Total Pageviews

Friday, June 27, 2014

பைபிளில் ஜாதி வெறி!


அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.
அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!
தகவல்: ச.இராமசாமி, சென்னை-18.

குடியரசு தலைவரின் இந்துமதப் பிரச்சாரம்

 
 
இந்தியப் பாரம்பரிய ஆராய்ச்சி அமைப்பை தோற்றுவித்த அவ்வமைப்பின் தலைவரான சுவாமி சிவானந்த சரஸ்வதி என்சைக்ளோ பீடியா ஆஃப் இந்துயிசம் என்ற இந்து மதக் கலைக் களஞ்சிய நூலை வெளியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வேலை, திறமை, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஆகிய நான்கையும் கொண்ட முழுமையான நிலை, தர்மம், அன்பு, மோட்சம் ஆகிய நான்கும்தான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்பதை இந்து மதத் தத்துவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மனித செயல்பாட்டின் நடுநிலையான போக்குதான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் விளக்குகிறது.

இந்து மதம் என்பது பின்பற்றப்படும் ஒரு வழிமுறை மட்டுமல்ல; மெய்யறிவின் கூட்டமைப்பு. அதை விவரிக்க முடியாது; அனுபவிக்க மட்டும்தான் முடியும் என முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனை வருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், புத்தொளி கிடைக்க வேண்டும்; யாரும் துன்பப்படவோ, வேதனையடை யவோ கூடாது என்பதுதான் இந்து மதத்தின் உயரிய தத்துவம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடில்லியில் பேசியுள்ளார் (தினமலர் 24.6.2014).

ஓர் இந்து மதக்காரர் என்கிற முறையிலும் அதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் என்ற முறையிலும் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைத் தாண்டி பெரும் பொருள் இருப்பதாகக் கருதுவதற்கு இடம் இல்லை. அவர் நிதி அமைச்சராக நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் அளிக்கும் போதேகூட பல இந்து மதக் கடவுள்களை அழைத்தது உண்டு. இதில் மதச் சார்பற்ற தன்மையை அவர் கடைப் பிடித்ததில்லை. முதலில் ஒரு கருத்து முக்கியமானது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; அதற்கென்று ஒரு நிறுவனர்; அதற்கென்று தனித்த ஒரு வேத நூல். அதன் தோற்றம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஏதும் இருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றில் முரண் பாடுகளுக்கோ பஞ்சமில்லை. முரண்பாடுகளை பலகீனமாக எடுத்துக் கொள்வ தற்குப் பதிலாக முரண்பாடுகளையும்கூட சிறப்பு அம்சமாகக் கொள்ளும் மனப்பான்மை இந்து மதவாதிகளுக்கு உண்டு. காரணம் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை - இதனை ஒரு வகையில் சாமர்த்தியமாகவே கருதுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தன்னுரையில் எந்த ஓர் இடத்திலும் இந்து மதத்தின் கொள்கையில் சமத்துவத் துக்கு இடம் உண்டு என்று குறிப்பிடாதவரை மகிழ்ச்சி தான்.

குறிப்பாக இந்து மதத்தில் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று பொருளாகாது; அப்படி என்றால் வேத மறுப்புதான் இங்கு நாத்திகம்.

இத்தகைய நாத்திகர்களுக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்று வைத்திருப்பதானது எந்த வகையில் சரி?

வேதங்களை மறுத்து விட்டால் இந்து மதம் எங்கே இருக்க முடியும்? இதுபற்றி எல்லாம் மெத்த படித்தவர் களும், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களும் ஏன் சிந்திக்கவில்லை?

பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தை ஏற்படுத்தி விட்டு - ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு வகை தர்மம் என்று அறுதியிட்டு விட்டு, அந்தத் தர்மத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்று கோடு கிழித்துக் காட்டி விட்டு, அதற்குப் பிறகு அம்மதத்தில் நடு நிலைப் போக்கு என்று எப்படி சொல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

அரசனுடைய கடமையே வருண தர்மத்தைக் காப் பாற்றுவதுதான் - வருண தர்மத்தை மீறினால் அரசன் தண்டத்தை (வன்முறையை) பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு மதம் எப்படி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய முடியும்?

தலை எழுத்தின்படி நடந்து கொள்! அதில் திருப்தி அடை! அப்படி நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் மோட்சம் நம்பு - என்பது ஒரு மதமா? சுரண்டலுக்கான ஒரு வகை தந்திர அமைப்பு முறையா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தீண்டாமை என்பதேகூட க்ஷேமகரமானது என்று சொல்லக் கூடியவர் தான் இந்து மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய லோகக் குரு என்று போற்றக் கூடிய சங்கராச்சாரியார். அந்த சங்கராச்சாரியார்களைத் தண்டனிட்டுப் போற்றக் கூடியவர்கள்தாம் இந்நாட்டுப் பெரிய பதவிக்காரர்கள்! (காசியில் கங்கை நீரால் சங்கராச்சாரியாரின் காலைக் கழுவிக் குடிக்கவில்லையா அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்?)

குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய நூலை வெளியிடுவது கூட வேண்டாத ஒன்றுதான் - வேலியே பயிரை மேயலாமா?

 http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/82963-2014-06-27-10-28-21.html#ixzz35pomAGtb

Saturday, June 21, 2014

இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்புவிசை!

இது என்ன புதுவிசை?

அறிவியலில்,

1. அணுக்கருவிசை (Nucleous Force)

2. ரேடியக் கதிர்ப்பு விசை (Radio activity Force)

3. மின்காந்த விசை (Electro-Magentic Force)

4. ஈர்ப்பு விசை (Gravitation Force)
என்பதாகப் படித்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம்.
இது என்ன புதிதாக ஒரு விசை? அதுவும், இரு பாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை? இது இயல்பான விசை! உயிரினங்களுக்கு குறிப்பாக மனித இனத்தின் ஆண்-_பெண் இருபாலர்க்கும் உரிய சிறப்பு விசை!

வக்கிரமான வன்செயல்!

இன்று ஊடகங்களான செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் முதலானவற்றில் வரும் விபரீதமான_வெறுக்கத்தக்க, சமூக நல்லுணர்வாளர்க்கு வருத்தத்தையும் இழிவையும் மானக்கேட்டையும் நாணக் கேட்டையும் உண்டுபண்ணுகின்றன.

ஆற்றுப்படுத்தல் ஆகலாம்

பள்ளியில் சில ஆசிரியர்கள் தம்மிடம் பயிலும் பெண்பிள்ளைகளிடம் தகாத வகையில் உறவு கொள்வது; ஆசிரியை, தன்னிடம் பயிலும் மாணவனை இதே வகையில் பயன்படுத்துவது; எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி மாணவன், தனக்குப் பாடம் புகட்டும் ஆசிரியையுடன் விரும்பத்தகாத வெறிவேட்கை வினையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் நடந்துவருவதைக் கண்டு பதைக்கிறோம்; துடிக்கிறோம் ஏன்? இப்படி? என்ன காரணம்? இந்த ஆய்வு அலசல் இவற்றிற்கான ஓர் ஆற்றுப்படுத்தல் (Councel) ஆகவும் இருக்கும்; இருக்கவும் பயன்படலாம்.

இது ஒரு தூண்டுவிசை!

மேலும் ஒரு புதிர்விசையா? இல்லை. இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை என்பது, ஊரறிந்த _ உலகறிந்த ஒரு சொல்லின், அதன் பொருளின் அறிவியல் விளக்கம்தான் அது! அதுதான் பாலியல் உணர்ச்சி (ஷிமீஜ்) எனப்படும் காதல் எனப்படுவது.

கெட்ட வார்த்தை அல்ல

காதல் என்ற உடனே அது ஏதோ கெட்ட வார்த்தை என்று நம்மில் சிலர் நினைப்பர்; வெறுப்பர்; பேசுவர்.

அப்படி ஒன்றும் அந்தச் சொல் தவறான கெட்ட வார்த்தை அல்ல! இதுபற்றி அறிவியல் வழிநின்று ஆய்வு செய்து அலசல் செய்வது எதிர்கால இளைய தலைமுறைக்குப் பயனுடையதாக இருக்கும்; இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்; நம்புகிறோம். எனவே, அருள்கூர்ந்து முகம் சுளிக்க வேண்டாம்.

பொதுவான கண்ணோட்டம்

கொஞ்சம் தேவை;
கொஞ்சம் நம்பிக்கை;
கொஞ்சம் மனநிறைவு;
கொஞ்சம் சரணாகதி.
இவை எல்லாம் கலந்த சேர்க்கைதான் காதல் என்று அறிஞர் ஃபிஸ்டர் கருதுகிறார். ஆனால், இதுதான் காதல்! என அறுதியிட்டுச் சொல்ல சமூக இயலாளர்களால் இயலாது. உலகம், ஒருமனதாக ஒப்புக்கொள்ளும் காதலுக்குப் பொதுவான விளக்கத்தை யாரும் தெளிவாகச் சொல்லவில்லை.
 
காதலிக்கத் தேவைப்படும் தகுதிகள்

காதலிப்பதற்கு மூன்று முதன்மையான தகுதிகள் வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களுள் ஒருவரான லிண்டா ஒல்சன் என்பவர்.

அவர் கூறும் அந்த மூன்று தகுதிகள்

1. ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின ஈர்ப்பு இருத்தல் வேண்டும்.
2. ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மை (Adjustability) இருத்தல் வேண்டும்.
3. இணைந்து வாழ்வதற்கான உறுதி இருத்தல் வேண்டும்.

உணர்ச்சியாளர்களின் கண்ணோட்டம்

காதல் என்பது , இதயத்தில் மலரும் உணர்ச்சி என்று பெரும்பாலும் உணர்ச்சியாளராகிய பாவலர்கள், இலக்கியவாதிகள் என்று எளிதாகச் சொல்லிவிடுவர். விழியில் நுழைந்து, இதயம் புகுந்து உயிரில் கலந்து உறவு. இப்படி ஒரு திரைப் பாவலர் கூறியுள்ளார்.

அறிவியலில் அடிபட்டுப்போகும்

இதயத்தில் மலரும் உணர்ச்சி காதல் என்ற கருத்து அறிவியலோடு ஒத்தப்போகாது! இக்கருத்து அறிவியலில் எடுபடாது! உணர்ச்சியின் இருக்கை இதயம் அன்று (The heart is not the seat of emotion) என்பது அறிவியல்.

இந்த ஈர்ப்புவிசை எங்கே உருவாகிறது?

இந்த இருபாலியல் உணர்ச்சி ஈர்ப்பு விசை எங்கே உருவாகிறது? இது உருவாவது மூளையில்தான் என்கிறது அறிவியல். நம் உடலில், குறிப்பாக நரம்பு மண்டலத்தில் (Nervous System) நிகழும் வேதியில் மாற்றங்களின் விளைவுதான் (The effect of chemical reaction is nervous system) காதல் எனப்படும் இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்புவிசை என்கின்றனர், அறிவியல் வல்லுநர்கள்.

ஆளாளுக்கு வேறுபடுவது

Phenyelethalamine அல்லது P.E.A. ஆகிய வேதிப்பொருள்களே (Chemical Substances) காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.
இந்த வேதியில் கலவையில் நிகழும் ஏற்ற-_இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்ச்சியும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள் அவர்கள்.

நனைந்து நனைந்து

காதல் வயப்படும்போது மூளை பினிலெத்தாலமைன் (PEA) என்றும் வேதியியல் பொருள்களால் நனைக்கப்பட்டு அதனால், மனமகிழ்ச்சி, மனக்கிளர்ச்சி, இன்ப உணர்ச்சி இவற்றைப் பெறச் செய்கிறது என்கிறார்கள் காதலியல் அறிவியல் வல்லுநர்கள் வேறுவகையாகவும் அறிவியலாளர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். ஆண்ட்ரஜன், எஸ்ட்ரோஜன், அட்ரினலின் ஆகிய சுரப்பிகளின் அட்டகாசம்தான் காதல்

முதல் அறிகுறி

அடிப்படையில், பாலினக் கவர்ச்சி (Sexual Attraction)யே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் கூறுகிறது. அப்படி என்றால், வெறும் காமம் (Lust)தான் காதலா? அல்ல. காமமும் காதலும் கலந்ததுதான் காதல் என்கிறார்கள் சமூக இயலாளர்கள் (Socialogists)

இல்லை! இருக்கலாம்!!

பாலின ஈர்ப்பு விசை எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா? இல்லை! என்கிறது அறிவியல். இருக்கலாம்! என்கிறது சமூக இயல்.
காதலா? காமமா?

நெறியானது காதல்; வெறியானது காமம் _ என்ற கருத்துரு பிற்காலத்தில் உருவாகிவிட்டது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான்! தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம், திருக்குறள் தொடர்பான நூல்கள் இரண்டும் ஒன்றுதான் என்கின்றன.

சின்னஞ்சிறு கிளையில் மாபெரும் கனி தொங்குவது போல சின்னஞ்சிறிய என் உயிரிலே மாபெரும் காமம் (காதல்) தொங்கிக் கிடக்கிறது என்னும் பொருளில், சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி ஆங்கு

உயிர்தவச் சிறிது: காமமோ பெரிதே எனக் குறுந்தொகைப்பாடல் கூறுகிறது.
மலரைவிட மிக மிக மென்மையானது காமம் என்கிறார் திருவள்ளுவர்; தம் திருக்குறளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
மலரினும் மெல்லிது காமம் (குறள் 1289)

எளியது எது? அரியது எது?

ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். ஓர் ஆண்டில் முப்பது பேரைக் காதலிப்பது எளிது; முப்பது ஆண்டுக்காலமாக ஒருவரையே காதலிப்பதுதான் அரியவற்றுள் எல்லாம் அரிது.

காதலில் முப்பால் உணர்வு

காதல் வயப்பட்டவர்களின் மூளையை நுண்ணொளிப்படம் (Scan) செய்து ஆய்வு செய்த ஹெலன் ஃபிஷர் என்னும் உளவியல் வல்லுநர் மூவகை உணர்வுகளைக் கண்டறிந்ததாகக் கூறுகிறார். அவை:

1. காமம்
2. விந்தையான மிகையான கற்பனைக் காதல் உணர்ச்சி (Romantic Love)
3. நீண்டகாலப் பிணைப்பினை முன்னிறுத்தும் காதல்.

காதல் ஏற்பட பெரியார் கூறும் காரணங்கள்


உளவியலார், அறிவியலார் (Pure Scientists) கூறுவதை இதுவரை பார்த்த நாம் இதுபற்றி சமுதாய அறிவியலாளர் (Social Scientist) தந்தை பெரியார் காதல் ஏற்படக் காரணங்களாகப் பின்வருமாறு கூறுகிறார்:

எப்படிப்பட்ட காதலும், ஒரு சுயலட்சியத்தை, தனது இஷ்டத்தை, திருப்தியை கோரித்தான் ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, போக போக்கியத்துக்குப் பயன்படுவதைக் கொண்டோ, அல்லது, மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ள முடியும்! அப்படிப்பட்ட, காரியங்களுக்கெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாக இருக்கலாம்; அல்லது, அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம் - பெரியார்: குடிஅரசு _தலையங்கம் _ 18.1.1931

பார்த்தீர்களா? தந்தை பெரியார் அவர்கள் காதல் பிறப்பது எவற்றின் அடிப்படையில் என்பதை -மிகத் தெளிவாக கூறியிருக்கும் பாங்கினை நாம் வியக்காமல் இருக்க முடியாது!

வெற்றியா? தோல்வியா?

காதலின் தொடர்ச்சி மணவாழ்க்கை என்ற கோட்பாட்டை வலியுறுத்திய மரபில் (Tradition) வந்தது நமது சமுதாயம். திருமணத்திற்குப் பிறகு தோற்ற காதலும் உண்டு; அதேபோல, திருமணத்தில் முடியாமல் வெற்றிபெற்றதும் உண்டு.
 
கடைசி வரை காதலா?

காதலித்து மணம் புரிந்தவர்களின் வாழ்க்கை நீடித்து இருக்காது _ என்ற பொதுக்கருத்து பரவியிருக்கிறது. காதலித்துக் கடைசிவரை வாழ்ந்துகாட்டியவர்களும் உண்டு. இடையிலேயே வீழ்ந்துபட்டவர்களும் உண்டு. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும் என்கிற கவிஞர் கண்ணதாசனின் பாடலடிகளை இங்கு நினைவூட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

தெரிந்தும் தெரியாமலும்

வாழ்க்கை என்றால், ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உண்டு; அது, காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் _என்பது ஜார்ஜ் சரண்டின் அவர்களின் காதல் கோட்பாடு. இந்த ஒரே ஒரு மகிழ்ச்சியை எவர் துறக்க முன்வருவார்? அதனால்தான் பெரும்பாலானவர்கள், காதலிக்கிறார்கள் _ தெரிந்தும் தெரியாமலும்; புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும்.

மனிதக் காதல்தான்!

கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதலில் தெய்வீகக் காதல் என்பது ஒன்றில்லை. அமரகாதல் என்பது கிடையாது. அதையும் தாண்டி, புனிதமான காதலும் இல்லை! எல்லாம் மனிதக் காதல்தான்!

இறுக்கமான பாலியல் ஈர்ப்பு விசை

இறுக்கமான, ஜாதியக் கட்டமைப்பைக் கொண்ட நம் சமூகத்தில் காதலினால் ஏற்படும் சிக்கல் நிறைய உள என்றாலும், இதே காதல்தான் தொடர்ந்து பல தடைகளையும், தளைகளையும் தகர்த்தெறிந்து வென்றும், தோற்றும் முன்மாதிரிகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

இறைந்து கிடக்கும் காதல்

வென்ற காதல்;
தோற்ற காதல்;
வெல்வதுபோலத் தோன்றி தோற்ற காதல்;
தோற்றதுபோலக் காட்டி வென்ற காதல்;
தோற்காமலும் வெற்றி பெறாமலும் நடுவிலேயே கரைந்து போன காதல்;
இவ்வண்ணம், எண்ணிலாக் காதல் உருவெளித்தோற்றங்கள் சமூகத்தின்முன் இறைந்து கிடக்கின்றன.

பரபரப்பு பல சமயங்களில்

காதலைச் சித்தரிப்பதில், பலவாறான காட்சிக் கொடைகளும் உண்டு. பாடல்கள், காட்சிகள், உரையாடல்கள், உரசல்கள் மூலமாகவும் திரையுலகம் ஏற்படுத்திய பரபரப்புகளைவிட திரை நட்சத்திரங் ((Stars)களின் காதல், பல சமயங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.

தொலைக்காட்சித் தொடர்களும் இதற்கு விதிவிலக்கன்று. பிரபலங்களாக இருப்பதாலேயே நட்சத்திரங்கள் காதலிப்பதும், காதல் கிசுகிசுப்பதும், மணந்து கொள்வதும் மணவிலக்குப் பெறுவதும் செய்திகளாகி விடுகின்றன.

கடைசி உண்மை காதல்பற்றி

வரலாறு போலவோ, அறிவியல் போலவோ, காதல் எனும் கவர்ச்சி விசையை யாருக்கும், எவரும் கற்றுக்கொடுத்துப் புரிய வைப்பது இயலக் கூடியது அன்று. எல்லாம் பட்டறிவு பயிற்றுவிக்கும் பாடம்! காதலை ஓர் உணர்ச்சியாக மட்டுமே பார்ப்பதே கடைசி உண்மையாகப்படுகிறது.
இதுவே, இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசையின் கோட்பாடு!

- பேரா.ந.வெற்றியழகன்

நம் வாழ்வைப் பாதுகாக்கும் 10 சிறப்பு உணவுகள்!

நாம் நமது ஆயுளைப் பாதுகாக்க வும், நீட்டிக்கவும் மருத்துவர், மருந்து, இவைகளை நாடுவதைவிட உடற் பயிற்சியும், பசித்து உண்ணும்போது கண்டதையெல்லாம் உண்ணாமல், நல்ல சத்தான சிறந்த உணவுகளைச் சாப்பிடுவதும் மிகவும் உதவக்கூடியன வாகும்.

அண்மைக்காலத்தில் வெளிநாட்டு உணவுகள் - வேக உணவுகள் (Fast Foods)
கடைகள் இறக்குமதியாகி விட்ட நிலையில், கொள்ளை விலை கொடுத்து அவற்றை வாங்கித்தின்று தங்களது பொருளையும், உடல் நலத் தையும் மிக வேகமாக இழந்து வருகின்றனர்!

ஒரு மருத்துவர் அம்மையார் என் னிடம் கூறினார். தங்களூரில் கொத்த னார் வேலை செய்யும் ஒருவர் டாஸ்மாக் சரக்கு வாங்கிக்கொண்டு, பக்கவாத்தியமாக முந்தைய பெரும் குடி மக்கள் முறுக்கு மற்றும் இறைச்சி வகையறாக்கள் - இவற்றைச் சாப்பிடு வதற்குப் பதிலாக அமெரிக்க பிட்சா (விலை ரூ.150, 200) வாங்கிச் சாப்பிட்டு தனது உடலைச் சீரழித்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனராம்! என்னே கொடுமை!

சிறந்த உணவுகள் என்று அமெ ரிக்காவின் சத்துணவு மய்யம் (Nutrition Centre) (இது தலைநகர் வாஷிங்டன் ஞி.சி.யில் உள்ளது) 10 சூப்பர் உயர்தர உணவு வகைகளைத் தேர்வு செய்து மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது!
1. இனிப்பு உருளைக் கிழங்குகள்
(Sweet Potatoes)இது காய்கறிகளில் மிகவும் சத்தான நட்சத்திர உணவு என்று கூறலாம். கார்ட்டோனாய்டுஸ் என்று முக்கிய உடல்நலப் பாதுகாப்புச் சத்தும், சி வைட்டமின், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகளை ஏராளம் உற்பத்தி செய்து உடலுக்குத் தரும் உணவு ஆகும் இது!

இதை அவித்து கிழங்கை மசிய லாக்கி பட்டை, ஏலக்காய், ஜாதிக்காய் முதலிய வாசனைப் பொருள்களை (மசாலா பொருள்கள் அளவோடு) சேர்த்து சிறிது காரம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் முதலிய சேர்க்க வேண்டி யவைகளோடு சமைத்து உண்டால், அதுவே சிறப்பான உணவாக- சத்துக் களைத் தருவனவாக அமைந்துவிடும்.

2. மாங்காய்ஒரு கப் மாங்காய் ஒரு நாளுக்கு உட லுக்குத் தேவையான சி வைட்டமின், ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதி தேவையான வைட்டமின் சத்தும் இதன் மூலம் உடலுக்குக் கிடைக்கிறது. தேவை யான அளவு இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் பொட்டாசியம், 3 கிராம் நார்ச்சத்து (Fiber). போனஸ் தகவல்: மாம்பழங்களில்தான் குறைவான அளவு கிருமிநாசினி தங்கல் உள்ளது; எனவே, அது ஒருவகை உடல் பாதுகாப்பு.

3. இனிப்பாக்கப்படாத கீரிக் தயிர்

கொழுப்பு இல்லாத பிளைன் தயிர் (கீரிக் தயிர்) இத்துடன் பெர்ரீஸ், வாழைப்பழம் முதலியவைகளை - உலர்ந்த திராட்சைகளைக்கூட விருப்பத்திற்கேற்ப சேர்த்து, குழைத்து காலை உணவுத் தானியங்களோடு சாப்பிட்டால் மிகவும் அருமையான ஊட்டச்சத்தினை அது நமக்கு அளிக்கும். இதில் ஏராளமான புரதச்சத்து உள்ளது. (நல்ல பாக்டீரியாக்கள் நமது நோய் எதிர்ப்பைப் பெருக்கவும், உணவைச் செரிக்கச் செய்யவும் உதவக்கூடும்) சாதாரண தயிரில் உள்ள புரதச் சத்தைவிட இரு மடங்கு இதில் கூடுதலாக உள்ளது. 6 அவுன்ஸ் சாதாரண (Plain) தயிரில் உள்ளது என்றால், இவ்வகையில் மூன்று மடங்கு 18 அவுன்ஸ் அதிகம் உள்ளதாம்.

4. பிராக்கலி கீரை
(Broccoli)அமெரிக்காவில் இக்கீரை சர்வ சாதாரணம். இந்தக் கீரைக்குப் பதில் பொன்னாங்கன்னி, சிறுகீரை போன்ற வைகளை நாம் நம் நாட்டு வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். இத்தனை கீரைகளில் இரும்புச்சத்துடன் காரட்னாய்டுஸ் (Carotenoids)   கே வைட்டமின். ஃபோலிக்  ஆசிட் (Folic Acid) என்ற (ரத்தச்சோகை நீக்குவது) இத்தோடு சிவப்பு மிளகு.

5. ஓயல்வலட் சால்மன் - மீன்
ஒமேகா - 3 மீன் கொழுப்பு என்பது உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. தற்போது ஜெர்மனியில் நாங்கள் தங்கியிருந்தபோது காலை உணவில் சேர்த்துக் கொள்ளும் வெண் ணெய் தயாரிப்பில் இந்த ஒமேகா-3-ம், ஒமேகா-6-ம் இணைக்கப்பட்டதைக் கண்டு வியந்தோம்; காலை உணவுக்கு வெண்ணெய்யை (Butter) ரொட்டியில் தடவி உண்டோம். இது இதயநோய் தடுப்பானாகப் பயன்படுகிறது! பக்க வாதம் (strokes) வராமல் தடுக்கவும் இது உதவக்கூடும். சால்மன் என்ற அரிய மீன்வகையில் இது கிடைப்ப தால் இதையும் உணவாகப் பயன் படுத்துவது மிகவும் நல்லது.

6. முறுமுறு ரொட்டி -ரஸ்க் (Rusk) வகையறா...Whole Grain  என்ற கோதுமையின் உமி நீக்காத முறுமுறு ரொட்டிகள் முழுச் சத்துள்ளவை (அமெரிக்காவில் வாசா, ரைகிரிஸ்ப், காவ்லி, ரிவிட்டா) அனைத்தும் நார்ச்சத்துள்ள கொழுப் பற்ற உணவுகளாக அமையும். தேன் சில சொட்டுக்கள் விட்டு, லவங்கப்பட் டையும் சேர்த்துக் கொண்டால், மிகவும் சுவையாக அது அமையும்.

7. கார்பன்சா பீன்ஸ் (Garbanzo Beans)
கொண்டைக்கடலைகடலை வகையறாக்கள் எல்லாமே சிறப்பான ஊட்டச் சத்துள்ளவை - அதிலும் கொண்டைக் கடலை - நம் வீடுகளில் சென்னா என்றும் சொல் வார்கள். இதன்மூலம் புரதச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டா சியம், துத்தநாக சத்து (Zinc)
 
எல்லாம் இதில் ஏராளம் உள்ளன. பலதரப்பட்ட வைகள் உண்டு.

அந்தக் கொண்டைக் கடலையை ஊற வைத்து, குழைத்து (குழைக்காமலும் வசதிப்படி) பச்சைக் காய்கறிகள், கீரை களுடன் இணைத்து சாலட் (Salad) செய்வதுடன், காய்கறிகள் எல்லாம் ஸ்டூ (Stew) கறிகளை போட்டு சூப் தயாரித்து இத்துடன் காய்கறி, பழுப்பு அரிசி (Brown Rice) லெபனீஸ் ரொட்டி அதற்குப் பெயர் Couscous, Bulgcul போன்ற முழு தவிடு நீக்கா தானியமாக அமைந்துள்ள வைகளையெல்லாம் பயன்படுத்தலாம்.

8. தர்ப்பூசணி (Watermelon)இது ஒரு நல்ல ஊட்டச் சத்து உணவு, நிறையச் சாப்பிட்டால், திரவமாகி, வயிற்றை அடைக்காது; நல்ல வெயில் காலத்தில் நமது நாட்டில் நமக்கு நல்ல பயன் தரும் உணவு இது. 2 கப் தர்ப் பூசணி, ஒரு நாளுக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் ஏ வைட்டமின், சி வைட்டமின், ஒரு குறிப்பிட்ட அளவுக் குப் பொட்டாசியம், அத்துடன் லைக் கோன்டீன் சத்து (இது தக்காளியிலும் ஏராளம் உண்டு - இருதயப் பாதுகாப் புக்கு இது மிகவும் அம்சமான சத்து) 85, உப்பு இல்லா, கொழுப்பு இல்லா 85 கலோரி அளவுள்ள மிகவும் குறைந்த தேவை அளவுள்ள கார்பன் (Food Print) இதில் அடக்கம்.

9. பரங்கிக்காய் வறுவல் அல்லது சூப் (Butternut Squash) பரங்கிக்காயின் ஜூஸ் - அதைத் துண்டு துண்டாக வெட்டி, நறுக்கிய துண்டுகளை அடுப்பில் வைத்து, ஒரு வறுவலைப் போல் அல்லது சூப் ஆகத் தயாரித்து, உணவின் ஒரு பகுதியாக ஆக்கி உண்ணலாம். இதன்மூலம் ஏராளமான ஏ வைட்டமின், சி வைட்டமின், நார்ச் சத்துக்கள் ஏராளம் கிடைக்கும்.

10. பச்சைக் கீரைகள்(அமெரிக்காவில் சக்தி வாய்ந்த கீரைகளான கேல், கொலாட்ரிஸ், ஸ்பீனாச்), முள்ளங்கி, கடுகு கீரை, ஸ்விஸ் சார்டு (Swiss Chard) போன்றவைகளை எப்போதும் விலக்கி விடாதீர்கள்!

நம் நாட்டில் உள்ள கீரைகள் எல்லாம் பல்வகையான ஊட்டச் சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் உள்ளடக்கி யவையாகும். நினைவு ஆற்றலைப் பெருக்குவதற்குக்கூட நம் நாட்டில் ஏராளமான கீரைகள் (வல்லாரைக்கீரை) போன்றவைகள் உண்டே!

இந்தக் கீரை வகையறாக்கள் மூலம் வைட்டமின்கள் ஏ, சி, கே, மற்றும் ஃபோலேட் (Folate) பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, லுயூடெயின், நார்ச் சத்துக்கள் இவை கள் எல்லாம் இதில் ஏராளம் உண்டு.
இதை பலவிடங்களில் எலுமிச் சைப் பழச்சாற்றுடன் கலந்தும், ரெட் ஒயின் (Red Wine) கலந்த வினிகர் (புளிப்புள்ள காடிச்சத்துடன் இணைந் தும் பரிமாறிடும் பழக்கம் உள்ளது!)

எனவே, தினம் தவறாது எது நம் நாட்டில் எளிமையாக - குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதனை வாங்கி, குடும்பத்துடன் சாப்பிட்டுப் பயன் அடையலாம்!
 
வெறும் நாக்கு ருசிக்காக மட்டும் சாப்பிடாதீர்கள் - வாழ்க்கையை நீட்டவே உண்ணுங்கள்! நீண்ட நாள் நன்றாக வாழுங்கள்!

இத்துடன் உங்கள் உடல்நலத் திற்கே பழங்களைக் கூடுதல் உண வின் ஒரு பகுதியாக - முக்கிய பகுதி யாக ஆக்கிக்கொண்டு நல வாழ்வு வாழுங்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் இவைகளைத் தவிர்த்து, கொய்யாப் பழம், சாத்துக்குடி, ஆப்பிள், மாதுளை, நாவல் பழம், பாகற்காய் போன்றவை களைப் பயன்படுத்தி ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பருவப் பழங்களை உண்ணலாம் எப்போதோ ஒருமுறை.
 
உதாரணம், மாம்பழம், பலாச்சுளை - விதிவிலக்காக - ஒரு சில அளவு - மற்ற உணவைக் குறைத்துக்கொண்டு உண்பது தவறில்லை என்கிறார்கள் மருத்துவர்கள் - ஓகே!

- கி.வீரமணி
Friday, June 20, 2014

ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு

ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு 
டெல்லி: ரயில் கட்டணத்தை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்ற முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா ரயில் கட்டணம் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்த பிறகு உயர்த்தப்படும் என்றார். இதையடுத்து ரயில் கட்டணம் ஜூன் 20ம் தேதி அன்று 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது. 
 
ரயில் கட்டணம் கடும் உயர்வு: பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% உயர்வு அதன்படி இன்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ரயில் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
 இந்த புதிய கட்டண உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணம் வேறு கடுமையாக உயர்ந்துள்ளது.

நன்றி : தமிழ் ஒன் இந்தியா

Saturday, June 7, 2014

கடவுள் அப்பீல் தள்ளுபடி

கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன். எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

பள்ளியில் நடந்த கதை

நான் சாத்தாங்குளம் பக்க மிருக்கும் இட்டமொழி என்ற ஊரி லுள்ள உயர்நிலைப்பள்ளியில், அங் குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் போது 1947ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு.

ஒரு நாள் இரவு 11 மணியளவில் நாங்கள் படிக்கும் அறையில் இரவு படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, பக்கத்திலுள்ள பெண்கள் பள்ளியில், தங்கும் விடுதி யில் திடீரென்று மாணவியர் அலறவே, எங்கள் பள்ளி மாண வர்கள் திருடனாயிருக்கலாமென்று நினைத்து உதவிக்கு ஓடினார்கள். அங்குப் போய்ப் பார்த்தால் என்ன காரணம் என்றே தெரியவில்லை.

அவள் அலறினாள், நான் அலறி னேன், அவள் ஓடினாள், நான் ஓடினேன் என்று மாணவியர் கூறினார்களே யொழிய உண்மை தெரியவில்லை. ஒரு எலியோ தவளையோ, பாச்சானோ, கரப்பான் பூச்சியோ சேலைக்குள் நுழைந்தால் போதும், ஓலம் கிளம்பி விடும்.  அது 33 1/3 சதவிகிதம் ஆட்சியிலும், அதி காரத்திலும் பங்கு கேட்கும் பெண்களின் இயற்கையான பயந்த சுபாவம்தான். அதனால்தான் பேய் பிடித்தவர்கள் பெரும் பான்மையினர் பெண்களாயிருப்பார்கள்.

அது போல வே போலிச்சாமியாரிடம் ஏமாறுப வர்களும் பெண்களாகவே இருப் பார்கள். அன்று எங்கள் விடுதியி லிருந்து ஓடி பள்ளி மாணவியருக்கு உதவச் சென்று திரும்பியவர்களில் ஒரு மாணவனுக்கு மனநிலை சரியில் லாமல் ஆகிவிட்டது.  பேய் பிடித்து விட்டதென்று கூறினார்கள். அந்தப் பள்ளிக்கு ஓடின வழியில், இறந்த வர்களின் புதை குழிகள் இருந்ததாக கூறினார்கள்.

அதனால் அந்த மாணவன் அதோ ஒருவன் தெரிகிறான், இதோ வருகிறான், என் கழுத்தை நெரிக்கிறான் என்று கண் விழிகள் மிரள பிதற்றிக் கொண்டிருந்தான். எங்கள் பள்ளி விடுதிக் காப்பாளர் விவரம் தெரிந்தவராய் இருந்தபடியால், பேய்க்குப் பார்ப்பவர்களிடம் அனுப்பாமல், அருகில் மருத்துவமனைகள் அப்போது இல்லாததால், நாசரேத்தி லுள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு போய் அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார்கள். பேய் ஓடிவிட்டது. மறுநாள் சுகமாய்ப் பள்ளி விடுதிக்கு வந்தான்.

இந்த நிகழ்ச்சி 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்பொழுதெல்லாம் சிற்றூர்களில் பேய் பிடித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுண்டு. காட்டில் விறகு பொறுக்கப் போன இடத்தில் இசக்கி அம்மன் பிடித்துவிட்டாள், கொள்ளி வாய்ப் பிசாசு அடித்து விட்டது என்று கதை விடுவார்கள். ஊரில் காலராவோ, வைசூரியோ வந்தால் அம்மன் தொந்தரவு என்று சொல்லி கோயில் களில் கோடைவிழா நடத்துவார்கள்.

அந்தக் கோடை விழாதான் கொடை விழாவாக மாறி - குடை விழா என்று இப்பொழுது சொல்லப்படுகிறது.  மேலும் சாதாரண தலைவலி காய்ச்சலுக்குக் கூட பூசாரிகளிடம் போய் மந்திரித்துக் கொள்ளுவார்கள். இப்போது கல்வியறி வும், அரை குறை மருத்துவ அறிவும் வந்து விட்டதால், தலைவலி, காய்ச்ச லுக்கு கடையில் வலி நிவாரண மாத்திரை ஒன்று வாங்கிப் போட்டுக் கொள்ளுவார்கள்.

பின்னால் சுகமாக வில்லையென்றால் மருத்துவரிடம் ஓடுகிறார்கள். அந்தக் காலத்தில் டைபாய்ட் போன்ற காய்ச்சல் வந்து 105 டிகிரிக்கு காய்ச்சல் ஏறி, நோயாளி புலம்பும்போது பேய் பிடித்திருக்கிறது என்று கருதி பூசாரிகளிடம் ஓடினார்கள். இன்று மருத்துவர்களிடம் செல்லுவார்கள். இது ஒரு நல்ல மாற்றம்.
நூல்: மூடநம்பிக்கைகள் பலவிதம் (தர்மராஜ் ஜோசப், எம்.ஏ.,)

விசித்திரமான நம்பிக்கை!

மனித இன தோற்றம் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி நிபுணரான மலனோ விஸ்கி பசிபிக் தீவுகளின் பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த டிராபிரியண்டர்களைப் பற்றி ரமான செய்திகளை வெளியிடுகிறார்.

மணமான பிறகு கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சுமார் மூன்று ஆண்டுக்காலம் படகில் பயணம் செய்து கொண்டேயிருப்பான். கணவன் வீடு திரும்பும் காலத்தில் ஒன்றோ அல்லது பல குழந்தைகளோ மனைவிக்கு ஏற்பட்டிருப்பதைக் காண்பான். ஆனால் இதுகுறித்து கணவன் மனைவி யிடையே எந்த சச்சரவும் உண்டாகாது. குற்றம் சாட்டவும் மாட்டார்கள்.

காரணம் குழந்தை பிறப்பதற்கும் உடலுறவுக்கும் சம்பந்தமில்லையென்றே அவர்கள் நினைத்தார்கள். பழங்குடி மக்களுக்கு தெரிந்தது எல்லாம் ஏதோ ஒரு இறந்த குழந்தையின் ஆவிதான் அவர்களுடைய மனைவி மார்களின் வயிற்றினுள் புகுந்து கொள்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது என்பதுதான். இத்தகைய விசித்திரமான நம்பிக்கை காரணமாகவே - கர்ப்பம் ஏற்பட அவர்களிடையே பலதரப்பட்ட மந்திர உச்சாடனங்களும், சடங்குகளும் தோற்றுவிக்கப்பட்டி ருந்தன.

ஒரு பழங்குடி மக்கள் பெரும் அளவு வாழைப் பழங்களைச் சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படுவதாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை ஆணின் உறுப்பு போல வாழைப்பழம் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். வேறு பழங்குடி மக்களோ நல்ல முத்து அல்லது நவரத்தினங்களில் ஏதாவது ஒன்றை சாப்பிடுவதால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவில் அசந்தி பழங்குடி மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு நதிக்குச் சென்று, அதில் வசிக்கும் புனிதமாகக் கருதப்படும் பாம்பு ஒன்றை பிடித்து அதைக் கொன்று நீரை எடுத்து உடலில் தெளித்துக் கொண்டால் கர்ப்பம் ஏற்படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிலும், நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏராளமான நாகர் சிலைகளை அரச மரங்களினடியில் காணலாம்.
ஆஸ்திரேலியாவில் சனஸ்டா இன பண்டை மக்களிடையே மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இறந்தவர்களின் ஆவி வசிப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு அருகில் ஒரு பெண் அடிக்கடி சென்று வருவதால் கர்ப்பம் தரிக்கலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

மொரோக்கோ நாட்டில் மணமக்களை முதல் இரவுக்காகப் படுக்கைக்குச் செல்லும் போது உறவினர்கள் அவர்கள் முன்னால் முட்டைகளை உடைப்பார்கள். இப்படிச் செய்தால் கன்னிமைத்திரை எளிதில் கிழியும் என்று கருதுகிறார்கள்.

சென்னையில் இரவு நேர பேருந்துகள் குறைப்பு: பொதுமக்கள் கடும் பாதிப்பு


சென்னை, ஜூன் 6-சென் னையில் இரவு நேரத்தில் இயக்கப்படும் பேருந்து களின் எண்ணிக்கையை மாநகர போக்குவரத்துக் கழகம் திடீரென குறைத் துள்ளதால், இரவு நேரங் களில் பேருந்துகள் கிடைக் காமல், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

26 இடங்களில் பணிமனைகள்

சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார் பில், தினமும் 3,452 பேருந் துகள், 100 ஏசி பேருந்துகள் மற்றும் 100 சிற்றூந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கான பணி மனை, தியாகராயர்நகர், மந்தைவெளி, குரோம் பேட்டை, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட 26 இடங்களில் உள்ளன.

சென்னை நகரில் இரவு நேரங்களில் பயணிக்கும் மக்களின் வசதிக்காக ஒவ் வொரு பணிமனையில் இருந்தும் 5 பேருந்துகள் வீதம் மொத்தம் 125 பேருந் துகள் இரவு நேர பேருந்து களாக இயக்கப்பட்டு வந் தன. இதனால், ஏராளமா னோர் பயனடைந்து வந்த னர்.

இந்நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது 125 இரவு நேர பேருந்துகளை 80ஆக குறைந்துள்ளது. இதனால், இரவு 10 மணிக்கு மேல் தனி யார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவோர் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மயிலாப்பூர், திருவான்மியூர், மேடவாக் கம், கிழக்கு தாம்பரம், ஆவடி, திருவெற்றியூர், போரூர், எண்ணூர், வேளச் சேரி, தியாகராயர்நகர், எழும்பூர் உள்ளிட்ட இடங் களுக்கு 3 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்ற வீதத்தத் தில் தான் இரவு நேர பேருந் துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆட்டோக்களில் செல்லவேண்டியுள்ளது

மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே இந்த பேருந்துகள் இயக்கப் படுகின்றன. உட்புற பகுதி களுக்கு இயக்கப்படுவ தில்லை. இதனால், பயணி கள் அனைவரும் ஆட்டோக் களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இரவு நேரங் களில் சென்னையின் உட்புற பகுதிகளுக்கு சிற்றூந்து களை இயக்க வேண்டும். அதேபோல் இரவு நேர பேருந்துகளின் எண்ணிக் கயை 250 ஆக உயர்த்த வேண்டும், என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து துறை அதி காரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் 125 இரவு நேர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.சில இடங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படு கிறது.

மேலும், சில பணி மனைகளில் பேருந்து களுக்கு எப்சி பணி நடை பெற்று வருவதால், இரவு நேர பேருந்துகளின் எண் ணிக்கை குறைந்துள்ளது. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும். இரவு நேரத்தில் சிற்றூந் துகள் இயக்குவது குறித்து தற்போது வரை எந்த முடி வும் எடுக்கப்படவில்லை. அதுப்பற்றி உயர் அதிகாரி களுடன் கலந்துபேசி முடிவு செய்யப்படும், என்றனர்.

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

 

 சென்னை: டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பின்னர் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படி 46 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்டவர்களுக்கு கடந்த மாதம் சான்று சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘‘பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும்’’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, தற்போது புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கான பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. தற்போது 73 ஆயிரம் பேர் புதிய வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பெண் பெறுவார்கள்.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது குறித்து பட்டதாரி சங்கங்கள் சார்பில் கூறப்படுவதாவது:

டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்ணுக்கு பொதுப் பிரிவினர் குறைந்த பட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். 5 சதவீத தளர்வின்படி எஸ்சி எஸ்டி பிரிவினர் உள்ளிட்டவர்கள் குறைந்தபட்சம் 82 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். 5 சதவீத தளர்வு பெற்றவர்கள், புதிய வெயிட்டேஜ் முறைப்படி 49.20 மதிப்பெண்கள் டிஇடி தேர்வில் பெறுகின்றனர். ஆனால் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் வீதம் பெற்றால் தான் அவர்கள் புதிய வெயிட்டேஜில் 100க்கு 64 புள்ளிகளாவது  பெறுவார்கள்.

மேலும், 90 மதிப்பெண்கள் பெற்ற பொதுப் பிரிவினர் (‘எஸ்’ சதவீதப்படி) 54 புள்ளிகள் பெறுவார்கள். மற்ற படிப்புகளில் குறைந்த பட்சம் தலா 5 மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்கள் 100க்கு 69 புள்ளிகளை நெருங்குவார்கள். இதன்படி பார்த்தால் 5 சதவீத தளர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், பொதுப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும் ஏறத்தாழ சம அளவு புள்ளிகளை பெறும் நிலை ஏற்படுகிறது. இதனால் 73 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெறும் தகுதி பெறுகிறார்கள். ஆனால், மொத்தம் உள்ள 15 ஆயிரம் பணியிடங்களை இன சுழற்சி முறையில் பிரித்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அதனால் ரேங்க் பட்டியலில் இன சுழற்சி வாரியாக முதலில் வருவோருக்கே பணி நியமனம் கிடைக்கும். மீதம் உள்ள சுமார் 58 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பு இல்லை. பணி வாய்ப்பு இழந்தவர்கள் மறுமுறையும் தேர்வு எழுத வேண்டுமா அல்லது அவர்களுக்கு அடுத்து வரும் காலிப் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படுமா என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும்.

இவ்வாறு பட்டதாரிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Friday, June 6, 2014

அவாளால் தகர்க்கப்பட்ட தகுதி, திறமை மாய்மாலம்? .


நாம் இடஒதுக்கீடு கேட்டு போராடினால், தகுதி திறமை போய் விடும் என அங்கலாய்த்த பார்ப் பனர்கள், நமக்கு எதிராக, வட நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; உச்ச நீதி மன்றம் சென்று, வழக்குப் போட்டார்கள்.

இட ஒதுக்கீடு அளிப்பதால், தகுதி திறமை ஒருபோதும் குறையாது; வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்திற்கு, அந்த உரிமை தரப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதாடி, இந்த தடை களையெல்லாம் உடைத்துத் தான், ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கு முன்னேறி வருகிறார்கள்.

இன்றைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்தாவது கூட படிக்க வில்லை, என சிலர் குற்றஞ்சாட்டிய தும் அப்படி கூறலாமா? ஒருவரது படிப்பை வைத்து, அவரது திற மையை எடைபோடலாமா? அவருக் குக் கல்வித்துறையில் முன் அனுபவம் இருக்கிறதா என்று கேட்கலாமா? முதலில் அவர் அந்த பணியைச் செய் யட்டும்;

அதில் எவ்வாறு செயல்படு கிறார் என்று பார்த்து அப்புறம்தான் மதிப்பீடு அளிக்கவேண்டும் என இப்போது பார்ப்பனர்கள், நாம் வைக் கும் அதே வாதத்தை வைக்கிறார்கள். நம்மூர் தொலைக்காட்சியில், ராகவன் எனும் பார்ப்பனர், காமராசர் என்ன படித்தவரா? எனக் கேட்கிறார். கல்விப் புரட்சி ஏற்படுத்திய காமராசரும், ஸ்மிரிதி இரானியும் ஒரே நிலையில் வைத்து நாம் பார்க்க முடியாது.

ஆயினும், நாமும் ஸ்மிரிதி ஜுபின் இரானி மீது வீசப்படும் இந்த குற்றச் சாட்டை ஆதரிக்கவில்லை; கல்வித் துறை அமைச்சராவதற்கு, இந்த படிப்புதான் வேண்டும் என நியதி எதுவும் கிடையாது.

இதற்கு முன்னர் பாஜக ஆட்சியில் இருந்தபோது, இதே துறையை நிர்வகித்த மெத்தப்படித்த டாக்டர் முரளி மனோகர் ஜோஷி என்ன சாதனை செய்தார்? இந்தியாவில் ஒரு ஆயிரம் பேர்கூட பேசாத சமஸ்கிருத மொழியை, செம்மொழி என அறிவித்து, அதன் மேம்பாட்டுக்காக, ரூ.100 கோடி ஒதுக்கச் செய்தார்;

ஜோஸ்யத்தை, வேத அறிவியல் என கூறி, அதனை பாடத் திட்டத்தில் சேர்த்திட முனைந்தார்; இந்த துறையில் இயங்கும், இந்திய வரலாற்று ஆய்வு குழுமத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆட்களை நியமனம் செய்தார். இதைத் தவிர, அவர் சாதித்தது ஒன்றும் இல்லை;

உடம்பெல்லாம் மூளை என வர்ணிக்கப்பட்ட ராஜாஜி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஆயிரக் கணக்கான பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார்; எஞ்சிய பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் அவரவர் அப்பன் செய்யும் தொழிலை செய்ய வேண்டும் என்கிற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

நம் தந்தை பெரியார், வெகுண்டெழுந்து, ராஜாஜியை முதல்வர் பதவியிலிருந்து விரட்டி, அந்த இடத்தில், அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராசர், முதல்வராக வருவதற்குக் காரணமா யிருந்தார்; குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்டு, மேலும் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டு, தமிழ் நாட்டில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், கல்வி பெற வாய்ப்பு அதிகமாக உருவானது.

இப்போது, பார்ப்பனர்கள், தாங்கள் இது நாள்வரை கூறி வந்த தகுதி, திறமை என்பதை வாபஸ் வாங்கி, பேசுவதற்கான காரணம் என்ன? பார்ப்பனர்கள் இவ்வாறு பேசுவது ஸ்மிரிதி இரானி மீது அக்கறையால் அல்ல; ஸ்மிரிதி இரானி ஒரு பார்ப்பன பெண்மணியும் அல்ல; அவர் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். இருந்தாலும் அவர் இந்த துறையில், ஆர்.எஸ்.எஸ் சொல்லும்பணியை செவ்வனே செய்துமுடிக்க, ஆர்.எஸ். எஸால் அனுப்பப்பட்ட மோடி அமைச்சரவையில் ஒரு அமைச்சர். ஸ்மிரிதி இரானி, சமஸ்கிருதத்தை உயர்த்திப்பிடிப்பார்;

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என பார்ப் பனர்கள் கருதுகிறார்கள். அதற்குத் தடையாக, தகுதி, திறமை வருமானால், அதனை தகர்க்கவும் அவாள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இப்போது, ஸ்மிரிதி இரானிக்கு வக்காலத்து வாங்கும் இந்த போக்கு.

- குடந்தை கருணா

Read : http://viduthalai.in/page1/81322.html#ixzz33qJbyDzc

Thursday, June 5, 2014

பூனாவில் நடந்தது என்ன!


பூனா, ஜுன் 5- வாட்ஸ்அப் என்கிற இயங்கு வலைதளம்மூலமாக முக நூலில் சிவாஜி, பால்தாக்கரே ஆகி யோரைப்பற்றி விமரிசனம் உள்ள பதிவு இருந்ததை மய்யப்படுத்தி அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீச்சு என்று வன்முறை வெடித் துள்ளது - சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கொல்லப்பட்டார்.

இதனால், பூனா நகரே கலவரமய மாகி உள்ளது.  சத்ரபதி சிவாஜி, சிவ சேனைக்கட்சி நிறுவனர் பால் தாக்கரே குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட படங் களை  முகநூலில் பதிவு செய்ததைத் தொடர்ந்தே வன்முறை வெடித்துள்ளது. அமைதிப்படுத்த சிறப்புக் காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மராட்டிய மன்னன் சிவாஜி, சிவ சேனைக்கட்சியின் மறைந்த தலைவரான பால் தாக்கரே மற்றும் பலருடைய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் முகநூலில் பதிவு செய்யப்பட்டிருந்தன. பிரச்சினைக்குரிய முகநூல் பதிவால் எதிர்ப்பாளர்களான சிவசேனைக்கட்சி, பாஜக, வலதுசாரி அமைப்பான ஹிந்து ராஷ்டிர சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் ஏற்பட்ட வன்முறை யால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 33 காவல் நிலையங்களில் 24 காவல்நிலையங்கள் சனிக்கிழமை31-5-2014 அன்று இரவு நேரத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அதே இரவில் சமூகவிரோதிகள் வாகனங்கள்மீது கல் வீச்சில் ஈடுபட்டனர்.

130 அரசு பேருந்துகள், 21 தனியார் வாகனங்கள் சேதமாயின. மேலும், ஒரு பேருந்து, டெம்போ, மோட்டர் பைக் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டன.  கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. எதிர்ப்பா ளர்கள் இந்த கலவரத்தில் வகுப்பு பேதங்களையும் காட்டி, மதத்துக்குரிய இடங்களையும் தாக்கிக்  கலவரங்களில் ஈடுபட்டனர். போப்கெல் பகுதிக்கு அருகில் உள்ள கணேஷ்நகர், போசாரியில் உள்ள லேந்தவாடி, லோஹோகான், ஹடாப்சார் பகுதியை அடுத்த சையத் நகர் மற்றும் புர்சங்கி ஆகிய பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் குழுவாக காவிக்கொடிகளுடன் மோட் டர் பைக்குகளில் ஊர்வலமாகச் சென்று முழக்கங்கள் எழுப்பியவாறு பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். கடை களை அடைக்க வலியுறுத்தினர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தபோது,  அமெரிக்காவிலிருந்து இயங்கக்கூடிய சமூக வலை தளத்தி லிருந்து பிரச்சினைக்குரிய பதிவுகளை அகற்றுமாறு கோரினர். அதே பதிவுகள் மற்றொரு சமூக வலைதளத்திலும் 1-6-2014அன்று பதிவாகி உள்ளது. பின் அகற்றப்பட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் சஞ்சய் குமார் கூறும்போது, முதற்கட்டமாக பலமணிநேரத்துக்குப்பிறகு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது. முகநூலில் பிரச்சினைக்குரிய பதிவு இடப்பட்டுள்ளதை விசாரணை செய்து வருகிறோம்.

117 பேர் கைது!

1-6-2014 அன்று மாலையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர். 101 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு மற்றும வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம்காண தொடர்ந்து கண் காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகி றோம். வன்முறைச்சம்பவங்கள்  52 இடங்களில் நடைபெற்றுள்ளன. 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் சேதத்தில் போசாரி பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. நூர் மொஹல்லாஹ் பகுதியில் 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இருசக்கர வாகனங்கள் தீக் கிரையாக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295-ஏவின் கீழ்(பிரிவினைவாதம் மற்றும் தீங்கி ழைத்தல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல், மதம் மற்றும் மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத் தின்கீழும் கோத்ருட் மற்றும் ஹிஞ் ஜெவாடி காவல் நிலையங்களில் அடையாளம் தெரியாதவர்கள்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தர்மவீர் சிறீ சாம்பாஜி மகராஜ் என்கிற பெயரில் முகநூலில் சனிக் கிழமை (31-5-2014)  இரவு சத்ரபதி சிவாஜி, பால் தாக்கரே, கணேஷ் கடவுள் (வினாயகன் படம்) மற்றும் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் ஆகிய தவறாக சித்தரிக்கப்பட்ட படங்கள் பதிவிடப் பட்டுள்ளன. அதனால், உடனடியாக எதிர்வினைகள் ஏற்பட்டு, காவல்துறை யிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. சாபேகர் சவ்க் பகுதியில் இரவு 9.30 மணிக்கு  12 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. வாட்ஸ் அப் எனும் இணைய இயங்குதளம்மூலமாக காட்டுத்தீயாக முகநூல் பதிவு பரவியது. வதந்தி பரப்புவர்களும் பதட்டத்தை ஏற்படுத்தும்வகையில் உண்மைக்கு மாறானவற்றை பரப்பினர்.

அதிகாலை 2 மணிவரையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன என்று காவல்துறையின் உயர் அதிகாரி கூறுகிறார். பாதிப்புக் குள்ளான பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட் டனர். கலவர தடுப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காவல் தலைமையகத்திலிருந்து மேன்மேலும் ஆயிரக்கணக்கிலான காவல் படைகள் குவிக்கப்பட்டன. ஆயுதப்படையினரும் 31-5-2014 அன்று நள்ளிரவுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பூனா காவல்துறையின்சார்பில் டில்லியிலுள்ள கணினி அவசர பொறுப்புக் குழுவி னரின் (Computer Emergency Response Team-CERT) உதவியுடன் முகநூலில் பதிவிடப்பட்டவை நீக்கப்பட்ட ன.

முகநூல் இணைய செயல்பாடுகளின் கட்டுப்பாட்டகம் அமெரிக்காவில் இருப்பதால் சில நேர தாமதத்துக்குப் பின்னர் பிரச்சினைக்குரிய பகுதிகள் முகநூலிலிருந்து நீக்கப்பட்டன. சமக இணைய தளங்களிலிருந்து எதையும் நீக்க வேண்டுமானால் நீதிமன்ற உத்தரவு இருக்க வேண்டும். அதன்படி டில்லியி லுள்ள கணினி அவசர பொறுப்புக்குழு (Computer Emergency Response Team-CERT) செயல்பட்டு பிரச்சினைக்குரிய முகநூல் பதிவை நீக்கினர். நிஹால் கான் என்கிற பெயரில் இளம் நிகில் டைகோன்  படத்துடன் 31-5-2014 அன்று இரவு வாட்ஸ் அப்பில் பரபரப்புடன் வலம் வந்தது. 1-6-2014 அன்று பிற்பகலில் முகநூலில் பதிவிட்டவர் கஸ்பா பேத் பகுதியைச் சேர்ந்த  டைகோன் என்பவர் என்று தெரிவந்தது. அதன்பிறகு அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

பூனா நகரின் வடக்குப்பகுதி இந்த கலவரத்தில் கல்வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹின்ஜெவாடி, பிம்பிரி, சின்ச்வாட், போசாரி, கட்கி, ஏர்வாடா, பூனா-அகமத்நகர் சாலை, கராதி, வேனோவ்ரி, ஹடப்சர் உள்ளிட்ட பூனா மாவட்டத்தின் பல்வேறு பகுதி களும், லோனி கல்போர், வேகோலி, வாட்கான் மாவல் மற்றும லோனவாலா ஆகிய பகுதிகள் பாதிப்புக்கு உள்ளா யின. மும்பை-பூனா நெடுஞ்சாலை, பூனா-அகமத்நகர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் முற்றிலும் சாலை போக்கு வரத்து முடக்கப்பட்டது. காவல் துறையினர்  27 வழக்குகளைப் பதிவு செய்து, 53 பேரைக் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஆயுதப்படையினரின் இரு பிரிவுகள், அதிரடிப் படையினர்  பூனாவைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் தொடர்ந்து பாது காப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, ரோந்து சுற்றி வருகின்றனர் என்று பூனா புறநகருக்கான காவல் கண்காணிப் பாளர் மனோஜ்குமார் லோகியா கூறினார். பூனாவின் நகரப் பகுதிகளில் மூன்று பிரிவாக ஆயுதப்படைப்பிரிவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட் டுள்ளது. பூனாவின் வடக்கு நகர்ப் பகுதியில் டிஜீபி பொறுப்பில் உள்ள காவல் உயர் அதிகாரியின் மேற் பார்வையில் மண்டலங்கள் மூன்று மற்றும் நான்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்புப்பணிகளில் வடக்குப் பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பூனாவின் காவல் துறையின் ஆணையர் சதீஷ் மாத்தூர் விடுப்பில் உள்ளார். பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள் ளார். எந்த பதிவையும், படத்தையும், கருத்தையும் பொதுமக்களின் மனங் களைப் புண்படுத்தும்வகையில் முன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ள எண் நூறு (100 )செயல்பட்டுவருவதாகவும் மாத்தூர் தெரிவித்தார்.

1-6-2014 அன்று  கலவரங்களில், கல்வீச்சில் ஏராளமானோர்  படுகாயம் அடைந்திருந்தாலும், 12பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு சாசூன் பொது மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

முகநூலில் பதியவிட்டவர் கடுமை யாகத் தாக்கப்பட்டதால் சுயநினை விழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ளார். சாசூன் மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரி மாஷ்கே கூறும்போது, அவர் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதால் தீவிர மாக அவர்நிலையை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
-  பூனா மிர்ரர், 2-6-2014

இந்த கேலிச் சித்திரங்களை வெளி யிட்டது யார் என்று உறுதி செய்யப் படாத தொடக்க நிலையிலேயே குறிப்பிட்ட சிறுபான்மையினர் தான் இதனைச் செய்துள்ளனர் என்று புரளி யைக் கிளப்பி மென்பொருள் நிறுவ னத்தில் பணியாற்றிய பொறியாளர் கொல்லப்பட்டுள்ளார்!

அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரும் மாநிலங்களில் இதே பாணி தொடரப் படலாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தினமணிக் குடுமி!

நம் நாட்டு இளைஞர்களிடம் தற்போது ஒரு விஷயம் பரவலாகக் காணப்படுகிறது.

அது பிற நாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசை மேதைகள், நடிகர்கள் போன்றவர்களின் படம் அல்லது பெயர் தாங்கிய டி-ஷர்ட்டை பெருமை யாக அணிந்துகொள்ளும் போக்கு.

குறிப்பாக சேகுவாரா எனப்படும் அர்ஜென்டினா நாட்டில் பிறந்த மார்க்சிய புரட்சியாளர். இவர் பெயர் கூட பலருக்குச் சரியாகத் தெரியாது.

ஆனால், இவரைப் போன்ற அயல் நாடுகளில் போற்றப்படும் சில தலைவர்களின் படங்களும், பெயர்களும் இங்கு பனியன்களில் பதிக்கப்படுகின்றன. இவற்றை நமது இளைஞர்கள் விரும்பி வாங்கி அணி கின்றனர்.

நம் நாட்டு இளைஞர்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத் துரை, வாஞ்சிநாதன், பூலித்தேவன், சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், வீரசாவார்க்கர், பகத்சிங் போன்ற எண்ணி லடங்கா சுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம்பற்றி ஒன்றும் தெரிய வில்லையா? அல்லது இதிலும் வெளிநாட்டு மோகமா? என்று எதையோ எழுத வந்த தினமணி சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் ஒரு வேலையைச் செய்தி ருக்கிறது.

(தினமணி, 2.6.2014, நமது பெருமை அறிவோம் எனும் கட் டுரை, பக்கம் 8).

மற்றவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்; வீரர்களின் பட்டியலில் வீரசாவார்க்கர் எங்கு வந்தார்?

வீர வாஞ்சி எங்கு வந்து குதித்தார்? ஒருக்கால் பெயரில் வீர என்ற சொல் ஒட்டியிருப் பதால் வீரர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டாரோ!

அந்தமான் சிறையிலி ருந்து இந்த வீர சாவார்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் எத்தனை! எத்தனை!!
இன்றைக்கு இந்துத்துவா, இந்துத்துவா என்று கூச்சல் போடுகிறார்கள் அல்லவா, அதன் உற்பத்தி மூளை சாவார்க்கர்தானே!

இஸ்லாமியராகிய நீங்கள் எங்களை (இந் துக்களை) கொன்றீர்கள்.

எங்களின் வழிபாட்டுச் சிலைகளை உடைத்தீர்கள். எங்கள் பெண்களைக் கடத்திச் சென்றீர்கள். உங் களின் அநீதியான நடை முறைகள் எங்களுக்கு வலி யைத் தந்துள்ளது.

நாங்கள் இப்படியே எப்பொழுதும் வாழ முடியாது. எனவே, நாங்கள் சொல்கிறோம்.

இந்துஸ்தான் இந்துக்களின் தாய் நாடு.

எனவே, இந் துக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்பது இந் துக்களின் கடமையாகும். இஸ்லாமியர்களின் தாய்நாடு இந்தியா அல்ல - அவர்கள் துருக்கியையும், அரேபியாவையும் தங்கள் நாடாகக் கருதுகின்றனர். அவர்கள் இதயம் இந்தியாவில் இல்லை என்று சொன்னவர்தான் தினமணி தூக்கிப் பிடிக்கும் சாவார்க்கர்.

இப்பொழுது புரி கிறதா?  சும்மா ஆடுமா தினமணிக் குடுமி?

- மயிலாடன்

பிரதமர் மோடி அலுவலக இணைய தளமா? ஆர்.எஸ்.எஸ். வரலாற்றுப் பெட்டகமா?

பிசினஸ் லைன் ஏடு அம்பலப்படுத்துகிறது
புதுடில்லி, ஜூன் 4- பிரத மர் நரேந்திர மோடி அலு வலகத்தில் இயங்கும் இணைய தளத்தில் ஆர்.எஸ்.எஸ். வரலாறு விரி வாக வெளியிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து பிசினஸ் லைன் (மே 30) ஏட்டில் வெளிவந்த செய்தி வருமாறு:

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மய்யங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கி விட்டது. புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணைய தளத்தை புதுப்பித்து http://pmindia.nic.in என்ற முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள் ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப் பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணி யாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணி யாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பைபற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரச மைப்புச் சட்டத்தின் சோச லிச, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த் திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பது தான்.

ஆனால், பிரதமர் அலு வலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணைய தளத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்த இணையதளத்தில் தனது சித்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: சங் அமைப்பின் சித் தாந்தம் என்பது, ஒட்டு மொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூல மாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய் வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற் றுவதே. இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணி யாற்றுவதற்கான வழி முறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.

பிரதமர் அலுவல கத்தில் புதிய இணைய தளத் தில், முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப் பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள் ளது.

கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புட னான தனிப்பட்ட நபர் களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ் வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.
அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின் பற்றப்பட்டு வந்தது. உதா ரணத்திற்கு, 2001 ஆகஸ்ட் டில் ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம் தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச்செய லாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக் கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப் பட்ட நிகழ்ச்சி என்ற அளவி லேயே இருந்தது. அந்த நிகழ்ச்சி தொடர் பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மறைந்த தலை வர் இனாம்தார் தொடர் பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தக வலும் உண்டு. இனாம் தாரை, வழக்குரைஞர் சாகேப் என்றும் குறிப்பிடு வார்கள்.

அவரைப்பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ் சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதா நாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப் பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அது தொடர்பு டைய ஆர்எஸ்எஸ் ஊழியர் களை பாதுகாப்பதற்கும் இதே வழக்குரைஞர் சாகேப் தான் வாதாடினார் என்பது தனிக் கதை.

நன்றி: தீக்கதிர், 31.5.2014

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பான் கி மூன் வலியுறுத்தல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை யடுத்து தனது அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

 இதுதொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் பெண் கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதை நாம் அறிவோம். நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரையிலும் கலிபோர்னியா முதல் இந்தியா வரையிலும் இதுபோன்ற சம்பவங் கள் நிகழ்ந்துள்ளன.

 குறிப்பாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கழிப்பறை வசதி இல்லா ததே இதற்குக் காரணம் என கூறப்படுவது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது.

 பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அமைதி மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கிய, மனித உரிமை தொடர்புடைய, வளர்ச்சியை உள்ளடக்கிய பிரச்சினை ஆகும். அனைத்து வகையிலும் பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாக இது உலகம் முழுவதும் நடைபெறு கிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் அனை வருக்கும் அவமானம் ஏற்படுத்தக் கூடியது என்பதை மக்கள் அனை வருக்கும் உணர்த்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன் முறைக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்தார்.

 உத்தரப்பிரதேச சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

 யுனிசெப் அமைப்பின் இந்தி யாவுக்கான பிரதிநிதி லூயிஸ் ஜியார் ஜெஸ் அர்செனால்ட் கூறுகையில், "இந்தியாவில் உள்ள 65 சதவீத கிராம மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பெண்களும் சிறுமிகளும் இரவில் வெளியில் செல்ல நேரிடுகிறது. இது அவர்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானதாகும்" என்றார்.

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறை அமல்: தமிழக அரசு அறிவிப்பு


 அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

 கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, இடைநிலை ஆசிரியர்களை பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.
 
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
 
 இதற்கிடையே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், ‘வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது. இந்த முறை செல்லாது. ஒவ்வொன்றிலும் விண்ணப்பதாரர்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

 இதையடுத்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், ‘இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்விலும் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
ஒரே கட் ஆப் வந்தால்..

இந்த தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றால், வயதில் மூத்தவர்களுக்கு (பிறந்த தேதி அடிப்படையில்) முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 
இடைநிலை ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
15
P%
P*15/100
இடைநிலை ஆசிரியர் பயிற்சி
25
Q%
Q*25/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
R%
R*60/100
பட்டதாரி ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி
வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம்
மதிப்பெண்
பிளஸ்-2
10
P%
P*10/100
பட்டப் படிப்பு
15
Q%
Q*15/100
பி.எட்.
15
R%
R*15/100
ஆசிரியர் தகுதித்தேர்வு
60
S%
S*60/100