Thursday, September 29, 2011

அர்த்தநாரீஸ்வரர்!


அர்த்தநாரீஸ்வரர்!

இன்று மதுரை மீனாட் சியம்மன் அர்த்தநாரீஸ் வரர் அலங்காரத்தில் காட்சி தருகிறாள். ஆணும் பெண் ணும் சமம் என்று உணர்த் தும் கோலம் இது.

அம்மனும், சிவனும் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாட்சி செய்யும் பெருமை மதுரைக்குரிய சிறப்பு! நம்புங்கள் - மது ரையை ஆள்வது - தமிழ்நாடு அரசோ - மாநகராட்சியோ அல்லவே அல்ல! மீனாட்சியும் சிவனும்தான் ஆட்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சித்திரை முதல் ஆடி வரை மீனாட்சியும் ஆவணி முதல் பங்குனி வரை சொக்கநாத ராகிய சிவனும்தான் மதுரையை ஆள்வதாக அய்தீகமாம்.

இப்படி இருக்கும்போது ஆன்மீக நம்பிக்கைப்படி சொல்ல வேண்டுமானால், மதுரையில் மாநகராட்சித் தேர்தல் - மேயர் தேர்தல் எல்லாம் தேவையில்லாத ஒன்று. இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், மதுரையை ஆளும் மீனாட்சி - சொக்கநாதர் ஆகி யோருக்குப் போட்டியாக நடத்தும் நாத்திகத் தன்மை கொண்டதும் ஆகும் இந்தத் தேர்தல்கள் எல்லாம்.

நியாயமாக மதுரை வாழ் மக்கள் ஏதாவது குறைபாடு களும், தேவைகளும் இருக் குமானால் அவர்கள் முறைப் படி புகார்மனு கொடுக்க வேண்டியது மதுரை மீனாட்சி அல்லது சொக் கரிடம்தான். ஏனெனில் அவர்கள்தானே அவ்வாறு மாதமாகப் பிரித்துக் கொண்டு மதுரையை ஆட்சி செய்கிறார்கள்? மதுரையை மட்டும்தான் சொக்கனும், மீனாட்சியும் ஆள்கிறார்களா? மற்ற பகுதிகளை ஆள்ப வர்கள் வேறு யார்? எதற்கும் மீனாட்சி - சிவன் தம்பதி களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அது ஒருபுறம் இருந்து விட்டுப் போகட்டும்! இன் றைக்கு அர்த்தநாரீஸ்வரராக மீனாட்சி அம்மையார் மது ரையில் காட்சி தருகிறாளாம். அர்த்தம் என்றால் பாதி; நாரி என்றால் பெண்; அர்த்த நாரி என்றால் ஈஸ்வரனில் பாதி யாக இடம் பெற்ற பெண். இந்த அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தைத் தரிசித்தால் கணவன் - மனைவியரின் ஒற்றுமை நிலைத்திருக்குமாம்.

அப்படியானால் மதுரை யில் குடும்ப நீதிமன்றமே கிடையாது என்று நம்பு வோமாக!

சிவனும் - பார்வதியும் அர்த்த நாரீஸ்வரராக இருப் பதன் அர்த்தம் - ஆணும் பெண்ணும் சமம் என்பது தான் என்று சொல்லப் படுகிறதே  - நமக்கு ஒரு சந்தேகம்!

பார்வதியின் தந்தை யாரான தட்சன் நடத்திய யாகத்தில் மருகனான சிவனை அழைக்கவில்லை. மருமகனாகிய பரம சிவ னுக்கோ மகா மகாகோபம் - தன்னை அவமானப்படுத் தியதாக! எவ்வளவோ சிவன் தடுத்தும் தன் மனைவி பார்வதி அந்த யாகத்துக்குச் சென்றாளாம்.

சென்ற இடத்திலும் அவமானப்பட்டு, பார்வதி திரும்பியபோது சிவன் பார்வதியை ஏற்க மறுக்கிறான். கெஞ்சுகிறாள் பார்வதி. அப்படியானால் மயில் உருவெடுத்து தன்னை பூஜித்து சாப விமோசனம்  பெறுமாறு உத்தரவிடுகிறார் - அவ்வாறே செய்து விமோ சனம் பெற்றாள்  பார்வதி அந்த ஊர்தான் மயிலாடு துறையாம்.

நமது கேள்வி - ஆண் - பெண் சமம் என்பதுதான் அர்த்தநாரீஸ்வரர் என்பதற்கு அடையாளம் என்றால் சிவன் எப்படி சாபம் விடலாம்?

பார்வதி ஏன் மயிலாகி சிவனைப் பூஜிக்க வேண் டும்? தர்க்கவாதம் (Logic) இடிக்கிறதே!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...