Friday, May 10, 2019

ஜாதி பெயரில் குடியிருப்பா?

வேலூரில் சாதி பெயரில் உள்ள குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றாத விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலருக்கும், வேலூர் மாநகராட்சி ஆணையருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை தாக்கீது அனுப்பி உள்ளது.
வேலூர் மாநகராட்சியில் தோட்டி லைன் என்ற குடி யிருப்பு பகுதி உள்ளது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களின் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ள தோட்டி லைன் என்ற பெயரை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வைத்த தொடர் கோரிக்கையின் விளைவாக, மாநக ராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை குடியிருப்பின் பெயர் மாற்றப்படவில்லை. இதுகுறித்த செய்தி பத்திரிகை ஒன்றில் அண்மையில் வெளியானது.
இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர், வேலூர் மாநக ராட்சி ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...