Friday, May 17, 2019

கோட்சே குறித்த பிரக்யா சிங் பேச்சு பிரதமர் மன்னிப்பு கோர காங்கிரஸ் வலியுறுத்தல்


மகாத்மா காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா சிங் தாக்குர் கூறிய தற்காக பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மன்னிப்பு கோர வேண் டும் என காங்கிரஸ் மூத்த தலை வர் திக் விஜய் சிங் வலி யுறுத்தியுள்ளார்.
காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறியது பெரும் சர்ச்சை யானதை அடுத்து, தமது கருத்தை போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் நேற்று திரும்பப் பெற்றார்.
காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண் மையில் தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து தொடர்பாக பிரக்யா சிங் தாக்குர் நேற்று கூறும்போது,
“நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர். அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும், என்றைக்குமே அவர் தேச பக்தர்தான். அவரை தீவிரவாதி எனக் கூறுபவர்கள், முதலில் அவர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கோட்சே குறித்து அவதூறாக பேசுபவர் களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும்” என தெரிவித்தார்.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது பிணையில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வரு கிறார்.
பிரக்யா தாக்குரின் கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் வலி யுறுத்தியுள்ளது.
ரன்தீப் சுர்ஜேவாலா
இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டில்லியில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
பாஜகவினர் நாதுராம் கோட்சேவின் வழித்தோன்றல்கள் என்பது தற்போது தெளிவாகியிருக்கிறது. கோட்சேவை தேச பக்தர் எனக் கூறி   காந்தியாரையும், அவரது கொள்கைகளையும் பிரக்யா தாக்குர் அவமதித்து விட்டார். இதற்காக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண் டும்.
வன்முறை கலாச்சாரத்தை விதைப்பது, தியாகிகளை அவ மதிப்பதும் பாஜகவின் மரபணு வில் கலந்தி ருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகி யுள்ளது என அவர் தெரிவித்தார்.
திக் விஜய் சிங்
போபால் தொகுதியில் பிரக் யா சிங்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறி யதாவது:
நாதுராம் கோட்சே சிறந்த தேச பக்தர் என பிரக்யா புகழ்ந்து கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கோட்சேவை போற்றுவது தேசபக்தி அல்ல. தேச துரோகம். பிரக்யாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சூழலில், தமது கருத்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, அதனை பிரக்யா சிங் தாக்குர் நேற்று மாலை திரும்பப் பெற்றார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...