Tuesday, May 31, 2011
மாணவர்களுக்கு அண்ணா அறிவுரை
ஆகவே, நமது கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றில் உயர்ந்த அம்சங்களை ஆராய்ந்து கண்டுபிடித்து, பிறநாடுகளின் சாதனைகளில் நமக்குத் தேவையானவற்றைத் தாராளமாகப் பின்பற்றி முன் னேற்ற வேண்டும்.
இப்படிச் செய்யாமல் நாம் வடுக்களையும், சுருக்கங்களையும் அழுகிப்போன பகுதிகளையும் நீண்ட காலத்துக்கு மூடி மறைத்து வைத்திருந்தோம். புதிய எண்ணம் கொண்ட பெரியார் போன்றவர்களையும் கண்டித்து வந்தோம்.
பட்டம் பெற்றுவிட்ட நீங்கள் சமுதாயத்தை மாற்றி அமைப்பதிலும் சமுதாயத்தில் தாழ்ந்து கிடப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாக்குவதிலும் அனைவருக்கும் புதுவாழ்வு மலரச் செய்வதிலும் பாடுபட வேண்டும்.
- 18.11.1967ஆம் நாள் அன்று
அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணா
மேலும் பகுத்தறிவு செய்திகளுக்கு விடுதலை படிக்கவும்
தாழ்த்தப்பட்ட மாணவனைப் பார்ப்பன அர்ச்சகன் தாக்குவதா?
- தாழ்த்தப்பட்ட மாணவனைப் பார்ப்பன அர்ச்சகன் தாக்குவதா?
- கோடை விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் பயணிகளால் நிரம்பி வழியும் ரயில்
- பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை ஒரு லட்சத்து 70 ஆயிரம் விண்ணப்பங்கள்
- கட்சிகளுக்கு கணக்கு தணிக்கை: தேர்தல் ஆணையம் பரிசீலனை
- முதல்வர் மம்தாவின் வித்தியாசமான அணுகுமுறை
- தீவிரவாத இயக்கமாக அய்.எஸ்.அய். அமைப்பை அறிவிக்க அமெரிக்காவில் இந்தியா
- உலகப் பொருளாதார சரிவை இந்தியா - சீனா மீட்டது அய்க்கிய நாடுகள் சபை
- பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பாதுகாவலர் மீது தாக்குதல்
சின்னகுத்தூசியின் சீர்மிகு சிந்தனை
எழுத்தாளர் சின்ன குத்தூசி அவர்களின் நினை வேந்தல் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது (29.5.2011).
கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் பேசினார்கள்.
அடிப்படையில் பெரியார் சிந்தனையாளராக அவர் வாழ்ந்து மறைந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.
மனிதர்கள் பிறக்கிறார்கள் - வாழ்கிறார்கள், மறை கிறார்கள் - ஆனாலும் அனைவரும் மக்களால் பாராட்டப் படுவதில்லை. மனித குலத்துக்குத் தொண்டு செய்தவர்கள் போற்றப்படுகிறார்கள்.
இதுபற்றி தந்தை பெரியார் கூறுவதை இந்நேரத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.
மனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே அவன் தனக்காகப் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்து செயல் புரிவது தான் மனிதத் தன்மை (21.7.1962) என்று கூறுகிறார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.
குடும்பம் என்கிற தனி வாழ்க்கையைத் தவிர்த்து, முழு நேரமும் எழுத்துப் பணியை மேற்கொண்டவர் சின்ன குத்தூசி. அது பெரும்பாலும் அரசியல் தன்மை கொண்டதாக இருந்தாலும் அதில் அடிப்படையான சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வு - திராவிடர் இயக்கப் பார்வை என்பது முதல் நிலையில் இருக்கும் என்பதுதான் அவர் எழுத்துகளுக்குரிய தனிச் சிறப்பாகும்.
காலச் சுவடு என்னும் இதழ் சின்னக்குத்தூசி அவர்களைப் பேட்டி கண்டது.
கேள்வி: எல்லா விஷயங்கள் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் தி.க. - தி.மு.க. சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் மவுனம் சாதிக்கிறீர்களே; இது எப்படி சரியாகும்?
சின்னக் குத்தூசி: தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்கள் பற்றியும் ஓச்சல், ஒழிச்சல் இல்லாமல் கேலி செய்ய, கண்டிக்க, தாக்கிட என்று எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ எழுத்தாளர் பெரு மக்களும் இருக்கிறார்கள்.
ஓரிரு சந்தர்ப்பங்களில் தி.க.வும், தி.மு.க.வுமே ஒன்றையொன்று தாக்கி விமர்சனப் போர் நடத்து கின்றன. என்னைப் பொறுத்தவரையில் தி.க. - தி.மு.க., ஆகிய இரு அமைப்புகள் பற்றியும் எத்தனைப் பேர் எத்தனைவிதமான குறைகளைக் கூறினாலும், அந்த இரு அமைப்புகள் இருக்கும் வரையில்தான் சமூக சீர்திருத் தத்துக்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அந்த இரு அமைப்புகளும் இல்லாவிட்டால் இங்கே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவைகளை இந்த அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய அமைப்புகள் வேறு எதுவும் என் கண்ணுக்குப்படவில்லை. ஆகவே தி.க., தி.மு.க., வன்முறைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்து, அவைகளை அழித்துவிடத் துடிக்கும் பேனா வீரர்கள் அணியில் இடம் பெற நான் விரும்பவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் நான் தயாராகவில்லை
என்று சின்ன குத்தூசி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் ஆழமான கருத்து என்பதில் அய்யமில்லை. பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரம தர்மம் வேரூன்றப்பட்ட சமூக அமைப்பில், அவற்றை வீழ்த்தும் சமூகப் புரட்சி இயக்கமாக திராவிடர் கழகமும், அரசியலில் தி.மு.க.வும் இருப்பதால் இந்த முடிவினை எழுத்தாளர் சின்னகுத்தூசி மேற்கொண்டார். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலை எடுத்துக் கொண்டாலும் பார்ப்பன சக்திகள் கண் மூடித்தனமாக தி.மு.க.வை எதிர்த்ததன் பின்னணியைச் சற்று கூர்ந்து நோக்க வேண்டும்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், தமிழ் செம்மொழி அங்கீகாரம், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம், தீட்சதப் பார்ப்பனர்களின் சுரண்டல் கூடமாக இருந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறைக்குக் கொண்டு வந்த நிலை - வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் கோட்பாட்டுக்கு விரோதமாக அவரால் உண்டாக் கப்பட்ட சத்திய ஞானசபையில் ஊடுருவி, லிங்க உருவ வழிபாட்டைத் திணித்த அர்ச்சகர்ப் பார்ப்பனரை வெளியேற்றியது உள்ளிட்ட செயல்கள் தந்தை பெரியார் வழி - சீர்திருத்த எண்ண வழி நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் அல்லவா?
அதற்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தானே சுயமரியாதைத் திருமணம் செல்லுபடியாகும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திக்கு இடம் இல்லை என்ற நிலையும் உறுதிபடுத்தப்பட்டது.
திராவிடர் கழகத்தால் பிரச்சாரம் மூலம் சீர்திருத்தக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கப்படு வதையும், அதற்கான சட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்படு வதையும் காண்பவர்களுக்கு எழுத்தாளர் சின்னகுத்தூசி அவர்களின் பேட்டியில் கூறப்பட்ட கருத்தின் அருமை கண்டிப்பாகப் புரியாமற் போகாது.
அந்த அடிப்படையில்தான் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் அவரின் பெயரால் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் ஒருவருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று பல்கலைக் கழகவேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்களால் நேற்றைய நினைவேந்தல் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இது ஒரு பொருத்தமான அறிவிப்பாகும்.
சின்னகுத்தூசி அவர்களை கடைசி காலத்தில் பேணிக் காத்த நக்கீரன் குழுமத்திற்கு விடுதலை குழுமம் தன் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இனி தப்பிக்க முடியாது குற்றவாளிகள்:
இனி தப்பிக்க முடியாது குற்றவாளிகள்: மனித மூளையில் இருக்கும் ரகசியங்களை ஆய்வாளர்கள் அறிய முடியும்
மனித மூளையை விஞ்ஞானிகள் படிக்க முடியும் என்கிற தகவல் புதிய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக மூளையில் வார்த்தைகள் எவ்விதம் படிகின்றன என்பதை ஆய்வாளர்கள் அறிய முடியும்.மூளையில் படியும் வார்த்தைகளை கண்டறிய விஞ்ஞானிகள் மின்கடத்தி எனப்படும் எல்க்ட்ரோடுகளை பயன்படுத்தினர்.
இலங்கை: வீடியோ காட்சிகள் போலியானது அல்ல அய்.நா. மனித உரிமைக் குழு நிபுணர்
பிரிட்டிஷ் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவின் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் நிரூபணமாகி இருப்பதாக அய்.நா. மனித உரிமைக் குழு நிபுணர் தெரிவித்துள்ளார்.இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசிக் கட்ட போரின்போது ஏராளமானோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பிரிட்டிஷ் தனியார் தொலைக்காட்சி சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில், கைகள்
மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை
மீண்டும் உயருகிறது பெட்ரோல் விலை
புதுடில்லி, மே 31- பெட்ரோல் விலை நாளை மீண்டும் உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.1.35 அதிகரிக்கும் என்று தெரிகிறது.பெட்ரோல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்,
`எய்ட்ஸ்' குழந்தைகள் படிப்பு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை, மே 31- `எய்ட்ஸ்' குழந்தைகள் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்த பள்ளிக்கூட நிர்வாகத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செங்கல்பட்டை வசிப்பவர்
அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை, மே 31- தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முதன் முறையாக வருகிற 3 ஆம் தேதி ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றுகிறார்.ஆளுநர் உரையை தய
சென்னை, மே 31- தமிழகத்தில் 21 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.அதன் விவரம் வருமாறு:
Monday, May 30, 2011
அமைச்சர் மரியம் பிச்சை விபத்து: லாரி பிடிபட்டது
அமைச்சர் மரியம் பிச்சை விபத்து: லாரி பிடிபட்டது
திருச்சி, மே 30- திருச்சி அடுத்த பாடாலூரில் அருகே 23 ஆம் தேதி அமைச்சர் கார் விபத்திற்குள்ளானது.லாரி மோதிய இடத்திலேயே உயிரிழந்தார் அமைச்சர் மரியம்
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் மின்தடையில்லா தமிழகம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன் ரனில் விக்கிரமசிங்கே
- சுயமரியாதை சிந்தனைகளுடன் வாழ்ந்து பலருக்கு வழிகாட்டியவர் சின்னக்குத்தூசி: மு.க.ஸ்டாலின்
பதவியேற்றார் கலைஞர்
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு பிணை அளிக்க மறுப்பது
ஆக்க பூர்வமாக ஒத்துழைப்போம் என்று தி.மு.க.கூறியுள்ளதை ஆளும் கட்சி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது (28.5.2011).
கடந்த 34 ஆண்டு காலமாக இதே குற்றாலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்தி வருகிறோம். பெரும்பாலும் கேரளா பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான பங்களாவில் நடக்கும்.
இவ்வாண்டுதான் வள்ளல் வீகெயேன் டாக்டர் கண்ணப்பன் அவர்களின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உணவு, உறையுள் வரை அனைத்துப் பொறுப்புகளையும் அவரே முன்வந்து, மனமுவந்து ஏற்றுக் கொண்டு எங்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றி!
ஒவ்வொராண்டும் சராசரியாக நூறு, இருபால் மாணவர்களும் இந்த முகாமல் பங்கேற்றுப் பயிற்சி பெறுகிறார்கள்.
இதில் நான்கில் ஒரு பகுதி பெண்கள், மீதி ஆண்கள்.
18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பயிற்சினைப் பெறுகிறார்கள். நான்கு நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பதில் சொன்னார்.
நடந்து முடிந்த தேர்தல்பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் கழகத் தலைவர் கூறியதாவது:
இந்தத் தேர்தல் முடிவு வெற்றி பெற்றவர்களையும், தோல்வி அடைந்தவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி யுள்ளது என்பதுதான் உண்மை.
நல்ல துவக்கம்
இந்த ஆட்சிக்கு ஆக்க ரீதியான முறையில் நாங்கள் ஒத்துழைப்புக் கொடுப்போம் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறியுள்ளார். சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் அவ்வாறே கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. இதனை ஆளும் கட்சி தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வளர்ச்சியா? தளர்ச்சியா?
சென்ற ஆட்சி செயல்படுத்திய திட்டங்களை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது வளர்ச்சி ஆகாது; அது தளர்ச்சியைத்தான் காட்டும்.
குறிப்பாக சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்படும், ஏற்கப்படும் சமத்துவத் திட்டமாகும். இதனை அரசியல் கண் கொண்டு பார்க்கக் கூடாது.
இடதுசாரிகள் உட்பட வற்புறுத்திய திட்டமாகும். பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் அவர்களின் தலைமையிலான கல்வியாளர் குழுவால் தயாரிக்கப்பட்ட திட்டமாகும். பொது மக்களின் பிரதிநிதிகள் கூடக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டத்தை ஒரு அரசு நிறுத்த முடியுமா என்பதுகூடக் கேள்விக் குறியாகும்.
சமச்சீர் கல்வி அடிப்படையில் 200 கோடி ரூபாய் அளவுக்கு நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்கான குழு அமைப்பு உள்ளிட்ட திட்ட செலவுகளையெல்லாம் சேர்த் தால் 500 கோடி ரூபாய் இதில் செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுப் பெரிய மக்கள் பணத்தை வீணாக்குவது சரியானதாக இருக்கவே முடியாது.
இந்தப் பாடத் திட்டத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பாரதிதாசன், அயோத்திதாசர், எம்.ஜி.ஆர். பற்றி எல்லாம்கூட பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
செம்மொழிபற்றி கலைஞர் அவர்கள் எழுதிய பாடலும் இடம் பெற்றுள்ளது. எனது பாடல் இடம் பெற்றது என்பதற்காக கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டாம்; வேண்டுமென்றால் அந்தப் பாடலை நீக்கிவிட்டு கல்வித் திட்டத்தைச் செயல்படுத்துங்கள் என்றுகூட கலைஞர் அவர்கள் கூறியுள்ளார். எதிலும் அரசியல் பார்வை என்பது தேவையற்றது.
தொடக்கத்தில் கல்வி அமைச்சர்கூட சில பாடங் களை அகற்றிவிட்டு சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று தான் கூறினார். அதன்பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அவசரப்பட்டு முடிவெடுக்காமல் அறிவிப்பை முதல் அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் அரசியலுக்கு அப்பாற்பட்ட எங்களின் வேண்டு கோளாகும். அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட வேண்டுகோள் விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
சட்டமன்ற கட்டடம் மாற்றம்
அதுபோலவே ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்று கூறுவதும் தவறானதாகும். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக அவர்கள் காலத்தில் பயன்படுத்திய பாலங்களை, சாலைகளைப் பயன்படுத்த மாட்டார்களா?
பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில்தான் தங்க நாற்கரச் சாலைகள் போடப்பட்டன என்பதற்காக அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அவற்றைப் பயன் படுத்தவில்லையா?
ஜனநாயக அமைப்பில் ஆட்சிகள் வரும் - போகும். ஆனால் திட்டங்கள் என்பவை தொடர்ச்சியாக நடை பெற்றுத் தீர வேண்டியவை அல்லவா?
கட்சியும் ஆட்சியும்
தேர்தலுக்கு முன்பு கட்சி, தேர்தலுக்குப்பிறகு ஆட்சி, ஓட்டுப் போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி என்பது இருக்கிறது. ஓட்டுக் கண் ணோட்டத்தில், நாட்டுக் கண்ணோட்டத்தை மறுக்கக் கூடாது.
தி.மு.க.வை மக்கள் ஒதுக்கிடவில்லை
தி.மு.க.வும் கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது. ஆளும் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சில லட்சங்கள்தான்.
மற்ற நாடுகளில் உள்ளதுபோல விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபடக் கூடும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
Friday, May 27, 2011
அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த விடுதலை இதழுக்கு அ.தி.மு.க. அரசு தடை விதிப்பதா? தமிழர் தலைவர் கேள்வி
Wednesday, May 25, 2011
சந்தேகம் வலுக்கிறது
தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது; முடிவு செய்யப்பட்டது என்பதற்காக அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அவற்றையெல்லாம் ரத்து செய்வதோ, மாற்றி யமைப்பதோ பொதுமக்கள் மத்தியில் பொதுவாகக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துத் தரும் என்பது பொது அறிவு உள்ள அனைவராலும் ஒப்புக்கொள்ளப் படக் கூடிய உண்மையாகும்.
முதலாவதாக, 1000 கோடி ரூபாய்க்குமேல் செலவு செய்து கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சட்டப் பேரவை ஆகியவற்றைப் பயன்படுத்தப் போவதில்லை; மாறாக பழைய கோட்டையிலேயே அவை இயங்கும் என்று அறிவித்ததன்மூலமாக முதற்கெட்ட பெயர் அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு ஏற்பட்டுவிட்டது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள கட்டடங்கள் பழுதுபட்டுவிட்டன; மழை பொழிந்தால் கோப்புகள் வீணாகின்றன என்று அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களே வெளிப் படையாகக் கூறி, வேறு இடங்களைத் தேடியதெல்லாம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்ட இடத்தில் பணியாற்ற விரும்பவில்லை என்று கூறுவது வெறும் அரசியல் வெறுப்புதான் என்ற எண்ணம் தொடக்கத்திலேயே எழுந்துவிட்டது.
சில ஏடுகள், சில கட்சிகள் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பதாலேயே, தாம் எடுத்த முடிவு சரிதான் என்று முதலமைச்சர் நினைத்திட வேண்டாம்.
அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி கூட மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.
அடுத்தகட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படாது; பழைய முறையே தொடரும் என்று அ.தி.மு.க. அமைச்சரவை முடிவு எடுத்திருப்பதும் கடும் எதிர்ப்புக்கும், விமர் சனத்துக்கும் ஆளாகிவிட்டது.
சமச்சீர் கல்வித் திட்டம் என்பது அரசியல்வாதிகள் தயாரித்த திட்டம் அல்ல - கல்வி நிபுணர்கள் ஆய்ந்து பொதுமக்களின் கருத்தையும் கேட்டுக்கூட பரிந்துரைக்கப்பட்டதாகும்.
இந்த நிலையில் அரசியல் கண்ணோட்டத்தோடு இதையும் அணுகுவது ஆரோக்கியமானதாக இருக்க முடியாது.
சமச்சீர் கல்விக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப் பட்டுள்ள நிலையில் (சுமார் 200 கோடி ரூபாய்) அவற்றையெல்லாம் மூட்டை கட்டி ஒரு பக்கத்தில் ஒதுக்கித் தள்ளிவிட்டு பழைய பாடத் திட்டம் என்பது - மக்கள் பணம் மதிக்கப்படவில்லை - மாற்றமான கல்வித் திட்டம் மறுக்கப்படுகிறது என்ற எண்ணத்தைத்தான் உருவாக்கும்.
இதற்கிடையில் இந்து முன்னணி அதிபர் திருவாளர் இராம. கோபாலன் அய்யர் குறுக்குச்சால் ஓட்டியுள்ளார்.
கருணாநிதி தயாரித்த சமச்சீர் கல்வித் திட்டம் என்றும், தோற்றுப்போன ஈ.வெ.ரா.வின் கொள் கையைக் கொல்லைப்புறம் வழியாகக் கொண்டுவரும் கல்வித் திட்டம் என்றும் தி.க. தலைவர் கி. வீரமணி இதன் பின்னணியில் இருக்கிறார் என்றும் வழக்கம் போல தனது ஓட்டை வாயைத் திறந்து ஓலம் விட் டுள்ளார். இதிலிருந்து சமச்சீர் திட்டம் நிறுத்தப் படுவதற்கான பின்னணியின் ஒரு முனை வெளிச் சத்துக்கு வந்துவிட்டது.
பெரியார்பற்றி பாடத்தில் இடம்பெறுவதாகவே இருக்கட்டும்; அதில் என்ன தவறு? தந்தை பெரியார் அவர்களைவிட மக்களுக்குத் தொண்டு செய்த மாமனிதர் யார்?
சமூகச் சீர்திருத்தம், சமூகநீதி, பெண்ணுரிமை என்பதெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்ட உயர் எண்ணங்கள்தானே?
முதலமைச்சர் இந்தப் பிரச்சினையில் எந்த எண்ணம் கொண்டுள்ளார்? பெரியாரைப்பற்றிப் பாடம் இருந்தால் இந்த முதலமைச்சர் தடுத்துவிடுவார் என்ற எண்ணம் மக்களிடம் பரவவேண்டுமா?
திருவாளர் சோ ராமசாமியா? பெரியார் ராமசாமியா? இந்த ஆட்சிக்கு யார் நெருக்கம் என்பது மக்களுக்குத் தெரிந்துவிடாமல் போகாது.
இந்த ஆட்சியைச் சுற்றி ஒரு பூணூல் வேலி போடத் தீவிர முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன. எதில் வெல்வார் முதல்வர்? எங்கே பார்ப்போம்!
திராவிடர் இயக்க உணர்வை எவராலும் அழிக்க முடியாது!
புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் அறைகூவல்
(சென்னை புரட்சிக் கவிஞர் விழா மகாகவி பாரதிநகர் - 30.4.2011)
தமிழர் தலைவர் உரை
சென்னை மகாகவி பாரதி நகரில் 30.4.2011 அன்று இரவு நடைபெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பகுத்தறிவாளர் கழகத்தின் சார் பிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக மாலையிலிருந்தே தொடங்கி மிகச் சிறப்பாக அறிவு பூர்வமாக நடத்திக் கொண்டிருக்கின் றீர்கள். அதுவும் தாய்மார்கள், குழந்தை களுடன் குடும்பம் குடும்பமாக ஆர்வத் தோடு வந்து கலந்து கொண்டிருக் கின்றீர்கள். புரட்சிக் கவிஞர் விழாவை நாம் இப்படிக் கொண்டாடுகின்ற இந்த உணர்வை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. திராவிடர் இயக்கத்தை எவராலும் அழித்துவிட முடியாது. தந்தை பெரியார் விருது பொதுத் தொண்டாற்றுபவர்களுக்கு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.
சமுதாய ரீதியாக - தி.க. அரசியல் ரீதியாக - தி.மு.க.
திராவிடர் இயக்க உணர்வுகளைப் பரப்பிட சமுதாய ரீதியாக பாடுபட்டுக் கொண்டிருப்பது திராவிடர் கழகம்; அரசியல் ரீதியாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மக்களுக்கு இந்த இரு இயக்கங்களும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. புரட்சிக் கவிஞ ருடைய கவிதைகளை - கருத்துகளை எடுத்துச் செல்ல வேண்டுமென்றுதான் வந்தேன்.
வரலாற்று ஆவணம் -
குடிஅரசு புத்தகங்கள்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய - பேசிய பெரியார் களஞ்சியங்களான குடிஅரசு புத்தகங்கள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன. இது வரலாற்றுச் செய்திகளைக் கொண்ட புத்தகம். தமிழக வரலாற்றைப் படிக்கலாம். இந்திய வரலாறு, உலக வரலாறுகளை பெரியாரின் குடிஅரசு நூல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இனப் போராட்டம்
இந்த நாட்டிலே ஆரம்பத்திலிருந்தே நடை பெற்றுக் கொண்டிருப்பது அரசியல் போராட்ட மல்ல; இனப் போராட்டம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை இந்தத் தேர்தலின் தொடக்கத்திலிருந்து மட்டும் நாங்கள் சொல்ல வில்லை. தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக் கின்றோம். ஏன் புராண காலத்திலிருந்து அல்ல; ராஜகோபாலாச்சாரியார் காலத்திலிருந்து, ராமன் காலத்திலிருந்து, சோ ராமசாமி காலத்திலிருந்து நடைபெற்றுக் கொண்டு வருவது ஆரியர் - திராவிடர் போராட்டம்தான்!
45 ஆண்டுகால வலி
தந்தை பெரியார் அவர்கள் 45 ஆண்டு காலம் தன் வயிற்று வலியையும் பொறுத்துக் கொண்டு சமுதாயத்தினுடைய வலியைப் போக்க எப்படிப் பாடுபட்டார் என்பதை சுப.வீ. அவர்கள் சொன்னார்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அய்யா அவர்களை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்து நாங்கள் புறப்பட்டோம். அப்பொழுது அய்யா அவர்களிடம், அவருக் கிருக்கின்ற உடல் உபாதையைப் பார்த்து, அய்யா, தங்களுடைய சுற்றுப்பயணம் ஒத்தி வைக்க அறி விப்பை விடுதலையில் வெளியிட்டு விடலாமா? என்று நான் கேட்டேன்.
சுற்றுப்பயணத்தைத் தள்ளி வைப்பதா?
என் சுற்றுப்பயணத்தைத் தள்ளி வைப்பதா? தோழர்கள் கஷ்டப்பட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பார்கள். நான் வேலூர் மருத்துவ மனைக்குப் போகிறேன். வலியைச் சரி பார்த்துக் கொண்டு உடனே திரும்பப் போகிறேன். அதற்கு ஏன் எனது சுற்றுப்பயணத்தை நிறுத்த வேண்டும்? வலி உங்களுக்கு இல்லிங்க, வலி எனக்கு. ஆகவே சுற்றுப் பயணத்தைத் தள்ளி வைக்க வேண்டாம் என்று சொல்லி புறப்பட்ட தலைவர்தான் தந்தை பெரியார். அவர் தன் வலியைப் பொறுத்துக் கொண்டு இந்த சமுதாயத்திற்காக ஆற்றிய பணியினால்தான் சுயமரியாதை உணர்வுகளை, திராவிடர் இயக்க உணர்வுகளைப் பெற்றிருக்கின்றோம்.
சாயிபாபா மருத்துவமனை சோதனை
சாயிபாபாவை அவதாரம் என்று சொல்லு கிறார்கள். அவர் மறைந்த இந்த நிலையிலே அவருடைய மருத்துவமனையையே சோதனையிட வேண்டும் என்று செய்திகள் வெளிவந்திருக்கிற தென்றால், பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பகவான் கவலைக்கிடம்...!
பகவான் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று சொல்லலாமா? அல்லது கவலைக்கிடமாக இருப்ப வரை பகவான் என்று சொல்லலாமா? மனிதன் இறந்தாலும் ஆன்மா அழிவதில்லை என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கின்றது. சாய்பாபா மறைந்ததற்காக ஆன்மீகப் பக்தர்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? இன்றைக்கு தந்தை பெரியாரின் குடிஅரசு 1939ஆம் ஆண்டின் இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றோம்.
1940ஆம் ஆண்டு குடிஅரசு
அடுத்து 1940ஆம் ஆண்டு குடிஅரசு தொகுதி வெளிவரப் போகின்றது அதில் உள்ள செய்திகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
சமுதாயத்தில் நிகழ்ந்த செய்திகள், அரசியல் ரீதியாக நடந்த நிகழ்வுகள் எப்படி ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வரலாற்று ஆவணங்களை எங்கும் தேடிக் காண முடியாது.
1940 ஆம் ஆண்டு குடிஅரசில்...!
1940ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற கால கட்டம். திராவிடர் இயக்கத்தை, இந்த உணர்வுகளை அழிக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் இருந்த கொடுமை - இந்த சிறை வாசத்தால் அவரது உடல் நிலை நலிவுற்றது.
அன்றைக்கு அய்யா அவர்களுக்கு ஜின்னா வாழ்த்து தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப் பினார். இன்றைக்கு ஆயிரம் விளக்கு தி.மு.க. வேட் பாளர் ஜின்னா இங்கே வந்து அதே உணர்வோடு பேசியிருக்கிறார். அடுத்து 1940 ஆண்டு குடிஅரசு தொகுதி வெளிவரப் போகின்றது. அந்தத் தொகுதியில் உள்ள செய்தியைச் சொல்லுகிறேன்.
இந்தி எதிர்ப்பில் மறைந்த நடராசன்
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சென்னை சிறையில் அடைக்கப்பட்ட நடராசன் அய்யா, அவர்களின் கொள்கைக்காக தன் உயிரையே பலியாகக் கொடுத்தார்.
காலஞ்சென்ற நடராசனுடைய தந்தையார் தந்தை பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். நீங்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை ஏகி என் மகன் உயிரிழந்தான். நானும், என் குடும்பமும் உங்களுடைய கொள்கைக்காக எங்களையும் இழக்கத் தயாராக இருக்கிறோம் என்று உருக்கமாக எழுதி இருந்தார்.
வேலூர் சிறையில் 14 வயது சிறுவன்
அதேபோல 1957 ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பல தோழர்களுடன் இலால்குடிக்கு அருகில் உள்ள வாளாடியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பெரியசாமி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் தண்டிக்கப் பட்டான். அப்பொழுது கவர்னராக இருந்தவர் விஷ்ணுராம் மேதி. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்க வந்தார். அவர் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகை யில், 14 வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கின்றானே, என்ன குற்றம் செய்தான் என்று அழைத்துக் கேட்டார். கவர்னர் ஆங்கிலத்தில் கேட்க அதைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிறு வனிடம் அதிகாரிகள் சொன்னார்கள்.
வாளாடி பெரியசாமி சொன்ன செய்தி
சரி, நீ இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடு. உன்னை விடுதலைப் பண்ணச் சொல்லுகிறேன் என்று கவர்னர் சொன்னார். அந்தச் சிறுவன் சொன்னான்? இல்லை, மறுபடியும் என் தலைவர் பெரியார் அரசியல் சட்டத்தைக் கொளுத் தச் சொன்னால் மீண்டும் கொளுத்தி விட்டு சிறைச் சாலைக்குத் தான் வருவேன் என்று சொன்னான்.
அப்படிப்பட்ட கொள்கை உணர்வு கொண்ட தோழர்கள்தான் திராவிடர் கழகத் தோழர்கள்.
அண்ணா அவர்கள் சொன்னார்: நாங்கள் அரசியலுக்குப் போனாலும் இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத்தான் செல்கிறோம் என்று சொன்னார். புரட்சிக் கவிஞர் தனது பாடலில் மிகத் தெளிவாக ஒரு செய்தியைச் சொன்னார்.
உரிப்பான் தோலை!
தமிழ்நாடென்ன தோட்டத்துப் புடலங்காயா?
தூங்கி எழுந்தவன் கண் விழித்தால் உரிப்பான் தோலை என்று பாடினார். புரட்சிக் கவிஞரை நாம் நினைக்கும் பொழுது தந்தை பெரியார் கொள்கை வழி நின்று அவரது கருத்துகளை இன உணர்வோடு பரப்பியவர்.
ஆகவே, இது போன்ற குடும்ப விழாக்கள் ஒவ் வொரு பகுதியிலும் நடத்த வேண்டும். எழுத்தாளர் கோ.வி. லெனின் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார்: தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குக் கூச்சமாக இருக்கிறது. அந்த அளவுக்கு என்ன செய்தேன் என்றே தெரியவில்லை என்று சொன்னாரே அதுதான் அவர் விருது பெறுவதற்கே தகுதியானது. பதவியை யார் விரும்பாதவர்களோ அவர்கள் தான் அந்தப் பதவிக்கே தகுதியானவர்கள்.
என்ன சாதித்தாய்? என்று கேட்டால்...
அதேபோல நமது நக்கீரன் கோபால் அவர்கள் இங்கே எனக்கு முன்பு பேசியபொழுது சொன்னார்: நான் என் ஊருக்குச் சென்றால் என்ன சாதித்தாய்? என்று யாராவது கேட்டால் பெரியார் விருது பெற்றிருக்கின்றேனே, அது ஒன்றே போதும் என்று சொன்னாரே - அதுதான் பாராட்டத்தக்க செய்தி. உழைப்பாளிகளைப் பாராட்ட வேண்டும். அவர் களுடைய சாதனைகளைப் பாராட்ட வேண்டும்.
போலி மருந்து, போலி சர்டிபிகேட் கொடுத்த போலி விமானி, சாமியார்கள் என்றாலே போலி - போலி சாமியார்கள், போலி உணவு இப்படி எல்லாவற்றிலும், எங்கும் போலி.
பார்ப்பனர் புத்தி
தந்தை பெரியார் கொள்கை என்றைக்கும் தேவைப்படுகிறது. பெரியார் சொல்லுவார்: கன்னியாகுமரியில் இருக்கின்ற பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் காஷ்மீரில் இருக்கிற பார்ப்பானுக்கு நெறிகட்டும் என்று சொல்லுவார்.
அதுபோல பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருப்பதை எடுத்து வீட்டிற்குள்ளே போடுவான். நம்மாளுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டில் இருப்பதை எல்லாம் எடுத்து வெளியில் போடுவான் என்று சொல்லுவார்.
பெரியார் புகழின் சிதறல்கள்
ஒரு மனிதனுக்கு மூச்சுத் திணறும் பொழுதுதான் மூச்சுக் காற்றின் அவசியம் தெரியும். பேரறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னார்: தமிழ் நாட்டினுடைய தலைவர்கள் எல்லாம் யார் என்றால் தந்தை பெரியார் புகழின் சிதறல்கள் - என்று சொன்னார்.
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்! என்று சொன்னார்.
அந்த வகையிலே பெரியாரின் கொள்கை உலகம் போற்றுகிறது; உலகம் ஏற்கிறது. இந்த நிகழ்ச்சிகளை இவ்வளவு சிறப்பாக நடத்திய அத்துணை தோழர் களையும் பாராட்டுகின்றோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் கூறினார்.
Tuesday, May 24, 2011
திருப்பதியில் நடப்பது என்ன?
- திருப்பதியில் நடப்பது என்ன?
- தமிழர் தலைவர் ஆணை- இதோ செயலாக்கங்கள்
- பார்ப்பன ஊடகங்களின் பத்திரிகா தர்மம் இதுதான்!
- கண்டிப்பாக உலக அளவில் சாதிப்பேன்! - சக்தீஸ்வரி
- பலதிறமைகள் கொண்ட நட்சத்திரம்!
- அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்!
- பொதுத் துறை வங்கிகளில் 45ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
- ராமசாமி முதலியாருக்கு ஆதரவு!
- 9000 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்கள்
- கொலஸ்ட்ராலா: தக்காளிச் சாறு அருந்துங்கள்!
Monday, May 23, 2011
வீண் பழியைச் சுமக்க வேண்டாம் முதல் அமைச்சர்
அய்யா ஆரம்பித்த, அண்ணா ஆசிரியராக இருந்த திராவிட இயக்க மூச்சுக் காற்றாம் விடுதலையை அ.தி.மு.க. ஆட்சியில் அவசர அவசரமாக ஆணையிட்டுஅரசு நூலகங்களுக்குத் தடை போடுவதா? திராவிட இயக்கப் போர் வாளான விடுதலை நாள்
புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர்"
மீண்டும் பேரவை 27 ஆம் தேதி கூடுகிறது சென்னை, மே 23- பதினான்காவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது.அமைச்சர் மரியம் பிச்சையின் மறைவுக்குப் பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவரான செ.கு. தமிழரசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.முதலமைச்சர்,...
இந்த ஆண்டு சமச்சீர் கல்வி அமல் இல்லையாம்! பள்ளிகள் ஜூன் 15ஆம் தேதி திறக்க
சென்னை, மே. 23- ஜெயலலிதா தலைமை யில் நடந்த அமைச்ச ரவை முதல் கூட்டத்தின் முடிவு சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத் துவது
Sunday, May 22, 2011
கலைஞர் தீட்டிய சுயமரியாதைப் புதினம்!"
கழகம் தர்ப்பைப் புல் முளைத்த இடமாகப் போக வேண்டும் என்று துடிக்கும் சக்திகள்! கலைஞர் தீட்டிய சுயமரியாதைப் புதினம்!"
அமெரிக்காவின் டாம்பா நகரில் பகுத்தறிவுப் பயிற்சிப் பட்டறை பேராசிரியர் பால்கர்ட்சு, டாக்டர் சோம இளங்கோவன் முதலியோர் பங்கேற்பு
இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்க உணர்வாளர், பெரியார் பற்றாளர் அய்யா சின்னக் குத்தூசி அவர்கள் இன்று காலை 7.50 மணிக்கு மறைவுற்றார்.
Tuesday, May 17, 2011
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில்....
ஆட்சி மாற்றம் என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
இரண்டாண்டுகளுக்குமுன்!
இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில் இலங்கையின் முப்படைகள் இந்தியா, சீனா, ருசியப் படைகளின் துணையோடு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துக்கொண்டு இருந்தது. மே 18ஆம் தேதி (2009) நந்திக்கடலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. (மேலும்)
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மே 26ஆம் தேதி விசாரணை
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல லிதா முதல் முறை முதல் வராக இருந்த போது, வருமானத்தை மீறி சொத்து குவித்துள்ள தாக வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு பெங்களூரு தனிநீதி மன்றதில் விசாரிக்கப் பட்டு வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனையா விசாரித்து வருகிறார்.இவ்வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது தவறு ஏற்பட்டுள்ளதாகவும்.... (மேலும்) - மதுரை-நாகர்கோவிலுக்கு 2012இல் மின்சார ரயில்
- பொறியியல் கல்லூரி விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது
- கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி
- ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொலை: உண்மையை மறைக்கிறது அமெரிக்கா
- கடாபியை கைது செய்யும் சூழ்நிலையில் போர் நிறுத்தம்
மேலும் உடனுக்குடன் செய்திகளுக்கு...படியுங்கள் ’விடுதலை’
- மதுரை-நாகர்கோவிலுக்கு 2012இல் மின்சார ரயில்
- பொறியியல் கல்லூரி விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது
- கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி
- ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொலை: உண்மையை மறைக்கிறது அமெரிக்கா
- கடாபியை கைது செய்யும் சூழ்நிலையில் போர் நிறுத்தம்
ஆட்சி மாற்றம் என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தலைவர்,திராவிடர் கழகம்
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...