Thursday, May 30, 2019
பாஜக வுக்கு மாறினால் 50 கோடி பணம், அமைச்சர் பதவியாம் பி.எஸ்.பி சட்டமன்ற உறுப்பினர் புகார்
மக்களவை தேர்தல் பரபரப்புகள் குறைந்த
நிலையில் மத்திய பிரதேசத்தின் பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர் பாஜக பற்றி
கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ்
கட்சியின் கூட்டணி யில் அங்கம் வகிக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. 231
சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116
இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி கட்சி கள்
கூட்டணியமைத்து ஆட்சியில் உள்ளன. 109 இடங்களை தனித்து கைப்பற்றிய பாஜக
எதிர்க்கட்சியாக உள்ளது. பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு இன்
னும் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
இந்நிலையில் பாஜக பணம் கொடுத்து சட்டமன்ற
உறுப் பினர் களை விலைக்கு வாங்க பார்க்கிறது என பகுஜன் சமாஜ் கட்சி
சட்டமன்ற உறுப்பினர் ராமாபாய் குற்றம் சாட்டி யுள்ளார். இதுகுறித்து பேசிய
அவர், "அனைத்து எம். எல்.ஏக் களுடனும் பேசி ஆசை வார்த்தை காட்டுகின்றனர்.
ஆனால் முட் டாள்கள் தான் அவர்களது அணிக்கு செல்வார்கள். என்னை தொடர்பு
கொண்ட அவர்கள் அமைச் சர் பதவியும், பணமும் தருவதாக கூறினர். 50 முதல் 60
கோடி ரூபாய் வரை பணம் தருவதாக கூறி வரு கின்றனர்" என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, May 19, 2019
பெரியாரின் பெரும்பணிக்கு வணக்கம் சொல்லும் ஈரோடு
இன்று தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர்
பஞ்சம் அனைத்து தொலைக்காட்சி ஊட கங்களிலும் நாள்தோறும் அந்த அவலங்களை
எடுத்துச் சொல் வதைக் காண்கிறோம்.
ஆட்சியாளர்கள் நீர் மேலாண்மையை அதன் தேவை
யை நன்கு உணராமல் சரியான திட்டமிடல் இல்லாமல் குறிப்பாக மழை காலங்களில்
தண்ணீரை தேக்குவதற்கு தேவையான தடுப் பணை, நீர்த்தேக்கங்கள் இன்றி
வீணாகச்சென்று கடலில் கலக் கின்றது.
1919இல் தந்தை பெரியார் அவர்கள் ஈரோடு
நகர்மன்ற தலைவராக இருந்தபோது.... இந்தி யாவில் முதன்முறையாக தண்ணீ
ரைகுழாயின் மூலம் வழங்கும் முறையை அறிமுகம் செய்து வைத்து தமிழகத்தை
பெருமைப் பட செய்தவர்.
இதற்கென ஈரோடு வ.உ. சிதம்பரனார்
பூங்காவில் 5லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலைத் தொட்டி யைக் கட்டி
காவிரி ஆற்றிலிருந்து நீராவி இயந்திர பம்பு செட் மூலம் அந்த தொட்டியில்
தேக்கி இரும் புக்குடிநீர்க்குழாயின் மூலமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் தண்
ணீர் கொடுத்து தாகம் தீர்த்தார்.
அதனைப்பின்பற்றி சேலத்தில் நகர் மன்ற தலை
வராக இருந்த ராஜாஜி சேலத் திலும், பின்னர் சென்னை மாகா ணம் முழுவதும் இந்த
திட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் விரிவு படுத்தப்பட்டது.
தந்தை பெரியாரின் தொலை நோக்கால் உரு
வாக்கப்பட்ட குடிநீர் குழாய் திட்டம்...26.05.1919 முதல் இன்றுவரை ஈரோடு
மக்களுக்கு பயன்பட்டு வரு கின்றது. 26.05.2019 இதற்கு நூறாண்டு நிறைவு...
நினைவு நாள்...பெரியாருக்கு ஈரோட்டு மக்களின்....வணக்கமும்... நன்றியும்
.....
குறிப்பு: 1938இல்தான் ஈரோட் டிற்கு மின்சாரம் வந்துள்ளது. அதுவரை நீராவி எஞ்சின் மூல மாக இயக்கப்பட்டிருக்கிறது.
- ஈரோடு.த.சண்முகம்
தமிழ் பாடப்புத்தகத்தில் திருநள்ளார் புரளி! பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
கடந்த இரண்டு ஆண்டுகளாக புரளிகளுக்கு எதிரான தளமாக You Turn செயல்பட்டு
வருகிறது. ஆயிரக்கணக்கான புரளிகளை நிரூபிக்கச் செய்து மக்களுக்கு புரளிகள்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
ஒருமுறை, திருநள்ளார் சனிபகவான் கோவிலில்
வான் பகுதியில் சென்ற செயற்கைக்கோள் ஒன்று செயலிழந்து பிறகு மீண்டும்
இயங்கி உள்ளது. இதற்கு காரணம் சனிக் கோளின் நீலநிறக் கதிர்வீச்சுகள்
நேரடியாக கோவிலின் மீது பாய்வதே என நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யம்
தெரிவித்து உள்ளதாகப் புரளி நம்மூர் சமூக வலைத்தளங்கள், செய்தித் தாள்கள்,
புத்தகங்கள் என எங்கும் பரவி இருந்தன.
ஆனால், திருநள்ளார் செயற்கைக்கோள் நிகழ்வு
தொடர்பான எந்தவொரு தகவலையும் நாசா தன் இணையதளத்தில் வெளியிடவில்லை. அப்படி
நிகழ்வு நடந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் எங்குமில்லை. இதைத்தவிர,
இஸ்ரோவைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திருநள்ளார் பகுதியில்
செயற் கைக்கோள் செயலிழந்தது தொடர்பான எந்தவொரு தகவலும் இல்லை என மறுத்து
இருந்தார்.
புரளிகளின் உறைவிடமாக இருக்கும் சமுக
வலைத்தளங்களில் புரளிகள் பற்றி காண்பது இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால்,
குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகத்தில் தவறான தகவல்களை பதிவிட்டு பாடமாக
எடுப்பது குழந்தைகளுக்கு தவறான வழி நடத்தலாக அல்லவா இருக்கும்.
இப்படி உண்மைத்தன்மை இல்லாத ஒரு செய்தியை
பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர் என்ற செய்தி நமக்கு
எட்டியது. நான்காம் வகுப்பின் தமிழ் பாடப் புத்தகத்தில் திருநள்ளார் கோவில்
செயற் கைக்கோள் கதையை உண்மையாக நடந்ததாக அச்சிட்டு பள்ளிகளுக்கும்
விற்பனை செய்துள்ளனர்.
” மதுபன் எஜுகேஷனல் புக்ஸ் ” விகாஸ்
பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் குழுமம் அச்சிட்டு வெளியிட்ட நான்காம்
வகுப்பு தமிழ் அருவி புத்தகத்தில் இடம்பெற்ற தவறான செய்திகள் தொடர்பாக
புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கோ.ஜீவிதா-வை You Turn ஆசிரியர் தொடர்பு
கொண்டு பேசியுள்ளார்.
அந்த உரையாடலில், திருநள்ளார் சனிபகவான்
கோவிலின் பகுதியில் செயற்கைக்கோள்கள் செயலி ழந்தன என்ற செய்தியை எதன்
அடிப்படையில் எழுதி யுள்ளீர்கள், நாசாவின் ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா
எனக் கேட்டதற்கு, இணையத்தில் படித்த தகவல்கள் என்றும், நாசாவின் தகவல்கள்
இல்லை என்றும் பதில் அளித்தார். மேலும், தாம் செய்தித்தாள்களில் படித்தவை,
இணையத்தில் பார்த்தவையே அவை என்று கூறினார்.
அதே கட்டுரையில் திருவண்ணாமலை சனிபகவான்
கோவிலில் இருக்கும் சனீஸ்வரர் சிலையில் இருக்கும் குறியீடும், சனிக்கோளில்
நாசா எடுத்தப் புகைப்படத்தில் அதே குறியீடு இருப்பதாக எழுதி உள்ளார். இது
குறித்து கேள்வி எழுப்பியதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. ஏனெனில்,
அதற்கும் ஆதாரங்கள் இல்லை.
இந்த தவறான செய்திகள் இடம்பெற்ற தமிழ்
புத்தகங்கள் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் இந்த புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இனி
அடுத்த ஆண்டிற்கான புத்தக அச்சீட்டின் போதே இதனை மாற்ற முடியும்
என்கிறார்கள். இந்த வருடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும், அதனை
பார்க்கும் மற்றவர்களுக்கும் அது தவறான தகவல் எனத் தெரியாமல் இருந்தால்
உண்மை என்றே நம்பி விடுவார்கள்.
உடனடியாக பிழையுள்ள புத்தகங்கள்
வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு இதனைப் பற்றி தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான
நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்குமாறு தனிப்பட்ட முறையில் கேட்க
உள்ளோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று காத்தி ருந்தது பார்ப்போம்
!
கோ.கருணாநிதி,
திராவிடர் கழக வெளியுறவு செயலாளர்
Friday, May 17, 2019
மத்திய அரசின் விதிகள், கெடுபிடியால் வாகன விற்பனை சரிவு - காப்பீடு துறைக்கும் வேட்டு
வாகன விற் பனை சரிந்ததன் காரணமாக மோட்டார்
வாகன காப்பீடு செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வாகன விற் பனை
தொடர்ந்து சரிவை சந் தித்து வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்
மோட்டார் வாகனங்கள் விற்பனை 8.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதே
மாதத்தில் கடந்த ஆண்டு விற்பனை 14.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு சக்கர வாகனங்கள், வர்த் தக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களின்
விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார நிலைமை மந்த மான நிலையில்,
மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடப்பதால், தேர்தல் முடிவுகள் எப்படி
இருக்குமோ என்ற எதிர்பார்ப் பில் வாகனங்கள் வாங்குவதில் பொதுமக்கள் அதிக
ஆர்வம் காட்டவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு இந்த ஆண்டு
கார், சொகுசு வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால்,
மோட்டார் இன்சூரன்ஸும் பெரும் அளவில் குறைந்து விட்டது என்று ஆய்வறிக்கை
ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது காப்பீட்டு துறைக்கும் வேட்டு வைத்துள்ளது.
வாகன காப்பீடு சட்டப்படி மூன்றாம் நபர்
காப்பீடு கட்டா யம், வாகனங்களை இயக்கு வோர் அல்லது உரிமையாளர் கள்
மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினால், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ்
திட்டத்தின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். இந்த
இன்சூரன்ஸ் எடுப்பது 17.6 சதவீதத்திலிருந்து 15.4 சதவீதமாகக் குறைந்துள்
ளது. அதேபோல், விபத்தில் சிக்கிய வாகனம் பழுதானால், அதற்கு இழப்பீடு
கிடைக்கும் இன்சூரன்ஸ் எடுப்பது என்பது கட்டாயம் இல்லை.
தனக்கோ அல்லது வாக னத்திற்கோ பாதிப்பு
ஏற்பட் டால் அதற்கு இழப்பீடு பெற முடியாது. இந்த இன்சூரன்ஸ் எடுப்பதும்
10.2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. பைக்,
ஸ்கூட்டர்கள் விற்பனை குறையவில்லை என்றாலும் மந்த நிலையில் நீடிக்கிறது.
குட்டு வெளிப்படும் என்ற அச்சமா? விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடியின் நாடு கடத்தல் வழக்கு விவரங்களை தர அரசு மறுப்பு
நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா மற்றும்
நிரவ் மோடி நாடு கடத்தல் குறித்த விவரங்களை வெளியிட மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா
வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு
லண்டனுக்கு ஓடி விட்டார். அவரை திரும்ப அழைத்து வர இந்திய அரசு தொடுத்த
வழக்கில் லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு
அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அவர் அதற்கு மேல் முறையீடு செய்து தற்போது
பிணையில் வெளியில் உள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில்
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடிய
நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரையும் நாடு
கடத்தி இந்தியா அழைத்து வர வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிரவ் மோடிக்கு
மூன்றாம் முறையாக பிணை மனு நிராகரிக்கப்பட்டதால் அவர் இன்னும் சிறையில்
உள்ளார்.
இது போல் இந்திய அரசின் சார்பில் சுமார் 132 பேர் மீது நாடு கடத்தக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாடு கடத்தல் மனு விவரங்கள் மற்றும்
வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கேட்டு ஒரு பத்திரி கையாளர்
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவுக்கு மத்திய அரசின் வெளியுறவுத்
துறை அமைச்சகம், இந்த மனுக்கள் தற்போது சம்பந்தப்பட்ட பிரிட்டன் அரசு
அதிகாரிகளின் ஆய்வில் உள்ளன. தகவல் அறியும் சட்டப் பிரிவு 8 1 ஆம்
விதியின் கீழ் இந்த மனுக்கள் குறித்து எந்த ஒரு விவரமும் தர இயலாது. என
பதில் அளித்து விவரங்களை அளிக்க மறுத்துள்ளது.
கோட்சே குறித்த பிரக்யா சிங் பேச்சு பிரதமர் மன்னிப்பு கோர காங்கிரஸ் வலியுறுத்தல்
மகாத்மா காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா சிங் தாக்குர் கூறிய தற்காக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கோர வேண் டும் என காங்கிரஸ் மூத்த தலை வர் திக் விஜய் சிங் வலி யுறுத்தியுள்ளார்.
காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம்
கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சை யானதை அடுத்து, தமது
கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று
திரும்பப் பெற்றார்.
காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம்
கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என மக்கள் நீதி மய்யம்
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண் மையில் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது,
“நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர்.
அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான். அவரை
தீவிரவாதி எனக் கூறுபவர்கள், முதலில் அவர் குறித்து தெரிந்து கொள்ள
வேண்டும். கோட்சே குறித்து அவதூறாக பேசுபவர் களுக்கு இந்தத் தேர்தலில் தக்க
பதிலடி கிடைக்கும்” என தெரிவித்தார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல்
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது பிணையில்
இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக,
பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வரு கிறார்.
பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தியுள்ளது.
ரன்தீப் சுர்ஜேவாலா
இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டில்லியில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
பாஜகவினர் நாதுராம் கோட்சேவின்
வழித்தோன்றல்கள் என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. கோட்சேவை தேச பக்தர்
எனக் கூறி காந்தியாரையும், அவரது கொள்கைகளையும் பிரக்யா தாக்குர்
அவமதித்து விட்டார். இதற்காக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண் டும்.
வன்முறை கலாச்சாரத்தை விதைப்பது,
தியாகிகளை அவ மதிப்பதும் பாஜகவின் மரபணு வில் கலந்தி ருக்கிறது என்பது
மீண்டும் நிரூபணமாகி யுள்ளது என அவர் தெரிவித்தார்.
திக் விஜய் சிங்
போபால் தொகுதியில் பிரக் யா சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறி யதாவது:
நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என
பிரக்யா புகழ்ந்து கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோட்சேவை
போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம். பிரக்யாவின் இந்த சர்ச்சை
கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா நாட்டு மக்களிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சூழலில், தமது கருத்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அதனை பிரக்யா சிங் தாக்குர் நேற்று மாலை திரும்பப் பெற்றார்.
எதிர்கால இந்தியா எதிர்நோக்கி இருக்கும் பேராபத்து:
இந்தியாவில் 13
விழுக்காடு பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
பாடத்திட்டம், பெற்றோர், ஆசிரியர் கொடுக்கும் அழுத்தம் மற்றும் பல்வேறு
வாழியல் மாறுபாடுகளால் பள்ளி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு
ஆளாகிவருகின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் உணர்வை பள்ளிகளோ அல்லது பெற்றோரோ பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.
பெற்றோர்வேலைக்குச்செல்லும்நிலை யில்,
தங்களை அனாதைகளாகசம்பந்தப் பட்ட மாணவ, மாணவிகள் நினைக்கின் றனர்.
இந்தியாவில் இது போன்ற மன அழுத்தத்தால் 13 விழுக்காடு பள்ளிக் குழந்தைகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்அபாயத்தைஉணர்ந்த சிபிஎஸ்இ வாரியம்,
பள்ளிகளில் மாணவ, மாணவி களின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் வகையில்
அவர்களுக்கு மனநல ஆலோ சனை கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், விரல் விட்டு
எண்ணக்கூடிய அளவிலேயே பள்ளிகளில் மனநல ஆலோசனைகள் நடந்துவருகிறது. மனநல
ஆலோசனை கொடுப்பவர்கள்குழந்தைகளின் உணர்வைப் புரிந்து கொண்டவர்களாக
இருந்தால் மட்டும் போதாது.உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்க
வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இந்தியா
முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக போதிய செயற்திறனின்றி
தவித்துவரும் நிலையில் தற்போது மன அழுத்தமும் ஒன்று சேர்ந்துள்ளது, இதன்
காரணமாக இந்தியாவின் எதிர்காலமே அச்சமூட்டும் வகையில் மாறிக்கொண்டு
வரும் சூழல் உருவாகியுள்ளது.
கோட்சேவுக்கு ‘தினமலர்' பாராட்டு!
‘‘காந்தியைக் கொன்ற கோட்சே போலீசாரிடம்
சரணடைந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஒத்துழைத்து, தூக்குத் தண்ட னையை
ஏற்றான்! இப்பொழுது பயங்கரவாதிகள் இப்படியா இருக்கிறார்கள்'' என்று
‘தினமலர்' சிறப்புக் கட்டுரை கதைக்கிறது.
(17.5.2019, பக்கம் 12)
எப்படி இருக்கு?
ஆக, போலீசுக்கும், நீதிமன்றத்துக்கும் ஒத்துழைத்தால் எப்படிப் பட்ட குற்றவாளியும், கொலைகாரன் உள்பட உயர்ந்தவன் என்கிறதா ‘தினமலர்?'
Tuesday, May 14, 2019
டில்லியில் மத்திய அரசின் பி.எட். கல்வி நிறுவனத்தில் தமிழுக்கான பாடப்பிரிவு இந்த ஆண்டும் திறக்கப்படாத அவலம்: தமிழக அரசு கவனிக்குமா?
டில்லியின் சத்ரா மார்கிலுள்ள மிராண்டா கல் லூரிக்கு அருகில் மத்திய அரசின் ஆசிரியர் கல்வியியல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
1947இ-ல் டில்லி பல்கலைக்கழகம் சார்பில்
அமைக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில் ஆங்கிலம், உருது, இந்தி,
சமஸ்கிருதம் போன்ற பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டன. பிறகு, தமிழ், பஞ்சாபி,
பெங் காலியும் சேர்க்கப்பட்டன.
தமிழுக்காக ஒவ்வொரு ஆண்டும் பொது நுழைவுத்
தேர்வின் அடிப் படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்கான
நுழைவுத்தேர்வில் மாணவர்கள் தகுதி பெறுவதில்லை எனதமிழ் மொழிக்கான
கல்வியியல்பிரிவு கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட் டது. தமிழுக்கான
ஒதுக்கீடு, வேறு பாடப்பிரிவுகளுக்கும் மாற்றப் பட்டிருந்தது.
இதுதொடர்பான தகவல் பிப் ரவரி 19இ-ல்
வெளியானது. இதன் தாக்கமாக தமிழுக்கானப் பாடப்பிரிவைத் துவக்க டில்லியின்
பல்வேறு தமிழ் அமைப்புகள் அக்கல்வி நிறு வனத்திடம் வலியுறுத்தின. இதை ஏற்று
மீண்டும் துவக்குவதாக இருந்த தமிழ் பாடப்பிரிவுக்கு இந்த ஆண்டும்
மூடியுள்ள நிலையே தொடர்கிறது.
இது குறித்து அக்கல்வியியல் நிறுவன வட்டாரம் கூறும்போது,
‘‘இதுபோல், தமிழுடன் பெங் காலி மொழி
பாடப்பிரிவுகள் இரண் டாம் முறையாக மூடப்பட்டுள்ளன ஆனால், இது அங்கு
பணியாற்றும் சில பேராசிரியர்களின் உள்நோக் கத்துடனான முடிவே தவிர, மத்திய
அரசின் முடிவல்ல. இதனால், டில்லியில் வருடந்தோறும் தமிழில் பட்டம் பெறும்
நூற்றுக் கணக்கான மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள்’’ எனத் தெரிவித்தன.
புதிய கல்வியாண்டுக்கு விளம்பரம்
வெளியிடுவது வழக்கம். அதற்கு முன்பாக அக்கல்வி நிறுவ னத்தின்
ஆசிரியர்களுக்காக ஒரு சுற்றறிக்கை அளிக்கப்படும். இதில் ஆசிரியர்கள்
திருத்தம் தெரிவித்தால் அதை சரிசெய்து விளம்பரமாக அளிப்பார்கள். ஆனால், சில
நாட் களுக்கு முன் அளிக்கப்பட்ட அந்த சுற்றறிக்கையில் பெரிதும் எதிர்
பார்த்த தமிழ்பாடப்பிரிவு இடம்பெற வில்லை. இதை அங்கு வேறு பல துறைகளில்
பணியாற்றும் தமிழர் களான பேராசிரியர்கள் எடுத்துக் கூறியும் அதில்
மாற்றத்தை செய்ய அதன் நிர்வாகம் முன்வரவில்லை.
தமிழ்ப் பாடத்திற்கான முது நிலை
கல்வியியலும் (எம்எட்) துவக்கப்படவில்லை என இங்கு புகார் உள்ளது. இதனால்
டில்லியில் வாழும் தமிழர்கள் பிஎட் கல்விக் காகப் பல லட்சங்கள் செலவு
செய்து தமிழகத்துக்கு செல்கின்றனர். இது மட்டுமல்லாமல், டில்லி பல்கலைக்
கழகத்தின்கீழ் செயல்படும் மூன்று கல்லூரிகளில் இருந்த தமிழ்ப் பாடப்
பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் அமர்த்தப்படாமல் உள்ளனர்.
15 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த நிலையால்
தமிழ்த் துறைகள் மூடும் நிலையை எட்டியுள்ளன. எனவே, இந்த பிரச்சினையில்
தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த
வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி தனக்குத் தானே நில ஒதுக்கீடு செய்துகொண்ட விவகாரம் அம்பலம்
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக
இருந்த போது, தனக்குத் தானே நில ஒதுக்கீடு செய்துகொண்ட விவகாரம் வெளிச்சத்
திற்கு வந்துள்ளது.
வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, மோடி தாக்கல் செய்த வேட்புமனு மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 2001-ஆம் ஆண்டு, குஜராத்
முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில், அரசுக்குச்
சொந்தமான நிலத்தை, குறைந்த விலைக்கு மோடி தனக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளார்.
அந்த இடத் தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். ஆனால், இந்த விவரங்
களை, இதுவரை வெளியே தெரிவிக் காமல் மோடி மறைத்து வந்தார். 2012 குஜராத்
சட்டமன்றத் தேர்தல், 2014 மக் களவைத் தேர்தலின்போது, காந்தி நகர் சொத்து
குறித்து,வேட்புமனுவில் மோடி வாய் திறக்கவில்லை.
பத்திரிகையாளரும், சந்தை ஆலோச கருமான
சகேட் கோகலே என்பவர், இத னைக் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல
வழக்கு தொடர்ந்தார். மோடி, அவரது வேட்புமனுவில், சொத்து விவ ரங்களை மறைத்து
விட்டதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையி லேயே, காந்தி
நகரில் பிளாட் இருப்பது குறித்து, அண்மையில் வாரணாசி வேட்புமனுத் தாக்கலின்
போது, பிரதமர் மோடி வெளிப்படையாக ஒப்புக் கொண் டுள்ளார்.
இதில் அடங்கியிருக்கும் மற்றொரு முறைகேடு
என்னவென்றால், நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீடு
அடிப்படையில் 2001- ஆம் ஆண்டு மோடி நிலத்தைப் பெற்றிருக் கிறார். ஆனால்,
2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு, குஜராத்தில் யாருக்குமே அரசு நிலம்
ஒதுக்கப்படவில்லை என்று குஜ ராத் அரசு ஆவணங்கள் சொல்கின்றன. அப்படியானால்,
அரசு நிலத்தை மோடி பெற்றது எவ்வாறு? என்ற கேள்வியும் தற்போது முன்னுக்கு
வந்துள்ளது.
ரபேல் ஒப்பந்தம்: முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
சென்ற ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் 36
ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மத்தி யக் குற்றப் புலனாய்வுக்
கழ கத்திடம் (சிபிஅய்யிடம்) அளிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்மீது ஏன் இன்னமும்
முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம்
கேள்வி எழுப்பி யுள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தின்மீது ஊழல் தடுப்புச்
சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் சென்ற அக்டோபரில் முறை யீடு மத்தியக்
குற்றப் புலனாய் வுக் கழகத்திடம் தாக்கல் செய் யப்பட்டிருந்தது. எனினும்
இதன்மீது இதுவரை முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய் யப்படவில்லை. நீதியரசர்
ஜோசப், இது தொடர்பாக லலிதாகுமாரி வழக்கின் மீதான தீர்ப்புரையைச்
சுட்டிக்காட்டி, காவல்துறையினரிடம் முறை யீடு அளிக்கப்பட்டால் காவல்
துறையினரின் கடமை அதன் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை
மேற்கொள்வதேயாகும் என் றும், எனவே ஏன் இவ்வாறு முதல் தகவல் அறிக்கைப் பதிவு
செய்யவில்லை என்றும் அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணு
கோபாலிடம் வினவினார்.
உண்மையில் தாங்கள் குற் றப் புலனாய்வுக்
கழகத்திடம் அளித்திட்ட முறையீட்டின் மீது உரிய நடவடிக்கை எடுத் திட
உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா,
அருண் சவுரி மற்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்
றத்தை அணுகியிருந்தார்கள்.
Monday, May 13, 2019
பா.ஜ.க. ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி கடும் சரிவு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத்
தீர்மானிக்கும் முக்கிய சக்திக ளில் ஒன்றான தொழில் துறை யின் வளர்ச்சி
விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு கடும் சரிவை சந்தித்தி
ருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
அதாவது, மார்ச் மாதத்தின் தொழில் துறை
உற்பத்தி விகி தம் 0.1 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல்
துறை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகமாக
இருக்கக் கூடும் என்று, ஏற்கெனவே ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணிப்பு
வெளியிட்டிருந்த நிலை யில், தற்போது மார்ச் மாதத்தின் தொழில்துறை உற்பத்தி
வளர்ச்சி விகிதமும் சரிவைச் சந்தித்திருப்பதை மத்திய அர சின் தரவுகள்
வெளிப் படுத் தியுள்ளன.
கோடை மழை பொய்த்துப் போன காரணத்தால்
விவசாய விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மொத்தப்
பணவீக்க விகிதமா னது. ஏப்ரல் மாதத்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அள
விற்கு உயரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணிப்பு
வெளியிட்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல் லாத
அளவிற்கு அதிகரித்து விட்டதாகவும், வேலை யின் மையானது ஏப்ரல் மாதத்தில் 7.6
சதவிகிதமாக அதிகரித்து விட்டது என்று மத்திய பொரு ளாதார கண்காணிப்பு மய்ய
மும் தரவுகளை வெளியிட்டி ருந்தது.
இந்நிலையில்தான் நாட் டின் பொருளாதார
வளர்ச்சியை ஊக்கு விக்கும் முக்கிய காரணி யான தொழில் துறையின் உற்பத்தி
வளர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில்
0.10 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தரவுகளை
வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச் சியை அளக்கும்
அளவுகோலாக தொழில்துறை இருந்து வரு கிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைப்
பொறுத்தே நாட்டின் பொருளாதார வளர்ச் சியின் ஏற்ற இறக்கத்தை கணிக்க
முடியும்.
தொழில்துறை என்பது சுரங்கத் துறை,
உற்பத்தித்துறை, மின் உற்பத்தி என மூன்று துறைகளை உள்ளடக்கியதா கும். அந்த
வகையில் மார்ச் மாதத்தில் தொழில்துறை உற் பத்தி வளர்ச்சி விகிதம் 0.10.
இதுவே கடந்த பிப்ரவரி மாதத் தில் தொழில்துறையின் உற் பத்தி அதிகரித்து
காணப்பட்ட தால், 1.20 சதவிகிதம் கூடியது. தொழில் துறையின் அங்கமான சுரங்கத்
துறையின் உற்பத்தியா னது கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 0.8 சதவிகிதம்
வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 2
சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தது. மின்சாரத்துறை யானது கடந்த மார்ச்
மாதத்தில் 2.2 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டின்
மார்ச் மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது.
மூலதனப் பொருட்களின் உற் பத்தி
வளர்ச்சியானது 8.7 சதவிகி தம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என
புள்ளியியல் துறை தெரிவிக் கிறது. தொழில் துறையின் மற் றொரு முக்கிய
அங்கமான தயாரிப்புத் துறையின் வளர்ச் சியானது 0.4 சதவிகிதம் சரி வைச்
சரிந்துள்ளது. மார்ச் மாதத் தின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம்
மூன்று வருடத்தில் குறைந்த அளவான 3.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
இதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தயாரிப்புத்துறையின் வளர்ச்சி விகிதம் 4.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
59 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு மே.வங்கத்தில் தொண்டர்கள் குண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 59
மக்களவை தொகுதி களுக்கு நேற்று நடந்த 6ஆம் கட்ட தேர்தலில் 63 சதவீத
வாக்குகள் பதிவானது. மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் மீது
வெடிகுண்டு வீசப்பட்டது. இதையடுத்து, பாதுகாவலர்கள் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்க ளவை
தேர்தல் நடைபெற்று வருகிறது. 6ஆவது கட்ட தேர்தல் நேற்று நடந்தது. உத்தரப்
பிரதேசம் 14, அரியானா 10, பீகார் 8, மத்தியப் பிரதேசம் 8, மேற்கு வங்கம் 8,
டில்லி 7, ஜார்கண்ட் 4 தொகுதிகள் என, 7 மாநிலங்களிலும் உள்ள 59
தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு
வரும் 19ஆம் தேதி 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
நேற்று நடந்த தேர்தலில், காலையிலேயே
முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு
செய்தனர்.குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த
வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன்
வரிசையில் நின்று வாக்களித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது தாயாரும்,
அய்க்கிய முற்போக்கு கூட்டணி யின் தலைவருமான சோனியா காந்தி, பிரி யங்கா
காந்தி, ஆம் ஆத்மி கட்சித் தலைவ ரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால், பாஜக
வேட்பாளர் கவுதம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் விஜேந்தர் சிங்
உள்ளிட்டோர் டில்லியில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
டில்லியில் வாக்குப்பதிவு...
டில்லியில் வாக்குப்பதிவு இயந்திரங் களில்
ஏற்பட்ட கோளாறால் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
இதேபோல், டில்லியில் பல இடங்களில் தங்கள் பெயர்கள் இல்லாததால் வாக்கா
ளர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். அவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
மே.வங்கம்
நேற்று தேர்தல் நடந்த மாநிலங்களிலேயே,
மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிக பதற் றம் காணப்பட்டது. அங்கு நேற்று
முன்தினம் இரவே பாஜக, - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே
ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு, வன்முறையில் முடிந்தன.
ஜர்கிராம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக
தொண்டர் ராமன் சிங் (46) என்பவரை, ஒரு கும்பல் அடித்து தாக்கியதில் அவர்
டாப்சியா ஊரக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அதேபோல், பாக பான்பூர் மற்றும் கிழக்கு மிட்னாபூரில் 2 பாஜக தொண்டர்கள்மீது
துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், நேற்று தேர்தல் நடந்த போதும் இம்மாநிலத்தில் பல இடங்களில் பதற்றம் நிலவியது.
காஷ்மீர்
காசிரி வாக்குச்சாவடிக்கு வெடிகுண்டு
மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது
செய்தனர். அதேபோல், முன்னாள் காவல் துறை அதிகாரியும், ஹாடல் தொகுதி பாஜக
வேட்பாளருமான பாரதி கோஷ், வாக்குப் பதிவு மய்யம் ஒன்றுக்கு சென்றபோது
தடுத்து நிறுத்தப்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு
வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அவருடன் சென்ற வாகனங்கள்மீது வெடிகுண்டு
வீசப் பட்டது. இதில், வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்தனர்.
வன்முறையாளர் கள்மீது பாரதியின் பாதுகாவலர்கள் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில், திரிணாமுலை சேர்ந்த ஒருவர் காயமடைந்ததாக
கூறப்படுகிறது. கிழக்கு மிட்னாபூரில் பாஜக தொண்டர்களை, திரிணாமுல்
காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதால், அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.
உ.பி. - ம.பி.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில்
பெரியளவில் அசம்பாவிதங்கள் இன்றி வாக் குப்பதிவு அமைதியாக நடந்தது.
இதேபோல், பீகாரில் நடந்த வாக்குப்பதிவில் சில இடங் களில் பிரச்சினை
ஏற்பட்டதால் வாக்குப் பதிவில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள்
விரைந்து சென்று அதை சரி செய்து வாக்குப்பதிவை தொடங்கினர். நேற்று நடந்த
6ஆம் கட்ட தேர்தலில் சராசரி யாக 63 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணைய
அதிகாரிகள் முதல் கட்ட மாக தெரிவித்தனர். சில மாநிலங்களில் இரவு வரையில்
வாக்குப்பதிவு நடந்ததால், பதிவான வாக்குகளின் உண்மையான சதவீத நிலவரம் இன்று
அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
கி.மு.500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்பதுக்கை கண்டுபிடிப்பு
கிருஷ் ணகிரி மாவட்டத்தில் வர லாற்று
காலத்திற்கு முந் தைய பெருங்கற்படைக்கால மக்க ளின் நினைவு சின்னங்கள் அதி
கம் உள்ளது. முக்கியமாக கல் திட்டைகள், கல் வட் டங்கள், குத்து கற்கள்,
கற்பதுக் கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரிகத் தின்
நினைவுச் சின்னங்கள் அனைத் தும் இங்கு உள்ளது. கிருஷ்ண கிரி கே.ஆர்.பி. அணை
யில் கடந்த 40 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு தண்ணீர் வற்றி யது.
இதையடுத்து, நீர்த்தேக்க பகுதியான பழைய
பேயனப் பள்ளி கிராமத்தின் அருகில் உள்ள சிறு குன்றின் மேற்கு பகுதியில்,
கிருஷ்ணகிரி வர லாற்று ஆய்வு மற்றும் ஆவ ணப்படுத்தும் குழுத்தலைவர்
நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெருங்கற்
படைக் கால பண்பாட்டை சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவு சின்னங்கள்
காணப்படுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
பொதுவாக 3 பக்கங்களில் செங்குத்தான பலகை
கற்களும், மேல் தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கிறது. இதன் கிழக்கு
பகுதியில் உள்ள கல்லில் மட்டும் இடுதுளை காணப்படுகிறது. உடைந்த நிலையில்
இருந்தாலும் கிழக்கு நோக்கிய கல்லில் துளை இருப்பது உடைந்த கற் பலகைகளில்
இருந்து தெரிய வருகிறது. இங்கு 30 ஏக்கர் பரப்பளவில் சின்னங்கள் அமைந்துள்ள
மய்யப்பகுதியில் 150 அடி நீளம், 150 அடி அக லத்தில் எல்லை போன்ற கற் களை
அடுக்கி வைத்துள்ளனர்.
அத்துடன் இதில் 12 அடி நீளமும், 8 அடி
அகலமும், 1.25 அடி உயரமும் உள்ள மிகப் பெரிய மூடுகல்லினை கொண்டு கற்பதுக்கை
அமைந்துள்ளது. இது ஒரு தலைவனுக்கான ஈமச்சின்னம் என்பதை காட்டு கிறது. மேல்
உள்ள மூடு கல் லின் எடை 2 டன் இருக்கும். அணை கட்டப்பட்ட பின்
நீர்சூழ்ந்து அந்த இடம் தண் ணீரால் மேல் மூடு கல் அதிக எடை காரணமாக மற்ற 4
கல்லையும் கீழ் அழுத்தி, நில மட்டத்துக்கு சமமாக கீழ் இறங்கிவிட்டது.
இப்பகுதி மற்ற பகுதி களை விட சற்று
மேடாகவும் உள்ளது. அண்மையில் சிதைக் கப்பட்டுள்ள ஒரு கற்பதுக் கையின்
மய்யத்தில் கருப்பு சிவப்பு மற்றும் சிவப்பு வண்ண ஈமக் கலயங்களின்
ஓடுகளும், இதை சுற்றி வட்ட வடிவில் கல்வட்டங்களும் காணப்படுகின்றன. இவைகள்
கி.மு.500 ஆண்டுகளுக்கு முந் தைய காலத்தை சேர்ந்தது. அதாவது 2,500
ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்வட்டங்களோடு கூடிய கற்பதுக்கை ஈமச் சின்
னங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம்.
கோடையில் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
சுட்டெரிக்கும் வெயில் நம் உடலின் வெப்பத்தை அதிகமாக்கும்போது, நம் உடலை வெப்பமாகாமல் காப்பாற்ற வியர்வை அதிகமாக சுரந்து நம் உடலையும், தோலையும் அதிக சூடாக்காமல் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. அதே நேரம் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து அதி வேகமாக குறைகிறது.
இந்த வெயிலின் தாக்கத்தால்
குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால்
நாம் வெயில் காலங்களில் கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்கிறார்
மகப்பேறு மருத்துவர் ஹேமலதா.வெயில் காலத்தில் நம் நலன் காக்க செய்ய வேண்டிய
ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
நீர்ச்சத்து குறைபாடு, உடற்சூடு அதிக
மாகுதல், சரும நோய்கள், ஹீட் ஸ்ட்ரோக், வயிற்றுப்போக்கு, கண் நோய்கள்,
வைரஸ் காய்ச்சல்கள் போன்றவை வெயில் காலத்தில் வரக்கூடும். அதனால் வெயில்
நேரத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி வெளியில் செல்லக்கூடாது.
குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை குழந்தை களும்,
பெரியவர்களும், கர்ப்பிணி பெண் களும் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தற்போது குழந்தைகளுக்கு பள்ளிகளில்
தேர்வுகள் முடிவுற்று கோடை விடுமுறை ஆரம்பமானதால் அதிகமாக வெளியில்
விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பிள்ளைகளுக்கு மற்றும்
நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளாகிய பல்லாங்குழி, தாயம் மற்றும் பரமபதம்
போன்ற விளையாட்டுகளை விளையாட ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடி
முடித்து வீட்டுக்கு வந்தவுடன் அவர்களை கை கால்கள் மற்றும் முகம் நன்றாக
கழுவி 2 டம்ளர் தண்ணீர் குடிக்க வைக்கவும். ஏனெனில் விளையாடும்போது அதிக
அளவு வியர்வை வெளியேறுவதால் நமது உடலின் நீர்ச்சத்து குறைந்துவிடும்.
அப்படி வெயிலில் செல்ல நேரிட்டால்
கண்டிப்பாக குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் கருப்பு
உடைகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு நிறம் வெப்பத்தை உள்வாங்கி நமது
தோலுக்கு ஊறு விளைவிக்கும். வெயில் காலங்களில் நாம் அதிகமாக உடல் தளர்ந்த
பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
இறுக்கமான உடை, கம்பளி, நைலான்,
சிந்தட்டிக், பாலியெஸ்டர் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். நம் உடலில் உள்ள
நீர்ச்சத்து வெளியேறாமல் இருப்பதற்கு நாம் குறிப்பாக பெரியவர்கள் 2 - 3
லிட்டர் தண்ணீரும், சிறியவர்கள் 8 டம்ளர் தண்ணீரும் குடிக்க வேண்டும். இது
தவிர மோர், இளநீர், எலும்பிச்சை நீர், திராட்சை பழரசம், தர்பூசணி, நுங்கு
போன்ற பழ ரசங்களை குடிப்பது நன்மை பயக்கும்.
வீட்டில் தயாரித்த தண்ணீர் (உப்பு
சர்க்கரை கரைசல்) குடிப்பது நன்று. (2 பங்கு உப்பு 1 பங்கு சர்க்கரை)
செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நன்று. அதேபோல் வெளியில்
சென்று வந்தவுடன் குளிர்ந்த தண்ணீர் குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக மண்
பானையில் நீர் ஊற்றி அதில் வெட்டிவேர் போன்ற மூலிகைகள் இட்ட குளிர்ந்த நீரை
அருந்தலாம்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
பொரித்த உணவு வகைகள், சிப்ஸ் போன்றவற்றைத்
தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர், ஃபிரைட் ரைஸ், அதிக காரமுள்ள மசாலா
நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக அதிக அசைவ உணவுகளைத்
தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை எளிதில் ஜீரணம் ஆகாது.
சேர்க்க வேண்டிய உணவுகள்
புத்தம் புதிய பழங்கள், கீரை வகைகள்,
நீர்ச்சத்து நிறைந்த காய்களாகிய முள்ளங்கி, நூக்கல், சுரக்காய், பூசணி,
சவ்சவ், வெள் ளரிக்காய் போன்றவற்றை தாராளமாக உட்கொள்ள வேண்டும்.
நீர்ச்சத்துள்ள பழங்கள் நமது உடலுக்கு தேவையான தாது உப்புகளான சோடியம்,
பொட்டாசியம், மெக்னீசியம், செலினியம் போன்றவை நிறைந்துள்ள பழங்களான செர்ரி,
ப்ளம்ஸ், ஸ்ட்ராபெர்ரி, லிச்சி, ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம் பழம்,
கிர்ணிப்பழம், அன்னாசி ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பழங்களை உட்கொள்வதன் மூலம்
உடற்சூட்டை தவிர்க்கலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய மோர் சேர்த்த பழைய
சோற்று நீராகாரம் மிகவும் நல்லது. ஏனெனில், அவற்றில் உள்ள நம் உடலுக்கு
தேவையான நுண்ணுயிரிகள் வைட்டமின் பி12 உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகிறது.
உடற்சூட்டை தவிர்க்கும் முறைகள்
உடற்சூட்டை தவிர்ப்பதற்கு அனைவரும் ஒரு
நாளைக்கு இருமுறை வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும். குறிப்பாக, வெயிலில்
சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும். சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊற வைத்து
குடித்தால் உடற்சூடு தணியும். இந்த கடுமையான கோடை காலத்தில் சிறியவர்கள்,
பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் நீண்ட தூரம் வெளியூர்
மற்றும் வறண்ட மலை பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதைத்
தவிர்க்கவும். அவ்வாறு சென்று வந்தவுடன் குளிக்கவும் அல்லது குளிர்ந்த
நீரில் துண்டை நனைத்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பதால் நாம்
வெப்பத்தினால் உண் டாகும் மயக்கத்தினைத் தவிர்க்கலாம்.
ஹீட் ஸ்ட்ரோக்கை தவிர்க்கும் முறைகள்
கோடை காலத்தில் உடல் அதிகமாக வெப்பமடைந்து
மயக்கம், வாந்தி, நீர்ச்சத்து குறைபாடு, சோர்வு போன்றவைகள் சிறியோர்கள்
முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும். இரவு நேரங்களில்
உறங்கும்போது ஜன்னலை திறந்து வைத்து குளிர்ந்த காற்றில் உறங்குவது நல்லது.
பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய கல்வெட்டு- எழுதியிருப்பது என்ன? கண்டறிந்து சொல்வோருக்கு 2,000 யூரோக்கள் பரிசு அறிவிப்பு
பிரான்ஸ் நாட்டின் தொலைதூர கிராமம்
ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் என்ன எழுதியி ருக்கிறது என்பதை
அறிய ஆர் வம் உருவானதால் அதை கண் டுபிடித்துச் சொல்பவர்களுக்கு 2 ஆயிரம்
யூரோக்கள் அன்ப ளிப்பாக வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வட மேற்கின் கடலோர கிராமம் ஒன்றில் காணப்பட்ட கல்வெட்டு குறித்த விவரம் வருமாறு:
ப்ளோகேஸ்டெல், பிரிட் டானி கிராமத்தின்
அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயர மான பாறை ஒன்றில்
இக் கல் வெட்டு கண்டறியப்பட்டுள்ள தாக பிபிசி நேற்று வெளியிட் டிருந்த
செய்தியில் தெரிவித்தி ருந்தது.
இக்கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள்
சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அல்லது தலைகீழாக
உள்ளன. இதில் சில ஸ்காண்டிநேவிய-பாணி எழுத்துகளும் உள்ளன. பிரெஞ்சு புரட்சி
நடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1786 மற்றும் 1787 ஆகிய இரண்டு
ஆண்டுகளுக்குள் இக்கல்வெட் டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று காலம்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுடன் ஒரு
கப்பல் மற்றும் சுக்கான் மற்றும் ஒரு சிலுவையை சார்ந்திருக்கும் ஒரு புனித
இதயம் என சங் கேத குறியீடுகளும் கலந்துள்ளன.
உள்ளூர் கல்வியாளர்கள் இக்கல்வெட்டு குறித்து எடுத் துரைத்த விளக்கங்கள் யாவை யும்மீறி வேறு எதையோ இக் கல்வெட்டு சொல்ல விழை கிறது.
இது பழைய பிரிட்டன் அல்லது பஸ்க் மொழியிலா
னது என்கின்றனர் சிலர். இன் னும் சிலரோ, அரை கல்வி யறிவு கொண்ட மனிதனால்
செதுக்கப் பட்டுள்ளது என்கின் றனர். இந்த எழுத்துக்கள் ஒரு ஆண் அல்லது
பெண்ணுக்கு ஒலிக்குறிப்புகள் மூலம் கேட் டுத் தெரிந்துகொள்ளக்கூடிய
செய்தியை கொண்டிருக்கலாம் என்கின்றனர் வேறு சிலர்.
இப்படி ஆளாளுக்கு வெவ் வேறு கருத்தை
உதிர்த்ததால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்த ப்ளோகேஷ்டல் கிராம
நிர்வாகம் கடைசியாக இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதென
முடிவெடுத்தது.
இதுகுறித்து ப்ளோகேஷ் டல் கிராம மேயர் டாமினிக்கி காப் பேசியதை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்த விவரம் வருமாறு:
''நாங்கள் இவ்வட்டாரத்தில் உள்ள சரித்திர
ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆய் வாளர்களிடம் விசாரித்துவிட் டோம்.
ஆனால் இந்தப் பாறைக் குப் பின்னால் இருக்கும் கதை என்ன என்பதை யாராலும்
கண்டுபிடித்துச் சொல்ல முடிய வில்லை.
எனவே கல்வெட்டுக்கள் குறித்த நிபுணத்துவம்
வாய்ந்த வர்கள் உலகின் எந்த மூலை யில் இருந்தாலும் அவர்கள் இதில் என்ன
எழுதியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல் லலாம். அவர்களுக்கு 2 ஆயி ரம்
யூரோக்கள் (இந்திய பணத் தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்) பரிசு தரவும்
நாங்கள் சம்மதிக் கிறோம்.''
இவ்வாறு ப்ளோகேஷ்டல் கிராம மேயர் அறிவித்துள்ளார்.
Friday, May 10, 2019
ராஜீவ் தனது குடும்பத்தினருக்காக பயன்படுத்தியதாக மோடி கூறுவது தவறு! கடற்படை முன்னாள் தளபதி
அய்.என்.எஸ். விராட் போர்க் கப்பலை
தனதுகுடும்பத்தினரின்பயணத் துக்காக மறைந்த முன் னாள் பிரதமர் ராஜீவ் காந்தி
பயன்படுத்தியதாக கூறுவது தவறு என்று இந்திய கடற்படை முன்னாள் தளபதி
எல்.ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்
கூட்டத்தில் மோடி பேசியபோது, அய்.என்.எஸ். விராட் போர்க் கப்பலை 1987-ஆம்
ஆண்டு தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் வாகனம் போன்று ராஜீவ்
பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். குறிப்பாக, சோனியா காந்தியின்
குடும்பத்தினரான வெளிநாட்டினர், அக்கப்பலில் பயணம் செய்ததாகவும் மோடி
புகார் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை இந்திய கடற்படை
முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட
அறிக்கையில், தேசிய விளையாட்டு போட்டியில் பரிசுவென்றவர்களுக்குவிருது கள்
கொடுப்பதற்கு திருவனந்த புரத்துக்கு அப்போது பிரதம ராக இருந்த ராஜீவ்
காந்தி வந்தி ருந்தார்.இதைத் தொடர்ந்து, லட்சத்தீவில் நடைபெற்ற அரசு
விழாவுக்கு ராஜீவ் காந்தி சென்றார்.
அப்போது விராட் போர்க் கப்பலில் ராஜீவ்
காந்தியும், சோனியா காந்தியும் சென்றனர். அவர்களுடன் வெளிநாட்டினர் யாரும்
பயணிக்கவில்லை. கொச்சியை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் தென் பிராந்திய
கடற்படை கமாண்டராக நான் அப்போது பதவி வகித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
அய்.என்.எஸ்.விராட்போர்க்
கப்பலின்முன்னாள்கமாண் டிங் அதிகாரியான வினோத் பாஸ்ரிசாவும்,அக்கப்பலில்
ராஜீவ்காந்திபயணித்தபோது, அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்
டன,அக்கப்பலில்வெளிநாட் டினரோ அல்லது வேறு விருந்தினர்களோ பயணிக்க வில்லை
எனத் தெரிவித்துள்ளார். மேலும்,விராட்போர்க்கப் பலைராஜீவ்,தனதுகுடும்பத்
தினரின் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது முழுவதும் தவறு
எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு பேர் விடுதலை: ஆளுநருக்கு இருந்த தடையும் நீங்கியதால் "உடனே விடுதலை செய்க!''
ஏழு பேர்
விடுதலையில் ஆளுநருக்கு இருந்த தடையும் நீங்கியதால், உடனே அவர்களை விடுதலை
செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை
வழக்குத் தீர்ப்பின்படி 27 ஆண்டுகாலம் ஏழு பேர் சிறையில் வாடி வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும்,
பல்வேறு அரசியல் மற்றும் சட்ட சித்து விளையாட்டுகளால்'' தள்ளிப் போடப்
பட்டு வந்துள்ளது.
கடைசியாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விடுதலை செய்யத் தீர்மானித்து அனுப்பிய கடிதம் - ஆளுநர் கையில்தான் பத்திரமாக'' இருக்கிறது.
ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த
குடும்பத்தினரால், இவர்களின் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட அந்த
வழக்கு உச்சநீதிமன்றத்தால் இப்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில்,
இனி இதனைக் காரணம் காட்ட முடியாது - இருந்த தடையையும் அதிகாரப்பூர்வமாக
உச்சநீதி மன்றமே நீக்கிவிட்டதால், வேறு காரணங்களைத் தேவையின்றி சொல்லி,
தமிழ்நாடு ஆளுநர் ஏழு பேர்களின் விடுதலையை, மேலும் காலதாமதம் செய் யாமல்
உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறோம்.
இதற்குமேலும் மத்திய அரசு முரண்டு பிடிக்கக் கூடாது என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள்.
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.
44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் 12 மக்களவைத்
தொகுதிகளுக்குள்பட்ட 44 வாக்குச்சாவடிகளின் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களில்
உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தமிழகத்
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறினார்.
இந்த 44 வாக்குச் சாவடிகளில் மட்டும்
ஒப்புகைச்சீட்டுகளில் உள்ள சின்னங்களை எண்ணிய பிறகே தேர்தல் முடிவுகள்
அறிவிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு
வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறை யாகச்
செயல்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மாதிரி
வாக்குப்பதிவு நடத்தினர். அதில் 44 வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்
குப்பதிவு நடத்தியதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த
வாக்குகளை அழிக்காமல், ஒப் புகைச்சீட்டு இயந்திரங்களில் விழுந்த சீட்டுகளை
மட்டும் எடுத்து விட்டனர். இந்த 44 வாக்குச்சாவடிகளில் மட்டும்
ஒப்புகைச்சீட்டு இயந்திரங் களில் உள்ள சீட்டுகளை எண்ணுவ தற்குத் தேர்தல்
ஆணையம் உத்தர விட்டுள்ளது.
பொதுவாக, ஒரு மக்களவைத் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு
களை எண்ண வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இந்த 44 வாக்குச் சாவடிகளிலும்
ஒப்புகைச் சீட்டுகளை மட்டும்தான் எண்ண வேண்டும். இதிலும் ஏதேனும் அரசியல்
கட்சிகள் சந்தேகம் எழுப்பினால், தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்து,
அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சத்யபிரத சாகு.
மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளிலும் மே 23-ஆம் தேதியே
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
கூறினார். அதேபோல், 44 வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டுகள் மே
23-ஆம் தேதியே எண்ணப்பட உள்ளன.
44 வாக்குச்சாவடிகள்: வடசென்னை,
காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர்,
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப் பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய
12 மக்களவைத் தொகுதிகளுக்குள் பட்ட 44 வாக்குச்சாவடிகளில் ஒப்
புகைச்சீட்டுகளின் எண்ணிக்கை மூலம் தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்பட
உள்ளன.
ஜாதி பெயரில் குடியிருப்பா?
வேலூரில் சாதி பெயரில் உள்ள
குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றாத விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு
உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலருக்கும், வேலூர் மாநகராட்சி ஆணையருக்கும்
மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை தாக்கீது அனுப்பி உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் தோட்டி லைன் என்ற
குடி யிருப்பு பகுதி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட கூலித்
தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களின் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு
வைக்கப்பட்டுள்ள தோட்டி லைன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள்
வைத்த தொடர் கோரிக்கையின் விளைவாக, மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில்
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை
குடியிருப்பின் பெயர் மாற்றப்படவில்லை. இதுகுறித்த செய்தி பத்திரிகை
ஒன்றில் அண்மையில் வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித
உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து
வழக்குப் பதிவு செய்தார். மேலும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர்,
வேலூர் மாநக ராட்சி ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு
தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.
Thursday, May 9, 2019
பிஜேபி அதிகார பீடத்தில் ஏறியதால் ஏற்பட்ட தீய விளைவு
மத்தியில் பிஜேபி அரசு நரேந்திர மோடி
தலைமையில் 2014இல் வந்தாலும் வந்தது. நாடெங் கும் ஜாதிய வாதங்களும்,
மதவாதங்களும் நிர்வாண கோலத்தில் தலை விரித்து ஆடித் தீர்க்க ஆரம்பித்து
விட்டன.
பொதுவாக பிஜேபி என்றாலே மதவாத ஆட்சி
என்பது நிலை நிறுத்தப்பட்ட கெட்டியான உண்மையாகிவிட்டது. 1992இல் பாபர்
மசூதியை பிஜேபி கும்பல் பட்டப் பகலில் இடித்துத் துவம்சம் செய்தது. ஏதோ
வெறிபிடித்த அடி மட்டத் தொண் டர்கள்தான் இந்தக் கேவலத்தை நடத்தினார்கள்
என்று சொல்ல முடியாது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி,
அசோக் சிங்கால் போன்ற உயர் மட்டத் தலைவர்களே முன்னின்று வழிகாட்டி இந்த
அநாகரிகக் காட்டு விலங்காண்டித்தனத்தை அரங்கேற்றி முடித்தனர்.
நியாயமாக அந்த நிகழ்வுக்குப் பிறகு
பிஜேபி உள்ளிட்ட, சங்பரிவார் கும்பல் முற்றிலும் தடை செய்யப்பட்டு
இருக்க வேண்டும். பிஜேபி தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் இழக்கச்
செய்திருக்க வேண்டும். இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தக்
குற்றத்தில் முதன்மைக் குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட
அத்வானி துணை பிரதமராகவும், முரளி மனோகர் ஜோஷி மனித வள மேம்பாட்டுத்
துறை (கல்வி) அமைச்சராகவும் ஆக முடிந்தது என்றால் இந்த வெட்கக் கேட்டை
என்னவென்று சொல்லுவது?
அதுவும் நரேந்திரமோடி பிரதமரான பிறகு
பிஜேபி - சங்பரிவார்த் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பேசுகின்ற
பேச்சு கேவலத்தின் உச்சமாகும்.
தாமரைக்கு வாக்கு அளித்தால்
இராமனுக்குப் பிறந்தவர்கள் என்றும், அப்படி வாக்களிக்காவிட்டால் முறை
தவறிப் பிறந்தவர்கள் என்றும் ஒரு மத்திய அமைச்சர் பேசுவதை என்ன சொல்ல!
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் நாடு
முழு வதும் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப் படவில்லையா? ஒரு காரின்
பின்னால் அந்தத் தோழர்களைக் கட்டி இழுத்துச் செல்லுவதும், சந்தைக்கு
மாடுகளை ஏற்றிச் செல்லும் வியாபாரி களை வழிமறித்து அவர்களின் கால்களில்
இலாடம் அடிப்பதும் உலகில் வேறு எங்காவது நடந்ததாகக்
கேள்விப்பட்டதுண்டா?
மீசை வைத்திருந்ததற்காகவும், குதிரையில்
ஏறி வந்ததற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்தார்
என்பதற்காகவும் தாழ்த்தப்பட்ட வர்கள் அடித்துக் கொல்லப்பட்டதானது -
இந்தியா காட்டுவிலங்காண்டித் தன்மையது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
இராமராஜ்ஜியத்தை உண்டாக்க இருப்பதாகக்
கூறும் உ.பி. முதல் அமைச்சர் அனுமனை மலைவாழ் தலித் என்கிறார். இன்னொரு
வகையில் இதே இந்து மதம்தான் அனுமனைக் கோயில் கட்டிக் கும்பிடுகிறது.
கடவுள்களில்கூட உயர் ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று வகை பிரிப்பதுதான் அவர்கள் போற்றும் இந்து மதத்தின் யோக்கியதை!
உத்தரகாண்டில் ஒரு செய்தி வெளி
வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டம் நைன்பர்க் என்ற
கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர தாஸ் என்ற 23 வயது தாழ்த்தப்பட்ட சமுக
இளைஞர் ஒரு திருமண வீட்டில் உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்டவர்களுடன்
சமமாக அமர்ந்து உணவு உண்ட தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு அபாயம் -
ஜாதி, மதவெறி என்றால் என்னவென்று தெரியாத சில மாநிலங்களில்கூட மதவெறி,
ஜாதி வெறி அபாயம் தலைதூக்கி நிற்கிறது.
பிஜேபி மத்தியில் அதிகாரத்திற்கு
வந்ததால் ஏற்பட்ட தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை (Secular)
என்ற அடிப்படைக் கோட்பாட்டையே ஏற்காத ஓர் அரசு மத்தியில் அதி கார
பீடத்தில் உள்ளதால் ஏற்பட்ட தீய விளைவே இது.
நடந்து முடிந்த - நடக்க இருக்கிற தேர்தலில் நாட்டு மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு தள்ளுபடி ஆளுநரே முடிவெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை
வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள் ளிட்ட 7 பேரையும் விடுவிப்ப
தற்கு எதிராக தாக்கல் செய் யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று
தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப் பார் என
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை
வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி,
ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வது
குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில்
உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக
அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது.உடனடியாக அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு
அனுப்பிவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
ஆளுநர் அந்த தீர்மானத்தில்
கையெழுத்திடாததால், எழுவர் விடுதலை காலதாமதமாவதாக விமர்சனம் எழுந்தது.
மேலும், தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி ஆளுநர் கருத்து
கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை ஆளுநர் மாளிகை தரப்பு மறுத்தது.
மேலும், இந்த விவகாரத்தில் தெளிவாகவும், வெளிப்படையாகவும் முடிவு
எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.
இதனிடையே, ராஜீவ்காந்தி கொலையின்போது
உயிரிழந் தவர்களின் உறவினர்களான எஸ்.அப்பாஸ், ஜான் ஜோசப் உள்ளிட்டோர்
பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 7 பேர் விடுதலைக்கு எதிராக காங்
கிரஸைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணனும் மனு தாக்கல் செய்தார். குற்றவாளிகளை
விடுதலை செய்யும் முடிவு அரசியல் நோக்கம் கொண்ட தோடு, அரசியல்
சாசனத்துக்கும் எதிரானது எனவும் அந்த மனு வில் தெரிவித்து இருந்தனர்.
ராஜீவ்காந்தி கொலையின்போது உயிரிழந்த 15
பேரின் உறவினர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, உச்ச
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத் திருக் குமாறு வலியுறுத்தி மனு
அளித்தனர். இதன் காரண மாகவும் ஆளுநர் முடிவெடுக் காமல் இருப்பதாகவும்
கூறப் பட்டது.
இந்தநிலையில் 7 பேர் விடு தலைக்கு எதிராக
தொடரப் பட்ட மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன்
சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு
வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு
தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம், தமிழக ஆளுநரின்
பரிசீலனையில் இருப்பதால் அவரே முடிவு எடுப்பார் எனவும், இது போன்ற
விஷயங்களில் ஆளுநர், குடி யரசு தலைவர் களின் தனிப் பட்ட அதிகார
வரம்புக்குட் பட்டது எனவும், இதனால் அதற்குள் நீதிமன்றம் தலையிட
தேவையில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின சிறார்களுக்கு ரத்த அணு குறைபாடு பரிசோதனை
மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறார்களுக்கு ரத்த அணுக்கள்
குறைபாடு தொடர்பான மருத்துவப் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அதில்
ஏறத்தாழ 9 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட பிரச்சினைகள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அச்சிறார்கள் அனைவ ருக்கும் மாவட்ட மருத்துவமனைகள்
வாயிலாக உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரபணு குறைபாடுகள் காரணமாக ரத்த
அணுக்களில் சில பாதிப்புகள் ஏற்படும். அவை நாளடைவில் தலசீமியா, ரத்த சோகை
உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நெருங்கிய உறவினர்களுக்கு இடையே
திருமணம் புரிந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலோ இதுபோன்ற
பிரச்சினைகள் ஏற்படலாம்.
இந்த வகை பாதிப்புகள் அதிக அளவில் மலை
வாழ் மக்களிடையே காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும்,
குறிப்பாக வளர் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை பிரச்சினை அதிக அளவில்
ஏற்படுவதாகத் தெரிகிறது. அதனை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தேசிய நல் வாழ்வுக்
குழுமம் சார்பில் மாவட்டந் தோறும் பழங்குடியின சிறார்களை மருத்துவப்
பரிசோதனைக்கு உள்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. கடந்த இரு
ஆண்டுகளாக அத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு
ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக தன்னார்வ அமைப்புகள் மூலம்
நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு அத்திட்டம் செயல்
படுத்தப்பட்டது. அதற்கென இதுவரை ரூ.3.3 கோடியை தேசிய நல்வாழ்வு குழுமம்
செலவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பரிசோதனைக்கு
உள்படுத்தப்பட்ட சிறார்களில் 9 சதவீதம் பேருக்கு ரத்த அணுக்கள் குறைபாடு
இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு
சதவிகிதம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. அங்கு ரத்த பரிசோதனை
மேற்கொள்ளப்பட்ட மொத்த சிறார்களில் 21.5 சதவீதம் பேருக்கு தலசீமியா, ரத்த
சோகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது கூறியதாவது:
அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி
சென்றடைய வேண்டும்; ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு
திட்டங்களை நாங்கள் முன் னெடுத்து வருகிறோம். அவற்றில் இத் திட்டமும்
ஒன்று.
ரத்த அணுக்கள் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள் அனைவ ருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டி ருக்கிறது.
அவர்களில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலா னோர் குணமடைந்து
விட்டனர்.
போலியோ, பெரியம்மை போன்ற நோய்களை
முழுமையாக ஒழித்ததைப் போல ரத்த சோகை, தலசீமியா நோய் களையும் ஒழிக்க
முடியும். அடுத்த சில ஆண்டுகளில் அதை சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டு வரு கிறோம் என்றார் அவர்.
Friday, May 3, 2019
4 தொகுதி இடைத் தேர்தல்..... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 137 பேர் போட்டி
தமிழகத்தில் வருகிற 19ஆம்
தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,
ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற
தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
வேட்புமனு பரிசீலனையின் முடிவில் முறையான
ஆவணங்கள் இல்லாததால் 104 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 152 பேரது
மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப் பெற
நேற்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப
பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அரவக்குறிச்சி: 63 பேர் போட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த
68 பேரில் 5 சுயேட்சைகள் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
ஒட்டப்பிடாரம்: 15 பேர் போட்டி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15
வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 41 வேட்புமனுக்களில் 23
நிராகரிக்கப்பட்டது; 3 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டது.
திருப்பரங்குன்றம்: 37 பேர் போட்டி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 37
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல்
செய்த 44 பேரில் 7 பேர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
சூலூர்: 22 பேர் போட்டி
சூலூர் சட்டமன்ற தொகுதியில் 22
வேட்பாளர்கள் போட் டியிடுகின்றனர். இத்தொகுதியில் வேட்பாளர்கள் யாரும்
வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'நாங்களும் துல்லிய தாக்குதல் நடத்தினோம்' ஓட்டுக்காக பயன்படுத்தவில்லை!
முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும், பல முறை துல்லியத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ.க. போல, அவற்றை நாங்கள் ஓட்டுக்காக
பயன்படுத்தியதில்லை என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தகவலை
வெளியிட்டுள்ளார்.
அவர்,
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது: கடந்த
2016இல் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், சமீபத்தில் பாகிஸ்தானின்
பால்காட்டிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நம் விமானப் படையினர்
நிகழ்த்திய துல்லியத் தாக்குதல்களை பிரதமர் மோடி ஓட்டுக்காக
பயன்படுத்துவது வெட்கக்கேடானது. இது போல, எத்தனையோ துல்லியத்
தாக்குதல்களை, முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த்
தியுள்ளது. ஆனால், அதுகுறித்து ஒருபோதும் விளம் பரப்படுத்தியதில்லை.
ஓட்டுக்காக பயன்படுத்தியதும் இல்லை.
ராணுவ
நடவடிக்கையை ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதைவிட இந்தியாவுக்கு எதிரான
சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்பது முக்கியம் என்பதுதான் எங்கள்
நிலைப்பாடு. ஆனால், மோடி ராணுவத்தினரின் வீரத்தை தங்கள் கட்சிக்கு
கிடைக்கும் ஓட்டுக்காக பயன்படுத்துகிறார். கடந்த 70 ஆண்டுகளில் எந்த
அரசும் நம் ராணுவத்தினரின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை.
ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது வெட்கக்கேடு. ஏற்க முடியாதது. இது
நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த
அரசு சந்தித்த மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை.
மோடி அரசு தேசப் பாதுகாப்பு என்ற ஒரேஅம்சத்தை கையிலெடுத்து வெற்றுக்
கூச்சல் போடுகிறது.
புவிசார்
அரசிய லில் அந்தந்த சூழ லுக்கு ஏற்பவே, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடி
யும். வரலாற்றை திரும்பிப் பார்த்தால் இது புரியும். பாகிஸ் தானை ஒரு பயங்
கரவாத மய்யமாக தனிமைப்படுத்தி பயங்கர வாதத்திற்கு எதிரான தீர்க்கமான
நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமுகத்தை அணிதிரட்டுவதுதான் எங்கள் நோக்கம்.
அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன்
சிங் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...