Friday, May 17, 2019

மத்திய அரசின் விதிகள், கெடுபிடியால் வாகன விற்பனை சரிவு - காப்பீடு துறைக்கும் வேட்டு

வாகன விற் பனை சரிந்ததன் காரணமாக மோட்டார் வாகன காப்பீடு செய்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வாகன விற் பனை தொடர்ந்து சரிவை சந் தித்து வருகிறது.  இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மோட்டார்  வாகனங்கள் விற்பனை 8.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதே மாதத்தில்  கடந்த ஆண்டு விற்பனை 14.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இரு சக்கர வாகனங்கள், வர்த் தக வாகனங்கள்  உள்பட அனைத்து வாகனங்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளன. பொருளாதார  நிலைமை மந்த மான நிலையில்,  மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடப்பதால், தேர்தல்  முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப் பில் வாகனங்கள் வாங்குவதில்  பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.  கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு  இந்த ஆண்டு கார், சொகுசு வாகனங்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது.  இதனால், மோட்டார் இன்சூரன்ஸும் பெரும் அளவில் குறைந்து விட்டது என்று  ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது காப்பீட்டு துறைக்கும் வேட்டு வைத்துள்ளது.
வாகன காப்பீடு சட்டப்படி மூன்றாம் நபர் காப்பீடு கட்டா யம், வாகனங்களை இயக்கு வோர் அல்லது உரிமையாளர் கள் மற்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினால், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். இந்த இன்சூரன்ஸ் எடுப்பது 17.6 சதவீதத்திலிருந்து 15.4 சதவீதமாகக் குறைந்துள் ளது. அதேபோல், விபத்தில் சிக்கிய வாகனம் பழுதானால், அதற்கு இழப்பீடு கிடைக்கும் இன்சூரன்ஸ் எடுப்பது என்பது கட்டாயம் இல்லை.
தனக்கோ அல்லது வாக னத்திற்கோ பாதிப்பு ஏற்பட் டால் அதற்கு இழப்பீடு பெற முடியாது. இந்த இன்சூரன்ஸ் எடுப்பதும் 10.2 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. பைக், ஸ்கூட்டர்கள் விற்பனை குறையவில்லை என்றாலும் மந்த நிலையில் நீடிக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...