Total Pageviews

Friday, November 30, 2012

துக்ளக் துடுக்கர் சுப்புக்கு இதோ ஓர் ஆப்பு!


திராவிடர் இயக்கத்தினை கொச்சைப்படுத்திடும் திருப் பணியை கொயபெல்ஸ் பாணி பிரச்சாரத்தினை, துக்ளக் பார்ப்பன ஏடு தொடர்ந்து செய்து வருகிறது.
வெறுக்கத்தக்கதா பிராமணியம்? என்ற சோவின் தொடருக்கு விடுதலையில் ஆசிரி யர் வீரமணி வெறுக்கத்தக்கதே பிராமணீயம்! எனும் தலைப்பில் மறுப்புக் கட்டுரைகள் எழுதி, அந்நூலும் வெளிவந்தது.
அதுபோலவே வேறு ஒரு பார்ப் பனர் பழைய கருப்பையா லட்சுமி நாராயணன் என்ற உண்மை பெய ரில் ஏதோ மிகப் பெரிய ஆய்வா ளரைப் போல் எழுதியதை, விடுதலை யில் அதன் நிருவாக ஆசிரியர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் பல்வகை ஆதாரங்களுடன் - உண்மைகளை சான்றுகளுடன் அடுக்கி, பார்ப்பனப் புரட்டுக்கு தக்க பதிலடி கொடுத்து அது ஒரு நூலாகி நூல்களின் சாயத்தை வெளுக்கும்படிச் செய்துள்ளது!
இந்நிலையில் பழைய கருப்பையர்கள் கிட்டாததால் புதிய சுப்புகளை விட்டு திராவிட மாயை என்ற தலைப்பில் - அத்தலைப்புகூட ஒரி ஜினல் அல்ல; கம்யூனிஸ்ட் பி. இராம மூர்த்தி முன்பு எழுதிய திராவிட மாயையா? என்ற நூல் தலைப்பே ஆகும்!
திராவிடம் மாயை அல்ல; உண்மை இல்லாவிட்டால் இந்திய தேச வாழ்த்துப் பாடலில் வங்கத்து கவிஞர் தாகூர், திராவிட உத்சல வங்கா... என்ற பாடியிருப்பாரா? புண்ணாக்குகளே புரிந்து கொள் ளுங்கள்! (புண் - நாக்குப் படைத்தோர் என்றும் கொள்க)
5.12.2012 துக்ளக் இதழில்  சுப்பு ஒரு பெரிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து எழுதிவிட்டார்!
இறைவனை வேண்டி ஈ.வெ.ரா. என்று எழுதுகிறார்.
...ஈ.வெ.ரா.வை என்ன சொல்வது என்ற கேள்வி மிஞ்சுகிறது. அவரை புளுகு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் என்றே சொல்லிவிட லாம் என்று பொருத்தமில்லாமல் புளுகியிருக்கிறார்.
அட பொய்யில் புழுத்த புழுக் களே, இந்தப் புளுகு கந்தபுராணத் திலும் இல்லை என்ற பழமொழிக்குப் பொருள் என்னப்பா?
நியாயமாக கந்தபுராணம் அல்ல புளுகு ஊற்று, புளுகு பல்கலைக் கழகம்  என்று பொருள் அல்லவா?
மகா பாரதத்தில் பொய் சொல்லி அல்லவா எதிரியை வீழ்த்துகின்ற (அசுவத்தாமா எதா குஞ்சரா) அதை விட பெரிய இடத்துப் பெரும் புளுகுக்கு வேறு சான்று வேண் டுமா?
மரத்தின் பழம் மீண்டும் ஒட்டாத போது மனதில் மறைத்ததைச் சொல் லும்படி செய்ய அதுவரை மறைத் திருந்த அய்வர் (பஞ்சபாண்டவர் போதாது என்று ஆறாவது கர்ணன் மீதும், ஆசைப்பட்ட துரவுபதை கதை காரர்களா புளுகு பற்றிப் பேசுவது!) அட அப்புவே! குடிஅரசுக்கு துவக்கக் காலத்தில் இரண்டு ஆசிரியர்கள் (காங்கிரஸ்காரரான தங்கப் பெருமாள் பிள்ளை ஈரோடு வக்கீல் அவர் எழுதிய தலையங்கம் அது பெரியார் எழுதியதல்ல)
இதை ஆசிரியர் வீரமணி முன்பே பல முறை விளக்கியுள்ளார்!
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்ற கீதைசுலோகத்தில் கடவுளான கிருஷ்ணன் நாலு வர்ணத்தை நானே படைத்தேன் - என்று கூறி யதை மறைமலை நகரில் பேசினா ராம்; இந்த அப்புவுக்கு பொத்துக் கொண்டு கோபம் வந்து, அதன் பின்பகுதியில் குணகர்மபாக என்று உள்ளதை வைத்து திசை திருப்பிடும் வேலை.
அது குணங்களையும் செய லையும் அடிப்படையில் வைத்து நான்கு வர்ணங்களை நான் உண்டாக்கினேன் என்றுதான் கீதையில் கூறப்பட்டுள்ளது. இது பிறவி அடிப்படையில் செய்யப்படும் ஏற்ற தாழ்வுகளுக்கு இடமே இல்லை என்று ஒரு புளுகு - புரட்டு வியாக்யானம் எழுதி புலம்புகிறார்!
இந்த பூணூல் வரியிலுள்ள காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திசேக ரேந்திர சுவாமிகளின் தெய்வத்தின் குரல் நூலில் இப்படி விளக்கம் சிலர் கீதைக்குச் சொல்வது தவறு என்று அவரால் ஓங்கி அடித்துச் சொல் லப்பட்டுள்ளதே! படிக்கவில்லையா?
பகவான் கிருஷ்ணன் - பிறவி அடிப்படையில் தான் அதைக் கூறினார். குணம், தோஷம் அது, இது என்பதெல்லாம் கிடையாது என்று தெளிவாக, திட்டவட்டமாக அவர் சொல்லி விட்டாரே!
இவரது இந்த மறுப்பு பழைய (ஜெயில் பெயில் தலைக்காவிரி புகழ் இன்றைய சங்கராச்சாரிகள் அல்ல) பெரியவாளுக்கா? அல்லது சு.ப.வீக்கா!
அட அபிஷ்டுகளே (அவாள் பாஷையிலேயே) அதே கீதையில் 18வது அத்தியாயத்தை நன்னா படியுங்கோ.
பகவான் சொல்லிண்டு இருக் காரே!
வர்ணக் கலப்பு கூடவே கூடாது அது வருங்கால சந்ததிகளே அழித் திடும்ன்னு சொல்லியிருக்காளே!
அந்த ச்லோகத்தில் உள்ளபடி, பிறவி சுபாவப் படி வர்ணம் பிறவி அடிப்படைதான் என்பதை குணம் என்பது இன்னின்ன ஜாதி வர்ணப் பிரிவுக்கு இன்ன குணம் என்பதை வைத்தே சொல்லப்படுகிறது - மறுக்கவே முடியாதே!
இதோ அந்தச் சுலோகம்.
ப்ராமண - க்ஷத்திரிய - விசாம் - சூத்ராணாந்
கர்மாணி ப்ரவி பக்தானி ஸ்பாவ
- ப்ரபவைர் - குண
(அத்தியாயம் 18 - சுலோகம் 41)
இதன் பொருள்: பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவர்களுக்கு சுபாவமாக உண் டான குணங்களைக் கொண்டே தர்மங்கள் வகுக்கப்பட்டன.
இதன் பொருள் இப்போது விளங்குகிறதா? இந்த குணம் என்பதே அந்த வர்ண ஜாதிக்கே உரியது, கலந்து விடக் கூடாது என்றும் ஒருபடி மேலே போய் - நான் ஜாதியை உண்டாக்கியது மட்டுமல்ல; அவை ஒன்றோடு ஒன்று கலக்காமலும் பார்ப்பதே (வருண) தருமம் என்பதில் வேறு வியாக் யானத்திற்கு இடமே இல்லாமல்  கீதை சொல்லுகிறதே!
கெட்டிக்காரன் புளுகுக்கே உச்சவரம்பு எட்டு நாள்கள்தான்
துக்ளக் சுப்புகளின் புளுகு ஒருநாள், ஒரு மணி கூட நிற்காதே!

பகுத்தறிவுச் செம்மல் கலைவாணர் என்.எஸ்.கே. என்றும் வாழுகிறார்!


இன்று (நவம்பர் 29) நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ்.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்.
மூடநம்பிக்கை முட்புதர்களே நிறைந்த நாடகம் மற்றும் சினிமா துறைகளில் 70 ஆண்டுகளுக்கு முன்பே அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி செய்த மாமேதை அவர்.
அவருடன் இணையாக டி.ஏ. மதுரம் அம்மையார் நடித்து, அந்த ஜோடிப் புறாக்கள் புதுவானத்தில் தன்னிகரற்றுப் பறந்தன; பார்த் தோரைப் பரவசமாக்கியது மட்டுமா? பார்த்தவர்களை ஒரு நொடிப் பொழு தாவது (சிரிக்க வைப்பதோடு) சிந்திக்கவும் வைத்தார்கள்.
அப்படிப்பட்ட இணையர் தேடி னாலும் எளிதில் கிடைக்க மாட் டார்கள்.
நாகர்கோயில் குமரி தந்த குணாளர் என்.எஸ்.கே. ஒரு படிக்காத மேதை - ஆனால் மற்ற படித்த மேதை களுக்குப் புரியாதவை, தெரியாதவை எல்லாம் இவர்களால் நாட்டுக்கே வகுப்பெடுத்து பாடங்கள்போல் சொல் லிக் கொடுத்தார் என்பது ஒரு தனி வரலாறு.
இவ்வளவு பகுத்தறிவுப் பாடங் களை, தமது எளிய நகைச்சுவைக் காட்சிகளை எங்கிருந்துதான் கற் றாரோ இவர் என்று வியத்த பலருக்கும் அவரே அந்தப் புதையல் அவருக்குக் கிடைத்த இடம் அக்காலத்தில் தந்தை பெரியார் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு ஏடு; நாடகக் கம்பெனியில் அவர் நடிகனாக இருந்த அக்காலத் தில் 80 ஆண்டுகளுக்குமுன்பே குடி அரசின் வாசகனாக - இல்லை இல்லை மாறாக காதலனாக அவர் மாறியதின் விளைவு அவர் அதன்மூலம் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டார்!
அந்த பச்சை அட்டைக் குடிஅரசுப் பயிற்சிப் பட்டறையில்  உருவான அந்த வாள்வீச்சு எத்தனையோ பழமையை, சனாதனத்தை, ஜாதி ஆணவங்களை வீழ்த்திட பல லட்சம் மக்கள் மனதைப் பக்குப்படுத்தியது.
அவ் வாள் தலையை வெட்டவில்லை; தலைக்குள் இருந்த அறியாமையை வெட்டிச் சாய்த்து, மூளைச் சலவை செய்து, பலரும் சிந்திக்கும்படிச் செய்தது!
அக்காலத்து உத்தமபுத்திரன் திரைப்படம் அதில் இவரது நகைச்சுவைப் பாத்திரம் ஒரு வைதீக வைஷ்ணவ அய்யங்கார் பாத்திரம்; மதுரம் அவரது மனைவி.
தன் பசு மாட்டிற்கு புல்லுக்கட்டு கொண்டு வந்து விற்கும் கீழ் ஜாதி (பறைச்சி வேடம்)ப் பெண் வேறு ஒருவர்.
ஜாதி குலம் எல்லாம் தான் காமத்தின் முன் சுட்டெரிக்கப்படும் என்பதை வைத்து, இந்த அய்யங்கார் அந்தப் பெண்ணை (பின் வழியாகத்தான் எப்போதும் வருவார் அவர்) ஒரு நாள் தனியே புல்லுக்கட் டுடன் மாலை வரச் சொல்லுகிறார்.
தனது மனைவி (மதுரத்தை) வேண்டு மென்றே சண்டை போட்டு, (சுடும் தோசையை கீழே  போட்டு புரட்டி மண்ணுடன் தான் உனக்கு தோசை விக்கத் தெரியுமோ, நீ ஒரு மனுஷியா? என்று வம்பு செய்து, ஆத்திரமூட்டுவார்; சண்டை முற்றும்... என் தாய் வீட்டுக்குப் போவதாக இவர் சொல்லி விட்டு வெளியேறுகிறார்.
வைணவ அய்யங்காருக்கோ மகிழ்ச்சி - தன் திட்டப்படி அவரது மனைவி வெளியேறிவிட்டார்!
மாலை காத்திருக்கிறார். காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோயால் தவிக்கிறார்!
இவரது மகன் (8 வயது பையன்) காக்கா இராதா கிருஷ்ணன் அப்போது இளைஞர், அந்த வேடம் ஏற்றவர்) ஓடி வந்து, அப்பா அப்பா என்று குறுக்கிட்டு இடைஞ்சல்போல பேசித் தொணதொணக்கிறார். அவருக்கு 4 அணா - பெரிய காசு அப்போது - எடுத்துக் கொடுத்து டேய் வெளியே போய் பக்ஷணம் வாங்கி சாப்பிட்டு வாடா என்று விரட்டுவார். மகனும் மகிழ்ச்சியோடு ஓடுவார் - வெளியே போகும் சமயம் இந்த தோப்பனார் அய்யங்கார் பையனை சத்தம் போட்டு கூப்பிட்டு டேய் பக்ஷணம் வாங்கிச் சாப்பிடும்போது, நம்மவா கடையாய்ப் போய் பாத்து சாப்பிடு; சூத்ராள் கடையில் இடையில் வாங்கி சாப்பிட்டிராதே; வாங்கி சாப்பிட்டு அப்புறமாக என்று அந்த அப்புறத்தை அழுத்திச் சொல்லுகிறார்  (அரங்கமே கைத்தட்டலால் அதிரும்).
பிறகு புல்லுக்கட்டுடன் கீழ் ஜாதிப் பெண் வருவா அவளை எதிர்கொண்டு சாகசமெல்லாம் செய்வார்; ஏஞ் சாமி, நீங்க உசந்தவங்க, நாங்க கீழ்ஜாதி - என்ன நீங்க...
அட நீ ஒண்ணு அதெல்லாம்... என்றெல்லாம் வசனம் பேசிடுவார்! தன் மனைவி பற்றி அவர் புல்லுக் கட்டுக்காரியிடம் அலட்சியமாகப் பேசுவார்; பிறகு தலை முக்காட்டை சிறிது நேரம் (வசனம்) பேசியபின், நீக்கிப் பார்த்தால் தன் மனைவிதான் (டி.ஏ. மதுரமே) அந்தப் புல் சுமந்த பெண்ணாக இருப்பார்! (ஏற்கெனவே அந்த கீழ்ஜாதிப் பெண் இவரது தகாத  உறவு அழைப்புபற்றி வீட்டு எஜமானி மதுரத்திடம் சொல்லியதால் இது மதுரம் செய்த ஏற்பாடு) அய்யங்காரை விளாசு விளாசு என்று விளாசித் தள்ளுவார் (மதுரம்) மனைவியார்!
இந்தக் காட்சி எப்படிப்பட்ட அருமையான உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவப் புரட்டு பற்றியது பார்த்தீர்களா?
எத்தனையோ ஆண்டுகள் முன் பார்த்த காட்சி - கண்ணை - கருத்தை விட்டு அகலாக் காட்சி. கலைத்துறையில் அக்கால பெரியார் கொள்கை பரப்பாளர் அவர். இன்றும் வாழுகிறார்கள் அவ் இணையர்கள். மறையவில்லை என்றும் வாழ்வார்கள்.
கலைவாணர் - மதுரம் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
- கி.வீரமணி

காவிரி நதிநீர்ப் பிரச்சினை: அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை

காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலம் முதல்வர்களின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதலமைச்சர் உடனே அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, தமிழ்நாடு முதல் அமைச்சர், காவிரி டெல்டா பகுதியில் கருகிவிடும் நிலையில் உள்ள 14 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்களுக்கு காவிரி நடுவர் நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவிரி நதி நீர் ஆணையத்தின் கட்டளைப்படியும், குறைந்தபட்சம் 30 டி.எம்.சி. தண்ணீராவது தரவேண்டும் என்பதை வலியுறுத்தி நேரில் நேற்று (29.11.2012) கர்நாடகத் தலைநகர் பெங்களூருக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

நேற்றே கருநாடக முதல் அமைச்சர் ஷெட்டர் ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தரும் நிலையில் நாங்கள் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்து, செய்தியாளர்களிடையே சொன்னதுபோலவே, இன்று பேச்சு வார்த்தையில், தமிழக விவசாயிகளும், கருநாடக விவசாயிகளைப் போலவே மனிதர்கள்தான் என்பதை எண்ண மறந்து, சற்றும் மனிதாபிமானம் காட்டாது - மரியாதைக்காகக்கூட அடையாளமாக ஒரு அளவு தண்ணீரை நாம் இருவருமே பகிர்ந்துகொள்வோம் என்று கூறவில்லை.

வெட்டொன்று துண்டு ரெண்டு என்பதைப்போல பேசிவிட்டார். இது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு 127 தடவை பேச்சுவார்த்தைகள் 30 ஆண்டுகளுக்குமேல் நடந்து உருப்படியான முடிவு எதனையும் எட்ட இயலாத நிலை என்பதால்தான் நாம் நடுவர் மன்றம் கோரினோம்.

சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைத்து இந்த அளவுக்கு வழி செய்தார்! கருநாடக நதிநீர் ஆணையம் பிரதமர் தலைமையில் கொடுத்த ஆணையையும் மதிக்காமல், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கே வந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தில் நீதி கேட்டது சரியான நிலைப்பாடே ஆகும்.

ஆனால், அவர்கள் தீர்ப்பு வழங்கி சம்பா பயிர்களைக் காப்பாற்ற இருக்கும் நீரை எப்படியும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று சொன்னதன் விளைவாக, உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்திட பெங்களூரு சென்றார். அது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், தமிழக காவிரிப் பாசன விவசாயிகள் நெஞ்சம் பதைபதைத்து நிற்கின்றனர். இந்நிலையில், அவசரமான தீர்வுகளை காலதாமதம் இன்றி கண்டாக வேண்டும்.

1.    நாளை (30.11.2012) உச்சநீதிமன்றத்தில் இதை விளக்கி தமிழக அரசு உரிய நிவாரணம் கேட்டுப் பெறுவது ஒரு வழி.

2.    காவிரிப் பாசன விவசாயிகள் தங்கள் சம்பா பயிர்களைக் காப்பாற்ற தடையில்லாமல் - மின்வெட்டு இன்றி குறைந்தது ஒரு வாரத்திற்காவது தர தமிழக அரசு முடிவு செய்யவேண்டும்.

3.    விவசாயிகளுக்குப் போதிய நிவாரண உதவிக்குரிய, நட்ட ஈட்டுத்தொகையை மதிப்பீடு செய்ய வேண்டும்.

4.    தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும், விவசாயப் பிரதிநிதிகளையும் அழைத்து தமிழக அரசு ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காலதாமதம் செய்யாமல் கூட்டவேண்டும்.  தொலை நோக்குடன், (அ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசின் கெசட்டில் இது பதிவு செய்யப்படவில்லை.

பதிவு செய்யப்பட்டால்தான் முழு சட்ட உரிமையும், வலிமையும் ஏற்படும். (ஆ) தமிழ்நாட்டு நதிகளை முதலில் இணைக்கும் திட்டத்தை, நீர்ப்பாசன, நீரியல் துறை வல்லுநர்களை அழைத்து திட்டம் தீட்டி, அதற்கான நிதி ஆதாரங்களை (உலக வங்கி சேவைகளையும், சர்வ தேச நிதி ஆணையம் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி போன்றவைகளையும் பெற தணிக்கைக் குழு அமைத்து ஆலோசனைப் பெறுவது அவசியம்).

நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகி கருநாடகம் மற்றும் இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்தை, தமிழ்நாட்டிற்கே வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அனைவரும் ஒரே குரலில் - அரசியல் மாச்சரியம் பாராமல் வற்புறுத்திட வேண்டும். அதன்மூலமாக, இப்போது காவிரி விவசாயிகளுக்கு தடையில்லா மின்சாரத்தை குறைந்தபட்ச தேவை நாள்கள் வரை தாராளமாக வழங்க முடியும்.

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி பிரதமரைப் பார்த்து முறையிட்டு தமிழ்நாட்டு காவிரி பிரச்சினை விவசாயிகளின் துயர நிலையை - ஏற்படவிருக்கும் பேரிடரைத் தடுத்து நிறுத்த முடியும். கருநாடகத்தில் எல்லோரும் ஓர் அணி. இங்கேயும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓர் அணியில் நிற்பது - உரிமைகளை வலியுறுத்துவது அவசர - அவசியம். தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி பலரது கருத்தையும் கேட்டு, கருத்திணக்க முறையில் இப்பிரச்சினையை அணுகித் தீர்வுகாணவேண்டியது மிகவும் இன்றியமையாதது. கருநாடகம் இவ்வளவு பிடிவாதம் காட்டுவதற்கு மூலகாரணம் வாக்கு வங்கி அரசியல் - தேர்தல் களம்தான் என்பது உலகறிந்த ரகசியமாகும்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Thursday, November 29, 2012

நம் நாட்டு செவ்வாய் தோஷமும், அமெரிக்காவின் செவ்வாய் குடியேற்றமும்!


ஊசி மிளகாய்-
செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன்பதிவு செய்யலாம் 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை குடியமர்த்த திட்டம்
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.  இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவ தால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழி களையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத் தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவ பகுதிகளையும் கொண்டது.
செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதை கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மய்யம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ் வாய்க்கு அனுப்பியது.
அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீன தொழில் நுட்பத் துடன் கூடிய கருவிகளை உள் ளடக்கியது. அவை செவ்வாய் கிரகத்தின் சுற்று சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றை போட்டோ எடுத்து அனுப்பியது. சமீபத்தில் அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் பிடித்தது.
அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யம் அமைத்து வருகின்றனர். அதற்கு தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது. இதை யடுத்து தற்போது இந்த நிறு வனம் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிட் டுள்ளது. அதற்காக அங்கு காலனி அமைக்கப்படுகிறது.
இந்த தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஏரோ நாட்டிக் கல் சங்கத்தின் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்துக்கு முதல் கட்டமாக 10 பேரை மட்டும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக அதிக அளவில் ஆட்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.
இதற்கான கட்டணம் சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம் (5 லட்சம் அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிக அளவில் இப்பயணத்திற்கு முன் வர வேண்டும். அதற்காக கட் டணத்தை குறைக்க கூட தயா ராக உள்ளோம். தொடக்கத்தில் 10 பேரை மட்டுமே அழைத்து செல்ல திட்டமிட்டுள்ள நாங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அங்கு குடியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அதற்கு தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் முதலில் குடியேறுவோர் வாழ் வதற்கான சூழ்நிலை உருவாக் கப்படும் என்றார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன் பதிவு செய்யலாம்.- மேற்கண்ட செய்தி, நேற்று மாலை செய்தித்தாள்களில் வெளி வந்துள்ளது.
இது பகுத்தறிவின் பயன் - அறிவியல் சாதனை! நம்மூர் சாஸ்திரிகளோ, கனபாடிகளோ, உடனே பார்த்தீர்களா, பார்த்தீர்களா நம்ம பெரியவா சொன்ன கீழே ஏழு லோகம், மேலே ஏழு லோகம் என்று புராணங்களில் கூறியுள்ளது எவ்வளவு உண்மை என்று கயிறு திரித்து கப்சா விட இப்போதே தயாராகி இருப்பார்கள்!
அமெரிக்க மிலேச்சர்கள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது; ஜீவராசிகள் வாழும் நிலை இருக்கக் கூடும் - மீத்தேன் வாயு என்பது உயிர் வாழத் தேவையான ஒன்று என்று கண்டறிந்தே 47 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இப்போது கியூரியா சிட்டி ரோபோ தொடர்ந்து, ரோவருடன் சென்று செவ்வாயில் இறங்கியது.
அது நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது அது. அதனால் செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் மண், மலை, காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியது; அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் எடுத்து அனுப்பியது. நாசா விஞ்ஞானிகள் பிறகே மனிதர்களை அங்கே அனுப்பி (10 பேரை மட்டும்) வைக்க (இன்னும் 20 ஆண்டுகளில் இது 80 ஆயிரம் பேர்களாக உயருமாம்!) திட்டமிட்டுள்ள ஒரு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆளுக்கு 2 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்று அறிவித்துள்ளது - வியப்பான சாதனை அல்லவா?
நம் நாட்டில் இன்னமும் 35 வயது ஆன நம் பெண்களுக்கு, ஜோசியம் பார்த்து, செவ்வாய் தோஷ பரிகாரம் செய்ய அலைந்து, மாப்பிள்ளைகள் கிடைக்காத கவலையால், தற்கொலை செய்து கொள்ளும் பெண்களும், பெற்றோர்களும் நாளும் வளர்ந்து  வருகின்றனர்!
மின்வெட்டு காரணமாக, நாடே  அவதிக்குள்ளாகி இருக்கிறதே; அந்த மின்சாரம் என்ன 33 கோடி தேவர்கள், 48 ஆயிரம் ரிஷிகள், அல்லது நம்ம மும்மூர்த்திகள் தொடர்ந்த லேட்டஸ்ட் அய்யப்பன் வரை எவர் கண்டுபிடித்தது?
அறியாமை, மூடநம்பிக்கையை விட கொடிய நோய்கள் வேறு உண்டா? சிந்தியுங்கள்.

ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?


  • 2ஜியில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்று எங்கள் அறிக்கையில் (Draft Report) குறிப்பிடப்படவில்லை - ஆடிட்டர் ஜெனரல் ஆர்.பி.சிங்
  • ஸ்பெக்ட்ரம் குறித்து சி.பி.அய். எந்த முடிவுக்கும் வரவில்லை  - சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப்சிங்
ஆ.இராசாமீது ஊழல் குற்றஞ் சுமத்தியவர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?
வர்ணமும் - வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி
தமிழர் தலைவரின் அடுக்கடுக்கான வினாக்களும்  விடைகளும்
சென்னை, நவ.29- ஆ. இராசாமீது சுமத்தப் பட்ட ஊழல் பழி வருணமும் வர்க்கமும் சேர்ந்த கூட்டுச் சதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலா? ஜோடிக்கப்பட்ட சதியா? எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் சரியாக இரவு 7.10 மணிக்கு சென்னை பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்றது (28.11.2012). கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றினார். அவரது உரையில், ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வந்த போதே தெளிவாக எடுத்துச் சொன்ன தலைவர் தமிழர் தலைவர்தான். பல முறை அறிக்கை வெளியிட்டு அதற்காக விமர்சனங்களையும் எதிர் கொண்டோம். ஆனால் பூனைக்குட்டி வெளியில் வந்தது என்று விடுதலையில் வெளியிடுவதைப் போல தற்போது உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அந்த பத்திரிகைகள் நடமாடிக் கொண்டுதானே இருக்கின்றன. மக்கள் நல அரசு என்பது வடநாட்டு மார்வாடிபோல வட்டிக் கடை நடத்துவது போன்றதல்ல!
எல்லாவற்றிலும் லாபக் கணக்கினை அரசு பார்க்கக் கூடாது. இப்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றன. எனவே அமைச்சர் ராஜாவை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்திருந்தார்களே! அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பது? ஒரு நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்தார் என்பதற்காக கனிமொழி எம்.பி., அவர்களைச் சிறைப்படுத்தியது எப்படி சரி என்று வினா எழுப்பினார்.

தொடர்ந்து தமிழர் தலைவர் உரை யாற்றத் தொடங்கினார். கழகத்தின் முக்கிய பிரமுகர்கள், பல்துறை சான் றோர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் என அரங்கம் நிரம்பியிருந்தது. தமிழர் தலைவர் அவர்கள் தன்னுடைய உரையில் குறிப்பிட்டதாவது:
கோயபல்ஸ் பிரச்சாரம்
நம்முடைய இயக்கத்தைப் பொறுத்த வரை உண்மைகள் மக்களுக்கு மறைக்கப்படும்போது வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பணியாற்றுபவர்கள்; நாம் பூதாகரமாக ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் நிலைத்து விடும் என்று புராணக் காலத்தில் இருந்து வருவதுதான்; உலகம் பிரச்சாரத்திற்கு அடிமை என்பார்கள். கந்த புராணத்தின் புளுகு எந்தப் புராணத்திலும் இல்லை என்ற சொலவடை உண்டு. அப்படியெனில் கந்தபுராணம் புளுகுதானே!
அதற்கடுத்து அரசியல் உலகம். இதில் இரண்டாம் உலகப் போரில் கோயபல்ஸ் என்ற பிரச்சார அமைச்சர். இதைவிட பெரிய பொய்களை யாரும் சொல்ல முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டவர். கோயபல்ஸ் பாணி என்று அரசியலில் நிலைத்துவிட்டது. ஊடகங்கள் - பார்ப்பன ஊடகங்கள் வெட்கப்பட வேண்டாமா? 2ஜி அலைக்கற்றைபற்றி தற்போதுதான் ஓய்வு பெற்ற அதிகாரிகள் போதி மரத்து புத்தர்களாகி வருகிறார்கள். அவர்கள்மேல் நமக்கு வருத்தம் இல்லை. அந்தளவுக்கு அவர்களுக்கு நெருக்கடி இருந்திருக்கிறது.
எல்லோருக்கும் தெரியும். நண்பர்கள்கூட கேட் டார்கள். ஆசிரியர் வக்காலத்து வாங்கலாமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலென்று வரிசையாக பூஜ்யத்தைப் போட்டார்களே, இன்றைக்கு இதன் நிலை என்ன?
இமாலய ஊழல், ராஜா ஊழல் செய்தார், திமுக செய்தது என்று பிரச்சாரம் செய்தார்கள், தொடர்ந்து அச்சுறுத்தினார்கள். சுப்பரமணிய சுவாமி போன்ற அரசியல் தரகர்களின் அடாவடிக்குப் பயந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடந்து கொண்டது  பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகா?
மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கியவர் ஆ. இராசா
எப்போதுமே ஓடுகிறவர்களைக் கண்டால் துரத்துகிறவனுக்குக் கொண்டாட்டம்தான். எதிர்த்து நிற்கக்கூடிய துணிச்சலை மத்திய அரசு பெறவில்லை. யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பில் ஒரு தவறு என்றால் தலைமைப் பொறுப்பில் வகிப்பவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அதுதான் நியாயம். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மய்யமாக பலருக்கு இருந்தது. தகுதி திறமையை நிரூபித்து தொலைத் தொடர்புத் துறை வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை உருவாக்கியவர் ஆ. இராசா அவர்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கு போக்குவரத்துத் துறையும் தொலைத் தொடர்புத் துறையும் மிக முக்கியமானவை. போக்குவரத்து வளர்ச்சிக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. சார்பில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு அவர்கள் பெரும் சாதனை செய்தார். தங்க நாற்கர சாலைகளை, சிறப்பாக அமைத்தார். சென்னையில் இருந்து திருச்சிக்கு 5 மணி நேரத்தில் போகக் கூடிய அளவுக்கு நல்ல சாலைகளை, பாலங்களை அமைத்தார். போக்குவரத்து எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தொலைத் தொடர்பும் ஆகும்.
தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஒருவர், சட்டக் கல்லூரியில்  படித்து, பகுத்தறிவோடு திகழ்ந்து நம் தோழர்கள் பி.எல். படித்தாலே அரிது. அதிலும் மாஸ்டர் ஆப் லா எனும் எம்.எல். படித்து, சிறப்பாக ஒவ்வொரு பொறுப்பையும் எந்தப் புகாருக்கும் ஆளாகாமல், முன்னால் இருந்தவர்கள் கொள்கையை பின்பற்றியதோடு, அதனை எப்படி இன்னும் பயனுள்ளதாக செய்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி சிறப்பாக செயல் பட்டவர் ஆ. இராசா.
ஒரு மாற்றம் செய்தால் அம்மாற்றத் தால் பாதிக்கப்படுபவர்கள் மாற்றம் செய்தவர்களை சகித்துக் கொள்ள முடியாது. எதிர்ப்பு காட்டுவார்கள் - மிரட்டுவார்கள், அச்சுறுத்துவார்கள் எல்லா இடங்களுக்கும் தொலைத் தொடர்பு போய் சேர வேண்டும் என்று நினைத்தார் ராசா.
சாமான்ய மக்களுக்கும் கிடைக்கச் செய்தார்
தொலைத் தொடர்பு துறை அமைச்சராக பொறுப்பு ஏற்ற உடனே மனதுக்குள் முடிவெடுத்து சாமான்ய மக்களுக்கும் தொலைத் தொடர்பு வசதியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு ரூபாய்க்கு பேசலாம் என்பதே புரட்சி என்று பேசப்பட்டது. ஆனால் ஆ. இராசா 30 பைசாவுக்குக் கொண்டு வந்தவர். ஒவ்வொரு முறையும் பிரதமரிடம் கலந்து கொண்டு ஏற்கெனவே செய்த கொள்கை முடிவின்படி எப்படி அணுக வேண்டுமோ, அப்படி அணுகி ஆலோசித்து பயன் பாட்டைப் பரவலாக்கினார். ஏகபோக ஆதிக்கத்தில் சில முக்கியக் கம்பெனி களின் கைகளில் வைத்துக் கொண்டு இருந்த அலைக்கற்றை உரிமங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்தார். இதுதான் சமதர்மத்தின் அணுகுமுறை. சாதாரண ஆட்கள் வந்தால் போட்டி அதிகமாகும். எனவே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சிறப்பாக வழங்கப்பட்டது.
பெரிய நகரங்களில்  மட்டும் தொழில் நடத்தி சிக்கலில்லாமல் லாபத்தைக் கண்டிருந்த நிறுவனங்களுக்கு மாற்றாக நிறைய நிறுவனங்கள் உரிமம் பெற்றதால் சிறிய ஊர்களுக்கும் செல்பேசி கிடைத்தது. 30 சதவிகித அளவு பயன் பாடு என்றிருந்ததை 80 சதவிகிதமாக  மாற்றினார் ஆ. இராசா. நாடு தழுவிய அளவில் சென்றடைந்தது முதலாளிகள் பாதிக்கப்பட்டார்கள். சும்மா இருப் பார்களா? 1952-களில் இருந்தே மத்தி யில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் டாடாக்களும், பிர்லாக்களும் 50-60 எம்பிக்களை வைத்திருப்பார்கள். சட்ட நிபுணர் ஒருவர்கூட, டாடா நிர்வாகத் தின் எம்பி என்ற பெருமையை பெற வில்லையா? முதலாளிகளுக்கு நாடாளு மன்றத்தில் கேள்வி கேட்டவர்கள் பற்றி பட்டியல் வெளிவரவில்லையா?
அதுபோல அரசாங்கத்தை வளைப்ப தற்கு பார்ப்பனப் பத்திரிகைகளை பயன்படுத்தினார்கள். முதலாளித்துவ யானைகள் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு என்ன வழி இவரை வீழ்த்த என்று சதித் திட்டம் தீட்டினார்கள்.
வர்க்கமும் வருணமும்
பார்ப்பன - பனியா கூட்டு என்பதுபோல் வர்க்கமும் வர்ணமும் கூட்டு சேர்ந்து திட்டம் தீட்டினர்; சுப்பிரமணியசுவாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு பஞ்சமா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற கதையை ஜோடித்தார்கள்.  ஆ. இராசா எடுத்த முடிவா?
இப்பிரச்சினை வந்தபோதே நாங்கள் சொன்னோம். சுப.வீ, ரமேஷ் பிரபா,  மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் முதலியோர் பேசினோம். அது வும் அனுமான இழப்பு - யூக இழப்புதான் என்று. ஏலம் ஏன் விடவில்லை? ஆ. இராசா எடுத்த முடிவா இது?  பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை.
அருண்சோரிகூட பத்திரிகையாளர் களிடம் பேசுகையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது கற்பனைத் தொகை அநேகமாக 30,000 கோடி ரூபாய் தான் இருக்கும் என்றாரே. அவர்கூட அநேகமாக என்றுதான் சொன்னார். இந்தக் கதை எப்படி உருவானது? ஒய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் ஆர்.பி. சிங் என்ன சொல்லியிருக்கிறார்? ராஜா செய்ததில் 2460 கோடி ரூபாயாக இருந்த வருமானம் அடுத்த ஆண்டு 18,000 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது. அதற்கடுத்த ஆண்டு மேலும் இது அதிகரித்தது. ஒவ்வொரு ஆண்டும் இதுதொடரும். ஆனால் ஏலம் ஒருமுறை மட்டுமே விட இயலும்.
டிராப்ட்டு ரிப்போர்ட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய்  இழப்பு என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று கூறியிருக்கிறாரோ!
கபில்சிபல்கூட சொன்னாரே பொன் முட்டையிடும் வாத்து என்று; பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அழிக்கலாமா?
ஆர்.பி. சிங்குக்கு நிர்ப்பந்தம்
பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி (PAC) தலைவராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி அய்யர்தான்; ஓய்வு பெற்ற  டைரக்டர் ஜெனரல்  ஆர்பி சிங் சொன்னது ஞாயிறன்று தி இந்து பத்திரிகையிலேயே வந்திருக்கிறது. என்னைக் கூப்பிட்டு கையெழுத்து போடச் சொன்னார்கள். கட்டளைக்குக் கீழ் படிந்தேன் அவ்வளவுதான். அரசுத் துறையிலே பணியாற்றியவர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் நன்கு அறிவீர்கள்.  சி.பி.அய். இயக்குநர் என்ன சொல்கிறார்?
அதேபோல சி.பி.அய். இயக்குநர் அமர்பிரதாப் சிங் என்ன சொல்லி யிருக்கிறார்? கடந்த 2 ஆண்டுகளாக காமன்வெல்த், 2ஜி ஸ்பெக்ட்ரம், ஆதர்ஸ் உள்ளிட்ட வழக்குகள் என் காலத்தில் தான் வெளி வந்தது. இதில் ஸ்பெக்ட்ரம் இழப்புத் தொகை குறித்து சிபிஅய் இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை - இது தினமலரில் வந்திருக்கிற செய்தி!
அப்புறம் எதுக்கு ராஜாமீது வழக்கு? ஒன்றரை ஆண்டுகள் பெயில் தராத  ஜெயில்  வாழ்வு எதுக்கு?   என்ன கொலையா செய்து விட்டார்? கொலை செய்ததாக சொல்லப்பட்ட சங்கராச்சாரி யார்கூட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இல்லையே? 2001-இல் குறியீட்டு எண் அடிப்படையிலான மதிப்பீட்டுப்படி குறிப்பிட்ட தொகை 30,000 கோடி அதைக்கூட வருவாய் இழப்பு என்று நாங்கள் சொல்லவில்லை என்று சிபிஅய் தெரிவித்த குற்றப் பத்திரிகையிலேயே தெரிவித்திருக்கிறதே. அப்புறம் எதுக்கு ராஜாவுக்கு சிறை? 2001இல் ராஜாவா அமைச்சராக இருந்தார்? ராஜா எப்போது அமைச்சரானார்?
ஜீரோ லாஸ்
ஜீரோ லாஸ் என்று சொல்லும் அளவுக்கு நடந்திருக்கிறதே. ராஜா கட்ஆப் தேதியை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்கிறார்கள். ஆ. இராசா தனி மனிதனாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதற்கான எல்லா ஆதாரமும் இருக்கிறது. வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வந்ததற்குப் பிறகு இந்த ஆதாரங்கள் அனைத்தும் பப்ளிக் டாக்குமெண்ட், யார் இதைக் கண்டுபிடித்தது? ராஜா தவறு செய்தார் என்று பயனீர் என்ற  பாஜகவின் பத்திரிகை. சுப்பிரமணியசாமி உடன் கூட்டு சேர்ந்து மத்திய அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்க தீட்டிய திட்டம்தான் இது! பார்ப்பன ஊடகங்கள் கூட்டணி.
ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை ஊடகங்களுக்கு கொடுத்தவர் யார்?
அதேபோல ஆடிட்டர் ஜெனரல் அறிக் கையை முன்கூட்டியே ஊடகங்களுக்குக் கொடுத்தது யார்? இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில்தானே வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஊடகங் களுக்கு எப்படிப் போனது? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுகுறித்த இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை நிர்ணயித்தது ராஜா அல்ல. ட்ராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். நுழைவுக் கட்டணம், ஏலம் விட வேண்டும் என்றோ ட்ராய் உள்ளிட்ட யாரும் சொல்ல வில்லையே. அப்புறம் அதில் தவறு எங்கே  நடந்தது? வழக்கு போட்ட சிபிஅய் இன்னும் இழப்பு குறித்து முடிவுக்கு வரவில்லை என்று சொல்லி விட்டது. 80 சாட்சிகள் இதுவரை விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை ஒருவர்கூட இழப்பு - தவறு நடந்திருக்கிறது என்று சொல்ல வில்லையே.
ராஜா தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் செய்யவில்லை. அன்றைய நிதித் துறை அமைச்சகத்தின் செயலாளரும், தற்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுந ருமான சுப்பாராவ் 78ஆவது சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது அமைச்சர வையைக் கலந்துதான் முடிவெடுத்தார் ராஜா, தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டாரே.
மக்கள் நல அரசு என்றால்....
மக்கள் நல அரசு என்பது லாப - நட்டக் கணக்கு பார்க்கக் கூடாது. நான் பொருளாதாரம் படித்த மாணவன். 60 வருடத்திற்கு முன்பு படித்தது இப்போது ராஜாவுக்கு பயன்படுகிறது. விழுமிய பயன் கருதி விலை நிர்ணயம் (Cost of Service), உடனே பணிக்கு ஏற்ற  விலை நிர்ணயம் (Value of Service), என்று  இரண்டு முறைகள் உண்டு. போக்குவரத்துத் துறையில் ஏன் நட்டம் வருகிறது. வெளியூர் செல்லும் விரைவுப் பேருந்துகள் லாபத்தில் இயங்கும். டவுன் பஸ் எனும் உள்ளூர் பேருந்துகள் நட்டத்தில் இயங்கும். ஏனெனில் 2 பேர் ஏறினாலும் பேருந்து ஓட வேண்டும். இதை தனியாருக்கு கொடுத்தால் வழித்தட அனுமதி பெற்றிருந்தால்கூட நட்டத்தில்  இயக்க மாட்டார்கள். எனவே மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதுபோலத்தான் தொலைத் தொடர்புத் துறையும்.  அரசாங்கம் என்ன வட்டிக் கடையா நடத்துகிறது?  ராஜாவின் புத்திசாலித்தனத்தால் அணுகுமுறையில் கடைசியாக ரூபாய் 90,000 கோடி வந்துள்ளது. (AGR என்ற வருமானம்) லாபம் வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சியைவிட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதிக லாபம் பெற்றிருக்கிறார்கள் காரணம் இராசா.
கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்?
அதேபோல கனிமொழி எம்.பி., என்ன குற்றம் செய்தார்? கலைஞர் டி.வி.க்கு லஞ்சப் பணம் வந்தது என்று சொல்கிறார்கள். லஞ்சப் பணத்தை யாராவது செக் மூலம் வாங்குவார்களா? செக்குமாட்டு மனப்பான்மை யாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது செக்கு அல்ல. செக் (Cheque) இன்னொன்று சாதிக் பாட்சா என்ற நண்பர் தற்கொலை செய்து கொண்டார். அது கொலையா? தற்கொலையா? கழுத்து இறுகியதா? எந்தக் கயிறு? எத்தனை இன்ச்? என்று நம்ம பத்திரிகையாளர்கள் எப்படியெல்லாம் எழுதினார்கள்! இப்போது இவர்கள் உயிரோடு இருக்கலாமா? என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இப்போது சிபிஅய் விசாரணை முடிவில் உண்மை வெளிவந்துவிட்டதே. தற்கொலைதான் என்று சொல்லி விட்டார்களே. நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா?
தருமபுரியில் நடப்பது என்ன? உண்மையைச் சொல்லத் தயங்கக் கூடாது. பெரியாரின் பால பாடம் இது. இன்னமும் தொண்டினை, அறிவைப் பார்க்காமல் ஜாதி பார்க்கிறார்களே! அதனால்தானே தருமபுரிகள் நடக்கின்றன. எல்லோரும் வேடிக்கை பார்த்தால் நாங்களும் பார்க்க வேண்டுமா? நியாயத்தை பேசாமல் போனால் சமுதாயத்தில் பொது ஒழுக்கம் என்னாவது? கடந்த 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட  அந்த குடும்பங்கள் சந்தித்த அவமானம், மன உளைச்சலுக்கு பதில் என்ன? இழப்பீடு அதற்கு தர முடியுமா?
பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்பட்டதா?
அதேபோல பிரதமர் கருத்தை இராசா அலட்சியப்படுத்தினாரா இல்லை.  7.11.2008இல் பிரதமருக்கு ராசா கடிதம் எழுதினார். 17.11.2008இல் பிரதமர் பதில் எழுதி இருக்கிறார். இதுபோல பல கடிதங்கள் எழுதியுள்ளார். ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஒப்புதலை பெற்றே நடந்திருக்கிறது. இதில் தவறு எங்கே நடந்தது?
கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட ஒரு புத்தகத்தில் கூட இதுவரை எத்தனையோ அமைச்சர்கள் இருந்தார்கள்; ஆனால் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு விசயத்தை ராஜாதான் கண்டுபிடித்தார். ராணுவத்தில் பயன்படுத்தாமல் கிடந்த அலைக்கற்றையை கண்டுபிடித்து மக்களுக்குக் கொடுத்தவர் ராஜா என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இதை எழுதியவர் ஒரு பார்ப்பனர். எனவே தோழர்களே உண்மையை பரப்புவதற்குத்தான் இந்த இயக்கம். காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ? என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளுக்கு ஏற்ப இதன் உண்மைகள் இன்னும் வெளிவர இருக்கின்றன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் நாளை விளங்கும். புதிய நோக்கு, புதிய பார்வை மட்டுமல்ல புதிய தீர்வும் தேவை. - இவ்வாறு தமிழர் தலைவர் பேசினார்.
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
இனிமேல் யாராவது 1,76,000 கோடி ஊழல் என்று சொன்னால், சொன்னவர் சட்டையைப் பிடிக்க வேண்டும். என்னய்யா, இந்தத் தொகையை யார் சொன்னது? எதனடிப்படையில் சொன்னது? என்று கேட்க வேண்டும். கடவுள் கதை மாதிரி ஆகிவிட்டதே! கண்டவர் விண்டிலர் - விண்டவர் கண்டிலர் என்பது போல. பார்த்தவர்கள் சொன்னதில்லை. சொன்னவர்கள் பார்த்ததில்லை. பெரியார் சிலை திறப்பு விழாவில் ஈரோட்டில் பேசினார் - ராவணனுக்கு 10 தலை வைத்தான். அதற்கப்புறம் ஏன் வரவில்லை. நாங்கள் வந்து விட்டோம்? கேள்வி கேட்க ஆரம்பித்தோம். கதையை நிறுத்தி விட்டான், என்று அய்யா சொன்னார். அதுபோல இனிமேல் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையிலும் உண்மையை வெளிப்படுத்த நாங்கள் வந்து விட்டோம், இனி விடமாட்டோம்! உண்மைகள் உறங்க விட மாட்டோம்.
- சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்


பலூன் உடையும்!
ஏலம் விடவில்லை, ஏலம் விடவில்லை என்று சொன்னார்களே. இப்போது விட்ட ஏலம் என்ன ஆனது? ஏன் விலை போகவில்லை? உடனே இதற்கு என்ன எழுதுகிறார்கள்? கூடிப்பேசி முடிவு செய்து விட்டார்கள் என்கிறார்கள். இப்படி கூடிப் பேசுகிறவர்கள் ராஜா முன்பே ஏலம் விட்டிருந்தால் அப்போது கூடி பேசமாட்டார்களா? எவ்வளவுதான் தொகையை பெரிதாக்கி ஊதி ஊதி பலூனை பொய்யைக் கொண்டு நிரப்பினாலும் உண்மை, என்ற ஒரு சிறு ஊசியைக் கொண்டு குத்தினால், பலூன் உடைந்து போகும். இப்போது ஓய்வு பெற்றவர்களே ஒவ்வொருவராக குத்திக் கொண்டிருக்கிறார்கள். பலூன் காற்று இறங்கி விட்டதே!                                                  - சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்: