Total Pageviews

Friday, January 22, 2010

நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள்

புத்தகப் பட்டியல்


Thursday, January 21, 2010

யார் இந்த பெரியார்?


யார் இந்த பெரியார்?
காசியம்பதி
மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி
தினமும் காலையில் வில்வம் பறித்துக்-கொண்டு வரும் அந்த அந்தணப்பையன் பல்லே தேய்க்கலை, ஸ்நானமே பண்ணலை என்ற சேதி மடத்தலைவர் காதுகளை ஒரு நாள் எட்டியது. ராமு பாட்டிற்கு காலங்கார்த்தாலே வில்வமும் கையுமாய் குளிரில் நடுங்கியபடி வரும் போது, மடத் தலைவர் ராமுவின் மடி ஆசாரத்தின் லட்சணத்தை எல்லாம் தானே நேரிலும் பார்த்து விட்டார். அவருக்கு செ-மை கோபம் வந்தது, பட்டென அவர் ஏதோ கத்த, ராமுவும் பதிலுக்கு சுருக்கென ஏதோ சொல்ல, வாய் வார்த்தை முற்றிப்போய், பேக் அப் என்று விரட்டியே விட்டார் மடத்தலை-வர். அதனால் வேறு வழி இல்லாமல் ராமு நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கும் நிலைமை ஏற்பட்டது.
இனி என்ன செய்வது? ராமு பிராமணன் அல்ல என்பதால் இலவச போஜனம் அவருக்கு கிடைக்காது. அதே காரணத்தினால் மாறு வேஷம் தரிக்காவிட்டால், அந்த ஊரில் வேலையும் கிடைக்காது. அப்படியே, கிடைத்-தாலும், வில்வம் பரித்துபோடும் அற்ப வேலைக்கே, காலங்கார்த்தால எழுந்திரு, குளி, பல் தேய், லொட்டு லொசுக்கு என்று அத்தனை நிபந்தனைகள் விதித்தார்கள். சரி தான் இந்த இம்சைக்கு, பேசாம நம்ம ஊருக்கே போய் தொலைக்கலாம் என்று ராமு நினைத்திருக் கலாம். ஆனால் துறவி ஆகவேண்டும் என்கிற வைராக்கியமும், தனித்து வாழ வேண்டும் என்ற தீர்மானமும், வாழ்க்கையைப் பற்றிய தன் கேள்வி-களுக்கு பதிலை புரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற தேடலும், ராமுவை காசியிலே இருந்துவிடத் தூண்டியன.
ஆனால் காசியில் வேலை வெட்டி இல்-லாமல் எப்படி அப்படியே இருக்க முடியும். சாப்பாட்டிற்கு என்ன வழி? உழைக்காமல் சாப்பிட இருக்கவே இருக்கிறதே ஒரு தொன்-மையான வழி. அது தான் காசிக்கு வந்து கங்-கையில் அஸ்தியை கரைத்தால் நேரே ஆத்மா சொர்க்கத்திற்கே போய்ச் சேரும் என்று அத்-தனை மனிதர்கள் நம்பினார்களே. இப்படி கங்கைக் கரையோரம் சிரார்த்தம் செய்பவர்கள் பிண்டம் போடும் அரிசி, பழம் ஆகிய உணவு பொருட்களை வாங்கி உயிர் வளர்க்கும் பிச்சைக்காரர்கள் காசியம்பதியில் பல பேர் ஏற்கனவே இருந்தார்களே, அவர்கள் ஜோதி-யில் ராமுவும் போய் அய்க்கியமாகி, கூட்டத்-தோடு கூட்டமாய் நின்று பிண்டம், பழம் என்று சாப்பிட்டுக்கொள்ள ஆரம்பித்தார்.
யோசித்து பாருங்களேன். எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பையன், இப்படி உணவு, உடை, உறைவிடம் என்று எந்த அடிப்படைத் தேவைகளுமே நிறைவேறாத நிலையில், தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ வேண்டும்; அதுவும் ஒரு நாள் இரண்டு நாளைக்கு அல்ல, கிட்டத் தட்ட அய்ந்தாறு வாரங்களுக்கு என்றால், அவர் மனதின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? நிச்சயம் தான் என்ற அகந்தை இருந்திருந்-தால் இப்படி பிச்சைக்கார வாழ்வை அவர் மேற்கொண்டிருக்க முடியாது. சொகுசான சுலபமான வாழ்கை மீது நாட்டம் இருந்திருந்-தால் இப்படி தெருவில் வாழ்ந்திருக்க முடி-யாது, எதற்கு வம்பு, ஈரோட்டுக்கே போயிட-லாம் என்று நினைத்திருப்பார். ஆக அகம்-பாவ-மும் இல்லை, சுக போகத்தின் மேல் ஆசை-யும் இல்லை, ஆன்மீகத் தேடல் மட்டுமே அவரை மேலும் மேலும் தூண்டிக்கொண்டே இருக்க, தனக்கு நேர்ந்த எந்த கஷ்டத்தையும் பெரிது படுத்தாமல் காசியில் காலம் கழித்தார் ராமு.
காரணம் அவர் அதுவரை கேள்விப்-பட்டதை வைத்து அவர் காசி என்றால், அது மஹா புண்ணியம் வாய்ந்த பாரம்பரியமான திருத்-தலம். அங்கே எல்லாமும் சுத்தமாகவும், மேன்-மையாகவும், திருத்தமாகவும் இருக்கும் என்று நம்பி இருந்தார். இப்படி எல்லாம் ஏதாவது பிரத்தியேக சிறப்பில்லாமலா இத்தனை கால-மாய் இத்தனை கோடி இந்துக்கள் காசியை மிக புனிதமான நகரம் என்று சொல்லி போற்றி இருப்பார்கள்.
அதனாலேயே எத்தனை துன்பங்கள் வந்தாலும் சரி, துறவறம் என்ற குறிக்கோளில் இருந்து மாறுவதே இல்லை, காசியை விட்டுப் போவதே இல்லை என்று படு தீவிரமாய் இருந்தார் ராமு. ஆனால் காசியிலேயே இருந்து அங்கு அன்றாடம் நடக்கும் வாழ்வியல் சமாசாரங்-களை பார்த்த போது தான் ராமுவுக்கு தன் உலகமே வேறு விதமாய் புரிய ஆரம்பித்தது.
கங்கை ஒரு புண்ணிய நதி என்று எல்-லோரும் சொல்கிறார்களே, வெறும் ஒரு நதியை போய், புண்ணிய தீர்த்தம் என்று சொல்-வது எப்படி செல்லுபடியாகும்? எகிப்தில் ஓடும் நைல், வட அமெரிக்காவில் ஓடும் மிஸிஸிப்பி, தென் அமெரிக்காவில் ஓடும் அமேசான், ஆப்பிரிக்காவில் ஓடும் காங்கோ, ருஷ்யாவில் ஓடும் வால்கா, அவ்வளவு ஏன் பாகிஸ்தானில் ஓடும் சிந்துவைக் கூட யாரும் புண்ணிய நதி என்றெல்லாம் போற்றிக் கொண்-டிருக்க வில்லையே. இத்தனைக்கும் இந்த நதி-கள் கங்கையை விட வலிமையானவை; இன்னும் நிறைய உயிரைக் காப்பாற்றுபவை; அந்தந்த ஊர் மனிதர்களின் வாழ்விற்கே ஆதாரமானவை. ஆனாலும் இதில் எந்த நதியையுமே புண்ணிய தீர்த்தம் என்று அந்த நாட்டுக்காரர்கள் யாரும் கொண்டாட வில்லையே? ஏன்?
காரணம், எகிப்தியர், சிந்து நதியினர் எல்லோருமே மிக முதிர்ச்சி அடைந்த புத்திசாலிகள். இந்த குட்டை தண்ணீல குளிச்சா எல்லா பாவமும் போய்விடும் என்பது மாதிரியான பழங்குடி மனிதர்களின் குழந்தைத் தனமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருக்க-வில்லை. அதனால் நைல் நதியை ஒரு பெண்-ணாகவும் தெய்வமாகவும் பாவித்து, கங்கை-யைப் போல அவளை பகீரதன் தன் தவ வலிமை-யால் வானத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வந்தான். அவளை சந்தணு என்கிற அரசன் மணந்தான்; அவளுக்கு பீஷ்மன் என்கிற மகன் உண்டு; அவளை சிவபெருமானும் மணந்தார்; அவளை அவர் தன் தலையிலேயே சுமந்தார் என்பது மாதிரியான பலதாரக் கதைகளை சொல்லிக்கொண்டு காலத்தை வீணடிக்காமல், இந்த நதியை பாசனத்திற்கு எப்படி திசை-திருப்பிக் கொள்ளலாம்? என்று உருப்படியாக யோசித்தான் எகிப்து மன்னன்.
அதே போல் தான் யோசித்தான் கரிகால் சோழன். காவிரியை புண்ணிய நதி, அதில் நீராடினால் பாவம் போகும் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு வெட்டியாய் சுற்றாமல் கல்லணையை கட்டினோமா, காவிரியை அடக்கி பிரயோகித்தோமா? என்று ஆக்கபூர்-வமாய் செயல் பட்டான். ஆனால் அதே இந்தியாவின் இன்னொரு கோடியில் இருக்கும் கங்கை என்ற நதியை மட்டும் ஓவர் சென்டி-மெண்டுக்கு உட்படுத்துவது எத்தனை பெரிய முட்டாள்தனம்?
சரி, நதி தான் புண்ணியம் இல்லை என்றாகி விட்டது-. அப்படியானால், காசி என்கிற இந்த புராதனமான நகரம், ஒன்றும் இல்லாமலா அது புண்ணிய நகரம் என்று பெயர் பெற்றிருக்கும்? ஹிந்துமதம் என்ற ஒன்று உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பர்ஷவர் என்கிற இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர் பிறந்த ஊர் என்று சமணர்களால் போற்றபட்ட நகரம் காசி. அதன் பிறகோ, கவுதம புத்தர் காசியருகே இருக்கும் சாரநாத் என்கிற மான்கள் ஓடும் காட்டில் தங்கி நிறைய பிரசங்கமெல்லாம் செய்ததினால் பௌத்தர்களாலும், பிரத்தியேக நகர் என்று கருதப்படுகிறது இந்த காசி. அதனால் ஆதியில் சமணர்களும் பௌத்-தர்களும் இங்கே தீர்த்தயாத்திரை மேற்-கொள்ள ஆரம்பித்தார்கள். அசோகப் பேர-ரசனும், ஹர்ஷவர்த்தனரும், கனிஷ்கரும், இந்த ஸ்தலத்தில் பல திருப்பணிகள் மேற்கொண்டு இதனை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக்-கினார்கள். ஆனால் சமணமும், பௌத்தமும், தேய்ந்து ஓய ஆரம்பித்ததும், காசியின் மதச்சாயமும் மாறியது. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் காசிக்குப் போய், சக்தியின் செவி தோடு அங்கே விழுந்து விட்டதாய் ஒரு கதையைச் சொல்லி, அதனால் காசி இனிமேல் ஒரு சக்திஸ்தலம் என்று விட்டார். விசாலாக்ஷியுடன் விஸ்வ-நாதரை அங்கே குடி புக வைக்க, உடனே அது சைவர்களின் திருத்தலமானது. அதன் பிறகு முகலாய சாம்ராஜ்ஜியம் தலை தூக்கிய-தும், காசி எங்கும் முகலாய கட்டிடங் களும், பாதைகளும், பயணத்தடங்களும் கட்டப்பட, இப்படியாக ஒவ்வொரு சமயத் திலும் ஒவ்-வொரு காரணத்திற்காக காசி போற்றப்பட, ஆங்கிலேயர்கள் தான் முதலில் கண்டு பிடித்-தார்கள், காசி எப்பேர்ப்பட்ட ஒரு வணிக மையம் என்று! பல ஊர்களில் இருந்து பலதரப்பட்ட மனி-தர்கள் என்ன காரணம் சொல்லிக் கொண்டு எந்த ஊரில் கூடினாலும், அங்கே முதலில் நடப்பவை, விபச்சாரம், வியாபாரம், வன்முறை குற்றங்கள் தான்.
ராமு என்னமோ காசி தன் ஞானக்-கண்களை திறந்து வாழ்வியல் ரகசியத்தை தனக்கு படக்கென்று சொல்லிக் கொடுக்கும் என்று நம்பிக்கொண்டு காசியில் காலம் கழிக்க, தினம் தினம் அவர் தரிசித்ததென்னவோ, விதம் விதமான மனித சீர்கேடுகளைத் தான். துறவிகள் என்று சொல்லிக்கொண்டு போதைப் பொருட்களை ஊதித்தள்ளுவோர், அபச்சாரம் அபச்சாரம் என்று வாய் கிழிய பேசிவிட்டு, கொஞ்சமும் தயங்காமல் விபச்சாரம் புரிவோர். சைவம் சைவம் என்று சொல்லிக்கொண்டு மனித மாமிசம் உட்பட எல்லா விதமான மாமிசங்களையும் உட்-கொள்ளும் மனிதர்கள். தயவு தாட்சண்ய மின்றி, மதத்தின் பெயரால் சுயநலமாய் பிறரை ஏமாற்றும் கூட்டங்கள், இன்னும் இன்னும் நிறைய புண்ணியம் வேண்டும் என்கிற பேரா-சையில், யார் என்ன அபத்தமான சடங்கை சொன்னாலும், அடிபிரளாமல் அப்படியே செய்து வைக்கும், கண்மூடித் தனமான மனிதர்-கள்.இவர்களை எல்லாம் பார்க்கப் பார்க்க ராமுவின் மனதில் அதிருப்தி அலை அலையாய் படர ஆரம்பித்தது. தான் நினைத்தது போல, இது வரை தான் நம்பவைக்கபட்டிருந்தது போல, காசி என்பது ஒரு புண்ணிய பூமியே இல்லை. இந்த புண்ணிய பூமி பட்டமெல்லாம் பிழைப்ப-தற்காக புகுத்தப்பட்ட விளம்பர யுத்தி மட்டுமே. இந்த நகரின் அசிங்கங்களுக்கு மத்தி-யில் உட்கார்ந்திருந்தால், திடுதிப்பென்று மெய்ஞானம் ஒரு பிரகாசமான ஜோதியாய், கபாலத்தை துளைத்துக்கொண்டு அப்படியே உள்ளே இறங்கி, தன்னை ஆட்கொண்டு விடும் என்று எதிர்ப்பார்ப்பதெல்லாம் சுத்த பைத்-தியக்காரத்தனம்.
இந்த தெளிவு ஏற்பட்டதுமே ராமு, காசிக்கு ஒரு முழுக்கு போட முடிவெடுத்துவிட்டார். எப்படியும் ராமுவின் சுறுசுறுப்புக்கு காசியில் இப்படி வெறுமனே உட்கார்ந்து ஞானத்-திற்காக காத்திருப்பதெல்லாம் ஒத்துவராத காரியமாயிற்றே.
காசியை விட்டு போவது என்று முடிவு செய்த உடனே பயணச் சீட்டாவது வெங்காய மாவது, அது தான் சாமியார்/பிச்சைகாரன் கெட்டப்பில் இருக்கிறோமே, யார் கேட்-பார்கள்! என்று வித்தவுட் டிக்கெட், ரயில் ஏறி-னோமா, ஊர் போய் சேர்ந்தோமா என்று இருந்திருக்கலாம். ஆனால் ராமுவுக்கு நாணய-மாய் இருப்பதைத் தவிர வேறு எந்த குறுக்கு வழியும் தெரியவில்லை. அவசரத் தேவைக்கு என்று தன் இடுப்பில் அதுவரை கட்டி வைத்திருந்த தங்க மோதிரத்தை எடுத்தார், விற்றார். 19 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துக்-கொண்டு பயணச்சீட்டை வாங்கினார், ரயிலே-றினார். அஸ்ஸன்சூல், பூரி என்று இரண்டு இடங்களில் இறங்கி சில நாட்கள் தங்கினார். அப்புறம் கிளம்பி எல்லூர் என்ற இடத்திற்கு போனார். எதிர்பாராத விதமாக எல்லூரிலும் அவர் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை திசை மாறியது.

Saturday, January 9, 2010

பார்ப்பனர்களின் பத்திரிகா தர்மம்!


பார்ப்பனர்களின் பத்திரிகா தர்மம்!
மின்சாரம்

பாரதிய ஜனதாவில் உமா சேர வழியில்லை என்று தலைப்பிட்டு தினமலர் ஒருசெய்தியை வெளி-யிட்டுள்ளது.

பா.ஜ. கட்சியில் இருந்த உமாபாரதி, கடந்த 2003_இல் நடந்த ம.பி. சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, அம்மாநில முதல் அமைச்சராகப் பதவியேற்றார். பின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக உமாபாரதி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது உண்மைதானா? போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் தான் பதவியை ராஜினாமா செய்தாரா உமாபாரதி?

ஒரு ஆறாண்டுக்குள்ளேயே முரண்பாடான செய்திகளை இவர்களால் அவிழ்த்து விட முடிகிறது என்றால் மூவாயிரம் ஆண்டு செய்திகள்எல்லாம் எப்படியெல்லாம் மூக்கும், விழியும் வைத்து முக்காடு போட்டு செய்திகளை வீதி உலா வரச்செய்திருப்பார்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உமாபாரதி என்னும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் உழைப்பால், மதவாதச் கர்ச்சனையால், அம்மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து; வேறு வழியின்றி உமாபாரதியே அம்மாநில முதல் அமைச்சரும் ஆனார்.

இந்த நேரத்தில் 1994இல் கருநாடக மாநிலம் ஹுப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதிமீது கைது வாரண்டு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்தது _ அதாவது 10 ஆண்டுகள்கழித்து. இந்த நேரத்தில் பி.ஜே.பி.யில் இருந்த உயர்ஜாதி ஆதிக்க சக்திகளும், ம.பி. மாநில சொந்த கட்சி எதிராளி-களும் கூடி உமாபாரதி பதவி விலக வேண்டும் என்று நான்கு கால் பாய்ச்சல் பாய்ந்தனர்.

உமாபாரதி பதவி விலகினார். வழக்கு நடந்தது. அந்த வழக்கில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பும் அளிக்கப்பட்டது.

அந்த நிலையில் பா.ஜ.க., உயர் மட்டம் என்ன செய்திருக்க வேண்டும்? மரியாதையாக மீண்டும் மத்தியப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்க வேண்டுமல்லவா? அதுதானே அறிவு நாணயம்?

என்ன நடந்தது? தற்காலிக முதல் அமைச்சராக உட்கார்ந்த பாபுலால் கவுர் அந்த நாற்காலியை விட்டு விலக மறுத்தார் _ பிஜேபியின் உயர் மட்ட _ உயர் ஜாதி ஆதிக்கவாதிகளின் அந்தரங்க உதவியோடு. (பிற்படுத்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்-டோரையும் மோதவிடும் தந்திரம்)

இவ்வளவுத் தகவல்களும் உள்ளுக்குள் உதிரப் பெருக்கெடுத்துக் கிடக்க தினமலர் கொஞ்சம்கூட கூச்சமில்லாமல், போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் என்று எழுதுகிறது என்றால், இவாளின் பத்திரிகா தர்மத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை அறியலாம்.

உமாபாரதி என்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்; எப்படியும் எழுதலாம் என்ற எண்ணம் அவர்களிடத்தில் எப்பொழுதுமே இருந்திருக்கிறது. உமாபாரதிமீது வழக்கு என்பதற்காக பதவி விலகச் சொன்ன இந்த உத்தமப்புத்திரர்கள் இதே அளவுகோலை கட்சியின் மற்றவர்கள் விஷயத்தில் கடைபிடித்தார்களா?

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி-யான அத்வானியும், முக்கிய குற்றவாளியான முரளி மனோகர் ஜோஷியும் முறையே மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும் (அதன்பின் துணைப் பிரதமராகவும்), மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்களே, அது எப்படி?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையான முறையில் நெருக்கடி கொடுத்த நேரத்தில், அத்வானியும் ஜோஷியும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்த போது, அதனை ஜென்டில்மேன் வாஜ்பேயி ஏற்க மறுத்தது எந்த அடிப்படையில்? அதே நேரத்தில் அ.இ.அ..தி.மு.க. சார்பில் அமைச் சர் பொறுப்பேற்கச் சென்ற சேடப்பட்டி முத்தையா, அதன்பின் மதிமுகவைச் சேர்ந்த செஞ்சி ராமச்சந்திரன் (இவர்மீது நேரிடையாகக் கூட குற்றச்சாற்று இல்லை; உதவியாளர்மீது வழக்கு) ஆகியோர் பதவி விலகினார்களே!

பா.ஜ.க. என்றால் பன்னீரில் பூத்தது _ மற்ற கட்சிகள் என்றால் சாக்கடையில் ஜனித்தது என்ற நினைப்போ!
இந்த நேரத்தில் இன்னொன்றும் உண்டு. அயோத்தியில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம்தான்; அதற்காக அத்வானியும், ஜோஷியும் பதவி விலகத் தேவையில்லை என்று சொன்ன சொக்கத் தங்கம் யார் தெரியுமா? காஞ்சி சங்கராச்சாரியார் _ ஜெயேந்திர சரஸ்வதி. ஜார்க்கண்டில் இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? இதே சிபுசோரன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறி அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது பாரதிய ஜனதா நாடாளுமன்றத்தில் அடேயப்பா, எப்படியெல்லாம் கூச்சல் போட்டார்கள்? ஜனநாயக விரோதம் என்று ஜன-நாயகத்தின் நவீன காவல்காரர்கள் போல எவ்வாறெல்லாம் கத்தித் தீர்த்தார்கள்? அதே சிபுசோரன் ஜார்க்கண்ட் மாநில முதல் அமைச்சர்ஆவதற்குக் அழுத்தங் கொடுக்கிறார்கள் என்றால் பி.ஜே.பி.யின்தார்மீக ஒழுக்கம் என்று தம்பட்டம் அடிப்பதெல்லாம் யாரை ஏமாற்ற?

பார்ப்பனர்கள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு நேரிடையாக வருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற நிலையில், பாரதிய ஜனதா என்ற அரசியல் முகமூடி அணிந்து அதிகாரத்தைக் கைபிடிக்க வியூகம் வகுத்துள்ளனர் என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் உணர வேண்டும். அவர்களை உணர்ந்திட வைப்பதே நமது முக்கிய பணியாகும்.

Wednesday, January 6, 2010

அய்யப்பனின் மகரஜோதி மோசடி

எப்படி அனுமதிக்கிறது ஓர் அரசு?

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் செல்லும் பருவம் (Season) தொடங்கப்பட்டு விட்டது. கேரள மாநிலத்தில் உள்ள இக்கோயிலுக்குத் தமிழ்-நாட்டிலிருந்து செல்லும் பக்தர்களே அதிகம். இப்பொழுது இந்த வியாதி இலங்கைவரைக்கும் பரவி அங்கிருந்தும் வரத் தலைப்பட்டுள்ளனர். 400 பேர் கப்பல்மூலம் சென்னைக்கு வந்து இறங்கியுள்ளனர்.

பொங்கலையொட்டி மகர ஜோதி பிரதானமாக பெரிதாகப் பேசப்படும். அய்யப்பன் கோயில் விஷயத்தில் இந்த மகரஜோதி என்பதே மிகப் பிரதானமான ஒன்றாகும்.

ஆனால், இந்த மகரஜோதி உண்மையானதல்ல _ மோசடியானது. கேரள அரசாங்கமே தமது அதி-காரத்தின்கீழ் பணியாற்றும் மின்சாரத் துறை ஊழியர்-களைப் பயன்படுத்தி செயற்கையாகக் காட்டப்படும் தீபம் என்பது கேரளப் பகுத்தறிவாளர்களால் 1973, 1980, 1982 ஆகிய ஆண்டுகளில் நிரூபிக்கப்பட்டு-விட்டது. கேரளப் பகுத்தறிவாளர்களின் இந்தச் செயல்பாடு குறித்து மும்பையிலிருந்து வெளிவந்த பிளிட்ஸ் ஏடு (16.1.1982) படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டது. இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படவேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு அம்மாநிலப் பகுத்தறிவாளர்கள் ஒரு வேண்டு-கோளை வைத்தனர்; அரசு அசைந்து கொடுக்கவில்லை.

கேரள மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்துச் சொன்ன-போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்; அதே நேரத்தில் அதனைத் தடை செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

இப்பொழுது அடுத்தடுத்து பல தரப்புகளிலிருந்தும் உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) சில உண்மைகளை வெளி உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகர விளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம் இக்குடும்பத்தின் பி. ரவிக்குமார் சொல்லுகிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக்கொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலா-காவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடி-யைத் தொடங்கினர். கற்பூரத்தை மூட்டை மூட்டை-யாகக் கொட்டி கொளுத்தி மகர விளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்குக் கோயிலிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பலமேடு, மோசடியை அம்பலப்படுத்-திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973 இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பலமேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சித்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச் சட்டப்படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்-கினைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980 ஆம் ஆண்டிலும் திருச்சூரிலிருந்து பொன்னம்-பலமேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்-திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரேறு மகேஸ்வரரு மகர விளக்கை மனிதன்-தான் இயக்குகிறான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். தேவஸம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும் இதனை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதற்கு மேலாக அற-நிலையத்துறை அமைச்சர் ஜி. சுதாகரன் அவர்களும் மோசடி உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டு விட்டார் என்று தெகல்கா வெளியிட்டது.

இதற்குமேலும் என்ன ஆதாரம் வேண்டும் அய்யப்பனின் மகரஜோதி மோசடி என்பதற்கு? மோசடி என்று தெரிந்த பிறகும் ஓர் அரசு இதனை அனுமதிக்கிறது என்றால், அரசே மோசடிக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டது என்றுதானே பொருள்?

மதம், கடவுள், பக்தி என்ற பெயரால் கண்ணுக்குத் தெரிந்த ஒரு மோசடியை அனுமதிப்பது என்பது மக்கள் மத்தியில் எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்?

சாமியார்களும், அர்ச்சகர்களும் மோசடி வேலை-களில் ஈடுபடுவதும், ஆபாச லீலைகளில் ஈடுபடுவதும் இந்த அடிப்படையில்தானே! காவி கட்டிக்கொண்டு எந்த காலித்தனத்தில் ஈடுபட்டாலும் அரசாங்கமோ, நீதித்துறையோ கிட்டே நெருங்காது என்ற தைரியத்தில்தானே இவ்வளவு அயோக்கியத்தனமான செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்?

மோசடி என்று தெரிந்திருந்தும் ஒரு அரசு (அது-வும் மார்க்சிஸ்ட் அரசு) இப்படி நடந்துகொள்வது மிகவும் தரந்தாழ்ந்தது; தலைகுனியத் தக்கது _ நிரு-வாகம், சட்டம், நீதியைக் குழிவெட்டிப் புதைப்பதாகும்.

பகுத்தறிவாளர்கள் இந்த நிலையை ஒவ்வொரு மனிதரிடத்திலும் கொண்டு செல்வதை ஒரு கடமை-யாகக் கருதவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Saturday, January 2, 2010

2011ஆம் ஆண்டே வருக!

2010ஆம் ஆண்டில் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் போற்றத்தக்கவையே! அடுக்கடுக்கான மாநாடுகள் - அலை அலையாக வெளியீடுகள்! டில்லியில் பெரியார் மய்யம் திறப்பு மகத்தானது - அதன் வீச்சு இனி வருங்காலத்தில் பெரும் அளவில் இருக்கப் போகிறது.

தந்தை பெரியார் அவர்களின் தேவை உலகமெல்லாம் உணரப்படுகிறது. மதத்தின் மோதல்களுக்கிடையே மனிதம் சொல்லொண்ணாத் தீயில் கருகித் துடிக்கும் அவலம்!

இளம் குருத்துகளுக்கும்கூட மத வெறிப் பயிற்சியாம் - ஆயுதப் பயிற்சியாம்! இது எதில் போய் முடியும்?
இந்துத் தீவிரவாதம் பற்றி இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராகுல் காந்தியும் மனந் திறந்து சொல்லி விட்டார்களாம் - அப்படியே தாண்டிக் குதிக்கிறது இந்துத்துவா கும்பல்!

என்ன செய்வது? 1992 டிசம்பர் 6இல் - சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில், பெரும் பெரும் தலைவர்களின் தலைமையில் அடித்து நொறுக்கினார்களே - அந்தக் கொடிய கூட்டத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து சிறைக்குள் தள்ளியிருந்தால், அந்தக் கும்பலும், அமைப்பும் இருந்த இடம் தெரியாமல் மண்ணுக்குள் புதையுண்டு போயிருக்கும்.

சாதாரண குற்றங்களா அவை? அவற்றைச் செய்தவர்களை எவ்வளவு கடுமையாகத் தண்டித்தாலும் மக்கள் இரு கரம் கூப்பி, கரவொலி எழுப்பி வரவேற்கவே செய்வார்கள்.

இந்த அடிப்படைக் கடமையை, சட்ட ரீதியான செயல்பாட்டை கோட்டை விட்டுவிட்டு காங்கிரஸ் கைபிசைந்து நிற்பது பரிதாபமே! இந்தக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சட்டப்படி காலா காலத்துக்கும் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவார்களே!

இந்தக் குற்றவாளிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவை நாடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறது. குஜராத் - ஒரு மாநில அரசே முன்னின்று சிறுபான்மை மக்களை வேட்டையாடி முடித்தது.

இந்தியா முழுமையும் மதக் கலவரங்களும், குண்டு வெடிப்புகளும் இந்துத்துவா கும்பலின் திட்டமிட்ட சதிப் பின்னலில் நடந்திருக்கின்றன என்ற உண்மை புலனாய்வின் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இந்த இந்துத்துவா கும்பல் இராணுவம் வரை ஊடுருவியிருக்கிறது என்பது எத்தகைய பயங்கரம்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியா முழுமையும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
அதில் மதவெறித்தன பாடங்கள் என்ற நச்சு விதை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய அரசுக்குப் பொறுப்பு இல்லையா? மிதவாத இந்துத்துவா போல காங்கிரஸ் செயல்படுகிறது என்ற எண்ணம் சிறுபான்மை மக்கள் மத்தியிலும், மதச் சார்பற்றவர் களிடையேயும் நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் இந்துத்துவா கும்பலின் வாலாட்டம் செல்லுபடியாகவில்லை என்றால் காரணம் - அதற்குத் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் உருவாக்கி விட்டுச் சென்ற கழகமும் தலைமையும், ஏற்பாடுகளும்தான்.

உண்மையிலேயே மதத் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டிய சிந்தனை ஆயுதம் தந்தை பெரியாரியலே! அகில இந்திய அளவில் பாடத் திட்டங்களில் தந்தை பெரியார் கருத்துகளை இடம் பெறச் செய்ய வேண்டும்; அவர்தம் பகுத்தறிவுக் கருத்துகளை மட்டுமல்ல; சமூக நீதி, பெண்ணியல் சிந்தனை மலர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். புத்தாண்டு பிறந்த ஒரு வார முடிவில் திருச்சியில் உலக நாத்திகர்கள் மாநாடு மூன்று நாள்கள் நடைபெற விருக்கின்றன. உலகமே தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கப் போகிறது.

மதமற்ற உலகம் என்ற ஒரு கருத்தியல் உலகத்திற்குத் தேவைப்படுகிறது. அதற்கான மாற்று மருந்து ((Alternative Culture)) நாத்திகமே என்பதை மக்களை உணர வைப்போம்.

மதம் மிருகங்களுக்குப் பிடிப்பதோடு நிறுத்தி (அதைக்கூட மனித நேயத்தோடு ஒழித்துக் கட்ட விலங்கியல் மருத்துவத்துறை ஆய்வில் ஈடுபட்டு வருகிறது) மனிதனை மதம் பிடிக்க வேண்டாம் - பிடிக்க விடக் கூடாது என்ற நோக்கில் நாத்திகக் கருத்துகளை நாடு முழுவதும் பரவிடச் செய்வோம்!பெரியார் தொலைக்காட்சி என்பது நமது இலட்சியம். அது ஈடேறும் வரை தனியார்த் தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தைப் பெற்று, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிந்தனை ஒளியை நாடெங்கும் பாய்ச்சுவோம்.

யாருக்கோ வந்த விருந்து என்று பொது மக்கள் கருதிடக் கூடாது. திராவிடர் கழகம் எந்தவித பிரதிபலனையும் கிஞ்சிற்றும் எதிர் பார்க்காமல் தொண்டறப் பணியை தம் மேற் போட்டுக் கொண்டு செய்து வருகிறது. வீட்டுக்கொரு பிள்ளையை இந்த இயக்கத்துக்கு அனுப்புவீர்!

கழகப் பொறுப்பாளர்களே, கடந்த பல ஆண்டுகளையும் விஞ்சும் வகையில் கழகப் பணி - களப் பணிகள் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Friday, January 1, 2010

இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?


இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது?
இரண்டு தீமைகளில் தவிர்க்க முடியாத தீமை பொன்சேகா!
தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடிப்பதே முக்கியம்
தமிழர் தலைவர் அறிக்கை

இலங்கையில் நடை பெற உள்ள அதிபர் தேர் தலில் ராஜபக்சேவைத் தோற்கடிக்க பொன் சேகாவை ஆதரிப்பது தவிர்க்க முடி யாத தீமையாகும் என் றாலும் வேறு வழியில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
இலங்கையில் இன்னும் சில வாரங்களில் குடி-அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் தற்போது அதிப-ராக உள்ள ராஜபக்சேவும், அவரிடத்தில் இராணுவ தளபதியாக இருந்து, பதவி விலகி போட்டியிடும் சரத் பொன்சேகாவும் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களா-கக் களம் இறங்கியுள்ள-னர்.
ஈழத் தமிழர்களின் வாக்குகள் பெரும் அள-வுக்கு அதில் வெற்றி பெற-விருக்கும் வேட்பாளரைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. இந்த நிலையில், ஈழத் தமிழர்கள் யாருக்கு வாக்-களிப்பது என்பதை மிக-வும் ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது.
இக்கேள்வியை, சிங்-கப்பூர் தொலைக்காட்சியி-னர் அங்கே தங்கி இருந்த என்னிடம் ஒரு பேட்டி-யின்மூலம் சென்ற ஒரு மாதத்திற்குமுன் எடுத்து, டிசம்பர் 8 ஆம் தேதி ஒளிபரப்பினார்கள்.
அப்போது கேட்கப்-பட்ட சிங்கப்பூர் தொலைக்-காட்சி பேட்டியாளரின் கேள்விகளுக்கு நான் அளித்த பதில்களை ஈழத் தமிழர்களின் வாழ்வுரி-மைக்குச் சோதனையான இந்த காலகட்டத்தில் முன்வைப்பது மிகவும் அவசியமாகிறது.
உணர்ச்சி வாய்ந்த இந்தப் பிரச்சினைக்கு ஈழத் தமிழர்கள் தீர்வு காணுவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இந்த இனம் சந்தித்துள்ள, சந்-தித்துவரும் இழப்புகளும், அனுபவித்துவரும் கொடு-மைகளும் சொல்லொணா-தவை ஆகும்!
இதற்கு எப்படி எப்-போது விடிவு ஏற்படுமோ என்று மனிதநேயம் உள்ள அனைவரும் கவ-லையோடு சிந்திக்கின்ற-னர்.
உணர்ச்சி அடிப்படையில் அல்ல
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இருவர் இத்தேர்தலில் வேட்பா-ளர்-களாகப் போட்டியிடும் நிலை-யில், யாருக்கு வாக்-களிப்பது என்ற கேள்-விக்கு வெறும் உணர்ச்சி அடிப்படையில் பதில் அளிக்க முன்வந்தால், எரிகிற கொள்ளிகளில் எந்தக் கொள்ளியை நல்ல கொள்ளி என்று கருது-வது? எனவே, இத்தேர்த-லில் இந்த இருவருக்குமே வாக்களிக்காமல் தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பதே சரியானது என்று கூறக்-கூடும்.
ஆனால், அதைவிட, நமது ஈழத் தமிழர்கள் வெறும் உணர்ச்சிபூர்வ-மாக இப்பிரச்சினையை அணு-காது, அறிவுபூர்வமாக அணுகவேண்டும் என்று நாம் சிங்கப்பூர் தொலைக்-காட்சி பேட்டியில் கூறி-னோம். அதனை முன்-வைப்பது இக்கால கட்-டத்தில் மிகவும் முக்கிய-மா-னது; தேவையானதும்கூட.
தமிழர்கள் தேர்தலை, சென்ற தேர்தலில் புறக்-கணித்த காரணத்தால்தான் அதிபராக இராஜபக்சே வரும் வாய்ப்பே ஏற்பட்-டது.
அவ்வாட்சி செய்த அக்கிரமங்களுக்கு இனப் படுகொலைகளுக்கு இட்-லரின் செயல்களால் இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்டதை-விட மிகவும் கொடுமை-யானது என்பது உலக நாடுகள் பலவற்றிற்கும் கூடத் தெரியும்.
சென்றமுறை, தேர்-தலைப் புறக்கணிக்காமல், இந்த இராஜபக்சேவை பதவிக்கு வரவிடாமல் தடுத்திருந்தால் இவ்வளவு மோசமான நிலை ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டி-ருக்க வாய்ப்பு வந்திருக்-காது.
தவறான முடிவு, மிகப்-பெரும் இழப்புகளுக்கும், சோகத்திற்கும் அவர்களை ஆளாக்கக் காரணமாக அமைந்தது.
அதே தவறை மீண்-டும் ஈழத் தமிழர்கள் செய்துவிடக் கூடாது.
நேற்று விழுந்த அதே இடத்தில் இன்றும் விழுந்து-விடக் கூடாது ஈழத் தமிழர்கள்.
யார் வரக்கூடாது
என்பதே முக்கியம்
இத்தேர்தலில் அவர்-களின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்றால், யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது - யார் வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாக இருக்கவேண்டும்.
அதற்குரிய முக்கிய காரணங்கள்:
1. இராஜபக்சே மீண்-டும் வெற்றி பெற்றால் அவரது ஆட்சி செய்த அத்-தனை இனப்படு-கொலை-கள், உரிமை மறுப்புகள், முள்வேலி சோகங்கள் உலகத்தார் கண்முன் ஜனநாயக முத்-திரையுடன் நியாயப்படுத்-தப்படும். வரலாற்றின் இரத்தக் கறை மீண்டும் முக்கியமான-தொரு இடத்-தில் இருக்-கவே செய்யும்.
2. தமிழர்களின் வாக்-குரிமை, தேர்தல் வெற்-றியை நிர்ணயிக்கக் கூடி-யதாக உள்ளது _ அது சிறுபான்மையாக இருந்த-போதிலும்கூட.
இலங்கையைப் பொறுத்த-வரை, தமிழர்கள் யாரும் அதிபராக வரும் வாய்ப்பு _ வாக்கு பலம் அடிப்படையில் கிடை-யாது. இப்போது அவர்கள் இரண்டு தீமைகளில், எது தவிர்க்க முடியாத குறைந்த தீமை ((to Choose the lesser evil) என்பதைத்-தான் தேர்ந்தெடுக்க-வேண்டிய கட்டாயம் இருக்கிறது! இருவரில், யாரையுமே ஆதரிக்க-மாட்டோம் என்றால், அது அங்குள்ள ஈழத் தமிழர்-களின் பாதுகாப்புக்கு எதிராக அமைந்துவிடும் ஆபத்து உண்டு.
(3) பொன்சேகாவும் தளபதியாக இருந்து தமிழர்களுக்குக் கொடுமை செய்தவர்தானே _ இவரை எப்படி ஆதரிக்க முடியும் என்ற கேள்வியில் நியா-யம் உண்டு என்றாலும், அவர் ஒரு வேலைக்காரர்_ அதிபர் இராஜபக்சேவுக்கு. முடிவு எடுத்த இடத்தில் இருந்தவர் அல்லர்; அவர் தன் செயலை நியாயப்-படுத்-தாது, ஓரளவு மனந்திறந்து தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் நிலை ஒரு திருப்பமாகும். அதை தமி-ழர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டிருக்-கிறார்; அவர் தமிழர்களின் வாக்குகளைக் கேட்க, அவர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்கத் தயாராக உள்ளார் என்பது நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவ-ருடன் பேசி அதில் பல அம்-சங்கள் ஏற்க இசைவு தெரிவித்துள்ளார்! அந்த நிபந்தனைகளோடு அவ-ருக்கு ஆதரவு தரும் முடிவுதான் சரியானது, வரவேற்கவேண்டிய முடி-வாகும். 
(2 ஆம் பக்கத்தில் அச்செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது).
பொன்சேகாவை ஆதரிப்பதே புத்திசாலித்தனம்
பொன்சேகா ஒரு இராணுவப் பணியாள-ராகத்தான் செயல்பட்டார்; அவர் கீழ்ப்படிய மறுத்தி-ருந்தால்முடிவில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும்? அவர் சிறையில் இருந்தி-ருப்பார், அல்லது காணாது போயிருப்பார்; நிலைமை மாறியிருக்காது. எனவே, அதற்குக் காரணம் இராஜ-பக்சே தோற்கடிக்கப்படு-வதே, சரியான மக்கள் தீர்ப்பாக அமையவேண்-டும். இதற்கு தமிழர்களின் பங்களிப்பு இருப்பதே முக்கியம்; காலத்தின் கட்-டாயம். சில நேரங்களில் கசப்-பான முடிவுகள் தவிர்க்கப்பட முடியாத-வைகள்தாம் என்றாலும், வேறு வழியில்லை என்-னும்போது, அதனை மேற்கொள்வதே, தமிழர்-களின் வருங்காலத்திற்கு நல்லது ஆகும்.
எந்தத் தடியை எடுத்து அடித்து பாம்பை வீழ்த்தி-னோம் என்பது முக்கிய-மல்ல; சீறிய பாம்பை அது மீண்டும் படம் எடுத்துக் கடிக்காமல், அதனை வீழ்த்-தினோம் என்பதே அறிவுப்பூர்வச் சிந்தனை.
தமிழ்த் தேசிய கூட்ட-மைப்பின் முடிவு மனித உரிமை பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிக-வும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும்.
தலைவர்,
திராவிடர் கழகம்.

ஜனவரி 2010

2.1.2010 மனிதநேய நண்பர்கள் குழு

சென்னை மனிதநேய நண்பர்கள் குழு சார்பில் (ழரஅயளைவ குசநைனேள குடிசரஅ) சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நடைபெற்ற விழாவில் சிறந்த சாதனையாளர்களாக நீதியரசர் பி. இராஜேந்திரன், பட்டயக் கணக்காயர் டி.என். மனோகரன், மருத்துவர் எம்.எஸ். இராமச்சந்திரன், மயிலை நா. கிருஷ்ணன் (அவரது வாழ்விணையர் பரமேஸ்வரி) ஆகியோர் பாராட்டப்பட்டனர். திராவிடர் கழகக் தலைவர் கி. வீரமணி தலைமையேற்றார். குழுவின் பொருளாளர் வழக்குரைஞர். கோ. சாமிதுரை (பொருளாளர், தி.க) நன்றி உரையாற்றினார். நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், மூத்த வழக்குரைஞர் தியாகராஜன். மருத்துவர் ஏ. ராஜசேகரன், ஆடிட்டர் கந்தசாமி, கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச்செயலாளர்) ஆகியோர் பாராட்டுரை நிகழ்த்தினர்.

4.1.2010 சேது சமுத்திர திட்டம் - பிரச்சாரப் படைகள்

சேதுசமுத்திரத் திட்டம் - பிரச்சாரப்படைகள்- சேதுசமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டங்கள் 4.1.2010 முதல் 12.1.2010 வரை மூன்று குழுக்களாக நடத்தப்பட்டன. முதற்குழு: கன்னியாகுமரி முதல் மதுரை வரை சிறப்புரை: பூவை. புலிகேசி கலைநிகழ்ச்சி: திருத்துறைப்பூண்டி சுரேஷ் முரளி, மன்னை முருகராசு ஒருங்கிணைப்பாளர்: வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன். இரண்டாம்குழு: ராமேஸ்வரம் முதல் மதுரைவரை: சிறப்புரை: இராம. அன்பழகன், கலைநிகழ்ச்சி: திருத்தணி பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர்: சாமி. திராவிடமணி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) மூன்றாம் குழு: நாகை முதல் மதுரை வரை: சிறப்புரை: இரா. பெரியார்செல்வன் கலைநிகழ்ச்சி: சு. சிங்காரவேலர் ஒருங்கிணைப்பாளர்: தஞ்சை இரா. ஜெயக்குமார் (மாநில இளைஞரணி செயலாளர்.) நிறைவு விழா: 11.1.2010 மதுரை நேதாஜி சிலை அருகில். சிறப்புரை: தமிழர் தலைவர் கி. வீரமணி, வீதிநாடகம்: ச. சித்தார்த்தன்- பெரியார்நேசன் குழுவினர்.

11.1.2010 சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்ட விழிப்புணர்வுப் பயண நிறைவு விழா

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குழுக்கள் மதுரையில் சங்கமிக்கும் நிறைவுப் பொதுக்கூட்டம் கழக சட்டத்துறை செயலாளர் கி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கழகக் தலைவலர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

17.1.2010 சிவகாசியில் பெரியார் மய்யம் அடிக்கல் நாட்டுவிழா

சிவகாசி காமராசர் பூங்கா அருகில் பெரியார் படிப்பகம், நூலகம், பெரியார் சிலையுடன் கூடிய பெரியார் மய்யம் கட்டு வதற்கான அடிக்கல்லை அ. சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்து வைத்தார். பெரியார் மய்யத்திற்கான இடத்தினை சுபாஷ்சந்திரபோஸ் (காஞ்சனா போஸ் குடும்பத்தினர் அளித்துள்ளனர்)

21.1.2010- 24.1.2010 பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய சடுகுடு போட்டி

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்திய (ஹ ழுசுஹனுநு) சடுகுடு போட்டி திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.

பிப்ரவரி 2010

2.2.2010 கார்க்கரேயைக் கொன்றது - யார்?

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் மகாராட்டிர காவல்துறை அதிகாரி (ஓய்வு பெற்ற அய்.ஜி) எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதிய கார்க்கரேயைக் கொன்றது யார்? (றுழடீ முஐடுடுநுனு முஹஹசுமுஹசுநு?) என்று நூலினை கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை பெற்றுக் கொண்டார். ப.க. பொதுச் செயலாளர் வீ. குமரேசன் வரவேற்புரையும், நூலாசிரியர் எஸ்.எம். முஷ்ரிஃப் ஏற்புரையும் வழங்கினர். இவ்விழாவில், கழகத் தலைவர் தொகுத்தளித்த வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் என்னும் நூலினை தலித் வாய்ஸ் ஆசிரியர் வி.டி. ராஜசேகர் வெளியிட, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் பெற்றுக் கொண்டார்.

12.2.2010 துபாயில் தமிழர் தலைவர்

துபாயில் அமீரகத் தமிழர்கள் சார்பில் தமிழரங்கம் - 2010 என்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

16.2.2010 ஈழத்தமிழர்க்கு வாழ்வுரிமை கோரி - ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைகளை மீட்க மத்திய அரசினை வலியுறுத்தியும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கவும் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர். கோ. சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் உள்ளிட்ட தலைமைக் கழக பொறுப்பாளர்களும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
23.2.2010-சென்னையில் மத்திய அரசின் புதிய கல்வி மசோதாவை எதிர்த்து மாணவர் பேரணி- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொண்டுவந்துள்ள தேசிய உயர்கல்வி ஆணையத்தின் சட்டமுன்வடிவினை எதிர்த்து, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேயகழகம் (முஸ்லிம்லீக்) புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும், அமைப்புசாரா மாணவர்களும் பேரணி நடத்தினர். பேரணியை தொடங்கிவைத்து திராவிடர் கழக பொதுச்செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன் உரையாற்றினார்.

மார்ச் 2010

11.3.2010 காமலீலை சாமியார்களை தண்டிக்க வேண்டும் - தி.க. ஆர்ப்பாட்டம்

காமலீலை சாமியார்களின் கபட நாடகத்தை தோலுரித்துக் காட்டுவதற்கும், காவல்துறையினர் அவர்களை தனிப்பிரிவு அமைத்து கண்காணித்து குற்றவாளிக் கூண்டிலே ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில், மெமோரியல் ஹால் முன்பு கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர்.

16.3.2010 அன்னை மணியம்மையார் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
பேரா. முனைவர் ந.க. மங்களமுருகேசன் எழுதிய தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் என்னும் நூலினை சென்னை பெரியார் திடலில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் மேனாள் தலைவர் முனைவர் கு.ம. இராமாத்தாள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி வெளியிட்டார். கழகத் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார்.

ஏப்ரல் 2010

14.4.2010 பெரியார் ஒளி - அம்பேத்கர் சுடர் விருதுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மறைமலை நகரில் விருதுகள் வழங்கும் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. முதல்வர் கலைஞருக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.

16.4.2010 திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு

சென்னை பெரியார் திடலில் மாநில திராவிடர் கழக மாணவர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. வரவேற்புரை: சிவகாசி மா. கதிரவன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) தலைமை: நம்பியூர் மு. சென்னியப்பன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) கொடியேற்றம்: வீர. சுவீன் (தென்சென்னை மாவட்ட மாணவரணித் தலைவர்) சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினை கழகப்பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை திறந்து வைத்தார். மாநாட்டுத் திறப்புரை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் த.சீ. இளந்திரையன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்) ஏ.பி. இளங்கவின் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி) ஆகியோர் உரைக்குப்பின் கழகத் தலைவர் உரையாற்றினார். விவாதப்போர்: கழகப் பேச்சாளர் அதிரடி அன்பழகன் தொடுத்த வினாக்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் கவிஞர் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, பிரச்சார செயலாளர் அ. அருள்மொழி , துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் விடையளித்தனர். மாலையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமையில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்டு புரசைவாக்கம், தாணா தெரு சென்றடைந்தது. தாணா தெருவில் நடைபெற்ற திறந்த வெளிமாநாட்டிற்கு வரவேற்புரை: திருத்துறைப்பூண்டி மாணவரணி அமைப்பாளர் க. மணிகண்டன். மாநில மாணவரணி செயலாளர் ரெ. ரஞ்சித்குமார் தலைமையேற்றார். குடிஅரசு தொகுதிகளை வெளியிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. மேயர் மா. சுப்பிரமணியன், எஸ்.பி. கூரியர் உரிமையாளர் நாவங்கனி ஆகியோரின் உரைக்குப்பின் தமிழர் தலைவர் கி.வீரமணி நிறைவுரையாற்றினார். தாம்பரம் மாவட்ட மாணவரணித் தலைவர் தி. இர. சிவசாமி நன்றியுரை ஆற்றினார்.

25.4.2010 பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்?

சென்னை பெரியார் திடலில் பிரபாகரனின் தாயாரை திருப்பி அனுப்பிய பாவிகள் யார்? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார், சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன், கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.

25.4.2010 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் உதயம்

சென்னை பெரியார் திடலில் கூடிய கூட்டத்தில் திராவிடர் இனம்பற்றியும், திராவிடர் இயக்கம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளவும், திரிபுவாதங்களுக்கு மறுப்புக் கூறவும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

மே 2010

2.5.2010 இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் பெரியார் மய்யம் திறப்பு விழா!

ஜஸோலாவில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பெற்ற பெரியார் மய்யத்தைத் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் தமிழக முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். விழாவில் மத்திய அமைச்சர்கள் திரு. ஜி.கே.வாசன், திரு.பரூக் அப்துல்லா, மேனாள் கல்வி அமைச்சர் திரு.டி.பி.யாதவ், திரு.தொல். திருமாவளவன், வரியியல் அறிஞர் திரு. ச.ராசரத்தினம், மானமிகு. வீ.அன்புராஜ், முனைவர் நல்.இராமச்சந்திரன் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழியர்கள், தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
10.5.2010 ஜாதிவாரி கணக்கெடுப்பு - திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.கழகத்தலைவர் தஞ்சையில் பங்கேற்றார். சென்னையில் வழக்கறிஞர் சாமிதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். தலைமைநிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலை வகித்தார்.

20.5.2010 தூத்துக்குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு
தூத்துக்குடியில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையினை சிலை அமைப்புக்குழு புரவலரும், தமிழ்நாடு சமூகநலத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தமிழர் தலைவர் கி. வீரமணி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி.பூங்குன்றன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், மாவட்ட தி.மு.க செயலாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் கங்காரி தங்கம் ஆகியோர் பங்கேற்றனர். மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றது.

19-22.5.2010 குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாம்

குற்றாலத்தில் 33 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சி முகாம் மே மாதம் 19 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்றது. பயிற்சிப் பட்டறை, பேச்சுப்பயிற்சி குறும்படங்கள், பெரியார் திரைப்படம் ஒளிபரப்பு, பெரியாரியல் வகுப்புகள் என நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடத்தப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் டாக்டர் கவுதமன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். நிறைவு விழா நிகழ்ச்சியில் புதுயுகப் புரட்சியாளர் பெரியார் என்ற விசாகப்பட்டினம் ஜெயகோபால் தெலுங்கில் எழுதி, கோரா தமிழில் மொழிபெயர்த்த நூலின் குறுந்தகட்டினை கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட பொருளாளர் கோ. சாமிதுரை பெற்றுக்கொண்டார்.

24.5.2010 பெரியார் திரைப்படப் பாடல் - தெலுங்கு மொழி குறுந்தகடு

ஆந்திர மாநில பகுத்தறிவாளர்கழகம் சார்பில் பெரியார் திரைப்படத்தின் தெலுங்கு மொழி மாற்றப் பாடல்கள் குறுந்தகட்டினை அய்தராபாத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா வெளியிட்டார்.

ஜூன் 2010

5.6.2010 சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட ரயில் மறியல் போராட்டம்

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தடையை மீறிய பல்லாயிரவர் கைதாயினர்.சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாப்புலர் ஃபிரண்ட், சமாஜ்வாடிகட்சி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையினர் பங்கேற்றனர். கழகப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கிப் பேசினார். தமிழர் தலைவர் சென்னையில் 47ஆம் முறையாக கைதானார். விழுப்புரத்தில் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையிலும், திருச்சியில் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையிலும் போராட்டம் நடை பெற்றது. 30.6.2010 நெய்வேலியில் ஆர்ப்பாட்டம்- நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நெய்வேலி நகரம் பெரியார் சதுக்கத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 2010


2.7.2010 தமிழர் தலைவர் கார்மீது தாக்குதல்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களது இல்லத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரினை ஒரு காலிக் கும்பல் தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது. 3- 4.7.2010 -

பெரியாரியல் பயிற்சி முகாம்

பொள்ளாச்சியில் 3,4.7.2010 தேதிகளில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. கழகத் தலைவர் கி.வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் கவிஞர். கலி. பூங்குன்றன், சு.அறிவுக் கரசு, துணைப்பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், ஆகியோர் பயிற்சி வகுப்பெடுத்தனர்.

6.7.2010 - கரூரில் கழக மண்டல மாநாடு

மறைந்த தி.மு.க. மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் நினைவு வளைவு, பெரியார் சிந்தனையாளர் வழக்குரைஞர் பி.ஆர் குப்புசாமி நினைவு மாநாட்டு அரங்கம். தலைமை: கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்புரை: வழக்குரைஞர் மு.க.ராசசேகரன் (மாவட்ட தி.க.தலைவர், கரூர்) தொடக்கவுரை: பரமத்தி சண்முகம் (தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர்) கொடியேற்றம்: கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், தீர்மானங்கள் முன்மொழிதல்: துரை. சந்திரசேகரன் (தி.க.துணைப் பொதுச் செயலாளர்.) உரை: கவிஞர். கலி. பூங்குன்றன் (பொதுச் செயலாளர்) சு.அறிவுக்கரசு (பொதுச்செயலாளர், தி.க) டாக்டர் பிறைநுதல்செல்வி (துணைப் பொதுச் செயலாளர் தி.க) கே.சி. பழனிசாமி (முன்னாள் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்) நன்னியூர் கா. ராஜேந்திரன் (மாவட்ட தி.மு.க. செயலாளர்) நன்றியுரை: ம. காளிமுத்து (கரூர் மாவட்ட தி.க. செயலாளர். கரூரில் கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம். கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

14.7.2010 நாகையில் கழகத்தின் எழுச்சி ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவது, கொல்லப்படுவது, மானபங்கப்படுத்தப்படுவது உள்ளிட்ட செயல்களைக் கண்டித்தும், இனி இவ்வாறு நடவா திருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் நாகை, காரைக்கால், திருவாரூர் மாவட்டக் கழகங் களின் சார்பில் மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 2010

2.8.2010 தி.மு.க.வுக்கு அறிவுரை-

முக்கிய பதவி நியமனங்களில் பார்ப்பனர்களை நியமிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க.வுக்கு அறிவுரை கூறினார்.

7.8.2010, 8.8.2010 பெரியாரியல் பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் வாலாஜாவில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்றது. தி.க. தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, டாக்டர் இரா. கவுதமன், பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். புரபசர் பழ.வெங்கடாசலம் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சிகளை நடத்தினார். 200 மாணவர்கள் பங்கேற்றனர்.

8.8.2010 வாலாஜாவில் மண்டல மாநாடு

வாலாஜாவில் திராவிடர் கழக மண்டல மாநாடு மண்டலத் தலைவர் செய்யாறு பா. அருணாசலம் தலைமையில் நடை பெற்றது. மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்துக்கு கே.கே.சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பொதுச் செயலாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், டாக்டர் பிறைநுதல்செல்வி, உரத்தநாடு இரா. குண சேகரன், முகம்மது சகி (தி.மு.க. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்) முதலியோர் கலந்துகொண்டனர். குடிஅரசு தொகுதிகள் (1933,1934) இரண்டினை பெரியார் பெருந் தொண்டர் வேல்.சோமசுந்தரம் வெளியிட்டார். 28.8.2010, 29.8.2010- பெரியாரியல் பயிற்சி முகாம் விழுப்புரம் மாவட்டம் கல்லக் குறிச்சியை அடுத்த கோமுகி அணைக்கட்டில் நடைபெற்றது.

செப்டம்பர் 2010


1.9.2010- திருச்சி அண்ணா நகரில் தந்தை பெரியார் சிலையை சில காலிகள் சேதப்படுத்தியதை அடுத்து அன்று இரவு அதே இடத்தில் புதியதாக தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது.

5.9.2010 பேச்சுப் போட்டி
தந்தை பெரியாரின் 132ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பெரியாரால் வாழ்கிறோம் என்ற பேச்சுப்போட்டி நிகழ்ச்சி தமிழகம் முழுக்க எழுச்சியுடன் நடைபெற்றது.

7.9.2010 - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடக்கவிழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவின் போது பேராசிரியர் க.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை.

26.9.2010 - தஞ்சை வல்லத்தில் குழந்தைகள் பழகு முகாம், தமிழகம் முழுவதும் இருந்து குழந்தைகள் பங்கேற்பு.

27.9.2010 - சீர்காழியில் மண்டல மாநாடு, தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்குதல். அக்டோபர் 2010

7.10.2010 - நாமக்கல்லில் தந்தை பெரியார் படிப்பகம் திறப்பு விழா, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் செ.காந்திசெல்வன் திறந்து வைத்தார்.

10.10.2010 - சென்னை தாம்பரம் பெரியாரியல் பயிற்சி முகாம்.

15.10.2010 - குவைத்தில் பெரியார் பிறந்தநாள் விழா, சமூக நீதிக்காக வீரமணி விருது அளிப்பு விழா, இராவண காவிய சொற்பொழிவு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

18.10.2010 - துபாயில் பெரியார் பன்னாட்டு மய்யம் கிளை உருவாக்கம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

23.10.2010 - திருப்பத்தூரில் வேலூர் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம்

நவம்பர் 2010

8.11.2010 திருவரங்கத்தில் திருச்சி மண்டல திராவிடர் எழுச்சி மாநாடு

பார்ப்பனர்களை பல்லக்கில் தூக்கி சுமக்கும் போக்கை தடுத்து நிறுத்துவோம் என தமிழர் தலைவர் அறிவிப்பு.

13.11.2010 - ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் சிறப்புக் கூட்டம் - தமிழர் தலைவர் பங்கேற்பு.

20.11.2010 சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சியின் 95ஆம் ஆண்டு விழா நிதி அமைச்சர் பேரா.க.அன்பழகன் கலந்து கொள்ளல். நீதிக்கட்சித் தலைவர்களுக்கு சிலை வைக்கப்படும் என தமிழர் தலைவர் அறிவித்தார்.

24.11.2010 - சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? ஊடகத் துறை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை.

26.11.2010 வைக்கத்தில் விழா

வைக்கம் சத்தியாக்கிரக 85ஆம் ஆண்டு விழா வைக்கத்தில் நடைபெற்றது - செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி தமிழர் தலைவர் கலந்து கொள்ளல்.

டிசம்பர் 2010

2.12.2010 தமிழர் தலைவர் பிறந்தநாள்விழா

தமிழர் தலைவரின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் - நாடெங்கும் குருதிக்கொடை, நோயாளிகளுக்கு உணவு, இலவச மருத்துவ முகாம்.

5.12.2010 -சிறப்பு இணைய தளம்

உலக நாத்திகர் மாநாட்டையொட்டி சிறப்பு இணைய தளத்தை மதுரை மாநாட்டில் தமிழர் தலைவர் தொடங்கி வைத்தார்.

10.12.2010 - நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவதை எதிர்த்து நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்பு.

24.12.2010 - தந்தை பெரியார் 37ஆம் ஆண்டு நினைவு நாள்நிகழ்ச்சியாக தமிழ்நாடெங்கும் நடத்தப்பட்டது.