Total Pageviews

Wednesday, November 30, 2011

வெள்ளையன் வெளியேறி கொள்ளையன் புகுவதா?


சில்லறை வர்த்தகப் பிரச்சினை பெரும் பூகம்பமாகக் கிளம்பிவிட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே எழுந்து நிற்கின்றன.
இது தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வில்லை.
பி.ஜே.பி., பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு), சிவசேனா, அ.இ.அ.தி.மு.க. முதலிய எதிர்க்கட்சி கள் மாத்திரமல்லாமல், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரசும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக் குக் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளன.
காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் அகாலிதளம் ஆகிய மக்களவை உறுப்பினர்கள் 227 பேர் ஆதரிக்கும் நிலையில், அதனை எதிர்ப்போர் எண்ணிக்கை 272 ஆகும்.
மக்களவையில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 51 சதவிகிதம் அனுமதிக்கப்படுவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அது கண்டிப்பாகத் தோல்வியைச் சந்திக்கும் நிலைதான்!
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சி ராஜினாமா செய்யவேண்டும் என்று குரல் செங்குத்தாக எழுந்து நிற்கும். மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பலகீனத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து தப்பிப் பிழைப்பது என்பது எளிதான ஒன்றல்ல.
இதன் இலாபச் சுளையை முழுமையாக விழுங்கிட பாரதீய ஜனதா என்னும் மதவாத முதலை, தன் வாயை ஆர்வமாக அகலமாகத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
எனவே, அரசியல் கண்ணோட்டத்திலும் இந்தப் பிரச்சினையை விழிப்பாக அணுகவேண்டிய அவசியம் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு இருக்கிறது.
இந்த நிலையில், எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது என்று பிரதமர் கருத்துத் தெரிவிப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
அந்நிய முதலீடுகளால் ஏற்படும் எதிர்விளைவுகளை நாம் அறியாதவர்கள் அல்லர்.
பிஸ்லேரி என்பது தம்ஸ்-அப் குளிர்பானத்தை விற்றுக் கொண்டிருந்த நிறுவனம் ஆகும். கொக் கோகோலா என்ற ஒட்டகம் உள்ளே புகுந்ததும், அந்த நிறுவனம் கொக்கோகோலாவிடம் விற்றுவிட்டு கடையைக் கட்டிக் கொண்டுவிட்டது.
கொக்கோகோலா கின்லி என்ற பெயரில் குடிநீர் வியாபாரத்தைத் தொடங்கியதும், பெப்சி என்ன செய்தது? அக்வாஃபினா என்னும் பெயரில், சந்தைக்கு வந்தது. நெஸ்லே நிறுவனம் கையைக் கட்டிக்கொண்டு நிற்குமா? பியூர் லைஃப் என்ற முத்திரையுடனும், பிரிட்டானிய நிறுவனம் ஒன்று பியூர் ஹெல்த் என்ற முகமூடியுடனும் இந்தியாவுக்குள் புகுந்து தன் வியாபார வேட்டையை நடத்தியதா - இல்லையா?
இதற்கு உலக அழகிகள் அய்ஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்களை விளம்பர முகவர்களாக அந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வில்லையா? இந்த உலக அழகிகளை உருவாக்கும் பின்னணியில்கூட இந்த உலக வர்த்தகர்கள்தான் பின்னணியில் உள்ளனர் என்ற ரகசியம் தெரியுமா? கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களும் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்படவில்லையா?
தொலைக்காட்சிகள் பெருந்தொகைகளைப் பெற்றுக் கொண்டே, இந்தப் பன்னாட்டு முதலாளிகளின் பாதங்களைத் தாங்கிப் பிடிக்கவில்லையா?
10 லட்சம் மக்கள் உள்ள இடத்தில்தான் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று சமாதானம் சொல்லப்படுகிறதே! இந்த நிறுவனங்களால் மக்களுக்குப் பயன் என்று மத்திய அரசு தெரிவிக்கிறதே - அது உண்மை என்னவென்றால், கிராமங்களிலும் ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லத் தயங்குவது ஏன்?
கிராமங்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்து அரசுக்கு இருக்குமானால், நகர்ப்புற மக்கள் பாதிக்கப் பட்டால் பரவாயில்லை என்று அரசு கருதுகிறதா?
மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்நிய நாட்டு விதைகள் வசீகரமாக விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி விவசாயம் செய்யக் கிளம்பிய நமது உழவர் குடிகளின் நிலை என்ன தெரியுமா?
மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட நெல்லில் இருந்து விதை நெல்லைப் பயன் படுத்த முடியாது. விதை நெல்லுக்கு அந்நியர்களை எதிர்பார்க்கும் விவஸ்தை கெட்ட நிலைதான்.
அந்நியன் வெள்ளைக்காரன் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்துவிட்டது என்று கூறிக்கொண்டு, இப்பொழுது வேறு காரணம் கூறி அந்நியர்களிடம் இந்தியாவின் பொருளாதார ஆதிக்கத்தை ஒப்படைக்கத் துடிப்பது ஏன்? மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களாக!

கோவில் கோபுரம் கோவிந்தா!


கலசம் இடிந்து விழுந்தது
காஞ்சீபுரம், நவ.30- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உட்பிரகார கோபுர கலசம் இடிந்து விழுந்தது. இது உலகப் புகழ்பெற்றது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
உலக நாடுகளிலிருந்து பக்தர்கள் காஞ்சி புரத்தில் உள்ள  ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து செல்கின்றனராம். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. இக் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு சிவகாஞ்சி என்ற சிறப்பு பெயரும் உண்டு. இத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஏகாம்பரநாதர், இறைவியின் பெயர் ஏலவார்குழலியம்மையாம்.
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள மாமரம் 3500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.
கலசம் உடைந்து விழுந்தது
பல சிறப்புகளையும், புகழ்களையும் பெற்ற இந்த கோவில் உட்பிரகாரத்தில் உள்ள கோபுரம் ஒன்றின் கலசம் (4 ஆவது கலசம்) திடீர் என்று உடைந்து விழுந்தது.
தன்னுடைய கோபுரத்தின் கலசத்தையே காக்க முடியாத கடவுளின் சக்தியை என்னவென்று சொல்வது?

தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த இயக்கமும் அதன் சமூக தாக்கங்களும்!


(சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கலை மற்றும் சமூக அறிவியல் துறையின் தெற்காசிய ஆய்வுத் திட்டம் ஏற்பாடு செய்து 17.11.2011 அன்று நடத்திய கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது)
வணக்கம். அனைவருக்கும் எனது மாலை வணக்கம்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய சமூக சீர்திருத்த இயக்கத் தைப் பற்றி விளக்கிப் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை எனக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே, மக்களைப் பற்றி, குறிப்பாக ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளும்  கருத்தாக்கமும், செயலாக் கமும் கொண்ட ஒரு புதிய இயக்கம் இது.  உலக அளவில் இல்லாவிட்டாலும், இந் திய அளவிலான வரலாற்றில் இதுவரை நாம் பார்த்திருப்பவற்றிலேயே மிகப்பெரிய மனிதநேய இயக்கம் இதுதான்.  இந்த சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களால் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அந்தந்தக் காலத் தேவைகளுக்கு ஏற்பவே எந்த ஓர் இயக்கமும் தோன்று கிறது.  பெரியார் அவர்களின் பெரும் அனுபவங்களும், அவரது வாழ்வில் அன்றாடம் நிகழ்ந்த நிகழ்ச்சிகளும், இந்த இயக்கம் தோன்றுவதற்கான கருவி களாக அமைந்தன.  ஈரோட்டில் ஒரு பணக்காரராக வாழ்ந்த அவர்  கடவுள் நம்பிக்கை நிறைந்த ஒரு பழைமையான குடும்பத்தைச் சேர்ந்தவர். முறையான பள்ளிக் கல்வி பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அதுவே, தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே எதையும் ஏன், எதனால், எது, எப்படி என்ற கேள்விகளைக் கேட்கும் ஒரு சுய சிந்தனையாளராக மாற உதவியது ஒரு நற்பேறாக அமைந்தது. இத்தகைய சிந் தனை ஆயுதங்களே அவரது படைவீட்டில் இருந்தவையாகும்.  மதிப்பு மிகுந்த, மறுக்க இயலாத அவரது கேள்விகளில் இருந்தும், சமூகத்தைப் பற்றிய அவரது கவலைகள்  மற்றும்  அக்கறையிலிருந்தும் பிறந்தது இந்த சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கத்தை உருவாக்க அவர் எந்த நூலகத்திற்கும் செல்லவில்லை; சன்னி யாசியைப் போன்று எந்த தியானத்தையும் செய்யவில்லை.  அவரது குழந்தைப் பருவம் முதல் அவர் பெற்றிருந்த அவரது சொந்த அனுபவங்களே இந்திய வரலாற்றிலேயே மிகப் புதுமை வாய்ந்த ஓர் இயக்கத்தைத் தோற்றுவிக்கத் தூண்டுகோலாக அமைந்தன. அயல்நாட்டு மக்களினால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு தனித் தன்மை மிகுந்த ஒரு சமூகமாக விளங் குவது இந்திய சமூகம். இந்த இயக்கத் தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், முதலில் இந்திய சமூகக் கட்டமைப்பைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். முதலில் கிழக்கு இந்தியாவில் வங்காளத்தில் பிரம்ம சமாஜம் என்ற பெயரிலும், மேற்கு இந்தியாவில் பஞ்சாபில் ஆர்ய சமாஜ் என்ற பெயரிலும்  தோன்றிய சமூக சீர்திருத்த இயக்கங்கள் மதங்களைச் சீர்திருத்தத் தோன்றியவை.  ஆனால் சுயமரியாதை இயக்கமோ, ஒட்டு மொத்த சமூகத்தையும் இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மனிதநேய சீர்திருத்த இயக்கங்களில் ஒன்றாக விளங்குவதாகும்.
இந்திய சமூகம் அடிப்படையில் ஜாதி கள் மலிந்த ஒரு சமூகமாகும். ஜாதி என்ற அமைப்பு என்பது என்ன? ஒருவரின் தகுதியும், வாய்ப்புகளும் அவரது பிறப் பால் முடிவு செய்யப்படுகின்றன. ஒருவர் தான் விரும்பினாலும், தான் பிறந்த குடும்பத்தின் ஜாதியை மாற்ற முடியாது. ஒருவர் தான் பின்பற்றும் மதத்தை மாற்றிக் கொள்ளலாம்; தான் ஆதரிக்கும் அரசியல் கட்சியை மாற்றிக் கொள்ள லாம்; ஆனால் தன் ஜாதியை மட்டும் எவராலும் மாற்றிக் கொள்ள முடியாது.  சாஸ்திரங்கள், வேதங்கள் மற்றும் இதர மத நூல்களில்  மட்டுமன்றி, இந்திய உச்சநீதிமன்றத்தினால் அண்மைக் காலத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளிலும் இந்த ஜாதி அமைப்பு அங்கீகரிக்கப்பட் டுள்ளது. இந்தியாவில் இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும், அயல்நாட்டு மதங்களுக்கு மாறி பின்பற்றி வரும் இந்தியர்களும்கூட, இந்த ஜாதி அமைப் பின் கீழே வருபவர்களேயாவர். இதற்கு எடுத்துக்காட்டாக கிறித்துவ, சீக்கிய மதங்களைக் குறிப்பிடலாம். ஒருவர் ஒரு ஜாதியில் பிறந்தால், அதே ஜாதியில் வாழ்ந்து அதே ஜாதியில் இறக்கிறார். அவரது உடல் புதைக்கப்படுவதிலும் அல்லது எரிக்கப்படுவதிலும்கூட அவர் ஜாதி அவரை விட்டுப் போகவே போகாது.  அத்தகைய கொடுமையான அமைப்பு தான் இந்த ஜாதி அமைப்பு. அச்சுறுத்தும் இந்த ஜாதிஅமைப்பு என்னும் பெருங்கேட்டை ஒழிக்கவேண் டும் என்ற அடிப்படையிலேயே பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த இயக் கத்தைத் தொடங்கினார். மனிதர்கள் ஏன் தங்களது பிறப்பினால் வித்தியாசப்படுத் தப்பட வேண்டும்? உலகில் வேறு எந்தப் பகுதியிலும் மனிதர்கள் இத்தகைய இழிவை சந்தித்ததே இல்லை. ஜாதி வர்ண நடைமுறையில் சமூகத்தில் கீழான வர்களுக்கும் கீழாக பெண்கள் வைக்கப் பட்டிருந்ததால், பெண்களுக்கு எதிராக வும் இத்தகைய பாகுபாடு காட்டப்பட்டது. சதுர் வர்ண (நான்கு பிரிவு) நடைமுறை யில், டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டிய படி,  சமத்துவமின்மை நிலவியது மட்டு மன்றி, பல்வேறு ஜாதிகளிடையே ஒன்றின் கீழ் ஒன்றாக ஏணிப்படி போன்ற படிப்படியான ஏற்றத் தாழ்வுகளும் நில வியது. நான்காவது பிரிவான சூத்திரர் களுக்குப் பிறகு அய்ந்தாவது பிரிவாக தீண்டத்தகாதவர்கள் அல்லது பார்க்கப் படாதவர்கள் பஞ்சமர் என்ற பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கும் கீழே சமூக ஏணியில் பெண்கள் வைக்கப்பட் டிருந்தனர்.
காரண, காரிய பாதிப்பு பற்றிய பகுத் தாயும் கோட்பாடு என்பதுதான் சுயமரி யாதை இயக்கத்தின் தத்துவமாகும். இத் தகைய பாகுபாடு ஏன் என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.  ஜாதிய நடைமுறை யைப் பாதுகாத்து, அதன் மூலம் தாங்கள் ஆதாயம் பெற வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சுயநலவாதிகள் இந்த ஜாதி நடைமுறை மனிதர் உருவாக்கியதல்ல, கடவுளே உண்டாக்கியது என்று பெரியாரின் கேள்விக்கு  பதில் அளித் தனர். தங்களுக்கு நேரும் அனைத்து நன்மை, தீமைகளுக்கும் விதியே காரணம் என்ற நம்பிக்கை இந்த ஜாதிய நடைமுறையை மேலும் உறுதியானதாக ஆக்கியது. ஆனால் பெரியார் இது போன்ற கட்டுக்கதைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜாதி அமைப்பை மட்டுமன்றி, இந்த ஜாதிய அமைப்பை ஆதரிக்கும் அனைத்து வேர்களையும், மூல அமைப்புகளையும், அது கடவுளா கட்டும், மதமாகட்டும், சடங்குகள், சாத்திரங்கள் எவையானாலும் அவை அனைத்தையும் வேரோடு அழிக்க வேண்டுமென்று பெரியார் விரும்பினார்.
அனைத்து மனிதர்களுக்கும் சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகி யவை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது சுயமரியாதை இயக்கம். மக்கள் தொகையில் பாதி அளவினராக இருக்கும் பெண்கள் ஆண்களின் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று, அதிகாரம் பெற்று மேன்மை யடையவேண்டும் என்பதும் இந்த இயக்கத்தின் மற்றொரு முக்கியமான கொள்கையாகும். இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன் பெண்கள் கொடு மையாக நடத்தப்பட்டனர். கணவரை இழந்த கைம்பெண்கள் சதி என்ற பெயரால், கணவர் உடலுடன் உயிருடன் எரிக்கப்பட்டனர். ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் இந்த சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் நிலவுகிறது. அங்குள்ள சதிதாய் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக தென் இந்தியாவில் இத்தகைய பழக்கங் களை உங்களால் காண முடியாது. குழந் தைகள் திருமணம் முன்னர் சாதாரண மாக இருந்தது. பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொடுக்கப்பட்டுவிடவேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அவ்வாறு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட மணமகன் இறந்துவிட்டால், அவனது மனைவியான சிறுமி காலம் முழுவதிலும் விதவையாகவே வாழவேண்டும். இத்தகைய குழந்தைகள் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சுயமரி யாதை இயக்கம் வலியுறுத்தி, அதை நடைமுறைப்படுத்தவும் செய்தது.
பெண்களுக்கு மூதாதையரின் சொத் தில் எந்த உரிமையும் இருக்கவில்லை. பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்குவதற்கான சட்டம் அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டது. இது பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் மிகப் பெரிய சாதனையாகும்.
வேலை வாய்ப்புகள்உயர் ஜாதியினரின் ஏகபோக உரிமையாக இருந்து வந்தன. நான்காவது பிரிவினரான சூத்திரர்களுக் கும், கீழ்ஜாதி பஞ்சமர்களுக்கும், பெண் களுக்கும் படிப்பது, எழுதுவது, கணக்கு போடுவது ஆகியவை மறுக்கப்பட்டிருந் தன. அவர்களுக்கு கல்வி மட்டுமே மறுக்கப்படவில்லை. அவர்கள் கல்வி கற்கவோ, வேதங்களைப் படிக்கவோ, அறிவைப் பெறவோ முயன்றால் தண்டிக் கப்பட்டார்கள்.  பல நூறாண்டு காலமாக நிலவி வந்த நடைமுறை இதுதான். பெரும் பாலான மக்கள் தாங்கள் வாழ்வதற்காக, மண்ணை உழுது விவசாயம் செய்பவர் களாகவும், உடலால் உழைப்பவர்களாகவும், கீழ்நிலை அல்லது இழிவான பணிகளைச் செய்பவர்களாக இருந்தனர். இந்த கொடுமையான நிலையை எதிர்த்துப் புரட்சி செய்யவேண்டும் என்று இந்த இயகத்தைத் தவிர வேறு எந்த அமைப்பும் நினைக்கவில்லை. இதன் காரணம் அவர்கள் எல்லாம், ஒருவரது நிலை அவர் முற்பிறவியில் செய்த செயல்களுக்கு ஏற்றபடிதான் அமையும் என்ற  விதி என்ற கோட்பாட்டின் மயக்கத்தில் இருந்தது தான். தர்மத்தைப் பிறழாமல் கடைப்பிடித்து இப்பிறவியில் நல்ல செயல்களை செய் தால், அடுத்த பிறவியில் அவர்களுக்கு மாற்றம் அல்லது நிவாரணம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர்.
- தொடரும்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா


சோலை எழுதிய வீரமணி ஒரு விமர்சனம் நூல் - ஆசிரியர் குரலில் வாழ்வியல் சிந்தனை குறுந்தகடு வெளியீடு
நீதியரசர் பி.ஆர்.கோகுலகிருஷ்ணன் - பேரா.சுப.வீரபாண்டியன் பங்கேற்கின்றனர்
தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் சிறப்புரையாற்றுகிறார்
சென்னை, நவ. 30- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொள்கை முரசம் கொட் டும் விழாவாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், நீதியரசர் பி.ஆர்.கோகுல கிருஷ்ணன், பேராசிரியர் சுப.வீர பாண்டியன் பங்கேற்கின்றனர்.
எழுபது ஆண்டுகள் பொதுத் தொண்டிற்கு சொந்தக்காரர், திரா விடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 79ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் எழுச்சித் திருவிழா வாக, கொள்கைத் திருவிழாவாக நடைபெறுகிறது.
2.12.2011 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா தொடங்குகிறது.
கோ.சாமிதுரை
இவ்விழாவிற்கு திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி துரை தலைமை வகித்து உரையாற்று கிறார்.
சென்னை மண்டல தி.க. தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வ நாதன், தாம்பரம் மாவட்ட தி.க. தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்ட தி.க. தலைவர் மா.ஆ.கந்த சாமி, கும்மிடிப்பூண்டி மாவட்ட தி.க. தலைவர் செ.உதயகுமார் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.
திராவிடர் கழக பிரச்சார செயலா ளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி அறிமுக உரையாற்றுகிறார்.
திராவிடர் கழக பொதுச் செயலா ளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றுகிறார்.
வீரமணி - ஒரு விமர்சனம் நூல் வெளியீடு

மூத்த எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய வீரமணி - ஒரு விமர்சனம் நூலை வெளியிட்டு தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சிறப்புரை ஆற்றுகிறார்.

நிகழ்ச்சியில் தமிழர் தலைவரின் வாழ்வியல் சிந்தனைகள் ஒலிப் புத்தகம் (ஆசிரியர் குரலில்) குறுந் தகட்டை வெளியிட்டு குஜராத் மாநில உயர்நிதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றுகிறார்.

நிகழ்ச்சியில் வீரமணி - ஒரு விமர்சனம்! நூலை எழுதிய மூத்த எழுத்தாளர் சோலை பாராட்டப்பட இருக்கிறார்.
நூல் பெறுவோர்

விழாவில், நீதிபதி இரா.பரஞ்சோதி, பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மயிலை நா.கிருஷ்ணன், வழக்கறிஞர் த.வீரசேகரன், மு.அ.கிரிதரன், க.திரு மகள், த.க.நடராஜன், கு.தங்கமணி, ஆவடி பா.தென்னரசு, சைதை எம்.பி. பாலு, மு.சென்னியப்பன், மு.கதிரவன் (தி.மு.க) ஆகியோர் நூலைப் பெறுகின்றனர்.

ஒலிப்புத்தக குறுந்தகடு பெறுவோர்
ஒலிப்புத்தக குறுந்தகட்டை கோ.ஒளிவண் ணன், பேராசிரி யர் மு.நீ.சிவரா சன், வீ.குமரே சன், வழக்கறி ஞர் வீரமர்த் தினி, கோ.கருணாநிதி, அர.இராமச் சந்திரன், ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், செ.ரா.பார்த்தசாரதி, செம்பியம் கி.இராமலிங்கம், இரா.தமிழ்ச்செல் வன், செ.தமிழ்சாக்ரடீஸ் ஆகியோர் பெறுகின்றனர்.
மேலும் 3 புதிய நூல்கள்

தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசையில் மேலும் 3 புதிய நூல்கள் வெளியிடப்படுகின்றன.

1. உண்மை தொழிலாளர் யார்?

2. மேல்நாடும் கீழ்நாடும்

3. பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?

டெய்சி மணியம்மை நிகழ்ச்சிகளைத் தொகுத்து இணைப்புரை வழங்குகிறார். நிறைவாக வை.கலையரசன் நன்றியுரை ஆற்றுகிறார்.

முன்னதாக மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை கழகக் குடும்பத்துப் பிள்ளை களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப் பாக நடைபெறவிருக்கின்றன. இவ்விழா வில் பங்கேற்க குடும்பம் குடும்பமாக திராவிடர் கழக தோழர்களும் இன உணர்வாளர்களும் திரளுகிறார்கள்.

அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால், அதில் தப்பிப் பிழைக்க இயன்ற உயிரினம் எது?


தெரிந்துகொள்வோம்
இன்று ஒரு புதிய தகவல்:
அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால், அதில்தப்பிப் பிழைக்க இயன்ற உயிரினம் எது?
கரப்பான்பூச்சி என்ற விடை தவறானதாகும். கரப்பான் பூச்சிகள் எவராலும் அழிக்கப்பட முடியாதவை என்ற நம்பிக்கை நம் அனைவரிடமும் நிலவுவதே அதற்கு பெருமை சேர்ப்பதாகும்.
மனித இனத்தை விட முன்னதாக தோன்றி உயிர் வாழ்ந்து வரும் இனம்தான் இந்தக் கரப்பான்பூச்சி இனம். 28 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இதுதான் நோயைப் பரப்பக் காரணமானது என்று உலகம் முழுவதிலும் வெறுக்கப்படும் உயிரினமாகும். அதன் தலை துண்டிக்கப் பட்டுவிட்ட பிறகும் கூட ஒரு வாரம் வரை அது உயிரோடு இருக்கும். ஆனாலும் அவை அழிவு அற்றவை அல்ல.  1959 இல் டாக்டர் வார்டன் அன்ட் வார்ட்டன் மேற்கொண்ட ஆய்விலிருந்து, ஒரு அணுப்போர் உண்டானால் முதன் முதலில் அழியும் உயிரினம் கரப்பான் பூச்சி இனமாகத்தான் இருக்கும் என்று தெரியவருகிறது.
இந்த இரு விஞ்ஞானிகளும், பல்வேறுபட்ட உயிரினங்களை மாறுபட்ட கதிரியக்கத்திற்கு ராட்ஸ் என்ற அளவுகோளில் உட்படுத்தி சோதனை செய்தனர். 1000 ராட்ஸ் கதிரியக்கத்தில் மனிதன் இறந்துபோவான்.  கரப்பான் பூச்சி 20,000 ராட்ஸ் கதிரியக்கத்திலும், ஒரு ஈ 64,000 ராட்ஸ் கதிரியக்கத்திலும் ஒரு குளவி 1,80,000 ராட்ஸ் கதிரியகத்திலும் இறந்து போகும். கதிரியக்கத்தை எதிர்த்து தாக்குப் பிடிப்பதில் அரசன் என்று அழைக்கப்படத்தக்கது டினோகோகஸ் ரேடியோ டூரான்ஸ் (Deinococcus radiodurans) என்னும் நுண்ணுயிரிதான்.  15 லட்சம் ராட்ஸ் வரையிலான கதிரியக்கத்தைத் தாங்க வல்லது அது. உறைந்து போன நிலையில் அதன் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் இரு மடங்காகப் பெருகிவிடுகிறது.
மாணவர்கள் அன்புடன் இந்த நுண்ணுயிரியை கோனான் நுண்ணுயிரி என்று அழைக்கின்றனர். பழுப்பு நிறம் கொண்ட இது அழுகிய முட்டைகோஸ் போல நாற்றம் அடிக்கும்.  கதிரியக்கம் அற்ற இறைச்சி பாத்திரத்தில் அது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து பெருக இயன்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யானையின் சாணம், கதிரியக்கம் அற்ற மீன், வாத்துக் கறி, அண்டார்டிகாவில் உள்ள கற்பாறைகளிலும் கூட இயல்பாக அவை தோன்றுகின்றன என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கம், கடுங்குளிர் பாதிப்புகளை எதிர்த்து உயிர்வாழ இயன்ற இதன் ஆற்றலும், தனது மரபணுவை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள இயன்ற  ஆற்றலும், செவ்வாய் கிரகத்தில்  உயிரினம் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான மறைவான செய்தி  இந்த கோனான் நுண்ணுயிரியில் இருக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகளை நம்பச் செய்துள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

சுருக்கேள்விகள்..... மனிதன் கேட்கிறான்காசிக்கும், கயிலைக்கும் செல்வதன் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் எனில் - காசில்லாதவன் சொர்க்கத்தை எவ்வாறு அடைவது?

அனைவரும் கடவுளின் குழந்தைகள் எனில், சோமாலியா மக்கள் யாருடைய குழந்தைகள்?

ஈரேழு உலகிற்கும் படைப்பின் கடவுள் பிரமன் எனில் - வேறு மதம் சார்ந்தவர்கள் யாரால் படைக்கப்பட்டார்கள்?
மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் - கோயில்களும் - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

முற்றும் துறந்தவன் முனிவன், முனிவர்க் கெல்லாம் முனிவன் கடவுள் எனில் - பல கோடீஸ்வரக் கடவுள்கள் இருப்பது எப்படி?

தூணிலும் இருப்பான், துரும்பிலும், இருப்பான் கடவுள் எனில், தனிப்பட்ட முறையில் கோடீஸ்வரர்கள் எதற்கு?

அநீதியை அழிப்பவன் கடவுள் எனில், பாவங்கள் நிறைந்த கலியுகம் எப்படிக் கடவுளின் விதியால் நிகழ்ந்து கொண்டிருக்கும்?

பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்வதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும் எனில், வழி அற்ற வறியவனுக்கு கடவுளின் ஆசி எப்படிக் கிடைக்கும்?

கோயில் திருவிழாக்கள், ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் கலவரங்களை ஏற்படுத்துமாயின் கலவரங்களை ஏற்படுத்தும் கடவுளும், மதங்களும் தேவையா?
கருணை உள்ளவன் கடவுள் என்றால்  உயிர்ப் பலி கேட்டது யார்?

எல்லாம் விதியின் செயல் எனில், தண்டனை ஏன் நமக்கு?

ஒழுக்கத்தில் பிறந்த கடவுளைக் கவர, திருவிழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டங்களை ஆடச் சொன்னது யார்?

எல்லாம் அவன் செயல் எனில், குற்றங்களுக்குப் பின்னாலும் கடவுள் நிற்கிறாரா?
தெய்வம் நின்று கொல்லும் அதுவரை, பாதிக்கப்பட்டவன் உயிரோடு இருப்பானா?

எல்லாவற்றையும் காக்கும் கடவுளைக் காக்க, கதவும் பூட்டும் எதற்கு?

நல்லவர் மனதெங்கும் கடவுள் உள்ளார் எனில், கடவுளை மலையேறித் தரிசிக்க வேண்டிய அவசியம் என்ன?

கடவுள் முன் அனைவரும் சமம் எனில், சிறப்புக் கட்டண நுழைவுவாயில் எதற்கு?

அவனன்றி ஓர் அணுவும் அசையாது அணுவின்றி அவனாலும் அசைய முடியாது

பாவத்தின் சம்பளம் மரணம் எனில், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

சமஸ்கிருதம் கடவுளின் மொழி எனில், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் கடவுளை எவ்வாறு தொடர்பு கொள்வது? கற்களில் செய்யப்பட்டு, கதவுகளில் அடைக்கப் பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?
ரா.கேசவன்,
புதுக்கோட்டை

Tuesday, November 29, 2011

கலைவாணர்


இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த நாள் (1908) கலையின் மூலம் மக்களின் அறி யாமைக் களையை அகற்றிய நடிப்புலக உழவர் அவர்.

1939இல் வெளிவந்தது, திரு. நீலகண்டர் படம். அதில் எம்.கே. தியாகராஜ பாகவதரும் கலைவாண ரும் நடித்தனர். அப்படத்தில் ஒரு இலாவணிப் பாடல். சொக்கனாக கலைவாணரும் மருதையாக டி.எஸ். துரைராஜும் பங்கேற்றனர்.

மன்மதன் எரிந்தானா! இல்லையா என்ற தர்க்கம் கல்விக்கரசி தமிழ்ச்செல்வி என்றொரு பெண்ணை கைதொழுதீரே, அந்த மங்கை மறையவன் நாவில் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே? எங்கே?

பிர்மாவின் நாவில் சரஸ்வதி வாழ்வது உண்மையென்றால் அவள் மலஜலம் கழிப்பது எங்கே என்று கலைவாணர் பாடும்போது, சும்மா திரையரங்கமே அதிருமில்ல.

சில்லறை வியாபாரம் சில்லறைப் பிரச்சினையல்ல!


சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் படையெடுக்கவிருக்கிறது - அதற்கு மத்திய அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது என்பது சில்லறை விடயமல்ல - மிகப் பெரிய விடயமாகும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உட்பட கடும் எதிர்ப்புக் கொடியைத் தூக்கி இருக்கின்றன. வியாபாரிகளும் போராட்டக் களத்தில் குதிக்க முடிவு எடுத்துள்ளனர்.

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் தொகை 4 கோடி என்றும், இதோடு சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் அத்தொகை 16 கோடி என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சில்லறை வணிகத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்குப் புழங்கும் தொகை சாதாரணமானதல்ல - இருபத்து இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப் பட்டுள்ளது.

உலக நாடுகளின் தர வரிசையில் 76ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் - இவ்வளவு கோடி மக்களின் தலையில் கை வைக்கும் ஒரு காரியத்தை ஓர் அரசு செய்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!

ஒரு பொருளாதார மேதை இந்தியாவின் பிரதமர், இன்னாரு பொருளாதார மேதை திட்டக் குழுவின் துணைத் தலைவர், அரசியலில் விதைபோட்டு கனி பறித்துக் கொட்டை எடுத்தவர் என்று கருதப்படும் ஒருவர் நிதி அமைச்சர்.

இவ்வளவு அதிமேதாவிகளும் சேர்ந்து இந்தியாவில் மூன்று நட்சத்திர நுகர்வுக் கலாச்சாரத்தைத் திணித்து ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வுக்குக் கொள்ளி வைக்கும் வேலையில் இறங்கிட எப்படி மனம் வந்ததோ தெரிவிக்கவில்லை! பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது என்பார்களே அது இதுதானோ?

அந்நிய சில்லறை வணிகம் என்ற ஒட்டகம் நுழைந்த நாடுகளின் நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

வெகு தூரம் போகக்கூட வேண்டாம். இந்தியா வுக்குள் தண்ணீர் வியாபாரம் செய்ய வந்தனவே அக்வாஃபைனா, (Aqua fina), கின்லீ (kinley) ஈவியான் (Evian) எஸ். கங்கா (Yes Ganga)அக்வாபியூர் (Aqua pure) சாபோல்ஸ் (Sobols) இவையெல்லாம், இந்தியா வுக்குள் புகுந்து, இந்திய மண்ணுக்குள் துளை போட்டு, தண்ணீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறி, அழகிய போத்தல்களில் பளபளப்பாக அடைத்து இந்திய மக்களின் தலையைத் தடவவில்லையா? ஒரு லிட்டர் பாலை விட ஒரு லிட்டர் தண்ணீரை அதிக விலைக்கு விற்கவில்லையா?

வீட்டில் காய்ச்சி வடிகட்டிப் பருகும் தண்ணீரைவிட இந்த வணிக நிறுவனங்கள் விற்கும் தண்ணீர் போத்தல்கள் தரமுள்ளவையல்ல! ஆனாலும் இத்தகைய போத்தல்களை வாங்கிக் குடிப்பதுதான் கவுரவம், நாகரிகம் என்ற போலி உணர்வுக்கு மக்களை அடிமைப்படுத்தி விட்டனரே!

மினரல்வாட்டர் என்று விளம்பரம் செய்தார்கள்; இதனை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சாதாரண தண்ணீரை அவ்வாறு விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.

உடனே என்ன செய்தார்கள்? ப்யூர்வாட்டர், பேக்டு டிரிங்கிங் வாட்டர் என்று போட ஆரம்பித் தனர். வியாபாரிகளுக்கா மக்களை ஏமாற்றத் தெரி யாது?

அதுவும் வெளிநாட்டில் இருந்து உள்ளே நுழைந்து உள்நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும்  பேர் வழிகள் மகா மகா தந்திரசாலிகள் ஆயிற்றே!  சகல உத்திகளிலும் கைதேர்ந்தவர்களாயிற்றே!

இந்தியாவுக்குள் விற்பனையாகும் இந்த அயல் நாட்டு நிறுவனங்களில் தண்ணீர் போத்தல்களை விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் (Centre For Science and Environment) ஆய்வு செய்து உச்சநீதிமன் றத்தில் வழக்கும் தொடுத்தது. 21 நிறுவனங்களின் சரக்குகளிலும் 32 வகையான நஞ்சுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டனவே!

இந்த அந்நிய நிறுவனங்களின் பருப்பு வேகாத ஒரே மாநிலம் கேரளாதான் - விரட்டியடித்தனர் அம்மக்கள். இந்தக் குடிநீர் கேரளாவில் காலடி வைத்தால் எங்கள் உள்ளூர் இளநீர் வியாபாரம் படுத்து விடும் என்று கூறினார்களே அம்மக்கள்.

அதே நிலைதான்  சில்லறை வணிகத்தில் அந் நியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் உள் நாட்டுச் சில்லறை வியாபாரிகள் அந்தத் திமிங்கலங்களோடு போட்டிப் போட முடியாமல், முக்காடு போட்டுக் கொள்ளும் நிலைதான் ஏற்படும். 

அந்தநிலை நாட்டில் பெரும் அளவுக்கு அமைதியின்மையையும், கலவரத்தையும் விளைவிக்கக் கூடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (4) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)


முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

எங்களுடைய பிள்ளை குட்டிகளா வது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவும் நாங்கள் தயார் என்பதை 26 ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று அறைகூவலுடன் முடித்தார்.

நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கைது ஆனவர்கள் நீதிமன்றத்தில் கூறவேண்டிய பட்டய வாக்குமூலம் இது 23.11.1957 விடுதலையில் வெளிவந்தது.

நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத் துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்து வதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்ற வாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக் கையில் நான் கலந்து கொள்ள விரும் பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்ப வில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்.

(விடுதலை 23.11.1957)
பெரியார் போராட்ட நாளுக்கு முன் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். ஒரு சமூக சீர்திருத்த இயக்கத் தலைவன், பொறுப்பான ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் வேண்டுகோள் எப்படிப்பட்ட உயர்ந்த நாணயமான, பண்புமிக்க தலைவர் தந்தை பெரியார் என்பது போராட்டக் களத்திலும் வெளிப்படுகிறது.

முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது என்னை ரிமாண்டு செய்வதனாலேயோ, மற்றும் இப்போது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ, பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும்.

எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ பார்ப்பன சமுதா யத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ பெண்களுக்கோ, குழந்தைக ளுக்கோ, துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான செய்கை, அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத் துதலோ முதலிய ஒரு சிறிய காரியம் கூட நடத்தாமலும், நடை பெறாமலும் இருக்கும்படியாக ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோ கம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் உண்மை. அவை இப்போது அல்ல. அதற் கான காலம் இன்னும் வரவில்லை. வரக் கூடாதென்றே ஆசைப்படு கிறேன்.

அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங் கள் நடத்தி அவைகளால் ஒன்றும் பயனில்லை; வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு பலாத் காரத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நாம் அவற்றில் இறங்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நான் மேலே வேண்டிக் கொண் டிருக்கிறபடி, எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளி டத்தில், போலீஸ்காரர்களிடத்தில் மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று வேண்டுகோளுடன் முடித்திருந்தார்.

இந்தியத் தலைமை அமைச்சர் நேரு டில்லியில், திராவிடர் கழகக் கிளர்ச்சி காட்டுமிராண்டித்தனம். அநாகரிகமான காரியம்; இதை ஒழிக்காமல், அடக்காமல் இடம் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று பேசினார். தமிழக அமைச்சரவை மந்திரி ஒருவர், பெரியார் திராவிடர் கழகத்திற்குக் கருமாதி செய் கிறார். ஏனென்றால் அவருக்குப் பிறகு கருப்புச் சட்டைக்காரர்கள் இருப்பதில் அவருக்கு இஷ்டமில்லை என்றார்.

பிரதமர் பண்டித நேருவுக்கும், பண் பாடில்லாமல் பேசிய தமிழக அமைச் சருக்கும் தக்க பதிலை, தரமான பதிலை 28.11.1957 அன்று திருச்சி நகர்மன்றத் திடலில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக தந்தை பெரியார் அளித்தார்.

மான உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிப் பரிகாரம் கேட்டால் கருமாதி செய்கிறேன் என்று பதில் சொன்னால் கழகத்திற்குக் கருமாதி நடக்கிறதோடு வேறு சிலருக்கும் சேர்த்து கருமாதி நடந்துவிட்டுப் போகட்டும் என்றுதானே பதில் சொல்லவேண்டும்?

கொடி கொளுத்துகிறேன் என்ற போது பறந்து கொண்டு சமாதானம் சொன்னார்கள்; ஏன் அப்போது சட்ட மில்லை. இப்போது சட்டம் வந்துவிட்டது. ஒரு கை பார்க்கிறேன் என்பதுதானா மேலிடத்துப் பதில்? காட்டுமிராண்டித் தனம் என்பதுதானே மேலிடத்துப் பரிசு.
(விடுதலை 29.11.1957)

அழுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயம் தலையெடுப்பது பெரிதா? இல்லை எனக்குக் கழகம்தான் பெரியதா? கழகம்தான் எங்களுக்கு எல்லாம் கஞ்சி ஊற்றுகிறதா? உப்புக்கு வழியிருக்கிறதா என்று பார்ப்பவனுக்குக் கழகத்தில் இடமில்லை. அவனவன் சொந்தத்தில் சோறு தின்றுவிட்டுப் பாடுபடுகிறவன் கழகத்தின் மூலம் எந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறோம்? அது ஒழிவதால் எதற்குக் கவலைப்படப் போகிறோம்.

(விடுதலை 29.11.1957)

26.11.1957 இல் பெரியார் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அரசு என்ன செய்தது?

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்தது. போலீஸ்காரர்கள் இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது.

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000 என்று போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறி வித்திருந்த சில இடங்களுக்கும் போலீசே போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பாதிப் பேரைக் கூடப் பிடிக்கவில்லை.

அதற்கே அங்கிருந்த லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால் குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்பத் திருச்சிக்குக் கொண்டு வந்து இப்படிப் பந்து விளையாடி யிருக்கிறார்கள். சட்டம் கொளுத்துவோர் பட்டியல் விடுதலை ஏட்டில் நாள்தோறும் வெளி யிடப்பட்டு அதன் எண்ணிக்கை 10 ஆயிரமாகப் பெருகியது. 26.11.1957 ஆம் நாள் மட்டும் மூவாயிரம் பேர் கைதாயினர். 15பேர் சிறைக் கொடுமையில் மாண்டனர். ஜாதியை ஒழிக்கப் போராடியவர்களை இழித்துக் கூறியது போராட்டத்தைப் பெரியார் இன்னும் தீவிரமாக்கத் துணை புரிந்தது எப்படி?

வருத்தத்தோடு சொல்கிறேன். அர சாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள். ஒரு காற்றில் அடித்துக்கொண்டு போய்விடும். இந்தக் கிளர்ச்சி அடிக்க அடிக்கப் பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக் கூடயதல்ல! அத்துணை பேருக்கும் சம்பந்தமான காரியம்! அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பறை யன், பஞ்சமனாக இருக்கிற ஒரு நேஷன் இந்த இழிவு கூடாது என்றால், வடவர்கள் நேஷனுக்கு அவமானம் என்கிறார்களே! இது என்ன நியாயம்?

இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் மானத்தை விட்டு இருப்பான்?  இன்று 3000 பேர் ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால் இதை நான் பெரிதாகக் கருத வில்லை. நாடகம் போன்றது என்றுதான் சொல்லுவேன். தோழர் குருசாமி இதுவரை 9 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். நான் போவதாயின் 16ஆவது முறையாக லாம். இந்த அடக்கு முறைகளை நாங்களா பொருட்படுத்துவோம்?  இந்த பூச்சாண்டி யாரிடம்?  இந்தக் காரியத்திற்கு 500 பேராவது சாகவும் முன்வரவேண்டும். சிறைக்குப் போவதில் ஒன்றுமில்லை  என்றார் பெரியார்.
(நிறைவு)