Friday, May 17, 2019

எதிர்கால இந்தியா எதிர்நோக்கி இருக்கும் பேராபத்து:



 இந்தியாவில் 13 விழுக்காடு பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பாடத்திட்டம், பெற்றோர், ஆசிரியர் கொடுக்கும் அழுத்தம் மற்றும் பல்வேறு வாழியல் மாறுபாடுகளால் பள்ளி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் உணர்வை பள்ளிகளோ அல்லது பெற்றோரோ பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.
பெற்றோர்வேலைக்குச்செல்லும்நிலை யில், தங்களை அனாதைகளாகசம்பந்தப் பட்ட மாணவ, மாணவிகள் நினைக்கின் றனர். இந்தியாவில் இது போன்ற மன அழுத்தத்தால் 13 விழுக்காடு பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்அபாயத்தைஉணர்ந்த சிபிஎஸ்இ வாரியம், பள்ளிகளில் மாணவ, மாணவி களின் உணர்வை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு மனநல ஆலோ சனை கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பள்ளிகளில் மனநல ஆலோசனைகள் நடந்துவருகிறது. மனநல ஆலோசனை கொடுப்பவர்கள்குழந்தைகளின் உணர்வைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் மட்டும் போதாது.உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜன்னலாக இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக போதிய செயற்திறனின்றி தவித்துவரும் நிலையில் தற்போது மன அழுத்தமும் ஒன்று சேர்ந்துள்ளது, இதன் காரணமாக இந்தியாவின் எதிர்காலமே அச்சமூட்டும் வகையில் மாறிக்கொண்டு வரும் சூழல் உருவாகியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...