Monday, May 13, 2019

பா.ஜ.க. ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி கடும் சரிவு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திக ளில் ஒன்றான தொழில் துறை யின் வளர்ச்சி விகிதம் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு கடும் சரிவை சந்தித்தி ருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
அதாவது, மார்ச் மாதத்தின் தொழில் துறை உற்பத்தி விகி தம் 0.1 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கக் கூடும் என்று, ஏற்கெனவே ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்த நிலை யில், தற்போது மார்ச் மாதத்தின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதமும் சரிவைச் சந்தித்திருப்பதை மத்திய அர சின் தரவுகள் வெளிப் படுத் தியுள்ளன.
கோடை மழை பொய்த்துப் போன காரணத்தால் விவசாய விளைச்சல் குறைந்து உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மொத்தப் பணவீக்க விகிதமா னது. ஏப்ரல் மாதத்தில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அள விற்கு உயரக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு அதிகரித்து விட்டதாகவும், வேலை யின் மையானது ஏப்ரல் மாதத்தில் 7.6 சதவிகிதமாக அதிகரித்து விட்டது என்று மத்திய பொரு ளாதார கண்காணிப்பு மய்ய மும் தரவுகளை வெளியிட்டி ருந்தது.
இந்நிலையில்தான் நாட் டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கு விக்கும் முக்கிய காரணி யான தொழில் துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏப்ரல் மாதத்தில் 0.10 சதவிகிதம் சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தரவுகளை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச் சியை அளக்கும் அளவுகோலாக தொழில்துறை இருந்து வரு கிறது. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியைப் பொறுத்தே நாட்டின் பொருளாதார வளர்ச் சியின் ஏற்ற இறக்கத்தை கணிக்க முடியும்.
தொழில்துறை என்பது சுரங்கத் துறை, உற்பத்தித்துறை, மின் உற்பத்தி என மூன்று துறைகளை உள்ளடக்கியதா கும். அந்த வகையில் மார்ச் மாதத்தில் தொழில்துறை உற் பத்தி வளர்ச்சி விகிதம் 0.10. இதுவே கடந்த பிப்ரவரி மாதத் தில் தொழில்துறையின் உற் பத்தி அதிகரித்து காணப்பட்ட தால், 1.20 சதவிகிதம் கூடியது. தொழில் துறையின் அங்கமான சுரங்கத் துறையின் உற்பத்தியா னது கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 0.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுவே கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 2 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தது. மின்சாரத்துறை யானது கடந்த மார்ச் மாதத்தில் 2.2 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 5.9 சதவிகிதமாக இருந்தது.
மூலதனப் பொருட்களின் உற் பத்தி வளர்ச்சியானது 8.7 சதவிகி தம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என புள்ளியியல் துறை தெரிவிக் கிறது. தொழில் துறையின் மற் றொரு முக்கிய அங்கமான தயாரிப்புத் துறையின் வளர்ச் சியானது 0.4 சதவிகிதம் சரி வைச் சரிந்துள்ளது. மார்ச் மாதத் தின் தயாரிப்புத் துறையின் வளர்ச்சி விகிதம் மூன்று வருடத்தில் குறைந்த அளவான 3.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது.
இதுவே கடந்த 2018ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தயாரிப்புத்துறையின் வளர்ச்சி விகிதம் 4.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...