Total Pageviews

Monday, April 7, 2014

மோடிமஸ்தான் பராக்! பராக்!!


மோடியைப் பிரதமருக்கான வேட் பாளராக முன்னிறுத்துவோர் யார்?
பார்ப்பன பனியா கூட்டம்தான் இதன் பின்னணியில் இருக்கிறது.

பார்ப்பனர் கூட்டம் பின்புலத்தில் ஏன் இருக்கிறது? இந்துத்துவா கொடியைப் பறக்க விட மோடியால் தான் முடியும் - இந்துத்துவா கொடி ஏறினால்தான் மனுதர்ம சாம்ராஜ்யம் உருவாகும்.

மனு தர்மம் வந்தால்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்ததாகக் கூறி வந்தார்களே, அப்படி பிறந்த பிராமணர்களுக்காகத்தான் இந்தப் பூலோகமே படைக்கப்பட்டது என்று நம்பப்பட்டதே, அந்தப் பொற்காலம் பூக்க வேண்டும் என்பதிலே பூதேவர் களான பார்ப்பனர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள்!
நரேந்திரமோடி பார்ப்பனர் அல்லவே; - அப்படி இருக்கும் பொழுது அவரை ஏன் ஆரியம் தூக்கிப் பிடிக்கிறது என்ற கேள்வி எழுலாம்.

இந்த இடத்தில்தான் ஆரியத்தின் தந்திரப் பொறி வஞ்சகமாக ஒளிந் திருக்கிறது.

பார்ப்பனராக இருந்து ஒருவர் அதனைச் செய்யும்போது அது எளிதில் அம்பலப்படுத்தபட்டு விடும்.

பார்பார், பார்ப்பனப் புத்தியை! பார்ப்பன உணர்வோடு செயல்படும் சூழ்ச்சிகளைப் பாரீர் பாரீர்! என்ற எளி தாக பொது மக்களை பார்ப்பனர் களுக்கு எதிராகக் கிளப்பிவிட முடியும்.

அதே வேலையை மோடியைப் போன்ற பார்ப்பனர் அல்லாதார் செய் யும்போது அப்படி ஒரு குற்றச்சாற்றை எளிதில் வைக்க முடியாதல்லவா! உணர வைப்பது எளிதல்லவே!

அப்படியே குற்றம் சொன்னாலும் அந்த இடத்தில் பார்ப்பனர் இருக்கும் பொழுது வைக்கப்படும் குற்றச்சாட்டு அளவுக்கு வலிமை பெறாது!

இந்த தந்திரம் தான் மோடியை முன்னிறுத்துவதில் இருக்கக் கூடியதாகும்.

தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்களே நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகமாக குதிக்கும் என்று; தான் உண்மையான புலியல்ல என்று வேஷம் போட்ட புலிக்குத் தெரியும். ஆகையால், நம்மை சந்தேகப்படுவார்களே என்ற எண்ணத்தால் அதிகமாகக் குதிக்கும்.

மோடியும் அப்படிதான் நடந்து கொண்டு வருகிறார்; பிராமணர் நம் சமூகத்துக்கு எவ்வளவோ சாதித்துக் கொடுத்திருக்கிறார்கள் என்றுகூட சொன்னதுண்டு.

பிரதமர் நாற்காலியில் அமரும் ஆசை மோடிக்கு அதிகமாகவே இருக்கிற காரணத்தாலும், பார்ப்பனர்கள் பனியாக்கள் கைகளில் தான் ஊடகங்களும், பண பலமும் இருக்கிற காரணத்தாலும் இவர்களைச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளும் யுக்தியும் மோடிக்கு உண்டு.

ஆக ஒருவர் இன்னொருவரால் பயன் அடையும்போது,  அதற்கான திட்டங்களும் செயல் முறைகளும் உருவாகத்தானே செய்யும்.

அதுவும் மோடி இருக்கிறாரே மோசடியான திட்டங்களை உருவாக்குவதில் மிகவும் கில்லாடி! செயற்கையாக, தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டும் வேலைகளைச் செய்வதில் கை தேர்ந்தவர். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம்  பேர்  இணைந்திருக் கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில், ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இது குறித்து ஆய்வு  செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலிப் பயனா ளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்கா ளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம்  பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.
மோடியின் டிவிட்டர் கணக்கு 2010 ஆம்  ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011 ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள்  இணைந்திருப்ப தாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டு மொத்த பா.ஜ.க.வுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

மகா மகா யோக்கியர் - நாணயமான வர் திருவாளர் பரிசுத்தம் என்பது போன்ற ஒரு தோற்றத்தையும் உரு வாக்க பல திட்டங்களைக் கையில் வைத்துள்ளார்.
இவரது புகழ் உலகெங்கும் பரவி யிருப்பது போல பிரச்சாரம் செய் கின்றனர்.

அதுவும் சமீபத்தில் சாயம் வெளுத்துப் போய்விட்டது.

அமெரிக்காவின் சிகாகோவிலி ருந்து தொழில் அதிபர்கள் சிலரும் எம்.பி.க்கள் சிலரும் மோடியைச் சந்திக்க வந்தனர் - அழைப்புக் கொடுத் தனர் என்று ஒரு கதையைக் கட்டி விட்டனர்.

உண்மை என்னவென்றால் மோடியைச் சந்திக்க வந்தவர்கள் அல்லர் அவர்கள். சுற்றுலாப் பயணி களாக வந்தவர்கள் அதற்காக அவர்களிடமிருந்து பணமும் வசூலிக் கப்பட்டது. இந்த விவரங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன.

அமெரிக்கா தொடர்ந்து மோடிக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது, பிரிட்டனும் அந்த நிலையில் தான் இருக்கிறது.

உள்ளூரிலேயே டெல்லி பல்கலைக் கழகத்தில் பேசச் சென்றபோது மாண வர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். கொல்கத்தாவில் தொழில் அதிபர் கூட் டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். குஜராத் முதல் அமைச்சர் மோடி என்று முதல் நாள் செய்தி வருகிறது.

அந்த இடத்தில் தொழில் அதிபர் கள் கூட்டத்தை நடத்திட மம்தா அரசு அனுமதி மறுத்தது என்ற செய்தி வருகிறது.

உள்ளூரிலேயே விலை போகாத ஒன்றாக ஆகி விட்டார்.

இதுதான் உண்மையான நிலை ஊழலை ஒழிப்பதில் உத்தமர் என்று சொல்லுகிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்படும் லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ஏன் மோடி தயங்க வேண்டும்?

அதற்குரிய நீதிபதியை நியமிப்பதில் ஏன் கால தாமதம் செய்ய வேண்டும்?.

நீதிபதியை நியமிக்க மோடி முன்வராத நிலையில் ஆளுநரே அதற்கான நீதிபதியை நியமித்தபோது அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வர்தானே இந்த யோக்கிய சிகா மணியான குஜராத் முதல் அமைச்சர் மோடி! அதிலும் தோல்வியை வாங்கிக் கட்டிக் கொண்டார் என்பதுதான் பரிதாபம்!

இப்பொழுது தனக்குத்தானே ஒரு லோக் அயுக்தாவை ஏற்படுத்திக் கொண்டார்.

குஜராத்
 
குஜராத் சட்டசபையில், ஊழல் களை கண்காணிக்கும் அமைப்பான, புதிய லோக் ஆயுக்தா மசோதா, காங் கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

குஜராத்தில், முதல்வர் தலைமை யிலான தேர்வுக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான லோக் ஆயுக்தா சட்ட திருத்த மசோதா, ஆளுநர் கமலா பெனிவாலின் பரிந் துரைக்காக, மாநில அரசு, கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன், அனுப்பியது. ஆனால், இதனை நிராகரித்த ஆளு நர், லோக் ஆயுக்தாவின் தலைவராக, நீதிபதி மேத்தாவை நியமித்தார்.

இதனை, குஜராத் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவையும் உறுதிபடுத்தின. லோக் ஆயுக்தா நீதிபதி தீர்ப்பே இறுதியானது என, உச்சநீதிமன்றமும் கூறியது. இந் நிலையில், மாநில முதல்வர் தலைமையிலான தேர்வுக் குழுவிற்கு அதிகாரமளிக்கும், சர்ச்சைக்குரிய புதிய லோக் ஆயுக்தா மசோதா, குஜராத் சட்டசபையில்,  பலத்த எதிர்ப்புக் கிடையே நிறைவேறியது.

தற்போதுள்ள லோக் ஆயுக்தா சட்டம் 1986இன் படி, மாநில ஆளுநர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரது அதிகாரங்களைக் குறைத்து, நிறை வேற்றப்பட்டுள்ள இந்த மசோதா வலுவற்ற ஒரு அமைப்பாகும் என, சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

குஜராத் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா கூறுகை யில், ""மாநில அரசின் ஊழல்களை, நீதிபதி மேத்தா அம்பலப்படுத்தி விடுவார் என்று நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயப்படுகிறது,'' என்றார். இந்தியாவுக்குப் பிரதமராகத் துடிக்கும் பேர் வழியின் முகவிலாசம் இதுதான்.

இப்பொழுது சி.ஏ.ஜி. ஒரு புதுக்கரடியை அவிழ்த்து விட்டுள்ளது. மோடி ஆட்சியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பதுதான் அந்தக் கரடி!

அந்தோ பாவம் நரேந்திர மோடி!

Thursday, April 3, 2014

மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேசுகிறாரா விஜயகாந்த்?தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் பெரியார் என்றால், அது தந்தை பெரியார். குஜராத்தில் வெண்தாடி வேந்தர் மோடிதான்!

- இப்படிப் பேசி இருக்கிறார் சினிமா நடிகர் விஜயகாந்த்.

அரசியலிலே நிதானமின்றி அவர் எப்படி யாவது உளறித் தொலைக்கட்டும்!

சமுதாயப் புரட்சி வீரரான ஒரு சகாப்த தலை வர்பற்றி வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கலாமா?

பாலும், நஞ்சும் ஒன்று என்று பேசலாமா?

கோட்சேயும், காந்தியும் ஒன்றே என்று கூறலாமா?

எலியும், பூனையும் இணையற்ற நண்பர்கள் என்று உளறலாமா?

பெரியார் யார்?

பேதங்கள் எந்த வடிவில் இருந்தாலும், அவற் றைப் பூண்டற்றுப் போகச் செய்யவேண்டும் என்று வெடித்துக் கிளம்பிய புரட்சியாளர் அல்லவா!

மனிதநேயத்தை வளர்த்த மாமனிதர் அல்லவா!

யானைக்கு மதம் பிடித்தாலும் சரி, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் சரி, இரண்டும் ஆபத்தே என்று அறிவுறுத்திய அறிவுலக ஆசான் அல்லவா பெரியார்!

அவரைப் போய் நரவேட்டை மனிதன் நரேந்திர மோடியுடன் ஒப்பிடலாமா?

மதவெறியர் மோடி! மனித நேயர் பெரியார்!

மனநோயாளிகளைத் தவிர இவ்விருவரையும் வேறு யாரால் இப்படி ஒப்பிட முடியும்?

இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகவிருந்த ஹிட்லர் அல்லவா இந்த மோடிமஸ்தான்!

மதவெறிக் கலவரத்தில் மருண்டு உயிருக்குப் பயந்து முகாம்களில் பதுங்கிக் கிடந்த முஸ்லிம் களைப் பார்த்து குழந்தை உற்பத்தி வேலையில் இறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஈவிரக்க மற்ற முறையில் விமர்சித்த விஷமத்தின் ஊற்றுக் கண்ணல்லவா மோடி!

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்துக் கள்  அலிகள் அல்ல - ஆண்மை மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என்று காட்டுமிராண்டிக் கருத்தை உதிர்த்த மோடி எங்கே?

சமூகநீதியின் தந்தை பெரியார் எங்கே?

சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பி.ஜே.பி.யின் பிரதிநிதி யல்லவா மோடி எங்கே?

உலக மக்களை எல்லாம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற பார்வையில் பார்த்து மனித நேயத்தையும், பகுத்தறிவையும் போதித்த புத்தரின் மறுவடிவமாம் தந்தை பெரியாரை விளையாட் டுக்குக்கூட இப்படி ஒப்பிட்டுப் பேசலாமா?

நிதானம் இழந்து பேசும் விஷம விளையாட்டு வேலைகளையெல்லாம் அரசியலோடு நிறுத்திக் கொள்ளட்டும்! கருஞ்சட்டைப் படையினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.
 
ஏன்?  தந்தை பெரியார்பற்றி பொறுப்பற்றுப் பேசுவதை தமிழ்நாட்டு மக்களே பொறுத்துக் கொள்ளமாட்டார் கள். பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சு! அடக்கப்பட்ட மக்களுக்காக பொங்கி எழுந்த அரிமா!

சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும் வித்தி யாசம் தெரியாத வெண்ணெய் வெட்டி வீரர் கள் விபரீதத்தை ஏற்படுத்தும் வார்த்தை களைக் கொட்டவேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

பெல் ஒப்பந்தத் தொழிலாளர்: வரவேற்கவேண்டிய தீர்ப்பு

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணி யாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்த ஒரு தீர்ப்பை மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் வழங்கியுள்ளார். 1978 ஆம் ஆண்டு முதல் பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

அவர்களிலே பட்டதாரிகள் உண்டு, பட்டயப் படிப்புப் படித்தவர்கள் உண்டு. எத்தனை ஆண்டுகாலம் பணியாற்றி னாலும் அவர்கள் தினக் கூலிகள் போலத்தான் - பணி நிரந்தரப்படுத்தப்படுவதில்லை; 58 வயது  முடிந்தவுடன், எந்தவிதமான பலன்களுமின்றி வெறும் கையோடு வெளியே போகவேண்டியதுதான்.

துப்புரவுப் பணியிலிருந்து அந்த நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்யாத வேலையில்லை; தொழில் நுட்பம் தொடர்பான பணிகளாக இருந்தாலும் அவை அவர்களுக்கு அத்துப்படியே!

வேலையை வாங்கிக்கொள்வார்கள் - ஆனால், வேலைக்குரிய அங்கீகாரம் மட்டும் அளிப்பதில்லை. காரணம், அவர்களில் எவரும் உயர்ஜாதிக்காரர்கள் கிடையாதே!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்தான் நூற் றுக்கு நூறு சதவிகிதமாகும். அதனால் பெல் நிறுவனத்தின் உயர்ஜாதி ஆளுமை அவர்களை அலட்சியப்படுத்தி வந்தது.

திராவிடர் கழகம் - அதன் பெல் தொழிலாளர் கழகம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து இந்த ஒடுக்கப் பட்ட நாதியற்ற மக்களின் அடிப்படை உரிமை களுக்காகக் குரல் கொடுத்தே வந்திருக்கிறது; தேவைப்படும்பொழு தெல்லாம் போராட்டங்களையும் நடத்தியிருக் கிறது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையிலும்கூட ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், அரித்துவாரில் இயங்கிவரும் இதே பெல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 557 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பெல் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங் களிலும் இயங்கி வருகிறது. ஒரே அமைப்பின்கீழ் இயங்கும் நிறுவனம், இடத்திற்கு ஏற்ப விதிகளை மாற்றிக் கொள்ள முடியுமா? அப்படி மாற்றிக் கொண்டு செயல்பட்டு இருக் கிறது என்றால், அது ஒரு வகையான ஒழுங்குக் குறைவான நிர்வாகச் சீர்கேடு என்றே கருதப்படவேண்டும்.

ரயில்வேயில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலா ளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டும் உள்ளனர். நீண்ட போராட் டத்திற்கும், வேலை நிறுத்தத்திற்கும் பிறகு நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம் நடந்தாலும் திருவெறும்பூர் பெல் நிறுவனம் மட்டும் சற்றும் அசைந்து கொடுக்காமல் இடித்த புளிபோலவே இருக்கும்.

இதற்கு முடிவுகட்டும் வகையில் சட்ட ரீதியாகச் செயல் படுவது என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தீர்மானிக்கப்பட்டு, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் இயங்கிவரும் பெல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், அதன் பொதுச்செயலாளர் தோழர் மு.சேகர் மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடர்ந் தார். திராவிடர் கழக சட்டத் துறைத் தலைவர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் சங்கத்தின் சார்பில் வாதாடினார்.

நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திலும், அரித்துவார் பெல் நிறுவனத் திலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டுள் ளதைச் சுட்டிக்காட்டி, திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தவேண்டும் என்று சிறப்பான தீர்ப்பினை அளித்தார் (28.2.2014). தீர்ப்புக் கிடைத்த எட்டு வாரங்களுக்குள் ஆணை நிறைவேற்றப்படவேண்டும் என்றும் நீதிபதி, தம் தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.

பெல் நிறுவனம் இந்தத் தீர்ப்பை செயல்படுத்தியே தீர வேண்டும். பொதுவாக தொழிலாளர்கள் - பணியாளர் களுக்குச் சாதகமாக தீர்ப்பு வரும்பொழுதெல்லாம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்து, காலம் கடத்துவதை வழமையாகக் கொண்டது திருவெறும்பூர் பெல் நிறுவனம். அவர்கள் செலவு செய்வது சொந்தப் பணம் அல்லவே - நிறுனத்தின் பணம்தானே! தொழிலாளர்கள், பணியாளர்கள் நீதிமன்றம் செல்லவேண்டுமானால், அவர்கள் சொந்தப் பணத்தையல்லவா செலவழித்துத் தீரவேண்டும்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கி செயல் பட்டுக் கொண்டிருக்கிறது பெல் நிர்வாகம். இந்தப் பிரச் சினையிலும் அவ்வாறு நடந்துகொள்ளாது என்று எதிர்பார்க்கிறோம்.

இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் ஒன்று பெல் நிறுவனம். இலாபத்தைத் திரட்டிக் கொடுக்கிறது; அந்த இலாபத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் பங்கு இருக்கிறது என்பதை மனிதாபிமானத் துடன் ஒப்புக்கொண்டு, நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை யைச் செயல்படுத்தி, சுமூகமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் திராவிடர் தொழி லாளர் கழகமும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் வெறும் கூலி தொடர்பான சமாச்சாரங்களுக்காக மட்டும் குரல் கொடுக்கும் அமைப்புகளாக இல்லாமல், தொழிலாளர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பையும், பகுத்தறிவு உணர்வையும் வளர்த்தெடுக்க அயராது பாடுபட்டுக் கொண்டுவரும் அமைப்புகளாகும்.

மதவாத சக்திகள் வாய் பிளந்து, அதற்குத் தொழிலா ளர்கள் பலியாகி விடக் கூடாது என்பதற்காக எப்பொழு துமே விழிப்போடு பணியாற்றும் அமைப்பாகும்.

அந்த வகையில் கழகத்தின் இந்த அமைப்புகளையும், அவற்றை வழிநடத்தும் நிர்வாகிகளையும் பாராட்டுகி றோம். சங்கத்தை மேலும் வளர்த்து, செழுமைப்படுத்தி, தொழிலாளர்கள் ஒற்றுமையைக் கட்டிக் காத்து, அவர்கள் மேலும் பெறவேண்டிய உரிமைகளுக்காகத் தொடர்ந்து பாடுபடும் என்பதை இந்த அமைப்பில் இல்லாத தொழி லாளர்த் தோழர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.