Thursday, September 29, 2011

மேனாள் இந்தியப் பிரதமர் நேரு பார்வையில்...


வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வாசித்த நேரு, மேட்டுக்குடியில் பிறந்த கோமகன்.  இந்தியத் நாட்டின் முதல் பிரதமர் என்னும் பெருமைக்கு உரியவர். 

தமது உடல், பொருள், ஆவி என அனைத் தையும் நாட்டுக்கு அர்ப்பணித்த பெரு மகன்.  தன் இறப்பிற்குப் பின்னரும் தனது சாம்பலை இந்திய மண்ணிற்கு எருவாக்கிய ஏந்தல்.  இந்திய நாட்டு மக்கள் அனைவரையும் ஒருமிக்க நேசித்தவர்.  குழந்தைகள்பால் பேரன்பு கொண்டவர்.  நேரு மாமா என்று அன்புடன் குழந்தைகளால் கொண்டாடப் பெற்றவர். 

ரோஜா மலரின் ராஜா, ஒரு நாளில் 20 மணி நேரம் நாட்டு வளர்ச்சிக் காகவும், 3 மணி நேரத்தை புத்தகங்கள் படிப்பதற்காகவும் செலவிட்ட மாமனிதர்.  இலக்கியம், செய்தித்தாள்கள் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்.  வாழ்க்கை வரலாறு, இந்தி யாவைக் கண்டறிந்தேன் போன்ற நூல் களை இந்த மண்ணிற்கு அளித்தவர்.  நாட்டு மக்களால் மனிதருள் மாணிக்கம் என்று வாயாரப் புகழப் பெற்றவர்.  நேரு  வாழ்வில் உயர்வதற்கு முக் கியக் காரணமாக அமைந்தது அவரது படிப்பே ஆகும்.

ஒரு சமயம் பண்டித நேரு அவர்கள் தனது அலுவல் அறைக்கு மின்தூக்கி (லிப்ட்) வழியாகச் சென்றார்.  மின்தடை கார ணமாக அவர் ஏறிச்சென்ற மின்தூக்கி பாதி வழியிலேயே நின்றுவிட்டது சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்தது.  அவர் வெளியே வந்தார்.  அங்கு பதற் றத்துடன் நின்றிருந்த அலுவலர்கள் அய்யா!  இடையில் இடையூறு ஏற்பட்ட தற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள் என் றனர். 

அவரோ தனக்கே உரிய புன்ன கையுடன் நீங்கள் நினைத்த மாதிரி எனக்கு எந்த இடையூறும் ஏற்பட வில்லை. காரணம் என் கையில் அற்புத மான நூல் ஒன்று இருந்தது.  அந்த நேரத்தில் அந்த நல்ல நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்ததே என்று மகிழ்ந்தேன் என்று கூறினாராம்.  இக்கட்டான நேரங்களில்கூட நமக்குத் துணை நிற்பன நல்ல நூல்களே என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்குமே? 

நூலகம் செல்லுங்கள், நல்ல நூல்களைத் தேடிப் படியுங்கள். 

படிப்பதற்கு நேரம் இல்லையே என்று கவலைப்படாதீர்கள், நேருவைப் போன்று கிடைக்கும் நேரத்தைப் புத்தகங்களைப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...