறக்கணிக்க வேண்டும் என்று கூறிடும் நிலையில், இசைப்பிரியாவின் இந்தக் கொடுமையை சர்வதேச சமூகம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலையில், நம் பிரதமர், கனடா நாட்டு பிரதமருக்கு உள்ள மனிதநேயம்கூட இல்லாதவர் என்றா உலகுக்குக் காட்டப் போகிறார்? அய்யகோ - யோசியுங்கள்!

சேனல் 4 - வெளியிட்டவருக்கு விசா மறுப்பா!

மற்றொரு புதுச்செய்தி, இந்த சேனல்-4 படத்தைக் காட்டியவர் இந்தியா வருவதற்கு விசா தர, நம் நாட்டு வெளி உறவுத்துறை தயக்கம் காட்டும் செய்தி, மிகவும் வேதனைக்குரிய கொடுமையான செய்தி!

இலங்கை அரசின் வெளியுறவுத் துறை போல, நம்முடைய வெளி உறவுத் துறை செயல்படுகிறதோ என்ற அச்சம்  தானே இதன் மூலம் வரும்? எனவே புதுடில்லி, இதில் இனியும் தாமதிக்காது. திரு. கேலம்மெக்ரி (4ஆவது சேனல் - உரிமையாளர்) இங்கு வர உடனே விசா வழங்க வேண்டியது அவசர அவசியமாகும்!

புறக்கணிக்க வேண்டும்
90 ஆயிரம் ஈழத்து விதவைத் தமிழச்சிகளையும், எண்ணற்ற இசைப்பிரியாக்களையும் எண்ணியாவது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் - உலகத் தமிழர்கள் சார்பாக.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை 5.11.2013
Adobe Flash Player not installed or older than 9.0.115!
Get Adobe Flash Player here

Monday, November 4, 2013

மக்களை மனிதத் தன்மையுள்ளவராக்க எந்த விலை கொடுக்கவும் தயாராவோம்!

- தந்தை பெரியார்

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! பெரியயோர்களே! தோழர்களே! நான் விருதுநகருக்கு வந்து இரண்டாண்டுகளாகின்றன. இந்தக் குறள் மாநாட்டுக்கு வந்த எங்களை இங்கே அழைத்து கழக தோழர்கள் பேசுமாறு கேட்டுக் கொண்டனர். நான் வந்து சென்ற இந்த இரண்டாண்டு இடைக் காலத்தில் உங்கள் திராவிடர் கழகம் சம்பந்தமான கூட்டங்கள் பல நடந்திருக்கக் கூடும். எனவே நான் திராவிடர் கழகத்தைப் பற்றியும், அதன் கொள்கை களைப் பற்றியும் புதிதாக ஒன்றும் கூறத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இந் நாட்டில் அநேக கட்சிகளிருக்கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சில திட்டங் களை வகுத்துக் கொண்டு அதை மக்களிடம் சென்று, கூறி ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம் பதவிகள் வகிப்பதுமாகும். திராவிடர் கழகம் அவ்வித அரசியல் கட்சிகளில் சேர்ந்ததல்ல. அது ஒரு இயக்கமாகும். இயக்கமென்பது குறிப்பிட்ட அதிகாரத் துக்கோ, பட்டம் பதவிகளுக்கோ மட்டும் பணியாற்றுவ தென்பது இல்லாமல் மக்களிடம் சென்று பயனுள்ள காரியங்களை எடுத்துக்கூறி, அவர்களின் நல்வாழ்வுக்கு அடிகோலுவதும், அந்நிலைக்கு மக்களிடம் மனமாற்றமடையும் வகையில் பிரசாரம் செய்வதுமாகும். மந்திரிகளாவதோ அல்லது பட்டம் பதவி பெறுவதோ என்ற கொள்கை மட்டுமிருப்பவர்கள் மக்களுக்குச் சீக்கிரத்தில் நல்லவர்களாகி விடலாம்; தேச பக்தர்களாக, தியாகிகளாக, தீரர்களாக ஆகிவிடக்கூடும். ஏனெனில் மக்களை அந்த சந்தர்ப்பத்தில் அதாவது ஓட்டு வாங்கும் நேரத்தில், என்ன கூறினால் உற்சாகமடைந்து நம்பிவிடுவார்களோ அவைகளை வாய் கூசாது பிரமாதமாக உறுதி கூறிவிட்டு, பின்னர் பதவியில் போய் அமர்ந்தவுடன் தாங்கள் கொடுத்த வாக் குறுதியில் ஒரு சிறிது கூட நடைமுறையில் செயலாற்ற முடியாமைக்குக் கொஞ்ச மேனும் வெட்கமோ, நாணமோ கொள்ளா மல் பதவி மோகத்திலேயே உழன்று கிடப்பார்கள்.

ஆனால் இயக்கம் என்று சொல்லக் கூடிய தன்மை யிலுள்ள நாங்கள் அதாவது திராவிடர் கழகத்தார் மக்க ளிடம் குடிகொண்டுள்ள மேற்கண்ட மடமைகளை ஒழிக்க மனதில் ஒன்றும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாக நாங்கள் மனதில் எண்ணுவதைக் கூறி வருகிறோம். இத னால் மக்களின் முன்னிலையிலே நாங்கள் விரோதிகளாக தேசத் துரோகிகளாக, கடவுள் துரோகிகளாகக் கருதப்பட்டு, கற்பிக்கப்பட்டு வருகிறோம். எந்த மக்கள் சமுதாயம், மனிதத்தன்மையடைய வேண்டுமென்று கருதி உழைக் கிறோமோ அதே மக்கள் எங்களைத் தவறாகக் கருதுமாறு சில வஞ்சகர்களால் கற்பிக்கப்பட்டு வந்திருக் கிறோம். எனினும் நாங்கள் இதற்காக அஞ்சி ஒதுங்கிவிட வில்லை ஏன்? எங்களுக்கு மக்களின் பொய்யான ஆதரவு இன்றே கிடைத்து அதன் மூலம் அரசியல் ஆதிக்கம் பெற வேண்டுமென்ற எண்ணத்திலிருப் பவர்களல்ல. எனவேதான் எங்கள் மருந்து சற்று கடுமையாயினும் நிதானமாகவே அது நிரந்தரமான பலன் தரட்டும் என்று நானும் என்னைச் சார்ந்த தோழர்களும் பொதுப் பணியாற்றி வருகிறோம். இதுதான் திராவிட இயக்கத்திற்கு உள்ள முக்கிய பண்பாடாகும்.

திராவிட இயக்கமும் ஓர் அரசியல் கட்சியாக வேலை செய்திருந்து, மந்திரி பதவிகளில் அமர்ந்திருந்தால்கூட இன்றைய நிலையில் மக்களுக்கு ஒரு நன்மையும் பயக்க முடியாது. அஸ்திவார மில்லாத கட்டிடம் எப்படி சரிந்து விழுந்து விடுமோ அதே போன்று மக்கள் சமுதாயத்திலே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வேரூன்றி வளர்ந்து வந்துள்ள மடமைகளைப் பகுத்தறிவற்ற தன்மையை , மூடப்பழக்க வழக்கங்களை, வைதீக மனப்பான்மையை, ஜாதி மதவெறியை, அறவே ஒழித்து அனைவரையும் அறி வுள்ளவர்களாக்காதவரையில் எப்பேர்பட்ட ஆட்சியா யிருப்பினும் அது நீடித்து இருக்க முடியாது; நாட்டிலும் அமைதி நிலவ முடியாது. ஏன்? அமைதியில்லா விடத்தில் அறிவு நிலைத்திருக்க முடியாதல்லவா? இதற்கு ஆதாரமாக நாம் கண்கூடாகக் கண்டு விட் டோமே. சுயராஜ்யம் வந்த பின்னர்தானே, சுயராஜ்யம் வாங்கித் தந்தவர் என்று எந்த கூட்டம் புகழ் பாடிற்றோ, அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் காந்தியாரைச் சுட்டுக் கொன்று விட்டான். அரசியல் அதிகாரம் கைக்கு வந்து அதற்கு அடிப்படையாக வேண்டிய அறிவுடைமை இல்லாததின் பலனல்லவா இது? எனவே தான் நமக்கு உண்மையான சுயராஜ்யம் வர இன்னும் சில ஆண்டுகள் காலதாமதம் ஆனாலும், மக்கள் பகுத்தறிவு பெற வேண்டுவதே முதலாவதான முக்கிய கடமை என்பதைத் திராவிடர் கழகம் வலியுறுத்திக் கூறி பணியாற்றி வருகிறது.

திராவிடருக்கு முக்கியம் வேண்டுவது எது? திராவிடர் யார்? என்று கேட்கும் போது நாட்டை ஆண்ட நாகரிக மக்களாகிய திராவிடர்கள் இன்று சூத்திரர்களாய், பஞ்சமர்களாய், அடிமைகளாய் வாழும் நிலைக்கு வழிவகுத்துள்ள இதிகாசங் களும், கதைகளும், புராணங்களும் அறவே அழிக்கப்பட வேண்டும். மேல்ஜாதி கீழ்ஜாதி, ஏழை, பணக்காரன், மோட்சம், தலைவிதி, என்பன போன்ற மூடக் கற்பனைகள் மனித சமுதாயத்திலிருந்து மறைய வேண்டும். பொதுவாக பார்ப்பனீயத்துக்கு அடிமைப்பட்டு வாழும் இழி நிலை வெகு விரைவில் ஒழிக்கப்படவேண்டும்.

தவிர, திராவிடர் யார், ஆரியர் யார் என்பதை நான் ரத்தப் பரீட்சை அடிப்படையாகக் கொண்டு கூறவும் முன் வரவில்லை. ஆனால் திராவிட பெருமக்களாகிய நம்மை சூத்திரன், பஞ்சமன் என்றும், இங்கே பிழைப்புக்கு ஓடிவந்த அந்நியர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள் என்று சட்டமும் சாஸ்திரமும் கூறுகின்றன. இதனால் நமக்கென்ன. நஷ்டம் என்று சிலர் கேட்கக் கூடும் அந்த மேல்ஜாதிக்காரன் என்ற காரணத்தாலேயே பார்ப்பனர்களுக்குச் சமுதாயத்தில் தனிச் சலுகை. அவனுக்கும் உழைப்புக்கும் சம்பந்தமே யில்லை. ஆனால், அதே சமயத்தில் அவர்களுக்குத்தான் உல்லாச சல்லாப வாழ்வு. 100-க்கு 99 பேர் அவர்கள் கல்வி கற்றுள்ளார் கள். நம்மில் 100-க்கு 10 பேர் கூட சரிவரக் கல்வி கற்கும் வசதியில்லை. இவைகளுக்குக் காரணம் பார்ப்பனர்களின் உயர் ஜாதி என்று கூறப்படும் தன்மையல்லவா? இவ்வநீதியை எங்களைத் தவிர வேறு யார் இதுவரை தட்டிக் கேட்டனர். கேட்காவிட்டாலும் எங்களுக்கு ஆதரவாகிலும் கொடுத்த வர்கள் யார்? இன்னுங் கூறுவேன்; எங்களைக் காட்டிக் கொடுத்து விபீஷணர்கள் போன்று அரசியல் ஆதிக்க வேட்டையாடும் சுயநலமிகள் தானே நமது சமுதாயத்தில் காணப்படுகின்றனர். எனவே திராவிடர் இயக்கம் மேற்கொண் டுள்ள தொண்டு மிகவும் மகத்தானதாகும். நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷிகள், மகான்கள் காலத்தில் கூட கவலைப் படாது விடுத்த பெரும் பிரச்னையைக் கழகம் மேற் கொண்டு பாடுபட்டு வருகிறது.

மக்கள் சமுதாயத்திலே யார் யார் தாழ்ந்திருக்கின்றனரோ அத்தனை பேருக்கும் பாடுபடுவதுதான் கழகக் கொள்கையே யன்றி, சர்க்காரைக் கவிழ்ப்பதோ, அன்றி அவர்களுடன் போட்டி போட்டு ஓட்டு வேட்டையாடுவதோ கழகக் கொள்கை யல்ல. நான் இதைக் கட்சித் தலைவன் என்ற முறையில் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்திக் கூறி வந்துங்கூட சிலர் வேண்டு மென்றே எங்கள் மீது தவறான எண்ணத்தைப் பொய்யுரை களைக் கூறி வருகின்றனர். இப்பேர்ப்பட்ட பித்தலாட்டக் காரர்களின் போக்கைக் கண்டு பரிதாபப் படுவதைத் தவிர வேறென்னதான் செய்வது?
1949ஆம் ஆண்டாகிய இந்த விஞ்ஞான காலத்திலுமா நாம் மடமைக்கு அடிமைப் பட்டிருப்பது என்று கேட்கிறேன். இதைப்பற்றி காங்கிரஸ் திராவிடருக்குச் சற்றேனும் கவலை வேண்டாமா? பார்ப்பானுக்கு நாம் இவ்வாறு அடிமைப் பட்டிருப்பது லாபமாகவும், கொண்டாட்டமாகவுமிருக்கலாம். சற்றெனும் தன்மானமுள்ள திராவிடர்கள் நாம் ஏன் மற்றவனுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்துத் தானே தீருவார்கள். நாம் என்றைக்குத்தான் இந்த இழி நிலையிலிருந்து மீளுவது?

சுய ராஜ்யம் வந்த பின்னால் கூட பார்ப்பனர், பறையன், சூத்திரன், மேல் ஜாதி, என்பவை மேலும் மேலும் வளர்க்கப்படுவதா? எனவே நம் மக்கள் இன்ப வாழ்வு பெற வேண்டுமானால் மக்களை முதலில் மனிதத் தன்மையுள்ள வர்களாகச் செய்ய வேண்டும். அதற்கு வேண்டுவது நம்மைப் பிடித்துள்ள மடமைகள், சாஸ்திரங்கள், கடவுள் பேரால் சுரண்டும் தன்மைகள், புராணங்கள், வர்ணாஸ்ரம வைதீகக் கொடுமைகள், ஜாதி மத வெறிகள் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

அன்பர்களே! இக் காரியங்களில் நாம் வெற்றிபெற அதிக விலை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நமது எதிரிகள் இன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்களா களிருக்கிறார்கள். அச்செல்வாக்கு அவர்களுக்குக் கிடைத்ததற்குக் காரணம் நம்மிடையேயுள்ள சில ஆரிய அடிமைகளின் துரோகச் செயலென்றே கூறுவேன். எனினும் அச்செல்வாக்கைச் சிதறடிக்க நம்மால் முடியும். அந்த உறுதி எனக்குண்டு. குறைந்தது 5 அல்லது 10 ஆண்டுகளில் அதைச் செய்து முடிப்பேன். எனினும் நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்று அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

அந்த அதிக விலை என்பது என்ன? திராவிடர்களாகிய நாம் இந்துக்களல்ல என்று பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டுவதே யாகும். இந்து மதந்தான் ஜாதி மத பிரிவுகளை, வர்ணாஸ்ரமத்தை வலியுறுத்தி நிற்கச் செய்கிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று வாழ்ந்த சமுதாயத்தில் பல ஜாதி, பல கடவுள்கள் மலிந்து மக்களை மாக்களாக்கி விட்டது. அதன் பேராலுள்ள ஆதாரங்களுக்கும் நமக்கும் இருந்து வரும் தொடர்பு அறவே அகற்றப்படவேண்டும். இவைகள் ஒழிந்த பின்னரே மக்கள் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்னும் பகுத்தறிவு உதயமாகும். நல்லாட்சியும் நிறுவ முடியும். அந்நிலை உண்டாக்கப்படாதவரை நல்லாட்சி என்பது ஏட்டளவிலும், அதற்கு மாறான காட்டுமிராண்டித்தனமான ஆட்சியே நடைமுறையிலுமிருந்து வரும். இது உறுதி. எனது 35 ஆண்டின் பொதுநலத் தொண்டிலிருந்து காணப்படும் அனுபவம் வாயிலாக இதைக் கூறத் துணிந்தேனேயல்லாது கேவலம் வீம்புக்காக அல்ல என்பதை எனது காங்கிரஸ் திராவிடர்கள் இனியாவது கருத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

தோழர்களே. திராவிடர் கழகம் மேற்கொண்டுள்ள பொறுப்பான இக் காரியங்களுக்குக் காங்கிரஸ் திராவிடர்கள் ஆதரவு ஆதிக்கத்தில் நாங்கள் பங்கா கேட்கிறோம்? அல்லது அதற்காகவா இயக்கத்தை நடத்துகிறோம்? பின் எதற்காக காங்கிரஸ் திராவிடர்களுக்கும் - திராவிடர் கழகத்தினருக்கும் மனக்கசப்போ வேற்றுமையோ சண்டையோ இருக்க வேண்டும்? அவர்கள் சூத்திர-பஞ்சம பட்டத்தை சர்-திவான் பகதூர் பட்டம் போல ஏற்று மகிழ்ச்சியடைந்து வருகிறார்கள். நாம் அவ்விழி நிலையிலிருந்து உணர்வு பெறுங்கள் என்று கூறுகிறோம். இது ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த வகையில் காங்கிரசுக்குத் திராவிடர் கழகம் விரோதமாகும் என்று கேட்கிறேன்.

நான் கூறும் பஞ்சம-சூத்திரபட்டம் ஒழிந்தால், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் காமராஜர், சிவசண்முகம், போன்றவர்களுக்கும் எங்களுக்கும் சேர்த்துத்தானே மனிதத் தன்மை உண்டாகப் போகிறது. நாங்கள் மட்டுமா சூத்திரப்பட்டமோ, பார்ப் பனீயமோ ஒழிவதால் பயனடையப் போகிறவர்கள்?

இன்னுங் கூறுவேன். பார்ப்பனர்கள் கூட ஓரளவுக்கு திருந்தி விடுவார்களே. மனிதத்தன்மையை மறைத்து, மடமையை வளர்த்து அதன் பேரால் வயிறு வளர்ப்பவர் களுக்குத் தவிர மற்றவர்களுக்குத் திராவிடர் கழகம் ஒரு போதும் விரோதமாயிருக்க முடியாதே. இதை இன்னும் தோழர் காமராஜர் போன்றவர்களே உணரவில்லையென்றால் நம்நாடு என்றுதான் உண்மையான விடுதலை யடையமுடியும். இப்படியே நாம் காலமெல்லாம் கட்சிச் சண்டையிலேயே காலந்தள்ளவா பிறந்தோம்? நமது பிற்கால சந்ததியாகிலும் சற்று மான ரோஷமுடன் வாழவேண்டாமா? இதைச் சிந்தித்துப் பார்க்கச் சக்தியற்றவர்கள் எங்கள் மீதா பாய்வது? எங்களையா காட்டிக் கொடுப்பது? கொஞ்சமேனும் நன்றியிருக்க வேண்டாமா? இவ் வநீதிகள் ஒழியும்வரை திராவிடர் இயக்கமும் இருந்தே தீரும்.

எப்படி இந்து மதமும், அதைச் சார்ந்துள்ள ஆபாசங்களும் ஒழிய வேண்டுமென்று கூறுகிறோமோ, அதேபோன்று அரசியலிலும், நம் நாடு தனியாகப் பிரிந்தாக வேண்டும். இல்லையேல் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒருக் காலும் நிம்மதியான வாழ்வு கிட்டாது.
 
நம் நாட்டு வாணிபம் வடநாட் டான் ஆதிக்கத்திலிருப்பதா? வெள்ளையர் ஆதிக்கம் ஒழிந்தது என்றால் அந்த இடத்தில் வடநாட்டானும், பார்ப்பானுமா உட்கார்ந்து சவாரி செய்வது?

சென்ற மாதம் நம் நாட்டுக்கு வந்து சென்ற கனம் பட்டேல் அவர்கள் வெளிப்படையாகக் கூறிவிட்டாரே, தென்னாட்டை நம்பியே நாங்களிருக்கிறோம்; நாட்டைப் பிரிக்கும் எண்ணம் வேண்டாம் என்று. மற்றவர் நன்மைக்காக நாம் மடிவதா? இதற்குப் பெயர் தேச பக்தியா? அடிமைப்புத்தியா? நம் மந்திரிகளுக்கோ சிறிதேனும் அரசியல் ஞானமேயில்லை. தங்களுக்குக் கிடைத்துள்ள பட்டங்களையும், பதவிகளையுமே பெரிதாகக் கருதி அதைக்காப்பாற்ற கோஷ்டி சண்டைகள் போட்டுக் கொள்வதற்கே காலமெல்லாம் சரியாய்விடுகிறது. அவர்கள் பகுத்தறிவு கொண்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்ய எப்படி அவகாச மிருக்கப்போகிறது?

நான் 1938ஆம் ஆண்டிலேயே கூறியிருக்கிறேன் நம் நாட்டின் இயற்கை வளம் மற்ற நாடுகளை விட எவ்வளவு அதிகம் என்பதையும், அதன் காரணமாக நாம் தனித்து நின்று ஆட்சி செய்ய முடியுமென்றும், அவ்வித உண்மையான சுயராஜ்யம் கிடைத்தால், மேல்ஜாதி, கீழ்ஜாதி முதல் ஏழை, பணக்காரத்தன்மை வரை அடியோடு ஒழிக்கப்பட்ட சமதர்ம ஆட்சியாக செய்து விட முடியுமென்று. நமக்கு 1500 மைல் கடலோரமிருக்கிறது. நாம் பரம்பரை பரம்பரையாக கடல் கடந்து வாணிபம் செய்திருக் கிறோம். பேரறிஞர்களைப் பெற்றிருக்கிறோம். வீரமுடன் வாழ்ந்திருக் கிறோம். நீதி, நேர்மை, ஒழுக்கம், அறிவு, அன்பு ஆகியவை களை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு சீரும் சிறப்புடனுமிருந்திருக்கிறது. இவ்வித இயற்கை வளங் கொண்ட நாடு இன்று கஞ்சிக்கு, சோற்றுக்குக் காற்றாய்ப் பறப்பதா?

திரைகடலோடியும் திரவியந்தேடு என்று கூறியது நம் மூதாதையர்களா? அல்லது வடநாட்டவர்களும் பார்ப்பனர் களுமா என்று கேட்கிறேன். அவன் கடலில் பிரயாணம் செய்வதையே, பாபம் என்று தானே கூறியிருக்கிறான். அவர் களுக்குக் கடல் ஏது? மேல் நாடுகளிலிருந்து வரும் சாமான்கள் வட நாட்டு வழியாக வரும்வகையில் ஏற்பாடு செய்து கொண்டதால் இன்று எல்லா ஆதிக்கமும் அவர்களுக்கு?

நேராக நம் நாட்டுக்கு வரும் நிலையை உண்டாக்கி விட்டால் அவர்கள் ஆதிக்கத்துக்கு நாம் உட்பட்டிருப்பது ஒரு விநாடியில் ஒழிந்து விடாதா? இதைத்தானே திராவிடர் கழகம் கூறுகிறது? இதைத் தேசத்துரோகம் என்று சிறிதேனும் அரசியல் ஞானம் இருப்பவன் கூற முடியுமா? இதற்காக காங்கிரஸ் திராவிடர்கள் ஏன் பாடுபடக்கூடாது? ஏன் நம் நாடு அந்நியர்களால் சுரண்டப்பட வேண்டும்? இதை இளைஞர்களாவது கவனிக்க வேண்டாமா? இவைகளைச் சிந்திக்காமல் எங்களை விரோதி களாகக் கருதுவது சரியா?

நான் இன்று இம் மேடையில் மீண்டும் கூறுகிறேன். நாளைக்கே காங்கிரசில் தீர்மானம் போடட்டும், இனி இந்நாட்டில் பார்ப்பான், பறையன், சூத்திரன், ஏழை, பணக்காரன் வித்தியாசங்களிருக்காது; நம் நாடு எந்த அந்நியர்களின் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு இருக்காது; திராவிட நாடு என்று கூற மனமில்லா விட்டாலும் தென்னாடு தனித்து நின்று அதன் அரசியலை நடத்தும் என்று. அதற்கடுத்த நாளே திராவிடர் கழகத்தைக் கலைத்துவிடுகிறேன். எங்களுக்கு மேற்கூறிய கொள்கை தவிர வேறு எந்த எண்ணமும் கிடையாது என்று உறுதி கூறுகிறேன்.

3.4.1949 அன்று விருதுநகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (விடுதலை 07.4.1949)

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...