Thursday, September 29, 2011

ஓய்வறியா உழைப்பாளியைக் காக்க! காக்க!!


நம் உடலின் ஓய்வு எடுக்கக் கூடாத ஓர் உழைப்பாளி - உறுப்பு - நம் இ(ரு)தயம் ஆகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

இதயம் ஓய்வு எடுத்தால் அது நிரந்தரம்தான். தற்காலிகம் என்ற பேச்சுக்கோ, விடுமுறை என்ற நிலையோ இந்த உறுப்புக்கு ஏதும் இல்லை.

அவ்வளவு முக்கியத்துவமும் தனித்தன்மையும் கொண்டது அல்லவா அது?

இன்று (சர்வதேச) பன்னாட்டு இதயப் பாதுகாப்பு நாள் - செப்.29.

ஆண்டுதோறும் 1000 பேரில் ஒருவர் மாரடைப்பு என்ற நிலை உள்ளது என்றாலும் 80 வயதான வர்களே இந்த மாரடைப்பு - இதய நோய்க்கு பலியாவோர் 1000-த்தில் 10 பேர்கள்!

மருத்துவர்களிடம் சிகிச்சைக்கே வராமல் இதய நோயால் இறப்பவர்கள் ஆண்டுக்கு 5 முதல் 10 விழுக்காட் டினர் ஆவர் என்று இதய நோய் மருத்துவர்கள் - டாக்டர்கள் - கூறுகின்றனர்!

முன்பெல்லாம் முதியவர்கள், வயதானவர்களைத் தாக்கும் இந்த இதய நோய்கள், இப்போது இளம் வாலிப வயதினரையும்கூட வாட்டி, உயிர்க்கொல்லி ஆகும் அபாயம்  நாளும் பெருகி வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்!

காரணம்  - 15 விழுக்காடு (சராசரி) அவர்களது குடும்ப முன்னோர் வழி மரபுகளாக (Genetic) இருக்கலாம் என்றாலும் முக்கியமாக, இந்த துரித உணவுகள் (Fast Food)  கண்டகண்ட நேரத்தில் கண்ட கண்ட தீனிகளை - கொழுப்புச் சத்து ஏராளம் உள்ளவைகளைச் சாப்பிடுவது, இளவயதிலேயே மது குடித்தல் - புகைத்தல் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதின் விளைவுகளே!

பொதுவாக மாரடைப்பு - இதய நோய் என்ற உயிர்க்கொல்லிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க - இந்நாளில் சில அன்றாட கவனத்துடன் கூடிய வாழ்க்கை முறைகளையும் நடைமுறை களையும் தவறாது மேற் கொண்டு ஒழுக உறுதி எடுத்துக் கொள்வோம்.

1. 40 வயதுக்கு மேற்பட்ட வர்கள் அனைவரும் மருத்து வர்களிடம் சென்று ஆண்டுக் குக் குறைந்தபட்சம் ஒருமுறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுவதை  முறை யாக்கிட வேண்டும்.

2. ரத்தக் கொதிப்பு (Blood Pressure) சீராக உள்ளதா என்று பார்க்க வேண்டும் (120 - 80) இது 10 (பத்து) மேலே - கீழே செல்ல, டாக்டர்கள் அனுமதிப்பார்கள்; இது எல்லை தாண்டினால் - தண்ட வாளத்தை விட்டு ஓடிய ரயில் எஞ்சின் - பெட்டிகள் நிலைதான் ஏற்படும். எனவே இதில் முழு கவனமும், கவலையும் இருக்க வேண்டும்.

3. மூச்சுத்திணறல், எல்லை மீறிய சோர்வு, களைப்பு திடீரென்று உடலில் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று காட்டி ஆலோசனை பெற்று அதன்படி மருந்து எடுத்துக் கொள்ளுதல் அவசியம் - அவசரம்.

மாரடைப்பு - அறிகுறிகள் - கடும் வியர்வை நெஞ்சு அழுத்தி இல்லாமல்கூட Silent Attack வரலாம் என்பதையும் கருத் தில் கொண்டு கவனமாக  உடல் நலனை நாளும் கண்காணித்தல் அவசியம்.

4. கொழுப்புச் சத்து இரத்தக் குழாய்களில் சென்று அடைத்து, அது மாரடைப்பு ஏற்பட வழி வகுத்துவிடும். எனவே கொழுப்பு உணவு வகைகளை - வாய் ருசிக்காக மட்டுமே சாப்பிடுவதை நிறுத்தி - ஆரோக்கிய உணவுகளையே உட்கொள்ளுதல் அவசியம்.

5. சர்க்கரை (Diabetes) அதிகமானால் அது இதயத்தைத் தாக்கி மாரடைப்புக்கு அடிகோலும் ஆபத்து உண்டு - காரணம் சர்க்கரை வியாதி என்பது ஒரு ஜங்ஷன் வியாதி (Junction Disease) இதயம், கண், கை, கால் எங்கும்கூட பாய்ந்து விடுவதால் இந்தப் பெயர் அதற்கு!)

6. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி (மருத்துவர் ஆலோசனைப்படி) நாளும் தவறாமல் செய்து வருதல் இன்றியமை யாததாகும்!

உப்பு  - தவிர்க்கப்படல் வேண்டும் (மருத்துவர் ஆலோசனை இதில் முக் கியம்; உப்பு அதிகம் உள்ள ஊறுகாய், அப்பளம், சிப்ஸ், இத்தியாதி உணவுகள் உப்பை உடலில் வைப்பவை).

7) ரத்தத்தில் சர்க்கரை யின் அளவு குறைந்த அளவு 110 - அதிக அளவு 140-க்கு (மில்லி கிராம்) மிகாது உள்ளதா என்று பார்த்துக் கொள்வது - பொதுவாக எல்லோருக் கும்கூட அதிக எடை கூடி - சதை மலையாக இருப்பது (Obesity) இதய நோய்க்கு அழைப்பு விடுவ தாகும்!

எனவே எடையையும் கவ னித்து, சத்துள்ள உணவை, பழங்கள், கீரைகள், நார்ச் சத்து, தானியங்கள் இவை களை உணவின் முக்கிய அங்கமாகவும், மீன் - ஆட்டுக் கறியைத் தவிர்த்து) முதலியவைகளை உண்ணும் பழக்கமும், தடுப்பு முறைகளுக்கு முக்கியமாகும்.

இதயத்தைக் காப்போம்.

இன்றுள்ள சமுதாயத்தை வாழ வைப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...