Thursday, January 31, 2013

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?


ஒரு விபத்து, உடன் வேலை பார்க்கும் ஒருவரின் பையன் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில் இருந் தான் . நானும் என் துணைவியார் சொர்ணமும் பார்க்கச் சென்றிருந் தோம். மருத்துவமனையில் அடிபட்ட பையனோடு அவனது தாயார் இருந்தார். தைரியம் சொன்னோம், நமது கொள்கை பற்றி அறியாத அவர், என் மகன் மிகுந்த ஆபத்தில் இருக்கிறான், கடவுள்தான் அவனைக் காப்பாற்ற வேண்டும், தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றேன், கடவுள் என் மகனை எப்படியும் காப்பாற்றி விடுவான் என்றார். உடன் வந்திருந்த சிலர் நாங்களும் எங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறோம், சின்ன வயது, கடவுள் காப்பாற்றி விடுவான் என்றனர். நானும் என் துணைவியாரும் மனிதம் கருதி அந்த இடத்தில் ஒன்றும் விவாதம் செய்ய வில்லை.
பிரார்த்தனை செய்தால் கடவுள் காப்பாற்றி விடுவான் என்றால் மருத் துவமனைக்கே கொண்டு வரவேண்டிய அவசியமில்லையே, கசிந்துருகி கண்ணீர் மல்க பாட்டுப்பாடி பிரார்த் தனை செய்தே காப்பாற்றி விடலாமே என்று அந்த இடத்தில் கேட்கத் தோன் றவில்லை. மிகப்பெரிய இக்கட்டில் இருக்கும் சகோதரி தன்னுடைய ஆற்றாமையைத் தணிப்பதற்காக ஏதோ கடவுள் என்று கதைக்கிறாள் என்று வந்து விட்டோம். மருத்துவமனையில் இருந்த அந்தப் பையன் இறந்து விட்டான். சென்று வந்தோம். சில மாதங்களுக்குப் பின் அந்த பையனின் தாயாரைப் பார்க்க நேர்ந்தது.
பக்தி மார்க்கத்தின் மொத்த உருவமாக இருந்தார். பிரார்த்தனை செய்து, அந்தக் கடவுள் ஒன்றும் செய்ய வில்லையே, (ஏனெனில் கடவுள் இருப் பதாக நம்புகிறவர்கள் அவர்கள்)- கடவுள் மீது மொத்தக் கோபம் வந்து பக்தி மார்க்கத்தை கழற்றி வீசி எறிந்திருப்பார் என நினைத்ததால் இப்படி இருக்கிறாரே எனப் பேச்சுக் கொடுத்தேன். கடவுள் என்னை ரொம்பச்சோதிக்கிறான் சார், அதனாலே விடாமல் அவனைத் துதித்து, சோதனையக் குறைக்க வேண்டுகிறேன் என்றார். எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை- அவரது அறியாமையை நினைத்து.
நல்லது நடந்தால் பிரார்த் தனைக்கு பலன் கிடைத்து விட்டது, கெட்டது நடந்தால் கடவுள் சோதிக் கிறான், அட எப்படி என்றாலும் கடவுள் என்னும் கருத்துக்கு பங்கம் வராமல் நமது மக்கள் மூளையில் ஏற்றி வைத்திருக் கிறார்களே என்னும் எண்ணம் ஓடியது.         அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் உடல் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை என்று பேசமுடியவில்லை என்றார் நண்பர் ஒருவர். ஏதாவது பிரச்சனை என்று சொன்னாலே இந்த ..... பிரிவு ஆட்கள் வந்து விடுகிறார்கள் சார். உங்கள் பிரச்சனை உடனே தீர்ந்து விடும், பிரார்த்தனைப் பெருவிழா அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது வாருங்கள், குடும்பத்தோடு வாருங்கள் என்று கூப்பிடுகிறார்கள்,நாம் வரவில்லை என்று சொன்னாலும், மறு நாள் வந்து எங்கள் கூட்டத்தில் உங்கள் பிரச்சனையைக் குறிப்பிட்டு, பிரார்த்தனை செய்தோம், எங்கள் பிரார்த்தனை மூலமாக உங்கள் பிரச்சனை முடிந்து விடும் என்று சொல்லி, ஒருவர் இருவர் அறிந்திருந்த பிரச்சனையை அலுவலகம் முழுக்க அறிந்த பிரச்சனையாக ஆக்கி விடு கிறார்கள் என்றார். அவர்களுக்கு எல்லாம் பிரேயர்தான். பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர், நான் ஒரு நாள் இவர்களின் பிரேயர் கூட்டத்திற்குப் போயிருந்தேன், எதை, எதையோ உளறி விட்டு அந்நிய மொழியில் பேசினேன் என்று சொல்கிறார்கள் .என்றார். சார், அலுவலகத்தில் இருந்த ஒரு நோட்டைப் பத்து நாளாக் காணாம். எங்கே, எங்கே என்று தேடினோம் , காணாம், திடீரென்று சிலர் , நாங்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம், நோட்டைக் கண்டுபிடித்தோம் என்று சொல்கிறார்கள், என்றார் நண்பர்.  என்னத்ததான் இவர்கள் எம்.எஸ்.ஸி, எம்,இ, பி.இ. படித்தார்களோ தெரிய வில்லை என்றார், செவிடர்கள் கேட்கிறார்கள், குருடர்கள் பார்க் கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று கூசாமல் பொய்யைக் கதைக்கிறார்கள். ஆனால் ஒரு பெருங்கூட்டம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறதே, தான் படித்த அறிவியல் உண்மை களோடு ஒப்பிட்டுப் பார்க்க மறுக்  கிறார்களே, மெத்தப்படித்தவர்கள் கூட என என் மனம் எண்ணியது.
வீடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், காடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், உடல் நலம் பெற வேண்டுமா? பிரார்த்தனை பண்ணுங்கள் என்னும் சத்தம் நம்மைச் சுற்றி கேட்டுக்கொண்டேயிருக்கிறது. "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- திருவத்திபுரத்தில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், 13.3.12 அன்று சக்தி விகடனும், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. சக்தி விகடனின் 82 ஆவது திருவிளக்கு பூஜையாம் இது! இந்தப் பக்கம் சென் னையில் இருந்தும் அந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்தும் என... பல ஊர்களில் இருந்தும் வாசகியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ''சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் நான் கலந்து கொள்வது, இது 6 ஆவது முறை. வீடு வாங் கணுங்கற பிரார்த்தனை முதல் எல்லாமே நிறைவேறிருக்கு'' என்றார் சென்னை வாசகி லீலாவதி. "இது பத்திரிக்கையில் வந்த செய்தி. சக்தி விகடனுக்கு பத்திரிகை விற்கும், எண்ணெய் நிறுவனத்திற்கு எண் ணெய் விற்கும்.
- முனைவர் வா. நேரு தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்

ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?


  • ஈழத்தில் 90 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்களமயமாக்கப்பட்டு இருக்கின்றன
  • ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
    4 ஆம் தேதி டெசோ கூட்டத்தில் முடிவு செய்யப்படும்!
தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி
டில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து சென்னை திரும்பிய டெசோ அமைப்பு குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின், பேரா. சுப. வீரபாண்டியன்,  டி.ஆர். பாலு எம்.பி., தொல். திருமாவளவன் எம்.பி., ஆகியோர் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். (சென்னை, 30 .1.2013)

சென்னை, ஜன. 31 - 90 தமிழ் ஊர்களின் பெயர் களை சிங்கள மொழியில்   மாற்றம் செய்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் - அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை வரும் 4ஆம் தேதி சென்னையில் கூடவிருக்கும் டெசோ அமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் -டெசோ தலைவர் கலைஞர்  அவர்கள்.
டில்லி சென்று திரும்பிய `டெசோ குழுவினரின் சந்திப் புக்குப் பின் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி!
புதுடில்லியில் பல்வேறு நாட்டுத் தூதர்களைச் சந்தித்து `டெசோ அமைப்பின் தீர்மா னங்களை வழங்கிவிட்டு சென்னை திரும்பிய தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை யிலான குழுவினர்  தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை நேற்று (30.1.2013) மாலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து விளக்கம் அளித்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த  கலைஞர் அவர்கள், டெசோ குழுவினர் டில்லி சென்று குடியரசுத்  தலைவர், வெளிநாட்டுத் தூதர் களைச் சந்தித்து  ஈழத் தமிழர்களின் துன்ப வாழ்வில் விடியல் காண்பதற்கான கருத்துக்களை  - திட் டங்களை விளக்கியுள்ளனர்.  இதில் அமெரிக்கா முக்கியப் பங்காற்றும்,  அதற்கு அழுத்தம் கொடுக் கவே தூதர்களைச் சந்தித்துள்ளனர் என்றும் ராஜபக்சே இந்தியா வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட அதன் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழு தீர் மானிக்கும். ஈழத் தமிழர்களின் விடிவு காலத்தை விரைவுபடுத்து வதற்கான தொடர் நடவடிக்கைகள் பற்றி வரும் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள `டெசோ இயக்கம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும்  என்றும்  குறிப்பிட்டார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது : -
தி.மு.க. தலைவர் கலைஞர் :- டெசோ  வகுத்த திட்டப்படி,  இந்த அமைப்பிலே உள்ள குழு வினர்  டில்லி சென்று,  அங்குள்ள  வெளி நாட்டுத்  தூதுவர்களைச் சந்தித்து,  ஈழத் தமிழர்கள்  நிலை குறித்த விளக்கங்களையும், அவர்களின் துன்ப வாழ்வு விடியல் காண் பதற்கான  கருத்துக்களையும், திட்டங்களையும் டெசோ இயக்கத்தின் சார்பில்  விளக்கியிருக்கிறார்கள்.
டில்லி சென்ற  இந்தக் குழுவில்  தளபதி மு.க. ஸ்டாலின்,  தமிழர் தலைவர், திராவிடர்  கழகத் தலைவர் கி. வீரமணி,  விடுதலைச் சிறுத்தைகள் கழகத் தலைவர் தொல். திருமா வளவன்,   திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன்,  திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன்,  ஒருங்கிணைப்பாளரும்,  நாடாளுமன்ற  தி.மு. கழகக் குழுவின் தலைவருமான டி.ஆர். பாலு  ஆகியோர்  சென்று திரும்பியுள்ளார்கள்.  இவர்கள்  மான்டி நீக்ரோ,  யு.எஸ்.ஏ.,  ரஷ்யா,  இத்தாலி,  மலேசியா,  எஸ்டோனியா ஆகிய நாடுகளின் தூது வர்களைச் சந்தித்து  டெசோ இயக்கத்தின்  தீர்மானங் களையும் கருத்துக்களையும்,  ஈழத் தமிழர்களின்  விடிவுகாலத்தை விரைவுபடுத்து வதற்கான  முயற்சி களில்  குறிப்பிடப்பட்ட  இந்த நாடுகளும் உதவிக் கரம் நீட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டி ருக்கிறார்கள். சென்று திரும்பியுள்ள குழுவினர்  வருகிற  4ஆம் தேதி நடைபெறவுள்ள  டெசோ இயக்கத்தின் கூட்டத்தில்  இவற்றை விளக்கி  தொடர் நடவடிக் கைகள் பற்றி டெசோ இயக்கம் முடிவெடுத்து அறிவிக்கும்.
நான் குறிப்பிட்ட மற்ற நாடுகளின் தூதுவர்கள் அன்னியில்,  இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்து, அவருடைய ஆதரவையும் கோரியுள்ளார்கள்.
விஸ்வரூபம் படப் பிரச்சினை:
விளக்கமளித்து நீண்ட கட்டுரை!
செய்தியாளர் :-  விஸ்வரூபம் படப் பிரச் சினையால் கமல்ஹாசன் இந்தியாவை விட்டே வெளியேறப் போவதாகச் சொல்லியிருக்கிறாரே?
கலைஞர் :-  நான் இதைப் பற்றி முரசொலியில் நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்.   அதைப் படித்தால் விளக்கம் பெறலாம்.
செய்தியாளர் :- காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டு மென்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் அதைப் பற்றி  எந்தவித மான எதிர்ப்பும் பெரிதாக இல்லாமல் வேறு விஷயங்களில் அரசின் கவனம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?
கலைஞர் :- உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் எல் லாம், அதனுடைய விளைவுகளைப் பற்றித் தான் சொல்ல முடியுமே தவிர, நீதிமன்றத்தின் தீர்ப்பு களைப் பற்றி விமர் சிக்க இயலாது, கூடவும் கூடாது.
செய்தியாளர் :-  கடந்த அய்.நா. மன்றத்தில் இலங்கை பற்றி இயற்றப்பட்ட தீர்மானத்திற் கும்,  வரும் மார்ச் மாதத்தில் மனித உரிமை ஆணையத்தில் எந்த விதமான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று டெசோ மூலம் வலியுறுத் தப்படுமா?
கலைஞர் :- அதைப் பற்றியெல்லாம்  4ஆம் தேதிக்குப் பிறகு சொல்கிறோம்.
செய்தியாளர் :-  அமெரிக்க நாட்டுத் தூதரைச் சந்தித்தபோது, டெசோ குழுவினருக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது?
கலைஞர் :- அமெரிக்கா முக்கியப் பங்காற் றும் என்று எதிர்பார்க்கிறோம், நம்புகிறோம்.  அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இப்போது தூதுவரைச் சந்தித்திருக்கிறோம்.
செய்தியாளர் :- மத்திய அரசு  பத்ம விருதுகளை அளிப்பதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பாடகி ஜானகி அம்மையார்  அந்த விருதையே மறுத்திருக்கிறாரே?
கலைஞர் :- அந்த விவரங்கள் எனக்குத் தெரி யாது. அந்த விருதைப் புறக்கணித்த  இசையரசி  ஜானகி அம்மையாரிடம்தான்  முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
செய்தியாளர் :-  அந்த அம்மையார் தெரிவித்த; தாமதமாக இந்த விருது கிடைத் திருக்கிறது என்ற கருத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?
கலைஞர் :-  நான் அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு தலைவர்  கலைஞர் அவர்கள் செய்தி யாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
இந்நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தி.மு.க. நாடா ளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.  இளங்கோவன்  சுகவனம் மற்றும் தி.மு.க. சென்னை மாவட்டச் செய லாளர் ஜெ. அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.



ராஜபக்சே வரும்போது எங்கள் எதிர்ப்புக் குரல் எப்படி இருக்கும்?
செய்தியாளர் :- கடுமையான எவ்வளவோ எதிர்ப்புகளையும் மீறி ராஜபட்சே இந்தியாவிற்கு வரப்போவதாகத் திட்டமிட்டிருக்கிறார்.  அப்போது டெசோ இயக்கம் என்ன செய்யும்?
கலைஞர் :- இப்போது தமிழீழத்தில்  தமிழ் மொழி, பண்பாடு -  இவற்றையெல்லாம் அறவே  ஒழிப்பதற்கு  சிங்கள அரசு திட்டமிட்டு,  அதற்கு அடையாளமாக  இதுவரையிலே  ஏறத்தாழ 90  ஊர்களின் தமிழ்ப் பெயர்களை, சிங்களப்  பெயர்களாக மாற்றியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்களை ஏற்கெனவே  கொன்று  குவித் ததற்கு  ஈடான  செயலாகவே  இந்தப் பெயர் மாற்றங்களை நாங்கள் கருதுகிறோம்.   எனவே  எங்கள் எதிர்ப்புக் குரலைக் காட்ட  ராஜபட்சே வரும்போது  எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை  டெசோ  குழு தீர்மானிக்கும்.
செய்தியாளர் :- மொத்தம்  47 நாடுகளின் தூதுவர்களைச் சந்திக்கப் போவதாகச் சொல்லப்பட்டது.  மீதமுள்ள நாடுகளின் தூதுவர்களையும் சந்திக்கும் திட்டம் இருக்கிறதா?
கலைஞர்:- முதற்கட்டமாக தற்போது  இந்த நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்திருக்கிறார்கள். அதற்கடுத்த கட்டங்களில் மற்ற நாடுகளின் தூதுவர்களையும் இந்தக் குழுவிலே உள்ளவர்கள்  சந்திப்பார்கள்.
செய்தியாளர்:- புதிய தலைமைச் செயலகத்தில் அவசரமாக இன்றைய தினம்  மருத்துவமனையைத் தொடங்கியிருக்கிறார்களே?
கலைஞர்:- தமிழ்நாட்டில்  நடைபெறுகின்ற  இதுபோன்ற  காரியங்களைப்பற்றி, நான்  என்ன சொல்ல முடியும்?

கமல்ஹாசன் விஸ்வரூபம் தடை பற்றி...


வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி!
கலைஞர் கடிதம்
உடன்பிறப்பே,
கலைஞானி தம்பி கமல்ஹாசன்  தயாரித்து, இயக்கி,  நடித்துள்ள விஸ்வரூபம்  திரைப்படத் திற்கு  தமிழக அரசு  விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது  கவனத்தையும்  ஈர்த்திட்ட  பிரச்சினை யாகும். 29-1-2013 அன்று மட்டும்  சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னி லையில்  ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசா ரணை நடை பெற்றுள்ளது. விஸ்வரூபம்  திரைப்படம் தமிழகத் தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப் படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு  எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து  ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  தமிழக அரசு  விஸ்வ ரூபம் திரைப்படத்தை  தமிழகத்திலே வெளி யிட  தடை பிறப்பித்தது.
தடை உத்தரவை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந் தது.   அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடை பெற்றுள்ளது.   இஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் அவர்களோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோ எந்த அளவிற்கு  பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன்  26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டி ருந்தேன்.
அந்த அறிக்கையில் மேலும் உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ, கிளர்ச்சி களையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை என்பதைக் குறிப்பிட்டதோடு, விஸ்வரூபம்  திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை  மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும்,  சட்டம், ஒழுங்கு, அமைதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப் பிலே உள்ள தமிழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பல தரப்பினரும் என்ன கூறுகிறார்கள்?
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விடுத்த அறிக்கை யிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டு கோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  பா.ஜ.க. தலைவர் பொன். ராதா கிருஷ்ணன்,  விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர்  தொல்.திருமாவளவன்,  திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா,  பார்த்திபன், அமீர் போன்றவர்கள்  விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர்.
மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப் பட்டவர் என்பதையும்,  யாருடைய மனதையும் புண் படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்ப தையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக,  கலைஞானி கமல் அவர்களே விடுத்த அறிக்கையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப் படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள்  தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும்  தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன் வரவில்லை.
தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார்,  இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய  ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடி மாட்டு  விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள்  தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப் படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.  அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலைஞானி கமல் பேசும்போது, வேட்டி கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வர வேண்டும் என்று ப.சிதம்பரம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம்  எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.
இந்த வழக்கினை விசாரிக்கும்  உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது,  உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.
இந்து ஏடு என்ன கூறுகிறது?
29-1-2013 தேதிய இந்து  நாளிதழ்  இந்தப் பிரச்சினை பற்றி ஒரு நீண்ட தலையங்கமே Quash the Ban, Screen the Film அதாவது தடையை நீக்கு, திரைப்படத்தை வெளியிடு என்ற  தலைப்பிலே  எழுதியுள்ளது. அதில், The delay in overturning the unjustifiable ban on Kamal Haasan’s Vishwaroopam is beginning to appear every bit as unjustifiable.   It was only two years ago that the Supreme Court set aside the two-month ban on the Hindi film Aarakshan on the ground that States cannot proscribe films that have been cleared by the Central Board of Film Certification on the mere apprehension that screening them may cause a law and order problem.   As we pointed out recently, the landmark case that set the tone for such judgments was S.Rangarajan v/s P. Jagajivan Ram, where the Supreme Court held that “freedom of expression cannot be suppressed on account of threat of demonstrations and processions and threat of violence”.   The ban on Vishwaroopam must be quashed and the police directed to provide adequate protection to threatres and moviegoers.”
(கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் அரக்ஷன் என்ற இந்தித் திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு  ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படம் திரையிடப்படுவது  சட்டம் ஒழுங்கு பிரச்சி னையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது.   இந்திய உச்சநீதி மன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கி யுள்ளது. எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெக ஜீவன்ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் வன்முறைக்கு வழி வகுக்கும்  ஆர்ப்பாட்டம்,  ஊர்வலம் என்பதற்காக  பேச்சுரி மையை நசுக்கக் கூடாது என்று தீர்ப்பு அளித் துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரை யரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாது காப்பைத் தர வேண்டும்)
- என்று  இந்து  ஏட்டில் தலையங்கத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்து நாளிதழ் இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன் வந்ததா?  முன் வந்திருந் தால்தான் மனித நேயமிக்க அரசாக அமைந்து விடுமே?
எந்த அளவுக்கு ஜனநாயகம்?
தமிழக அரசு முன் வராத காரணத்தால்தான் நேற்றையதினம் உயர் நீதி மன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.
அந்த வழக்கில் கமலுக்காக வாதாடியவர் யார் தெரியுமா? கழக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக திறம்படப் பணியாற்றிய  மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான்!  அவர்  நீதி மன்றத்தில், விஸ்வரூபம்  திரைப் படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப் படுத்த வில்லை என்றும், தமிழகம் முழுவதும்  31 மாவட்ட கலெக்டர்களும்  சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும்,   இந்தத் திரைப் படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது,  தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும்,  தணிக் கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக் கிறார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார்.
அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த  144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித் திருக்கிறார். ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா?  இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில்  11.30 மணிக்கு  தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்களின் வீட்டிற்கே சென்று,  தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார் கள்.  தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு  ஜனநாயகமும், மனிதாபிமானமும்  இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம்  தேட வேண்டுமா என்ன?
துப்பாக்கி திரைப்படம்
ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று  இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா  ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்திடும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதா? என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது.
அதில், முஸ்லீம்களையும்  விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அவர்களுடைய ஆட்சேபனைகளையும் அ.தி.மு.க. அரசு ஆதரிப்பது;  முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்துக் கொள்வதற்காகவே  என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.  ஆனால் அதே நேரத்தில் துப்பாக்கி திரைப்படத்திற்கு  ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டபோது, முதலமைச்சர் ஜெயலலிதா உள்துறை செயலாளரிடம் இரு தரப்பினரையும் அழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய தாகவும் முஸ்லீம் தலைவர் ஒருவர் தெரிவித்தார் என்று எழுதப்பட்டுள்ளது.
கரசேவை - நினைவிருக்கிறதா?
டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியவாறு  ஜெயலலிதா  எப்படியாவது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பெற முயற்சித்தாலும்,  அவருக்கு இஸ்லாமியர்கள் பால் எந்த அளவிற்கு உண்மையான பற்று உண்டு என்பதற்கு கரசேவை நடைபெற்றபோது அவர் எவ்வாறு  முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என் பதும், சிறுபான்மையினர்,  பெரும்பான்மையினரை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டுமென்று அறிக்கை விட்டவர் என்பதும்,  அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று கேள்வி எழுப்பியவர் என்பதும், கரசேவைக்கு அ.தி.மு.க. சார்பில் ஆட்களை அனுப்பியவர் என்பதும் இன்னும் மறந்திருக்க முடியாத நிதர்சன உண்மை களாகும்.
ஆனால் கமல் படத்திற்கு ஜெயலலிதா இந்த அளவிற்கு எதிர்ப்பினைக் காட்டுவதற்கு என்ன தான் காரணம்?  இந்தப் பகை என்பது இப்போது ஏற்பட்ட தல்ல;  அன்பு நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்ட பகையாகும். கமல் அவர்கள் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர்.  கலந்து கொண்ட போது, அம்மையார் ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில்,
கமலஹாசனின் விக்ரம்  படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம் மதித்தும்,  உங்களை அவமானப்படுத்தும் விதத்தில்  விளம்பரமே செய்யாமல் விட்டானே  - அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தார்களா?  நமக்கென்ன  என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள்.  ஆனால் என்னால் அப்படி யிருக்க முடியவில்லை.   அடுத்த நாளே -  கமலஹாசன் படம் ரிலீஸ்  ஆன நாளன்று  - ஒவ்வொரு நாளேட் டிலும்  முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே?  நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ  -  நான் கவனித் தேன்.  தனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாச னுக்குத் தெரிகிறது  -  ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக் குடைய  முதலமைச்சரை அழைத்து விட்டு விளம் பரமே செய்யவில்லை  என்றால்  -  அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா  நினைத்தான்? என்றெல்லாம்  கைப்பட  எழுதியதை  நினைவுகூர்ந்தால்;
விஸ்வரூபம்  திரைப்படத்திற்கு  விதிக்கப் பட் டுள்ள  தடைக்கான  உண்மைக் காரணம்  தெரிகிறதா அல்லவா? பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவாரே;  எதற்காக  இந்தத் தடை என்பது  இப்போது புரிகிறதா இல்லையா?
அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 31.1.2013)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...