Friday, September 30, 2011

வரவேற்கத்தக்க தீர்ப்பு! வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமை 269 பேர்களுக்கும் சிறைத் தண்டனை




தர்மபுரி, செப்.30- வாச் சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், வனத்துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

19 ஆண்டுகளுக்குப்பிறகு தர்மபுரி நீதிமன்றத்தில் இந்த பரபரப்பான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. விவரம் வருமாறு:- தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையி னருக்கு புகார் சென்றது.
இதையடுத்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவினர் 1992-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20-ஆம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார் கள். இந்த சோதனையில் வனத் துறையை சேர்ந்த 154 பேரும், காவல்துறையைச் சேர்ந்த 109 பேரும், வருவாய்த்துறையை சேர்ந்த 6 பேரும் பங்கேற்றனர். இந்த கூட்டுக்குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் வீடு, வீடாக சென்று சோதனை நடத்தினார்கள். கிராமத்தில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த பெண்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது வாச்சாத்தி கிரா மத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவினர் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) மற் றும் வன்கொடுமைக்கு உள் ளாக்கியதாக, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் நிருவாகிகள் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தனர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத் தின் தென் மண்டல ஆணை யர் பாமதி தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தினார்கள்.

சி.பி.அய். விசாரணை

பாதிக்கப்பட்டோர் தரப் பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1996-ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு மாற்றப்பட் டது. சி.பி.அய். அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை நடத்தினார்கள். 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.அய். தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே, வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசா ரணையை விரைவுபடுத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி, வாச்சாத்தி வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு உயர்நீதி மன்ற நீதிபதி குமரகுரு முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் 215 பேர் விசாரணைக்கு ஆஜ ராகி வந்தனர்.

இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை கடந்த 26-ஆம் தேதி நடந்தது. வழக்கில் தொடர்புடையவர்களில் 3 பேர் அன்று ஆஜராகாததால், பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு 29-ஆம் தேதி (நேற்று) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை யடுத்து பிடிவாரண்டு பிறப் பிக்கப்பட்ட 3 பேரும் தர்மபுரி நீதிமன்றத்தில் சரண் அடைந் தனர். பரபரப்பாக எதிர்பார்க் கப்பட்ட இந்த வழக்கில்,  குற்றம் சாட்டப் பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி குமரகுரு தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் மாலையில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த 215 பேருடைய வருகை சரிபார்க்கப் பட்டது. பின்னர் அவர் கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்களுக்கு எந்தெந்த சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், தண்டனை தொடர்பாக, அவர் களுடைய கருத்துகள் கேட்கப்பட்டது. அப் போது குற்றம் சாட்டப் பட்டவர்களில் சிலர் குற்றம் நடந்த இடத்தில் தாங்கள் இல்லை என்று தெரிவித்தனர். பலர் அரசு பணிக்காக சம்பவ இடத்திற்கு சென்றதா கவும், மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரி வித்தனர். சிலர் குறைந்த பட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று தெரி வித்தனர்.

குற்றம் சாட்டப்பட் டவர்கள் தரப்பை சேர்ந்த வழக்குரைஞர் பேசுகை யில், ``குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் அரசு ஊழியர்கள். ஏற்கனவே, நீண்டகாலமாக நடந்து வரும் இந்த வழக்கால், பலர் ஓய்வு பெற்று விட்டனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பல் வேறு பயன்கள் கிடைக் காமல் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே, அவர் களுடைய குடும்பத்தி னரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர். குற்றம் சாட்டப் பட்ட வர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பை சேர்ந்த வழக்கு ரைஞர்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, மாலை 4 மணிக்கு தண்டனை விவரத்தை அறிவித் தார். தண்டனை பெற்ற வர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் காவல் துறையை யும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்த வர்கள்.

இவர்களில் அரு ணாச்சலம், ஆறு முகம், ராஜகோபால், ராஜமாணிக்கம், கோவிந்தன், ரத்தின வேலு, வேடியப்பன், சிதம்பரம், எம்.பெரு மாள், அழகிரி, காளி யப்பன், ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு பாலியல் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனை யும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அப ராததொகையை கட் டத்தவறினால் கூடுத லாக 9 மாத சிறை தண்டனை அனுப விக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டது. பெரியநாயகம், பச்சியப்பன், பெரு மாள், பழனி, மாதை யன் ஆகிய 5 பேருக்கு வன் கொடுமை சட் டத்தின்படி 7 ஆண் டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அப ராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயி ரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என் றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.அய்.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என் றும் தீர்ப்பில் குறிப் பிடப்பட்டு உள்ளது. 7 முதல் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்ட 17 பேரும் உடன டியாக காவல்துறை யினரால் கைது செய்யப் பட்டனர். பின்னர் காவல்துறை பாதுகாப் புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஓராண்டு முதல் மூவாண்டுவரை தண்டனை

இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக் கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத் தல், கலகம் விளை வித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள் பட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண் டுகள் வரை சிறை தண் டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப் பட்டது. தண்டனை அடைந் தவர்களில் எம்.அரிகி ருஷணன், பி.முத் தையா, எல்.நாதன், பாலாஜி ஆகிய 4 பேர், அய். எப்.எஸ். அந்தஸ்து உள்ள வனத்துறை உயர் அதி காரிகள் ஆவர். அவர்கள் 4 பேருக்கும் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் தீர்ப்பை அறிய ஏரா ளமான மலைவாழ் மக் களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். இத னால் அங்கு பாதுகாப் புக்காக ஏராளமான காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு இருந் தனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...