Friday, May 3, 2019

4 தொகுதி இடைத் தேர்தல்..... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 137 பேர் போட்டி

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதியிலும் மொத்தம் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
வேட்புமனு பரிசீலனையின் முடிவில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 104 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 152 பேரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாள் என்பதால் 15 பேர் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதன்மூலம் 4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரவக்குறிச்சி: 63 பேர் போட்டி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரவக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்த 68 பேரில் 5 சுயேட்சைகள் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

ஒட்டப்பிடாரம்: 15 பேர் போட்டி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 15 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 41 வேட்புமனுக்களில் 23 நிராகரிக்கப்பட்டது; 3 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டது.

திருப்பரங்குன்றம்: 37 பேர் போட்டி
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல் செய்த 44 பேரில் 7 பேர் மனுவை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

சூலூர்: 22 பேர் போட்டி
சூலூர் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட் டியிடுகின்றனர். இத்தொகுதியில் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...