Total Pageviews

Thursday, August 29, 2013

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழர் தலைவர் கேள்வி


பாவ யோனியிற் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறுகிற கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணனுக்கு, விழா (ஜெயந்தி) கொண்டாட லாமா? - சிந்திப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை *(28.8.2013) கிருஷ்ணன் பிறந்த நாளாம்! கோகுலாஷ்டமி என்ற பெயரால் ஒரு நாள் அரசு விடுமுறை - அதுவும் மதச் சார்பின்மை முத்திரையை அரசியல் சட்டத்தின் முகப்பிலேயே ஏற்றிப் பிரகடனப்படுத்தியுள்ள அரசுகள் - விடுமுறை - பல கோடி ரூபாய்கள் நட்டம்! ஹிந்து மதத்தவரில் கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாடும் மதத்தில் ஒரு பிரிவினர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் பேன் குத்திக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பக்தி போதை ஏற்பாடு இது; மதச் சார்பின்மையை கேலிக் கூத்தாக்கும் செயல் இது!
பிள்ளை விளையாட்டே!
1. பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள். (ஹிந்து மதத்தில்) பிறப்பதும், இறப்பதும் எல்லாம் வள்ளலார் கூறியபடியே பிள்ளை விளையாட்டு அல்லாமல் வேறு என்ன?
2. கடவுள் கற்பனைதான் என்றாலும் மனிதர்களுக்கு ஒழுக்கத்தைப் பரப்ப இப்படி ஒன்று தேவையில்லையா? என்று கேட்கும் அதிமேதாவிகள் உள்ளனர். அவர்களைக் கேட்க விரும்புகிறோம்.
அ) கண்ணன் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்த கடவுளா? சின்ன வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் குளத்தில் குளித்த பெண்களின் புடவைகளைத் திருடி, மரத்தின் மீதேறி அமர்ந்து, நிர்வாண நிலைப் பெண்களை அப்படியே நீரினை விட்டு வெளியேறிடச் சொல்லி, அதை ரசித்து, சுவைத்து, பெண் கேலியை முதன் முதலில் துவக்கி  வைத்தவன் - சராசரி மனிதன் கூட செய்ய வெட்கப்படும் செயலைச் செய்து, கிருஷ்ண லீலை என்று கொண்டாடுவது ஒழுக்கத்தை வளர்ப்பதா? ஒழுக்கத்தைச் சிதைப்பதா? பக்தர்கள் சிந்திக்கட்டும்!
சண்டை மூட்டிய கடவுள்!
ஆ) பகவத் கீதை உபதேசம் என்ற பெயரால் சகோதரர்களிடையேகூட சண்டை போர் துவக்கி ஒருவரை ஒருவர் அழிக்கும் வண்ணம் தூபம் போட்ட செயல் அருவருக்க, கண்டிக்கத்தக்க செயல்கள்.
(இ) வன்முறை மட்டுமல்ல, மனித குலத்தைப் பிளவுபடுத்தும் ஜாதி - வர்ண தர்மத்தை சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் - நான்கு ஜாதிகளை நானே உண்டாக் கினேன்; நானே நினைத்தாலும்கூட ஜாதிக்கென்ற தர்மங்களை - குலதர்மத்தை - மாற்றிடவே முடியாது என்று கூறி, ஜாதி - வர்ணாஸ்ரமக் கொடுமையை நிலை நாட்டிய சமத்துவ விரோதியான ஒருவரைவிட சமூகத்திற்குக் கேடு செய்தவர்கள் யார் இருக்க முடியும்?
கோபப்படாதீர் - சிந்திப்பீர்!
இப்படிப்பட்ட மனித குலத்திற்குரிய சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிராகவும், பெண்களை பாவயோனிகள் என்று வர்ணித்தவருமான ஒருவரை கடவுளாக வணங்கிடுவது அறியாமை, மூடநம்பிக்கை காட்டுமிராண்டித்தனம் அல்லாது வேறு என்ன?
கோபப்படாமல் சிந்தியுங்கள் - பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எவ்வளவு சரியானது என்று உணருகிறீர்களா?
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை
27.8.2013


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, August 28, 2013

Tuesday, August 27, 2013

விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் எச்சரிக்கை!

அம்பலப்படுத்துகிறார் தமிழர் தலைவர்
விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் இணைய தளத்தில் உலா வருகிறார்கள் எச்சரிக்கை என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, இணையத்தில் வந்த செய்தியை நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள்.
இணையத்தில் உங்களைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இப் பொழுது பத்திரிகைகள், ஏடுகள், தொலைக் காட்சிகள், இணையத்தில் வருகின்ற செய்தி களைப் படித்து பதில் சொல்லவேண்டிய வாய்ப் பிருக்கிறது.
இப்பொழுது 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. 18 வயது நிரம்பியவர்கள் பெரும்பாலும் பொறியாளர்களாக இருக் கிறார்கள். இங்கே நம்முடைய அமைச்சர் அவர்களும், சிந்தனையாளர்களும் உரையாற் றும்பொழுது சொன்னார்கள், பெரியார் அவர்களுடைய உழைப்பு எந்த அளவிற்கு நம்மை எல்லாம் பண்படுத்தி இருக்கிறது; எத்தனை வழக்குரைஞர்கள், எத்தனை டாக்டர்கள், எத்தனை பொறியாளர்கள் என்று பெருமைபட கூறினார்கள்.
அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
இன்றைக்கு 18 வயதானவர்கள் எல்லாம் எதற்கெடுத்தாலும் இணையத்தைத்தான் நம்பு கிறார்கள். கைபேசியிலேயே இணையத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நம்முடைய இளைஞர்கள் இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால், நம்முடைய இன எதிரிகள் இருக்கிறார்களே, குறிப்பாக பார்ப்பனர்கள், அரசியல் எதிரிகள் இவர்கள் இணைய தளத்தைத்தான் அதிகமாக நம்புகிறார்கள். அதனால் இணைய தளத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் கண்டிப்பாக பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்தானே தவிர, எமகண்டம் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.
பெரியார் நாட்குறிப்பில்  நல்ல நேரம் என்று போட்டு, 24 மணிநேரமும் என்று போட்டி ருப்போம்.
ஒருவர் அவசரப்பட்டு  என்னிடம் கேட்டார்; சார் நீங்ககூட கெட்டுப் போய்விட்டீர்களே, நல்ல நேரம் என்றெல்லாம் போட்டிருக்கிறீர்களே என்று.
அடுத்த வார்த்தையைப் பாருங்கள் என்று சொன்னேன்; 24 மணிநேரமும் என்று போட் டிருக்குமே. அப்புறம்தான் அவர் ஒப்புக் கொண்டார்.
இணைய தளத்தில் எந்த விஷமத்தை வேண்டுமானாலும் பரப்புவார்கள்;
கலைஞரைப்பற்றி, டெசோ அமைப்பைப் பற்றி, எங்களுடைய முயற்சிகளைப்பற்றி எதை வேண்டுமானாலும் அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள். நம்மாட்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள்.
இங்கிருந்து வெளிநாட்டிற்கு கணினித் துறை யில் வேலைக்குப் போனவர்கள் ஓய்வு நேரத்தில் உட்கார்ந்துகொண்டு, இணைய தளத்தில் திரா விட இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவது; திராவிட இயக்கத் தலைவர்களைக் கொச்சைப் படுத்துவது, தமிழின உணர்வாளர்களைக் கொச் சைப்படுத்துவது, அந்த உணர்வே தேசத் துரோகம் என்று சொல்வது,  ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையா? அதைப்பற்றிப் பேசக்கூடாது; பகுத்தறிவா? அதைப்பற்றிப் பேசக்கூடாது. பகுத் தறிவை மறுப்பதற்கு இப்பொழுது அவனுக்குத் துணிவில்லை.  அதனால் என்ன செய்கிறான் - பகுத்தறிவைப்பற்றி  பேசுவார்களே தவிர, அவர் கள் இரட்டை வேடம் போடுவார்கள்; அதை யெல்லாம் நீங்கள் நம்பாதீர்கள் என்று சொல் வார்கள்.
திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்
ஏன் இங்கே மணமகனாக உள்ள சாக்ரட்டீஸ் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் அமர்சிங் - கலைச்செல்வி ஆகியோர் மணமகள் தேடி அலைந்தார்கள்; இந்த மாதிரி கொள்கைக் குடும் பம் அமைந்ததும்தானே அதனை ஏற்றார்கள். அவர் நினைத்திருந்தால், பெரிய பணக்காரர்கள் குடும்ப சம்பந்தம் எல்லாம் தேடி வந்ததே, அதனை ஏற்றுக்கொள்வதற்கு இவர்கள் தயா ராக இல்லையே!
இதை நேரடியாகக் கேட்டால், நாம் மறுப்பு சொல்வோம். அதனால்தான் இதனை இணையத் தில் கொண்டு சென்றுவிட்டான்.
திராவிடத் தலைவர்களைப்பற்றி திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை இணையத்தில் வந்துள்ள செய்தியை படிக்கின் றேன் கேளுங்கள். இந்த இணைய தளம் யாரு டையது என்றால், விமலாதித்த மாமல்லன். இந்தப் பெயரைக் கேட்டவுடன், இவரைவிட தமிழறிஞர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். இந்தப் பெயரிலேயே புத்தகம்; இந்தப் புனை பெயரிலேயே முழுவதும் இருக்கும். இவர்கள் எல்லாம் கையாள்கின்ற புதிய டெக்னிக். நேற்றுகூட மத்திய அமைச்சர் சிதம்பரம் சொன்னார், அவர்கள் வித்தையை கையாள்கிறார்கள் என்று; இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் உரையாற்றும்பொழுது சொன் னார்கள்.
அதுமாதிரி அவர்கள் கையாள்கின்ற வித்தை களில் ஒன்றுதான் இது.
நம்பினால் நம்புங்கள்!
விமலாதித்த மாமல்லன், தலைப்பிலேயே விஷமத்தனம்; இந்த அறிவார்ந்த அவைக்கு அதிகமாக விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
நம்பினால் நம்புங்கள்! இதுதான் தலைப்பு!
அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர் களில் பலர், அவர் மறைவுக்குப் பின் திமுகவை விட்டு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே விலகினர். அதற்குக் காரணம், எதற்கும் கருணா நிதிதான் காரணம் என்றாகிவிட்ட தற்காலம் போலல்லாது, இளம் கருணாநிதியின் முதிர்ச்சி யற்ற அதிரடிப் போக்கும் பழைய ஆட்கள் ஒதுங்கி நின்றதற்கு ஒரு காரணமாய் இருந்திருக் கலாம். அறத்திற்கு அப்பாற்பட்டு நடைமுறைப் பார்வையில் பழைய மதிப்பீடுகள், மதிப் பிடப்படத் தொடங்கிய காலம்.
திமுகவிலிருந்து அப்படி ஒதுங்கிக் கொண் டவர்களில் ஒருவர் என் சக ஊழியரின் உறவினர் என்பது பேச்சுவாக்கில் தெரியவந்தது. கருணா நிதி அவர்களே நேரில் சென்று கட்சியில் இயங்க அழைத்தும் நான் அண்ணாவுக்காகக் கட்சிக்கு வந்தவன், அவர் இல்லாத கட்சியில் என்னால் எப்படி இயங்கமுடியும் என்று தவிர்த்திருக்கிறார் நாசூக்காக. ஆனாலும் அடிப்படையில் தி.மு.க. காரராகவே வாழ்ந்திருக்கிறார்.
அண்ணாவுடன் அல்லது அண்ணாவிடம் அவர் என்னவிதமான தொடர்பில், நெருக்கத்தில் இருந்தார், அவரது பெயர் என்ன என்பது போன்ற எளிய விவரங்களைக் கூடப் பகிர முடி யாதபடி, நண்பரின் நிபந்தனை கட்டிப்போடு கிறது. இது அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த நிகழ்வு என்பதும். அவர் இப்போது இல்லை எனினும் பொது வாழ்வே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர் பெயர் பொதுவில் இழுபட வேண்டாமே என்கிற நண்பரின் வேண்டுகோள் காரணமாகவும் அவரது அடையாளத்தை முழு மையாகத் தவிர்க்கவேண்டி இருக்கிறது.
என்ன இருந்தாலும் பிரமுகர் அல்லவா என்று சேரன், தாமினி, கனகா  தந்தைபோல் சந்தியில் தான் குடும்பம் நடத்தவேண்டும் என எல் லோரிடமும் எதிர்பார்ப்பதும் முறையில்லை தானே. எனினும் அவருக்கு ஏதேனும் பெயர் கொடுக்காமல் எப்படி அவரைக் குறிப்பிடுவது? பெயர்களை தமிழுக்கு சீர்திருத்தி வைத்துக் கொள்ளும் மோஸ்தர் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தந்தை வைத்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.
பெயரிலா இருக் கிறது கொள்கை என்று இயற்பெயருடன் வாழ்ந்த ராமசாமிக்கு, பெரியார் என்கிற பட்டப்பெயர் தானாகவந்து ஒட்டிக்கொள்ளவில்லையா! அது போல, வாசக வசதிக்காக அவரைப் பெரியவர் என்று மட்டுமே குறிப்பிடுவதுகூட, பலவிதத் திலும் பொருத்தம்தான்.
பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திரு மணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இரு வரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அள வளாவத் தொடங்கிவிட்டனர். பெண் பார்க்க வரும் நாளையும் முடிவு செய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராகுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க. வீரமணி.
போனை வைத்த பெரியவர், வேறு எவரேனும் இதைச் சொல்லி இருந்தால் - நான் ஏற்கவில்லை எனினும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப் பளித்து, அந்த நேரத்தைத் தவிர்த்து இருப்பேன். எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந் தால், ராகுகாலத்தைத் தவிர்த்திருந்தால் அசம் பாவிதமும் ஒருவேளை தவிர்க்கப்பட்டு இருக் குமோ என்று எவர் மனமேனும் உறுத்தக்கூடும். எனவே அதைக் கருத்தில் கொண்டேனும் அவர் கள் விருப்பத்தை ஏற்று நடக்கலாம். அது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. மூட நம்பிக்கைகளை விடச்சொல்வதே மனிதமேன்மைக்குதானே. மூச்சுக்கு மூச்சு மூடநம்பிக்கை எனப் பேசிக் கொண்டு இவன் போய் ராகுகாலம் எனச் சொன்னால் எப்படி? இவனோடு நமக்கென்ன சம்பந்தம் என்று, பெண் பார்க்கப்போக இருந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார்.
இது எப்போது நடந்தது ரொம்ப முன்பாகவா என்று நண்பரிடம் கேட்டேன். சேச்சே அவரது மகன் என்னைவிட ஓரிரு வருடங்கள் பெரியவன். இது இப்போதுதான், இரண்டாயிரத்தில் நடந்தது என்றார் நண்பர்.
நானும் நண்பருமாக, பெரியவரின் பெயரையும் திராவிட இயக்கத்தின் மற்றும் அண்ணாவின் முக் கியமான சில அடையாளங்களையும் போட்டு கூகுளில் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை.
என்று இணைய தளத்தில் போட்டிருக்கிறார்.
கொழுத்த ராகுகாலத்தில்தான் என்னுடைய திருமணம் நடைபெற்றது
முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.
என்னுடைய துணைவியாரும் இங்கே இருக் கிறார்கள்; திருமணத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் எங்கள் திரு மணத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குத்தான் - கொழுத்த ராகு காலத்தில்தான் நாங்கள் மாலையை மாற்றிக்கொண்டோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நான் இதற்காக சான்றிதழ் ஒன்றும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும்பொழுதும் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக ராகு காலத்தில்தான் செல்வோம்; ஏனென்றால், ராகுகாலத்தில்தான் கூட்டம் இருக்காது. மற்ற நேரங்களில் கூட்டம் இருக்கும்.
அந்த இணைய தளத்தில் பின்னே சொன்ன வீரமணி விவகாரத்திற்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?
விமலாதித்த மாமல்லன் என்கிற நரசிம்ம அய்யங்கார்
நண்பர்களே, விமலாதித்த மாமல்லன் தமிழன் அல்ல; இவருடைய சொந்த பெயர் என்ன வென்றால், நரசிம்ம அய்யங்கார். இவர் மத்திய அரசில் மிக முக்கியமான பதவியில் இருந்து கொண்டு, இந்தச் செயலை செய்கிறார் இணைய தளத்தில்.
ஆகவே, இவர்கள் மாதிரி இருக்கக்கூடிய பொறியாளர்களுக்கு, உங்களுடைய சொந்த வேலை மட்டுமல்ல; இந்த மாதிரி இருக்கக்கூடிய வந்த வேலை இருக்கிறது பாருங்கள், இன்றைய இளைஞர்கள் இணைய தளம் போன்றவைகளில் தங்களுடைய கவனத்தினை செலுத்தவேண்டும். எப்படி  மூட நம்பிக்கைகளை விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள். நேரடியாக நம்மை எதிர்க்க முடியாமல், அதனால் அவதூற்றினைப் பரப்புகிறார்கள். இதுபோல் எத்தனையோ செய்திகள் உண்டு!
எனக்கு தம்பியே கிடையாது!
எம்.ஜி.ஆர். அவர்கள் அரசாண்ட நேரத்தில், ஒரு பத்திரிகையாளர் எழுதினார்: வீரமணி அவர்கள் கூவம் காண்ட்ராக்ட் அவருடைய தம்பி பெயரில் எடுத்துக் கொடுத்தார் என்று.
எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை கேட்டார், என்னங்க, பத்திரிகையில் செய்தி வெளிவந் திருக்கிறதே என்று.
நீங்கதான் முதலமைச்சராயிற்றே, சம்பந்தப் பட்ட கோப்புகளையெல்லாம் நீங்கள் வர வழைத்துப் பாருங்கள்; அதுதான் மிக முக்கியம். இன்னொன்று, எனக்கு தம்பியே கிடையாது என்று சொன்னேன்.
பெயிலுக்கும்- - -ஜெயிலுக்கும் அலைகின்ற சங்கராச்சாரியார்!
இப்போது சமீபத்தில் வந்த செய்தி, வீரமணி யின் மனைவியாரும், கலைஞருடைய குடும்பத் தினரும் அடிக்கடி சங்கராச்சாரியாரை சந்தித் தார்கள் என்று செய்தி வெளிவந்தது.
நான் இதனை மறுத்து வழக்குத் தொடுத்தேன். வழக்கு நிலுவையில் இருக்கிறது.  நோட்டீசு அனுப்பினேன்; அதற்கும் எந்தவித பதிலும் இல்லை.
இந்த பெயிலுக்கும், ஜெயிலுக்குமாக அலைகிறார் பாருங்கள், அந்த சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியாருடைய நிலையே இப்படி இருக்கிறது என்றால், சாதாரண நரசிம்ம அய்யங்கார் ஏன் செய்யமாட்டார்?
கல்வி அறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
எனவேதான் நண்பர்களே, நீங்கள் பண் பாட்டுப் படையெடுப்பை மட்டும் அல்ல, தவறான பிரச்சாரத்தை எதிர்க்கக் கூடிய அளவில், இன்றைக்குப் பொறியாளர்களாக இருக்கக்கூடிய நம்மவர்கள், தங்களுடைய வாய்ப் பைப் பயன்படுத்தி, அறிவைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான வகையிலே அவர்கள் வாழ்வதற்கு, இந்தக் கல்வி அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
இவர்கள் நல்ல குடும்பம்; இரண்டு குடும்பமும் இணைந்திருக்கிறது. இவர்கள் வாழ்வாங்கு வாழக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்; பகுத்தறி வைத் துணைக் கொண்டவர்கள். நல்ல தமிழின உணர்வு கொண்டவர்கள். எனவே, ஒருவருக் கொருவர் புரிந்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கைநிறைய சம்பாதிப்பீர்கள்; மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வீர்கள்.
எல்லா மணவிழாக்களிலும் நான் சொல்வது போல, ஒரே ஒரு வேண்டுகோள்; அதுகூட அறிவுரை அல்ல; ஏனென்றால், இளைஞர்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வதில்லை. வேண்டு கோளாகத்தான் எல்லா மணவிழாக்களிலும் எடுத்துச் சொல்கிறேன்.
மணமக்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அந்த வேண்டுகோள் என்னவென்றால், யார் யாரெல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில் உதவி னார்களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். அந்த வரிசையில் முதற்கண் நீங்கள் நன்றி காட்ட வேண்டியது; மறக்காமல் பாசம் காட்டவேண் டியது உங்களுடைய பெற்றோர்களிடம்தான். அவர்களுடைய தியாகத்தினால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்; உயருகிறீர்கள். எனவே, பல குடும்பங்களிலேயே படிப்பு உயருகிறது; அதேநேரத்தில் பாசம் குறைகிறது என்கின்ற நிலை இருக்கக்கூடாது.
எனவே, உங்கள் குடும்பங்களிலேயே உங்கள் தாய், தந்தையருக்கு, உங்களை ஆளாக்கியவர் களுக்கு நீங்கள் என்றென்றைக்கும் நன்றி காட்டு பவர்களாக இருங்கள்.
அதற்கடுத்தபடியாக, உங்களுக்கு யார் உதவி செய்திருந்தாலும், அது தினையளவு இருந்தா லும், அதைப் பனையளவு நினைத்து நீங்கள் அதற்கு நன்றி காட்டுங்கள்; திருப்பி உதவி செய் யுங்கள்; அதன்மூலம் மகிழ்ச்சியை ஈட்டுங்கள்; இன்பத்தைப் பெறுங்கள், அதுதான் மிக முக் கியம்.
இல்லறம்- தொண்டறம்!
எனவே, ஒருவருக்கொருவர் புரிந்து, தொண்டறம் என்பது இல்லறம் - துறவறம் என்றுதான் பழைய காலத்தில் சொன்னார்கள்; பெரியார் காலத்தில்தான் அது மாற்றப்பட்டது. இல்லறம் - தொண்டறம் என்று. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்மு டைய மக்கள் என்ற பெருமைமிகு வாழ்வு வாழுங் கள்; நல்ல அளவிற்கு சமுதாயத்திற்குப் பயன் படுங்கள்; தொண்டு செய்யுங்கள். ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்து நீங்கள் வாழுங்கள்!
அண்ணா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்!
அண்ணா அவர்கள் சொன்னதைத்தான் எல்லா மணவிழாக்களிலும் எங்களைப் போன்ற வர்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்; விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்ப தில்லை எனவே, சிறப்பாக வாழுங்கள்; மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். நல்ல தொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லி, ஒரு மனதாயினர் தோழி, திருமண மக்கள் வாழி! என்று வாழக்கூடிய அந்த வகையிலே, நீங்கள் சிறப்பான வாழ்வு வாழுங்கள்.
உங்கள் பெற்றோர்கள் எல்லாம் எப்படி உயர்ந்து நல்ல தொண்டை, கல்வித் தொண்டை, அறிவுத் தொண்டை இங்கே செய்கிறார்களோ, அதுபோல, கழகத் தொண்டையும் நீங்கள் சிறப் பாக, பகுத்தறிவைத் துணைகொண்டு செய்யுங் கள் என்று சொல்லி,
இருபெரும் தலைவர்களுக்கும் வீர வணக்கம்
இந்த மண முறைக்கு, நாங்கள் யார் தலைமை தாங்கினாலும், யார் முன்னிலை வகித்தாலும், தத்துவ ரீதியாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை திருமணம் எங்கே நடைபெற்றாலும் தலைவர், முன்னிலை வகிப்பவர், இத்திருமண முறைக்கு சட்ட வடிவம் கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். எனவே, இருபெரும் தலைவர் களுக்கும் வீர வணக்கம் செலுத்தி, இங்கே இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் (தஞ்சை, 18.8.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Monday, August 26, 2013

பேச்சைவிட நடத்தைதான் முக்கியம்

பேச்சைவிட நடத்தைதான் முக்கியம்
தந்தை பெரியார்
மதச் சம்பந்தமானது என்றால் பலர் அது ஏதோ ரொம்பப் பெரிய சங்கதி; மாற்றக்கூடாத சங்கதி என்பதாகக் கருதுகிறார்கள், மாற்றப் பயப்படுகிறார்கள். மதம் என்றால் என்ன? மக்கள் சமுதாயத்துக்கு, மக்கள் வாழ்வுக்கு, மனிதர்களோடு மனிதர்கள் கலந்து வாழுவதற்கு என்னென்ன கோட்பாடுகள், கொள்கை, திட்டங்கள், நடப்புகள் வேண்டுமோ அதை ஒரு அமைப்பாக அமைத்துக்கொள்வதுதான் மதம் ஆகும். ஆனால் மக்கள் இதை ரயில் தண்ட-வாளத்-தைப்போல ஆக்கி, இதில் மாற்றங் கூடாது, சிந்திக்கக் கூடாது என்பதாக மூடத்தனத்தின் மீது ஏற்றிவிட்டதால் இப்போது மதம் என்றால் ஏதோ புரியாத பெரிய சங்கதியாகத் தோன்றுகிறது பலருக்கு. இப்படிப்பட்ட மக்கள் சமுதாயத்தின் வாழ்வு நடப்ப-மைக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, அப்படிப்பட்டதான ஓர் அமைப்பு ஏற்பட்ட காலத்தில் உலகம் எப்படி எந்த உருவத்தில் இருந்ததோ அதே உருவத்திலேயே, அமைப்பி-லேயே எல்லாக் காலத்துக்கும் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, தேவையுமில்லை, அதேபடி இருக்கவும் முடியாது. மனிதனின் எண்ணமும், படிப்பும், அறிவுநிலையும் அவனது ஆசாபாசமும், பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே தன்மையில் இருக்கவும் முடியாது.

ஆதாரத்தின் அடிப்படையில் மாற்றம் காண மனிதனுக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் நடப்பில் மாறுதல் ஏற்பட்டுத்தான் தீரும். ஒரு மதத்தில் சொல்லப்பட்ட ஒரு காரியத்துக்கு ஒவ்-வொருவரும் அவரவர்களுக்கு ஏற்ப, அவரவர்-களின் வசதி, தன்மை, நன்மைக்கு, எண்ணத்திற்கு ஏற்ற மாதிரியில் வியாக்கியானம், பொருள் செய்வதன் மூலமாக இந்த மாற்றங்கள் ஏற்படலாம். எல்லா மத மக்களிடமும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மதச்சார்-பான ஏட்டில், பாட்டில், அடிப்படையில் மாற்றம் இல்லாவிட்டாலும் வியாக்கியானத்தில், அவற்றுக்கு பாஷ்யங் கூறு-வதன்-மூலம் நடப்பில் இன்று மாறுபாடு காணமுடிகிறது. பல மதத்திலும் நாம் பார்க்கிறோமே, ஆதாரங்கள், அடிப்-படைகள் அப்படியே இருக்க வியாக்-கியானத்-தின்மூலம் நடப்பில் மாறுதல் காணுவதை, உதாரணம் வேண்டுமானால் பல மத வேத சாஸ்திரக் கருத்துகளையும் அந்த மத மக்கள் நடப்புகளையும் பாருங்கள்.

என்னிடம் பல பெரியவர்கள் பேசுகிற-போது பல தடவை கூறியிருக்-கிறார்கள். நீ சொல்கிற கருத்துகள் சரிதான், ஆனாலும் இந்தக் கருத்து-களை நீ சொந்தமாகச் சொல்கிறாயே என்றால் மக்கள் அவ்வளவு சீக்கிர-மாக ஏற்றுக் கொள்ள-மாட்டார்கள். ஆதலால் நீ இப்போது சொல்கிற இதே கருத்துகளை நீயே உன் சொந்தத்தில் சொல்கிறாய் என்பதாக இல்லாமல், பழைய கருத்துகளுக்கு மெருகு கொடுத்து மதச் சார்பில், மதக் கருத்துகளில் சொல்லப்படும் கோட்பாடு-களுக்-கு இதுதான் கருத்துப் பொருள், என்பதாக அர்த்தம் சொல்லிச், சொன்னால் மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார்கள். பலர் இந்தப்படிச் சொன்னார்கள். உலகத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரென்று சொல்லப்-படும் காந்தியாரே என்னிடம் இந்தப்படியாகக் கூறியிருக்கிறார். ஒரு ஆதாரத்துக்கு, பல வியாக்கியானம்-தான் ஒரு மதத்தில், பல கிளைகள் ஏற்பட்டதற்குக் காரணமாகும்.

மற்றும் நண்பர் ஆச்சாரியார் அவர்கள் ஒன்று சொன்னார், பேசுவதினால் எந்தச் சீர்திருத்தமும் செய்துவிட முடியாது; நடத்தை-யில் செய்யவேண்டும் என்று. அது ரொம்பவும் சரியான பேச்சு; இன்றைய நிகழ்ச்சிக்கு இது மிகவும் பொருத்தமான பேச்சு; ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் பேச்சைவிட நடத்தை-தான் முக்கியம். நபி அவர்கள் தாம் சொன்ன காரியங்களைத் தாமும் நடந்து காண்பித்தார். அதுவும் தம்மைப் பின்பற்றும் மக்கள் தம்முடைய வாழ்வுச் செயலுக்கு ஒரு முன்மாதிரியாக அவர் நடப்பைக் கையாளுகிற மாதிரியான தன்மையில் நடத்திக் காண்பித்தார். அதுவேதான் இன்று அந்த மக்களைப் பெரிதும் கட்டுப்படுத்தி ஆட்சி புரிகிறது. ஆகவேதான் அது மிகவும் பொருத்த-மானது என்று கூறுகிறேன்.

ஒவ்வொருவரும் தாங்கள் தங்கள் சங்கதிதான் பெரிது என்று மற்றவர்களை அடித்துப் பேசுவதில் பயன்இல்லை. நடத்தையில் அதைக் காண்பிக்கவேண்டும்.

நண்பர் ஆச்சாரியார் அவர்களும், நானும் ஒன்றாக, இந்தக் கூட்டத்தில் கலந்து-கொண்டோம். இதை நீங்கள் யாரும் தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. இரண்டு பேரும் ஒருவருக்-கொருவர் யாரும் மயங்கிவிடுகிறவர்கள் அல்ல. அவர், அவர் போக்கிலேயே இருப்பார்; அதே மாதிரி நானும் என் போக்கிலிருந்து மாறமாட்-டேன். ஏன் இதை இவ்வளவு தூரம் சொல்கிறேன் என்றால் நீங்கள் எங்களைப்பற்றிச் சந்தேகப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்-காகத்தான். நான் சாதாரண ஜனங்களைக் கட்டிக்கொண்டு அழுகிறேன். இந்தச் சந்திப்புக்கு எவனாவது ஏதாவது ஒரு உள் கருத்து கட்டிவிட்டால் அதை எளிதில் நம்பிவிடு-வார்கள்.
ஆனதால் இதில் உள் கருத்து ஒன்றும் இல்லை, மனிதத் தன்மை எங்களை இங்கு ஒன்று கூட்டி இருக்கிறது.

உள்ளபடி இந்த நாள் என்னால் மறக்க முடியாத ஒரு முக்கியமான விசேஷ நாள் என்றே சொல்வேன். இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்பட வேண்டும் என்று விரும்பு-கிறேன். அய்யா அவர்களும், (கனம் ஆச்சாரியார் அவர்களும்) நானும், இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்; ஒன்றாக எவ்வளவோ கஷ்டப்-பட்டோம்; பல ரகசியமான சங்கதிகள் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவ்வளவு தூரம் இணைந்து காரியமாற்றி யிருக்கிறோம். நடுவில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டதால் பிரிய-வேண்டியதாகி இரண்டுபேரும் வெவ்வேறு முனையில் பாடுபடுகிறோம். ஆனதினால் அப்படிப்பட்டவர்களை, இங்குச் சேர்த்திருப்பது ஒரு பெரிய காரியமல்ல.

அபிப்பிராய பேதத்தின் காரணமாக நாங்கள் இப்படி ஒருவருக்கொருவர் பிரிந்துவிட்டாலுங்-கூட எங்களுக்குள் இருந்த நட்பு இன்றுவரை ஒரு சிறிது கூட குறைந்துவிடவில்லை.

மற்றும் தோழர்களே! நீங்கள் இந்த உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். உங்கள் எதிரி இன்னார் என்று யாரையும் கருதிவிடா-தீர்கள்; அப்படிச் சொல்லவும் செய்யாதீர்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலுங்கூட மனிதத்-தன்மையோடு நடந்துகொள்ளுங்கள் என்று கூறிக்கொண்டு நபி அவர்களின் கருத்துகளில், கொள்கைகளில் உங்களுக்குச் சரியென்றுபட்ட-வற்றை மேற்கொள்ளுங்கள் என்று கேட்டுக்-கொண்டு முடித்துக்கொள்கிறேன்.

(20.12.1953 அன்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் நடைபெற்ற நபி பிறந்த தின விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.)

கலகலப்பாய் ஒரு கலகக்குரல்

மறக்கமுடியுமா?
கலகலப்பாய் ஒரு கலகக்குரல்
கவிஞர் நந்தலாலா


நடிகவேள் எம்.ஆர். இராதாவுக்கும், திருச்சிக்கும் ஏகப்பட்ட தொடர்பு உண்டு. தமிழக நாடக வரலாற்றில், ஒரு நாடகம் சற்றொப்ப 3500 முறை நடத்தப்பட்டது என்றால் அது எம்.ஆர். இராதாவின் இரத்தக் கண்ணீர் மட்டும்தான். அதுமட்டுமல்ல, அது நாடகமாக வந்து, திரைப்படமாக வந்த பிறகும், அது நாடகமாக நடிக்கப்பட்டது.

எம்.ஆர். இராதா நல்லவேளை திரைப்படங்-களில் நடித்தார். ஒருவேளை அவர் திரைப்-படங்களில் நடிக்காமல் போயிருந்தால் அவர் எப்படி நடிப்பார் என்று நமக்குத் தெரியாமல் போயிருக்கும். எம். ஆர். இராதா சொல்லும் போது, நான் ஒய்வு பெற்ற பிறகுதான் திரைப்படங்களுக்கு வந்தேன் என்றார்.எம்.ஆர். இராதா திரைப்படங்களை இளைஞர்கள் கூர்ந்து பார்க்க வேண்டும். சிவாஜிகணேசன் நடித்த படங்களில் இராதாவின் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். தமிழ்நாட்டின் கதாநாயகன்தான் உண்மை-யான தமிழ்ச் சமூகத்தின் வில்லன். தமிழ்ச் சமூகத்தின் நல்லவன்தான் உண்மையான தமிழ்ச் சமூகத்தின் கதாநாயகன். நீங்கள் தமிழ்த் திரைப்படங்களை தொடர்ந்து கவனித்து இருந்தால், கன்னட நாட்டில் பிறந்த நடிகை கண்ணாம்பாள் சுத்தத் தமிழ் பேசுவார். சிவாஜி கணேசன் ஏறக்குறைய கர்ஜனை செய்வார். எஸ்.எஸ். இராஜேந்திரன் தமிழ் ஏறக்குறைய வீணை வாசிப்பது போல சுத்தமாக இருக்கும். பி.எஸ்.வீரப்பா மீட்டர் கணக்கில் சிரிப்பார். தமிழ்த் திரைப்படங்கள் முழுவதும் தூய தமிழ் பேசிய போது, தமிழ்நாட்டின் ஒரே ஒரு தமிழ் நடிகன்தான் மக்கள் தமிழ் பேசினான்; கொச்சைத் தமிழ் பேசினான். இதிலிருந்து வரலாறு என்ன பதிவு செய்திருக்கிறது என்றால், திரைப்படங்களில் தூய தமிழ் பேசியவர்களால் சமூகத்திற்குப் பயன்ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கொச்சைத் தமிழ் பேசிய இராதாதான் தமிழரைச் சுத்தமாக்கினார் என்பது தமிழகத்தின் வரலாறு. எம்.ஆர். இராதா முன்னிறுத்திய அற்புதமான செய்தி என்னவெனில், அவர் கலையுலகில் ஒரு கலகக்குரல். நீங்கள் நன்கு பதிவு செய்து கொள்ளுங்கள். எம்.ஆர். இராதா தமிழ்ச் சமூகத்தின் கலகக்குரல், அல்லது கலகம் செய் என்று சொன்னவர். உண்மையிலேயே ஒரு பெயரைச் சொன்னால் இந்த நாடு அதிர்ந்தது என்று சொன்னால், அது எம்.ஆர். இராதாவின் பெயர்தான்.எம்.ஆர். இராதாவைப் போல பிம்பங்களை உடைத்தவர் நாடக உலகிலும், திரையுலகிலும் எவருமே இல்லை, வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் அவர் நடித்த காட்சியை, அவர் பாடலைக் கேட்டுப் பாருங்-கள். ஓர் ஆழ்ந்த கலகம் அவரின் நடவடிக்கை முழுவதும் இருந்தது. அதே போல அவரிடம் இருந்த துணிச்சலும் அற்புதமானவை.

இன்றைக்கு இராமர் பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எந்தப் பாதுகாப்பும் இல்லாத ஒரு கலைஞனாக இருந்த இராதா திருச்சியில்தான் நாடகம் போட்டார் தேவர் மன்றத்தில். மன்றத்திற்கு வெளியே ஒரு சுவரொட்டியும் ஒட்டினார். அதில் உள்ளே வராதே என எழுதியிருந்தார். என் நாடகத்தைப் பார்த்து யாருக்காவது மனம் புண்பட்டால் அவர்கள் என் நாடகத்திற்கு வரவேண்டாம் எனக் கூறியிருந்தார். இது எவ்வளவு பெரிய மேதைமை தெரியுமா! எம்.ஆர். இராதாவுக்கு இராமன் என்கிற சித்திரத்தின் பிம்பத்தைத் தூளாக்க வேண்டும். எப்படி ஆக்குவது மணிக்கணக்காகப் பேசியா? அது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதைப் பேச்சாளர் பேசிவிட்டு போயிடுவார். கலைஞனுக்கு அது தேவையில்லை. நீங்கள் இராதாவைநுட்பமாகக் கவனிக்க வேண்டும். நாடகமேடையில் இராமாயண நாடகத்தின் போது, 2 பக்கமும் இராமாயணம் தொடர்பான ஆராய்ச்சி நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார். இந்த நாடகத்தில் வருகிற காட்சிகள் மீது சந்தேகம் வந்தால் இந்தப் புத்தகங்களில் அதற்கு பதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நாடகம் போடுகிறார். இன்றைக்கு பிம்பங்களை உடைப்பது தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. சாதாரண சிறிய நடிகர் கூட பெரிய பிம்பத்தை வைத்திருக்கிறார். ஆனால் எம்.ஆர். இராதா பிம்பங்களை உடைக்கும் அற்புதமான காரியங்களைச் செய்தார்.ஒரு சமயம் இரத்தக் கண்ணீர் நாடகத்தைத் திரைப்படமாக்க வேண்டுமென நேசனல் பிக்சர்ஸ் பெருமாள் எம்.ஆர். இராதாவிடம் வருகிறார். எம்.ஆர். இராதா 5 திரைப்படங்களில் நடித்து முடித்து-விட்டு மீண்டும் நாடகத்தில் நடிக்க வந்தவர். பொதுவாக நாடகத்தில் நடித்தவரெல்லாம் திரைப்படத்திற்குப் போனதுதான் வரலாறு. ஆனால் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து, நாடகத்திற்கு வந்த ஒரே கலைஞர் எம்.ஆர்.இராதாதான். மறந்துவிடக் கூடாது!

இரத்தக் கண்ணீரைத் திரைப்படமாக்க வேண்டும் என பெருமாள் சொன்னபோது, எம்.ஆர். இராதா 3 நிபந்தனைகளை வைக்கிறார். ஒன்று, தினமும் நாடகம் நடத்தி முடித்து, இரவு 12 மணிக்கு மேல்தான் படத்தில் நடிக்க வருவேன். இரண்டு இரத்தக் கண்ணீர் நாடகத்தின் இறுதியில் தன் மனைவியை தன் சகநண்பனுக்குத் திருமணம் முடிப்பதை கண்டிப்பாய் காட்சியில் இடம் பெறச் செய்ய வேண்டும். மூன்றாவதாக எனக்கு ஊதியமாக 1,25,000 வேண்டும் என்றார். நாடகக் கலைஞனாக இருந்து உச்சநிலையில் இருந்தவர் அவர்.

இராமயண நாடகத்தில் இராமனாக வேடம் போட்டு முதல் காட்சியில் வெளிவருகிறார் எம்.ஆர்.இராதா. வந்ததும் என்ன செய்கிறார் தெரியுமா? ஒரு தூண் மீது கால்களை வைத்துக் கொண்டு சரக், சரக் என சொறிகிறார். பொதுவாக ரசிகர்கள் இப்படி சொறிகிறவர்-களை கதாநாயகர்களாக ஏற்க மாட்டார்கள். ஏன்னா சொறிந்து கொண்டு நிற்பதெல்லாம் சாதாரண ஒரு மனிதனின் வேலை. அப்படி ஒரு கதாநாயகனே சொறியாமல் இருக்கும் போது ஒரு கடவுள் சொறிவாரா? சொறிய முடியாத கடவுளை எல்லாம் சொறிய வைத்தவர் எம்.ஆர். இராதா. மறந்துவிடக் கூடாது! இந்தப் பிம்பங்களை உடைத்தெறிவது என்பது இராதாவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அவர் சிறுவயது முதலே கலக்காரராகவே இருந்து வந்துள்ளார். டி.ஆர். மகாலிங்கத்தோடு எம்.ஆர்.இராதா சிறுவயதில் நடிக்கிறார். அப்பவெல்லாம் நாடகக் கொட்டகைகளில் பார்ப்பன சிறுவர்களுக்கு ஒரு பந்தி, மற்றவர்-களுக்கு ஒரு பந்தியும் இருந்தது. ஏன் நம்ம கூட இவங்க சாப்பிட மறுக்கிறார்கள்? என இராதா யோசனை செய்கிறார். ஒருமுறை டி.ஆர். மகாலிங்கத்திற்குக் கொடுத்த காபியை எடுத்து பாதி குடித்துவிட்டு, பாதி வைத்து விடுகிறார். அந்தக் காபியை டி.ஆர். மகாலிங்கம் குடித்து-விட்டு உயிரோடு இருப்பதை இராதா பார்க்கிறார். நாம் சாப்பிட்டதை இவர் சாப்பிட்டார் ஒன்றும் ஆகவில்லையே, பிறகு ஏன் ஒன்றாகச் சாப்பிட மறுக்கிறார்? என அவரே பின்னாளில் எழுதினார்.

அன்றைய நாள்களில் நாடகங்கள் தொடங்கு-வதற்கு முன்னால் ஜெனரேட்டருக்கு தீபாரா-தனை காட்டி, சூடம் கொளுத்துவார்கள். அப்படித்தான் நாடகக் கொட்டகை உரிமையாளர் ஒருவர் தீபமெல்லாம் காட்டி-னார். ஆனால் ஜெனரேட்டர் ஒடவில்லை. எம்.ஆர். இராதா ஒரு கார் மெக்கானிக் மற்றும் நல்ல எலக்ட்ரீசியன். நாடகக் கொட்டகை உரிமையாளர் இராதாவிடம் வந்து, ஜெனரேட்ட-ரைச் சரி செய்து தரும்படி கேட்கிறார். -உடனே எம்.ஆர். இராதாவும், சிறிது நேரத்தில் சரி செய்துவிடுகிறார். சரி செய்து விட்டு கொட்டகை உரிமையாளரிடம் சென்று உங்க செருப்பைக் கொஞ்சம் கொடுங்கள் எனக் கேட்கிறார். எதுக்கு? என அவர் கேட்கிறார். இல்லை கொடுங்கள் எனக் கேட்டு வாங்கி இராதா, ஜெனரேட்டரை செருப்பா-லேயே அடிக்கிறார். அடித்துவிட்டு உரிமை-யாளரிடம், இப்போ ஜெனரேட்டரைப் போடுங்கள் என்கிறார். ஜெனரேட்டர் ஓடத் தொடங்கியது. எம்.ஆர். இராதா சொன்னாராம் ஜெனரேட்டர் தீபம் காண்பித்தாலும் ஓடும், செருப்பால் அடித்தாலும் ஓடும் என்றாராம்.

அதேபோல போர்வாள் எனும் நாடகத்தை எழுதிய சி.பி. சிற்றரசை சிலர் பொதுமேடையில் கிண்டல் செய்தனர். எந்த ஊருக்கு சிற்றரசு எனக் கேட்டனர். உடனே இராதாதான் இவர் நாடகத்தில் பதில் சொன்னார். இராஜ-கோபாலாச்சாரியார் என்பவரைச் சக்கரவர்த்தி என்றும் அழைப்பார்கள். அவர் எந்த ஊருக்கு சக்கரவர்த்தியோ, அதற்குப் பக்கத்து ஊருக்குத் தான் எங்காளு சிற்றரசு எனப் பதில் சொன்னார். எம்.ஆர். இராதா குறித்து சிவாஜி ஒருமுறை கூறினார். திரையுலகில் என் முகத்திற்கு அருகே வேறொரு நடிகரின் முகம் வருகிறது என்றால் அதைக் கண்டு அஞ்ச-மாட்டேன். அண்ணன் இராதாவின் முகம் வந்தால் நான் எச்சரிக்கையாக இருப்பேன் என்று சொன்னார்.

பத்திரிகைக்காரர் ஒருவர் இராதாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இவ்வளவு அற்புதமாக நடிக்கின்றீர்கள், துணிச்சலாக இருக்கின்றீர்கள், இந்நிலையில் நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்-டால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்கிறார்.

இராதா சொல்கிறார், இப்படிக் கேள்வி கேட்பவரையெல்லாம் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிவிடுவேன் என்கிறார். என் பிழைப்பு நடிப்பு. உடனே முதலமைச்சர் ஆகிவிட முடியுமா? என்றும் கேட்டார். இன்றைக்கு நடிகர்கள் எல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து-விட்டார்கள். ஒருமுறை பெருந்தலைவர் காமராசர் எம்.ஆர்.இராதாவைப் பிரச்சார பணிக்கு அழைக்கிறார். இராதாவும் ஒப்புக் கொள்கிறார். உடனே இராதாவின் பிரச்சாரச் செலவு-களுக்காக காமராசர் ரூ.10,000 பணத்தை அவரின் வீட்டிற்கு கொடுத்துவிடுகிறார். ஆனால் இராதா பணத்தை வாங்க மறுத்து-விட்டார். அப்போது இராதா சொன்னார். பணத்தை வாங்கிக் கொண்டுதான் பேசுவதாக இருந்தால், இதைவிட அதிக பணம் வைத்-துள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு பேசியிருப்பேன் எனச் சொல்கிறார்.

பிறகு சொன்னார் பெரியார் ஆதரிக்கிறார் என்கிற ஒரே காரணத்திற்காக நானும் ஆதரிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. இதைப் பெருந்தலைவரிடம் சொல்லிவிடுங்கள் எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து-விடுகிறார். இதைக் காமராசரிடம் சொன்ன போது தமிழ்நாட்டில் பெரியாரைப் போன்ற தலைவர்கள் இருப்பது மிகுந்த பெருமைக்-குரியது. ஏனெனில் இராதா போன்ற தொண்டர்கள் வேறு யாருக்குக் கிடைத்-திருக்கிறார்கள் என காமராசர் சொன்னார்.

உதகையில் ஒருமுறை திரையரங்கப் படப்பிடிப்பு நடக்கிறது. வேடிக்கை பார்க்க மக்கள் திரளாகக் கூடிவிட்டனர். அப்போ ஒரே சத்தமாக இருக்கிறது. உடனே எம்.ஆர். இராதா என்ன சத்தம்? எனக் கேட்கிறார். நடிகர்களைப் பார்க்க மக்கள் கூட்டமாக வந்துள்ளனர் எனச் சொல்கிறார்கள். உடனே எம்.ஆர்.இராதா அணிந்திருந்த டிராயருடன் வெளியே வருகிறார்.

எம்.ஆர்.இராதா கூட்டத்தினரிடம் கேட்-கிறார், எல்லோரும் எங்க வந்தீங்க? ஒருவர் சொன்னார், நடிகர்களைப் பார்க்கத்தான் வந்தோம் என்கிறார். எல்லோரும் என்னை மாதிரிதான் உள்ளே இருக்காங்க. இப்ப நான், அசிங்கமாக இருக்கிறேனே அதே போல்தான் எல்லோரும் இருக்காங்க. ஏய்! தெரிஞ்சுக்க மேக்கப் போட்டாதான் நல்லா இருப்பாங்க, இல்லைன்னா உங்களைவிட அசிங்கமா இருப்பாங்க எனச் சொல்லி மக்கள் கூட்டத்-தைக் கலைத்துவிட்டார். ஆக, நடிகன் என்கிற பிம்பத்தை உடைத்தார். அதே போல தலைவர்கள் என்கிற பிம்பத்தைத் தூளாக்-கினார். ஆனால் நல்ல விசயத்தைக் கொண்டாடியதில் இராதா மிகச் சிறந்த கலைஞன். என்.எஸ்.கே இறந்து போகிறார். இராதாவுக்குச் செய்தி வருகிறது. இவரும் போகிறார். அங்கு என்.எஸ்.கே நெற்றியில் விபூதி பூசப்பட்டுள்ளது. அதைக் கண்ட இராதா வருத்தப்படுகிறார். எவ்வளவு பகுத்தறிவு பேசிய கலைஞன்! அவருடைய நெற்றியில் திருநீறா? எனக் கவலைப்பட்ட இராதா நேராக வீட்டில் உள்ளவர்களிடம் எடுத்துச் சொல்லி விபூதியைத் துடைத்து-விட்டு, சவ ஊர்வலத்தை முன்னின்று நடத்தி-னார். அதே போல இசை மேதை இராஜரத்-தினம் இறந்த போது தன்னுடைய காரில் ஏற்றி இடுகாடு வரை சென்று சவஅடக்கம் செய்தது மட்டுமல்ல, இராஜரத்தினம் எந்த இசைக் கருவியின் மூலம் தமிழ்நாட்டில் புகழ்-பெற்றாரோ, அந்த நாதஸ்வரத்தை 43 அடியில் செய்து அவரின் சமாதியில் வைத்தவர் எம்.ஆர்.இராதா என்பதை யாரும் மறந்து-விடக்கூடாது.

ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார். நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000 சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார்.

உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார்.

உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன் கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று கூறுகிறார். இப்படி நடிகர்களை விமர்சித்த பெரியார் தம் வாழ்வில் ஒருவருக்கு மன்றம் அமைத்தார் என்றால் அது எம்.ஆர்.இராதாவுக்குத்தான். பெரியாரே முன்னின்று இராதா மன்றம் என்ற ஒன்றை அமைத்தார். வி.பி.சிந்தன் எதிரிகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் கிடந்த போது, எம்.ஆர். இராதாவும் மருத்துவ-மனையில் இருந்தார். நடிப்பை விட்டுவிட்டு என்னுடனே இருக்கின்றீர்களே என வி.பி. சிந்தன் கேட்ட போது இராதா சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள். உங்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அருகிலேயே இருந்தார். வாழ்வில் தாம் நேசித்த எல்லா பகுதிகளையும் அப்பழுக்கற்ற முறையில் நேசித்தவர் இராதா. 1907 இல் ஓர் ஏப்ரல் மாதம் சென்னையில் எம்டன் குண்டு வெடித்த-போதுதான் இராதா பிறந்தார். பெரியார் எறிந்த ஒரு அற்புதமான எம்டன் குண்டு எம்.ஆர். இராதா சமூகத்தின் மூடத்தனங்களை, அழுக்குகளை, ஜாதியத்தை, மேலாதிக்கங்களை எதிர்க்க பெரியாரிடம் இருந்த அற்புதமான ஆயுதம் அவர். தம் வாழ்வின் முழுதும் சமரசம் செய்து கொள்ளாத, மனதில் பட்டதை வெளிப்-படையாகச் சொன்ன இராதாவைப் போன்ற கலைஞர்கள் தமிழ்நாட்டிற்கு நிறையத் தேவைப்-படுகிறார்கள்.