Monday, May 13, 2019

பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய கல்வெட்டு- எழுதியிருப்பது என்ன? கண்டறிந்து சொல்வோருக்கு 2,000 யூரோக்கள் பரிசு அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டின் தொலைதூர கிராமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் என்ன எழுதியி ருக்கிறது என்பதை அறிய ஆர் வம் உருவானதால் அதை கண் டுபிடித்துச் சொல்பவர்களுக்கு 2 ஆயிரம் யூரோக்கள் அன்ப ளிப்பாக வழங்கப்படும என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வட மேற்கின் கடலோர கிராமம் ஒன்றில் காணப்பட்ட கல்வெட்டு குறித்த விவரம் வருமாறு:
ப்ளோகேஸ்டெல், பிரிட் டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயர மான பாறை ஒன்றில் இக் கல் வெட்டு கண்டறியப்பட்டுள்ள தாக பிபிசி நேற்று வெளியிட் டிருந்த செய்தியில் தெரிவித்தி ருந்தது.
இக்கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன. அல்லது தலைகீழாக உள்ளன. இதில் சில ஸ்காண்டிநேவிய-பாணி எழுத்துகளும் உள்ளன. பிரெஞ்சு புரட்சி நடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 1786 மற்றும் 1787 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குள் இக்கல்வெட் டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று காலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுடன் ஒரு கப்பல் மற்றும் சுக்கான் மற்றும் ஒரு சிலுவையை சார்ந்திருக்கும் ஒரு புனித இதயம் என சங் கேத குறியீடுகளும் கலந்துள்ளன.
உள்ளூர் கல்வியாளர்கள் இக்கல்வெட்டு குறித்து எடுத் துரைத்த விளக்கங்கள் யாவை யும்மீறி வேறு எதையோ இக் கல்வெட்டு சொல்ல விழை கிறது.
இது பழைய பிரிட்டன் அல்லது பஸ்க் மொழியிலா னது என்கின்றனர் சிலர். இன் னும் சிலரோ, அரை கல்வி யறிவு கொண்ட மனிதனால் செதுக்கப் பட்டுள்ளது என்கின் றனர். இந்த எழுத்துக்கள் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு ஒலிக்குறிப்புகள் மூலம் கேட் டுத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்தியை கொண்டிருக்கலாம் என்கின்றனர் வேறு சிலர்.
இப்படி ஆளாளுக்கு வெவ் வேறு கருத்தை உதிர்த்ததால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்த ப்ளோகேஷ்டல் கிராம நிர்வாகம் கடைசியாக இதை உலகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதென முடிவெடுத்தது.
இதுகுறித்து ப்ளோகேஷ் டல் கிராம மேயர் டாமினிக்கி காப் பேசியதை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் அவர் தெரிவித்த விவரம் வருமாறு:
''நாங்கள் இவ்வட்டாரத்தில் உள்ள சரித்திர ஆய்வாளர்கள் மற்றும் தொல்பொருள் ஆய் வாளர்களிடம் விசாரித்துவிட் டோம். ஆனால் இந்தப் பாறைக் குப் பின்னால் இருக்கும் கதை என்ன என்பதை யாராலும் கண்டுபிடித்துச் சொல்ல முடிய வில்லை.
எனவே கல்வெட்டுக்கள் குறித்த நிபுணத்துவம் வாய்ந்த வர்கள் உலகின் எந்த மூலை யில் இருந்தாலும் அவர்கள் இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல் லலாம். அவர்களுக்கு 2 ஆயி ரம் யூரோக்கள் (இந்திய பணத் தில் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம்) பரிசு தரவும் நாங்கள் சம்மதிக் கிறோம்.''
இவ்வாறு ப்ளோகேஷ்டல் கிராம மேயர் அறிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...